இங்கேயும் ஒரு கதை.

காதல்
5 out of 5 (1 रेटिंग्स)
कहानी को शेयर करें

இங்கேயும் ஒரு கதை.

கோர்ட்......

வரதட்சணை கொடுமை வழக்கு......

எதிரியானவர் மீண்டும் தகராறு செய்து அடித்து காயப்படுத்தி, அவர் மீது சூடான காபி வயிற்றில் ஊற்றி காயப்படுத்தியதால் அவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஊத்தங்கரை யில் 09.12.2018 இல் சேர்க்கப் பட்டார்

அ. ச ஆ. கு. 1. குற்ற மனு தாக்கல் செய்தார்

அ. ச. ஆ.கு.2. காயத்திற்கு சிகிக்சை அளித்த ஆரம்ப சுகாதார மருத்துவ மனை. ஊத்தங்கரை. மருத்துவர். ராம் மனோகரன்

(இவன் மனசாட்சியை அடகு வைத்து காசுக்காக பொய் மருத்துவ சான்றிதழ் கொடுக்கும் அயோக்கியன். இவன் மருத்துவ புனித மான தொழிலுக்கு பங்கம் விளைவிக்கும் பொய்யன். இவனைப் போல் நிறைய பேர் காசுக்காக உடலை விற்கும் பாவம் வேசிகள்அவர்களை விட மிகவும் கீழ் தரமானவன்காசுக்குக்கா எதையும் செய்பவன் இன்னும் உயிரோடு தான் இருக்கிறான். அந்த கொரானா கூட இவனை தூக்கிட்டு போக வில்லை. சென்னையில் மக்களுக்காக உயிரையே தியாகம் செய்த மருத்துவரை பாவம் பார்க்காமல் போன தொற்று நோய் இவனை கொண்டு போகாமல் வைத்து இருக்கிறது ஈனப் பிறவி இவனால் நிறைய குடும்பங்கள் நடு தெருவுக்கு வந்து இருக்கு?

09.12.2018. பணியில் இருக்கும் போது அ. ச.1. என்பவர் எதிரி அடித்ததாகவும், சூடான காபி அடி வயிற்றில் கொட்டியதாகவும் சிகிச்சைப் பெற அவரது மைத்துனர் அழைத்து வந்தார்

அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவரது வயிற்றில் தீ காயம் ஏற்பட்டு இருந்தது என்றும், வெளியில் வெளி காயமும் இருந்ததாகவும் சான்றிதழ் வழங்கி இருந்தார்

எப்பவுமே வயதுக்கு மீறிய ஆசை வைக்க கூடாது.

அதனால் எவ்வளவு பெரிய அவப் பெயர் வரும் என்பது அவர்களுக்கு போக போக தான் தெரியும்.

கண் கெட்டப்பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?

டீச்சர் செண்பகம் அந்த சின்னப் பிள்ளையின் கவிதையில் கவரப்பட்டாள்.

டேய் உதயா எனக்காக ஒரு கவிதை எழுதுடா..

ம்ம்ம்ம் சரிங்க டீச்சர்..

தலைப்பு..

வைகறையில்

மேற்கில்

வெண்ணிலா முழுவதுமாய்

வெளிச்ச நதியை

பூமி திரையில்

பெய்து கிடக்கும்அழகோ நீ

விண் மீன்கள் விடை பெற்று

வெளிர் மஞ்சள்

முகில்களின் முகமோ உனது.

நிறங்களைக் குழப்பி

வானம் வரைந்த ஓவியமா நீ.

நீலநதி கண்ணிலே புகுந்து

நீந்தி வந்த பொண்ணோ நீ

இதழின் சிவப்பில் வடியும்

இன்ப தேன் பலா சுளையோ நீ

பனியின் கனமான ஈரத்தில்

காற்று தழுவிட நெஞ்சில்

காதல் சொன்ன கவிதையா நீ

அருமை டா அருமை வா இங்கே அவனை அணைத்து முத்தமாறி பொழிந்தாள் செண்பகம்.

இவன் எப்படி விடுப்படுவான். இவளின் இடையின் இறுக்கத்தில். நெளியும் புழு போல் ஆனான் இவன்.

காலங்களில் அவன் அவள் கண்களுக்கு வசந்த காலமாக

தெரிந்தான். கலைகளில் அவனோ அவளுக்கு ஓவியமாக,

மாதங்களில் அவன் மார்கழியாக

மலர்களில் அவனோ கவிதை மலர்களை தூவும் மல்லிகையாக தெரிந்தான்.

உண்மை தான் இந்த வரிகள் திரைப்படத்தில் மட்டும் அல்ல காதல் வயப்பட்ட எல்லா காதலார்களும் பாடி கழிக்கவே தாத்தா கண்ணதாசன் எழுதி வைத்து விட்டுப்போனார் போல.

அவனது உணவுகளை தட்டி எழுப்பி அந்த உஷ்ணத்தில் குளிர் காய நினைத்தாள் செண்பகம்.

டேய் கருப்பா...... உன்னை பார்க்கும் போது உன் மேல எனக்கு பொறாமையாக இருக்கு? டேய்

டீச்சர் நான் கருப்பா இருக்கிறேனா டீச்சர்?

இல்லை டா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் அதான் உனக்கு அன்பா அப்படி பெயர்வச்சேன்.

பயப்படாதே கரிய நான் வீட்ல தான் அப்படி கூப்பிடுவேன் வெளியில் அப்படி கூப்பிட்டு மானத்தை வாங்க மாட்டேன்.

டேய் ஏன்டா ஸ்கூலே ஒரு மாதிரியா இருந்தே!

இல்லையே டீச்சர் நான் எப்பவும் போல் தான் இருக்கிறேன். ஆமா உன் முன்னாடி இருக்கும் பொண்ணு கிட்டே என்னடா உனக்கு பேச்சு

டீச்சர்..சும்மா பொய் பேசாதீங்க. நான் கிளாஸ்சில் யார்கிட்டயும் பேசுவது இல்லை. இது எல்லோருக்கும் தெரியும் அப்படி இருந்தும் என் மீது உங்களுக்கு எப்படி பொய் பேச வருது.

நான் கிளம்புறேன் டீச்சர்.அம்மா தேடுவாங்க.

டேய் கருப்பா நாளைக்கு லீவு தானே!

ஆமா டீச்சர்.

அதான் நான் மட்டும் உங்க வீட்டுக்கு உங்க அம்மாவை பார்த்துட்டு வரலாம் என்று இருக்கிறேன் டே..

இல்லை வேண்டாம் டீச்சர். எங்களுக்கு ரொம்ப வசதி இல்லை. எங்க வீடு நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை. அம்மா தான் எல்லாம். ரொம்ப கஷ்டப் படுறாங்க.

டேய் உன்கிட்ட அது எல்லாம் கேட்டேனா உங்க அம்மாவை பார்த்து பேசிட்டு வந்தா என்னடா தப்பு?

தப்பு இல்லைங்க டீச்சர் அம்மா வை ஒரு வார்த்தை கேட்டு விட்டு வந்து சொல்றேன் டீச்சர்?

போட உன் இஷ்டம். நீ எப்போ வந்து சொல்லுவே. காலையில் ஒரு ஒன்பது

மணிக்கு வந்து சொல்லுறேன்.

சரி உனக்கு சட்டை பெண்ட் எடுத்து வச்சி இருக்கிறேன் கொடுக்கிறேன் எடுத்துகிட்டு போய் நீ வெளியே போன பேட்டுக்கிட்டு போட.

இல்லைங்க டீச்சர் அம்மா கிட்டே கேட்காம நான் எதுவும் வாங்க மாட்டேன் டீச்சர்.

இயரிங்....

மீண்டும் விசாரணை முடிவு.

**********************

அ. ச.9. சரஸ்வதி 12.07.2018

உத்தங்கரை.

அனைத்து மகளீர் காவல் நிலையயத்தில் பதிவு செய்த நாள்

குற்ற எண்6/18. இ. தா. ச. பிரிவு.498(எ )மற்றும் வரதட்சணை ஒழிப்பு ச்சட்டம் பிரிவு 4. லில் வழக்கு பதிவு செய்தார். மேற்படி முதல் தகவல் அறிக்கை அ. ச. ஆ.4. ஊத்தங்கரை காவல் நிலையம் முதல் தகவல் அறிக்கை அ

ச. ஆ.3. ஆகும் இடம் 1. முதல் 8. வரை விசாரணை செய்து வாக்குமுலம் பெற்றார். பிறகு அவரது விசாரணை முடிந்தது.

எதிரி மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்தார்.

இத்துடன் அரசு சார்பு சாட்சிகள் முடிவுக்கு வந்தது.

******

அம்மா.

என்ன கண்ணு..

எங்க ஸ்கூல் டீச்சர்...

யாரு அந்த அறிவியல் டீச்சர் செண்பகம் தானே...

ஆமாம் மா.. உனக்கு எப்படி தெரியும்?

அதான் ஊரே பேசுதே. நீ ஸ்கூல். முடிஞ்சு அவங்க வீட்டுக்கு போறியா?

அவங்க எப்போ பார்த்தாலும் உன் பின்னாடியே சுத்துறாங்கலாம். அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய் காபி டிபான் செய்து தராங்கலாம்.

நீ அவங்க கூட எப்பவும் இருக்கியாம். ஸ்கூலே யாரு கிட்டேயும் பேசுவது கிடையாது. இப்போ சரியா படிக்கிறது கிடையாது. உன்னை பார்த்து முதலில் நல்லா பேசிட்டு, நல்ல பையன் என்று சொன்னவங்க இப்போ எந்த வாத்தியாரும் உன் கிட்டே பேசுவது இல்லையாம்.

இப்போ கூட நீ லேட்டா வர்றது அங்கே உங்க டீச்சர் வீட்டுக்கு போய் தான் என்பது சரியா.

இப்போ அவங்க நம்ம வீட்டுக்கு வரட்டுமா என்று கேட்டாங்க நீ என்ன சொல்லிட்டு வந்தே நான் சொல்லட்டுமா?

எங்க அம்மாவை கேட்டு விட்டு வந்து சொல்றேன் என்று சொல்லிட்டு வந்தே சரியா?

ஆமா...மா...நீங்கள் சொல்றது எல்லாம் சரி மா. ஆனால் எங்க அம்மாவுக்கு தெரியாம நான் எதுவும் வாங்க மாட்டேன் டீச்சர். அம்மாவை கேட்டு விட்டு சொல்றேன் டீச்சர் என்று சொல்லிட்டு வந்தேன் மா.

எனக்கு தெரியும் ஐயா என் புள்ள பத்தி

கண்ணு நீ தைரியமா போ அம்மா சொல்றேன். யாரு என்ன வேண்டும் என்றாலும் சொல்லிட்டு போகட்டும். என் கிட்டே சொன்னவங்க மூஞ்சிலே கரியே பூசுட்டு நீ என் புள்ள என்று தலை நிமிர்ந்து வரணும் ராசா.

நீ எதுக்கும் கவலை படாதே. டீச்சர் வீட்டுக்கு வரேன்னு சொன்னா கூப்பிட்டு வா ராசா.

அது மனசுலே உன் மேலே தாய் பாசம் இருக்கும். அதுக்கு பொறாமையால் பேசுற நாய்கள் பேசட்டும்

மடியில் கனம் இல்லாட்டி வழியில் பயம் எதற்கு ராசா?

நீ போ நானும் அவங்களை பார்க்கணும் என்று ஆசை படுறேன் என்று சொல்லிட்டு கூப்பிட்டு வா. இப்போ போய் கை கால் கழுவிட்டு வா டிபன் எடுத்து வைக்கிறேன் சரியா?

சரி மா..

உதய். போய் வந்து டிபன் சாப்பிட உட்கார்ந்தான். இரு ஐயா நானே உனக்கு ஊட்டி விடுறேன்.

அவன் கண்களில் கண்ணீர் வழிகிறது. எதுக்கு கண்ணு அழுவுறே ராசா. நான் உசுரோடு இருக்கிற வரைக்கும் நீ அழ கூடாது சரியா.

கண்ணை முன்றாணையால் துடைத்து விட்டாள் பரிமளம்

உதயா வின் அப்பா ராஜா சின்ன வயசுல விட்டு விட்டு இறந்து போக

புருஷனை இழந்து, பொட்டை இழந்து, பூ வை இழந்து, சின்ன வயசுல விதவை ஆகி முண்டசி என்று சமுதாயத்தில் வெறுத்து ஒத்துக்கி வேடிக்கை பார்த்தவர்கள் மத்தியில் தானே ஒரு ஆண் போல் வயலில் வரப்பில், காட்டில், மேட்டில், எல்லாம் கூலி வேலை செய்து

மண்ணும் செங்கலும், சிமெண்ட் எல்லாம் எடுத்து, வாயை கட்டி, வாயிரை கட்டி நல்லபடியா வளர்த்து இருக்கிறாள் பரிமளம்.

அப்படி வளர்த்தபுள்ள எப்படி பதரா போகும்.அவள் இதய துடிப்பில் தான் தன் பிள்ளையின் வாழ்க்கை, எதிர் காலம் எல்லாம் அடங்கி இருக்கு, அவள் மூச்சும், பேச்சும், அசையும், கனவும், எதிர்பார்ப்புகள் எல்லாம் அவனாக தான் இருப்பான்.

இந்த உலகத்தில் அவள் வாழ்வது அவனுக்காக தான். அவனுக்கு தெரியும் அம்மா படுகிற கஷ்டமும், வேதனையும், அப்படி இருக்கும் போது அவனுக்கு யாருடைய அனுதாபங்கள், எதுவும் அவனுக்கு பிடிக்காது இந்த உலகத்தில் தாய் மட்டுமே தெய்வம் என்று வாழ்கின்றவன் உதயா. அவன் கண்ணுக்கு முன்னாடி தெரிவது எல்லாம் அம்மா வின் பாசம் மட்டுமே.

இந்த உலகில் உனக்கு என்ன வேண்டும் என்று ஆண்டவன் அவன் எதிரில் தோன்றி கேட்டால் என் அம்மா வை நான் கண் கலங்காமல் கடைசி வரை வைத்து காப்பாற்றும் வரம் மட்டும் கொடு என்று இரண்டு கை நீட்டி வரம் கேட்பான் உத

ஆண்டவன் சோதிக்கிறான்.

சாமி தான் இவர்களின்

சங்கடம் தீர்க்க வழி செய்ய வேண்டும்.

ஒவ்வொறுவரின் உள்ளத்திலேயும் இன்பம் துன்பம் எல்லாம் நிரம்பி தான்கிடக்கிறது.

அதை சிலர் சொல்கிறார்கள் சிலர் சொல்வதில்லை

,====≠=========================

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...