JUNE 10th - JULY 10th
என்றைக்கும் இல்லாத அதிசயமாய் அந்த நான்கு ரோடுகள் சேர்ந்த இடத்தில் வழக்கத்தைவிட அதிகமாக கூட்டம் நின்று கொண்டிருந்ததை அந்த வழியாக வந்த சீதா கூட்டத்தை விலக்கி சென்று பார்த்த பொழுது அவளுடைய மூச்சே உறைந்து விடும் போலிருந்தது.
ஒரு விபத்து. கவிழ்ந்த வேனை ஒரு கூட்டம் நிறுத்த முயற்சித்தது. ஜன்னலில் இருந்து வலுக்கட்டாயமாய் வெளியே தொங்கிக் கொண்டிருந்தனர் சிலர். உள்ளேயும் போக முடியாமலும், வெளியேயும் வர முடியாமலும்.
உற்றுப் பார்த்ததில் அது வேறு யாருமல்ல, அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி வசிக்கும் குடும்பம். இப்பொழுதுதான் கல்யாணமான புதுமண தம்பதிகள். வேண்டுதலுக்காக திருப்பதி செல்லவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தவர்கள். திரும்பும் பொழுது விபத்து ஏற்பட்டு இருந்திருக்கலாம் என்று மனதில் தோன்றியது.
விசாரித்ததில் சீதா நினைத்தது போல் தான். வீடு நெருங்க பத்து நிமிடம் தான். அதற்குள் இப்படி விபத்து. முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்த புதுமண தம்பதிகளுக்கு பயங்கரமாக அடிபட்டு விட்டதாக பேசிக்கொண்டிருந்தார்கள்.
கூட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்ததே ஒழிய அடுத்து என்ன செய்யவேண்டும் என்று சற்று கூட யோசனை இல்லாமல் அவர்கள் தங்களுடைய மொபைலில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
சமயம் பார்த்து கைபேசியில் சார்ஜ் முற்றிலும் தீர்ந்து விட்டிருந்தது. சீதா அருகிலிருந்த பி. சி. ஓ. விற்கு சென்று வரிசையாக கடகட என்று ஒரு நாலைந்து நம்பருக்கு அடித்துவிட்டு காத்திருந்தாள் ஆம்புலன்ஸ் உட்பட.
அருகில் இருந்த நகை கடைக்கு சென்று கையில் இருந்த மோதிரத்தை கழற்றினாள். சீதா அப்படித்தான். பிரதிபலம் பார்க்காத மனுஷி. உதவி என்றாள் முதலாய் இருப்பாள்.
அவள் வாய் மட்டும் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
அடுத்த அரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து அடிபட்ட அவர்கள் அனைவரையும் அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார்கள். தான் வந்து கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனரிடம் ஆம்புலன்சை தொடரச் சொன்னாள் சீதா. ஆஸ்பத்திரி முன் ஆம்புலன்ஸ் நின்றது.
பரபரவென மருத்துவமனை வராண்டாவில் அட்டெண்டர்களும் நர்சுகளும் கூடினார்கள்.
"யாராவது வாலன்டீர்ஸ் இருக்கீங்களாம்மா? " என்று ஒரு நர்ஸ் கேட்டபொழுது சீதா முன்வந்தாள்.
"இன்னும் நாலு பேருக்கு அடிபட்டிருக்கு.... நான் அவங்க அட்மிட் ஆற வரைக்கும் இருக்கேன் மா..."
" உங்களுக்கு இந்த குடும்பத்தை தெரியுமா? "
" அது இப்ப அவசியம் இல்லம்மா... அவங்க எல்லாரையும் நல்லபடியா காப்பாத்தணும்... இப்ப தான் சமீபத்தில் திருமணம் நடந்தது என்பது மட்டும் எனக்கு தெரியும்.. "
" அவங்க வீட்டுக்கு தகவல் சொல்ல முடியுமா? "
" நீங்க முதல் உதவி எல்லாம் முடிச்சிடுங்க அதுக்கு அப்புறமா நான் போய் அதை சொல்லிட்டு வரேன்....அது ஒன்னும் பிரச்சனை இல்லை... "
" சரிம்மா"என்று சொல்லி விட்டு உள்ளே நகர்ந்தாள் அந்த நர்ஸ்.
------
தலை கிறு கிறுவென்று சுற்றியது சீதாவிற்கு. எழுந்துசென்று கேன்டீனில் ஒரு நல்ல ஏலக்காய் டீயை குடித்தாள்.
இந்த ஆஸ்பத்திரி மிகவும் பழக்கமான ஒன்றுதான் சீதாவிற்கு. மிக சமீபத்தில் அவர்களுடைய சொந்தக்காரர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத பொழுது இங்கு வந்து தங்கி சீதா உதவி செய்து கொண்டிருந்தாள்.
டீ குடித்துவிட்டு வராண்டாவில் இருந்த பெஞ்சில் வந்து அமர்ந்து கொண்டாள்.
அந்த நர்ஸ் இவளை பார்த்து அருகில் வந்தாள்.
" நல்ல வேலைம்மா.... மாப்பிள்ளையும் பெண்ணும் அந்த பக்கம் உட்கார்ந்து இருந்ததால...
ஒரு சின்ன பிராக்சர்....அவங்க ரெண்டு பேரும் தப்பிச்சுட்டாங்க....ஆனா பெண்ணோட அம்மா தான் இறந்துட்டாங்க....இன்னும் ரெண்டு பேருக்கு பலத்த அடி" சொல்லிவிட்டு நிறுத்தினாள் அந்த நர்ஸ்.
"அட பாவமே...வேற உதவி வேணுமாம்மா "என்றாள் சீதா அந்த நர்ஸை பார்த்து.
"ரத்தம் தேவைப்படும் சில நோயாளிக்கு " என்று சொல்லிகொண்டிருக்கும் போதே அடுத்த ஆம்புலன்ஸ் வந்து நின்றது.
------
இனியும் தாமதிப்பதில் அர்த்தம் இல்லை என முடிவெடுத்து சீதா அருகிலிருந்த ஒருவரின் கைபேசியை தேவைக்கான காரணம் சொல்லி கேட்க மறுப்பின்றி அவர் கொடுத்ததும் அதை வாங்கி அவள் பெண்ணை அழைத்து விஷயத்தை சொன்னாள்.
"இப்ப நான் வர நிலைலை இல்ல மோகனா, நீ அவங்க வீட்டுக்கு போய்ட்டு அங்கேந்து கூப்பிடு...நான் இன்னொத்தர் மொபைல் லேந்து பேசிட்டிருக்கேன்.. என்னோடது சார்ஜ் போட்டுட்டு கூப்பிடறேன்..." போன் கொடுத்துதவிய அவருக்கு கண்களால் நன்றி சொல்லிவிட்டு நகர்ந்தாள் சீதா.
சற்று நேரத்தில் அவர்கள் வீட்டிலிருந்து அடித்துப் புரண்டு ஓடி வந்தார்கள். சீதா சொன்னாள் என்ன நடந்தது என்று.
"சரி.. நாங்க வந்துட்டோம்.. இனி நீங்க போகலாம்..." சம்பிரதாயமாய் ஒரு நன்றி சொல்லிவிட்டு அவர்கள் நகர்ந்ததும் சீதாவையே பார்த்துக் கொண்டு சென்றதையும் பார்த்த நர்ஸ் சீதாவை நோக்கி வந்தாள்.
"என்னம்மா.. இவ்ளோ உதவி செஞ்சுருக்கீங்க.. மனசார ஒரு நன்றி கூட சொல்லல.."
"இல்லம்மா.. அவங்களுக்கு டென்ஷன்..தான்...வேறெதுவும் இல்லை...குடும்பமே அடிபட்டிருக்குல்ல..."
நர்சின் பக்கம் திரும்பி சீதா பர்சிலிருந்து பணம் எடுத்தாள்.
"இந்தாங்க இதுல ஆயிரம் ரூபாய் இருக்கு... அந்த ஆம்புலன்ஸ் பாய்ஸ்... உங்களுக்கு... ஹெல்ப் பண்ண எல்லாருக்கும் குடும்மா... பிளட் குரூப் சொல்லுங்க.. நான் வாட்ஸாப்ப் மூலமா ரத்தம் அரேன்ஜ்.. பண்ணிட்டு மெசேஜ் அனுப்பறேன்..."
"உங்களை மாதிரி மனுஷங்க... கிடைக்கிறது அபூர்வம்..."அந்த நர்ஸ் சீதாவின் கைகளை பிடித்து நன்றி சொல்லவும் வெளியில் ஒரு அட்டெண்டெர் பரபரப்புடன் வந்து கொண்டிருந்தான்.
"அக்கா.. என்ன.. இது.. பேசிட்டு...இரண்டு பேருக்கு ஏபி நெகடிவ் ரத்தம் வேணுமாம்...இப்போதைக்கு இரண்டு யூனிட் இருக்கு... பேஷண்ட் கிரிடிகலேந்து தப்பிச்சுட்டாரு ஆனா ரத்தம் இன்னும் வேணும்......ஆமாம்..
இந்த அக்கா என்ன குரூப்....?"
"ஏபி நெகடிவ்.. தம்பி...ஆனா இப்ப தான் மலேரியா ஜுரம் வந்துச்சு தம்பி.. இதோ நான் அரை மணில ஏற்பாடு பண்ணிடறேன்...இங்க கொஞ்சம் சார்ஜ் போட்டுக்கட்டுமா?"
"தாராளமாக்கா "
கைபேசியை எடுத்தாள் சீதா.
-------
சார்ஜ் ஏறிகொண்டிருந்தது. சீதாவின் மனதிலும் சமீபத்திய கசப்பான நிகழ்வுகளும், இன்றைக்கு நடந்ததும் சேர்ந்து ஒடிக் கொண்டிருந்தது.
எவ்வளவு தான் காலம் மாறிக் கொண்டிருந்தாலும் இந்த விதவைகள் படும் பாடு சொல்லி முடிவதில்லை. அதுவும் அபார்ட்மெண்ட்டில் குடியிருப்பவர்கள் பாடு படு திண்டாட்டம்.
கணவர் இறந்து பதினைந்து நாட்கள் கழித்து காரியமெல்லாம் முடிந்து அலுவலகம் கிளம்ப வீட்டை விட்டு வெளி வந்தபோது எரித்து விடுவது போல் பார்த்த மனிதர்கள்.
கடவுளே அவங்களுக்கு போற காரியம் வெற்றியடையனும். திரும்பி நின்று கொண்டு இஷ்ட தெய்வத்தை வேண்டியது இப்போதும் நினைவில்.
ஆண்களுக்கு எந்த சகுனமும் கிடையாது. விடோயர் என்ற வார்த்தை மட்டும். மற்றபடி அவர்களுக்கு சாங்கியம் கிடையாது. அவர்கள் எதிரில் வந்தால் எதுவும் சகுனத் தடை இல்லை. என்ன என்ன வார்த்தைகள் நாக்கா அது? ஒரு முறை பால் எடுக்க கீழே இறங்கி வந்த போது காதில் நாராசமாய் விழுந்த வார்த்தைகள். சீதாவிற்கு இப்போதும் கண்களில் குளம் கட்டியது.
"என்னங்க...இங்க வாங்க..அப்புறம் கிளம்பலாம்...அவ புருஷன் போயி இரண்டு மாசம் கூட ஆகல...பச்சை கம்ம.... " என்று அவள் முடிப்பதற்குள் பின்னாலிருந்து அவள் மகன் அம்மாவின் வாயை மூடினான்.
"அம்மா இன்டீசென்டா பேசாதம்மா.. மானமே போகுது... எப்படி இப்படி ஒரு கட் த்ரோடா பேசற... சே...கொஞ்சம் கூட மானர்ஸ் இல்லை... நீங்க எதிர்ல வந்தப்ப எப்போதும் நல்லது நடக்குதா.... இல்லை நீங்க இப்படியே வாழ்ந்துடுவீங்களா..?"
இந்த தலைமுறை எவ்வளவோ பரவாயில்லை. நிறைய நிகழ்ச்சிகள் மனதை பாதித்தது தன் தலைமுறை தான் இன்னும் வளரவில்லை என்பது வெகு உண்மை.
கோவிலில் அப்படித்தான் அன்று நடந்தது. ஆண்டாள் திருக்கல்யாணத்தன்று "சுமங் களிகள் வாங்கோ.. சீர் எடுக்கணும்...பாலிகை கரைக்கணும்.. இங்க வந்து நில்லுங்க.."
சில விதவைகள் தூணோடு ஒட்டி கூனிக் குறுகி நின்றனர். என்னவோ விதவை ஆனது அவர்கள் விரும்பி ஆனது போல்.
இப்படி நிறைய. கல்யாணம் பத்திரிகை வீட்டில் பையனிடம் கொடுத்துவிட்டு சும்மா இல்லாமல் "பரத் கல்யாணத்துக்கு வந்துடு உன் பொண்டாட்டியை கூட்டுட்டு " மறைமுகமாய் செய்தி. சீதா வர வேண்டாம் என்று.
சாலையில் நடந்து செல்லுகையில் "ஆத்தி என்னா இது மெட்டி கழட்டாம... என் அக்கா பொண்ணு முப்பதுல அறுத்துச்சு... பொட்டு நகை போடக்கூடாதுன்னுட்டு
அது மாமியார்...நீங்க என்ன மெட்டி போட்டுட்டு.."
சீதாக்கு சொல்ல முடியவில்லை. மெட்டி போடுவதால் கருப்பை சம்மந்தப்பட்ட நோய் எதுவும் வராது என்று. விதவை ஆகிவிட்டால் மாதவிடாய் நின்று விடுமா என்ன? அதற்கு தெரியுமா அவள் விதவை என்று. எத்தனை பின் தங்கிய சமுதாயம்.
ஒன்று சொல்ல வேண்டும். இந்த தலைமுறை விழித்துக்கொண்டு விட்டது. நிறைய மறுமணம். இனி என்றும் எல்லாரும் எழுபது வயது வரை சுமங்கலிகள் தான். நினைக்கவே சந்தோஷமாக இருந்தது.
இப்போ தெல்லாம் கனவில் கூட சகுனம் சம்பந்தப்பட்ட கனவு தான். யாரோ மாடியை விட்டு இறங்கி வர ஓடிச்சென்று கீழே ஒளிந்து கொள்வது போல். கிண்டலாய் யாரோ பார்த்து சிரிப்பது போல். கணவன் வந்து அவ்வப்போது நான் இறக்கவில்லை என்று கனவில் பொய் காட்டி போவது போல.
சார்ஜ் ஏறி விட்டது. வாட்சப் பார்க்கையில் ரத்தம் இப்போதைக்கு இல்லை என்று செய்தி. எழுந்து செல்ல எத்தனிக்கையில் வார்ட்பாய் வந்து கொண்டிருந்தான்.
"அக்கா கிடைச்சுதா ?"
"இல்லைப்பா..."
"என்ன செய்யலாம்?"
சீதா நர்ஸை கூப்பிட்டச் சொன்னாள். அவளிடம் நடந்ததை சொன்னாள்.
"அவர்களுக்கு நானே ரத்தம் கொடுப்பேன். ஆனால்.. அவர்களை பொறுத்து... நான் சகுனத்தடை... நான் ரத்தம் கொடுப்பது தெரிய வந்து ஏதானும் ஆகிவிட்டால்... அதகளம் செய்வார்கள்... சொல்லுங்க வேணும்னா நான் முக்காடு போட்டுட்டு முகம் தெரியாம கொடுக்கறேன்..."சீதா நிறுத்தினாள்.
"உங்களுக்கு மலேரியா இருக்குன்னு சொன்னது "
"பொய்.. அதையே அவங்க கிட்ட சொல்லிடுங்க.. வெளிலேந்து வரவழச்சுதா சொல்லுங்க... இப்ப உயிர் தான் முக்கியம்... ரத்த்துக்கு மேல் ஜாதி, கீழ் ஜாதி, நிறம், பேதம், விதவை, சுமங்கலி இதெல்லாம் தெரியாது... உயிர் காக்கும் அவ்ளோ தான்.. நீங்க என் ரத்த அழுத்தம் செக் பண்ணுங்க..."சீதா அருகிலிருந்த கருப்பு அங்கியை போர்த்தி, முகம் மறைத்து கட்டிலில் படுத்தாள்.
"நர்ஸ்... ரத்தம் கிடைச்சுதா..? இவங்க யாரு... என் சகோதரனுக்கு நிச்சயம் ரத்தம் தேவை...ப்ளீஸ் " சற்று முன் விபத்தில் மாட்டிய குடும்பம் அது என அறிந்ததும் கோபம் மறைத்து பேசினாள் நர்ஸ்.
"இவங்க....பாத்திமா பேகம்... உங்க ஜாதி இல்லை....ரத்தம் எடுத்துப்பீங்களா.. அப்புறம் இப்ப தான் ஒரு டெட் பாடி போச்சு.... சகுனம்... பார்ப்பீங்களா.... சில பேர் அப்படி இருக்காங்க....ஜாதி... மதம்... னு, குலம், கோத்திரம்னும் கூட பாப்பாங்க...."
"அதெல்லாம் இல்லை... ரத்தம் யார் கொடுத்தா என்ன?..பாத்திமா மேடம்... ரொம்ப நன்றி உங்களுக்கு....சமயத்துக்கு உதவினீங்க..."
முக்காட்டிற்குள் இருந்த சீதாவை பார்த்து அர்த்தம் பொதிந்து சிரித்தாள் நர்ஸ்.
சீதா பேகமும் தான்.
&&&&&&&
#173
41,947
2,780
: 39,167
57
4.9 (57 )
m.jayamohansrirajan
உங்களின் படித்தேன், கதை மிகவும் அருமையாக உள்ளது.நான் உங்களுக்கு 5 star கொடுத்துள்ளேன் .படித்து பார்க்கும் பொழுது நன்றாக இருந்தாலும் நிறைய பேர் ரேட்டிங்ஸ் தருவதில்லை. என்னுடைய கதையின் பெயர் லீகார் ஒரே ஒரு கார். இந்த கதைக்கு ஆதரவு தாருங்கள். ஒரு எழுத்தாளராக பெருந்தன்மையுடன் எனது கதைக்கு ரேட்டிங்ஸ் தாருங்கள் நன்றி MJMS !! கிளிக் செய்து ஆதரவு தாருங்கள் https://bit.ly/3caKy2F
ANNAMALAI
நல்ல கதை!! வாழ்த்துக்கள்!! எனது சிறுகதைகள் கீழ் உள்ள லிங்க் இல் உள்ளன. படித்த பின் தாங்கள் மதிப்பீட்டை கொடுக்கவும். https://notionpress.com/author/566324
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50