JUNE 10th - JULY 10th
தந்தையின் கனவு : தனது மகன் | மகள்களை நன்றாக படிக்க வைத்தல், அவர்களின் தேவையை பூர்த்தி செய்தல், குடும்ப வாழ்கையை மேம் படுத்துதல் ஆகியவை. இவை நமக்கு தெரிந்த ஒன்றே. வாழும் இடம் | தரத்தை பொறுத்து இதில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும்.
~~~~~ இங்கு நாம் காண இருப்பது ஒரு எளிமையான தந்தையின் கதை ~~~~
ஒரு எளிமையான நடுத்தர குடும்பம். அதில் தாத்தா, பாட்டி, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இதில் பாட்டி துணி கடைகார் மகள் ஆவார். அவர் வசதியாக வாழ்ந்து வந்தார். ஆனால் அவரோ இந்த நடுத்தர குடும்பத்தில் உள்ள தாத்தாவை திருமணம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது. அவரும் அதற்கு மறுப்பு சொல்லாமல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆன சில நாட்களிலேயே அவர்கள் தனி குடுத்தனம் செல்ல நேர்ந்தது. அதற்கு முன்பே முதல் மகன் பிறந்து விட்டான். தாத்தாவிற்கு சம்பளம் ரூ 60 மட்டுமே. குடும்பத்தை வெற்றிகரமாக நடத்த இயலவில்லை. அதன் பிறகு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் பிறந்தன.
தனது மகன்கள், மகள்களை அரசு பள்ளியில் படிக்க வைத்தார். தாத்தா 10 வகுப்பு தேர்ச்சி அடைந்தவர். அவருடைய ஆசிரியரிடம் தான் அவர் மகன்கள் படித்தனர். முதல் மகன் 1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயின்றார். அவர் வகுப்பில் நன்கு படிக்கும் மாணவனாக திகழ்ந்தார். தாத்தா அவரது மகனை 6ம் வகுப்பு ஆங்கில வழியில் பயிலுமாறு கூறினார். அவரும் மறுப்பு தெரிவிக்காமல் சேர்ந்து விட்டார். அவர் இதில் தேர்ச்சி பெற மிகவும் கடினமாக உழைத்தார். ஆனால் வகுப்பில் ஓரலவு பயிலும் மாணவராகத்தான் காட்சி அளித்தார்.
சில நாட்கள் கழிந்தன. அவர் 9ம் வகுப்பிற்கு சென்றார். அங்கு சில மாணவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்ற பழகி விட்டார். அதன் காரணமாக பள்ளியில் விடுப்பு நாட்கள் அதிகமாயினான. பள்ளியின் தலைமை ஆசிரியர் அவரிடம் பெற்றோரை அழைத்து வரும்படி கூறினார். அவரும் அழைத்து சென்றார் மிகவும் பயத்துடன். ஆசிரியரோ மாணவரை பற்றி கூறியவுடன் மணவனுக்கு அடி விழுந்தது. ஆசிரியர் இருவருக்கும் சமாதானம் கூறி அனுப்பி வைத்தார்.
வீடு சென்றதும் தான் 'படிக்க விரும்பவில்லை' என்று கூறிவிட்டார். அவர் அம்மாவின் செல்லப் பிள்ளை ஆவார். அதனால் அம்மாவும் சரி என்று கூறிவிட்டார். பிறகு தாத்தா அவருக்கு தெரிந்த கடையில் வேளைக்கு சேர்த்து விட்டார். அவரது மகன் நல்ல உழைப்பாளி அதனால் அவர் வேலையை கற்றுக் கொண்டு மிக சுறுசுறுப்புடன் இயங்கினார்.
கடை உரிமையாளர் இவருக்கு ஒரு வேலையை கொடுத்து முடிக்க கூறினார். இவர் அந்த வேலையை குறுகிய நேரத்தில் முடித்து விட்டார். அடுத்து தனக்கு தெரியாத வேலையை தெரிந்து கொள்ள மற்ற தொழிலாளர்களிடம் பேசி அதிலும் கைதேர வேண்டும் என நினைத்தார். இதை கண்ட முதலாளி இவன் எப்படி இவ்வளவு குறுகிய நேரத்தில் முடித்தான் என்று வினவினார்.இது முதலாளியின் பொறாமை குணத்தை காட்டியது.
கடும் கோவம் கொண்ட முதலாளி இவனை எப்படியாது துன்பத்திற்கு உள்ளாக்க வேண்டும் என நினைத்தார். பிறகு அவரை அழைத்து "நீ சென்று கழிவறையை சுத்தம் செய்" என்று கூறினார். இவர் தன் குடும்பத்தின் நிலையை மனதில் கொண்டு இந்த வேலையை செய்தார். பிறகு அவர் தன் வீட்டுக்கு சென்று தன் அம்மாவிடம் இதை பற்றி கூறினார். அவருடைய அப்பாவிற்கு இதில் எந்த வருத்தமும் இல்லை. ஆனால் தாயோ! மிகவும் கோவம் அடைந்தார். இனி நீ இந்த வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறினார்.
அவரது தாயார் தன்னிடம் இருந்த நகையை கொடுத்து நீங்கள் இருவரும் சேர்ந்து சொந்தமாக தொழில் செய்யுங்கள் என்று கூறினார். ஆகவே இவர்கள் தொழில் செய்ய தேவையான பொருள்களை வாங்கினார். தாத்தா மற்றும் அவரது இரு மகன்களும் சேர்ந்து தொழிலை நன்றாக செய்து முன்னேறி சென்று கொண்டு இருந்தனர்.
ஆனால் இதற்கு பிறகும் அவர்கள் கஷ்டத்தை தான் அனுபவிக்க போகிறார்கள் என்பது அவர்களுக்கு அப்போது தெரியாது. முதலில் அவருடைய முதல் தங்கைக்கு திருமணம் நடத்தினர். அந்த நேரத்தில் அவர்களால் முடிந்ததை செய்து திருமணத்தை நடத்தி முடித்தனர். பின் 2வது மகளுக்கு திருமணம் நடத்தினர். அடுத்து இளைய மகனுக்கு திருமணம் நடந்தது. பிறகு மூத்த மகன் அம்மாவின் செல்லப் பிள்ளைக்கு திருமணம் நடந்தது.
மூத்த மகன் அனைவருக்கும் திருமணம் செய்து கடைசியாகத் தான் திருமணம் செய்து முடித்தார். கடைசியாக செய்தாலும் இவருக்கு கிடைத்த மனைவி அன்பானவர், பண்பு மிகுந்தவர் மற்றும் வெகுளியும் கூடத் தான். இளைய மகன் மற்றும் பாட்டியும் சேர்ந்து 2வது மருமகளை வீட்டைவிட்டு அனுப்பிவிட்டனர். காரணம் என்ன என்று கேட்டாள் அவர் புத்திசுவாதினம் இல்லாதவல் என்று கூறி விரட்டி விட்டனர்.
தற்போது வீட்டில் ஒரு மருமகள் மட்டுமே உள்ளார். இவர்கள் இருவரும் ஓரளவு ஒற்றுமை உணர்வுடன் தான் இருந்தனர். இவ்வாறாக இருந்த இந்த குடும்பத்திற்கு பேரதிர்ச்சி காத்து கொண்டு இருந்தது. அது என்ன என்றால் அவரது கடைசி மகளின் கணவர் இறந்து விட்டார் என்ற செய்தி வந்தது. அவருக்கு ஒரு மகன் இருக்கிறான். அந்த மகனுக்கு ஒரு வயது கூட பூர்த்தியாகவில்லை.
அனைத்து சடங்குகளும் முடித்து விட்டு அவர் தனது கணவரின் ஊரிலேயே இருந்தார். குடும்பத்தின் மூத்த மகன் தனது தங்கை படும் துன்பத்தை பார்க்க இயலாமல் தனது வீட்டிற்கே அழைத்து வந்து விட்டார்.
~~ கலகம் தொடங்கியது ~~
இங்கு வந்தவர் தனது நன்மைக்கு உதவியவர்களை நினைத்து பார்க்காமல் தான் நன்றாக இருந்தால் போதும் என்று நினைத்து மூத்தமகன் மற்றும் மருமகளை தாயிடம் இருந்து பிரிக்க தொடங்கினார். அவரது தாயாரும் மகளும் சேர்ந்து மகன் இல்லாத போது மருமகளை கொடுமை படுத்தினர். 8 மாத கர்பிணியான அவரை தண்ணீர் தொட்டியை கழுவ சொல்லுதல் போன்ற கடிமான வேலை பளுவை மருமகள் மீது சுமத்தினர். இவை அனைத்தையும் தெரிந்து கொண்ட மூத்த மகன் தனது மனைவி மற்றும் பெண் குழந்தை உடன் வீட்டை விட்டு வெளியறினார். பிறகும் அவரது பெற்றோர் மற்றும் தங்கை சேர்ந்து சண்டை இட்டு கொண்டு இருந்தனர். அடுத்து பஞ்சாயத்திற்கு இது சென்றது. இதன் முடிவு மூத்த மகன் சம்பாதித்த தொகையை அவரிடம் கொடுக்க வேண்டும் என்பது தான்.
இவைகளை பொறுத்துக் கொள்ள முடியாத அவர் பெற்றோர் மற்றும் தங்கையும் சேர்ந்து ஒரு திட்டத்தை தீட்டினர். மூத்த மகன் பிறந்த செலவு உட்பட மற்றும் அவர் சிறு வயதில் இருந்து அவரை பார்த்துக் கொள்ள ஆன செலவுகளை ( உணவு, மருத்துவ செலவு, உடை மற்றும் பல ) கழித்து விட்டு மீதி இருந்த தொகைக்கு இருந்த ஒரு சிறு இடத்தை மட்டும் அவருக்கு தந்தனர்.
அவர் மூத்த மகன் தனக்கு தெரிந்த தொழிலை செய்து வாழ்ந்து வந்தார். அவருக்கு பல வருடங்கள் கழித்து மகன் பிறந்தான். இவர் பல துன்பங்களை கடந்து தனது மகளை B.Sc., M.Sc., M.Phil., மற்றும் B.Ed., போன்ற படிப்புகளை படிக்க வைத்து ஒரு நல்ல சிறப்பான தந்தையாக அவரது கடைமையை செய்தார். மகன் பள்ளி படிப்பு படித்து கொண்டு இருக்கிறார்.
°°° எத்தனை துன்பம் வந்தாலும் மனஉறுதி மற்றும் தெய்வ பக்தி இருந்தால் நாம் சோர்ந்து போக மாட்டோம் °°°
வெற்றி முழக்கம் தொடரும்,
#876
Current Rank
50
Points
Reader Points 50
Editor Points : 0
1 readers have supported this story
Ratings & Reviews 5 (1 Ratings)
tamillimat1994
Support this story to win
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points