neethiyin kethi

jawaharg15
உண்மைக் கதைகள்
4.9 out of 5 (46 Ratings)
Share this story

நீதியின் கெதி

[1]

பாய் கட் ஹேர் ஸ்டைல் உடன் கருப்பு டீ-சர்ட் அணிந்த 18 வயது பெண் ஒருவள் டீ.வி-யில் பேசிக்கொண்டிருக்கிறாள்.

”நீதி கிடைக்கும் வரை போராடுவேன்.எனது கணவரை ஆணவக்கொலை செய்த என் அப்பா,மாமா மற்றும் இரண்டு கூலிப்படை நபர்கள் அனைவருக்கும் மரண தண்டனை பெற்று தரும் வரை என் போராட்டம் தொடரும், மனித நேய மற்ற இந்த செயலை செய்து வரும் இவர்களை நாம் விட்டு விட கூடாது,நீதி கிடைக்க மக்களாகிய நாம் ஒன்று சேர வேண்டும் ”

சட்டென சேனல் மாற்றபடுகிறது.”ஊ-சொல்றியா?” என்ற பாடலுக்கு ஒரு பெண் ஆடிக் கொண்டிருக்கிறாள்.

செந்தில் என்ற பெயரில் இருந்து இன்-கம்மிங் கால் வருகிறது. டீ.வி-யை ஸிவிட்ச்-ஆப் செய்து விட்டு சந்தோஷ் ஃபோனை எடுக்கிறான்.

“ஹலோ,எப்படி இருக்க டா?”, உற்சாகத்துடன் பேசினான் சந்தோஷ்.

பூனேவில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிகிறான்.கை நிறைய சம்பளம். உடன் தங்கி யிருந்த நண்பர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டதால் தனியே வசித்து வருகிறான்.பூனேவில் சொந்தமாக ஒரு வீடு வாங்கி, அம்மா அப்பாவை அவனுடன் இருக்க வைக்க வேண்டும் என ஏற்பாடு செய்து வருகிறான்.

“நல்லா இருக்கேன் மச்சி,நீ எப்படி இருக்க? பாம்பே ஃபிகர்ஸ் எதும் கரெட் பண்ணிருக்கியா?”

”நோ மச்சி,ஐம் ஆல்வேஸ் மொரட்டு சிங்கில் டா”

“சும்மா நடிக்காதடா டேய்”

”சரி மச்சான், எம்.எஸ் படம் பாத்தியா ? இல்லயா?”

“இன்னும் இல்லடா,பாக்கணும்”

”பாரு மச்சான்,என்னடா எப்போ பாத்தாலும் நிஷாந்த் நிஷாந்த்-ன்னு ஓவரா பில்ட்-அப் பண்றேன்னு கேப்பேல்ல,நான் ஏன் சொல்றேன்னு படத்த பாத்தா உனக்கே தெரியும்”

“அந்த அளவு நடிச்சிருக்கானா மச்சி?”

“ஆமா மச்சான்.கிரிக்கெட் பிளேயர் கேரக்டர்ன்னா,சும்மா யூனிஃபார்ம மட்டும் போட்டுகிட்டு வந்து எப்போவும் போல நடிக்கறது இல்ல,அந்த நடை உடை பாவனைன்னு சொல்லுவாங்கள்ள..”

“ஆமா”

“அந்த மாதிரி,உண்மையாவே அந்த கேரக்டர் எப்படி இருக்குமோ,அப்படியே வாழ்ந்து காட்டீருக்கான்,நீ வேண்ணா பாரு,அடுத்த சூப்பர் ஸ்டார் நிஸாந்த் தான்”

“சூப்பர் மச்சி,நான் கண்டிப்பா பாக்கறேன்”

செல் ஃபோனை கீழே வைத்து விட்டு தனது ஹாலில் மாட்டப்பட்டிருந்த நிஷாந்தின் போஸ்டரை மகிழ்ச்சியுடன் பார்க்கிறான்.

[2]

பத்திரிக்கையை கோவமாக டீப்பாய் மேல் போடுகிறான் முன்னனி நடிகர் சஞ்ஜய்.

‘இப்படி ஊர் பேர் தெரியாதவன்லாம் வந்து சூப்பர் ஸ்டார் ஆகீட்டு இருந்தா அப்பறம் நாமலாம் எங்க போறது?’

பத்திரிக்கையை கோவமாக பார்த்து நெற்றியை சொரிந்து கொண்டிருக்கிறான் பிரபல நடிகர் ஓஸ்மான்.

நீச்சல் குளம் அருகே சஞ்ஜய்-யும் ஓஸ்மானும் மது அருந்திய படி அமைதியாக சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அருகில் உள்ள பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் ”அடுத்த சூப்பர் ஸ்டார்”என நிஷாந்தின் புகைப்படம் அச்சிட பட்டுள்ளது.

‘சஞ்ஜய்,இதுக்கு ஒரே வழி தான் இருக்கு’ஓஸ்மான் அமைதியை உடைக்கிறான்.

‘என்ன?’

‘யாஷ்-கிட்ட ஹெல்ப் கேக்கலாம்’

சஞ்ஜய் யோசித்துவிட்டு தலையசைக்கிறான்.இருவரும் கோப்பையை கையில் எடுக்கின்றனர்.

“சியர்ஸ்”

[3]

ஆளும் கட்சியின் மந்திரி அலுவலகம். மேசையில்,’தேவ் ஆனந்த்’-மினிஸ்டர் ஆப் ஹவ்சிங் அண்ட் அர்பன் அஃப்பேர்ஸ் என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. மந்திரி ஃபயிலை திருப்பி பார்த்துக்கொண்டிருக்கிறார்.எதிரில் ஒருவர் மந்திரியை லேசான பயத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

’நல்ல ப்ராஜெக்ட்,நல்லா பண்ணுங்க,கட்சி வளர்ச்சிக்கு 10% குடுத்துட்டு பண்ணுங்க’

’ஐயோ சார்,10% குடுக்கர அளவுகெல்லாம் இப்போ மார்ஜின் இல்ல சார்,5% குடுக்கறதே பெரிய விஷயமா இருக்கு. கம்பி, எம்.சாண்ட் , ரேட் எல்லாம் உங்களுக்கே தெரியும்’

‘தெரியும் சார், உங்களுக்கு தெரியாத மார்கெட்டிங்கா?, இது நான் மட்டும் முடிவு பண்ற விஷயமில்ல,மேல வரைக்கும் போகனும்.10% குடுத்துட்டு அதுக்கு ஏத்த மாதிரி பிஸ்னஸ் பண்ணிக்கோங்க சார்’

‘எதிரில் இருந்தவர் செய்வதறியாது முழித்துக்கொண்டிருந்தார்.

[4]

’அப்பார்ட்மெண்ட்-லாம் வேஸ்ட் சார்,மேல இருக்கர செவுரும் நம்மளுது இல்ல, கீழ இருக்கர செவுரும் நம்மளுது இல்ல,சைடும் நம்மளுது இல்ல’

பூனே புற நகர் பகுதியில் ஒரு கேட்டட் கம்யூனிட்டியில் சந்தோஷ் ஒரு வீட்டை பார்க்க வந்துருக்கிறான். சந்தோஷ்,வீட்டை சுற்றி பார்த்துக்கொண்டிருக்க,பேச்சை தொடர்கிறார் சேல்ஸ் மேனேஜர்.

‘சிட்டிக்குள்ள இந்த அளவு இட வசதி எல்லாம் இருக்காது சார்,பெரியவங்க வாக்கிங் போகறதுக்கு,குழந்தைங்க விளையாடரதுக்கு இந்த மாதிரி இடம் தான் செட் அகும்’.

’இது என்ன ரேட் வருது?’

’90 லாக்ஸ்-ல இருந்து ஸ்டார்ட் ஆகுது, பாருங்க சார்,கடைசில பேசிக்கலாம்’

’ஓ.கே சார், வீட்ல டிஸ்கஸ் பண்ணீட்டு சொல்றேன்’

[5]

இரவு 12 மணி.மும்பையின் கடற்கறையின் அருகே ஓர் பிரம்மாண்ட அடுக்கு மாடி குடியிருப்பு. வேலையை முடித்துவிட்டு நடிகர் நிஷாந்த் தனது அப்பார்ட்மென்ட்க்குள் நுழைகிறான். கதவை பூட்டி விட்டு பெட்-ரூம்க்கு செல்கிறான்.சட்டென பவர்-கட் ஆகிறது. நிஷாந்த் தனது செல்-ஃபோனில் உள்ள லைட்டை ஆன் பண்ணுகிறான். ஏதோ சத்தம் கேட்கிறது.

‘யாரு?’

‘யாரது?’

செல் ஃபோனில் ஏதோ ஒருவருக்கு கால் செய்ய ஆயத்தமாகிறான்.நம்பரை டயல் செய்வதர்க்குள் திடீரென இருவர் நிஷாந்தை தாக்குகின்றனர். நிஷாந்த் கட்டிலில் தள்ள படுகிறான்.ஒருவன் நிஷாந்தின் முகத்தை தலையனையால் அமுத்த மற்றொருவன் காலை பிடித்துக் கொண்டிருக்கிறான்.நிஷாந்தின் கழுத்து ஒரு கயிறால் நெரிக்கப் படுகிறது.அவனால் கத்த முடியவில்லை,தனது கையை வெய்த்து கயிற்றை விடுவிக்க முயல்கிறான்,முடியவில்லை.உதைத்துக் கொண்டிருந்த கால் நின்றுவிட்டது. ஃபேனில் தூக்குக் கயிறு கட்டி நிஷாந்தின் சடலம் அதில் தொங்க விடப்படுகிறது.

[6]

மறுநாள் காலை நடிகர் நிஷாந்த் மன உளைச்சல் காரனமாக தற்கொலை செய்து கொண்டார் என அனைத்து பத்திரிக்கை தொலைக் காட்சிகளில் செய்தி பரவுகிறது.

[7]

நடிகர் சஞ்ஜய்-யும் ஓஸ்மானும் யாஷ் வீட்டில் இருக்கின்றனர்.

‘ஒன்னும் ரிஸ்க் ஆகிடராதே?’

‘ஒன்னும் ஆகாது ஓஸ், போய் ஜாலியா இரு,தலவலி தீந்துருச்சு’

ஓஸ் நிம்மதி பெரு மூச்சு விடுகிறான்.

‘அப்பறம், அடுத்து என்ன படம்?’

‘ஒரு பேன் இந்தியா படம் பண்ண போறேன்,நீங்களும் வாங்கலேன், சேந்து நடிப்போம்’

‘சே.. சே.. எனக்கு சினிமா –ல நடிக்கறது பிடிக்காது. ஒன்லி இன் லைவ்’

மூவரும் சிரிக்கின்றனர்.

[8]

சந்தோஷ் யூ-டியூபில் ”ஜஸ்டிஸ் ஃபார் நிஷாந்த் என்று புதிதாக ஒரு சேனல் துவங்கி அதில் நிஷாந்திற்க்கு நீதி கிடைக்கும் வரை அனைவரும் போராட வேண்டும் என மக்களை ஒன்று திரட்ட வீடியோக்களை பதிவிடுகிறான். டிவிட்டர் மற்றும் இன்ஸ்டா கிராமில் , ஜஸ்டிஸ் ஃபார் நிஷாந்த் என குரூப் உருவாக்கி , அதில் நிஷாந்த் ரசிகர்களை ஒன்று திரட்டுகிறான்.

இரண்டு வாரம் கழிகிறது.

[9]

சந்தோஷ், புதிய வீட்டை பத்திர பதிவு செய்வதற்க்காக ப்ரோக்கரிடம் 5 லட்சம் லஞ்ஜ பணத்தை கொடுக்கிறான். அந்தப் பணம் இன்னும் கொஞ்சப் பணத்துடன் சேர்ந்து மந்திரியின் கையிக்கு செல்கிறது. அது மேலும் சில பணத்துடன் சேர்ந்து முதலமைச்சர் கையிக்கு செல்கிறது. அந்தப் பணத்தை முதலமைச்சரின் மகன் ’யாஷ்’ ஒரு வக்கீலுக்கு கொடுக்கிறான்.அவன் அருகில் நடிகர்கள் சஞ்ஜய்-யும் ஓஸ்மானும் உள்ளனர்.

‘சார பத்தி சொல்லவே தேவையில்ல,நம்ம நாட்லயே அதிகம் சம்பளம் வாங்கர மோஸ்ட் சக்ஸஸ்ஃபுல் லாயர், இந்த கேஸ் இப்பொவே முடிஞ்ச மாதிரி தான்’

யாஷ் சிரித்துக்கொண்டே வக்கீழைப் பார்க்க, சஞ்ஜய்-யும் ஓஸ்மானும் அவருக்கு கை கொடுக்கின்றனர்.

‘தேன்க்யூ சார்’

‘யூ ஆர் வெல்கம்’

[10]

ஒரு வீட்டு தொலைக் காட்சியில் ஒரு நியூஸ் சேனலில் சந்தோஷின் வீடியோ ஒளிபரப்பு ஆகிரது.

‘ஃப்ரெண்ட்ஸ், நிஷாந்த் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்துல இருந்து வந்து தன்னோட திறமையாள சினிமாவுல சாதிச்சவர். ரசிகர்களுக்கு முடிஞ்ச வரை தன்னால என்ன உதவி செய்ய முடியுமோ அத செஞ்சவர்.தன்னோட எதிர்கால இலக்குகளை எல்லாம் லிஸ்ட் போட்டு வெச்சு அடைய முயற்சி செய்தவர்,அதுல கூட குழந்தைகள் நலனுக்காக நிறைய பண்ணனும்ன்னு யோசிச்சவர். இப்படி பட்ட ஒருத்தருக்கு இவ்ளோ அநியாயமான ஒரு மரணம் நடக்கலாமா? அவருக்கு நீதி வேண்டாமா? நீதி கிடைக்க நாம அடுத்து என்ன பண்ணனும்னா..

சட்டென சேனல் மாற்றப்படுகிறது.கிரிக்கெட் மேட்ச் நடக்கிறது. சேனலை மாற்றிய பெண் பாய் கட் ஹேர் ஸ்டைல் உடன் கருப்பு டீ-சர்ட் அணிந்திருக்கிறாள்.

Stories you will love

X
Please Wait ...