அரண்

kskselvakumar86
கற்பனை
4.9 out of 5 (454 रेटिंग्स)
कहानी को शेयर करें

அலுவலக விடுமுறை நாட்களில் தன் நண்பன் நடத்தும் ஆதரவற்றோர் இல்லத்தில் வந்து சேவை செய்வதில் எப்போதும் ஜெயந்துக்கு அலாதி இன்பம் .
அன்றும் அதுபோல இல்லத்தில் இருந்தான் .வெளியே வராண்டாவில் பிடி' அமுக்கு' என கூச்சல் கேட்டது .
சடைபிடித்து போன தலை மழிக்கப்படாத முகம் அழுக்கானா உடைகள் துர்நாற்றம் வரும் உடம்பு சகிதமாய் ஒரு மனிதனை இல்ல பணியாளர்கள் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தனர் அவர்களின் பிடியிலிருந்து அவர் வெளிப்பட திமிரி கொண்டிருந்தார் .
"யார்? இவர் ஏன்? இழுத்து வரீங்க"

அதில் ஒரு வயதானவர் கூறினார் "ஏன் தம்பி பக்கத்து தெருவில உள்ளவங்க இவரின் மூட்டையிலிருந்து வரும் துர்நாற்றத்தை தாங்க முடியாமல் போலீசில் புகார் கொடுத்து இருக்காங்க .அது வி. ஜ .பி .ஏரியா இன்ஸ்பெக்டர்ரும் நம்மஇல்ல கொடையாளர் அவரின் வேண்டுகோளுக்காக முரளி தம்பி தான் இவனை பிடிச்சுட்டு வரசொன்னிச்சு" முரளியும் அப்போது அங்கு வந்தான்.

"இங்கே மனநிலை பாதிக்கப்பட்டவர பராமரிக்க முடியுமா?

"முடியாது தான் இன்ஸ்பெக்டர் ஊருக்கு போயிருக்காரு நாளை மறுநாள் வந்து விடுவாராம் அப்புறம் உறவுகாரங்களிடமோ காப்பகத்திலயே சேர்த்திடுலாம்னார்' ரெண்டு நாள் சாமாளிச்சுதான் ஆகனும். அவரை குளிப்பாட்டி வேற டிரஸ் கொடுங்க' ஜெயந்த் பாத்துக்க நான் பாங்க் போய்ட்டு வரேன்"

கடும் முயற்சியில் அவரது தலை முடியும் தாடியும் மழிக்கப்பட்டது முழு சோப்பு கரையும் அளவில் நீண்ட குளியல்' புதிய வடிவத்திற்கு மாறி இருந்தார் அந்தப் பெயர் தெரியாத மனிதர். இரண்டு மூன்று முறை அவர்களிடம் இருந்து விடுபட்டு தான் கொண்டுவந்த மூட்டைகளை தலையிலும் கக்கத்திலும் வைத்துக் கொண்டு ஓட ஆரம்பித்துவிட்டார் அவரை விரட்டி பிடித்து அதைப் பறித்து எறிந்தனர் . அதில் பழைய டப்பாக்கள் யாரோ எறிந்த உணவு குப்பைகளே அந்த முட்டைகளில் நிறைந்திருந்தது. அவரை சங்கிலியால் பிணைத்து தூணில் கட்டினர். ஜெயந்த் அவர் உடம்பில் இருந்த புண்களுக்கு மருந்து போடும் முயற்சியில் இருந்தான் .


இவரை எங்கேயோ பார்த்திருக்கும் எண்ணம் அவனுக்கு அவரின் நினைவுகளை மனதில் கொண்டு வர பார்த்தான் அவரின் கைகளைப் பிடித்து மருத்திடமுனைந்தபோதுதான் அவர் யார் என புரிந்தது அதே தீ காய தழும்பு அன்று அவர் செய்ததை எண்ணி கோபம் வந்தது அவரின் இன்றைய நிலை அவனை பரிதாபப்பட வைத்தது அவன் நினைவுகளில் மூழ்கினான்.


சோம்பலான மதிய நேரம் அந்த தொழிலாளர் வருங்கால வைப்புநிதி(PFஆபிஸ்) அலுவலகத்தில் மின்விசிறிசத்ததின் ஊடே சந்தாரர்களின் ஒலியும் கேட்டது

" எத்தன தடவ சொல்றது உங்களுக்கு உங்கள் கணவரின் ஆதாரில் வீராச்சாமி நல்லசிவம்ன்னு இருக்கு அவர் ஏற்கனவே கொடுத்த சான்றிதழில் நா. வீராச்சாமின்னு இருக்கு ஆதாரை மாத்திகொடுத்தா நான் பணத்தை பைசல் பண்ணலாம்"

"செத்துப்போன என் புருஷனுக்கு எப்படி ஆதாரை முடியும்"

" நாங்க சட்டப்படியும் வழிமுறைபடியும் தான் செய்ய முடியும் மாத்தி தர வேலைய பாருங்க .ஐயா உங்க பைல கொடுங்க" என்று வேறொருவரின் இடம் மாறினார்

அலுவலகத்தை விட்டு வெளியேறினாள் நல்லம்மா வாட்டமான முகத்துடன்.

இரண்டு வருட அலைக்கழிப்பில் ஏற்கனவே அலைகழிக்கபட்டிருந்த அத்தனை பேரின் கதைகளும் அத்துபடி.

"உங்களுக்கு செட்டில் ஆயிடுச்சம்மா? என்ற கேள்வியோடு எதிர்ப்பட்டார் தங்கராசு.

"இல்லையா என் புருஷன் செத்து' ரெண்டு வருஷம் ஆயிடுச்சு'கம்பெனில ரத்தவியர்வை சிந்திஉழைச்ச காசு கம்பெனியில் கேட்டா நீங்க பி .எப் ஆபிஸ் போங்கங்ராங்க"

"என் நிலைமை அதுக்கு மேல தான் நான் வேலை பார்த்தது கம்பெனி ஒப்பந்தக்காரர் கிட்ட வருடத்தில் 100 நாள் வேலை இருக்கும்இருக்காது முப்பது வருஷங்களுக்கு வேலைபார்த்துருக்கேன். மூவாயிரம் நாளுக்குமேலே வரணுமாம் கொஞ்சநாள் குறையுது அதனால பென்ஷன் கிடையாது ன்னு சொல்றாங்க"

"முதல்ல ஆதாரில் என்னோட பிறந்த நாள் இல்ல போன் நம்பர் இல்லனாங்க இப்ப இது என் வீட்டுக்காரின் ஆதார் அட்டையே இல்லையாம் நான் என்ன செய்யறது காலம்தான் பதில் சொல்னும்" என்று என்ற பஸ் ஏற போனாள் நல்லம்மா.


" கல்லூரில விடுதிக்கு' செமஸ்டர்க்கு பணம்'கட்டணும் பணம் எப்ப வரும் அம்மா" என்றான் ஜெயந்த்.

" இந்த வாரம் போய் பார்க்கணும்பா... அவங்க கேட்டதை எல்லாம் கொடுத்தாச்சு. கடவுள்தான் கருணை காட்டனும் புதுசா ஏதும் கேட்காமல் இருந்தால் சரிதான்"

"சரிம்மா காலேஜ் போற வழி தான் நானும் உங்க கூட வந்து பாத்துட்டு போயிடுறேன்"
பி.எப் ஆபீஸில்

"வாங்கம்மா எல்லாம் க்ளியர் ஆயிடுச்சு. இன்னொரு அதிகாரி அனுமதி கொடுத்துட்டார்ன்னா இன்னும் பதினைந்து நாள்ல உங்களுக்கு பணம் கிடைச்சிடும்"

"சரிங்க சார் "என்று தன் அம்மாவோடும் கவலையோடும் வெளியேறினான்.

" இன்னும் பதினைந்து நாள் எப்படி சமாளிக்கிறது ரெண்டு நாள்ல பணம் கட்டலான்ன காலேஜ் விட்டு வெளியேற வேண்டியதுதான் செமஸ்டர் தேர்வு எழுத முடியுதுமா. என்று கண்ணீர் வழிய கூறினான்

நாம் ஏற்கனவே பார்த்த தங்கராசு அங்கே வந்தார்
"நீங்கதான் இவங்க பையனா?
"ஆமாம்"
"பணம் கிடைச்சுடுச்சா?
"இன்னும் பதினைந்து நாளாகுமா. "ஒருவாரத்துல நிச்சயமாக கிடைக்கவைக்க முடியும் என்ன பணம் கொஞ்சம் செலவாகும்... பணம்கொடுத்து என் வேலைய முடிச்சிட்டேன் நம்மல அலையவிடுறதே பணம்வாங்கதான்.

அப்போ அலுவலகதின் உதவியாளர் அவர்கள் நிற்கும் இடத்திற்க்கு வந்தார்.


"இவர் தாம்மா
போனமுறை வந்தபோது என் கிட்ட கேட்டாரு சட்டமும் வழிமுறையும் பணம் கொடுத்தால் வளைந்து கொடுக்கும் இங்கே அலையுறத்துக்கு பதிலா கடன
உடன வாங்கி கொடுத்துடலாமுன்னார்.

"ஆமாம்மா உங்க கிட்ட போன வருடமே கேட்டேன்... பனை மரத்திலும் தென்னை மரத்திலும் காய் பறிக்க முடியாது மாமரம் கொய்யா மரத்திலேயும் ஈசியா பறிச்சிடுவாங்க ஏழைகள்கிட்ட பறிச்சே இந்த சமூகம்வளர்ந்துட்டு அதை மாற்ற முடியாது .அந்த அதிகாரி கிட்டபோனமுறையே கேட்டேன் அவங்க கிட்ட பணம் இல்லபோல செக்கை பாஸ் பண்ணலாமேன்னன்... கிடைக்கப்போற பணத்தில் நமக்கும் கொஞ்சம் கொடுக்கணும் நாங்களும் செலவு பண்ணினா இந்த இடத்துக்குவந்திருக்கோம்ன்னர்..... முப்பதாயிரம் கொடுத்தா பென்சன் வரைக்கும் கிளீயர் பண்ணிடுவார். நல்லமாவும் தலையாட்டினாள் இன்னைக்கு பணம் கிடைக்கலன்னா தான் அவர் நினைவாக வைத்திருக்கும் ஒரே பொருளான தாலிக்கொடியை அடமானம் வைத்து மகனின் படிப்பு செலவு கொடுப்பது என எடுத்துவந்திருந்தாள். இப்போது விற்கும் முடிவுக்கு வந்துவிட்டாள்.

தங்கராசுவே நகைகளை விற்று ஆபீஸர்க்கும் ஜெயந்துக்கும் கொடுத்துவிட்டு மீதி பணத்தை நல்லமாவிடம் கொடுத்தார் கையில் கொஞ்சம் பணதோடும் நெஞ்சில் நிறையக் கனத்தோடும் ஊருக்குவந்தாள்.

"ஆமாப்பா ஒரு மாசம் ஆச்சு நேத்து தான் மறுபடியும் ஆபீஸ் போனேன் நம்மகிட்ட பணம் வாங்கியவர் மாத்தல் ஆயிட்டாராம் வேறொரு அதிகாரி உட்கார்ந்துருக்கார் ..நான் பீயூனை பார்த்தேன் ஆபீஸரோட குடும்பம் திருப்பதி போகும்போது விபத்தில் சிக்கிட்டாம் லீவுல போனவர் வரவே இல்லையாம் அப்படியே அவங்க சொந்த ஊருக்கு மாறிவிட்டாராம் புதுசா வந்திருக்கவர் மேற்கொண்டு அய்யாயிரம் கேக்கிறார் பணம்ன்னு பணம்ன்னு தேடி மூட்டையாக கட்டி வச்சுட்டு மனச தொலைச்சுட்டு அலையபோறானுக அம்மா அழஆரம்பித்தாள் "


" அழேதேம்மா இவர்களை நாம தண்டிக்க முடியாது பண மூட்டை போல பாவ மூட்டையும் சுமந்து தான் ஆகனும் எனக்கு படிப்பு முடியுபோது ஊருக்கு வந்து வேலைக்கு போறேன் நமக்கு கையிருக்கு உழைச்சு சாப்பிடுவோம் கவலைப்படதேமம்மா" என்று ஆறுதல் கூறிவிட்டு போனை வைத்தான். பக்கத்து வீட்டு அக்கா போன் செய்தாள்.பேரிடியான செய்தி அம்மாபோய்விட்டாள்.

அழுத கண்ணீரோடு அமர்ந்திருந்தான் மூன்று நாள் ஆயிட்டு சாப்பிடுடா குளிடா என்று தன்னை ஆளுமை செய்தகுரலின்றி கூரை வீடு பொலிவிழந்து கிடந்தது
"தம்பி "என்ற அழைப்போடுவந்தார் தங்கராசு.
அவர் மீதும் மனதுக்குள் கோபம் நிறைய இருந்தது வீட்டுக்கு வந்தவரை "வாங்க" என்று அழைத்தான்
"ஊருக்குள் உங்க வீட்டை விசாரித்துபிறகுதான் அம்மாதவறிட்டாங்கன்னு தெரிஞ்சுது ரெண்டு நாள் முன்னாடி தான் என் கூட வேலை பார்த்தவர்க்கு பென்சன் சம்பந்தமா. ஆபீஸ்போயிருந்தேன் பீயூன் உங்கவிவரத்தைசொன்னான் பழைய ஆபீஸ்ர் முகவரிவாங்கிட்டு அவர் ஊருக்கே போயிக் கேட்டேன் அவரும் தன்குடும்பம் திருப்பதி போன போது நடந்த விபத்தில் அவருடைய மனைவி இறந்துட்டாங்களாம் பையனுக்கு மூளைல அடிப்பட்டு நடைபிணமா இருக்கான் பொண்ணுக்கு மட்டுமே லேசான காயம்ன்னார் ..... ஆறுதல் சொல்லிட்டு உங்க விடயத்தையும் சொன்னேன் லீவுல இருந்தவர் அப்படியே ட்ரான்ஸ்பர் வாங்கிட்டாராம் நானே ஆபீஸ் வந்து முடிச்சுகுடுத்திடுறோன்னார் நானும் என்ன தப்பா நினைக்க போறீங்கன்னு உங்களுக்கு தகவல் சொல்வதற்காக வந்தேன்"
"நன்றியா இந்த சமூகம் சேவை மனித நேயம் இரக்கம் நேர்மைன்னு இருந்துச்சு இன்னைக்கு எப்படிவேண்ணுண்ணா பணம் சேர் பிறகு எல்லோரும் சலாம் போடுவார்கள் என்ற நிலைக்குவந்துட்டு இதுல எங்களை போல ஏழைகளும் வறியவர்களும் பாதிக்கப்படுறோம் .. எங்களை வாழவைக்கும் என்ற நினைப்பில் எங்கப்பா உழைச்ச காசு எங்கம்மா கருமாதிக்கு வந்திருக்கு . என்று கண் கலங்கினான் .

ஆமாம் அதே முகம் பணம் வாங்குவதற்காக என் அம்மாவை அலைய விட்டு வதைத்த அதே அதிகாரி இன்று பழைய குப்பைகளை முட்டைகளாக்கி தலையில் சுமந்து இறக்கமறுக்கும் பைத்தியமாய் அரண்களே பலனை அறுவடை செய்யமுயன்றாள் வினை வீட்டுவாசலில் முளைக்கும்.

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...