மலர்விழி.
சிறுகதை.
.ஊமை ஊரைக் கெடுக்கும்.
பெருச்சாலி வீட்டைக் கெடுக்கும்.'
எப்பவும் எரிஞ்சி விழுந்து கோபப் படுகிறவனை நம்பி விடலாம். ஆனால் ரொம்ப சாதுவா இருக்கிறவனை நம்ப முடியாது.
வாழ்க்கை என்ற வட்டத்தில் சுற்றும் எல்லோரும் இன்னும் எதையோ தொலைத்து விட்டு, எதுவோ ஒன்றை, எற்காகவோ இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
அது இன்பமா? துன்பமா? காதலா? வெற்றியா? தோல்வியா?
ஏதோ ஒன்றை, எப்படியோ அதை, நாடியோ!இல்லை தேடியோ கண்டு பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு.
சிலர் தொலைத்தது வாழ்க்கை மட்டும் அல்ல. இன்பம், துன்பம் எல்லாம் என்று தெரிந்துக் கொள்ள நினைக்கும் போதும் அந்த வாழ்க்கைப் பயணம் முடிந்து போகிறது.
ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை அவன் உணரவேண்டும்.
நிரந்தரம் இல்லாத வற்றை நிரந்தரமாக்கி விட நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்.
தெருமுனையில் நின்று ஒரு நாய் சப்தம் போட்டு ஊலையிட்டு அழுதுக் கொண்டு இருந்தது.
அது என்ன அந்த ஊருக்கு கேடா? இல்லை வீட்டுக்கு கேடா? இல்லை அந்த வீதிக்கே கேடா?
ஏதோ ஒரு துக்க சமாட்சாரம் நடக்கும் என்பதுக்கு அது அறிகுறியாக கூட இருக்கலாம்.
அந்த பெருசு அடிக்கடி சொல்லும். டேய் 'நாய் நக்கின செட்டியை நாய் தலையிலே கட்டி விடு "என்று மூடி மறைத்து கலியாணம் செய்து கொடுத்து விட்டால். பின்னால் உண்மை தெரிய வரும் போது பிரச்சனை வரும்.
கண்டிப்பாக அது எரிமலையாக வெடிக்கும். அப்போ எல்லாம் எரிந்து நாசமாகி தான் போகும்.
அதற்கு தான் ஆரம்பத்துலயே சொல்லி விட்டு இப்படி எல்லாம் நடந்து விட்டது. இனி அப்படி நடக்காது என்று சொல்லி சமாதானம் செய்து கலியாணம் செய்தாலும் அப்போது சரி என்று பின்னால் எதாவது ஒரு சின்ன தப்பு நடந்தா கூட அது பூதகரமாக தோன்றும்.
அப்புறம் ஆகாத பொண்டாட்டிக்கு கைப் பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம் தான்.
சின்ன சண்டை பெரிய சண்டை
சின்ன சந்தேகம் பெரிய சந்தேகம். என்றே போய் கடைசியில் ஏதோ ஒரு முடிவில் கொண்டு போய் சேர்த்து விடும்.
அன்று எப்பவும் போல வழக்கமாக எழும் நேரத்தில் தான் எழுந்தாள் மலர்விழி..
நேற்று அவன் புருஷன் கன்னத்தில் அறைந்தது இன்னும் வலித்துக் கொண்டு தான் இருந்தது.
யாரும் என்னவென்று கேட்க வில்லை.
ஆரம்பத்தில் கொஞ்ச நாள் சந்தோசமாக தான் அவன் நடந்துக் கொண்டு இருந்தான். அப்புறம் இருக்க இருக்க அவன் செய்யலில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது.
அது இருக்க இருக்க வளர்ந்து போய் இப்போ வேற ரூபத்தில் நிற்கிறது.
மலர்விழிக்கும் இவனுக்கும் ஏறக்குறைய 15 வருடங்கள் வித்தியாசம்.
மலர்விழிக்கு இப்பொழுதுதான் 20 வயது எட்டிப் பார்க்கிறது.
ஆசைப்பட்டது ஒருவனிடம் வாழ்க்கை பட்டது இன்னொருவனிடம்.
மனதில் நினைத்து விட்டால் மட்டுமே போதாது.
நினைப்பது நிறைவேறினால் தான் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும்.
இந்த ஆம்பளைக்கு ஆம்பளை ஒரு விதத்தில் கொஞ்சம் அனுசரிச்சு போய் விடுகிறார்கள்.
இந்த பொம்பளைங்க இருக்கிறாங்க பாருங்க சுத்த மோசம்.
ஆச்சி கலியாணம் ஆகி ஆறு மாசம் கூட சரியாக ஆக வில்லை அதற்குள்ளே இந்த கொடுமைகளை ஆரம்பித்து விட்டான்.
அவசரக் காரனுக்கு புத்தி மட்டு.
பதறி போன காரியம் சிதறி தான் போகும். வயசு மட்டும் அதிகம் ஆகி விட்டால் போதாது. புத்தி இருக்க வேண்டும்.
சில குடும்பங்கள் நடு தெருவுக்கு வர காரணமே. கெளரவம், தன் மானம், அந்தஸ்து, ஜாதி, மதிப்பு, மரியாதை, என்று சொல்லிக்கிட்டு வீராப்பு காட்டப்போய் பிள்ளைகள் வாழ்க்கையை நாசாப் படுத்தி கெடுத்து குட்டிச் சுவராக்கி விடுகிறார்கள்.
கன்னங்கள் அடித்த அடியில் புசு புசு என்று வீங்கி விட்டது. மலர்விழிக்கு.
கன்னிப் போய் சிவந்து போய் விட்டது. கண்கள் சிவந்துப் போய் கண்ணீர் தாரை தாரையாக போய் உப்பு கன்னத்தில் வரி வாரியாக உலர்ந்து போய் படிந்து காணப்பட்டது
ராத்திரி எல்லாம் அவள் அழுதுக் கொண்டு தான் இருந்து இருக்கிறாள்.
யாரிடம் போய் சொல்லுவாள் அவள்? அவள் நினைத்து இருந்தால் அவனை திருப்பி அடிக்க எவ்வளவு நேரம் ஆகிவிடும். அதுஇரண்டு நிமிடம் தான். ஆனால் அதுக்கு அப்புறம் என்ன நடக்கும்?
அதை நினைத்து தான் அவள் அந்த அடி வாங்கியும் பொறுமையாக இருந்து விட்டாள்.
பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. அது எல்லை மீறும் போது விபரீதங்கள் வேறு மாதிரியாக தான் இருக்கும்.
ஆண்கள் ஒரு பெண்ணோடு பேசினால் அது தப்பு இல்லை.
ஆனால் ஒரு பெண் ஒரு ஆணோடு பேசினால் தப்பு.
ஒரு ஆண் எத்தனை பெண்களையும் கலியாணம் செய்து கொள்ளலாம் அது தப்பு இல்லை.
ஆனால் ஒரு பெண் ஒருவனை மட்டும் தான் கலியாணம் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு ஆண் பொண்டாட்டி செத்து விட்டாள் அவனுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை
ஆனால் ஒரு பெண்ணின் புருஷன் செத்து விட்டாள். அவள் விதவை, கைம் பெண், முண்டச்சிப்பட்டம்.
அவளின் சதோஷம், கனவுகள், ஆசைகள், எல்லாம் பரித்து விடுகிறது இந்த சமுதாயம்.
பாலை வானத்தில் சோலை கிளி பறந்து போவதில் பறந்து போவதில்
என்ன லாபம் இருக்கு?
சோலைக் கருக்களில் காட்டுக்குயில்
ஒன்னு பட்டு பாடுவதில் என்ன லாபம் இருக்கிறது.
இப்போ மலர்விழிஎன்ன தான் அப்படி செய்ய கூடாத தப்பை செய்து விட்டாள் என்று எல்லோரும் சேர்ந்து அவள் வாழ்க்கையை நாசம் செய்து விட்டீர்கள்?
சிலரின் வாய்
வாயை திறந்தால் போதும் நார வாய்.
மலர்விழி அது ஆடிய ஆட்டத்தால் தான் இன்று இந்த நிலைக்கு தள்ளாப்பட்டாள்.
என்னம்மா வானதுக்கும் பூமிக்கும் தைய தக்க தைய தக்க என்று குதிச்சி. ஊரையெல்லாம் கூட்டி ஒப்பாரி வைச்சு முண்ட இன்னிக்கு சின்னஞ் சிரிசு வாழ்க்கையை நாசமாகி விட்டது.
மலர்களின் அம்மாவால் தான் இந்த கெதி காலாகிவிட்டால் மலர்வழி
அப்பா சாமி இந்த மாதிரி ஊர்ல நாலு பெருசுங்க இருந்தா போதும் அந்த ஊரே நாரி போய் விடும்.
பாரஸ்டர்
எவ்வளவோ சொல்லி சொல்லிப் பார்த்து விதியே என்று விட்டு விட்டாச்சி.
பாவம் அது என்ன செய்யும்.?
அவங்க பொண்டாட்டி பேச்சு கேட்டு இன்னிக்கு சொத்து போய் வீடு போய்
வேலையும் இல்லை.
இப்போ போய் எங்கே முட்டிக் கொள்வது. மனுஷன் பொண்ணு கஷ்ட்டப்பபடுதே என்ற கவலை ஒரு பக்கம், பணம், அந்தஸ்து கெளரவம் போச்சே என்ற வருத்தம் ஒரு புறம் படுத்த படுக்கையில் கிடக்கிறான்
அந்த பெருசு எங்கே போக போகுது எல்லோரையும் அனுப்பி விட்டு தான் போகும் போல.
இப்போ கெளரவம் கெளரவம் என்று புல்லட் மேல உட்கார்ந்து போன மனுஷன். எல்லாம் தொலைச்சிட்டு சோர்ந்து போய் கிடக்கிறான்.
எப்படியோ மலர்விழிக்கு ஒரு வழிய கல்யாணம் ஆகிவிட்டது . அந்த பொண்ணு வாழ்க்கை அது பார்த்துக் கொள்ளும் என்று சந்தோஷமாக இருந்த காலத்தில்.
இப்படி ஆகிவிட்டது என்று இருவரும் மிகவும் வேதனைப்பட்டார்கள் கஷ்டப்பட்டார்கள் துயரப்பட்டார்கள்.
பெரிய பொண்ணு மலர்விழியின் வாழ்க்கை தான். கேள்விக் குறியாக நிக்குது?
ஆளகால விஷம் ஐந்து நிமிடத்தில் உயிரை எடுத்து விடும். ஆனால் இந்த சந்தேகம் இருக்கே அந்த கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் துடிக்க துடிக்க உயிரைக் குடிக்கும்.
இன்றைக்கு ஒரு முடிவுக்கே வந்து விட்டாள் அவள்
ஆனால் ஆவளுடைய முடிவுக்கு முன்பு
விதி முந்தி கொண்டது.
விதியை மதி அழகிய ஆத்தான் வென்றிருக்கிறார்கள்.
அவனுக்கு
சந்தேகம் வந்து விட்டது சரி அதுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டாமா.
சந்தேகக் கோடு ஒரு சந்தோஷ கேடு என்பது எவ்வளவு பொருத்தம்.
மலர்விழி மீது அவன் அதிகமாக சந்தேகப்பட ஆரம்பித்தான்.
ஒரு வனத்துறையில் மேல் பொறுப்பில் இருக்கும் அதிகாரியும் வயதிலும் 35 கடந்திருக்கும் சின்ன வயது பெண் கிடைத்ததே பெரும் பாக்கியம்.
அதை எல்லாம் நினைக்கவில்லை.
ஆரம்பத்தில் இந்த விஷயத்தை எல்லாம் சொல்லித்தான் இவனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.
அப்பொழுது எல்லாம் தலையை ஆட்டி விட்டு இப்பொழுது இப்பொழுது அவள் மீது சந்தேகம் வந்துவிட்டது.
அதுக்கு முடிவு போல் தான் இந்த விதி வேலை செய்தது.
அதை நினைத்து நினைத்துதான் வேதனைப்பட்டு கொண்டிருக்கும் போது அவனுக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது.
விதி மதியால் யார் தான் வென்றிருக்கிறார்கள்?
அடங்கம்பாறை ஹாஸ்பிடல் கொண்டு சென்றும் பலன் இல்லை பிணமாகத்தான் வந்தான்.
விதவையானால் மலர்விழி.
என்ன யோசனை ரொம்ப பலமா இருக்கு என்று கேட்டுக் கொண்டே வந்தால் மலர்வழி.
ஒன்னும் இல்லையே ஒன்னும் இல்லையே என்று விழித்தான் ராஜன்.
அவனின் உள்ளத்தில் மலர் விழி பற்றி என் நினைப்புத்தான் ஓடிக்கொண்டிருந்தது என்பது அவளுக்கும் தெரியும்
இதெல்லாம் நடக்குமா?
இந்த சமுதாயம் என்ன சொல்லும்?
இதை அவனுடைய அப்பா அம்மா ஏற்றுக் கொள்வார்களா?
இப்படிப் பல கேள்விகள் அவன் உள்ளத்தில் எழுந்து அவனைத் திக்கு முக்காடு செய்தது.
ஒவ்வொருத்தருடைய வாழ்விலும் ஏதோ ஒன்று எப்படியோ ஒன்று நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அது என்ன என்று முன்கூட்டியே அறியும் சக்தி யாருக்குமே கிடையாது
அப்படி இருந்தால் எல்லோரும் இறைவனை மறந்து விட்டு தான் தான் இறைவன் என்று சொல்லிக் கொள்வார்கள்.
எது எப்படியோ மலர்விழியின் பார்வை
மீண்டும் ராஜாவின் மீது பட ஆரம்பித்து விட்டது.
அவள் உள்ளத்தில் பழைய நினைவுகள் துளிர் விட்டு எழ ஆரம்பித்தது.
அவள் பாரஸ்ட்டரை கல்யாணம் செய்து கொண்டது பெரும் துரதிஷ்டமாகத்தான் அவள் நினைத்தாள்.
அவள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்த போது தான் ஏற்கனவே அப்படி நடந்து அவள் மீண்டு இருக்கிறார் மீண்டும் பழைய ஆக்கிவிடும் என்று பயந்தால் மலர்விழி.
எனவே அந்த முயற்சியில் இருந்து கைவிட்டாள்.
விளைவு அப்பா அம்மா அவசர அவசரமாக கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள்.
வேறு வழியின்றி கழுத்தை நீட்டினால் மலர்விழி..
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் வேறில்லை.
என்னங்க பேசாம அப்படியே மெய் மறந்து போய் உட்கார்ந்து இருக்கீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க ஏதோ கற்பனையா.
என்று கேட்டுக் கொண்டு அவன் அருகில் வந்தாள் மலர்விழி......
#634
मौजूदा रैंक
50
पॉइंट्स
रीडर्स पॉइंट्स 50
एडिटर्स पॉइंट्स : 0
1 पाठकों ने इस कहानी को सराहा
रेटिंग्स & रिव्युज़ 5 (1 रेटिंग्स)
S. Naffia Gowser
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10पॉइंट्स
20पॉइंट्स
30पॉइंट्स
40पॉइंट्स
50पॉइंट्स