நானும் என் பேனாவும் - கடைசி நாள்

கற்பனை
4.9 out of 5 (44 )

உலகத்துல பிறந்த அனைவருக்கும் ஏதோ ஒரு கனவு கண்டிப்பா இருக்கும். அதை நோக்கியவாழ்க்கைபயணத்தை யாரும் இங்கு தொடர்வதில்லை. குடும்ப சூழ்நிலையும், சமுகத்தின் மாற்றங்களாலும்நிறைவேறா கனவுகளாகவே இருக்கின்றன. தன் கனவுகளை கனவுகளில் மட்டுமே நினைத்து ஆனந்ததுயில்கொள்கின்றனர்.

என் வாழ்க்கையிலும் கனவுகள் நிறைவேறாமல் முடிந்துவிடுமோ! என்ற பயத்தில் வருடங்கள் கடந்தன. ஜன்னலின் வழியே அறை முழுவதும் நிரம்பி வழிந்த நிலவொளியில் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

அருகில் ஓர் குரல், என்ன நண்பா இரவு 12 மணிக்கு தூக்கம் இல்லாமல் எதைசிந்தித்துக்கொண்டிருகிறாய்.

சிறு பதற்றதுடனும், பயத்துடனும் சுற்று முற்றும் பார்த்தேன். ஏனென்றால் அந்த நேரத்தில் அறையில்என்னை தவிர வேற யாரும் இல்லை.

" மீண்டும் அக்குரல்" யாரை தேடுகிறாய்?

யாரு? உண்மைய சொல்லு பேயா, பிசாசா.

பேய், பிசாசு மேல் எல்லாம் நம்பிக்கை இருக்கா உனக்கு?

' இல்லை '

அப்புறம் என் பயப்படுற, பொறுமையா நீ வாசிக்கிற நூல் பக்கத்துல பாரு.

(என் மேஜையை சுற்றி எப்போதும் புத்தகங்கள் இருக்கும்)

என்னா...என்னா.... ஒன்னுமில்லேயே....

'நல்லா பாரு'

பேனா இருக்கு, அதுக்கென்ன?

நான்தான்டா பேசுறேன்..

உண்மையவா!

"ம்ம்ம்"

என்ன வேணும் உனக்கு?

பெரிய சிந்தனையில ஆழ்ந்து கிடந்த எதும் புதுக்கதைகள் எழுதப்போறியா, உதவி எதும் தேவையா...

சிறு புன்னகையுடன்.... இதுவரை எழுதுன சிறுகதைகே வாசகர்கள் இல்லை, இதுல புதுசா ஒன்னு..

இன்னைக்கு இல்லைனாலும் ஒரு எழுத்தாளனொட எழுத்து காலம் கடந்து பேசும்டா கவலைப்படாத.....

இல்லை குருவே... குருனு கூப்டுலாம்ல

'உன் இஷ்டம்'

போன வாரம் மாத இதழ்ல சிறுகதைப்போட்டி அறிவிப்பு செய்தி வந்தது. அந்தப் போட்டியோடமுடிவுநாளைக்கு தான் வெளியாகுது.

சந்தோசம் தானடா, நல்லா தான எழுதி இருக்க. அந்த சிறுகதைய நான் தான எழுதுனே, "தூரத்தேசத்து கயல்" அருமையான காதல் கதை பயப்படாத வெற்றி நமதே.....

கோடியில ஒருத்தனுக்கு தான் பிறந்த நாளும், இறந்த நாளும் ஒரே நாள்ல வரும். என்கனவோடமுடிவும், வாழ்கையொட முடிவும் ஒரே நாள்ல வரும்னு எதிர்ப்பாக்கல....

என்னோட கனவு இப்பதான் ஆரம்பம் ஆச்சு, அதுக்குள்ள முடிவும் வந்துருச்சு.

என்னாச்சு.. ஏதாச்சும் புரியுர மாதிரி பேசு...

மூளைல இரத்தக் கசிவு ஏற்பட்டு இருக்கான், அதை சரி செய்ய முடியாதுனு கேள்விப்பட்டேன்... லட்சதுலஒருத்தருக்கு தான் ஆரம்ப நிலையிலேயே மருத்துவம் பார்க்க முடியுமா. ரெண்டு நாளைக்கு முன்னாடி தான்மருத்துவமனைல பரிசோதனை செஞ்சாங்க அதோட முடிவும் நாளைக்கு தான்.

நம்மளோட வாழ்க்கைல மிகப் பெரிய இன்பமும், துன்பமும் என்னானு தெரியுமா?

சாவா முன் கூட்டியே தெரிஞ்சுக்கிறது. நாளைக்கு அதும் தெரிஞ்சுரும்.

குருவே எனக்கு ரெண்டே ரெண்டு ஆசை தான் ஒன்னு என்னோட பல நாள் எண்ணதுல இருக்கிற ' கள்ளனும்கள்ள சாராயமும்' ,' தெற்குவாசல்-1960', ' ஹிஜாப் தேவதை' இந்த நாவல்கள முழுமையா எழுதிமுடிக்கணும்.

நான் வேலை செய்ற இடம் உங்களுக்கு தெரியுமா...

ம்ம்ம்.. தெரியும்டா தெற்குவாசல் தான, அந்த சந்தன கடை..

ஆமாம், அங்க தினமும் ஒரு பொண்ண பாப்பென், ஆனா அவங்க என்ன இதுவரை நிமிர்ந்து கூடபார்த்ததுஇல்லை...

கூடிய சீக்கிரம் பேசி அவங்களுகாக எழுதுன ' தூரத்தேசத்து கயல்' என்ற கதையா பரிசா கொடுக்கணும்.


அடப்பாவி..... இந்த கதை அந்த பொண்ணுக்கா எழுதுன, கொடுக்க வேண்டிய தான மொத வேலையாஅதைசெய்..

ம்ம்.... அதுவரை நான் இருக்கணுமே...

நான் உன் கூட இருக்கிற வரைக்கும் உனக்கு எதுவும் ஆகாது, இது இவ்வளவு நாட்களா நான்எழுதுறஎழுத்துக்கள் மேல சத்தியம்.

கண்ணா... கண்ணா.....

அறையின் வெளியில் இருந்து அம்மாவின் குரல், மணி ரெண்டாகுது இன்னும் தூங்கலய...

இந்தா....... தூங்க போறேன் மா.

சரி, குருவே நான் தூங்க போறேன் காலையில முடிவோட வர்றேன், வரலனா நீயே புரிஞ்சுகோ...

குருவை அவரோட அறைல வச்சுட்டு தூங்கப் போய்டேன்.( பேனாவுக்கு நான் செஞ்ச சின்ன மரப்பெட்டி)

அனைவரும் உறங்கிடும் இரவினில் குருவிடம் என்னுடைய வாழ்க்கையில் நடந்த சில விசயங்களை பகிர்ந்துகொண்டேன். எனக்கு தெரியாதா பல விசயங்களை எழுத்துக்களில் அவர் எனக்கு கற்றுக் கொடுத்தார்.

அதிகாலையில் வீட்டு ஜன்னல் அருகே இருக்கும் மரத்தில் சிட்டுக்குருவிகள் இடைவிடாதுபாடிகொண்டிருந்தன. அந்த குரலை ரசித்து கொண்டே படுத்துக்கிடந்தேன்.

நைட்டு புல்லா என்னதான் வெட்டி முறுகிற வேலை பாகுறேனு தெர்ல, சூரியன் ....... அடிகுற வரதூங்குறஎந்திரிடா இன்னைக்கு என்னா நாலுனு தெரியும்ல.

லேசாக விழித்த படி என்னா நாலு மா...

போட்டித்தேர்வு முடிவு, ஞாபகம் இருக்கா இல்ல மறந்துட்யா.

சட்டென்று அப்போது தான் நினைவுக்கு வந்தது, அவசரமா எந்திரிச்சு நேற்று கழட்டி தூக்கி போட்டபனியன, எப்படியோ தூக்க கலகத்துல கண்டுபிடிச்சு மாட்டிடேன்.

அம்மா.... அம்மா.....

'ஏண்டா கத்துற'

காசு குடுங்க, பேப்பர் வாங்க..

மூஞ்சிய கழிவிட்டு போடா... அசிங்கமா.

வந்து பாத்துகிறேன் மா, மொத காசு குடுங்க.

இந்தா......

கடை வீதியில் அமைந்துள்ள பாய் கடைக்கு வேகமாக ஓடி, பாய் மாத இதழ் குடுங்க..

அந்த இருக்கு எடுத்துக்கப்பா..

எடுதுகிட்டென் பாய் வர்றேன், கடையை விட்டு விலகி கொஞ்சம் தள்ளி வந்து இதழின் ஒவ்வொருபக்கங்களைப்புரட்டி பார்த்தேன்.

5 வது பக்கத்தின் கீழே போட்டியின் முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தது.

ஒவ்வொரு வெற்றியாளர்களாக பார்த்து கொண்டே வந்தேன், மூன்றாவதாக என் பெயரைகண்டவுடன்இன்பம் கலந்த அதிர்ச்சி! கனவா இல்ல நிஜமா என்பது புரியாமல் தூககத்திலிருந்து தெளிச்சுஅடைந்தேன். மீண்டும் மீண்டும் அதையே பார்த்தேன் நிஜம் தான் மூன்றாவதாக உள்ளது என் பெயர் தான்கண்ணதாசன்.

சில நிமிட நேர அமைதிக்கு பிறகு தலையை நிமிர்த்தி வானை நோக்கி இயற்கைக்கு நன்றி சொல்லபதிலுக்கு வானில் இருந்து இருத்துளி என் மேல் விழுந்தது. தலையை லேசாக சாய்த்து பார்த்தேன்.

"அது மழைத்துளி அல்ல மைத்துளி".

"மீண்டும் எனக்குள் ஓர் அதிர்ச்சி"

என்னை அறியாமல் வேகமாக வீட்டுக்கு ஓடினேன், வாசலில் ரம்ஜானில் பிறைக்காக காத்திருக்கும்இஸ்லாமியர்கள் போல எனக்காக அம்மா காத்து கொண்டிருந்தாள்.

என்னடா? என்னாச்சு? இந்தா மொதல போன் பேசு, ஹாஸ்பிடல இருந்து ரெண்டு மூணு தடவை கால்பண்ணாங்க..

சரிம்மா... நான் பேசிக்கிறேன், போனா குடுங்க.

இந்தா....

சில விநாடிகளுக்கு பிறகு, சொல்லுங்க சார்..

உங்க ரிப்போர்ட் எல்லாம் பார்த்தேன், எந்த ஒரு பிரச்சனையும் இல்லை பயப்படாம இனி உங்க வாழ்க்கையவாழலாம், வாழ்த்துக்கள் நல்லதே நடக்கட்டும்.

( அது ஏற்கனவே நடந்து விட்டது என மனதில் நினைத்துக் கொண்டேன்)

'நன்றி சார் '

வாசலில் இருந்து வேகமாக அறையை நோக்கி ஓடினேன், குருவிடம் என்னுடைய வெற்றியைபகிர்ந்துகொள்ள கதவினை திறந்து அவரின் அறையை மெதுவாக திறந்தேன், அதில் நான் கண்ட காட்சிஎன்னைஒருகணம் அதிர்ச்சியாக்கியது. அதில் வெறும் சாம்பல் துகள்கள் மட்டுமே இருந்தது.

அழக்கூடாது என நினைத்த மூளையை வெற்றிக்கொண்டது போல மனதில் வைத்திருந்த நினைவுகள்கண்ணீர்துளிகளாக கண்களில் வழிந்தோடியது.

கன்னத்தை கடந்த அத்துளிகள் குருவுக்கு நன்றி சொல்ல சாயும் போது சாம்பல் மீது விழுந்தது.

வெயில் காலத்தில் மாரிக்காக காத்திருக்கும் மண் போல சாம்பல் மீது விழுந்தவுடன் கரைந்தோடியது.

பல எழுத்தாளர்களின் ஏதோ ஒரு உறவாக பேனாக்கள் இருக்கின்றன, அதன் முனையில் இருந்து வருவதுவெறும் மை அல்ல, எழுத்தாளனின் கனவு, சிந்தனை, எண்ணங்கள், உணர்வு ஆகியவற்றின் பிரதிபலிப்பு.அதைஉணரும் தருவாயில் குரு என்னைப் பிரிந்து அவரின் பழைய நண்பர்களை சந்திக்க சென்று விட்டார்.


"என் வாழ்வின் ஆதி

உங்கள் வாழ்வின் அந்தம்

உறவின் முடிவில்லா அந்தாதி"

அமைதியாக ஜன்னலின் வழியே வானத்தை பார்த்து கொண்டிருந்தேன், விண்ணிலிருந்து ஓர் குரல் " நான்இருக்குற வரைக்கும் உனக்கு எதும் ஆகாது, உன் ஆயுள் முழுவதும் உன்னை சுற்றியே இருப்பேன்"

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...