இந்த பொல்லாத உலகத்திலே..

கற்பனை
4.9 out of 5 (380 )

இந்த பொல்லாத உலகத்திலே..!

உறவுகள்..!

“நானும் உங்கிட்ட ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்கேன் வர்ஷினி, நீ கேக்கமாட்டேங்குற, give me a reason.., ஏன் இன்னொரு குழந்தை வேண்டாம்ன்னு சொல்ற..?” என்று வர்ஷினியிடம் கேட்டான் இளமதி.

“ப்ப்ளீஸ் இளா.., மறுபடியும் ஆரம்பிக்காதே, ப்ளீஸ்.., நான் ஏற்கனவே சொல்லிட்டேன் உங்கிட்ட, நம்ம இன்னொரு குழந்தை பெத்துக்கிட்டோம்னா இவனை பாத்துக்கமுடியாது..,” என்றாள் வர்ஷினி.

“இங்க பாரு.., இவன இவ்ளோ நாள நாம பாத்துக்கலையா?, அதே மாறி கண்டிப்பா பாத்துப்போம் வர்ஸு…” என்றான் இளமதி.

“See இப்பவே நாம சிரமப்பட்றோம் இதுல இன்னும் ஒன்னு பெத்துகிட்டு எப்படி பா..? அதுமட்டும் இல்லாம அவனும் இவன மாறியே, பிறந்துட்டான்னா, நான் என்ன செய்வேன்..?” என்றபடி கண் கலங்கினாள் வர்ஷினி.

“ஏண்டி இப்படியெல்லாம் பேசுற” என்றபடி அவளை அணைத்தான் இளமதி. இருவரின் கண்ணீரும் ஒன்றாக கலந்து கலங்கியது. அந்த கண்ணீரில் வலி இருந்தது... விடைதெரியாத அந்த விழிகளில்.., வலிகள்… வழியை தேடியது...!

“மா.., ம்மா.., மா..,” என்று சிறுவனின் குரல் கேட்க.

“இதோ வந்துட்டேன் கண்ணா..,” என்றபடி குரல் வந்த திசை நோக்கி ஓடினாள் வர்ஷினி .

“மா.,, ம்மா.., மா.., ம்மா..,” என்று பதறினான் சிறுவன் எழில்.

“ஒன்னு இல்ல கண்ணா.., ஒன்னு இல்ல..,” என்றபடி எழிலை அணைத்தாள் வர்ஷினி. எழிலின் அரை டிரௌசர் நனைந்து இருந்தது.

“மறுபடியும் சூச்சு.., போய்டியா கண்ணா…” என்றபடி அவனை எடுத்துக்கொண்டு பாத்ரூம்கு சென்றாள்.

“இல்ல.., இல்ல.., அங்க வேண்டாம், அங்க வேண்டாம்..,” என்று கதறினான் எழில்.

“அங்க அந்த பச்சை மனுஷன் இருக்கான் மா, வேண்டா.., வேண்டா..,” னு அலறினான்.

“அப்பா அவனை அடிச்சுருவாரு டா” என்றபடி கண் கலங்கினாள் வர்ஷினி.

வெது வெதுவென இருந்த தண்ணீரில், வர்ஷினியின் கண்ணீரும் கலக்க.., எழிலுக்கு சுத்தம் செய்து, அங்கே மாட்டி இருந்த துண்டை எடுத்து துடைத்தாள். புதியதாய் ஒரு துணியை எடுத்து அணிவித்தாள்.

அங்கே வந்த இளமதியை பார்த்து “அப்பா அவனை அடிச்சாரு..,” என்றபடி தன் வாயில் வழிந்த உமிழ்நீர் தாடை முழுவதும் வழிய சிரித்தான் எழில்.

“ஆமாண்டா ராஜா” என்றே அணைத்தான் இளமதி. எழில் சிரித்தான், அவனின் வாயில் இருந்து விழுந்த எச்சில் இளமதியின் சட்டையை வட்டமிட்டது.

“டாய்..,” என்றபடி துடைத்துவிட்டான் இளமதி.

பால்கணியில் நின்றபடி மெல்லிய காற்றை ரசித்தான் எழில். அங்கே இருந்த அந்த Bamboo Chimes அவனின் ரசணைக்கு இசை அமைத்தது காற்றின் மொழியில்.. அருகில் இருந்த அந்த நீல நிற ட்ரீம் கேட்ச்சர்கள் அந்த இசைக்கு ஏற்ப நடனம் ஆடியது...!

“இந்தாங்க..,” என்று ஒரு தட்டில் சுடச்சுட பஜ்ஜியை நீட்டினாள் வர்ஷினி.

“இது பாப்பாக்கு.., வா..,” என்று எழிலை எடுத்தாள்.

“பாப்பாக்கு புடுச்ச ஸ்வீட் பஜ்ஜி” என்று ஊட்டிவிட்டு, அவனின் நெற்றியில் முத்தமிட்டாள் வர்ஷினி.

“நம்ம எப்படியாச்சும் கனடா போயிடலாம்” என்றான் இளமதி.

“ஏற்கனவே விசாதான் ரிஜெக்ட் ஆயிருச்சசே ..!” என்றாள் வர்ஷினி.

“இந்த முறை கிடைக்கும், நம்ம குமார் மாமா ஹோட்டலுக்கு வேலைக்கு போறோம்னு சொல்லி அப்ளை பண்ணா போதும். அவரும் விசாக்கு லெட்டர் தரேன்னு சொல்லிட்டாரு. அங்கே போனவாச்சும் எழிலுக்கு ஒரு change இருக்கும் வர்ஸு…”

“நானும் அதைத்தான் நம்புறேன், அங்கே சப்போர்ட் குரூப்பாச்சும் கிடைக்கும். முக்கியமா பக்கத்துவீட்டு பிரஷர் இருக்காது” என்றாள் வர்ஷினி.

“இத பத்தி சொன்னாலும் இங்க இருக்குறவங்களுக்கு புரியமாட்டேங்குது.., இந்தப் பக்கம் வீட்டுல இருக்கற சசி அக்கா, அவனுக்கு மந்திரிச்சா சரியாகிடும்னு சொல்லுறாங்க, அந்த சைடு பாக்கியம், ஏதோ நம்மள தீண்டத்தகாதவங்க மாறி பாக்குறா…” என்றாள் வர்ஷினி.

“விடு வர்ஸு, அவுங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோதான்” என்றான் இளமதி.

தூரத்தில் இருந்த வெண்ணிறப் புறாவை பார்த்து “ஹா ஹா ஹா.., ” என்று சத்தமாக சிரித்தான் எழில்.

“உனக்கு வேணுமா?” என்றாள் வர்ஷினி.

வெண்ணிறப் புறா

மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்தது இந்திய அரசு என்று தந்தி டிவியில் செய்தி ஓடியது.

“நாளைக்கு எழிலுக்கு பர்த்டே, 12 வயசு ஆகப்போகுது, 8 வயசுல இருந்து சிரமப்படுறான்…” என்றபடி அழுதாள் வர்ஷினி.

“ப்ளீஸ் வர்ஸு ஸ்டாப் ட் .”

“இதெல்லாம் உனக்கு புரியாது..,” என்றபடி விருட் என்று சமையல் அறைக்குள் சென்றாள் வர்ஷினி .

“வர்ஷினி… வர்ஷினி…” என்றபடி இளமதி அவளின் பின்னே செல்லவும் , அவனின் மொபைல் சிணுங்கியது. அதை எடுத்தவன் “ஹலோ…,” என்றான்,

“ஹலோ சார், this is டாக்டர் வருண்,”

“குட் மார்னிங் வருண் சார்,”

“எப்படி இருக்கான் எழில்? நேத்து கொஞ்சம் agressive aa இருந்தான் சார், இன்னைக்கு இன்னும் எந்திரிக்கல.”

“ஒகே ஒகே, அது இருக்கும், இப்போ நம்ம மாத்திரை மாற்றினோம்ல, It will be fine” என்றார் டாக்டர் வருண்.

“இங்க டாக்டர் பாலாவுக்கு கோவிட் பாசிட்டிவ் சோ இன்னும் 14 டேஸ்க்கு அவர் இல்ல.., சோ, கௌன்சிலிங் எல்லாம் ஆன்லைன் தான் சார். உங்ககிட்ட டாக்டர் ருத்ரா பேசுவாங்க” என்றார் டாக்டர் வருண்.

“சார்.., இந்த ப்ராப்ளம்க்கு எப்படி போன் கௌன்சிலிங்?”

“பண்ணிக்கலாம் சார். டாக்டர் ருத்ரா என்னோட ஜூனியர் தான், கேஸ் ஸ்டடி பண்ணியாச்சு, so she will take care don't worry,”

“என்ன வருண் சொல்றீங்க, நான் அப்போ நேர்ல வரவேண்டாம்மா?” என்றான் பதட்டத்துடன் இளமதி.

“ஆமா சார் government norms ஒண்ணுமே இல்ல, இந்த மாறி patients எப்படி பாக்கப்போறோம்னு தெரியல சார், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க, டாக்டர் பாலா, ரெடி ஆனவுடன் எல்லாம் பாத்துக்கலாம்” என்றார் வருண்.

“சார் நீங்களே சொன்னீங்க இவனுக்கு வந்த ‘early on-set childhood schizophrenia, இது ஒரு rare condition, correctaa பாக்கணும்னு,’ இப்போ நீங்க போன்ல கௌன்சிலிங்னு சொல்றீங்க, tablet தீர்ந்தா நாங்க எங்க போய் வாங்க சார்...?” என்றான் பதட்டத்தின் உச்சக்கட்டத்தில்.

“Dont panic இளமதி, நான் deliver பன்றேன். கொஞ்ச நாள் போகட்டும் we will do something” என்றார் வருண் .

“எனக்கு ஒன்னும் புரியல வருண்” என்றபடி போன் கட் செய்த இளமதி அப்படியே ஒடிஞ்சு போயி கீழே உட்கார்ந்தான்.

டிங்… டாங்…, டிங்… டாங்…. என்று காலிங் பெல் அடிக்க, யார் என்று பார்த்தான் இளமதி,

“சார் உங்களுக்கு கொஞ்ச நேரத்துல RT-PCR எடுக்கப்போறோம், கீழ் floor la ரெண்டு வீட்ல எல்லாருக்கும் positive. So இந்த பிளாக் fulla எடுக்குறோம்” என்றார்.

“சார் நாங்க எங்கயுமே போகல சார்” என்றான் இளமதி,

“இருக்கட்டும் சார் இது government ஆர்டர். ஒன்னும் இருக்காது கவலைப்படாதீங்க…” என்றார் நீல நிற உடை அணிந்த அந்த ஹெல்த் கேர் department நபர்.

“சார் இந்த பிளாக் fulla இரும்பு கட்டுங்க. ரெண்டு floor positive.”

அந்த ப்ளாக்கை மூடியபடி அந்த தகரத்தை கட்டினார்கள். வெள்ளைநிற powderai தூவினார்கள். ‘தனிமைப்படுத்தப்பட்ட பகுதி’ என்ற வாசகத்தை தங்கிய அட்டை அங்கே மாட்டடப்பட்டது. இருந்தாலும் எழிலை பார்க்க வந்தது அந்த வெண்ணிறப் புறா..!!!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதி

“ஹலோ வாட்ச்மேன், ஆர்டர் பண்ண மளிகை பொருள் வந்தா மேல கொண்டு வாங்க, அன்னைக்கு மாதிரி வீச வேண்டாம், எல்லாம் உடைஞ்சுருச்சு.., ப்ளீஸ்… ” என்றாள் வர்ஷினி,

“மேடம் உங்களுக்கு கொரோனா நாங்க வர்ரதே பெருசு…” என்றான் வாட்ச்மேன்.

“ஐயோ.., கீழ இருக்கறவங்களுக்குத் தான் கொரோனா, எங்களுக்கு இல்ல.., ஆனா, நீங்க fullaa மறைச்சுட்டீங்க” என்றாள் வர்ஷினி கோபத்துடன்.

“மேடம் நீங்க சொல்றீங்க இருந்தாலும் எங்களுக்கு பயமா இருக்கே…” என்றார் வாட்ச்மேன்.

யாரையும் கேட்காமல், பொழுது போய்க் கொண்டிருந்தது, கொரோனா மட்டும் போகிற மாதிரி தெரியவில்லை. பல உயிர்களை காவு வாங்கியது. பதட்டம், தனிமை, பயம் மட்டுமே துணையாய் இருக்க. இதைப் பற்றி எதுவுமே தெரியாமல் அறையின் ஜன்னலில் பார்த்தவாறு அந்த வெண்ணிறப் புறாவை தேடினான் எழில்.

“ஹலோ இளமதி medicine வந்துச்சா?” என்று கேட்டார் டாக்டர் ருத்ரா இளமதியின் அலைபேசியில்.

“மேடம் நீங்களே சொல்லுங்க.., எப்படி போன்ல கௌன்ஸ்லிங் குடுப்பீங்க.., இந்த மாறி விசயத்திற்கு?”

“தெரியும் சார் கஷ்டம் தான். பட் உங்களுக்கு நாங்க கௌன்ஸ்லிங் தருவோம். நீங்க அத follow பண்ணுங்க” என்றாள் டாக்டர் ருத்ரா.

“நேத்து நைட் ரொம்ப பயந்துட்டான். மறுபடியும், அந்த க்ரீன் மேன்.., க்ரீன் மேன் னு கத்தினான். நாங்க என்ன செய்வோம்? இந்த hallucination போகல இன்னும்” என்றான் இளமதி.

“சார் இப்போ கொஞ்சம் dosage மாத்திருக்கோம். நீங்க கரெக்ட்டா குடுங்க கொஞ்சம் குறையும். டேக் ஹிம் ஃபார் எ வாக்” என்றாள் ருத்ரா.

“மேடம் இங்க எங்களை தனிமைப் படுத்திருக்காங்க.”

“உங்களுக்கு பாசிட்டிவா..?.”

“இல்லை மேடம்.., இருந்தாலும் இந்த பிளாக் fulla மூடிட்டாங்க…” என்றான் இளமதி.

“ரொம்ப கொடும்மை சார், நான் வேணும்னா பேசி பாக்கறேன்” என்றாள் ருத்ரா.

“ஒன்னும் ஒர்க் ஆகல நாங்களும் நெரய பேசியாச்சு” என்றான் இளமதி.

“அவனுக்கு birth daykku கேக் கூட வாங்கமுடியல” என்றபடி கண் கலங்கினான்.

“சார் இட் happens ப்ளீஸ் ரிலாக்ஸ்” என்றாள் ருத்ரா. “நான் திரும்ப call பன்றேன் நம்ம கௌன்ஸ்லிங் session fix பண்ணிக்கலாம்.”

தொலைபேசி ஒலிக்க எடுத்து “ஹலோ” என்றாள் வர்ஷினி

“இங்க பாருங்க மேடம், நீங்க வெளிய வராதீங்க, இங்க போலீஸ் வந்துருக்கு.”

“நாங்க வரல.., வாட்ச்மேன்.” என்றாள் வர்ஷினி தொலைபேசியில்.

“இருந்தாலும் சொல்றேன், இங்கே எல்லாத்தையும் மீறி வரவங்கள அடிக்கறாங்க.., பாத்துக்கோங்க அப்பறம் நாங்க சொல்லலைனு வேண்டாம் , உங்களுக்கு வேற கொரோனா.”

“வாட்ச்மேன் எத்தனை தடவ சொல்றது எங்களுக்கு பாசிட்டிவ் வரல.., ப்ளீஸ்…, புரிஞ்சுக்கோங்க…” என்றபடி ஃபோனை கட் செய்தாள்.

சில நேரங்களில்…

‘லவ் யு’ என்றபடி நெற்றியில் முத்தமிட்டாள் வர்ஷினி,

That’s a dirty kissssss…, இன்னையோட 15 years ஆச்சு என்றபடி அவளின் உதட்டில் முத்தமிட்டான் இளமதி.

“நாம எல்லாருக்கும் ஒரு example, live-in லைப் ல 15 years ஒண்ணா இருக்க முடியும்னு” என்றான் இளமதி.

“நீ இருக்கியே….” என்றபடி அவனை இறுக்கி அணைத்து முத்தமிட்டாள் வர்ஷினி….

இருவரும் கண்களை மூடிக்கொண்டு அந்த முத்தத்தில் காதலை உணர்ந்து, அதை பரிமாறியும் கொண்டார்கள்.

முத்தத்தின் ஈரம் முகம் முழுக்க.., இருவரும் உடல் நெளிக்க.., பரவியது… உடலின் உஷ்ணத்தில் கூட அந்த ஈரம் காயவில்லை. இந்த உலகம் மறந்து இருவரும் காம வெள்ளத்தில், காதலின் கோலத்தில் கட்டிலில் வண்ணம் தீட்டினார்கள். அங்கே காம்பைத் தேடும் குழந்தை போல தேடினான் இளமதி. அவனின் நாக்கு வட்டமிட.., வர்ஷினியின் வாசனையை சுவாசித்தபடி அவனை மறந்து உச்சத்தில் மிதந்தான். அவனை தள்ளிய வாறு வர்ஷினி அவனின் மேல் ஏறி அவனின் நெஞ்சை மெதுவாக கடிக்க, இளமதி அவளின் கூந்தல் வருடி சுவாசிக்க.., கூந்தலின் வாசத்தில் வசமானான் அவன். வர்ஷினியும் இப்போது தன்னை மறந்து உச்சத்தில் மிதந்தாள்... அவளின் நகம் அவனின் நெஞ்சில் ஓவியம் வரைய, இருவரும் உச்சத்தின் மிச்சத்தில்.., முனங்களாக இசை மீட்டினார்கள்.

இருவரின் உடல் வெப்பத்தில் வியர்வையின் ஈரம் சூழ. வர்ஷினி அவனின் நெஞ்சில் சாய்ந்தாள்… முத்தமிட்டாள். அவனோ அவளின் கூந்தலை வருடியவாறு “லவ் யு” என்று முத்தமிட்டான். மீ டூ என்றபடி அழுத்தமாக முத்தமிட்டாள் வர்ஷினி .

“இன்னும் எழில் எந்திரிக்கலை, நேத்து கொஞ்சம் aggression இல்ல” என்றாள் வர்ஷினி.

வர்ஷினி எழிலை சென்று பார்த்தாள். உறங்கிக்கொண்டிருந்தான். அவள் சென்று குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்தாள்.

“சரி நான் குளிக்கிறேன்” என்றபடி பாத்ரூம்குள் சென்றான் இளமதி.

குளிச்சுட்டு வந்து, அந்த வார்ட்ரோபில் இருந்த ட்ரெஸ்ஸை தேடினான் இளமதி. “வர்ஸு…வர்ஸு…”. எங்க போனா என்று தேடினான்.

அவள் பூஜை அறையில் இருந்தாள்.

“நல்லா பிரார்த்தனை பண்ணு” என்றபடி சென்றான். வார்ட்ரோபில் இருந்த டிரஸ்சை எடுத்து அணிந்து கொண்டான். மொபைல் போன் ஒலிக்க, எடுத்துக் கொண்டு பால்கணிக்கு சென்றான் இளமதி.

பால்கணிக்கு சென்றவன் “எழில்.., எழில்..,” என்று திடீரென கதறினான். எழில் எப்படியோ மாடியிலிருந்து கீழே சென்றுவிட்டான். அங்கே சில போலீஸ் அதிகாரிகள் நின்று கொண்டிருந்தார்கள். இளமதியின் சத்தம் கேட்க போலீசார் பார்த்தார்கள். அதில் ஒருவர் பெரிய உருட்டு கட்டையை எடுத்தவாறு ஓடி வந்தார்.

“எழில் நில்லு..,” என்று கத்தினான் இளமதி.

இளமதியின் சத்தம் கேட்டு பூஜை அறையில் இருந்து எழுந்து ஓடிவந்தாள் வர்ஷினி “என்ன ஆச்சு என்று கேட்டபடி..,”

இளமதி வீட்டின் திறந்திருந்த கதவைத் தாண்டி ஓடினான்.., வர்ஷினியும் அவன் பின்னே ஓடினாள்.., என்ன ஆச்சு என்று கேட்டுக் கொண்டே..,

கலங்கியபடி.. கதறியபடி.. பதறியபடி.. இருவரும் அந்த தகரத்தின் ஓரத்தில் இருந்த சிறிய வழியில் நுழைந்து வெளியேறினார்கள். அந்த தகரத்தின் கூர்மை வர்ஷினியின் கைகளை கீறியது. ரத்தம் வெளியே எட்டி பார்க்க, அதைக் கூட பொருட்படுத்தாமல் ஓடினாள் எழில்… எழில்… என்று கத்தியவாரே..,

அங்கே இருந்த போலீசார் எழிலை மிரட்ட. பயந்து நடுங்கிக் கொண்டிருந்த எழில் “க்ரீன் மேன்.., க்ரீன் மேன்.., க்ரீன் மேன்…..” என்று புலம்பினான்.

வர்ஷினியும் இளமதியும் ஓடிப் போய் அவனை தூக்கினார்கள். இருவரின் கண்களின் கண்ணீர் துளிகள் எழிலின் கன்னங்களில் வட்டமிட்டது.

“ஏங்க மேடம்…, குழந்தையை பாத்துக்க மாட்டிங்களா….?”

‘மனநிலை பாதிக்கப்பட்டோரைப் பற்றி இந்த லாக்டவுனில் யாருமே கவலைப்படல..,’ என்று ஒரு சமூக ஆர்வலர் முகநூலில் பதிவு செய்தார்..!

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...