JUNE 10th - JULY 10th
திகில்......
வந்து விடு அருகே
=================
பிங்கி.....பாங்கி..பாங்கி.
அன்று இரவெல்லாம் தூக்கம் ஏது?
கண்கள் இரண்டு தூக்கம் இல்லாததால் கோவைப் பழம் போல் சிவந்த போய் இருந்தது.
போலீஸ்...
போலீஸ்...
ஏன்யா இப்படி ஒரு பொண்ணை நடு காட்டில் கொண்டு போய் பெட்ரோல் ஊற்றி கொன்று இருக்காங்களே எவ்வளவு தைரியம் அவங்களு...
சார்.... சார்... இங்கே வாங்க சார்.. இங்கே ஒரு பிணம் பாதி எரிஞ்சு கிடக்கு சார்...
என்னயா சொல்லேற ஆம்ம சார்..
ஒய்.. ஆமா... இது ஒரு பையன் போல் இருக்கு.
அது ஒரு பொண்ணு..
ஓ புரிஞ்சி போச்சுயா... இவங்க ரெண்டு பேரையும் திட்டம் போட்டு இங்கே கடத்தி வந்து பெட்ரோல் ஊற்றி கொலை செய்து இருக்கங்க.
ஸ்டேஷனுக்கு போன் போடுய்யா..
போஸ்ட் மார்டடத்துக்கு ஏற்பாடு செய்வாங்க.
வளைந்து நெளிந்து போன அந்த பாதை
தார் ரோடில் இருந்து காட்டின் ஒரு பகுதிக்கு அழைத்துப் போனது.
ஜீப் ரோடில் நிறுத்தி விட்டு உள்ளே நடந்து தான் போக வேண்டும்.
முள் புதர்கள் மண்டி கிடந்த இடம் பக்கத்தில் ஒரு சின்ன குட்டை அங்கே மழை பெய்து இரு ந்ததால்
தண்ணீர் தேங்கி இருந்தது.
வழியில் இரு புறமும் கார முள்ளுயும், லண்டன் முள்ளும் சீனி முள்ளும் மண்டி கிடந்தது
அங்கே ஆட்கள் யாரும் ரொம்ப சீக்கிரம் எளிதில் போய் விட முடியாது. ஒதுங்கி ஒதுங்கி தான் போக வேண்டும். இல்லை என்றால் முட்கள் உடம்பை கிழித்து விடும்.
ஆமா கொலையாளிகள் சரியான இடத்தில் தான் கொண்டு வந்து கொலை செய்து விட்டு பாடியை பெட்ரோல் ஊற்றி எரித்து இருக்கிறார்கள்.
டாமர்..... டாமர்......
பிணவறை....நம்பர் 111. பாக்ஸ்
மெல்ல மெல்ல ஆடியது...
அந்த ருமில்... மொத்த பிணங்கள் 28. இருக்கு
அதில் 20. பிணங்கள் விபத்தில் மாட்டியும், தூக்கு மாட்டியும், ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதும்,
இப்படி ஒவ்வொரு காரணங்களுக்காக கொலை செய்யப்பட்ட இறந்து போனது. அதோடு இல்லாமல் புதியதாக கற்பழித்து கொன்ற கேஸ் ஆறு அதில் பாதி எரிந்து போன நிலையில் இரண்டு.
அந்த ரூமிழ் இருந்து பிணங்கள் கெட்டு போகாமல் அழுகி போகாமல் இருக்க.
பாக்ஸில் ஃப்ரீஜர் பாக்ஸ்..
ஐஸ்...
பத பட்ட பாக்ஸ் அதில் கெமிகல்ஸ் போட்டு பிளாஸ்டிக் கவரில் பேக்கிங் செய்தும் ட்ரைவில் வைத்து இருந்தார்கள்.
ஒவ்வொரு பெட்டியிலும் பிணத்தின் பெயர் நம்பர் விவரம் எழுதி ஒட்டி இருந்தார்கள்.
111. பெட்டி மஞ்சுபாய்
வயது 21.
கேஸ் நம்பர் 40
அட்ரஸ்..
அப்பா பெயர் மோத்தி லால்.
அம்மா. கமலா பாய்
ஊர். ராயகோட்டை.
திகில்..
திக்.... திக் வினாடிகள் நகரந்தது.
இரவு 12. மணி
அந்த பிணவறையில் யாரும் இல்லை.
வெளியே இருந்த பிணறவரை பக்கத்தில் புங்க மரத்தில் இருந்து இரண்டு கோட்டான்கள் அலறியது.
அங்கே மரத்தின் கிளையில் அமர்ந்து இருந்த காக்கங்கள் இறகை பட பட வென்று அடித்துக் கொண்டு அந்த குமிரட்டிலும் பறந்தது.
ஐயோ..... ஐயோ..... ஐயோ...
யாரோ அந்த பிணவறையின் வாசலில் அந்த நேரத்தில் உட்கார்ந்து புலம்பி புலம்பி அழுதுக் கொண்டு இருந்தார்கள்.
அது ஒரு பெண்ணின் குரல் தான் சந்தேகமே இல்லை.
ஆனால் உருவம் மட்டுமே கருப்பாக தெரிந்து கொண்டு இருந்தது.
மோதிலால்... சேட் ஜி...
உங்க பெயர்...மோதிலால் சேட்.
மஞ்சு பாய் உங்களுக்கு என்ன ஆகணும்.
பொண்ணு சார் ஜி
என்ன தொழில் பண்ணுரே.
நகை கடை வச்சி இருக்கிறேன்.
இந்த பொண்ணு உங்க பொண்ணு தானே!?
கிய்யாவோ.. சாப்..
அது என்ன பொண்ணு தான்.
அடேய் சேட்..
உனக்கு இனொரு பொண்டாட்டி இருக்கு என்று சொன்னாங்க.
ஆமாங்க சார்..
அது என் பெரிய சம்சாரம் பொண்ணு.
அப்போ இந்த பொண்ணுக்கும் உங்க ரெண்டாவது சம்சாரத்துக்கும் மாற்றாந்தாய் கொடுமை உண்டா?
அரே... சாப் அப்படி ஒன்னும் இல்லை சாப்.
தனக்கு பிள்ளை இல்லை என்று இந்த பிள்ளையை தன் வயிற்றில் பிறந்த குழந்தையை விட அதிகமாக தான் பாசம் வைத்து வளர்த்து வந்துச்சு.
ஆமா பொண்ணு காணாம போனது நீ போலீஸில் புகார் கொடுத்தியா?
இல்லை சாப்.. நாங்களே தேடினோம்.
இது அசிங்கமா இருக்கும் என்று.
எதுக்கு அசிங்கமா இருக்கும்?
பொண்ணு காணவில்லை என்று சொன்னா
அதுக்கு தான்.
அப்போ ஓடி போச்சு அப்படி தானே சொல்றே சேட்..
ம்ம்ம்
அப்படி நஹி..
பின்ன எப்படி?
உனக்கு அந்த பையனோடு உன் பொண்ணுக்கு பழக்கம் இருந்து இருப்பது உனக்கு. ரொம்ப நாளைக்கு முன்னாடியே தெரியும்.
கரெக்ட்...
இல்லை சாப்...
இதோ பாரு உன் பொண்ணு அந்த பையனோடு பழக்கறது உனக்கு பிடிக்கல அதனால் நீ ஆளை வைத்து அவனை கொலை செய்து விடீர்கள்கள்.
ஹெற.. ராம்...ஹரே பகுவான் இது எல்லாம் பொய்.
ஒழுங்கு மரியாதையாக உண்மையை சொல்லி விட்டாய் என்றால் உன்னை விட்டு விடுகிறேன். இல்லை என்றால் fir போட்டு உள்ளே வைச்சு விடுவேன்.
போலீஸ் கிட்டேயும் டாக்டர் கிட்டேயும், வக்கீல் கிட்டேயும் பொய் சொல்ல கூடாது தெரியுமா?
அது நம்பில்க்கு தெரியும் சாப்.
நான் என் பொண்ணு போன கவலையில் இருக்குறேன். நீங்கள் என்ன சாப் இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்கிறீங்க.
நான் இப்போ போலாமா சாப்...
போகலாம்... போகலாம்... நாங்க கேட்கிற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொன்னா அனுப்பி விடுகிறேன்.
ஹச்சா சாப்....
டிக்.. டிக்... டிக்..
வெளியே.... அந்த பிணவையில் ஆடிய அந்த 111 நம்பர் பெட்டியில் இருந்து ஒரு முனகல் சப்தம்...
பொழுது விடிந்தது அந்த மூடி இருந்த கதவு தாங்கவே திறந்து கொண்டது.
அடேய் பாவி... நீயா..
ஆமாம் முதலாளி உங்களின் அறை கதவை அம்மா தான் திறந்து விட்டு இப்போ போனாங்க.
அவங்க போகும் போது நான் வந்தேன்.
உனக்கு இங்கே யார் வர சொன்னது அங்கே கேட்டில் தானே நீ இருக்கனும்
அதான் சரியா போச்சு.
உங்களை தேடி இரண்டு பேர் வந்தாங்க முதலாளி. நான் நீங்கள் தூங்கிட்டு இருப்பிங்க என்று சொன்னேன்.
அவங்க அப்படியா.. சரி அவங்க எப்போ எழுவார்கள் என்று கேட்க நான் ஒன்பது மணிக்கு மேல் எழுவாங்க என்று சொன்னேன். சரி அப்போ வந்து பார்க்கிறோம் என்று போய் விட்டார்கள்.
ஓ.
அப்படியா அவங்க இதற்கு முன்னே இங்கு வந்து இருக்காங்களா?
இல்லை முதலாளி.
அவங்களிடம் நான் நீங்கள் யாரு? எங்கே இருந்து வர்றேங்க என்று கேட்டேன்.
அதற்கு நாங்க போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வருகிறோம்.
அவரை பார்க்க.
என்று சொல்லிவிட்டு. அவர் எழுந்தா வெளியே எங்கேயும் அவரை போக வேண்டாம் என்று என்னை உங்களிடம் சொல்ல சொன்னார்கள்.
முக்கியமா ஏதோ விஷயம். விசாரணை செய்ய வேண்டும் என்று சொன்னாங்க.
ஓ....
சரி நீ போ என்று சொன்னதும்.
கிளம்பி விட்டான் அவனை வர சொன்னான்.
டிக்.. டிக்... டிக்....
பயம் அவனுக்கு வந்து விட்டது போலீஸ்க்கு எல்லா விஷயமும் தெரிந்து விட்டு இருக்குமோ?
ஒரு வேளை கைது செய்து கூப்பிட்டு போக தான் வந்து இருப்பாங்களா?
நடுங்கி கொண்டு இருந்தான் சங்கரன்.
உடேனே போன் எடுத்து வக்கீல் ஜெயக்குமாருக்கு போன் செய்து உடனே கிளம்பி அவனை வர சொன்னான் சங்கரன்.
ராத்திரி நேரம் எப்படி போகும்? ஒவ்வொரு நிமிடமும் மரண பயம்
பேய் பயம்?
பகலில் போலீஸ் பயம்?
எந்த நேரத்தில் எது நடக்குமோ?
எப்போ நடக்குமோ?
எப்படி ஆகுமோ?
அந்த இடுகாட்டில் இருந்து பாதி அழுகி போன ஒரு உருவம் அவனை நோக்கி வருவது போல் அவனுக்கு தெரியும்?
அந்த பொண்ணு கதறி கதறி காலைப் பிடித்து அழுவது போல் அவன் கண்களுக்கு தெரியும்?
எட்டி அவள் முகத்தைப் பார்த்து உதைத்தது அவனை இப்போ குலை நடுங்க செய்கிறது.
எவ்ளோ பெரிய பாவம் செய்து விட்டான்...
அவன் மனசாட்சியே அவனுக்கு எதிரியாகி விட்டது.
ரகுவை அவன் பெற்ற பிள்ளை என்று கூட நினைக்காமல் இப்படி சொல்பவர்கள் பேச்சை கேட்டு அந்த பையன் கண் முன்னாடியே...
ச்சி ...
அவனுக்கு எப்படி இந்த அசிங்கம் செய்ய மனசு வந்தது.
செய்தது மட்டும் இல்லாமல் காசு கொடுத்து வேலை செய்பவர்களையும் அப்படி செய்ய வைத்து.
ரத்தம் சொட்ட சொட்ட கொடூரமாக அந்த அசிங்கம் செய்ய துணிச்சல் வந்தது.
காட்டுக்குள்ள தேடி தேடி பார்க்க போலீஸ் காரர்களுக்கு நிறைய தடயங்கள் கிடைத்த்துக்கொண்டே இருந்தது.
எல்லாம் எடுத்து பாதுகாப்பாக பிளாஸ்டிக் பையில் போட்டு பத்திரமா வைத்துக் கொண்டாள்
இன்ஸ்பெக்டர் ராணிமேரி.
நொறுங்கிய வளையல், கழுத்தில் போட்டு இருந்த முத்து மாலை.
சீங்கி முள்ளில் அகப்பட்டு கிழிந்து போன சுடிதார் சிவப்பு துணி. கொஞ்சம் தூரத்தில். கிடந்த வெள்ளை நிறத்தில் துப்புட்டா.
ஒரு செருப்பு எரிந்து போன நிலையில் இன்னொன்று முழுமையாக இருந்தது.
கீழே ரத்தம் அப்படியே உறைந்துதுபோய் காய்ந்த நிலையில் இருந்தது. அதற்கும் கொஞ்சம் தள்ளி பெட்ரோல் காலி கேன் இருந்தது.
இந்த பள்ளிப் பாளையத்தில் இது போன்ற ஒரே நேரத்தில் இரண்டு பேரை கொலை செய்து விட்டு பெட்ரோல் ஊற்றி கொளுத்தி இருப்பது இது தான் முதல் முறை.
டிக்...டிக்..
என்ன சொல்றான் அந்த நகை கடை சேட்
உண்மை சொல்ல மாட்டேன் என்கிறான்.
சார் இவனை இப்படி வச்சி விசாரணை செய்தால் ஒன்னும் சரி வராது.
விசாரணை செய்யுற விதத்தில் செய்யணும். கேட்கிற விதத்தில் கேட்கணும்
கிளியே... கிளியே.... பழம். போடுன்னா பழம் போடாது.
அது எச்சம் தான் போடும்...
அதுக்கு நம்ம முருகன் எஸ் ஐ சார் தான் சரி.
லீவு போட்டு இருந்தவர் நாளைக்கு தான் வந்து டூட்டியில் ஜாயின் பண்ண போறாரு..
அவர்
கைவசம் இருக்கிற மந்திரம் போட்டு இவங்களை கவனிச்சா எல்லா உண்மையும் கக்கி விடுகிறான்...
அப்போது எஸ். பி. முத்து ரங்கம் ஒரு போலீஸ் ஜீபிள் இருந்து இறங்கி வந்துக் கொண்டு இருந்தார்.
=======≠======================
#860
Current Rank
18,383
Points
Reader Points 50
Editor Points : 18,333
1 readers have supported this story
Ratings & Reviews 5 (1 Ratings)
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points