JUNE 10th - JULY 10th
தீபன் உன்னிடம் ரெட்கலர்
கிரையான்ஸ் இருந்தா தாடா!
அய்யோ நான் தரமாட்டேன்.
ட்ராயிங் மிஸ் திட்டுவார்கள்என்னை என்று பயந்ததுபோல கூறினான்.
பிளீஸ் சுபா நீயாவது தாடி.
நாளைக்கு புதுசாவே ஒரு பாக்ஸ்
வாங்கி தந்திடுவேன் என்று கெஞ்சுகிறாள் மஹிமா.
மிஸ் வரதுக்குள்ள நான் வரைஞ்சாகனுமே. பிளீஸ்
யாராவது ஹெல்ப் பண்ணுங்க
கண்கலங்கிய மஹிமாவிடம் கலர் பாக்ஸை நீட்டினான் பாஸ்கர்.
பாஸ்கரிடம் உனக்கு பென்சில்.
அப்படியே எனக்கு தரே.என் கிட்ட
இரண்டு பாக்ஸ் இருக்கு. முதலில்
சீக்கிரம் வரைந்து விடு மிஸ்
வருவதற்கு முன்பே.தேங்க்ஸ்
தேங்க்ஸ்டா பாஸ்கூலில்
அனைவருக்கும் பாஸ் என்று தான்..
பாஸ்கரை அழைப்பார்கள்.
ட்ராயிங் மிஸ் 3d பிரியட்ல
வந்தவுடன்ஸ்டுடண்ட்டுகளை
ஒரு முறை முறைத்து விட்டு தான்
தன் ஸீட்டில் அமர்வாள்.கிளாஸ்
முடியும் வரை பிள்ளைகள் நடுங்கி போவார்கள். சில மிஸ் டீச்சர் ஸ்
எல்லாம் அப்படி தான்.
மஹிமா பயந்த சுபாவம் உள்ளவள்.
அனைவர் நோட்டையும் பார்த்து
கொண்டு வந்தவள்பாஸிடம் ரெட்
கலர் போட சொன்னேன்.நீ மெருன் கலரில்தீட்டி வச்சிருக்க. திமிர்
உடம்பு புல்லா திமிர்.பாஸ்கரின்
காதை பிடித்து திருகினாள்.ட்ராயிங்
மிஸ்.
பாஸ்கர் கண்ணீர் விடவில்லை.
மாறாக மஹிமாவின் கண்களில்
அருவி கொட்டியது. தன்னக்கு
ரெட் கலர் கிரையான்ஸ் கொடுத்து
விட்டு பாஸ் தனக்காக அடி வாங்குகிறானே.பள்ளி பருவத்தில்
ஏற்படும் நட்பு இந்த நிகழ்ச்சிக்கு
பின்னர்சிறுவயதில் ஏற்பட்ட பாச பிணைப்பாக மாறிவிட்டது.
பதினைந்து வயதில் காதலாக
மலர்ந்தது மஹிமாவிடம்.பாஸ்
என்றும் ப்ரண்லியாக பழகினான்..
மஹிமாவின் குடும்பம் செல்வம்
பெருகி குறிப்பிட்ட பணக்கார
அந்தஸ்தில் திளைத்தது......
அவர்களுக்கு இணையாக உள்ளவர்களுக்கு மட்டுமே
நட்புக்கும்உறவுகளுக்கும்
மதிப்பளிப்பார்கள்.இனம் இனத்தோடு.பணம் பணத்தோடு
என்ற கொள்கை பிடிப்புள்ள
மஹிமாவின். தந்தை சந்திரன்.
மஹிமா அன்புக்காக ஏங்குபவள்.
பத்தாம் வகுப்பு வரையில்
ஒரே கான்வென்டில் படித்தனர்.
இருவரும்மஹிமா பாஸ்.கர்.
பாஸ்கரின் தந்தைக்கு ஒரு நாள்
திடீரென மாரடைப்பு ஏற்பட்டது
பாஸ்கர் பதறி போனான்.அவன் வாழ்க்கை தடம் மாறி போனது.
செல்வ செழிப்பு குறைந்தது.
தந்தைக்கு உடல் நலம் காக்க
வேண்டிநிறைய செலவு.கடன்
உடன் வாங்கி பாஸின்தந்தை
சேகரின் உயிர் காப்பற்ற பட்டு
விட்டது,தொழிலில் ஈடுபட
முடியாது.தொழில் நஷ்டம்
ஏற்பட்டது.பணப்பற்றாக்குறை
வேறு.
வீட்டையும் விற்று விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.மெக்கானிக்
ஷாப் மட்டுமே மிஞ்சியதுஸ்கூல்
படிப்பும் பீஸ் கட்டமுடியாத
காரணத்தால் நிறுத்த பட்டது.
பாஸ்கர்கடையில் ஆள் போட்டு
இவனும்வேலை கற்றுக்
கொண்டு உழைக்கஆரம்பித்தான்
பாஸ்கர்.
ஓய்வு நேரங்களில் மேல்
படிப்பை தொடர்ந்தான்.மஹிமா
தன் ஸ்கூட்டியில் ரிப்பேர்
பார்க்கும் சாக்கில் பாஸிடம்
பேசிவிட்டு போவாள்.மஹிமாவின்
அழகும் வனப்பும் நாளுக்கு நாள் அதிகரித்தது.பாஸின்மனதை
மஹிமா நினைத்தாள்.
இருப்பினும் தன்னுடைய குடும்ப சூழ்நிலையை காரணமாக வைத்து பாஸ்கரா மனதை அடக்கு என்று பாஸ்கரின் ஆழ் மனது கட்டளை இடுகிறது.ஆசையை அடக்க
சொன்னது.காதல் நெஞ்சம்
பரிதவித்தது.என்ன செய்வது.
மஹிமாவின் தந்தையின்
குணத்தை நன்றாகஅறிந்தவன்.
பாஸ்கர்.
தன்னுடைய இன்றைய சூழ்நிலையில் காதல் என்பது சரி படாது என்று
உணர்ந்தாலும் மஹிமாவின் நினைவு அவனுள் தவிர்க்க முடியாத இனிமையான ராகத்தை மீட்டவே செய்தது. சிறுவயது அன்பும் நட்பும்
முதிர்ந்த காதல் அல்லவா இது.
மஹிமாவின் வீட்டில் ஸ்கூட்டர்
அடிகடி ரிப்பேர் ஆகிறது.
அதனால்வேறு புதிய கூட்டரை
வாங்க வேண்டும் என்று சொல்லி
விட்டார்கள் மஹிமாவின்வீட்டில்.
வேண்டும் என்றதும் பகீரென்றது மஹிமாவுக்கு. புதிய ஸ்கூட்டர்
வாங்கி விட்டால் எப்படி பாஸ்கரை
சந்திப்பது. என்ன சொல்லி தட்டி
கழிப்பது புரியவில்லை மஹிமாவிற்கு.
பிளஸ் டூ முடியும் வரை இந்த
ஸ்கூட்டியில் போறேன்.
காலேஜிற்கு போனதும் புதுசு
வாங்கி கொடுங்கள். அப்போது
தான் கெத்தாக இருக்கும் டாடி
என்றதும் அதுவும் சரிதான். என்
பொண்ணு என்பதை நிருபித்து
விட்டாய் மஹி.பெருமையுடனும்
சந்தோஷமாகமஹிமாவின்
தந்தை சந்திரன் ஆமோதிக்கிறார்.
தன்னுடைய மனைவியிடம்
பார்த்தியா என்னுடைய பெண்
என்னை போலவே புத்திசாலி.
நீயும் இருக்கிறாயே
ஓகேடா.. இன்னும் நான்கு மாதம்
தான். இருக்கு.காலேஜ் போனதும்
புதுசா ஸ்கூட்டி வாங்கிகொள்...
தேங்க்ஸ் டாடி..பாஸிடம் தன் மனசில் உள்ள காதலை சொல்லி விட
வேண்டும். அவனுக்கு புரிந்த மாதிரி
காட்டி கொள்ளாமல் இருக்கிறானே.
தன்வாயால் சொல்லட்டும் என்று
காத்து கொண்டு இருக்கிறானோ?
பாஸை சந்தித்து நான் உங்கிட்ட
ஒரு விஷயம் சொல்லனும் பாஸ்
என்றதும்சொல்லுங்க மஹிமா!!
மஹிமாவுக்கு வாங்க போங்க
என்று சமீபகாலமாக பாஸ்கர்
அழைப்பது சுத்தமாக பிடிக்கவில்லை.
கோபமும் துளிர்த்தது.முதலில் வாங்க போங்க சொல்றது நிறுத்து பாஸ்.
பாஸ்கர் புன்னகையுடன் ஓகே..
சரி சொல்லுமஹி. என்ன விஷயம்
இங்கு வேண்டாம்.முருகர் கோவிலில் வைத்து சொல்கிறேன்.மாலை ஐந்து மணிக்கு வந்து விடு.
கோவிலில் ஒரு இடத்தில் அமர்ந்து தைரியமாக சொல்ல முடியாது தவிக்கும்
மஹிமாவின் தடுமாற்றம் கண்டு சொல் தயங்காமல்..நான் உன்னை விரும்புகிறேன்..வாழ்ந்தால் உன்னோடு..
இல்லை என்றால் என் உயிர் எனக்கு சொந்தமில்லை..
பதறிய பாஸ் கோவிலில் என்ன வார்த்தை சொல்ற.வரசொன்னதுமே நான் புரிந்துகொண்டேன்..என் ஏழ்மை நிலையில் உன்னை எப்படி எனக்கு தருவாங்க???காத்திருப்போம்.. என் காலேஜ் படிப்புமுடியட்டும்.. சரி மஹி... நானும் உன்னை மனபூர்வமாக
விரும்புகிறேன்..நம் காதல் நிறைவேறுமா??!!
நிச்சயமாக.. உன்னை தவிர
யாரையும் நான் மணக்க மாட்டேன்.
இனி பாஸ்னு கூப்பிட கூடாது.பாஸ்கர் என்று ஆசையுடன் கூப்பிடு.ஓகே
பாஸ்கர் என்று நாணத்துடன்
அழைத்தாள்..கிளம்புவோம்
நேரமாகுது.அதன் பின்னர்
அவர்களின் காதல்அதி
தீவிரமாக வளர்ந்து வருகிறது..
ஒரு நாளைக்கு பார்த்து கொள்ளமுடியவில்லை
என்றால் கூடதுடித்து போய்விடுவார்கள்.உள்ளூர்
காலேஜில் இடம்கிடைத்து
விட்டதும் இருவரும்மகிழ்ச்சி
கடலில் மூழ்கினர்.பஸ்ட்இயர்
ஒருவழியாக முடிந்தது.
செகண்ட் இயரில் இவர்கள்
காதல்கதை அரசல் புரசலாக மஹிமாவீட்டில் தெரியவர
மஹிமாவின் முறை மாமனுக்கு
கட்டி கொடுக்க ஏற்பாடு
செய்தார்கள்.காலேஜுக்கு
அனுப்ப மறுத்து விட்டனர்..
மஹியும் பாஸும். பதறி
கண்ணீர் வடித்தனர்..
ஒருவரை ஒருவர் சந்தித்து
பேச முடியாது..தவித்தனர்..
காலேஜ் தோழி மலர். மஹிமாவின் வீட்டுக்கு வந்தாள்..மஹி உடம்பு சரியில்லையா?? காலேஜில் நீ
இல்லாமல் போரடிக்குது.நான்
லீவு போட்டுட்டு வந்தேன்.
மௌனமாகசிரித்தாள்மஹிமா.
உயிரோட்டம் இல்லை அந்த
சிரிப்பில்.
மலருக்கு ஏற்கனவே மஹிமாவின்
காதல் விவகாரம் தெரியும்.இனி
அவள் காலேஜுக்கு வரமாட்டாள்..
திருமணம் செய்ய போறோம்.. உன் அட்ரஸ் சொல்லு உனக்கு இன்விடஷன்.. அனுப்புகிறோம்....தேங்க்ஸ் ஆண்டி ..
உன்னோட மேக்ஸ் நோட்புக் தாடி நாளைக்கு தந்து விடுகிறேன்.
மலரை தன் ரூமுக்கு அழைத்துக்கொண்டு சென்ற
மஹியின் தோளில் தட்டியவள்
ஏன் மஹி திருமணத்தில் விருப்பம் இல்லையா??எப்படி நான் பாஸ்கரிடம் மனதை பறி கொடுத்து விட்டு என் மாமாவுக்கு கழுத்தை நீட்டுவேன்..
அழுதவளை பெரியவங்க நல்லது
தான் நமக்கு செய்வாங்க.அவங்க விருப்பப்படி நட என்றவளை
கோபமாக முறைத்த மஹிமாவிடம்
கதவோரத்தை ஜாடையாக காண்பிக்க அதிர்ச்சி அடைந்தாள் மஹிமா.அவள் அம்மா தான் ஒட்டுகேட்டு விட்டு
நகர்ந்து போனாள்..
ஸாரிடி மலர்.நான் உனக்காக
என்ன ஹெல்ப் பண்ண வேண்டும் சொல். மஹி.ஏற்கெனவே எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை நீட்டி
என்பாஸ்கரிடம் சேர்த்து விடு..கவலை படாதே ஆல்தபெஸ்ட் மஹி.தெம்புடன் சிரித்தாள் மஹி.கடிதம் கண்ட பாஸ். மகிழ்ச்சியுடன் துயரமும் ஒருங்கே
அடைந்தான்.
என்னை அழைத்து சென்று விடுங்கள் நாளைக்கு இரவுபண்னிரெண்டு மணிக்குள்.தவறினால் நான் என்
உயிரை மாய்த்துக் கொள்வதற்கு
தயங்க மாட்டேன்.கோழை மனம் படைத்தவள்.வேறு வழியின்றி அன்றிரவே செயல் பட்டான் உயிரை துச்சமாக கருதி.மஹி வீட்டின்
பின்பக்க சுவர் ஏறிமாடியின் பின் வரண்ட்டா வழியாக மஹியின் ரூமுக்குள்ளநுழைந்தான்.. தூக்கம்
வராது புரண்டு கொண்டிருந்த
மஹிஓடிவந்து பாஸ்கரைகட்டி
பிடித்து கொண்டாள்..
தான் வந்த வழியே மஹிமாவை அழைத்து சென்று விட்டான்.சந்தில் நிறுத்தி வைத்திருந்த பைக்கில் கண்மண் தெரியாத வேகத்தில்
குறுக்கு வழியில்பைக்கை இலக்கில் வராமல் ஓட்டியவன் முருகன் சன்னதி மலை அடிவாரத்தில் நிறுத்தினான்.
சில ரோடோர விளக்குகள் மட்டுமே ஒளிர்ந்தது.ஒரு லாட்ஜில் ஃபோர்டு தொங்கியது.
ஒரு பையன் ஸார் ரூம் வேண்டுமா??
கையிலிருந்த சாவியை கொடுத்ததும். முதலிலே புக்பண்ணிட்டிங்களா ஸார்..
மிட் நைட்டே கடந்திடுச்சே!! பிளீஸ் ரூம் எங்கன்னு எனக்கு தெரியும்.. தம்பி.
நாங்க போய்கிறோம்.இந்தாங்க
என்று ரூம் பாயிடம்இருபது
ரூபாயை நீட்டினான் பாஸ்கர்.
ஓகே தேங்க்ஸ் ஸார் . ரூமில்
நுழையும் வரை அமைதியாகவே
வந்த மஹிமுன்னேற்பாடுகள். பலமா இருக்கு. குடும்பஸ்தன் ஆக போறேனே பொறுப்பு வர வேண்டாமா?உனக்கு
மன வருத்தமாக இருக்கிறதா மஹி.
என்பாஸ்கர் கூட இருந்தால்
நரகத்தில் கூட மகிழ்ச்சியுடன் இருப்பேன்.நீ நிறையவே சினிமா பார்க்கற போல ஓவர் டயலாக் பேசற.
எனக்கு வருத்தமாக இருக்கு மஹி.
என் அப்பா இறந்த பிறகு இப்போது
தான் எங்கம்மா சகஜமான நிலைக்கு மாறிட்டு வராங்க.!!!!
மறுபடியும் அவங்க வருத்த பட
கூடாதுஎன்றுநினச்சிறுந்தேன்.
பெருமூச்சுடன் கூறினான்.என்னால் தானே.உங்களை வருத்த பட
வச்சிட்டேன் கண் கலங்கஅசடு
கண்ணை துடை.உனக்கு இன்னும் உலகம் புரியவில்லை.உன் அப்பா பணக்காரர் மட்டும் இல்லை.
அரசியல் வாதிகளின் தொடர்படையவர்.நமக்கு
மட்டுமல்ல எங்கம்மாவுக்கும்
இடைஞ்சல் துன்பத்தை ஏற்படுத்த
தயங்க மாட்டார்கள்.
உன் நிலைமையில் நீ என்ன பண்ண முடியும்.உன் மீது தவறில்லை.. எது நடந்தாலும் சமாளிக்கும் தைரியம் வேண்டும்.அவனிடம் சிறு சூட்கேஸை பார்த்தவள்இதுயாரோடது.
நம்முடையது.நான் மாலையில் வந்து ரூமை புக்பண்ணிவிட்டுஇதை வாங்கி கொண்டு வந்து வைத்து விட்டேன்..
என்ன இருக்கிறது பார் .அழகான
பட்டு புடவை வேஷ்டி தாலி
மோதிரம் இரண்டு .டாலர் ஜெயின் ஒன்று..சூப்பரான செலக்சன்.
ஐயாவோட செலக்சன் சோடை
போகாது உன்னையும் சேர்த்து
தான்..சரி குளிச்சிட்டு சீக்கிரம்
ரெடியாகி வா.
அரைமணி நேரத்திற்கு பிறகு
மலை அடிவாரத்தில் வினாயகர்கோவிலில் மாலை
ஒன்றை சார்த்தி தங்கள் கழுத்திலும் மாலை அணிந்து கொண்டு
பயபக்தியுடன் நின்றனர்.ஐயர்
மந்திரம் சொல்லி தாலி எடுத்து
கொடுத்தார்.
தாலி கட்டியதும் ஷெல்பி எடுத்து கொண்டனர்.ஐயரிடம் வாழ்த்து பெற்றுக்கொண்டு. மலையில்
சென்று முருகனை வணங்கி
நேராக போலிஸ் ஸ்டேஷனில் சரணடைந்தனர் பாதுகாப்பு கேட்டு..
அன்று விடிந்தும்விடியாத
பொழுதில் பாஸ்கர் வீட்டு
கதவு தட்டபட்டது..
தூக்கத்தில் இருந்து விடுபட்டு
பதறியபடி கதவை திறந்தாள்
சங்கரி..பக்கத்து கடை பாய்
கைபையுடன் நின்றவர் உள்ளே
நுழைந்து கதவை சாத்தியதும்!
பாய் ஏன் கதவடைக்கிறீங்க
திகிலுடன் கூச்சலிடஸ் தங்கச்சிமா இந்தா புர்காவை மாட்டிக்கொண்டு
வாங்க!!!!மேலும் கலவரமாகி
போனாள் சங்கரி .
பாய் நீங்க நடந்துக்குற முறையே சரியில்லை...முதலில் நீங்கள்
வெளியே போங்க..தங்கச்சி நீ என் உயிர் நண்பனின் மனைவி.. உங்களுக்கு ஆபத்தில் உதவி செய்ய
வந்திருக்கேன்..மஹிமாவுடம் உன்
மகன் பாஸ்கர்ஓடிட்டான்..சங்கரி நெஞ்சைபிடித்துக்கொண்டாள்.
அட்டாக்கே வந்துவிடும் போல்
துடித்து போனாள் ..
பாப்பா ரமாவுக்கும் புர்க்கா இருக்கு போட்டு கொண்டு பின் வாசல்
வழியாக போங்க..என் பீபியும் வாப்பாவும் காரில் காத்திருக்காங்க.
உங்களை பத்திரமாக என் மாமியார் வீட்டில் விட்டுவிட்டு வருவாங்க..நீங்கள் பயப்படாதீங்க .. எங்களை தவிர யார் தொடர்பு கொண்டாலோ உங்களை பயப்படற மாதிரி தகவல் சொல்லி அழைத்தாலோநம்பவேண்டாம்.
நான் தகவல் சொல்லுகிறேன்..
நீங்கள்கால் பண்ணா திங்க..
பாஸூக்கும் பாப்பாவுக்கும் தான் ஆபத்தாகிவிடும் சீக்கிரம்.
பதட்டத்துடன் காரில் ஏறிய
சங்கரியை ஆதரவாக கட்டிக்
கொண்டாள். பாத்திமா..
அக்கா பயப்படாதே..
நாங்கஇருக்கோம்.சே இவர்களைப்
போய் தவறாக நினைத்து
விட்டேனே!! என்ன மடத்தனமான
கேவலமான எண்ண ஓட்டம்
சற்று முன் தன் மனதில் ஓடியது.
தன்னைத்தானே திட்டிக்கொண்டே வந்தாள் சங்கரி. ஒருபக்கம் மகனின்
செய்கையால் விளைய போகும்
விபரீதம். நினைத்து பார்க்க பயமாக இருந்தது.
கார் விரைந்து கொண்டிருந்தது..
அதுவரை அடக்கியிருந்த அழுகை பீறிட்டு கிளம்பியது..சற்று நேரம்
அழட்டும்அப்போது தான் ஆறுதல்
கிடைக்கும். என்று விட்டபாத்திமா
அக்கா அழாதே.அவர் இருந்தால் என் பிள்ளை இப்படி பண்ணியிருப்பானா???
காதல் என்று வந்துட்டா யார்
இருந்தாலும் இப்படி தான்
நடக்கும் அக்கா.நம்ம பாஸ்கர்
மட்டும் விதிவிலக்கா ?
பாஸ்கர் நல்ல பையன்.
பொறுமைசாலி..அவசரபட்டு ஓடி போயிருக்கான் உன் அனுமதி
இல்லாமல் என்றால்ஏதோவொரு சங்கடம் தவிர்க்க முடியாத சூழ்நிலை..
புரிந்து கொள்ளும் வகையில் ஆறுதல் சொன்னாள் பாத்திமா..சங்கரிக்கும் புரிந்தது பாத்திமா கூறுவதும்
உண்மையான கருத்துக்கள்.
வேலூரில் முஸ்லிம் தர்ஹா பகுதியில்கார் ஒரு வீட்டின் முன் புறம்நின்றதும்காத்திருந்த ஒரு முஸ்லீம்பெரியவர் முகமன் கூறி வரவேற்றார் பாயும் பாத்திமாவின் வாப்பாவை கட்டி தழுவிக்கொண்டார்.
வா பேட்டி என மகளையும் வாங்க சங்கரிமா..பார்த்து பல வருடங்கள்
ஆகி விட்டது.
வாங்கோ வாங்கோ என்றுஅன்புபொங்கும் வார்த்தைகளுடன்வரவேற்பு கொடுத்தனர்பாத்திமாகுடும்பத்தினர்.
வயசாயிட்டுது.எங்கும்பயணிக்கமுடியலை.. உள்ளே அழைத்து கொண்டு போனார்..பாத்திமாவின் அம்மா நூர்ஜஹான் வாங்க வாங்க என்று புன்சிரிப்புடன் வரவேற்று பின்கட்டிற்கு
அழைத்து போகிறார்.
பின் கட்டு அறையில் உறவு
பெண்கள் பணி பெண்கள்
அனைவரும் வரவேற்க சங்கரி
தான் மனம் கூசினாள்..
விருந்துண்ண வந்தது போல் வரவேற்கின்றனர்.இதோ பாருங்க சங்கரிம்மா அல்லா கருணையால்
எல்லாமே நல்லபடியா நடக்கும்.
கவலையே படாதீங்கோ. அல்லா நல்லதுதான் செய்வார்.
எங்களுக்கு மட்டும் இல்லை
எல்லோருக்கும் நன்மை பயக்கும்
வாசகம் எங்க குரானில் இருக்கிறது.
வருத்தப்படாதிங்கோ!!! மகனோடு
பிணக்கு பண்ணாதிங்கோமா..
காதலித்த பெண்ணை தானே பண்ணிக்கொண்டான்....
அந்த பெண்ணையும் வெறுக்காதிங்க.. ஆறுதல் சொன்னார்கள்.அம்மா நான் கிளம்புகிறேன்.. நாங்க ஊர்ல இல்லை என்றால்சந்தேகம் வரும்..வரும் போது மூன்று பெண்கள் வந்தோம்.
இப்போதும் அதே போல் சந்தேகம் வராதபடிநஸிமா மும்தாஜை அழைத்து கொண்டு செல்கிறேன்..டிபன் மட்டும்
குடுமா. அக்கா தைரியமாக இருங்கள்..
பாத்திமா பாஸூக்கு எதுவும் ஆகாம பார்த்து கொள்ளுங்கள்.சங்கரி கலக்கத்துடன் சொல்ல அதுஎங்களோட பொறுப்பு நிம்மதியாக இருங்கக்கா.
காரில் புறப்பட்டு சென்றாள் பாத்திமா.
பாஸ்கரின் கடையை உடைக்க
முற்பட அருகில் கடைகள்
வைத்திருந்த அனைவரும் கூடி
தடுத்து விட்டனர்...
போலிஸ் டேஷனில் பாஸ்கர்
மஹிமா இருவரும் சரண்டர் ஆனவர்களை விசாரித்தனர்..
உனக்கு என்ன வயது பதினெட்டுங்க ஸார்.உன் வயது?இருபத்தியிரண்டு..
எந்த ஊர் இதே ஊர் காஞ்சிபுரம்..
ஒரே ஸ்கூல்ல படிச்சவங்க சரி.
ஒரே கிளாஸ் எப்படி உதைக்குதே!!
ஸார் எங்க அம்மாவுக்கு லேட்டாக
நான் பிறந்தது என்னை
பிரியாமல் இருக்க ஸ்கூல்ல
சேர்த்துவிடாமல் வருடத்தை கடத்தியிருக்காங்க..உடல் நிலை பாதிக்கப்பட்டு மேலும் சில வருடங்களுக்கு பிறகு ஸ்கூல்
சேர்த்து இருக்காங்க..
எல்கேஜியே ஐந்து வயது
ஆன பிறகு சேர்த்து இருக்காங்க..எல்லோரும்
என்னை கிண்டல் பண்ணுவாங்க
ஸார்.சரி இன்னும் சில வருடம்
கூட பொறுத்துக்க முடியாத
காதல்அதற்குள் திருமணம்.
ஸார் மஹிமா படிப்பு முடிந்ததும்
பேரண்ட்ஸ் கிட்ட சொல்லி அவங்க ஆசிர்வாதத்தோடு திருமணம் பண்ண
ஆசைப்பட்டோம்..
எங்க வாழ்க்கையை தொடங்க
விருப்ப பட்டோம்.. ஆனால் மஹி
வீட்டில்தான் அவளோட மாமாவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்யவே
வேறு வழியின்றி திருமணம் செய்து கொண்டோம்.எங்களையும் எங்கள் குடும்பத்தையும் காப்பாத்துங்க
ஸார்.சின்ன வயசா இருந்தாலும் மெச்சூரிட்டியாதான் பேசாறான்..
முதலில் இந்த பெண்ணோட பெற்றவர்களை வரவழைத்து பேசுவோம்..!!!!மஹிமாவின்
குடும்பம் வந்தது.மஹிமாவை
கண்டதும் எங்க கிட்ட ஒரு
வார்த்தை சொல்லி இருந்ததால் நாங்களேதிருமணம் செய்து
வைத்து இருப்போமே.பெணோட
பர்த் சர்ட்பிகேட் காட்டினார்கள்..
பதினெட்டு முடிய பத்துநாள்
இருக்கு ...நாங்க பத்து நாட்கள்
கழித்து ஒருநல்ல நாளில் ஊரறிய ரிஷப்ஷன் செய்துகௌரவமாக அனுப்பி வைக்கிறோம்.. எங்க பெண்ணை
எங்க கூட அனுப்பிவைங்க ஸார்.
என்ன சொல்றீங்க. பதினெட்டு வயது பூர்த்தியானதும்நீங்கள் சேர்ந்து வாழ சட்டம் அனுமதிக்கிறது..
இப்போது மஹிமாவை அவங்க
பேரண்ட்ஸோட அனுப்பி விடு தம்பி..
இருபக்கமும் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தார் இன்ஸ்பெக்டர் ரமணன்.மணமக்கள் மன கலக்கத்துடன் பிரிந்தனர்.மூன்று நாட்களுக்கு
பிறகு மஹிமாவின் பெற்றோர்
அவளுடைய மாமனுக்கு கட்டி
கொடுக்க குலதெய்வம்
கோவிலுக்கு அழைத்து
சென்றனர்.
பாஸ்கருக்கு தெரிந்தது.உடனே
போலீஸ் ஸ்டேஷனில் போய்
புகார் கொடுக்க எந்த ஊர் திருவண்ணாமலைக்கு போகும்
வழியில் இருக்கும் கோவில் ஸார்...அட்ரஸ் தந்தான்.உடனே
போன் போட்டு அந்த ஊர் போலிஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவிக்கப்பட்டது..
#759
मौजूदा रैंक
40,100
पॉइंट्स
रीडर्स पॉइंट्स 100
एडिटर्स पॉइंट्स : 40,000
2 पाठकों ने इस कहानी को सराहा
रेटिंग्स & रिव्युज़ 5 (2 रेटिंग्स)
h.hema5477 Hemavathy
சூப்பர்
G. Shyamala Gopu
Nella kadhaiyottam
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10पॉइंट्स
20पॉइंट्स
30पॉइंट्स
40पॉइंट्स
50पॉइंट्स