ஊசல்

மர்மம்
5 out of 5 (1 रेटिंग्स)
कहानी को शेयर करें

"ஹே ஏதாச்சு சொல்லு.." என்று அந்த கஃபே-வில் எல்லாரும் திரும்பி பார்க்கும்படி உரக்க கத்தினான் மணிசித்ரன் .... ரொமாண்டிக் மூடில் சுற்றி இருந்த அனைவரும் அந்த மேஜையை விசுக் என்று பார்த்தனர், நாற்பது வயது மதிக்கத்தக்க இளம் ஜோடிகள் உட்பட. அவர்கள் பார்த்த சில நொடிகளில் அனைவரது முகத்திலும் சாந்தம் வர உதவியது மனிசித்ரன் யாரை நோக்கி சீரினானோ அவளது முகம். அவ்வளவு அமைதியான முகம், மதி போல் சலனமற்ற முகம். அவளுக்கு அவனது மூட் ஸ்விங் பற்றி நன்றாகவே தெரியும். ஆம், அவளை விட யாருக்கு அதிகம் தெரிந்திருக்க போகிறது அவனை பற்றி !! காதல் !

பெரும்பாலான இந்தியர்களை போல இல்லாமல் என்ஜினீயரிங் படிப்பை முடித்து என்ஜினீயரிங் துறையிலேயே சென்னையில் தங்கி வேலை பார்ப்பவன் தான் மணிசித்ரான். (குறிப்பு-இங்கு பெரும்பானின்மை குறிப்பது என்ஜினீயரிங் துறையில் வேலை. என்ஜினீயரிங் படிப்பை அல்ல). தாட்ஷாயினி அவனது பள்ளி தோழி, தோழி மட்டுமா "க்ரஷ்"-உம் தான். முதன்முதலில் sms பேக் போட்டது அவளுக்காக தான், எல்லா 16 வயசு பசங்க வீட்லயும் அம்மாக்கு வரும் சந்தேகம் மணி வீட்லயும் வர காரணி அவள் தான், நம்ம பையன் மட்சூர் ஆய்ட்டான் போல என்று மணியின் அப்பாவை நினைக்கவைதவளும் அவள் தான். ஓரு "க்ரஷ்"- ஆல் எவ்வளவு பண்ண முடியுது பாருங்க, அவளுக்கு தெரியாமலேயே. அவளே பின்னாளில் பல விஷயத்தில் அவனுக்கு முதலாக இருந்தாள். அவளுக்கும் இவன் தான். க்ரஷ் க்ரஷாகவே இருக்க, பள்ளியை முடித்தான். M1, M2,M3,M4 (கணித தாள்கள், பெரும்பாலான என்ஜினீயரிங் மாணவர்களுக்கு தெரியும்) களை கடந்து கல்லூரி படிப்பயும் முடித்தான். அந்த நாலு வருஷம் பலதை வளர்திருந்தான் மனிசித்ரன், அதில் மூட் ஸ்விங்கும் ஒன்று, அது போக தனது க்ரஷையும் காதலாக....ஒரு தலை அல்ல !!

மூட் ஸ்விங் என்றால் அது மட்டுமா வளரும், கூடவே ‘சாடிஸ்ட்னஸ்’, ‘பெர்வர்ட்னஸ்’, ‘ஈவில்னஸ்’ என எல்லாமும் வளரும். இவனுக்கும் வளர்ந்தது என அவன் தெரிந்துகொள்ள, அவன் எடுத்துக்கொண்ட காலம் மிக அதிகம் அல்ல. அவன் அடிக்கடி செய்யும் ஒரு விஷயம், யாருக்கும் சொல்லாமல், வாட்ஸ்அப் செய்தி கூட அனுப்பாமல், ஏதோ பேருந்தில், ஏதோ ஊருக்கு , ஏதோ நேரத்தில் கிளம்புவது. சில சமயங்களில், ‘ஐவி’ என்று சரளமாக, சிறிதும் உருதலற்ற பொய்யை வீட்டில் சொல்லிவிட்டு, தன்னை சில நாட்களுக்கு தொலைத்து விடுவான். தாட்ஷு கிட்டேயும் அதே பொய் !! அதே சரளம். இந்த தனிமையான பயணம் ஆரம்பித்தது, அவனது நெருங்கிய நண்பனின் ‘மெடிகல் கண்டிசன்’ இவனுக்கு தெரிய வந்த பின்பு தான். அவன் நண்பனின் உடலில் ஏற்பட்ட பாதிப்பை விட அதிகமாக மணிசித்ரணின் ‘சைக்காலஜியை’ பாதித்திருந்தது அது. அது அவனை சுற்றி இருப்பவர்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை. இவனது செயல்கள் காட்டிவிட கூடாது என்பதற்காகவே, தன்னை ரொம்பவும் ஜாலி டைப்பாக காடிக்கொண்டான். குறை, குறையாக பார்க்கபட்டால், யாருக்கு தான் பிடிக்கும் !!.

போக போக அந்த இளங்காதலும், கசக்கின்றதோ என்ற எண்ணம் அவனுக்கு வர காரணம், “தனிமை” அவனை, தாட்ஷயினியை விட அதிகம் கவர்ந்திருந்தது. அவளிடமிருந்தும் , மெதுவாக விலகி நகர தொடங்கினான். அவளை துன்புறுத்தி, "அவன் ஏமாத்திட்டான்" என்று அவள் கூறும் அளவுக்கு தள்ளி... எந்த ஆணும் கேட்க கூடாத ஒன்று. கடைசியில் அந்த அந்தாதியை பிரிந்தான், அவளும் எத்தனிக்கவில்லை, புரிதல் !! . அவனுக்கு அமைந்த பணியும் அவனுக்கேற்றது. தனிமையுடனே பெரும்பாலான நேரம். தனிமை பேசும், தனிமை தொடும், தனிமை அனைக்கும், தனிமை முத்தமிடும்...தனிமையுடன் ஊடல் கொண்டு பிறந்த குழந்தைக்கு பெயரல்ல, உருவமல்ல, குரல் மட்டும் தான். அவனுக்கு மட்டும் கேட்கும் குரல். அவன் காரில் போகும் பொழுது, உள்ளிருந்து எழும் "முன்னாடி போற லாரியில் வேகமா இடி" , "எதிர் சாலையில் செல்..", "ரோட் ஓரத்துல நடக்கரவன பயமுறுத்து.." என்ற எண்ணங்களை மிரட்டி ஒடுக்கி வைக்கும் பொறுப்பு அந்த குரலுடையது . அந்த குறள் எவ்வளவு கூறியும் அவன் கேட்காத ஒரு விஷயம், எல்லா வார கடைசியிலும் சமுதாயத்தால் ‘விலைமாது’ ஆக்கப்பட்டவளிடம் போவது. ‘பெர்வர்ட்’ என்று அவனை அவனே கரித்து கொண்ட காரணமும் அதுவே. ஆனால் அவனது மூச்சு காற்று கூட அவள்மேல் பட்டதில்லை. அப்படி ஒரு வார இறுதியில், அவள் அவனை பார்த்து "எத்தனையோ பேர் என்ன செதச்சாங்க, உண்ண மாறி எவனும் செதக்கல"ன்னு கோவமா கத்தியபோது, பேச்சற்று போனான். காரணம், அவளை ‘ரெகுலராக’ அழைத்து செல்லும் இடம் கல்லறைக்கு,..அந்த இடத்தில் மணிக்கணக்கில், அவள் கண்களை பார்த்து கவிதைகளை மட்டுமே வாசித்தால், எந்த பெண்ணும் பீதியடைய தானே செய்வாள். அன்று டிராப் பண்ண போகும் பொழுது , மணி அருகில் இருந்த ஹேன்ட் பிரேக்கில் அவள் கை வைத்திருந்தாள், கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட்டை பார்த்து கொண்டே இருந்தவன் முதன்முதலாக அவள் கையை தயக்கத்துடன் வருடினான், "விலைமாது வெட்க்கபட்டாள்". அது தான் அவர்களின் கடைசி சந்திப்பு. அவன் ‘ட்ராப்’ பண்ணிவிட்டு செய்த கண்ணசைவில் அவள் புரிந்துகொண்டாள் கடைசி என்று. கசிந்தது கண்கள்.

அவன் இஷ்டப்பட்டு செய்யும் காரியங்களில் ஒன்று அவன் வளர்த்த 'பின்செஸ்' பறவைகளை பராமரிப்பது. அவை பெரும்பாலும் கூட்டமாக வாழும் தன்மை கொண்ட பரவையினம். இவன் வளர்த்ததால் என்னவோ, அந்த கூட்டத்தில் ஒன்று எபோதும் தனியாகவே இருக்கும். அது தான் மனிசித்ரணின் ' ஃபேவரைட் பர்ட்' ஆச்சரியமல்ல ... அதற்கு மட்டும் பெயர் கூட வைத்திருந்தான் "டின்கூ" என்று. போகும் இடமெல்லாம் டிங்கூவையும் எடுத்து செல்ல ஆரம்பித்தான், எபொழுதும் அதன் மீது 'கான்சியசாக' இருக்கும் அவன், மறந்து போய் காரின் ஜன்னலை முழுதாக மூடிவிட்டு மீடிங் ஒன்றுக்கு போக, பாவம் டிங்கூ, மூச்சு முட்டி இறந்தது. அன்று மணி அழுதது தான் கடைசி அழுகையாக இருந்திருக்க வேண்டும். ஒருவனின் வாழ்நாளில் அவனுக்கு ஒதுக்கப்பட்ட கண்ணீரை அனைத்தையும் மணி அன்று உபயோகித்துவிட்டான், கட்டிலுக்கு அடியில் முகத்தை மூடிக்கொண்டு படுத்து கதறி.

எதையோ தேடிக் கொண்டே இருந்த மணிசித்ரணுக்கு, அவனை தேடி வந்தது புரொமோஷன், புரொமோஷன் வந்த அடுத்த நாளே, வேலையை ராஜினாமா செய்தான். அவனது மேனேஜரின், கோபத்தை வாங்கி கொண்டு, கம்பனி கார், கம்பனி லேப்டாப், கம்பனி பேக், கம்பனி டேப், கம்பனி ஐடி கார்டுடன் பல வினாகளையும் கொடுத்து சென்றான். ராஜினாமா ஏணென்று அவனுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அந்த குறள் பேசிக்கொண்டே இருந்ததை ஒரு கட்டத்தில் நிறுத்தி, ஒரே வாக்கியத்தை கூற ஆரம்பித்தது ...திரும்ப திரும்ப அதே வாக்கியம்..

வருடங்கள் ஓடின. ஒரு ஸ்டார்ட்-அப் கம்பனியில் மேனஜர் பொறுப்பில் இப்போது. இருபத்தேழு வயது. அமைதியான வாழ்க்கை. அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டான். அங்கு மூட் ஸ்விங் தான மூலதனம். இபொழுதும் குரல் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறது, அதே வாக்கியம். என்னதான் மேனஜர் ஆக இருந்தாலும், அவனால் சில நேரங்களில் தன்னை தானே மேனேஜ் பண்ண தவரிவிடுவான். இவாகுவேஷன் !! அந்த எம்டினஸ் போக்க மறுபடியும் காதலில் அவன். ஆனால், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மூன்று காதலிகள். எதையோ தேடி அழுத்து ‘பிரேக்-அப்’ பண்ணுவது வாடிக்கை. அந்த கஃபே-வில் அவன் சிடு சிடுவென பேசியது அவனது நான்காவது உண்மை காதலியிடம் தான். எதத்னை மாதங்களுக்கோ ! பெண்கள் உண்மையில் வெற்றிடத்தை நிரப்புபவர்கள் தானோ !!??

அந்த குரல் மறுபடி மறுபடி சொன்னது,

சொல்லிக்கொண்டு இருப்பது,

சொல்லிக்கொண்டே இருக்க போவது "தாட்ஷாயினி திகட்டலற்றவள் !!"

-Hemant

(ரேட்டிங் கொடுக்கவும் - பிடித்திருந்தால் மட்டும்)

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...