JUNE 10th - JULY 10th
இவ்வுலகில் கஷ்டங்களை சந்திக்காத மனிதர்களே இல்லை. ஆனால் வாழ்க்கையே கஷ்டம் என்றால் எவ்வாறுதான் வாழ்வது? ஆசைப்படத்தை அடைவதற்காக போராடும் மனிதர்களைப் போல் தான் கீதாவும். அவளுக்கு இதுவரை வாழ்வில் ஆசைப்பட்ட எதுவும் கிடைத்ததில்லை. கீதாவுக்கு படித்து வைக்கில் ஆக வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது. அவளும் நன்றாகவே படித்து வந்தாள். அவளுக்கு க.பொ.த சாதாரண தர பரீட்சை அண்மித்த காலத்தில் அவளது தந்தை அவர்களை விட்டு பிரிந்து வேறு திருமணம் முடித்தார்.அவளால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை .இருந்தும் கூட அப்பா இல்லாமல் அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு தன்னையும் தனது தம்பிமார்களையும் வளர்த்து வருகிறார் என்பதை உணர்ந்த அவள் தனது முழுக்கவனத்தையும் படிப்பிலே செலுத்தி நன்றாக பரீட்சையை எழுதி முடித்தாள். அவளது தம்பிமார் கூட நன்றாகவே படிப்பார்கள். அதனால் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அதை எல்லாம் தனக்குள் வைத்து விட்டு தனது பிள்ளைகளை நன்றாக வளர்ப்பதில் முழு கவனத்தையும் செலுத்தினாள். கீதாவின் தாய் தன் குழந்தைகளுக்காகவே தன் வாழ்க்கையே அர்பணித்தாள். சில மாதத்தின் பின்னர் பரீட்சை முடிவுகளும் வந்தன அவளும் நல்ல புள்ளிகள் ( 4A,2B,3C ) பெற்று உயர்தரம் படிக்க ஆரம்பித்தாள்.
அப்பா இல்லாத காரணத்தால் அவளது அம்மா வேலைக்கு போக தொடங்கினார்கள். இதனால் இவளுக்கு பொறுப்பும் கூடியது. வீட்டுவேலைகள் செய்யவேண்டும், சமைக்க வேண்டும், தனது இரு தம்பிமார்களையும் கவனிக்க வேண்டும், தனது படிப்பையும் பார்க்க வேண்டும். ஒரு 18 வயது பெண் எவ்வளவு பொறுப்புகளைத்தான் சுமப்பாள். தனது அம்மா தங்களுக்காக தான் இவ்வாறு கஷ்டப்படுகிறாள், நாமும் அவரை கஸ்ரப்படுத்த வேண்டுமா என நினைத்து அணைத்து பொறுப்புக்களையும் தானாகவே ஏற்றுக்கொண்டாள். ஆனாலும் கூட பாடசாலைக்கும் செல்வதால் களைப்பில் மேசை மீதே தூங்கிவிடுவாள். இதனால் ஆசிரியர்களின் கோவத்திற்கும் ஆளாக்கினாள், இருந்தும் கூட அனைத்து தண்டனைகளையும் ஏற்றுக்கொள்ளுவாள். ஏன் என்றால் அவளுக்கு யாரும் தன்னோட கஷ்டத்தை பார்த்து பரிதப்படுவது பிடிக்காது. தனது அம்மாவை போலவே அனைத்து கவலைகளையும் தனக்குள்ளையே வைத்திவிட்டு எப்பவும் சிரித்த முகத்துடனே இருப்பாள். அவளின் கஷ்டத்துக்கு காலம் கூட உதவியது என்றுதான் சொல்ல வேண்டும். கொரானா தொற்றுகாரணமாக பாடசாலைகள் மூடப்படடன. இதனால் காலையும், மாலையும் வேலைகளை செய்துவிட்டு இரவு இருந்து படிப்பாள். எப்படியாவது வைக்கில் ஆகா வேண்டும்என்பதே அவளது நினைப்பில் ஓடிக்கொண்டு இருத்தது.அவளுக்கு கிடைத்த நண்பர்களில் ரமேஷ், ரவி ஆகியோர் அவளுடன் மிகநெருக்கமாகவேபழகினார்கள்.அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் கூட அவளுடன் நல்ல நெருக்கமாகவே பழகினார்கள். அவள் தனக்கு கிடைத்த நண்பர்களுடன் இரவு பகல் பாராது படித்து வந்தாள். தான் படிப்பதோடு மட்டும் நின்று விடாமல் தனது நண்பர்களையும் சேர்த்து படிக்க வைத்தாள். இதனால் அவர்களது தாய்மார்களின் ஆசீர்வாதமும் கிடைத்தது. க. பொ.த உயர்தர பரீட்சைக்கான காலமும் அண்மித்தது. அவள் துக்கமும் இல்லாமல் படித்து ஒரு வழியாக பரீட்சையை எழுதி முடித்தாள்.பின்னர் அவள் வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்த பின் தனக்கு கிடைத்த நண்பர்களுடனும் அவர்களின் குடும்பத்துடனும் தனது நேரத்தை செலவு செய்தாள். எல்லாம் நன்றாகவே நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என சந்தோசப்பட்டுக்கொண்டு இருந்தாள்.ஆனால் அவள் சந்தோசம் நிலைக்கவில்லை. பொருளாதார பிரச்சினை காரணமாக நாட்டில் விலை வாசி ஏறியது. இதனால் அவளின் அம்மா ஒருவரின் சம்பளம் போதவில்லை. இதனால் Results வரும் வரை வேலைக்கு போவதாக முடிவு செய்தாள். வேலை தேடிக்கொண்டு இருந்தாள்.
ரமேஷின் தாயார் அவளுடன் கதைக்கும் விதமும், எல்லா விடயத்தையும் தன்னிடம் நம்பி கூறுவதும் அவளுக்கு அவர் மீது அதிக பாசத்தை வரவைத்தது. அவனின் தாயைப் போலவே அவனும் கீதா மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தான்.ரமேஷ் அவள் மீது காட்டுகின்ற அக்கறை, பாசம் ஒரு நாள் காதலாக மாறியது. கீதா இதனை உடனே ரவியிடம் கூறினாள். ரவி எப்போதுமே கீதாவின் முடிவுகளுக்கு குறுக்கே நிற்பதில்லை. அத்துடன் அவனுக்கு ரமேஷ்ஷை நன்றாகவே தெரியும் இதனால் அவன் கீதாவின் காதலுக்கு உதவுவதாக கூறினான்.எதையுமே Open ஆக பேசுவது கீதாவின் குணம். எனவே தனது காதலை அவனிடம் கூறி சம்மதத்தை கேட்டு விட்டு தனது அம்மாவிடம் கூறலாம் என் நினைத்து ரமேஷ்ஷிடம் சென்று அவனை காதலிப்பதை கூறினாள். ஆனால் அவனோ எந்த வித பதிலும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டான். அவளால் அதை தாங்கமுடியவில்லை. அவள் அடுத்தநாளும் அவனிடம் சென்று தனது காதலை கூறினாள். அதற்கு அவன் நான் உன்னோட நல்ல ஒரு நண்பனாத்தான் பழகினான்,எப்பவும் அப்படித்தான். சும்மா சும்மா ஆசைகளை வளர்க்கமா Results வந்ததும் என்ன செய்யணுமோ அத பாரு, காதல் கத்தரிக்காய் என்று கனவை அழிக்காம அதை நிறைவேற்று அதுக்கு பிறகு காதல் கத்தரிக்காய் என்று சுத்து என்று கீதாவுக்கு அறிவுரைகள் கூறினான். ஆனால் அவளோ அவனை விட்டுவிடுவதாக இல்லை.
அவனிடம் மீண்டும் நீ சொல்லுற மாதிரி எல்லாம் செய்த என்னை லவ் பண்ணுவாயா? அதுக்கு ரமேஷ் கீதாவிடம் உனக்கு ஒரு முறை சொன்ன புரியாத இந்த எண்ணத்தோட இருந்த உன்னால படிக்க முடியாது. எல்லாத்தையும் குப்பைல போடடுட்டு படி ஒழுங்கா. கீதாவுக்கு இவன் எப்படி சொல்லுவதை எல்லாம் கேட்ட்தும் அவன் மேல என்னும் அதிகமாக காதல் வந்தது. தன்னோட கனவை நினைவாக்க எவ்வளவு ஆசைபடுறானே யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு காதலன் என எண்ணிக்கொண்டு இருந்தாள். இதை அறிந்த ரமேஷ் கீதாவிடம் உனக்கு உன்னோட குடும்ப சூழ்நிலை நல்லாவே தெரியும் அப்பாவும் இல்லாம அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு உங்கள எல்லாம் வளர்த்து வாறாங்க என்று எந்த நேரத்தில அவங்களுக்கு support பண்ணறத விட்டிட்டு காதல் என்று சுத்துறது சரி தானா? உங்க அப்பா போனதுக்கு அப்புறம் தன்னோட ஆசைக்காக்க வாழாம தன்னோட பிள்ளைகளுக்காக வாழுறாங்க நீ இந்த நேரத்தில எப்படி உன்னோட சுயநலத்துக்காக உன்னோட அம்மாவ நடு ரோட்டில நிக்கவைக்காத ,அதோட உனக்கு நிறைய கனவு இருக்கு அதையும் என் பின்னாடி சுத்தி அழிக்காத உன்னோட அம்மா பட்ட கஷ்டம் எல்லாத்துக்கும் உன்னோட படிப்புதான் அவங்களுக்கு ஆறுதலாக இருக்கும்.உன்ன லவ் பண்ண வேணாம் என்று சொல்ல எனக்கு உரிமை இல்ல but எப்ப பண்ணி உன் வாழ்க்கைய அழிக்காத என்று தான் சொல்லுறன் இதுக்குமேல உன்னோட விருப்பம். நீ சொல்லுற எல்லாம் சரிதான் ஆனால் லவ் பண்ண நடு ரோட்ல நிப்பாங்க என்று உனக்கு யார் சொன்னது? and என்னோட சந்தோஷத்துக்காக குடும்பத்தை நடுரோட்ல கொண்டு வர அளவுக்கு எல்லாம் இல்லை. எப்ப கூட நீ என்னோட காதலை ஏத்துக்கொண்டு இருந்தா நான் இப்பவே போய் அம்மாட்ட சொல்லி இருப்பன். உனக்கு என்ன பிடிக்கல so அத நேர சொன்ன நன் உன்ன டிஸ்டர்ப் எல்லாம் பண்ணமாட்டன் தானே.அத விட்டிட்டு தேவையில்லாத கதை எல்லாம் கதைக்க வேணாம் ரமேஷ்க்கு என்ன சொல்லுற என்று ஒண்ணுமே புரியல, அவன் கீதாவிடம் உன்ன பிடிக்காது எண்டு இல்ல but நான் உன்ன அந்த எண்ணத்தில் பாத்தது இல்லை. அத தான் சொல்லுறன் நீ ரொம்ப நல்ல பொண்ணு உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் but லவ் எல்லாம் இல்ல.நானும் உன்னை hurt பண்ண கூடாது எண்றதுக்காக எவ்வளவு பொறுமையா கதைச்சா நீ அதை புரிஞ்சுகொல்லுறாய் இல்லை. நான் ஒரு பொண்ண love பண்றன். அவளத்தான் கல்யாணமும் கட்டப் போறன் நீ ஆசைய வளர்க்கமா படி. அவளும் அவன் லவ் பண்ணறேன் எண்டு சொன்ன பிறகு அவனை disturb பண்ணக்கூடாது என்று அவனுக்கு sorry சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள். அதன் பின் அவள் அவனுடன் கதைப்பதை குறைத்துக் கொண்டு ஒரு முலையில் இருந்து யோசித்துக் கொண்டு இருந்தாள்.
கீதா கவலையாக ஒன்றும் சாப்பிடாமல் முலையில் அடங்கி ஒடுங்கி இருப்பதை ரவி மூலம் அறிந்து கொண்ட ரமேஷ் அவளின் வீட்டிற்கு வந்து அவளிடம் நீ என்னை நேசிப்பதுஉண்மையாக இருந்தால் ஒன்னும் யோசிக்காம படித்து அம்மாவை மகாராணி போல நல்லா பார்த்து கொள்ளுவேன் என்று சொல்லும் என கேட்டான். அவளும் நீ சொன்னதுபோல என்னோட கவனவ எல்லாம் நினைவாக்கி என்னோட அம்மாவ மகாராணி மாதிரி பார்த்துக் கொள்ளுவேன் என்று வாக்களித்தாள். பின்னர் கீதா நடந்த அனைத்து விடயத்தையும் ரவியிடம் கூறினாள். அதற்கு ரவி சரி ஒன்னும் யோசிக்காம அவனுக்கு குடுத்த வாக்கை காப்பாத்து.இப்படியே நாட்கள் சென்றன.அவளுக்கும் கடை ஒன்றில் வேலை கிடைத்தது.அவளை விட அவளது தம்பி வருண் இரண்டு வயது இளையவன். ஒருநாள் வருனுடைய க.பொ.த சாதாரண பரீட்சை புள்ளி வந்தது. அவளது தம்பி பரீட்சையில் 9A எடுத்து இருந்தான். அவளுக்கும் அவளது அம்மாவுக்கும் ரொம்ப சந்தோசமாக இருந்தது. அவள் A/L கணித பாடம் படிக்க ஆசைப்படடான். அவர்களும் அவனின் ஆசைக்கு குறுக்க நிற்கவில்லை. ஆனால் அதற்கு நிறைய பணம் தேவைப்படும் என்பதால், இரவு நேரத்தில வகுப்பு கொடுக்கலாம் என்று முடிவு செய்தாள். ஆனால் காலையில் வேலைக்கு போவதால் இரவில் தான் வகுப்பு போடா வேண்டி வந்தது. 7 மணியில் இருந்து 9 மணி வரை வகுப்பு எடுத்து விட்டு வீடு வருவாள்.ஒருநாள் அவன் தம்பிக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது.அனைத்து செலவுகளையும் பாடசாலையே ஏற்றுக்கொண்டாலும் அவனுக்கு செலவுக்கு பணம் தேவைப்படும் என யோசித்தாள். அதனால் சிறுது சிறிதாக சேமித்தாள். தம்பி அங்கு ஒருமாதம் இருக்கப்போறன்,என்பதற்காக extra time போட்டு கூட வேலை செய்தாள். ஞாயிறு ஒருநாள் தான் அவள் வேலை இல்லாமல் இருப்பது. தன்னோட தம்பிக்காக ஞாயிறு கூட வேலைக்கு போக ஆரம்பித்தாள். இந்த நேரத்தில் அவளது பெறுபேறுகள் வெளியாகின. அவள் இதிலும் நல்ல பெறுபேறே எடுத்தாள்(2A,B). இதனை அறிந்த ரவியும், ரமேஷும் சந்தோசம் அடைந்தார்கள். ஆனால் கீதாவால் சந்தோசப் படமுடியவில்லை. கீதா தனது முடிவை ரவியிடம் கூறுவதற்காக அவனுக்கு call எடுத்தாள், கீதாவை வாழ்த்துவதற்க்காக ரமேஷும் அவளது வீட்டிற்கு வந்தான்.
ரவி நான் படிக்கவில்லை வேலைக்கு தான் போக போறன். இப்பதான் தம்பிக்கும் வெளிநாடு போவதற்கு வாய்ப்பு கிடைத்து இருக்கு இதில நான் என்னோட கனவு என்று படிக்கப்போன, வெளிநாடு போய் படிக்கணும் என்ற அவனோட கனவ நினைவாக்க முடியாம போய்டும். எனக்கு என்ன செய்ற என்று தெரியல, நீயே சொல்லு நான் எடுத்த முடிவு சரிதானே? நீ சொல்லுற பதில்லதான் எல்லாம் இருக்கு. ரவிக்கோ கீதா எடுத்த முடிவில் எந்த ஒரு விருப்பமுமில்லை. அவன் கீதாவிடம் நீ இதுக்கு நான் support பண்ணவே மாட்டேன். கீதாவுக்கு இது புதுசா இருந்தது எப்போதுமே தான் எடுக்கற முடிவுக்கு support பண்ணற ரவி இண்டைக்கு எப்படி கதைக்கிறான் எண்டு குழப்பமாகவே இருந்தது! அவள் அவனிடம் என்னைப்பற்றி எல்லாம் தெரிஞ்ச நீயா எப்படி பேசுற என்னால நம்ப முடியல? வேற எப்படி சொல்ல சொல்லுற இன்னும் தம்பிக்காக என்ன எல்லாம் செய்ய போற! ஏண்டி உனக்கு என்று ஆசை இல்லையா? உனக்கு என்று கனவு இல்லையா?உனக்கு என்று வாழ்கை இல்லையா? இப்பாடி உன்னோட கனவை எல்லாம் தியாகம் செய்றதுக்காகவா கண் முழிச்சு படிச்ச? இதுக்காகவா எவ்வளவு கஷ்டப்பட்ட சொல்லு ? நீ சொல்லுறது எல்லாம் சரிதான் but என்னோடதம்பியோட கனவை விட, என்னோட கனவு எனக்கு பெரிசா தெரியல .சரி இப்ப நல்ல result எடுத்திட்டு படிக்காம வேலைக்கு போன அம்மா கவலை பட மாட்டாவா?அதோட ரமேஷ்க்கு நீ குடுத்த வாக்கு? அவன் உன்ன என்ன நினைப்பான் ? இத்தனை பேர கஷ்டப்படுத்தப் போறியா ? வேலைக்கும் போய் கொண்டு வகுப்பும் கொடுத்த உனக்கு படித்து கொண்டு வேலை செய்ற கஷ்டமா என்ன சொல்லு? அவளுக்கு என்ன செய்ற எண்டு தெரியல எல்லாத்தையும் வாசல நீன்று கேட்டுக் கொண்டு இருந்த ரமேஷ் உள்ள வந்து கீதாவின் பக்கத்தில் அமர்ந்து நீ சொல்லுறது சரிதான் ஆனால் நீ தம்பிய நினைத்து கவலைப்படுற மாதிரிதானே உன்னை நினைத்து உன்னோட அம்மாவும் கவலைபடுவார்,அத யோசித்து பாரு.நீ படித்த்து கொண்டே வேலை செய்து தம்பிக்கு காசு சேமி, அதுவரை உங்க அம்மா தம்பி என்கூட எங்க வீட்டில இருக்கட்டும் நானும் ரவியும் நீ படிக்கும் மட்டும் அம்மாவ பார்க்கமாட்டமா? அழைப்பில் இருந்த ரவியும் இதுக்கு ஓத்த்துக்கொண்டான். அவளுக்கு கஷ்டமாக இருந்தாலும் அவங்க சொன்னது சரியாகப்பட்டது. அதனால் ஒப்புக்கொண்டாள். ரமேஷ் அவள் படிக்க போகும் போது அவளிடம் அம்மாவை பற்றி கவலைபட்டு படிப்பை விடாம நல்லாப் படி என்று அனுப்பிவைத்தான்.வருடங்கள் பல உருண்டு ஓடின . அவளது படிப்பும் முடிந்தது.
அவளுக்கு ரவியிடம் இருந்து அழைப்பு வந்தது.நான் உன்கூட முக்கியமான விடயம் பேசணும்.நான் வந்து உன்னை Pick Up பண்றேன் என கூறினான. நான் சொல்ல வந்தது ரமேஷ் பற்றி. அவன் உனக்கிட்ட ஒரு பொண்ணை லவ் பண்ணறேன் என்று சொன்னது பொய் அவன் உன்னைத்தான் லவ் பண்றான் அவனுக்கு நீ என்டா உயிர் எங்க அத சொன்ன நீ லவ் என்று படிக்காம இருந்து விடுவியோ என்றுதான் அவன் தன்னோட ஆசை எல்லாத்தையும் தனக்குள்ள வைத்துக் கொண்டு உன் கிட்ட பொய் சொன்னவன். உனக்கே தெரியும் முதல் அவன் படிக்கும் போது ஒரு பொண்ண லவ் பண்ணவன். அவளுக்காக Class எல்லாம் கட் பண்ணி அவள் பின்னால சுத்தி கடைசியா அவள் இவனை ஏமாத்திட்டாள். இப்ப ஒன்னும் இல்லாம எவ்வளவு கஸ்டப்படுறான் அது போல உனக்கும் நடக்க கூடாது, உனக்கு நிறைய கனவு எல்லாம் இருக்கு, அது தன்னால பாழாகிடுமோ என்றுதான் உன்கிட்ட சொல்லல நானும் நீ படித்து முடித்ததும் சொல்லுவான் என்று தான் அவன் சொன்னதுக்கு எல்லாம் ஒத்துக்கொண்டன். ஆனால் அவன் சொல்லுறான் தான் சொன்ன பொய் உண்மையாவே இருக்கட்டும் அவளுக்கு துளி கூட நான் தகுதி இல்லை. அவளை நான் கல்யாணம் செய்தால் அவள் கஷ்டத்தை தவிர வேறு எதையும் அனுபவிக்கமாட்டாள்.அவள் நல்ல படித்த பையனா பாத்து கல்யாணம் செய்யட்டும். என்று சொன்னான். இதுக்குமேல உன்கிட்ட மறைக்கிறதால என்ன பயன். நீ அவனை எந்த அளவுக்கு லவ் பண்ணுறாய் எண்டு எனக்கு தெரியும் அவன் அத விட அதிகமாகவே உன்னில் பாசம் வைத்து இருக்கான். நீ போய் அவன் கிட்ட பேசு நீ பேசினால் அவன் மனசு மாறலாம். அதோட அவன் லவ் பண்ணறதா உன்கிட்ட சொன்ன பொண்ணுக்கு கல்யாணம் நடந்துவிட்டது.
கீதா அவனை முதல் முறையாக எங்கு சந்தித்தாலோ அதே இடத்திற்கு அவனை அழைத்துச் சென்றாள். அவனுக்கு கீதா ஏன் இங்கு தன்னை அழைத்து வருகிறாள் என்று குழப்பமாக இருந்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாக அவளுடன் வந்தான்.அவள் அவனிடம் இந்த இடம் உனக்கு ஞாபகம் இருக்கிறதா?? என் கேட்டாள். அவனும் அதற்கு இந்த இடத்தை மறக்க முடியுமா!!! நம்முடைய நட்பு ஆரம்பித்தது இந்த இடத்தில்தான் எப்படி என்னால் இந்த இடத்தை மறக்க முடியும்???? என் அவளிடம் கூறினான். நமது சந்திப்பிற்கு காரணமாக அமைந்த இடம் உனக்கு ஞாபகம் இருக்கிறது, ஆனால் நான் உன்னை காதலிப்பது உனக்கு மறந்துவிட்ட்தா? அல்லது மறந்ததைப்போல் நடிக்கிறாயா?. நான் வேறு ஒரு பெண்ணை காதலிப்பது தெரிந்தும் உன்னால் எப்படி இவ்வாறு கேட்க முடிகிறது! . நீ காதலிக்கும் பெண் வேறு திருமணம் செய்து விட்டாள் தானே!.அவள் என்னை வேண்டாம் என்று மறந்து விட்டதைப்போல என்னால் அவளை மறக்க முடியாது. நீ வீண் கற்பனைகளை வளர்ப்பதை விட்டுவிட்டு, படித்த ஒரு பையனைப் பார்த்து திருமணம் செய்து சந்தோஷமாக இரு. என்னை பற்றி கவலைப்படாதே!!!! கீதா அவனை கட்டியணைத்து அழுதுகொண்டே அவனிடம் உன்னை விட நல்லவன் எனக்கு கிடைக்கமாட்டான். நான் படிக்க வேண்டும் என்பதற்காக, நீ உன்னோட காதலை மறைச்ச, என்னோட கனவ நான் நினைவாக்க நீ உன்னோட ஆசைகளை தியாகம் செய்த, நானே என்னோட கனவை வேணாம் என்று நினைக்கும் நேரத்தில் கூட நான் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கனும் என்று இவ்வளவு வருசமா என்னோட குடும்பத்தை பார்த்துக்கொண்ட இதை விட வேறு என்ன தகுதி வேண்டும் ? என்னோட கனவ உன்னோட கனவா பார்க்கிற, என்னோட குடும்பத்தை உன்னோட குடும்பமாக நினைக்கிற நான் நல்ல வசதியாக வாழனும் என்று உன்னோட காதலையும் என்கிட்டையே சொல்லாம மறைச், இப்படி ஒருத்தன் எந்த பொண்ணுக்கும் கிடைக்காது. நீ சொல்ற மாதிரி ஒரு படித்த பையனை கல்யாணம் செய்த நான் சந்தோஷமாக வாழ்ந்திடுவனா? அப்போ என்னோட வாழ்க்கையை நினைச்சு என்னை விட அதிகமாய் நீதான் கவலைப்படுவாய் . என்னோட கஷ்டத்தில் என்னை விட்டு போகாதே உன்னை வசதி வந்ததும் நான் எப்படி விட்டு போவேன். இத்தனை வருடம் உன்னை பிரிந்து இருந்தும் கூட உன்னில் இருந்த காதல் ஒரு துளி கூட குறையவில்லை. நீயும் என்னை காதலிக்கிறாய் என்று தெரிந்ததும் நான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன் என்பதை வார்த்தையால் சொல்லிவிட முடியாது. ஆனால் இப்போது கூட உன்னால் என்னை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ன? ரமேஷிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அதனை அறிந்து கொண்ட கீதா இப்போது கூட உன்னால் என்னை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சரி நான் உன்னை கட்டாயப்படுத்த விரும்பவில்லை. அதேபோல நீயும் என்னை கட்டாயப்படுத்தக் கூடாது. உன்னை நினைத்து நான் கவலைப்படக் கூடாது என்றால், என்னை பற்றியும் நீ கவலைப்படாமல் இருக்க வேண்டும். இப்போது மட்டும் அல்ல எப்போதும் உன்னை மட்டும்தான் நான் காதலிப்பேன். அதற்காக உன்னையும் காதலிக்கச் சொல்லி கட்டாயப் படுத்த மாட்டேன். அதேபோல் நீயும் என்னை திருமணம் செய்து சந்தோஷமாக இரு என்று சொல்லி கட்டாயப் படுத்த கூடாது. என்னால் உன்னை மறந்து வேறு ஒரு ஆணுடன் வாழ முடியாது. நீ என்னை ஏற்றுக்கொள்ளாமல் விட்டாலும் பரவாயில்லை. ஆனால் நான் உன்னை நினைத்து கொண்டு உனக்காகவே வாழுவேன். நீ நினைப்பது போல் உன்னை திருமணம் செய்து கொண்டால் என்னுடைய வாழ்க்கை வீணாகாது. என்னை உன்னை விட வேறு யாராலும் நன்றாகப் பார்த்துக் கொள்ள முடியாது.அதை நீ எப்போது புரிந்து கொள்கிறாயோ அது மட்டும் உனக்காக காத்திருப்பேன்
ஒரு நாள் அவளது தம்பிக்கு வெளிநாடு சென்று படிக்க அழைப்பு வந்தது. அவள் படிக்கும் போது சேர்த்த பணம் அவன் வெளிநாடு சென்று படிப்பதற்கும் போதுமானதாகவே இருந்தது. அவள் ஆசைப்பட்டபடி தனது தம்பியை படிக்க வைத்தாள். தனது அம்மாவையும் மற்ற தம்பியையும் நன்றாகப் பார்த்துக் கொண்டாள்.அவர்களை சந்தோஷமாக பார்த்துக் கொண்ட அவளால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை.இதனை ரமேஷால் தாங்க முடியவில்லை.இதற்கு மேல் அவள் மீது உள்ள காதலை மறைத்து பயனில்லை என்பதால் அவன் தனது காதலை அவளிடம் கூறினான்.
#336
Current Rank
32,717
Points
Reader Points 1,050
Editor Points : 31,667
21 readers have supported this story
Ratings & Reviews 5 (21 Ratings)
lahirabdullah
Best
dilaksanntr
eeconline.acj
Nice Congratulations
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points