கூடாநட்பு

கற்பனை
4.5 out of 5 (2 रेटिंग्स)
कहानी को शेयर करें

கூடாநட்பு
- மணவை கார்னிகன்

பசுமையின் அடர்த்தி கொண்ட பெரும் பெரும் மலைகளுக்கு பக்கத்தில் ஒரு மலையின் குழந்தை போல சின்னசிறு மலைதான் கருப்பன் மலை அந்த மலையை சுற்றியும் ஒரு பத்துப் பதினைந்து வீடுகள் தான் இருக்கும். எல்லாம் மண்சுவர் வீடுகள் பனை ஓலைகளின்மேல் கூரைகள் வடக்கு பார்த்த வீடு கிருஷ்ணாவின் வீடு தெற்கு பார்த்த வீடு தனாவின் வீடு

அந்தகீழஅல்லியூர் மக்கள்
வேப்ப இலைகளை பறித்து அவைகளை காயவைத்து எடைக்கு போட்டு வயிற்றைக் கழுவும் ஏழை மக்கள்.தனாவின் அப்பாவும் கிருஷ்ணாவின் அப்பாவும் கேரளாவில் பைப்லைன் போடுவதற்கு சாலையோரம் குழி பறிக்கும் வேலை செய்து.
பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் கிருஷ்ணமூர்த்தியும் தனசேகரனும் படித்து பட்டம் பெற்ற செய்து இருக்கிறார்கள்,

பெருநகரமான சென்னைக்கு வேலை தேடிஅலைந்ததெல்லாம்.
நீங்காத நினைவுகள்னு அடிக்கடி கிருஷ்ணா சொல்வான் சார்

வாழ்க்கையில எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் எதுன்னு கேட்டா.கிருஷ்ணமூர்த்திதானு சொல்லுவேன். சின்னப் பிள்ளையிலிருந்து நாங்க ரெண்டு பேரும் நண்பர்கள்
சில நேரங்களில் அடிச்சுக் கிட்டாலும் பலநேரங்களில் கூடியேதான் இருப்போம்.அவன் எங்க விளையாடுறானோ அங்கதான் எனக்கு விளையாட்டு, அவன் எந்த பள்ளிக்கூடத்துக்கு போறானோ அந்தப் பள்ளிக்கூடம் தான் எனக்கும்.நான் மட்டும் அப்படி இல்ல அவனும் அப்படித்தான் எட்டாவது படிச்சு முடிச்சுட்டு டவுன்ல ஒன்பதாவது சேரும்போது ஆளுக்கு ஒரு பள்ளிக்கூடத்தில சேர்ந்துடோம்.அவ்வளவுதான் என் வீட்டு வாசலில் வந்து உட்கார்ந்து கொண்டான் "பெரியப்பா தனசேகர எங்க ஸ்கூல்லயே கொண்டு வந்து சேர்த்துருங்க" என்றான்.
எங்க அப்பா அவங்க அப்பாவோட மூணு வயசு மூப்பு.கூப்பிடுவதில் சித்தப்பா பெரியப்பானு பாகுபாடு இருக்கும். உண்மையில்ல எங்க ரெண்டு பேருக்குமே ரெண்டு அப்பா

"தனா நீங்க கிருஷ்ணமூர்த்தியை கடைசியா பார்த்தது எப்போ?"

அவன் திருவான்மியூரிலும் நான் வேளச்சேரியிலயும் ஆளுக்கு ஒரு பக்கம் வேலை பார்க்கிறதுஒரு நெருடலாக இருந்தது.அந்த நேரம் தான் வளசரவாக்கத்தில் புதுசா ஆரம்பிச்ச ஒரு கம்பெனியில் வேலைக்கு ஆட்கள் தேவை என எல்லா மின்கம்பங்களிலும் எல்லா சுவர்களிலும் துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டிருந்தது.
"டேய் தனா
நாம ரெண்டு பேரும் ஒன்ன வேல பார்க்கிற மாதிரி ஒரு இடம் கிடைச்சிருச்சு வர்ற சனிக்கிழமை லீவு போட்டுட்டு வந்துரு. 11மணிக்கு போயி அந்த கம்பெனியை பார்த்து பேசிட்டு வந்துருவோம்."
ரொம்ப சந்தோசமா போன்ல என்கிட்ட சொன்னான்.எனக்கும் சந்தோசம்தான்.

சனிக்கிழமை அன்னக்கி அந்தக் கம்பெனியில் தான் அவன நான் கடைசியா பார்த்தது சார்.

அவரு உங்ககிட்ட ஏதாவது சொன்னாரா?

இல்ல சார் ஆனா எப்போதும் இருக்கிற கிருஷ்ணமூர்த்தியை விட அன்னைக்கி வேறு ஒரு ஆளா இருந்தான்.முகத்துல ஒரு துளி சந்தோசம் கூட இல்ல, போன்ல பேசினப்ப இருந்த சந்தோசம் நேரில் பார்த்தப்ப இல்ல.ஏன்டா ஒரு மாதிரியா இருக்க, எதுவும் உடம்பு சரி இல்லையா? கேட்டப்ப கூட
"அதெல்லாம் ஒன்னும் இல்லடா லைட்டா தலைவலி. " என்று சொன்னான்.

"அவரு லவ்வு ஏதும் பண்ணாரா? அது பற்றிய எதுவும் இருந்தா சொல்லுங்க"

அதெல்லாம் இல்ல சார்
நாங்க காலேஜில படிக்கிறப்ப கூட
என்ன ஒரு பொண்ண லவ் பண்ணுச்சு.இத அவன் கிட்ட சொன்னேன் உனக்கு என்னப்பா ஆள் அழகா இருக்க. அதனால எல்லா பொண்ணுங்களும் லவ் பண்ணலாம் ஆனா நான் அப்படியா கருப்பா அசிங்கமா இருக்கேன்.அப்படின்னு ஒரு தாழ்வு மனப்பான்மையை அவனுக்குள்ள வச்சிருப்பான்.அதனாலேயே அவன் எந்த பொண்ணுங்க கிட்டயும் பேசமாட்டான். ஒரு முறை சகுந்தலானு ஒரு பொண்ண காமிச்சு
மனசார விரும்புறேன்டா ஆனா சொல்லதான் பயமாயிருக்குனு சொன்னான்.அந்த பொண்ணு எங்க காலேஜில ஒரு பையன லவ் பண்றது கொஞ்சநாள் கழிச்சு தெரிந்ததால அத பத்தியும் பேசறது இல்ல.

வேற ஏதாவது கடன் தொல்லை அந்த மாதிரி?

ஐயோ சார் அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல
ஒருமுறை எங்க சித்தப்பா (கிருஷ்ணமூர்த்தியின் அப்பா)20 ஆயிரம் பணம் அனுப்பிட்டு "போன்ல... ஏதாவது ஒருபழைய வண்டி வாங்கிக்கங்க எத்தனை நாளைக்கு தான் பஸ்ல போவீங்க பஸ்ஸிலேயே வருவீங்க அம்மா குழுவில்ல லோன் போடுறேன்னுசொல்லி இருக்காங்க போட்டாங்கன்னா மேற்கொண்டு பணம் தர்றேன் நல்ல வண்டியா புது வண்டியா வாங்கிக்கங்கப்பா"என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.

அப்பா சொன்னத கிருஷ்ணா கிட்டசொன்னேன்.

எதுக்கு இவரு தேவை இல்லாத வேலை பாக்குறாரு? அவர்ட்ட நான் வண்டி கேட்டேனா.நம்ம பஸ்ல போனா என்ன குறையாம் அவருக்கு யார் கிட்ட கடன் வாங்கினாரோ. டேய் தனா அந்த காசெ திருப்பி அனுப்பிரு டா.அப்படியே போன் போட்டு சொல்லிருடா நாங்க சம்பாதிச்சு வாங்கிக்கிறோம் நீங்க கடன் கிடன் வாங்காமல் நிம்மதியா இருங்கனு.

கடன் கிற வார்த்தையே அவனுக்கு பிடிக்காது சார்!

ஓகே தனசேகர் வேறு ஏதாவது விசாரிக்க வேண்டியது இருந்தால் மீண்டும் வரணும்.

என்னது மீண்டும் வரணுமா?
என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் தனசேகர். நடந்ததை சொல்லலாம் என்று நினைக்கிற போது கொஞ்சம் பயமும் தயக்கமும் கூடுதலாக உச்சத்தில் அமர்ந்தன.சரி நடந்ததை சொல்லி விடுவோம்.
சார் ஒரு நிமிஷம்
சொல்லுங்க தனசேகர்

சார் அவனோட தற்கொலைக்கு காரணம் என்னவென்று எனக்குத் தெரியும் ஆனால் அதை யார்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு எனக்கிட்ட சத்தியம் வாங்கிட்டான் மனசுல இருக்கற பாரத்த வெளியில் போட்டுட்டான் ஒன்னும் பிரச்சனை இல்ல அப்படின்னு தான் நினைச்சேன் இப்படி தற்கொலை பண்ணிக்குவான்னு நினைச்சிருந்தா அவனை தனிமையில நான் விட்டிருக்க மாட்டேன்.

என்ன காரணம் தனசேகர் சொல்லுங்க பயப்படாதீங்க நாங்க எல்லாம் உங்களோட இருக்குமில்ல

கூடா நட்பு கேடாய் முடியும் னு சொல்லுவாங்க அந்த மாதிரி பேஸ்புக்ல பொண்ணுங்க பேர போட்டு கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு ஹிந்தி காரன் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்திருக்கான்.
அது பொண்ணு இல்ல பையன் தான் தெரியாம இவனும் அப்டேட் பண்ணி இருக்கான்.கொஞ்ச நாள் கழிச்சு மெசேஜர் வழியா ஹலோ, ஹாய், ஹவ் ஆர் யூ, குட் நைட், குட் மார்னிங், என்று கொஞ்ச நாள் வண்டி ஓட்டினா இந்திக்காரன்.
அதெல்லாம் உண்மைதானு நெனச்சு கிருஷ்ணமூர்த்தியும் ரிப்ளை மெசேஜ் அனுப்பி இருக்கான்.ஒரு நாள் நைட்டு இவன் ஆன்லைன்ல இருக்குறது தெரிஞ்சுகிட்டு ஹிந்தி காரன். Can we talk on WhatsAppஎன்று அனுப்பி இருக்கான் இவனும் நம்பர் அனுப்பி வாட்ஸ்அப் மூலமாக பேசிகிட்டு இருந்திருக்கான்.அதுக்கப்புறம் ஹிந்தி காரன் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டான். ஆங்கிலத்தில் உங்களுக்கு செக்ஸ் மீது ஆர்வம் இருக்கா? வீடியோகால் மீ னு குறுந்தகவல் அனுப்பிருக்கான்.
நண்பனும் வீடியோ கால் பண்ணிருக்கான் முதல்முறை எடுக்கலே, இரண்டாவது முறையும் எடுக்கலே, மூன்றாவது முறை எடுத்து உடனே கட் பண்ணிருக்கான்.இரவு 12 மணிக்கு நானே கால் பண்றேன் நீ பண்ண வேண்டாம்அப்பா அம்மா கூடவே இருக்காங்க அதுக்காகத்தான் உன்னோட கால கட் பண்ணேன். என்று ஆங்கிலத்தில் எழுதி மெசேஜ் அனுப்பி இருக்கான்.ஓகே என்று ரிப்ளே மெசேஜ் செய்துவிட்டு.இரவு 12 மணி எப்போது ஆகும் என்று கண்ணை தேய்த்துத் தேய்த்து காத்துக் கொண்டிருந்திருக்கான்.ஒரு பன்னிரண்டு முப்பது மணிக்கு Hiனுமெசேஜ பாக்குறதுக்குள்ளேயே வீடியோ கால் வந்துருச்சு.அட்டன் பண்ணி இருக்கான் ஒரே இருட்டா இருந்திருக்கு திரும்ப வேண்டுமெனே கட் பண்ணி இருக்கான். Remove shirt pantனுமெசேஜ் தட்டி விட்டுட்டான்.
கிருஷ்ணாவும் வேகமா சட்டை பேண்ட் எல்லாம் கழட்டி தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டான் மீண்டும் வீடியோ கால்ஒரு பெண்ணின் முகம் நெருக்கமாக தெரிந்திருக்கிறது.அந்தக் காலும் மூன்று நொடிகளுக்குள் கட்டாகிமீண்டும் வீடியோ கால் இந்த முறை அதே பெண் கொஞ்சம் தள்ளி நின்று தனது அங்கங்களை தடவி காட்டுவதுபோல் காட்சி.அந்த காட்சி எல்லாம் அந்த இந்திக்காரன் லேப்டாப்பில் இருந்துவருகிறதென்று தெரியாமலே உண்மையான ஒரு பெண்தான் என்று தன்னைமுழுவதுமாக ஈடுபடுத்தி காட்டி இருக்கிறான்.மீண்டும்இணைப்பு துண்டிப்பு.
"இருங்க தனசேகர் இது சைபர் கிரைம்"
"ம்ம் தெரியும் சார்."
"ஏட்டையா அந்த பைல் எடுத்துட்டு வாங்க"
"ம் நீங்க சொல்லுங்க தனசேகர்"
கிருஷ்ணமூர்த்தியின் அனைத்து செயலையும் வீடியோவாக பதிவு செய்து அவனுக்கு அனுப்பி பயமுறுத்திஅவன் வண்டி வாங்குவதற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை எல்லாம் பறிகொடுத்து விட்டான்.
இப்போது உயிரும் பறிகொடுத்துவிட்டான்.

சரி தனசேகர் நீங்க கிளம்புங்க
இந்த கேஸ மேலிடத்துக்கு அனுப்புறோம்.

தலையை தாழ்த்தி நடையில் உள்ள தனாவிடம் கிருஷ்ணாவின் ஆன்மா பேசிக்கொண்டே வருகின்றன. எதும் தனாவின் காதில் விழவில்லை

தனாவின் எண்ணமெல்லாம்

இதுபோன்ற சிக்கலில் சிக்கிய ஆண்கள் எத்தனையோ?

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...