JUNE 10th - JULY 10th
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் வேளை!!
ஆரம்பப்பள்ளி,மேல்நிலைப்பள்ளிகள் என அனைத்தும் ஆரவாரத்தோடு திறக்கப்பட்டன.எதிர்பார்ப்புகளோடு குழந்தைகள் பள்ளிகளுக்குச்சென்றனர்.
முதல்நாள் முதல்வகுப்பு புதுப்புது முகங்கள் எதிர்பார்ப்பில்லா உறவுகள்சாதி,மத,பேதமற்ற நட்புகள் ஆசிரியர் ஒவ்வொருவராய்
அறிமுகம் செய்யுமாறு அழைத்தார்.முதல் நாளிலே
அறிமுகமாகி நண்பரான
கதை நாயகர்கள் அருண் மற்றும் மணி.
அருண் முதல் நாள் வகுப்பறையில் கவிதை
வாசித்தான்.பின் ஒவ்வொருவரும் பாட்டு ,நடனம் என ஒவ்வொன்றாய் செய்து அரங்கேற்றினர்!!!
அருண் ஆசிரியரிடம் நான் கதையும் நன்றாக எழுதுவேன் என்றான்.நான் சிறுவயதில் கட்டுரைக்காக முதல் பரிசு பற்றுள்ளேன் எனக்கூறினான்.அனைவரும் கைகளை தட்டி பாராட்டினர்.சில நாள் கழிந்தபின் பள்ளியில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.அருணும் அதில் கலந்து கொண்டான்.
அன்று,
""பரம ஏழை குடும்பத்தை சேர்ந்தவன் அருண்,
பெரும் வசதிபடைத்த குடும்பத்தை சார்ந்தவன் மணி.
இருவரும் ஒருவருக்கொருவர் நட்பாகினர் .ஆசிரியர் வினவும் போது என் தந்தை அரசு ஊழியர் என பெருமையுடன் கூறினான் மணி.அருண் எனது தந்தையும் மாநகராட்சியில் பணிபுரியும் அரசு ஊழியர் என்று கூறினான்.
அனைவரும் அருணை உற்றுநோக்கினர். பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல ஆட்டோவிற்காக காந்திருந்தனர்.
மணியை அழைத்துச்செல்ல அவன் அப்பா வந்திருந்தார் அதற்கு முன் அருண் ஆட்டோவில் கிளம்பினான்.
இருவரும் வீட்டிற்கு போனதும் மாலை நேரம் விளையாட சென்றனர்.இரவு தூங்கும் நேரத்தில் பள்ளியில் நடந்ததையும்
புது நண்பன் பற்றியும் அருண் தந்தையிடம் கூறிக்கொண்டே உறங்கினான்.மணியும் இதே போல் அவன் தந்தையிடம் புது நண்பனை பற்றி கூறினான்,அருண் தந்தையை பற்றி ஏதும் கூறவில்லை.மறுநாள் மீண்டும் அனைவரும் பள்ளிக்கு வந்தனர்.மணியைத்தவிர அனைவரும் அருணை ஏதோ ஒரு
குறையுடனே பார்த்தனர் .பள்ளியைபற்றி கூறவேண்டுமென்றால் அரசுப்பள்ளிதான்,அரசு பள்ளியின் நிலமைபற்றி அனைவரும் அறிந்ததே.பள்ளியின் வாயிலில் மிகப்பெரிய கழிவுநீர் வடிகால் இருந்தது அதைப்பற்றி யாருமே
கண்டுகொள்ளவில்லை .அருணுக்கு இதில் நல்ல அனுபவம் உண்டு ,ஏனென்றால் அவன் தந்தை அதனுள் இறங்கி சுத்தம் செய்யும் காட்சிகளை கண்களால் கண்டவன்.மேலும் பள்ளி வாயிலில் கண்காணிப்புக்கேமராவும் இல்லை.
அருண் வீட்டிற்கு சென்று பள்ளியில் நடந்ததையெல்லாம் கூறினான் .இரவு உணவு அருந்திவிட்டு "உறங்கச்சென்றான்" !!மறு நாள் பள்ளி முடிவடைந்த பின் ஆட்டோவில் செல்லவிருந்த குழந்தையில் மாரி என்ற குழந்தை மட்டும் ஆட்டோவை தவறிவிட்டது.
அக்குழந்தைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.வேளியே வரும் வேளையில் அக்குழந்தை தவறி கழிவுநீர் குழியினுள் விழுந்தது.மாரியன் தந்தை பள்ளிக்கு வந்து பார்க்கும்போது அவன் அங்கில்லை . பள்ளி முழுவதும் அலசிபார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இன்னொருபக்கம் அருணும் தான் செல்லும் ஆட்டோவை விட்டுவிட்டான். அவனை அழத்துச்செல்ல அவன் தந்தை வந்திருந்தார்.
^^ சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவம்.." " ^^^
(அன்று)
அருண் ஒரு மாநகராட்சி ஊழியர் மகன் என்பது அவன் வகுப்பில் உள்ள இறுபது பேருக்கும் தெரிந்த ஒன்றுதான் .
அதனால் அவர்கள் அருணை எப்பொழுதும் ஏளனம் செய்வதுண்டு,மணி ஒருவனே ஆறுதலாகவும் அன்பாகவும் இருந்தான் .நாட்கள் உருண்டது அனைவரும் ஐந்தாம் வகுப்பிற்கு சென்றனர் .அதே மாணவர்கள் அதே நிலமைதான் அருணுக்கு கிடைத்தது.ஆரம்பத்திலிருந்து மணிஒருவனே அருணுக்கு நண்பனாக இருந்தான்.அதே சமயம் மாரி அருணை எப்போதும் ஒரு வேண்டாதவன் போலவே கருதிவந்தான்.அருணை பொருத்தவரை அனைவரையும் நண்பர்களாகவே கருதினான்.அருணுக்கு தந்தை கூறிய அறிவுறை...
^^"அருண் தந்தையிடம் இதைப்பற்றியெல்லாம் கூறிய போது
இந்த மனிதர்களெல்லாம் இப்படிதான் , எப்பொழுதும் நம்மை ஏளனமாகவும் , கீழ்த்தனமாகவுமே பார்ப்பார்கள் ,ஆனால் நீ அவர்களைப்போலில்லாமல் அனைவரும் சமமென்றே நினைத்து பழக வேண்டும்"""" என
தந்தை கூறியதை நினைத்துப்பார்த்தான். அதனாலே சிறுவயதானாலும் அருணுக்கு அவ்வளவு பக்குவம். மாணவர்கள் மட்டுமின்றி ஒருசில ஆசிரியர் கூட பாகுபாடு பார்த்தனர்.
மாரியை பற்றி சொல்ல வேண்டுமானால் அவன் தந்தை ஒரு வங்கி ஊழியர்.
காலை பள்ளி தொடங்கி அனைவரும் வந்தனர் ஒரு ஆசிரியர் மட்டுமே அருணை மாற்றுகண்ணோட்டத்துடன் பார்த்தார்.
வகுப்பறை சுத்தம் செய்ய சொல்வது
கழிவறை சுத்தம் செய்ய சொல்வது
என பல வேலைகளை கொடுப்பார்.இப்படியே நாட்கள் உருண்டோடியது .ஒரு நாள் வகுப்பறையில் நடந்த சம்பவத்தில்
வழக்கம் போல அருணே குற்றவாழியாக நின்றான்.ஆனால்
உண்மையில் நடந்த சம்பவம் என்னவென்றால் அருணுக்கும் மாரிக்கும் நடந்த ஒரு சிறிய பிரச்சினையில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டனர். அப்பொழுது அருணும் ஆசிரியரிடம் வாதிட்டான்,மாரியும் வாதிட்டான்.உண்மை என்னவோ அருணிடம் உள்ளது உண்மை தான் !!ஆனால் ,கேட்கதான் யாரும் தயாராகவும் இல்லை ,மனமும் வரவில்லை ??
ஆசிரியர் அருணுக்கு மிகவும் சிறப்பாகவே செய்துள்ளார்!!!அவர் ஒரு வங்கி ஊழியர் மகன் எப்படி பொய்கூறுவான் ??அதனால் மாரி கூறியது உண்மையாகத்தான் இருக்கும் என ஆசிரியர் கூறினார்..அருணுக்குள்ளே ஓர் கேள்வி எழுந்தது??
என் தந்தை அரசு(மாநகராட்சி)ஊழியர் ??ஆனால் மாரி தந்தை தனியார் வங்கி ஊழியர் தானே,ஏன் ஆசிரியர் மாரிக்கு சாதகமாகவே இருக்கிறார் என கேள்வியும் ??வருத்தமும்???
இது போன்ற சில ஆசிரியர்களால் தான் எதிர்கால மாணவச்சமுதாயம் சீர்குலைந்து போகின்றது.
அக்குழந்தைகளிடம் நல்ல விதைகளை தூவாமல் இது போன்று நடந்தால் அதை பார்த்துதான் குழந்தை கற்றுக்கொள்ளும்.ஆணால் அருண் வாழ்க்கை அப்படியல்ல.
தன் தந்தை கற்பித்த பாடம் ,தான் கற்ற பாடம் இரண்டும் அவனை தர்மத்தின் வழியே இருக்கச்செய்தது.
இப்படி அருண் சிறுவயதிலேயே அழகான சிற்பம் போல்
இச்சமூகத்தால் செதுக்கப்பட்டான்.
இன்று^^^^
மாரி அந்த கழிவுநீர் குழாயுள்
சிக்கிக்கொண்டு தவித்தான்.மாரி தந்தையும்,அருண் தந்தையும் சேர்ந்து தேடிக்கொண்டிருக்கும் வேளையில் மாரி
இருக்கும் இடத்தை அருண் தேடி பார்த்தான்.
உடனே அருண் அக்கழிவுநீர்க்குழாயுள் குதித்து போராடி
அருணை கழிவுநீரின் மேற்பரப்புக்கு கொண்டுவந்தான்.
இருவரின் தந்தையும் பள்ளி ஆசிரியரும் அந்த போராட்டத்தை
கண்ட அனைவரும் இரு குழந்தைகளையும் மிட்டனர்...
பின் அருண் தந்தையுடன் வீட்டிற்கு சென்றான்
இரவு உணவருந்திவிட்டு
" உறங்கினான்" ??
காலை பள்ளி சென்றதும் அனைவரும் அருணை
பாராட்டினார்கள் ,
இந்த சம்பவத்திற்கு பின் மாரி அருணை கடவுள் போல பார்த்தான்.மாரியும் நண்பரானான்.பள்ளி ஆசிரியர்கள்
அருணை பார்த்து தலைகுனிந்து சென்றனர்.
மேலும்,
இச்சின்ன குழந்தைக்கு எங்கிருந்து இவ்வளவு
பக்குவம் வந்தது என்ற கேள்வி?அதற்கு அருண் கூறிய பதில்
என் தந்தை அரசு ஊழியராய் இருந்தும் அனைவரும் ஏளனமாகவே பார்க்கிறார்கள்,இது ஏன் ?
அனைவரும் சமம் என்றே சட்டம் கூறுகிறது
ஆனால் அது
எழுத்தாக மட்டுமே உள்ளது என்று என்
தந்தை என்னிடம் கூறியது!!!
அந்த நிலையை உடைத்தெறிய
வேண்டும் என்பதே என் இலட்சியம் என்றான்
அருண்.அவன் பேசுவது ஏதோ பல புத்தகங்களை கற்றுதேர்ந்த
பகுத்தறிவாளர்கள் போல உள்ளதென மாரியின் தந்தையும் ,
ஆசிரியர்களும் கூறினர். மாரியை காப்பாற்றியதற்காக
எனக்கு அரசு சார்பில் பாராட்டும் சன்மானமும் வழங்கவிருப்பதாக பள்ளியில் கூறியதாக தந்தையிடம் அருண் கூறினான்.அவனிடம் அவன் தந்தை கூறியது^^^
அதை மேடையில் அருண் கூறினான்
அதை கேட்ட அனைவரும் மனம் உருகி பெருமையைடைந்தனர்.
" இந்த பாராட்டோ சன்மானமோ என்னுடன் மட்டுமே இருக்கும்
எனக்கு அது தேவையில்லை??
என் தந்தை போன்ற அரசு ஊழியருக்கு ஒரு நல்ல அங்கீகாரம்
கிடைத்தாலே போதும்"
எனக்கூறினான்!!!!
இறுதியாக அரசாங்கத்திடம் வேண்டுகோள் வைக்கிறேன் நிறைவேற்றுங்கள் எனக்கூறி நிறைவு செய்தான்!!!
" வெறும் வார்த்தைகளாக உள்ள சட்டங்களை
செயல்படுத்துங்கள்"
பின் தானாகவே நல்ல சமுதாயம் வளரும்"
இது நடந்தால் பிராமணர்களும் நாங்களும் ஒரே கடையில்
தேநீர் அருந்தலாம் என்று கூறினான்!!!!!
இச்சிறுவனின்
பேச்சு சமூகவளைதளங்களில் பரவத்தொடங்கியது.
இது மாநில முதல்வரையும் சென்றடைந்தது .அச்சிறுவனின்
படிப்பிற்கு இந்த அரசு முழு பொறுப்பேற்கும் என அறிவித்தது.
அருண் பள்ளி படிப்பை நிறைவு செய்தான் அரசு சட்டக்கல்லாரியில் தன் முதல் நகர்வை எடுத்து வைத்தான்.
சிறந்த மாணவன் என்ற பட்டத்துடன் வழக்கறிஞர் ஆனான்.
சிறிது காலத்திலேயே ஆகச்சிறந்த வழக்கறிஞரானான்
லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றான் .நாட்டின்
மிகச்சிறந்த வழக்கறிஞர்களில் ஒருவனான்.
பெரும் முதலாளிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இவனே
சட்ட ஆலோசகராக திகழ்ந்தான்.இவனின் வாதம் இருளாய் உள்ள நீதிமன்றங்களுக்கு ஒளியை தந்தது.
ஆறுமாதம் கழித்து நீதிபதி ஆனான்.ஒரு பொதுநலவழக்கில்
அருண் வழங்கிய தீர்ப்பு அரசாங்கமே அதிர்ந்தது.
அனைவரும் சமம் என்று சட்டத்தில் இருந்த வெறும்
வார்த்தையை செயல்படுத்த உத்தரவிட்டான்.
மேலும் அரசு பள்ளிகளை சுற்றி கேடு விளைவிக்கும் படியும்
ஆபத்துவிளைவிக்கும் படியும் எந்த தடைகளும் இருக்கக்கூடாது
என பேராணை விதித்தான் அருண்.
இத்தீர்ப்பு தன் பள்ளி நினைவுகளின் விளைவு என்றே கருதினான்!!!
இத்தீர்ப்பினால் கீழ்மட்டத்திலுள்ள
மக்களின் வாழ்க்கை மாறியது!!!
நாடும் மாறியது !!!
சமூகமும் மாறியது!!!
திடீரென ஆர்டர் ஆர்டர் என நீதிபதி சத்தம் போடுவது போல கேட்டது???
விழித்துப் பார்த்தான் அவனெதிரே அவன் தந்தை
நின்று கொண்டிருந்தார்.
என்னடா தூக்கத்தில் என்ன உழறிக்கொள்கிறாய்,உனக்கு என்ன ஆயிற்று என்று கேட்டார்.அருண் எழுந்து உட்கார்ந்து அப்பாவை பார்த்து கேட்டான் நான் நீதிபதி இல்லையா என்று ??
அவன் அப்பா அருணை பார்த்து பள்ளிக்குச் செல்ல நேரம் ஆகி விட்டது போய் குளி எனக்கூறினார்!
அருணும் எழுந்து குளிக்கச்சென்றான்.
அருணுக்கு ஒரே குழப்பம் ,அவன் இன்னும் அந்தக்கணவிலிருந்து வெளிவரவில்லை!!
நானே உன்னை பள்ளிக்கு அழைத்துச்செல்கிறேன் எனக்கூறினார் அவன் தந்தை.பள்ளிக்குச்சென்றதும்
அருண் சுற்றி சுற்றிப் பார்த்தான் அங்கு எதுவும் மாறவில்லை
அந்தக்கழிவுநீர் கிடங்கும் மாறவில்லை.
வகுப்பறைக்குச்சென்றான் மாரியைக்கூட காணவில்லை.
மாரியை வேறுபள்ளியில் சேர்த்துவிட்டார் அவர் தந்தை!!!
அவர் நினைத்திருந்தால் அந்த கழிவுநீர்த்தொட்டியை அகற்ற அரசு அதிகாரிகளிடம் கூறி மாற்றியிருந்திருக்கலாம்,ஆனால் அவர் முயர்ச்சிக்கூட செய்யவில்லை!!!
வழக்கம் போல அருணின் நண்பன் மணி மட்டுமே அவன் மாரிக்கு செய்த உதவிக்கு பாராட்டு தெரிவித்தான்!!!
"இறுதியாக
எத்தனை பெரியார் பிறந்தாலும்;
எத்தனை அம்பேத்கர் பிறந்தாலும்;
தனிமனிதன் மாறாத வரை
இச்சமுதாயத்தில் எவ்வித மாற்றமும்
நிகழாது!!!
எனக்கூறி தன் கதையை நிறைவு செய்தான்
"அருண்"
அவன் எழுதிய இந்தக்கவிதையை பள்ளியில் உள்ள அனைவரும் படித்தனர்.
அருணே அந்த கலைநிகழ்ச்சியின் நாயகன் ஆனான்.
இக்கவிதைகாக அரசின் பரிசும் பெற்றான்!!!
இந்த பாராட்டும்,பட்டமும்
அருணை மேலும் புரட்சிக்கவிதைகள்
எழுத ஊக்கப்படுத்தின!!!!
#429
Current Rank
35,680
Points
Reader Points 680
Editor Points : 35,000
15 readers have supported this story
Ratings & Reviews 4.5 (15 Ratings)
rdevran967
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
murugandurai225
Keep going Story is good. All are equal.
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points