நம்பிக்கையை உடைக்கும் தண்டனை

உண்மைக் கதைகள்
4.6 out of 5 (9 Ratings)
Share this story

வணக்கம் நண்பர்களே......

இந்த சிறுகதையை படிக்கும் ஒவ்வொருவரும் இதற்கு உங்களின் கருத்தை பகிரும்படி கேட்டுக்கொள்கிறேன். இது கதையை தாண்டி இப்போதைய நாட்களில் நாம் அனைவரும் யோசிக்க வேண்டிய ஒன்றாகும்.

ஒரு ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு நடந்த கொடுமை இது. ஆடிப்பாடி மகிழ்ச்சியாக விளையாடி பயிலவேண்டிய வயதில் ஒரு சிறுமிக்கு இப்படி ஒரு கொடுமையான விஷயம் நடந்துள்ளது.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி எப்போதும் போல் அன்றும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு கிளம்பி சென்றாள். அவள் படித்து வந்தது ஒரு அரசுப் பள்ளியில். அன்று அவளின் பள்ளியில் அவளின் பெற்றோரை வரச் சொல்லி இருந்தார்கள். ஆகவே அவள் அம்மா வந்து ஆசிரியரை பார்த்து விட்டு அவரின் மகளுக்கு காசு கொடுத்துவிட்டு சென்றார்.

அந்தச் சிறுமி மதிய உணவு இடைவேளையின் போது தன் தோழியுடன் கடைக்குச் சென்றால் கடையில் தனக்கு வேண்டிய தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு இருவரும் பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தார்கள். அப்போது அவர்களின் பின்னே ஒருவன் வந்து கொண்டு இருந்தான். அதை இருவரும் பெரிதாக கருதாமல் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர் .

அவன் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தான் அதனை கவனித்து சிறுமிகள் விரைந்து செல்ல தொடங்கினார். அவர்கள் நின்றால் இவனும் நிற்கிறான் அவர்கள் நடந்தால் இவனும் நடக்கிறான் பயந்துபோன சிறுமிகள் ஓட ஆரம்பித்தனர் அவனும் ஓடி வந்து அந்த சிறுமியை பிடித்துக் கொண்டான்.

உடன் வந்த தோழி ஓடிவிட்டாள் ஆனால் இந்த சிறுமி மாட்டிக் கொண்டாள். அவன் அந்த சிறுமியை பலவந்தமாக இழுத்துச் சென்று பலாத்காரம் செய்தான். பின் இதனைப்பற்றி யாரிடமாவது சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டி பள்ளிக்கு அனுப்பிவிட்டான் அந்த சிறுமி மிகுந்த பயத்துடன் பள்ளிக்கு சென்றாள். வீட்டிற்கு சென்றதும் அடுத்த நாள் தான் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறினாள். காலை பொழுது விடிந்தது தான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அடம் பிடித்தாள். அவளின் தாய் எப்படியோ அவளை சமாதானம் செய்து பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

அன்றும் அவன் மதிய உணவு இடைவேளையின் போது அவளை மிரட்டி அழைத்துச்சென்றான் அன்றும் அதே போலவே நடந்தது. அன்று மாலை அந்த சிறுமி வீட்டிற்கு செல்லும்போது அவளுக்கு பயத்தில் உடல் நடுங்கி பயங்கரமாக காய்ச்சல் வந்துவிட்டது. அதனால் அவள் இரண்டு நாட்கள் பள்ளிக்குச் செல்லவில்லை பின் அவளின் உடல்நிலை சரியானதும் அவளை பள்ளியில் விட்டுவிட்டு வந்தனர். ஆனால் அன்று அவள் சற்று தைரியமாக இருந்தால் அன்றும் அதே போல் அவன் வந்து அவளை அழைத்தான் ஆனால் அந்த சிறுமியும் நான் வரமாட்டேன் என்று கூறிவிட்டு ஓடினாள். அவனும் பின்னே ஓடி வர அவள் ஆசிரியர்களின் அறையில் சென்று ஒளிந்து கொண்டாள். அவன் நின்று பார்த்து விட்டு சென்று விட்டான். இதேபோல் இரண்டு மூன்று நாட்கள் சென்றது பின் அவன் அவளை பார்க்க வருவதேயில்லை.

அந்தச் சிறுமி சிறிது சிறிதாக தன் சகஜ நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தாள். அப்போது ஒருநாள் அவளின் தந்தை அவரின் வீட்டிற்கு அருகில் இருந்த அவர் என் தம்பி அதாவது அந்த சிறுமியின் சித்தப்பா. அவரிடம் இந்த சிறுமியை பள்ளியில் விட்டுவிட்டு வரும்படி கூறினார் . அவரும் சரி என்று அழைத்துச் சென்றார். பள்ளிக்கு பாதி தூரம் சென்ற பிறகு தான் அவரின் சுயரூபம் அவளுக்கு தெரிய வருகிறது அவரும் அந்த சிறுமியை ஒரு மகள் எனக்கூட பாராமல் பலாத்காரம் செய்தார். அன்றிலிருந்து அவரை பார்த்தாலே அந்த சிறுமிக்கு மிகவும் பயம் . வீட்டில் இருப்பர் அவருடன் எங்காவது செல்ல சொன்னாலும் அவள் செல்வதில்லை.

ஏன்? சில ஆண்கள் பெண்களை சக மனுசியாக மதிப்பதில்லை, அப்போது அவர்களின் தேவைக்கு தேவைப்படும் ஒரு பொருளாக தான் பார்க்கிறார்கள். ஒரு சில ஆண்கள் அத்தகைய செயல்களை செய்வதால் அனைத்து ஆண்கள் மேலும் பெண்களுக்கு ஒருவித பயம் ஏற்படுகிறது.

அந்தச் சிறுமி பள்ளி படிப்பை முடித்து விட்டாள். செய்திகளிலோ திரைப்படங்களிலும் அல்லது இணையதளத்திலோ இதைப் போன்ற நிகழ்வை அவள் கண்டால் தனக்கும் எப்படி ஒன்று நடந்துள்ளது என்பதை நினைத்து அவள் மிகவும் வருந்தினாள். பெண்களுக்கு ஏன்? இப்படிப்பட்ட அநீதிகள் நிகழ்கின்றன இதற்கெல்லாம் என்ன காரணம்? நம்பிக்கை.....

இத்தகைய செயல்களை செய்பவனுக்கு இருக்கும் நம்பிக்கை. இத்தகைய ஒரு விஷயத்தை எந்த ஒரு பெண்ணும் வெளியில் கூற மாட்டாள். அப்படியே கூறினாலும் பெற்றோரிடம் கூறுவாள் அவர்கள் மட்டும் இதை எப்படி வெளியில் சொல்வார்கள் என்ற நம்பிக்கை.....

வெளிநாடுகளில் இத்தகைய குற்றங்கள் நடந்தால் இறந்து விடுவோமோ என்ற பயம் எழுகிறது ஆனால் நம் நாட்டில் எத்தகைய குற்றங்களை செய்பவர்களுக்கு ஏன் அந்த பயம் இல்லை? ஏனெனில் சட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு ஓட்டை வழியாக தான் வெளியே வந்து விடுவோம் என்று நம்பிக்கை......

குற்றங்களை செய்யும் அவர்களுக்கு இருக்கும் அந்த நம்பிக்கை அதை தடுக்க, அப்படி இனி நடக்கக்கூடாது என எண்ணும் நம்மிடத்தில் ஏன் இல்லை? இதைப் போன்ற நிகழ்வுகளை கண்டால் "அந்தப் பெண்ணிற்கு நீதி வேண்டும், நியாயம் வேண்டும், இந்த செய்தியை அனைவரும் பகிருங்கள்" என்று செய்திகளை பகிர்வதில் தான் மக்கள் வேகம் காட்டுகின்றனர். இதனால் மட்டும் இதற்கு ஒரு முடிவு கிடைத்து விடுமா? அப்போதே வேறு ஒரு செய்தி வந்தால் இதனை விட்டுவிட்டு அதை பகிர சென்று விடுவார்கள். அவ்வளவு தான் இவர்களின் உணர்ச்சி என்று தவறு செய்யும் ஒவ்வொருவனும் நன்கு மக்களை புரிந்து வைத்துக்கொண்டு தைரியமாக குற்றங்களை செய்கின்றான்.

ஒரு ஐந்தாம் வகுப்பு படிக்கும் பெண்ணிற்கு நடந்த கொடுமை மட்டும் இது அல்ல. இன்றுவரை ஏதோ ஒரு மூலையில் ஒரு பெண்ணிற்கு இப்படிப்பட்ட கொடுமைகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது என ஒவ்வொரு பெண்ணின் மனதிற்குள்ளும் இருக்கும் ஆதங்கமும் தான் இது.

இனி ஒவ்வொருவரும் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும். இனி பெண்களை சீண்டினாலும தீண்டினாலும் இறந்து விடுவோமோ? என்கின்ற பயம் எழவேண்டும். அதற்கு இந்திய சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.

இதை படிக்கும் ஒவ்வொருவரும் எப்படிப்பட்ட தண்டனைகள் வந்தால் இப்படிப்பட்ட குற்றங்கள் குறையும் என்று உங்களின் கருத்தை தெரிவியுங்கள்.

அந்த சிறுமி இப்போது பள்ளி படிப்பை முடித்துவிட்டு உளவியல் படித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் இன்று வரை அவளுக்கு நடந்ததை அவளால் யாரிடமும் சொல்ல முடியவில்லை. பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு நல்ல தொடுதலும் தீயதொடுதலையும் சொல்லிக் கொடுத்து அதே போல் ஏதேனும் அவர்களுக்கு நிகழ்ந்திருந்தால் அதை தைரியமாக காவலரிடம் தெரிவியுங்கள். இனி குற்றம் புரிபவர்களின் நம்பிக்கைக்கு நாம் ஆளாகாமல் நம் நம்பிக்கையை அவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.

இந்த கதையை எழுதும் என்னுடைய கருத்துப்படி இத்தகைய குற்றங்களை செய்யும் ஒவ்வொருவனையும் தன் தாயின் முன்னிறுத்தி அவனின் தாயின் கையாலே கொல்ல வேண்டும். ஏனெனில் தானும் ஒரு பெண்ணின் மூலம் தான் வந்து இருக்கிறோம் என்பதை அவன் அத்தகைய குற்றங்களை செய்யும் நேரத்தில் மறந்து விடுகிறான். அதனை அவனுக்கு நினைவுப்படுத்தவே அவனின் தாயின் கையாலே அவன் கொல்லப்பட வேண்டும். என நான் நினைக்கிறேன்.

தங்களின் கருத்துக்களை கூறுங்கள் நண்பர்களே......

எப்போது ஒரு பெண்ணை தொட ஒவ்வொருவனும் அஞ்சுகிறானோ அன்றுதான் பெண்களால் தைரியமாக வெளியில் செல்ல முடியும் அதுவே உண்மையான சுதந்திரம்.........

நன்றிகள்.....

Stories you will love

X
Please Wait ...