JUNE 10th - JULY 10th
"ஹே, அங்க என்னப்பா ஆச்சு?” எதுக்கு டிராபிக் லாம் திருப்பி விட்டுட்டு இருக்காங்க என ரங்காச்சாரி கேக்க, ரோட்டோரம் இருக்கும் கடைக்காரர், “எதோ விபத்து ஆகிருச்சாம் பா!” என சொன்னார்.
“பைக் ல போன ஆள மினி வேன் தட்டிட்டு போயிர்ச்சாம்” என்றார் வேறுஒருவர்.
அங்கே ரத்தக்கறை உடன் ஆதித்யா உயிருக்காக போராடிக்கொண்டிருந்தான்.
"ஆம்புலன்ஸ்க்கு சொல்லியாச்சு வந்துருவாங்க பயப்படாதீங்க உங்களுக்கு ஒன்னும் ஆகாது" என்று ரங்காச்சாரி அவன் கையை பிடித்து சொல்லி கொண்டிருக்கிறார். அவன் அவரை நன்றியுடன் பார்த்து விட்டு தன் கையில் இருந்த டாட்டூ வை உற்று பார்த்து கொண்டிருந்தான். “சரண்யா” என்று இருந்த அந்த பெயரை பார்த்து கொண்டிருக்கும் போது, அவன் கண்களில் நீரூற்று ஆரம்பித்து இருந்தது.
ஏன் இந்த பயணம் எதற்கு இந்த விபத்து என ஆதித்யாவின் மனது பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது. தனக்கு இது தேவை தான், வாழவே வேண்டாம் என்று இருந்த போது வந்தவள், வாழ்வு முழுவதும் வர மறுத்து விட்டாளே என அவன் மனம் வெதும்பியது.
ஆதித்யாவை பற்றி சொல்ல வேண்டுமானால் பெரிதாக எதுவும் இல்லை. ஆம், அவனுக்கு என யாரும் இல்லை. அனாதை இல்லத்தில் வளர்ந்து பின்பு கல்வி முடிந்ததும் இந்த சமூகத்தில் தூக்கி எறியப்பட்டவன். அவனுக்கு என அன்பு காட்ட கிடைத்த ஒரே நண்பன் தான் சத்யா. இருந்தும் அவனுக்கு தேவைப்பட்ட அன்பு அலுவலக தோழி சரண்யா மூலம் தான் கிடைத்தது. அவனுக்கு இருந்த கூச்ச சுபாவமும் பழகாத விதமும் யாரிடமும் அவனை பழக விடவில்லை. இருந்தும் அவனுக்கு சத்யாவை தவிர வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். அவன் இவனுக்கு நல்ல நண்பனாய் கற்று கொடுத்த விஷயங்கள் ஏராளம், காதலை தவிர.
சரண்யா பற்றி சொல்ல வேண்டும் எனில், உலக அழகி இல்லை எனினும் ஒரு உள்ளூர் அழகி தான். அவள் தான் அவன் வேலைக்கு சேர்ந்த புதியதில் பல உதவிகள் செய்தவள். அவனுக்கு அப்படி யாரிடமும் கேட்டு பழக்கம் கூட இல்லை. ஆனால் இவள் தேடி தேடி உதவி செய்தாள். இவனுக்கு ஏன் என தெரியவில்லை ஆனால் அவனுக்கு அது ரொம்ப பிடித்து இருந்தது. புதிய ஒருவரின் அன்பு அவளுக்கு அவனை அடிமை ஆக்கியது. இவன் தனக்கு தானே நல்ல நண்பன் என்ற பிம்பம் காட்டி கொண்டாலும் அவனை அறியாமலே அவளை ரசிக்க நேசிக்க ஆரம்பித்தான். இவன் போக்கு சத்யா விற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவன் சொல்லியும் ஆதித்யா எதையும் கண்டு கொள்ளவில்லை. அவள் பின்னால் பேதை யாக திரிந்தான். இவளுக்காக உயிர் நண்பன் சத்யா விடம் சண்டை போட்டு பிரிந்தான்.
அவள் மட்டுமே தனக்கு உலகம்… வேறு யாரும் வேண்டாம் என வீர வசனம் பேசி நண்பனை தொலைத்தான் இந்த முற்றிய சரண்யா பித்தன்.
சத்யாவிடம் இவ்ளோ பேசிவிட்டான், இருந்தாலும் அவளிடம் இன்னும் தன் காதலை சொல்லும் தைரியம் வரவில்லை. எப்படியாவது சொல்லி விடவேண்டும் என முடிவு செய்து அம்மணியின் பிறந்த நாளை தேர்வு செய்கிறான். அவளிடம் காதலை சொல்லும் நேரமும் இதோ வந்துவிட்டது.
அம்மணியிடம் பிறந்த நாள் வாழ்த்து சொல்லிவிட்டு, “உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும் சரண்” என்றான்.
“சொல்லு ஆதி” என்றாள் சரண்யா.
“என்னை திருமணம் செய்து கொள்வாயா?” என்றான் ஆதித்யா.
“என்ன ஆதி இப்டி கேக்கற?, உன்ன ஒரு நல்ல நண்பனா தான் நெனச்சேன், இப்டி எண்ணத்துல நீ பழகுவனு தெரிஞ்சா நா மொதவே உண்ட பேசாம இருந்துருப்பேன்” என்கிறாள்.
“இல்ல புரியல அப்படி என்ன இப்போ நான் தப்பா கேட்டுட்டேன், எதுமே இல்லாத எனக்கு எல்லாமா நீ இருக்க ஆசைப்பட்டேன் அவ்ளோ தான். உனக்கு பிடிக்கிற வர நான் வெயிட் பண்றேன் சரண் ப்ளீஸ் நோ னு மட்டும் சொல்லாத என்று அவளிடம் கெஞ்சுகிறான்”.
அவள் அதற்கு, “இனிமேல் இது பத்தி என்ட கேக்காத நா இத பத்தி பேச விரும்பல” என்று அப்செட் ஆக கெளம்புகிறாள்.
அவனும் கண்ணீருடன் யாரும் இல்லா அவன் வீட்டிற்கு செல்கிறான். நட்பா பழகின பொண்ணு கிட்ட இப்டி கேட்டு தப்பு பண்ணிட்டோம் ஆ என்ன னு பெட் இல் சாய்க்கிறான். அப்போது அவன் கையில் இருந்த டாட்டூ இன்னும் கூடுதலாக அவனக்கு வலிக்கிறது நேற்றை விட .
அழுதுகொன்டே அயர்ந்து விட்டான், “இனி அவனுக்கு எங்கே பசிக்க போகிறது சோக கீதங்கள் இனி அவனை தாலாட்டி கொள்ளும்”. “கனவே கனவே” என்று பாடி திரிய வேண்டியது தான்.
அன்று தூங்கியவன் அதன் பிறகு தூங்கவேயில்லை. அவளை நினைத்து உருகி கொண்டிருந்தான். அவன் டீடோட்டலர் என்பதால் அவனால் அப்போது மது, சிகரெட் என எதிலும் ஈடுபட முடியவில்லை இல்லையெனில் குடித்தாவது அவளை மறக்கலாம். எங்கேயும் செல்லாமல் அறைக்குள்ளே பைத்தியமாக கிடந்தான். அப்போது தான் அவன் அறையின் கதவு திறந்தது. வேறு யாரும் இல்லை, சத்யா தான் அவனை பாக்க வந்திருந்தான்.
“டேய் ஆதி, என்னடா இப்டி கிடைக்கற என்னாச்சு” என கேட்கிறான்.
எல்லா கதையும் சொல்லி முடிந்த பின், “சரி விடு மச்சா சரண்யா இல்லனா சங்கீதா அவ்ளோ தான் டா. இதுக்கு போய் உலகம் இருண்டு போன மாதிரி கிடக்க வாடா வெளிய போவோம்” என்கிறான். ஆனால் இவன் “அவ தான் மச்சா என் உலகம், எல்லாம் தெரிஞ்சும் நீயும் இப்டி சொல்றியே டா” என்கிறான். “பிடிக்கல னா என்ன மச்சா பண்ண விடு வா வெளிய போவோம்” என்கிறான். ஏனோ அப்போதைக்கு சத்யா வின் பேச்சை கேட்டு நார்மல் ஆனாலும் இன்னும் அவன் சரியாகவில்லை.
காலை 10 மணி அளவில் என்ன நினைத்தான் என தெரியவில்லை, ஹெட் செட்டை அணிந்து கொண்டு அவளிடம் பேசிய ரெக்கார்டர் வாயிஸ்யை கேட்டு கொன்டே பைக்கை எடுத்து கொண்டு எங்கோ செல்ல ஆரம்பித்தான். தூரமாக பயணம் செய்தால் நல்லா இருக்கும் என திடீர் ஞான உதயம் போல, அதன் விளைவே இந்த பயணம்.
இத்தனையும் அவன் நினைத்து முடிக்கும் முன்பு ஆம்புலன்ஸ் வந்தது. அவனுக்கு பின் தலையில் அடி பலம் என்பதால் தலையை மட்டும் தனியாக பிடித்து கொண்டு வண்டியில் ஏற்றினார்கள். ஏறிய 3 நிமிடங்களுக்கு பின் இதயத்தில் பல கிழிவு. “அவளே இல்ல இனி இருந்து என்ன பண்ண” என கண்ணை மூடினான் ஆதித்யா.
விஷயம் தெரிந்து சத்யாவும் ஆம்புலன்ஸ் பின் ரங்காச்சாரி யும் வருகிறார்கள்.
ஆதித்யா ICU வில் அனுமதிக்கப்படுகிறான். ஆனால் என்ன பயன் அவன் தான் இதய துடிப்பை நிறுத்தி பல நாள் ஆகிறதே. வெளியில் அமர்ந்திருக்கும் சத்யா விடம் இவர் இறந்து 5 நிமிசம் ஆகிறது என்று அவனது உடலை இறுதியில் நண்பனிடம் ஒப்படைக்கிறார்கள்
சத்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடந்தது நடக்கிறது என அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அப்போது தான் ரங்காச்சாரி அவனிடம் என்ன பா எல்லாம் ஓகே தான தம்பி பொழச்சுப்பாரு தான என்று அவனிடம் கேட்கிறார். சத்யா பேச இயலாமால் துக்கம் தொண்டையை அடைக்க விம்மி விம்மி அழுகிறான். அப்பொழுது தான் நிலைமை என்ன என ரங்காச்சாரி உணர்கிறார் . சத்யாவின் அந்த இயலாமை நிலையில் எல்லா காரியத்திற்கும் அங்கே ரங்காச்சாரி தான் உதவுகிறார்.
எல்லாம் முடிந்த பின்பு அவன் போட்டோ வைத்து அவன் வீட்டில் அவனையே வெறித்து பார்த்து கொண்டிருக்கிறான். 2 நாட்கள் பைத்தியம் ஆகி அவன் உடற்கூறாய்வு முதல் கொண்டு எடுத்து படிக்க ஆரம்பித்தான்.
அதில் அவனுக்கு இதயத்திலே கல் பலமாக குத்தப்பட்டு இருந்தாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதயம் இல்லா ஆள் எல்லாம் காதலிச்சா இப்டிலாம் ஆகும் போல என அவனுக்குள்ளவே நமட்டு சிரிப்பு சிரித்து கொண்டு அவனுடைய பொருட்களை எடுத்து பார்த்து கொண்டு இருந்தான். அங்கே அவனுக்கு ஒரு அதிர்ச்சி.
உடனே பைக்கை இயக்க ஆரம்பித்தான். அவசர அவசரமாக உள்ளே நுழைந்தான். சார் சார் என கூப்பிட்டான். எந்த பதிலும் இல்லை. சார் ஒரு கம்பளைண்ட் சார், ப்ளீஸ் பைல் திஸ் கம்பளைண்ட் சார் என்கிறான். அட ஓரமா நில்லுயா நாங்களே புது இன்ஸ்பெக்டர் வரார் அவரை இன்னும் காணோம் னு காலைல இருந்து நின்னுட்டு இருக்கோம். இவன் வேற கம்பளைண்ட் அது இது னு உயிரை வாங்கிட்டு இருக்கான் அப்டினு அவன பாத்து மொறைக்கிறார் ஏட்டய்யா ஏகாம்பரம்.
சிறுது நேரத்திற்கு பிறகு இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தின் என்ட்ரி. அனைவரும் சல்யூட் அடித்து வரவேற்கிறார்கள். இவன் எல்லாம் பார்த்து கொண்டு நின்று கொண்டிருக்கிறான் எப்படா என்னோட கம்பளைண்ட வாங்குவீங்க னு பொலம்பிட்டு இருக்கான்.
ஆறுமுகத்தின் வரவேற்பு நிகழ்வு முடிந்தவுடன், ஹலோ சார் என் பேரு சத்யா எனக்கு ஒரு கம்பளைண்ட் குடுக்கணும் ப்ளீஸ் இட்ஸ் அர்ஜெண்ட் என்கிறான். உக்காருங்க சத்யா சொல்லுங்க என்னாச்சு என்கிறார். சார் என்னோட நண்பன் 3 நாளைக்கு முன்னாடி இறந்துட்டான் சார். இட் வாஸ் அன் அச்சிடேன்ட் பட் எனக்கு டவுட் ஆஹ் இருக்கு சார் அது கொலை அப்டி னு என்கிறான்
எப்படி இவ்ளோ தீர்க்கமா சொல்றேங்க Mr.சத்யா, யார் மேலயும் சந்தேகமா இல்ல நீங்களா எதாவது சொல்றேன்களா என கேட்கிறார். இல்ல இன்ஸ்பெக்டர் என்கிட்ட ப்ரூப் இருக்கு என ஆதித்யா வின் மொபைலை நீட்டுகிறார். அவர் அதை பார்த்ததும் ஓகே நீங்க கம்பளைண்ட் குடுங்க நா பாத்துக்கிறேன் அப்படி னு சொல்றாரு.
"ஹலோ சார், மை அசைன்மெண்ட் இஸ் டன், ப்ளீஸ் ஷேர் மை அமௌன்ட் . என கூறி கால் கட் செய்யப்படுகிறது.
ரங்காச்சாரி உட்பட வேடிக்கை பார்த்த அனைவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. ஹாஸ்பிடலில் ஆதித்யாவை அலைத்து வந்த போது ஆம்புலன்ஸ் இல் இருந்த நபர்கள் பற்றி விசாரிக்க ஏட்டய்யா வந்திருந்தார்.
ஆனால் அவர்களை பற்றி தெளிவான விவரம் எதுவும் கிடைக்கவில்லை. மொபைல் எண் மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் போலி என விசாரணையின் முடிவில் தெரிகிறது . இது பற்றி ஹாஸ்பிடலில் கேட்டால் இப்போது ஜாய்ன் செய்தவர்கள் என பதில் முன்னுக்கு முரணாக வந்தது.
இன்ஸ்பெக்டரின் அறிவுரைப்படி அந்த நபர்களின் ஸ்கெட்ச் வரையப்பட்டு எடுத்து வரப்பட்டது ஆனால் அதன் பின் பேரதிர்ச்சி காத்திருந்தது. வரையப்பட்ட நபர்கள் பிணமாக அடுத்த நாள் கிடைத்தனர்.
அனைத்தும் ஆறுமுகத்தின் கவனம் பெற கேஸில் முன்னேற்றம் ஏதும் இல்லை என அறிகிறார். இவ்வளவு பெரிய ஆதாரம் இருந்தும் யார் கொலை செய்தார்கள் எதற்கு என தெரியவில்லையே என குமுறுகிறார் ஆறுமுகம்.
மறுபடியும் விசாரணையை முதலில் இருந்து தொடங்குகிறார் ஆறுமுகம். முதலில் சத்யா பற்றி விசாரித்து பின் அவரையும் விசாரணைக்கு அழைக்கிறார். பின்பு ஆதித்யா பற்றி அக்கம் பக்கம் விசாரிக்கிறார். 10 நாட்களாக அந்த தம்பி வெளிய வரல என்னாச்சு னு தெரில அப்றம் பாத்த எதோ அச்சிடேன்ட் ஆச்சு இறந்துட்டாரு அப்டினு கேள்விப்பட்டேன் னு பக்கத்து வீட்டு தாத்தா அவர்கள் வாக்குமூலம் கொடுத்து கொண்டிருந்தார். அப்பொழுது தான் அந்த தாத்தா இங்க ஒரு வேன் அவர் சாகறதுக்கு முன்னாடி 3 நாளா நின்னுச்சு ஏன் என்ன னு தெரியல அப்படின்னு ஆறுமுகத்துட்ட தாத்தா சொல்கிறார்.
வேன் நம்பர் ஏதும் நியாபகம் இருக்கா இங்க எதுவும் சிசிடிவி கேமரா இருக்கா அப்டினு கேட்கிறார் ஆறுமுகம் . இல்ல சார் நான் எதுவும் கவனிக்கல இங்க கேமரா லாம் ஒன்னும் இல்ல அப்டினு சொல்றார். பின்பு சத்யா விடம் ஏன் எதற்காக நீங்க உங்க நண்பர் வீட்ல இருந்த விஷயம் எதுவும் நீங்க என்ட சொல்லல என கேட்டார். இல்ல சார் அது அவனோட பர்சனல் அதான் அது பத்தி எதுவும் நான் சொல்லல என சத்யா சொல்கிறார்.
சரி இப்பவாச்சும் சொல்லுங்க ஏன் உங்க பிரண்ட் அப்டி இருந்தாரு னு. ஓகே சார், அவன் ஒரு பொண்ண ரொம்ப லவ் பண்ணினான் பட் அவுங்க அவன அக்ஸ்ப்ட் பண்ணிக்கல அதோட விளைவு தான் அது. வேற ஒன்னுமில்ல சார். ஓகே சத்யா இப்போ இந்த கேஸ் ல எனக்கு ஒரு க்ளூ கெடச்சருக்கு. அப்டியா சார் என்ன அது என ஆவலாக கேட்டான் சத்யா. உங்க பிரின்ட் ஆஹ் யாரோ ரொம்ப நாளா வாட்ச் பன்னிருபங்க னு நெனக்கிறேன். அவுங்க தான் அவர கொல பண்ணிருக்க வாய்ப்பிருக்கு னு நா கெஸ் பண்றேன் சத்யா.
நீங்க லாஸ்டா உங்க பிரண்ட் வீட்டுக்கு வந்தப்ப எதும் மினிவேன பார்த்திங்களா. அப்படி ஏதும் இல்லையே சார் என்றான் சத்யா. இங்க ஒரு மினி வேன் உங்க பிரண்ட வாட்ச் பண்ணினதா தகவல் கெடச்சருக்கு, உங்க பிரண்டா இடிச்சதா சொல்றதும் ஒரு மினி வேன் தான். மேபி அந்த வேனா கூட இருக்கலாம். நான் டிபார்ட்மென்ட் ல சொல்லி அந்த டைம் ல இந்த சைடு இருக்கிற கேமரா ல அந்த வேன் சிக்கிருக்கா னு பாக்க சொல்லிருக்கேன். எதுவும் கெடச்சா கண்டிப்பா நமக்கு யூஸ்புலா இருக்கும் சத்யா.
இப்போ நாம போய் உங்க பிரண்ட் ஆபீஸ் ல எதும் வித்தியாசமா நடந்துச்சா இல்லனா உங்க பிரண்ட யாரும் பின்தொடர்ந்தாங்களா என்னனு பாக்கணும் வறீங்களா சத்யா. ஓகே சார் போகலாம் என்றான். காரில் போகும் பொழுது ஏன் சத்யா நீங்க அந்த பொண்ண பாத்துருக்கீங்களா இது வர என்றார் ஆறுமுகம் . இல்ல சார் ஆதித்யா என்ன பாக்க விடல சார். அவ லவ் கு ஓகே சொல்வ அப்போ நா உனக்கு இன்ட்ரோ பண்றேன் மச்சா னு சொன்னான்.அதனால நானும் பாக்க ட்ரை பண்ணல சார்.
ஆபீஸ் ரெசிப்டின் இல் விசாரித்தார்கள் இருவரும் ஆனால் உருப்படியாக எதும் கிடைக்கவில்லை. அப்போது ஆறுமுகம் சரண்யா பற்றி விசாரித்தார் ஆனால் அதற்கு முன்பே அவள் அங்கே வேலையை ரிசைன் செய்திருந்தாள். அவளைப் பற்றிய விவரங்களை சேகரித்து கொண்டு அங்கிருந்து இருவரும் கிளம்பினார்கள்.
நாம ஒரு தப்பு பண்ணிட்டோம் சத்யா. இன்வெஸ்டிகஷன ஆம்புலன்ஸ் ல இருந்து வச்சோம் பட் நம்ம சுத்தமா இடிச்சுட்டு போன மினி வேன் பத்தி சுத்தமா யோசிக்கல எனக்கு என்னமோ எலாம் ஒரே கும்பல் பனிருக்குமோ னு தான் தோணுது. இது எல்லாமே ஆல்ரெடி பிளான் போட்டு பண்ணின மாரி தெரியுது.
ஹலோ சார், இடுச்சுட்டு போன வேன பத்தி தகவல் வந்துருக்கு சார் பட் வேன் நம்பர் விசாரிச்சாச்சு அது போலி தான். நம்ம டோல்கேட் சிசிடிவி கேமரா ல முகம் எதும் தெரியல சார். ஓகே விஷால் என்றார் ஆறுமுகம்.
அப்போது எதோ யோசனை வந்தவர் போல ஏகாம்பரதிற்கு கால் செய்தார். ஏட்டய்யா, இது வர தமிழ்நாட்டு ல 30 ஏஜ் குள்ள ஏதும் அச்சிடேன்ட் கேஸ் பட் patient டெத் அப்டி எதும் கேஸ் இருக்கானு விசாரிங்க என்கிறார். சரிங்க அய்யா என்கிறார் ஏகாம்பரம்.
சரண்யா பத்தியும் விசாரிச்சாச்சு பட் எதும் டவுட் வர மாரி எதும் இல்ல எல்லாம் கரெக்டா தான் இருக்கு என்றார் சத்யாவிடம் குழப்பமாக.
அப்போது ஏட்டுவிடம் இருந்து கால் வந்தது. சொல்லுங்க ஏகாம்பரம் . ஓகே வரேன் என்றார். கொலையாளி கிடைச்சாச்சு வாங்க போகலாம் என்கிறார் சத்யாவிடம்.
“ஹலோ சார், போலீஸ் நம்மள மோப்பம் பிடிக்க ஸ்டார்ட் பண்ணிட்டாங்க எதுக்கும் நமம நெஸ்ட் அசைன்மென்ட் ஆஹ் ஹோல்டு பண்ணுவோமா” என்கிறார்கள். அவுங்களால ஒன்னும் பண்ண முடியாது நீ எதுவும் ஸ்டாப் பண்ண வேணாம் என எதிர்முனையில் போன் கட் செய்யப்படுகிறது.
சத்யா , சொல்லுங்க சார். உங்க பிரண்ட கொலை பண்ணவங்கள பிடிக்க போயிடு இருக்கோம் என்கிறார். சென்னை டூ பெங்களூர் செல்லும் பேருந்து மடக்கப்பட்டு கொலையாளி பிடிக்கப்படுகிறார்.
சத்யா விற்கு ஒன்றும் விளங்கவில்லை. என்ன சத்யா ஒன்னும் புரியலையா என்கிறார் ஆறுமுகம் விடுங்க நா உங்களுக்கு எஸ்பிளான் பண்றேன் னு சொல்ல ஆரம்பிக்கிறார். இது சாதாரண கொலை கேஸ் மட்டும் இல்ல சத்யா, மிக பெரிய organ trafficking கேஸ் என்கிறார். இன்னும் மிக பெரிய குழப்பத்துடன் ஆறுமுகத்தை பார்க்கிறார்ன் சத்யா.
ஆமாம் சத்யா இதுவரை 50 கும் மேற்பட்ட இதே மாதிரி இல்லை பட் சேம் ஹாஸ்பிடல ஆம்புலன்ஸ் பெயிலர் ஆகியிருக்கு.அதே எல்லாமே செக் பண்ணி பாத்தோம் மாக்ஸிமும் அதுல இறந்தவங்களுக்கு கேக்க யாரும் இல்லாத அனாதை பசங்க தான். அதனால தான் இவுங்க இது வர மாட்டவும் இல்ல இந்த சேம் சசீந்ரயோ னால தான் இவுங்க மாட்டிக்கவும் செய்றங்க.
என்ன சார் சொல்றாங்க உண்மையாவா என ஆச்சரியத்துடன் கேட்கிறான். ஆமா சத்யா அந்த ஹாஸ்பிடல்க்கு பிடிவாரண்ட் கொடுத்தாச்சு இந்நேரம் எல்லாம் மாட்டிருப்பாங்க. இது எல்லாத்துக்கும் நாம உங்க நண்பர்க்கு தான் நன்றி சொல்லணும் என்று சொல்லிக்கொண்டு கெளம்புகிறார் ஆறுமுகம்.
அப்போது சத்யா, சார் என்னால இன்னும் நம்ப முடில சார் ஆதிய கொலை பண்ணது என இழுத்தான் சத்யா. அதற்கு என்ன, பண்ணினது சரண்யா னு நம்ப முடிலயா என்று கேட்டார் ஆமா சார் என்றான். அது அவளுக்கு ஜஸ்ட் ஒரு அசைன்மென்ட் சத்யா. உங்க பிரண்ட் அவளுக்கு 10வது அசைன்மென்ட். அவுங்கள பத்தி உங்கட நா சொன்ன எல்லாமே பொய் தான். அதற்கு காரணம் உங்களுக்கும் சம்பந்தம் இருக்குமோ னு ஒரு சந்தேகம் அதான் . சார் நான் தான் இந்த கம்பளைண்டே குடுத்தேன் அப்பறம் எப்படி சார் நா இத பன்னிருப்பேன். போலீஸ் ஆச்சே எல்லாரையும் சந்தேங்கப்படாம எப்படி சத்யா அதான் உங்கட்ட மாத்தி சொன்னேன். அப்போ நீங்க சேப் னு தகவல் குடுக்க வாய்ப்பிருக்கு னு பண்ணோம் பட் அப்டி எதுவும் நடக்கல.
சரண்யாவோட நம்பர் ரீச் ஆகல. அட்ரஸ் ல அப்டி ஒரு பேர்சன் இல்லனு தான் எங்களுக்கு தகவல் வந்துச்சு. ஆபீஸ்லயும் அவள பத்தி எதும் ஆதாரம் இல்ல. ஏன் கேமரா ல கூட அவ பேஸ் இல்லனா சம்திங் ஸ்ட்ரேஞ்சா தெரியுதேனு தான் அவ நம்பர் ல வந்த கால் லிஸ்ட் அண்ட் ரெகார்ட் லாம் செக் பண்ணோம் அதுல தான் மேடம் மாட்டிக்கிட்டாங்க.
அவன் அனாதை னு தெரிஞ்சு தான் அவனோட இவுங்க அவ்ளோ க்ளோஸ் ஆஹ் பழகி இந்த பிளான் ஆஹ் எக்ஸ்குட் பன்னிருக்காங்க என்று சொல்லி முடித்தார் ஆறுமுகம்.
மறுநாள் காலை, பேப்பரில் organ trafficking செய்த ஹோச்பிடசல் கு சீல் எனவும் அதன் உரிமையாளர் கைது எனவும் செய்தி வருகிறது. இதனை சிறப்பாக செயல்பட்டு பிடித்த ஆறுமுகம் இற்கு பாராட்டு என அச்சிடப்பட்டதை சத்யா வாசித்து கொண்டிருக்கிறான்.
அப்பொழுது அவன் மனதில், நண்பா ஆதித்யா, உன்னோட கொலைக்கு என்னால முடிஞ்ச நீதிய வாங்கி குடுத்துட்டேன். ஆனால் அதற்கும் நீ தான் மச்சா காரணம். நீ கீழ விழுந்தப்ப உன்னோட மொபைல் எடுத்த அந்த போட்டோ தான் இந்த காமபிளைண்ட்க்கு காரணம். அதுல உனக்கு நெஞ்சு ல ஏதும் காயம் இல்லை ஆனால் உன் உயிர் போனதுக்கு காரணம் இதயத்துல கல் குத்தி னு நான் உன்னோட உடற் கூராய்வுல இருந்துச்சு. அது மட்டும் இல்லனா நானும் எல்லார மாறியும் இது ஒரு விபத்து னு நெனச்சு அழுதுட்டு இருந்துருப்பேன் என நினைக்கிறான் .
இங்கே இத்தனை நடக்கும் முன்னமே ஆதித்யா அறிந்திருந்தான் அந்த வேனில் இருந்தது சரண்யா என்றும் தன் உயிர் தான் தன் உயிரை காவு வாங்கியதும் என்றும். அதனால் தானோ என்னவோ அவன் இறுதியாக அவள் டாட்டூ வை பார்க்கும் பொழுது அது மொத்தமும் ரத்தத்தில் மறைந்து இருந்தது.
#351
35,970
970
: 35,000
20
4.9 (20 )
jaynavin16
nathiyalokesh
dhineshcem
Nice story keep it up bro
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50