அந்த 60 நிமிடங்கள்

காதல்
5 out of 5 (26 Ratings)
Share this story

எத்தனையோ காதல் கதைகளை கேட்டும், பார்த்தும்,படித்தும் இருப்பீர்கள் அது போலவே இதுவும் ஒரு சாதாரண காதல் கதைதானே என்று உங்களால் உதாசீனப் படுத்திவிட்டு செல்ல முடியாது.என் பெயர் ராஜா எனக்கும் என் சிறுவயது தோழி ரோஜாவுக்கும் ஏற்பட்ட ஒரு காதல் பயண அனுபவமே இக்கதை‌.சிறுவயதிலிருந்தே நான் துறுத் துறவென ஏதாவது ஒன்றை எப்போதும் செய்துக் கொண்டே இருப்பேன் அதனாலே அக்கம்பக்கத்து வீட்டாரிடம் திட்டு வாங்குவது சகஜமான ஒன்று.இப்படியே போய்க் கொண்டிருக்க அக்கம்பக்கத்து வீட்டாரெல்லாம் ஒரு கட்டத்தில் நெருங்கிய உறவுகளாயினர்.ரோஜா பெயருக்கு ஏற்றார் போல் அழகான ஒரு நகரத்து பெண் நானோ ஒரு கிராமத்து இளைஞன் வருடாந்திரம் கோடை விடுமுறைக்கு தன் அத்தை வீட்டிற்கு வருவாள் அவள் வந்தாலே எனக்கும் எனது சித்தப்பா பெரியப்பா பசங்களுக்கு விளையாட ஒரு ஆள் கிடைத்துவிடும் .பகல் முழுவதும் குறிப்பாக மதியவேளையில் தாயம், பல்லாங்குழி,அஞ்சாங் கல் (ஐந்து கல்) விளையாட்டெல்லாம் விளையாடுவோம்.எங்கள் ஊர் தமிழ்நாட்டின் எல்லைக்கும் கர்நாடகா எல்லைக்கும் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள செழிப்பான கிராமம்.பார்க்கும் இடமெல்லாம் நெல் வயலும் சிற்றோடைகளும் தூக்கனாங் குருவி கூடுகளும் , வயலோடு உறவாடும் உழவர்களும் ,கொக்குகளும் நாரைகளும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் பூமியே ஏதோ பச்சை விரிப்பை படரவிட்டது போல இருக்கும்.அத்தகைய ஊரில் ஆற்றங்கரையில் ஒரு மிகப்பெரிய ஒற்றை மாமரம் இருக்கும் அதில் கோடைக்காலத்தில் பழங்கள் கனிந்து கிடக்கும் காக்கையும் ,கிளிகளும் கொத்தி உண்ணும் சில கீழே விழும் ஆற்றில் குளித்து கும்மாளம் போடும் சிறுவர்கள் அந்த மரத்தடியில் விழுந்திருக்கும் பழத்திற்காக சண்டையிட்டு கொள்வர்.நானும் எத்தனையோ நாள் சண்டையிட்டு இருக்கிறேன் அதுவும் என் தோழி ரோஜாவுக்காக மட்டுமே.அம்மரம் மனிதர்களுக்கு மட்டுமல்ல பலவிதமான பறவைகளுக்கும் பழந்திண்ணிகளுக்கும் ஒரு ஆதாரமாய் விளங்குகிறது.வர்ணித்தால் எங்கள் ஊருக்கென்றே ஒரு காவியம் படைக்கும் அளவிற்கு வர்ணனைகள் இருக்கிறது.இதையெல்லாம் நினைத்து பார்க்கும் போது நாம் ஏன் இன்னும் சிறுவர்களாய் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று பல சமயங்களில் தோன்றும் .நாம் நினைத்தால் மட்டும் என்ன அந்த வசந்த காலம் மீண்டும் திரும்பவா போகிறது.அது ஒன்றும் இல்லை என்று என்னையே நான் பலமுறை சமாதானம் செய்திருக்கிறேன்.பள்ளிப் பருவத்தில் ஏதும் அறியாத பயலுகள் கல்லூரி சென்றால் மட்டும் எங்கிருந்து தான் இந்த காதல் எனும் ஆசை வந்து ஆட்டிப் படைக்கிறதோ.நானும் ரோஜாவும் பத்து வருடங்களுக்கும் மேலாக நல்ல நண்பர்கள் உறவினர்கள் அப்போதெல்லாம் அவள் மீது எனக்கு அது போன்ற எண்ணங்கள் ஒரு நாலும் என் மனதில் தோன்றியதில்லை நான் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் வெளியூரில் இரண்டு வருடங்கள் தங்கி படித்து விட்டு ஊருக்கு வந்தேன்.கிட்டதட்ட மூன்று வருடங்கள் ரோஜாவை நான் பார்க்கவேயில்லை தற்போது கல்லூரியின் முதலாம் ஆண்டு தொடங்கி ஒரு மாதமே ஆன நிலையில் ஒரு நாள் எங்கள் ஊரில் பஸ் ஸ்டாப்பில் ரோஜாவும் அவளது அம்மாவும் பஸ்ஸுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.எனக்கு அவளுடைய அம்மா மட்டுமே அடையாளம் தெரிந்தது அவளை எனக்கு தெரியவில்லை அவள் அம்மாவிடம் இவர்கள் யார் என்று கேட்ட போது டேய் ! அசடு நோக்கு இவாளா தெரியலையா ? நம்ம ரோஜாடா என்றார்‌.காரணம் மூன்று வருடத்திற்கு முன்பு இரட்டை ஜடையில் பாவாடை சட்டை அணிந்துக் கொண்டு ஒரு சிறு விளையாட்டு பிள்ளையாய் இருந்தால் .இன்றோ சுடிதார் அணிந்து கொண்டு தலைமுடியெல்லாம் காற்றிலே பறக்க விட்டு பார்ப்பதற்கே ஏதோ தேவதை போல் காட்சியளித்தாள்.மாலை மங்கிய நேரமது அதில் இவள் மட்டும் பளிச்சென தெரிந்தால் என்னை சுற்றி கலர் கலாராய்ப் பட்டாம்பூச்சிகள் வட்டமிட்டு பறந்துக் கொண்டிருந்தது பின்னால் இளையராஜா இசையெல்லாம் யாரோ வயலின் கொண்டு இசைப்பது போல் இருந்தது .ஓ! இது தான் எல்லோரும் சொல்லும் காதலோ என்று அத்தருணம் முதன் முதலாக நான் உணர்ந்தேன்.பிறகு மூன்று மாதங்கள் கழித்து எங்கள் உறவினர் ஒருவரின் திருமணத்தில் ரோஜாவை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது .அங்கு அவளிடம் பேசினேன் ஆனால் ,அவளோ ! ஏதோ முன்பின் பழக்கமில்லா நபரிடம் பேசுவது போல் சிறு புன்னகைத்து சென்று விட்டாள் என் மனதிற்கு மிகவும் வருத்தமளித்தது . அவள் அக்கா கிரிஜாவிடம் சென்று ஏன் உன் தங்கச்சி என்கிட்ட யெல்லாம் பேச மாட்டாங்களோ! மேடம் அவ்வளவு பெரிய ஆளு ஆயிட்டாங்களா என்றேன்.அவளுடைய அக்கா ஏன் ரோஜா ராஜாவிடம் சரியாக பேசாமல் ஒதுங்கிப் போகிறாயாம் என்ன பிரச்சினை உனக்கு என்றால்.அதற்கு ரோஜா அய்யோ! அக்கா எனக்கு சத்தியமா இவரு ராஜான்னு தெரியல யாரோ தெரிஞ்சவங்க வந்து பேசறாங்கனு இருந்தேன்.நம்ம ராஜான்னு தெரிந்திருந்தால் நான் போய் பேசமா இருந்திருப்பேனா?.அவள் சொல்றதிலும் ஞாயம் இருக்கு காரணம் மூன்று வருடத்திற்கு முன்பு மீசையில்லாமல் ஏதோ அமுல் பேபி மாதிரி இருந்தேன் .இப்போ என்னடான்னா கொஞ்சம் மீசை தாடி யெல்லாம் வைத்துக் கொண்டு ஒரு மிலிட்டரிகாரன் மாதிரி இருப்பதால அடையாளம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.சரி ரோஜா அதெல்லாம் விட்டுத்தள்ளு எப்படி இருக்க போன் நம்பர் கொடுன்னு கேட்டு வாங்கியாச்சு ஒரு வழியா அப்பாடா இப்போதான் எனக்கு நிம்மதி.சிறிது நேரத்திற்கு பிறகு என் அம்மாவை பார்த்த ரோஜா ராஜா எங்க ரொம்ப நேரமாக ஆளே இல்லை என்று கேட்க நான் சரியான நேரத்திற்குப் போனேன் . அப்போது ரோஜா என்கிட்ட போன் நம்பர் வாங்கினால் அதை என் அம்மா பார்த்துட்டு டேய் என்ன நம்பரெல்லாம் கேட்கிற அவகிட்ட கொஞ்சம் உஷாரா இரு என்றார்கள்.நான் அவகிட்ட நம்பர் வாங்கிய விஷயம் அவங்களுக்கு தெரியாது அவ என்கிட்ட வாங்கியதை மட்டும் பார்த்தவங்க இந்த காதல் கீதல்ன்னு வந்து கடைசியில நிக்கப்போற அப்டின்னு சொன்னாங்க.அதுவரைக்கும் அவள் மேல் இருந்த ஒரு ஈர்ப்பு காதலித்தால் தான் என்ன என்ற எண்ணமே தோன்றும் அளவுக்கு ஆகிவிட்டது ‌‌. என் அம்மாவே காரணமாயிட்டாங்க நான் காதலிக்க பிள்ளையிடம் ஒன்றை செய்யாதே என்று சொல்லும் போது தான் அதை செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணமே வரும் அதுபோல உதித்ததே என் காதல்.அவளிடம் நம்பர் வாங்கிய இரண்டு நாட்கள் கழித்து உலக காதலர் தினம் பிப்ரவரி பதினாங்கு வந்தது.இதுவே நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொண்டு அவளுக்கு மெஸேஜ் அனுப்பினேன் நாளை நீ சும்மா இருப்பியா இல்லை ஏதாவது வேலையாக இருப்பாயா? உன்னிடம் சிலவற்றை பேச வேண்டும் என்று கேட்டதற்கு.எனக்கு நிறைய வேலைகள் இருக்கு எதுவானாலும் இன்றே சொல் என்றால் . நேரில் அவளிடம் காதல் சொல்ல எனக்கு வாய்ப்பு அமையவில்லை காரணம் நான் என் ஊரிலும் அவள் அவளுடைய ஊரிலும் இருந்ததால்.பிறகு அவள் என்னை கட்டாயப் படுத்தினாள் என்ன சொல்ல வேண்டுமோ இன்றே சொல் நான் நாளை மெஸேஜ் செய்ய வரமாட்டேன் என்று கூறினாள்.அதன் பிறகு காதலர் தினம் தொடங்குவதற்கு ஒரு நிமிடம் முன்பு என் காதலை அவளிடம் சொன்னேன்.அவளோ ச்சீ! நீ இவ்வளவு கீழ்த்தரமா நடந்துகொள்வன்னு என் கனவுள கூட நினைச்சு பார்த்ததில்லை.உன்னை ஒரு நல்ல நண்பனாக நினைச்சு தான் என் நம்பரையே .உன்கிட்ட தந்தேன் ஆனால், நீ இப்படி பண்ணுவன்னு தெரிஞ்சிருந்தா சத்தியமா உன்கிட்ட பேசியே இருக்க மாட்டேன் என்று ஒரே போடாய்ப் போட்டு உடைத்தாள்‌.நானோ என்னை மன்னித்து விடு என் மனதில் இருந்த ஆசையை கூறிவிட்டேன் இனி ஏற்றுக் கொள்வதும் வெறுத்து ஒதுக்குவதும் உன் விருப்பம் என்று கூற.அவளோ என் நம்பரை அழித்துவிட்டு மீண்டும் மெஸேஜ் செய்தாலும் செய்ய முடியாதவாறு ஃபிளாக் செய்து விட்டாள்.என் காதலை சொல்லிய ஒரு வாரத்திற்கு பின் நான் என் ஊருக்கு செல்ல பஸ் ஸ்டாண்டில் எங்கள் ஊர் பஸ்ஸில் படிக்கட்டு ஏறும் இடத்திற்கு முன்பு உள்ள சீட்ல உட்கார்ந்து இருந்தேன் கீழே பார்த்தால் ரோஜாவின் அம்மா நின்று கொண்டு இருந்தார்கள் ஆனால், அவங்க ஊருக்கு வருவது போல தெரியல பக்கத்தில பார்த்தா ரோஜா நான் அப்படியே ஷாக்! ஆயிட்டேன்.அவங்க அம்மா தம்பி பாப்பா எப்படி தனியா ஊருக்கு போவாளோன்னு பயந்துட்டு இருந்தேன் .இப்போ அந்த கவலை எனக்கு இல்லை என்று சொன்னாங்க.உடனே ரோஜா நான் தனியா போனால் கூட பயமாயில்லை இவன் கூட போறத நினைச்சா தான் பயமா இருக்கு என்று எல்லோர் முன்பும் பஸ்ல சொன்னா.எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.அப்புறம் நம்ம ரோஜாதானே என்று அமையாயிட்டேன் . இரண்டு பேரும் ஒரே சீட்ல உட்கார்ந்து இருந்தோம் எனக்கு பேசவே வாய் வரல சந்தோசத்தில என் மனசு துள்ளிக் குதித்து விளையாடுச்சு ஏதோ காற்றில பறக்கிறது போல உணர்ந்தேன்.அப்புறம் அவளே என்கிட்ட பேச ஆரம்பித்தாள் என்ன ராஜா எப்படி இருக்க அப்படின்னு.நான் ம்ம் நல்லா இருக்கன்னு பாதி வார்த்தைகளை விழுங்கியவாறு பதில் சொன்னேன்‌.ஏன் இப்படி பண்ண நம்ம எவ்வளவு நல்ல நண்பர்களாக இருந்தோம் இப்ப உன்னால என்கிட்ட ஒழுங்கா கூட பேசமுடியவில்லை பார்த்தியா இது உனக்கு தேவையா? என்றால்.நான் என்ன செய்ய என் மனசுல பட்டதை சொல்லிட்டேன் அப்புறம் வேணும் வேணாம்னு முடிவு பண்றது உன் விருப்பம் என்று சொன்னேன்.கண்டக்டர் டிக்கெட் என்று வந்தாறு நானும் பணத்தை எடுத்து நீட்டினேன் அவளும் பணத்தை எடுத்து நீட்டினாள்.சரி அடிச்சிக்காதிங்க யாரோ ஒருத்தர் எடுங்க என்றார்.நான் இரண்டு பேருக்கும் சேர்த்து வாங்கிட்டேன் . உனக்கு ரொம்பத்தான் கொழுப்பு என்றால்.பிறகு கூட்டம் குறைந்த உடன் வேற சீட்ல போய் உட்கார்ந்து கொள்வேன் என்று கூறிவிட்டு நீ உன் படிப்பை முடி பிறகு உன் குடும்பத்தை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு சென்று விட்டு பிறகு என் வீட்டில் வந்து பெண் கேளு எங்க வீட்டாருக்கு சம்மதம்னா நான் உன்னை நிச்சயமாக கல்யாணம் பண்ணிக்கிறேன்‌.யார் தலையில் யாருக்கு யார்னு ஆண்டவன் எழுதி இருக்கானோ அது படிதான் நடக்கும்னு நான் சொன்னேன் பஸ்ல கூட்டமும் குறைந்தது .ஆனால், சீட் மாறி உட்காரவில்லை .கேட்டதற்கு இங்கே எனக்கு சௌகரியமாக இருக்கு அப்படின்னு சொன்னா அவள் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும் ஏதோ கடவுளே நேர்ல காட்சி தந்து போல் இருந்தது.அப்படியே பயணம் முடியும் நேரமும் வந்துச்சு சரியா அறுபது நிமிடங்கள் ஆனது .அதுவே என் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த 60 நிமிடங்கள் என்றும் என் நினைவில் .

Stories you will love

X
Please Wait ...