JUNE 10th - JULY 10th
காதல் கிளுகிளுப்பை.
திகில்
=====================
எஸ். எஸ்...
=====================
காளி கோயில்.
நேரம் சரியாக பணியிரண்டு மணி....
அடர் இருட்டு
அடர்ந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லை. வெளிச்சம் இம்மியும் இல்லை.
எங்கும் மயான அமைதி.....
வெள்ளைக் குதிரை மீது வெண்மை
யான உடையோடு முனீஸ்வரன் ஜடா முடிகள் நீண்டு தொங்கிக் கொண்டு இருக்க. தங்கச்சியை காணும் ஆவலில் வந்து நிற்கும் போது.
வானில் மின்னல் அடித்தது.திடீரென்று இடி இடித்தது போன்ற பெரிய சப்தம் கேட்டது.
ம்ம்ம்..... ம்ம்ம்ம்.....
அந்த இருட்டில் மஹா காளியின் குகை கோயிலில் இருந்து வளையல் சப்தம் கேட்டு கொண்டே இருந்தது.
கல கலவென்று சிரிக்கும் சிரிப்பொலி
அண்ணே..... அண்ணே.....
ஆகாயம் முட்டுமோ என்ற அளவுக்கு உயர்ந்து நிற்கும் இரண்டு கல் தூண்கள் அவற்றில் இரும்பு சங்கலியால் பிணைக்கப்பட்ட கல் துருஞ்சி சேகு ஏறிய
பலகையால் ஊஞ்சல் அமைத்து இருந்தார்கள்.
அந்த ஊஞ்சல் தானாகவே அது
ஆடிக்கொண்டு இருக்கும்.
இதை பக்கத்தில் கோயிலை ஒட்டி இருக்கும் விவசாயம் செய்துள்ள விவசாயிகள். தாங்கள் போட்டு இருக்கும், கரும்பு, வாழை, கடலை நெல் போன்ற பயிர் களை அழிக்கும் காட்டுப் பன்றி, காட்டு எருமை போன்ற வற்றில் இருந்து பயிர்கள், வெள்ளாண்மை யை சாகு படி செய்யும் வரை காப்பாற்ற.
வயல்களில் குடிசை போட்டு காவல் இரவில் இருப்பார்கள். அவர்கள் இந்த காளிக் கோயிலில் ஊஞ்சல் ஆடுவதும் முனிஸ்வரர் வெள்ளைக் குதிரையில் மஹா காளியை ஒவ்வொரு அம்மாவாசை வந்து பேட்டி கொடுத்து விட்டு தான் போவார்.
L
ஹெரா சைத்தான் கி அவிலியாத்... தும்க்கு தெரியாது.... பைசா... கொடுத்து சொன்ன வேலை செய்யாமல் நம்பில்கி போலீஸ்சில் மாட்ட வச்சிட்டான்.அந்த வக்கீல் மட்டும் வரல என்றால் அந்த போலீஸ் நாய் என்ன அந்த ரூமில் வைத்து அடிச்சே கொன்னு இருப்பான்.
கியா கமலா பாய் இதர் ஆயினா...
சுவ்வர் (பன்னி )பையன் போலீஸலே மாட்டி இருக்கிறான்.
நாளைக்கு போலீஸ் பின்னுற பின்னில்எல்லா உண்மையும் கொட்டப் போறான்.
இரவில் அந்த அடர்ந்த காட்டில் நடந்தது என்ன?
அந்த ரகுவரன் பாடியும் மஞ்சுபாய் பாடியும் என்ன ஆச்சு?
எரிந்து போய் விட்டதா?
அங்கே பிணத்தை பெட்ரோல் ஊறறி கொல்ல நினைக்கும் போது. மகேந்திரனை.கூர்மையான ஈட்டியால் கொலை செய்தது யாரு?
ஹாஸ்பிடலில் இருந்த போஸ்ட் மர்ட்டம் செய்த நம்பர் 111, 112, பிரிஜர் பாக்ஸ் சென்ற மாதம் பத்தாம் தேதி. ஞாயிற்றுக் கிழமை அம்மாவாசை அன்று சரியாக இரவு பணியிரண்டு மணிக்கு. கள்ள சாவியே பயன் படுத்தி யார் யார் அந்த இரண்டு பிணங்களையும் கடத்திக் கொண்டு போய் என்ன செய்து இருப்பார்கள்.
போலீஸ் நாய் ஜில்கி பெங்களூருவில் இருந்து வர வழைத்தும் ஒன்னும் பிரயோஜனம் இல்லை.
அது யாரையும் பிடிக்க வில்லை.
வீண்.
நாளைக்கு எட்டாம் நம்பர் செல்லில் இருக்கும் செங்கண்ணன் கோர்ட் வந்து வாக்கு மூலம் கொடுத்து விட்டால். யார் யார் மாட்டப்போறாங்களோ!
கண்டிப்பா
முதலாவது சங்கரன் பாளையம் மிட்டா மிரசு சின்ன ஜமீன் சங்கரன்
இரண்டாவது மோதிலால் சேட்
மூன்றாவது
மோதிலால் சேட்ஜி கூர்க்கா வெங்கடேஷன்.
நாலாவது சங்கரன் தோட்டத்தில் வேலை
ஆள் அவன் கரிவாயன் காந்த சாமி.
ஐந்தாவது மகி என்கின்ற மகேந்திரன் அவன் இறந்து விட்டான்.
போலீஸ் விசாரணை ரொம்ப தீவிரம் அந்த புண்ணாக்கு என்று பெயரெடுத்த எஸ். பி. முத்துரங்கம் மேல் ஆயிரம் குற்ற சாட்டு. அதனால் அவன் மேல மேலே பெட்டிஷன் மேல பெட்டிசன் போட்டு ரொம்ப கெட்டப் பெயர் உண்டு பண்ணி விட்டார்கள்.
நிறைய லஞ்சம் வாங்கி கேஸ் போடாமல் விட்டு விடுவதாக குற்ற சாட்டு அவன் மேல இருப்பதால். அவன் கழுத்து வரை எல்லோர் மீதும் கோபம் வைத்து இருந்தான்.
அவன் கீழே வேலை செய்யும் டி. எஸ். பி முதல் எஸ் . ஐ. முருகன் முதல் எல்லா கான்ஸ்டப்பில். ரெகார்ட் கிளார் வரை எதிரிகள் அவனுக்கு.
சொந்தத்துல சூனியம் வைத்தது போல் அவன் கீழே வேலை செய்பவர்கள் எல்லாம் அவனுக்கு எதிரிகள் ஆகி விட்டனர்.
அதனால ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சி கடைசியில் மனுஷனை கடிக்கிற நிலைமைக்கு வந்து இருந்தான் அவன்.
இப்போ அவன் இருக்கிற நிலையில் யாரு மாட்டினார்களும் உண்டு இல்லை என்று செய்து விடும் நிலையில் இருந்தான் அவன்..
அவன் மேல நல்ல அபிப்ராயம் இல்லாத தால் சென்னை கியூ பிரென்ச்சில் இருந்து ஸ்பெஷல் ஆஃபீஸ்ர் கே. டி. கலிமுல்லா வை ராயகோட்டை B2. போலீஸ் ஸ்டேஷன்னுக்கு மாற்றி இருப்பது அவனுக்கு இன்னும் ஆத்திரம்.
ஏம்ப்பா நாயர் இன்றைக்கு இந்த சேட்டு பொண்ணு மஞ்சுபாய் கொலை வழக்கு விசாரணை செய்ய சென்னையில் இருந்து ஸ்பெஷல் ஆஃபீஸ்ர் வருவது எல்லோருக்கும் சந்தோசம். அவன் ஒருவனைத் தவிர.
மஞ்சுபாய் ரகுநாதன் கொலை வழக்கு இப்போ விசுப ரூபம் எடுக்க ஆரம்பித்து விட்டது.
டிக்.டிக்.. கடியாரம் காலை எட்டு மணியை காட்டியது.
சென்னையில் இருந்து சரியா ஒன்பது மணிக்கு ஸ்டேஷன் வந்து விடுவதாக சென்னை கியூ பிரென்ச்சில் இருந்து போன் வந்தது.
ஸ்டேஷன் அல்லோல் கல்லோல் பட்டுக் கொண்டு இருந்தது.
என்னைய்யா பாய் ஆஃபீஸ்ர் மணி பத்து ஆகிறது. இன்னும் வர வில்லை. ஆபீஸ்க்கு மேல இருந்து போன் எதாவது வந்ததா?
இல்லைங்க சார் இது வரை அப்படி எந்த போனும் வர வில்லை.
சார் ரொம்ப தாகம இருக்கு இங்கே தண்ணீர் கிடைக்குமா?
போட அங்கே போய் கேளு கொடுப்பாங்க இந்த தண்ணி உப்பு தண்ணி குடிக்க முடியாது.
யாருப்பா வேண்டும்..?
அந்த பெரிய ஜமீன் சங்கரன் பாளையத்தின் மிட்ட மிராசு சங்கரன் உடைய பெரிய பங்களா வீடு அது.
வெளியே பெரிய கேட் இருந்தது. அதன் பக்கத்தில் ஒரு சின்ன கேட். பெரிய கேட் எப்போதும் பெரிய பூட்டு போட்டு
மூடியே இருக்கும். கார் வந்தால் மட்டுமே அந்த கேட் திறப்பார்கள். மற்ற நேரத்தில் மூடியே இருக்கும். சின்ன கேட் டூ வீலர்கள் போய் வருகின்ற அளவுக்கு இருக்கும்.
எங்கே போனான் இந்த வெங்கி.. நாய்.. நாய்....
ஒரு இடத்தில் இருந்து உருப்படியா ஒரு வேலை செய்ய மாட்டான் என்று திட்டிக் கொண்டே வெளியில் வந்த சங்கரன்.
யாரு டா நீ எதுக்கு இங்கே வந்தே.. உன்னை யாரு உள்ளேவிட்டது. அந்த நாதர் நாய் உன்னை உள்ளே விட்டு விட்டு எங்கே போய் தொலைந்து போனான்.
இரவு சரியாக பணியிரண்டு மணி.. அந்த ஆறாம் நம்பர் செல்லில் முனகல் சப்தம் மெல்ல மெல்ல வந்துக் கொண்டு இருந்தது.
செல்லின் கதவு மூடியே இருந்தது. கருப்பாக ஒரு உருவம் நின்று கீழே சாய்ந்து கிடந்த செங்கண்ணனை அவன் இதய துடிப்பு அடங்கும் வரை நின்று இருந்தது.
மற்ற அறையில் கைய்திகள் எல்லோரும் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.
ஜெயில் வார்டன் அப்படியே மேஜையில் சாய்ந்து தூங்கிக் கொண்டு இருந்தான்.
பக்கத்தில் வாட்ச் மேன் கீழே பாய் போட்டு படுத்து இருந்தான்.
பாவம் அவனுக்கு இரண்டு நாட்களாக லூஸ் மோஷன் போய் இப்போ தான் கொஞ்சம் தேறி இருந்தான். லீவு இல்லை என்பதால் அவன் இரவு டூட்டிக்கு வந்து இருந்தான்.
அவன் டூட்டிக்கு நேற்று தான் வந்தான்
பிங்கி பாங்கி பாங்கி.......
ரயில் போவது போல் தடக் தடக் தடக் என்ற சவுண்ட் வந்து கொண்டு இருந்தது
என்ன சவுண்ட் எங்கிருந்து வந்தது?
யாரு சொல்வது?
காலையில் வழக்கம் போல் கைதிகள் எல்லோரும் டீ குடிக்க ஆறு மணிக்கு வராண்டா வில் வந்து லைன் போட்டு நிற்க வேண்டும்
கையில் ஆளுக்கு ஒரு டம்ளர் வைத்து இருக்க வேண்டும். குக் ஒவ்வொரு கைதியின் அருகில் வர டீ அவரகள் டம்ளரில் ஊற்றி விட்டு போய் விடுவான். இது வழக்கமாக நடக்கிறது.
அன்று திங்கட்கிழமை காலை பத்து மணிக்கு செங்கண்ணன் கோர்ட்டில் வாக்கு மூலம் கொடுக்க வேண்டும்.
அவன் கொடுக்கிற வாக்கு மூலத்தை வைத்து அந்த மஞ்சு பாய், ரகுவரன், மகேந்திரன் எப்படி கொலை செய்தார்கள். யாரெல்லாம் சேர்ந்து செய்தார்கள். யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள். யாரெல்லாம் அந்த கொலைக்கு பின்னால் சம்மந்தப்பட்டு இருக்கிறார்கள் என்ற எல்லா விஷயமும் வெளி வரும்.
அதற்கு பின்ன தான் தெரியும் இந்த கொலைக்கு யாரெல்லாம் சம்மந்தப் பட்டு இருந்தார்களோ அவர்கள் இன்று கைது செய்து விடுவார்கள்..
இன்று இந்த கேஸ் விசாரணை செய்ய சென்னை கியூ பிரென்ச் இல் இருந்து கே. டி. கலிமுல்லா ஸ்பெஷல் ஆஃபீஸ்ர் வராதாக சொல்லி எல்லோரும் எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஏன்யா எங்க அட்டெண்டென்ஸ் சொல்லுங்க நாயக் அட்டெண்டென்ஸ் எடுக்க ஒரு ஆள் மட்டும் இல்லை.
நாயக் ஒவ்வொரு செல்லில் இருந்து எல்லோரும் வந்து விட்டார்கள்..
ஆறாம் நம்பர் செல்லில் இருந்த செங்கண்ணன் மட்டும் வர வில்லை.
சார்... அந்த வார்டன் அவரை கூப்பிடுங்க குக் கிரித்தரன் போய் வார்டனை கூப்பிட்டு வந்து அந்த ஆறாம் நம்பர் செல்லுக்கு போக.
அண்ணே.... அம்மே.... ஐயோ. ம்ம்ம் அவன் செத்து போய் கிடக்கிறான். கத்திக்கொண்டே ஓடி செல்லை விட்டு வெளியே ஓடி வந்து நின்று விட்டான்.
அவன் கை கால்கள் நடுங்கிக் கொண்டு இருந்தது.
என்னைய்யா சொல்றே..
ம்ம்ம் நீங்கள் போய் பாருங்கள் சார்..
ஆமா செல்லின் கதவு வழக்கம் போல் பூட்டு போட்டு மூடியே இருந்தது. திறந்து க் கொண்டு தான் போனார்கள்.
ரத்தம்... ஒரே ரத்தம் ஆடு அறுத்தால் எப்படி போகுமோ அப்படி அந்த அறையில் ஆறாக ஓடி இருந்தது.
செங்கண்ணன் அவன் மர்ம உறுப்பை அறுத்து கொலை செய்து விட்டு போய் இருக்கிறார்கள்.
இது எப்படி நடந்தது?
யாரு கொலை செய்தது?
மர்ம உறுப்பு அறுத்து எடுத்து போய் என்ன செய்து இருப்பார்கள்?
எல்லோரும் நடுங்கி கொண்டு இருந்தார்கள்.
தகவல் காற்றுத் தீப் போல் பரவியது.
நான்காவது கொலை..... மிகவும் மோசமாக நடந்து இருக்கிறது?
=====================================
#872
20,050
50
: 20,000
1
5 (1 )
S. Naffia Gowser
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50