தூண்களற்ற மண்டபம்

பயண இலக்கியம்
5 out of 5 (3 )

பொள்ளாச்சி அருகே இந்த நூற்றாண்டின் கால ஓட்டத்திற்காக தன்னை மாறுபடுத்திக்கொள்ள முயன்று கொண்டிருக்கும் ஒரு அழகிய கிராமம் இதில் சோமசுந்தரத்தேவர் என்னும் ஒரு அரசுப்பணியாளர் தன் குடும்பத்துடன் வசித்துவந்தார் இன்னும் சொன்னால் அவரின் அப்பா, அப்பாவின் அப்பா என பல தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டுவந்த குடும்பம் அவரின் குடும்பம். மிக செல்வ செழிப்பானவர்கள் இல்லை ஆனால் நாகரீகம் , கலாச்சாரம் என அந்த ஊருக்கே உதாரணமாக வாழ்ந்து வந்தனர்.
அவரை அந்த ஊர்மக்கள் அனைவரும் செல்லமாக சோமுத்தேவர் என்றும் அழைப்பார்கள் அவரின் நண்பர்கள் சோனையா என்றும் அழைப்பார்கள் அவருக்கு சாந்தி என்ற மனைவியும் குருதேவன், வாசுதேவன் என்ற இரு மகன்கள் இருந்தார்கள் அவர்களில் தன் மூத்தமகன் குருதேவனுக்கு திருமணமாகி ஆண் பிள்ளை ஒன்று இருந்தது அதற்கு குகன் என்று பெயரிட்டான். இந்த குடும்பம் கூட்டு குடும்பமாக ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர். குருதேவனின் மனைவி உமா தன் அத்தை மாமாவின் பேச்சிற்கு மறு வார்த்தை சொல்லாத மருமகள் என்பதால் தனக்கு மூன்று பிள்ளைகள் என சோமுத்தேவர் பெருமையாக சொல்வதுண்டு. குருதேவன் சொந்தமாக சென்டரிங் வேலை செய்பவன் சிவில் என்ஜினியரிங் படித்து வேலையில்லாமல் இந்த தொழிலை தன் மனைவி உமாவின் தம்பி கண்ணனுடன் சேர்ந்து செய்து வந்தான்.
ஒரு நாள் காலையில் சோமுத்தேவர் எப்போதும் போல் நேரத்தில் எழுந்து தன் அலுவல்களை தொடங்க ஆரம்பித்த நேரம்

சாந்தி.., சாந்தி., என்ற குல்லாவ பாத்தயா?

ஆமா நேத்து வெடியால எங்கயோபோட்டுட்டு இப்ப தூங்கற என்னயா கேட்டா என்று முனு முனுத்தபடி இருங்க வரேன்னு சொல்லிட்டு ஃபிரிட்ஜ் மேல இருக்குற குல்லாவ எடுத்துட்டு போய் குடுத்தார் சாந்தி!!

அங்கதான் இருக்கும் நெனச்சேன் இருந்தாலும் உன்ன கேட்கலாமேனு கூப்டேன் அப்படியே உன்னைய எழுப்பனமாறி இருக்குமேனு சொல்லிட்டு வாக்கிங் செல்ல தொடங்கினார்!!

பால் காரன் வர்றதுக்குள்ள வந்து சேருங்கனு சொல்லிட்டு. படுக்கையை எடுத்துவைத்து சமையல்கட்டை நோக்கி நகர்ந்தார் சாந்தி

சோமுத்தேவருக்கு எப்போதுமே ஒரு நெனப்புண்டு பசங்கல கரை சேர்க்கனுமேனு அவர் கவலபட்டதே இல்ல அரசுப்பணி நாம இல்லைனாலும் வர பணத்துல பயக பொளச்சுப்பாங்கனு ஒரு நெனப்பு, ஆனா சாந்தியை நெனச்சுத்தான் கவலைப்படுவாறு.

சோமுத்தேவர் வாக்கிங்க போறப்ப அதுக்குனு ஒரு குருப் ஓட போவாறு அந்த ஊருக்குள்ள அவருக்கு மரியாதை எல்லாம் இருந்தாலும் வாக்கிங் போறப்ப ஊரு உலக நியாயம், தர்மம் னு எல்லாமே பேசுவாங்க!!

சாந்தி அடுப்பங்கறை பக்கம் போய் பாத்த, அங்க உமா காய்கள நறுக்கிட்டு இருந்தத பாத்துட்டு எந்திருச்சிட்டயாமா?

எந்திருச்சிட்டேன் அத்த , மாமாதான் வாக்கிங் போறக்கு கெளம்பும்போதே எல்லாராயும் எழுப்பி விட்டறாரே நல்ல வேளை உங்க பேரன் எந்திரிக்கலனு முருங்கக்காய நறுக்கி முடுச்சா!!

பதில் மொழியாக , அதச்சொல்லு இந்த மனுசனா வாக்கிங் போக சொன்ன டாக்டர உதைக்கனும் நம்மளயும்தூங்க விடாம பன்னிட்டாங்கனு தன் சார்பில டாக்டர சொல்லற மாறி வீட்டுக்காரரையும் விலாசினார் சாந்தி!!

முக்கியமான ஆளு நம்ம வாசுதேவன் அதானுங்க நம்ம சோமுத்தேவரோட இளையவாரிசு அவருக்கு மனசுக்குள்ள தன் தாத்தா மாறினு நெனப்பு அவரு ஊருக்குள்ள போனாலே எல்லாரும் கும்பிடனும்னு நெனப்பாரு, உண்மைதான் சோமுத்தேவரோட அப்பா வேலண்ணத்தேவர் போனா ஊரே பயப்படும் நீதி நேர்மைக்கு கட்டுபட்டவர் எவன்கிட்டயும் கெஞ்சாத சிங்கம் ஆனா அவருகிட்ட யாரு எத கெஞ்சுனாலும் குழந்தையமாறி கொடுத்துருவாறு!!
அப்படித்தான் அந்த எமன் ஏழெட்டு வருசமா கெஞ்சி உயிர வாங்கிட்டுப்போனான்.

அதேமாறி இருக்கனும்னு சோமுத்தேவர் இளையமகனுக்கு எப்பவும் ஆசை, செத்தா போனா போகுது நம்மள நம்பி யாரும் இல்லனு வாசுக்கு நெனப்பு!!

பி எஸ் சி கம்பியுட்டர் படிப்ப நிறைவு செஞ்சிட்டு வேல தேடிட்டு இருந்தான் வாசு!!

தனியார் நிறுவனத்துல வேலைக்கு இன்டர்வியு இன்னைக்குனு சொன்னானே வாசு என்று குருதேவனிடம் அம்மா சாந்திகேட்டாள்

ஆமாம்மா நைட் ரொம்ப நேரம் தூங்காமபடிச்சிட்டு இருந்தான்னு அவங்க அண்ணி சொன்னா,

அப்படியானு குருதேவன எழுப்பிவிட்டுட்டு சமையல்கட்டுல இருந்த உமாவிடம் கேட்டாள்

ஆமாங்கத்தை நேரமே போகனுமாம நான் உங்க கிட்ட சொல்லி எழுப்ப சொல்ல சொன்னத மறந்துட்டங்க அத்தனு இழுத்தாள்!!

சேரி நான் பாத்துக்கறேன் நீ விசில பாத்துக்கனு சொல்லிட்டு வாசு அறைக்கு போனால் அம்மா சாந்தி!!

வாசு!! வாசு!! எந்திருடா மணி 8 என்றாள்

எட்டா அய்யோ 9 மணிக்கு நான் கோவைல இருக்கனும் என்று திடுகிட்டு எழுந்து கெளம்பத்தயாரணான்

பால்காரன் வரவும் சோமுத்தேவர் வரவும் சரியாக இருந்தது வெளியில் இருந்த சொம்பில் பாலை வாங்கி கொண்டு வந்தார் அப்பா சோமுத்தேவர்!

வாசு கெளம்புவதை பார்த்து தொரை எங்க கெளம்புறார்னு உமாவிடம் கேட்க விவரம் உமா சொல்ல ஓஹோ என்றுவிட்டு குளிக்க போனார்..


குருவும், சோமுத்தேவரும் கிளம்பிவிட்டார்கள் வாசுவும் பின்னாளேயே சாப்பிட வந்தான்

அனைவரும் இட்லி சாப்பிட்டுவிட்டு ஒவ்வொருவராக கிளம்பினர்.

வாசுவிற்கு அப்பா அம்மா அண்ணன் அன்னி என நால்வரும் ஒருவருக்கு தெரியாமல் பணம் கொடுத்தனர்.

வாசுவின் மனநிலை அனைவருக்குமே அச்சம் தான் ஆம் உயிரைப்பற்றி கவலையில்லாமல் பைக் ஓட்டுவான்.

தன்னைநம்பி யாரும் இல்லை என்று இது ஒருவகையில் சோமுத்தேவரின் மனநிலைதான் சாந்தியைபற்றி கவலைப்படும்போதெல்லாம் உமா பாத்துக்குவாள் என்று தன் உடல்நிலையையும் பற்றி கவலையில்லாமல் இருப்பார் இதில் வாசுவும் அப்படியிருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை!!

அன்று பைக் எடுத்துக்கொண்டு வெகு வேகமாக போனான் வாசு, கற்பகம் கல்லூரி சிக்னலில் நிறுத்தினான் அப்போது பச்சை விளக்கின் கடைசி 5 நொடி என்பதை பார்த்துட்டுதான் நிறுத்தினான் சரி ஏன் தேவையில்லாமல் வேகமாக போக வேண்டும் அடுத்த சிக்னலில் கடக்கலாம் என்று நிறுத்தினான் பின்னாலிருந்து அதிவேகமாக ஒரு வாகனம் கடைசி 2 நொடிகள் என்று கணித்து வெகுவேகமாக வர இந்த சிக்னல் சிவப்பு விளக்கு எறிய பின்னால் வந்த வாகனம் கட்டுபாடை மீறி கடக்க கிழக்கிருந்து வந்த லாரி வேகமெடுக்க அந்த பைக்கின் மேல் விடாமல் லாரி ஓட்டுனர் திருப்ப லாரி பெரு வேகமெடுத்து வாசுவின் வண்டி அருகே மிக அருகில் வந்து நின்றது வாசு மயங்கியே விட்டான் அருகில் இழருந்தவர்கள் தண்ணீர் தெளித்து எழுப்பினர் இவன் மிரட்சியில் அன்று இன்டர்வியு வேண்டாமென வீட்டிற்கு சென்றான்!!

வீட்டில் இருந்தவர்கள் பதறி துடித்ததை பார்த்து வாசு வண்டி தன் மேல் பட வந்ததுக்கே இத்தனை பேரும் அழுவதை பார்த்து அன்றுமுதல் வாகனத்தை மெதுவாகவே இயக்கினான்.

இந்த சம்பவம் நடந்த அன்று காலை சோமுத்தேவருக்கும் ஒரு சோதனை நடந்தது

ஆம் சோமுத்தேவர் அன்று காலை வாக்கிங் செல்லும்போது அவர் ஏதோ நியாபகத்தில் பேச்சின் மும்மரத்தில் சாலையின் நடுபகுதயில் செல்லும் போது திடீரென்று வாகன ஒளி ஒருநிமிடம் கலங்கிப்போனார் சோமுத்தேவர், ஆம் அந்த காலை நேரம் 6:45 மணிக்கு வரும் 33 என்ற பேருந்து ஓட்டுநர் அவர்களுக்கு நீண்ட கால நண்பர் ஒளி எழுப்பி நிறுத்தியதில் ஒளி சப்தத்தால் மயங்கிய சோமுத்தேவரை சோனையா!! சோனையா!! என்று சத்தம்போட்டு ஓடி வந்து கீழே விழுந்தவரை தூக்கி பேருந்தின் நடத்துனரை தண்ணீர் எடுத்துவரச்சொல்லி தண்ணீர் தெளித்து சோமுத்தேவரை ஆசுவாசப்படுத்திவிட்டுதான் சென்றார் சோமுத்தேவரின் நண்பர் முத்துச்சாமி!!

இந்த பதட்டத்தில் அவர் அன்று வீட்டில் சொல்லாமல் மறைக்க அன்றே வாசுவுக்கும் நடக்க சோமுத்தேவர் இதை மறந்துவிட்டார் இருந்தும் நெஞ்சுவலி ஆரம்பமானது!!

அன்று மாலை வாக்கிங் நண்பர்கள் பழங்களுடன வந்தனர் சோமுத்தேவரை பார்க்க..

குடும்பமே சோகத்தில் இருந்ததை பார்த்து நடந்தவைகளை சாந்தி மற்றும் மகன்களிடம் விளக்க குடும்பம் கொஞ்சம் பதறித்தான் போனது!!

அடுத்தநாள் காலை மருத்துவமனைக்கு தந்தையும் இளைய மகனும் மருத்துவமனைக்கு சென்றனர் அழைத்துச்செல்லும்போது வழியில் சொன்னான் அப்பா எவ்ளோ முறை எத்தனையோ பேரை விலுகடித்திருக்கிறேன் ஆனால் இன்றுதான் அதன் வலி உணர்கிறேன் எனக்காகவோ என்னை நம்பியோ யாருமே இல்லையென்று நினைத்த என்நினைப்பு நேற்றே உடைந்தது என்றவுடன் ஆம் வாசு நானும் அப்படி நினைத்துக்கொண்டிருந்தவன் தான் ஆனால் எனக்கு நெஞ்சு வலி என்றவுடன் உங்கள் பதட்டம் என்னையும் மாற்றிவிட்டது இங்கே அனைவருமே முக்கியம்தான் தூண்கள் இல்லாமல் மண்டபங்கள் நிற்பதில் சாத்தியமில்லை இனி நமக்காக நாம் வாழ்தலே அவசியம் என கூட்டுக்குடும்பத்தின் அவசியத்தையும் அந்த உணர்வுகளின் ஸ்பரிசத்தையும் உள்ளார விளக்கினார் வேலண்ணத்தேவரின் மகன் சோமுத்தேவர்!!

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...