சிவகாமியின் கடிதம்.

பெண்மையக் கதைகள்
5 out of 5 (2 )

சிவகாமியின் கடிதம்.

==================

வேலூர் பாகாயம் ரோடில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்குஎடுத்து ராஜா வும் அவன் நண்பன் சாம்பசிவமும் தங்கி கலைக்கல்லுரியில் படித்து வந்தார்கள்.

சின்ன வீடு என்றாலும் நல்ல காற்றோட்ட வசதியாக இருந்தது. படிப்பதற்கு எந்த வித இடைஞ்சல்களும் இல்லை. வீட்டு ஓனர் மிகவும் நல்லவர், அவர்களை பிள்ளைகள் போல் நடத்துவார்.

ராஜாவும், சம்பசிவமும் அவர்களை அம்மா, அப்பா என்று அழைப்பேன்.

காலேஜ் நடந்து போகும் தூரத்தில் இருந்தது. அவர்கள் நடந்து தான் போவார்கள்.

வீட்டில் அவர்களே சமைத்துக்கொள்வார்கள்.

ராஜாவுக்கு சப்பாத்தி செய்ய தெரியும். புரோட்டா, சாதம் சாம்பார் செய்து விடுவான்.

ஒவ்வொரு வாரத்துக்கு ஒருவர் சமையல். படிப்பு நன்றாக போய்க்கொண்டு இருந்தது.

ராஜா கொஞ்சம் படிப்பில் கெட்டிக்காரன் என்று எல்லோரும் சொல்வார்கள். சாம்பசிவம் கொஞ்சம் படிப்பில் டல் என்று.

இருவரும்புத்தகமும் கையுமாக நடந்து போவோர்கள்.

சில நாட்களுக்கு பின்னர் அவர்கள் வரும் தெருவில் ஒரு அரண்மனை மாதிரி வீட்டில் ஒரு இளம் பெண் அவர்களை நோட்டம் விடுவது அவர்களுக்கு தெரியும்.

ராஜா அதை கண்டுகொள்ளாமல் போவான்.சாம்பசிவம் அவளை பார்த்து சிரிப்பது ராஜாவுக்கு தெரியும்.

பதிலுக்கு அவள் சிரிக்க மாட்டாள் அதும் தெரியும்.

இப்படியே நாட்கள் நகர்ந்தது. பார்க்க தேவதை போல் அழகாய் இருப்பாள். மிகவும் வசதியான குடும்பம். அவர்கள் வீட்டின் எதிரில் தென்னந்தோப்பு இருந்தது. அது அவர்களுக்கு சொந்தமானது.

அவர்கள் குளிக்க, துணி துவைக்க அங்கு ஓவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் போவார்கள் . பம்ப்செட். வற்றாத கிணறு தோப்பின் நடுவில் இருந்தது.

யாரையும் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள்.

அவங்க

வீட்டு ஓனறும் அவரும் பங்காளிகள். அதனால் உள்ளே போக அனுமதி வாங்கிகொடுத்தார். அதனால. கேட்டின் ஒரு சாவி எங்க வீட்டு ஓனரிடம் இருந்தது. அவர்கள் போகும் போது வாங்கிக்கொண்டு போவார்கள் வரும்போது கொடுத்து விட்டு வருவார்கள்.

இது வழக்கமாக விடுமுறை நாட்களில் நடக்கும்.

அந்த தேவதையின் பெயர். சிவகாமி.

அவர்கள் தோப்புக்கு போவது அவளுக்கு தெரியும். தோப்பில் ரோசா செடிகள்,பூ செடிகள் வாழை மரங்கள், எலுமிச்சை என்று எல்லாம் இருக்கும்.

அன்று வழக்கமாக ராஜாவும் சாம்பசிவமும் காலேஜ் புறப்பட்டார்கள்.

அப்போது சிவகாமி தோப்பிற்கு போக அவள் மட்டும் வீட்டின் கேட் திறந்துக் கொண்டு வெளியே வருவதை அவர்கள் பார்த்தார்கள் . ராஜா முன்னே செல்ல நண்பன் பின்னே வந்துகொண்டிருந்தான். அவன் பின்னே வர ராஜா கொஞ்ச தூரம் போய் திரும்பி பார்த்தான்.

அதிர்ச்சி நான்கு பேர் அவனை புரட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். பயந்து போய் வேகமாக அவர்களிடம் போய் அவனை விட்டிடுங்க என்று கதறி. கெஞ்சினேன்ராஜா.

வீட்டு ஓனரும் ஓடி வந்தார்.

விடுங்கபா இனி அவன் தப்பு பண்ணமாட்டான். இந்த பிள்ளைக்காக விடுங்க இனி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவனுக்கு சப்போட் செய்ய சிவகாமியின். மாமா தேவதாஸ், அண்ணன் சுந்தரம், அப்பா கலிய பெருமாள் சிவகாமியின் அம்மா அபிராமி. எல்லோரும் ஒரே கூட்டம்.

தலை கவிழ்ந்தபடி சாம்பசிவம்.. கன்னம் வீங்கி போய் கண்ணீர் வழிய நின்றிருந்தான். நான் கீழே கிடந்த நோட்டு புத்தகங்களை எடுத்துக் கொண்டு கையை பிடித்து அழைத்துக்கொண்டு அங்கிருந்து அறைக்கே திரும்பி வந்து விட்டான் ராஜா.

சாம்பசிவம் டேய் ராசா நான் ஊருக்கு போறேன் நீ லீவு லெட்டரை பிரின்சிபால் இடம் கொடுத்து விடு என்று சொல்லி விட்டு ஊருக்கு போக தயாரானான். ராஜாவும் சரி போய் சீக்கிரம் வந்து விடு என்று கூறினேன்.

புறப்பட்ட அவனை பஸ்ஸ்டாண்ட் வரை சென்று விட்டு விட்டு அறைக்கு வந்து காலேஜ் புறப்பட்டு மாலை வகுப்பில் சேர்ந்தான் ராஜா. பிரின்சிபால் அறைக்கு சென்று சாம்பசிவம் உடல் நிலை சரி இல்லை என்றுசொல்லி எழுதிய விடுப்பு விண்ணப்பம் கொடுத்தான் . அவர் அவனைப் பார்த்து உண்மையை சொல் காலையில் நீங்க ரெண்டு பேரும் வரும்போது என்ன நடந்தது.? என்று கேட்டார்.

அவன் தயங்கினான் . அவர் ஒரு கடிதத்தை அவனிடம் கொடுத்து படி என்றார். அது சாம்பசிவம் சிவகாமிக்கு எழுதிய காதல் கவிதை.

பேய் அறைந்தது போல் நின்றான் ராஜா.அவர் உனக்கு தெரியாதா என்று கேட்க. எனக்கு தெரியாது சார் வகுப்புக்கு வரும்போது

அவனை நாளு பேர் சூழ்ந்து நின்றிருந்தனர். வேறு ஏதும் தெரியாது. என்றான் . சரி போ என்று சொல்ல அவன் வகுப்புக்கு போய் விட்டேன். காலேஜ் முடிந்தது.

அறைக்கு வந்தான் ராஜா.. யாரோ கதவை தட்ட பயந்து போய் கதவை திறக்க வீட்டு ஓனர் வந்திருந்தார். உள்ளே வந்து அவரே சேரில் உட்கர்ந்து. ராசா உன் பிரிண்டை வேறு இடம் பார்க்க சொல் என்றார்.

நான் அப்பா எப்படி முடியும் தேர்வுக்கு இன்னும் மூன்று மாதம் இருக்கு இனிமேல் எதும் நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான் ராஜா.

சரி நான் சிவகாமி அப்பாவிற்கு சொல்கிறேன். உன் மூஞ்சியை பார்க்கிறேன். நீ என் பிள்ளை மாதிரி என்று சொல்லி விட்டு வெளியே போய் விட்டார். ஒரு வாரம் கழிந்து சாம்பசிவம் வந்தான். ராஜா எதுவும் சொல்ல வில்லை.

அவனும் எதுவும் சொல்ல வில்லை. ஒழுங்காக மூன்று மாதங்கள் ஓடின. தேர்வும் எழுதி முடிந்தது. இனி அவர்கள் வீட்டிற்கு போவது தான் பாக்கி.

அவன் சில சாமான்கள் வாங்குவதாக கூறி பஜார் வீதிக்கு போனான். அவன் போனானோ இல்லையோ. யாரோ கதவை தட்ட போய் திறந்தான் ராஜா . ஆச்சரியம் பயம் அங்கு சிவகாமி நின்றிருந்தாள். கையில் ஒரு பை என்னிடம் நீட்டினாள். கைகள் நடுங்க வாங்கிக்கொண்டான் . தீடிரென்று ஒரு கவர் கையில் தினத்தப்படி வேகமாக போய் விட்டாள்.

மனம் பட படக்க கொஞ்ச நேரம் கழித்து பிரித்து படித்தான்.அவள் ராஜா

வுக்கு எழுதிய காதல் கடிதம்.

மீண்டும் கதவை தட்ட நெஞ்சில் பயம்

தொலைந்தோம். சாம்பசிவத்திற்கு அடி விழுந்த மாதிரி நடக்குமோ என்று பயந்து போய் கதவை திறந்தான் ராஜா

நண்பன் சாம்பசிவம். அப்பாடா....

கடிதத்தையும் அந்த பையையும் அவன் பெட்டியில் வைத்து விட்டு தான் கதவை திறந்தான்.

. வீட்டு ஓனரிடம் அறை சாவியும், வாடகையும் கொடுத்து வீட்டு திருப்பி பார்க்காமல் பஸ்ஸ்டாண்ட் வந்து சொந்த ஊருக்கு பஸ் ஏறி சீட்டில் உட்கார்ந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு விட்டார்கள்.

எதோ அவன் நெஞ்சம் மட்டும் பாரமாக இருந்தது........

அந்த நாட்கள் இன்னும் நினைக்க தோன்றும்.

ராஜா தன்னைத் தானே

சமாதானம் செய்து கொண்டான்.

அவன் ஒரு நாள் கூட சிவகாமியை பார்த்ததும்,

ஒரு வார்த்தை கூட பேசவோ. எழுதவோ இல்ல பழகவோ இல்லை.

ஒரே ஒரு முறை கூட நேரில் பேசவில்லை. அப்படி இருக்க அவன் மீது என்ன தவறு இருக்கு...?

அவன் அவளை ஏமாற்ற வில்லை. ஸாரி அவளுக்காக அனுதாபங்கள் மட்டுமே அவனால் பட முடிந்தது.

அன்று பார்த்த ராஜா இடையில் இரண்டு மாதங்கள் பார்க்க வில்லை.இன்று காலேஜ் போய் மாற்று சான்றிதழ் மதிப்பெண் பட்டியல் வாங்க போனான்.

எல்லாம் வாங்கி கொண்டு அவன் இருந்து படித்த வாடகை வீட்டுக்கு போய் அவன் ஒனரையும் உதவி செய்த அந்த பெரியவரையும் பார்க்க ஒவ்வொரு கிலோ ஸ்வீட் தனித் தனியாக வாங்கி கொண்டு போய் பார்க்க போனான்.

அங்கு அவனுக்கு பேராதிர்ச்சி காத்து கிடந்தது.

சிவகாமி ஒரு வாரத்துக்கு முன்னாடி அவளை பெண் பார்க்க மாப்பிளை வீட்டார் வந்து பார்த்து விட்டு போக.

அன்று அவள் அறையில் சேலை துணியால் பேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள்

என்ற செய்தி....

அதிர்ச்சியில் உறைந்து போனான் ராஜா.

==================================

(இது கதையல்ல

உண்மை நிகழ்வு. )

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...