காதல் தேவதை

பெண்மையக் கதைகள்
5 out of 5 (1 Ratings)
Share this story

காதல் தேவதை..

சிறு கதை.

=================

அந்த

கூத்தாண்டவர் கோயில் பொலிவிழந்து

காணப்பட்டது

கோயில் வரலாறு.......

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் மடப்புரம் சந்திப்பில் இருந்து 30. கிலோமீட்டர் தொலைவில் கூவாகம் என்ற இடத்தில் இருக்கிறது.

திருநங்கைகளுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில் இது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பௌர்ணமி தினத்தன்று திருவிழா வழக்கமாக நடைபெறும்.

மனதில் அரவானை நினைத்துக் கொண்டு திரு நங்கைகள் தாலி கட்டிக்கொள்வார்கள்.இது காண வெளியூரில் இருந்து ஆயிர கணக்கான திரு நங்கைகள் ஒன்று சேறுவார்கள்

எப்பவோம் மக்கள் வெள்ளம் நிரம்பி வழியும்.

கூத்தாண்டவர் கோயில் வரலாறு உண்டு.

மகாபாரத போர் நடந்தது.

பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் போருக்கு முன்னர் உயிர் பலி கொடுக்க வேண்டும்.இதில் பலி கொடுக்கப் படுபவர் நல்ல அழகும், ஆண்மையும் எல்லா லட்சணமும் உடைய ஆணாக இருக்க வேண்டும். இப்படி தகுதி உடையவர்கள், அர்ஜுனன்,கிருஷ்ணர் அருஜுனன் மகன் அரவானும் தான்.

போருக்கு மூவரும் முக்கியம் தேவை.

அதனால் அரவானுக்கு பலி கொடுக்க முடிவு செய்தார்கள்.

வேறு வழி இல்லாமல் கிருஷ்ணர்

மோகினி அவதாரம் எடுத்து அரவானை கலியாணம் செய்துக் கொண்டார்.

பின்னர் அரவானன் பலி கொடுக்கப் பட்டான்.மோகினி விதவையானாள்.

கிருஷ்ணர் பெண்ணாக இருந்து ஆணாக மாறிவிட்டார்.மோகினி ஒரே நாளில் தாலி இழந்தாள்.

விதவை சடங்குகள் நடந்து முடிந்தது. இந்த சடங்கு தான் இங்கு அதிக விசேஷமாக

திருநங்கைகள் தங்களை கிருஷ்ணன் அவதாரம் என்று எண்ணி மனதில் அரவானை கலியாணம் செய்து கொள்வது போல் செய்வது தான் சிறப்பு.

அது மட்டும் இல்லை

தாலி அறுக்கும் சடங்கும் நடக்கும்.

ஆரவான் பலி கொடுக்கும் முன் மூன்று கோரிக்கைகள் வைக்கப் பட்டது.

அது 1.குருசேஸ்திர போரை பார்க்க பூலோகத்தில் கோயில் கட்ட வேண்டும்.

2. ஒரே இரவு கணவன் மனைவியாக இல்லற வாழ்வு நடந்த வேண்டும்.

3.சுமங்கலியாக வாழ்ந்து தன் கணவனை இழக்க வேண்டும்.

இது யார் ஏற்றுக்கொள்வர்கள். அதன் இந்த கிருஷ்ணன் செய்த சூழ்ச்சி.

இந்த கோயில்

இரண்டு வருடமாக மூடியே கிடக்கிறது.

கொரோனா நோய் தொற்று காரணம் காட்டி அரசாங்கம் மூடி விட்டது.

பல்வேறு வயதுடைய ஆண்களும், பெண்களும் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தனர்.

குறிப்பாக இந்த கோயில் கூத்தாண்டவர் சாமி

மூன்றாம் பாலினத்தவர் வழிபாடு நடத்தும். இந்த கோயில் ரொம்ப சக்தி வாய்ந்தது என்பர்.

அல்லிகள் என்றும், ஒன்பது என்றும் அரவாணி என்றும், ஹிஜூடா கால வாணி என்றும்

மக்களால் வெறுத்து ஒதுக்கிய இந்த சமுதாயம் இன்று திரு நங்கைகள் என்ற சிறந்த பெயர் சூட்டி சமுதாயத்தில் ஒரு முக்கிய இடம் அளித்து இருப்பது போற்றதற்குறியது.

ஓட்டுரிமை, பேச்சுரிமை

கல்வி. சமுதாய அந்தஸ்து வேலை வாய்ப்பு , அவர்களின் மேம்பாட்டிக்கு அரசு எவ்வளவு வாய்ப்புகள் கொடுத்து அவர்களின் நலனுக்காக பாடுப்பட்டு வருவது பெருமைக்குறியது.

இன்று காவல் துறையில் உதவி ஆய்வாளர் பணியும் செய்தி வாசிக்கும்

அளவுக்கு மென்னேற்றம் கண்டு இருப்பது மகிழ்ச்சியான ஒன்று.

அவர்களுக்கு எல்லாம் ஆசைகளும் பசங்களும், உணர்ச்சிகளும் இருக்க தான் செய்கிறது.

பெற்ற குழந்தை அணும் இல்லை பெண்ணும் இல்லை என்று அறிந்து பெற்றோர்களே வெறுத்து ஒதுக்கி விட

பாவப்பட்ட ஜென்மம் என்று மன கஷ்டம் இல்லையா?

ஊரும் உலகமும் வெறுத்தாலும் அவர்கள் இன்னும் தன் நம்பிக்கை ஒன்றே சக்தியாக கொண்டு வாழ்வது சந்தோசம் தானே!

ஒன்று மட்டும் சொல்ல வேண்டும். பிறகும் போது எல்லோருக்கும் போல் தான் குழந்தை இருக்கு. ஆனால் வயது வர வர மாற்றங்கள் ஏற்பட்டு ஒரு விகிதம் அதிகம்.

உடல் ரீதியாக மாற்றங்கள் உணர்ச்சிகள், பால் உணர்வுகள் ஏற்படும்.

இதில் அடையாளம் கண்டு தான் திருநங்கைகள் என்று அறிகிறோம்.

இது பிறப்பிலேயே நிர்ணயக்கப்பட்டது

என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

பிறப்பால் ஒரு பாலாகவும் மனத்தால் வேறு பாலாகவும் இருக்கிறார்கள்.

அவர்கள் ஏக்கம் ஆசை எல்லாம் எதிர் பாலினத்தவர் மீது தான் அதிகம் இருக்கும்.

தங்களின் மாறுபட்ட விஷங்கள் எல்லாம் ரகசியமாகவே வைத்துக்கொள்வார்கள்.

குழந்தை கருப்பையில் இருக்கும் போதே இந்த மாற்றம் ஏற்படலாம். இது தான் வளர்ச்சி அடைய அடைய இப்படி மறுபடலாம். எல்லாம் ஹார்மோன்ஸ் கூட இருக்கும் பட்சத்தில் இப்படி மரபணு மாற்றம் ஏற்படலாம்என்கின்றனர்.

தங்களின் பிறப்புறுப்பின் மாற்றம். பால் சம்மந்தப் பட்ட போராட்டம்.

சிறு வயதில் இருந்தே இந்த போராட்டம் அவர்களுக்கு ஏற்படுகிறது பாவம்.

தங்களின் உள் தோற்றத்தையும் வெளி தோற்றமும் கண்டு அவர்கள் படும் வேதனை சொல்லில் அடங்காது.

ஒவ்வொரு நாளும் அவர்கள் மனப் போராட்டம். எண்ணில் அடங்காது.

இவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பது ரொம்ப ஆச்சரியம் தான்

அந்த கோயிலில்

ஒரே இரைச்சலாக இருந்தது.

இது வரை அந்த ஊரில் எந்த விசேஷம் நடந்தாலும் ரொம்ப ரொம்ப அலாதியாக இருக்கும்.

நெடிய சிவந்த மேனியும், சுருள் முடியும் அழகான சிவப்பு வண்ணம் கொண்ட சட்டையும். கரு நிறத்தில் பேண்டும் அணிந்து இருந்தான் ராஜா.

இவ்வளவு அழகு இவனுக்கு மட்டும் எப்படி வந்தது?

குழல் விளக்கொளியில் இள நகையோடு அவன் முன்னே தேவதையே முன் வந்து நின்றது போல் ஒரு அழகு தேவதை.

ரதியோ இல்லை ஊர்வசியோ.. இல்லை மேனகாயோ...

ஒட்டு மொத்தமாக அழகை வார்த்து வடிவம் எடுத்து வந்து நின்றாள் அனுஸ்ரீ.

கற்கண்டு சொற்குவியலில் பாகு எடுத்து தேனோடு பாலும் சேர்த்து கடைந்து எடுத்த அவள் இதழசைவில் வார்த்தைகளில் சொட்டியதோ மது ரசம்.

இவள்.....

இத்தனை நாள் எங்கு ஒளிந்து இருந்தாளோ!

கண்ணசைவில் கவிதை கொட்டும்,

விழியாசைவில் வேல் பாய்சும்,

அவள் அழகில் மெய் சிலிர்க்க

காணுமோ மோகன நினைவுகள்

நெனச்சு நெனச்சு உருகும் நெஞ்சம்.

ஏன் அவனுக்கு ஒரு மனசும் உடம்பும் உயிரும் உணர்ச்சிகளும் இருக்க கூடாதா?

வாய் விட்டு முணு முணுத்தாள் மெல்ல

டேய் கிழவா...

அன்பின் மிகுதியில் அனுஸ்ரீ ராஜாவை இப்படி தான் கூப்பிடுவாள்.

சரி ராஜாவும் சலிக்காதவன் அம்புஜம் மாமி என்றே செல்லமாய் கூப்பிடுவான்.

இதயத்தின் ஒரு மூலையில் மெலிதாக சோகம் காணப்பட்டது

அங்கே......

சண்டை நடக்க மக்கள் வேடிக்கை பார்க்க

முற்பட்டனர்.

"டேய் ராஸ்க்கோல்லு

என்னையாட முண்டச்சி என்று சொல்றே!

ஆமாண்டி சொல்லுவேன்

நீ மஞ்சள் குங்குமம் இழந்தவள் தானே

மறந்துட்டியா?

மல்லிகையும் குங்குமமும் தொடும் அருகதை உனக்கு உண்டா சொல்லடி கழுதை.

ஆச்சாரம் மிக்க குடும்பத்தில் பிறந்து இப்படி கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் நடந்துகிறியே

ஐயர் குடும்பம் என்ன பாய் குடும்பமா?

கேவலம் உடம்பு ஆத்திரத்துக்கு என்ன வேண்டுமானாலும் செய்வியா?

உனக்கு சமுதாயத்தில் முண்டச்சி என்ற

தகுதி தவிற வேறு என்ன இருக்கு. புருஷனை அள்ளி போட்டு விட்டு தாலி அறுத்து விட்டு நிக்கிறே.

ச்சி...

நீ ஒரு பொம்பள தானே. உன்னை யாருடி வெளியே வர சொன்னது.?

மூலி.......

முண்டசி....

இப்படி சொல்வது

இது ரொம்ப பாசி பிடித்த வாதம் இந்த அணுயுகத்தில் இதெல்லாம் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாதது.

நடைமுறைக்கு ஓவ்வாத பேச்சு.

ஒரு ஆண் தன் துணையை இழந்து இருந்தால் இத்தனை நாள் எப்படி நடந்து கொண்டு இருப்பார்கள்.

தன் உள் மனதோடு ஆவேசமாக மோதிக்கொண்டாள் அவள்.

அவள் நெஞ்சில் ஆத்திரம் அழுத்த தனக்கு விதிக்கப்பட்ட கோலம் மிகவும் கொடூரமானது.

நினைக்க நினைக்க நெஞ்சில் நெருப்பை அள்ளி வீசியது போல் இருந்தது அவளுக்கு.

என்ன தான் விஞ்ஞான உலகமாக இருந்தாலும் இந்த பண்பாடு கலாச்சாரம் மாற்றவே முடியாது.

என்ன செய்வாள் அவள் ஊரோடு ஒத்துப் போவாளா இல்லை இளமை தீயில் கருகி போவாளா?

ச்சி.........

ஐயர் குடும்பம்........

ஆச்சாரம் மிக்க குடும்பம்.

என்ன பெரிய பண்பாடோ கலாச்சாரமோ.

மிக்க குடும்பம்.

இந்த காலத்தில் கூட

ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி

பேசுற பண்பாடு.

ச்சி..... ச்சி...

அவள் கழுத்தில் மஞ்சள் கயிறு ஏறி இறங்கியதே தவிர வேறு என்ன இருக்கிறது?

அவள் இன்னும் வாழ்க்கை சுகம் என்ன என்று அறியாமல்

இப்படி சின்ன வயத்தில் ஆண்டவன் அவளுக்கு கொடுத்த தண்டனை மிக

பெரிய தண்டனை.

இந்த மோசமான சமுதாயத்தில் எப்படி வாழ பார்த்தாள்போகிறாள் என்பது தான் பெரிய கேள்விக் குறி.

அவள் அவனை பார்த்தாள். உடம்பு நடுங்கியது.

உள் மனம் அவளும், அவனும் பெரிய செய்ய கூடாத தப்பு செய்து விட்டோம் என்ற அச்சம் ஒரு புறம் பயம் ஒரு புறம் அவர்களுக்குள் எழுந்து நின்று பயத்தை உண்டு பண்ணியது.

அங்கு நடந்த சண்டை இவர்களுக்காக தான் ஒத்திகை செய்தது போல் இருந்தது.

போலீஸ் வேன் வந்து நின்றது அதில் இருந்து

அனுஸ்ரீயின் அப்பா கூடவே அனுஸ்ரீயை கட்டிக்க போற முறைப் பையன் மாமன் இறங்கி வருவதை பார்த்து நடுங்கி ராஜா வை இழுத்துக் கொண்டு அந்த திரு நங்கைகள் கூட்டத்தில் புகுந்து கொண்டார்கள்.

என்னம்மா என்று அந்த கூட்டத்தின் தலைவி தேவிகா அக்கா கேட்க. புரிந்துக் கொண்டாள் அவள்.

கண் இமைக்கும் நேரத்தில் தன் கழுத்தில் இருக்கும் தங்க தாலியை கழற்றி ராஜா கையில் கொடுத்து.

இதோ பாரு ஐயா இதே இவ கழுத்தில் அந்த அரவான் சாமி கூத்தான்டவ பெருமானை வணங்கி விட்டு. அவங்க வருவதற்கு முன்னனே கட்டி விடு என்று ராஜா கையில் கொடுத்தால் தேவி அக்கா.

அனுஸ்ரீ நடுங்கினாள். இதோ பாருங்கள் கண்ணுங்களா நீங்க நாங்கள் இருக்கும் வரை எதுக்கும் கவலை பட வேண்டாம்.

சீக்கிரம் சீக்கிரம் காட்டுங்க என்று சொல்ல அவன் அதை வாங்கி ஜெயஸ்ரீ கழுத்தில் கட்டி விட்டான்.

அவர்கள் வாங்கோடி யாரோ போலீஸ் வர்ராங்க போய் பார்க்கலாம் என்று பாதி பேர் அவங்களை நோக்கி போனார்கள்.

தேவி அக்கா அங்கு இருந்தவங்களை பார்த்து பார்த்துஇவங்களை அழைத்துப் போய் டிரஸ் மாற்றி நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு உடனே போங்க நாங்கள் அவங்களை பார்த்துக் கொள்கிறேன்.

என்று வேகமாக போனாள் அக்கா.

இந்த போட்டோவில் இருக்கும் இந்த ரெண்டு பேரை யாராவது பார்த்தீர்களா என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் வைஜெயந்தி மாலா கேட்க.

இல்லைங்கம்மா நாங்கள் யாரும் பார்க்களே இவங்க யாரு என்று எங்களுக்கு தெரியாது. அப்படி யாரும் இங்கே வர வில்லை என்று தேவிகா அக்கா சொல்ல.

வந்தவர்கள் சுற்றும் முற்றிலும் பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பி போய் விட்டார்கள்.

எல்லோரும் சேர்ந்து மணமகளையும், மணமகனையும் அலங்காரம் செய்ய ஊர் மெச்சும் அளவுக்கு அலங்காரம் செய்து. திருவிழா போய் திருமண விழாவாக அமர்க்களம் செய்து விட்டார்கள்.

நலுங்கும் வைத்து பாட்டு பாடி. நகை போட்டு சீர் செய்து அவங்க அப்பா அம்மா வைக் காட்டிலும் சிறப்பாக செய்து விட்டார்கள்.

அவங்களுக்கு என்று ஒரு தனி வீடு. அதில் கட்டில் மெத்தை, போட்டு பூவினால் அலங்காரம் செய்து முதல் இரவுக்கு அனுப்ப

தேவிகா அக்கா வர ராஜாவும் அனுஸ்ரீ யும் கண்களில் கண்ணீர் மல்க அவங்க ரெண்டு பேரும் தேவிகா அக்கா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க குனியும் போது.

கண்ணுங்களா என் செல்வங்களா நீங்கள் ரெண்டு பேரும் எல்லாம் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டும் என்று வாழ்த்தினாள்.......

=======================================

Stories you will love

X
Please Wait ...