விழித்திரு ஜனங்களே...

கற்பனை
5 out of 5 (21 )

ஒரு நாள் பொழுதுவிடிந்ததும் அந்த நாள் அமைதியாக கழிய வேண்டும் என்பது அனைவரது எதிர்ப்பார்ப்பாக இருந்தாலும் அது ஒரு சிலருக்கே சாத்தியம். ஆம் இது தான் மனித வாழ்க்கை என்பது. அப்படி ஒரு நாள் பங்குனி மாதம் வீதிகளில் பல லட்சம் மக்கள் கோரிக்கைகளுடன் கோஷம் எழுப்பி எங்களுக்கு நீதி வேண்டும் என்று கூறி இரவும் பகலும் தங்களது போராட்டங்களை நடத்திவந்தனர். ஆனால் கேட்போரற்று பல வருடங்கள் கழிந்தன அவர்கள் வாழ்க்கையில். இந்த போராட்டங்களை நடத்துவதன் காரணம் என்ன? அல்லது அதன் பின்புலம் என்ன? என்பதனை கண்டறிய 5 வருடம் பின்னோக்கி செல்கிறது கதை. ஓர் அழகிய நகரத்தில் வாழும் வேறுப்பட்ட மதங்களை கொண்ட இரு குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த இரு குடும்பத்தில் இருந்து ரியா, அகிலன் என்ற இருவரும் காதலித்து வந்தனர். ஓர் அழகான காதல் ஜோடி என்றே கூறலாம். இவர்கள் பள்ளி பருவத்தில் இருந்தே ஒருவருக்கொருவர் காதலித்து வருகின்றனர். இருவரும் தமது கல்லூரி (College) வாழ்க்கையை முடித்துவிட்டு தமக்கென ஒரு வேலைவாய்ப்பையும் பெற்று திருமண வயதையும் அடைந்தனர். ஆனால் இருவரும் இரு வேறுப்பட்ட மதங்களைக்கொண்டதால் தன் வீட்டார் நம் திருமணத்திற்கு சம்மதிக்கமாட்டார்கள் என்று அவர்கள் நன்கு அறிவர். அப்படியே அவர்களது காதல் வாழ்க்கை நகர்ந்து செல்கிறது.

அந்தப்படி அவர்கள் வாழும் அந்த நகரத்தில் திருமூர்த்தி என்ற அரசியல் வாதியும் வாழ்ந்து வருகிறார். அவரது கட்சி ஆரம்பித்து 30 வருடங்கள் ஆன போதும் தன்னால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை என்ற ஆதங்கத்துடன் வாழ்ந்து வருகிறார். அவரது திட்டங்களிலும், கொள்கைகளிலும் உருதியாக இருந்த போதிலும் மக்கள் ஒரு சில காரணங்களினால் அவருக்கு வாக்களிக்க மறுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் காதலர்களின் வாழ்க்கை இன்னொரு பக்கம் கட்சித்தலைவரின் அரசியல் வாழ்க்கை என நாட்டடள் கழிகிறது. அந்த கட்சித்தலைவர் ஆட்சியை கைப்பற்றுவதற்கு சூழ்ச்சிகளையும் திட்டங்களையும் தீட்டும் அதேவேளை அனைத்து மக்களின் பெரும்பான்மை ஆதரவை எவ்வாறு பெறுவது என்று தனது தந்திர புத்தியின் மூலம் திட்டம் தீட்டுகிறார். அதே சமயத்தில் ரியா மற்றும் அகிலனின் காதல் அவர்களின் குடும்பங்களுக்கு தெரியவருகிறது. இருவரும் அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்துடன் இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த ரியாவின் தந்தை ரியாவின் காதலனான அகிலனின் வீட்டிற்கு செல்கிறார். அவர் கடும் கோபத்தில் செல்கிறார் என்ற பயத்தில் ரியாவின் வீட்டாரும் அவர் பின்னே செல்கின்றனர். இரு குடும்பத்திற்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடக்கிறது. இச் சசம்பவம் இரவு 8 மணி அளவில் நடக்கிறது. தெருவில் உள்ள அனைவரும் அறிகின்றனர். இச் சம்பவத்தினை கட்சித்தலைவரின் தொண்டன் ஒருவனும் அவதானித்துக்கொண்டிருக்கிறான். இரு குடும்பங்களுக்கு இடையில் கைக்கலப்பும் ஏற்படுகிறது. சிறிது நேரம் கழித்த பிறகு இப் பிரச்சினைத்தொடர்பில் இரு குடும்பங்களும் சுமுகமான ஒரு தீர்வை எட்டுகின்றனர். இந்த சம்பவத்தை தனது கட்சி தொண்டன் மூலம் அறிந்துக்கொள்கிறார். 10 மணி 12 மணி என நேரம் செல்கிறது சரியாக 1 மணி அளவில் ரியாவின் வீடு முற்று முழுதாக தீப்பற்றுகிறது. வீடு தீக்கிரையாகி ரியாவும் அவரது வீட்டாரைச்சேர்ந்த ஐவரும் தீயில் கருகி இறக்கின்றனர். அதிகாலை 3 மணி அளவில் நகர மக்களுக்கு தெரியவருகிறது. எனினும் நிலைமை கைமீறி சென்றதை அறிகின்றனர். உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் செல்கிறது. காவல்த்துறை அதிகாரிகள் விசாரனைகளை மேற்கொள்வதோடு சம்பவம் தொடர்பில் வாக்கமூலத்தையும் பெற்றுக்கொள்கின்றனர். நகர மக்கள் நடந்த சம்பவத்தை காவல்த்துறை அதிகாரிகளிடம் கூறுகின்றனர். அதிகாரிகள் ரியாவின் காதலனிடமும் அவனது வீட்டாரிடமும் விசாரனைகளை மேற்கொள்கின்றனர்.

இச் சம்பவத்தை ஏற்ற சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்த கட்சித்தலைவர் இதனை தனது சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார். தனது ஆட்கள் மூலம் இதையொரு மதக்கலவரமாக மாற்ற முட்படுகிறார். மதவெறியை மக்களிடையே பரப்புவதற்க்கு அவர் பயன்படுத்திய கருவி ஊடகம். ஒரு ஊடகத்தின் வாயிலாக ஒரு விடயத்தை இலகுவாக மக்களிடையே கொண்டு செல்லலாம் என்று அவர் நன்கு அறிந்து வைத்திருந்தார். ஊடகங்களுக்கு அவரால் இச் செய்தி முற்றிலும் மாறுபட்டு செல்கிறது. எப்படியெனில் ரியாவின் வீடு தீப்பற்றியதற்கு ரியாவின் காதலன் அகிலனும் அவனது வீட்டாருமே காரணம் மத மோதலின் உச்சக்கட்டத்தால் இச் சம்பவம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என ஊடகத்திற்கு தகவல் கொடுக்கப்படுகிறது. ஊடகமும் இதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் முழு நாடும் பரப்புகிறது. ஆனால் இதன் பின்புலம் அந்த அரசியல்வாதியின் சூழ்ச்சி காணப்படுகிறது என்பதை யாரும் அறியவில்லை.

இச் சம்பவம் ஊடகவாயிலாக கூறப்பட்டதும் இது நாளளவில் பேசுபொருளாக மாறுகிறது. அதுமட்டுமல்லாது பல தரப்பினரிடையே விவாதத்திற்கும் உட்படுகிறது. ஒரு பக்கம் காதலியை இழந்த காதலனின் வேதனை மறுபுரம் பொய்யாக சுமத்தப்பட்ட வழக்கால் பாதிக்கப்பட்ட காதலனின் வீட்டார் இன்னொருபுரம் தனது திட்டம் நிறைவேறப்போகிறது என்ற ஆசையுடன் இருக்கும் கட்சித்தலைவர் இவ்வாறு ஒவ்வொருவரின் சூழ்நிலையும் காணப்படுகிறது. நொடிகளும் கடக்கிறது. ஊடகங்களில் பரப்பப்பட்ட அச் செய்தியினை மக்கள் ஒரு சிலர் நமக்கு ஏன் தேவையற்ற சிந்தனை என்று ஒதுங்கிக்கொள்கின்றனர். ஒரு சிலர் இது தொடர்பில் கருத்து தெரிவிப்பதோடு நிறுத்திக்கொள்கின்றனர். சிலர் இது தொடர்பில் வெறி கொள்கின்றனர். இம் மாதிரியானோரை கட்சித்ததலைவர் திருமூர்த்தி தனது சூழ்ச்சிக்கு உள்வாங்குகின்றார். ஒரு நாள் மக்களை ஒன்று திரட்டிய ஒரு கட்சிக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறார். அதில் பல விடயங்கள் இவரால் பேசப்படுகிறது. அதில் இன, மத, மொழி பேதங்களை ஒழிக்கக்கூடாது என்று தனது மறைமுகப்பேச்சால் திறமையால் மக்ககளை கவர்கிறார். அக் கூட்டம் காலை 10 மணி அளவில் ஆரம்பமாகி 1 மணி அளவில் நிறைவுப்பெறுகிறது. அன்று மதிய போசனத்தின் போது பெறும் திட்டம் தீட்டப்படுகிறது. என்னவெனில் தனது கட்சித்தொண்டர்களையும் தனது ஆட்களையும் கூட்டி வந்து மதக்கலவரத்தை தூண்டும்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டு, அவர் ஒரு புரம் ஒதுங்கி வேடிக்கைப்பார்த்துக்கொண்டு இருக்கிறார். திட்டமிட்டப்படி கலவரமும் ஏற்படுகிறது. முதல் கட்டமாக தாக்குதல் மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த போதிலும் நேரம் செல்ல செல்ல மதுபோதையில் ஆயுதங்களை ஏந்துகின்றனர். அதனுடன் கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகின்றது.

இக் கலவரத்தில் ஒரு சிலரே பங்கெடுத்த போதிலும் கலவரத்தின் போது இரு மதத்தவருக்கிடையில் பகை இன்னும் அதிகரிக்க சில பொது மக்களும் கோபம் கொள்கின்றனர். நேரம் செல்ல செல்ல எல்லை மீறி கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை உருவாகிறது. அப் பிரதேசம் முழுவதிலும் வன்முறைகள் வெடிக்கும் நிலையில் காவல்த்துறைக்கு தகவல் செல்ல காவல்த்துறை சம்பவ இடத்திற்கு விரைகின்றனர். இந்த வன்முறைச்சம்பவத்தை ஊடகங்களும் உடனுக்குடன் அறிவிக்கும் நிலையில் உள்ளது. இந்த கலவரத்தின் போது அனேக உயிர் காவுக்கொள்ளப்படுகிறது. ஒரு கட்டத்தில் காவல் துறையால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. உடனடியாக அவ்விடத்திற்கு அதிரடிப்படை வரவழைக்கப்படுகிறது. பின் ஓரளவு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இருந்த போதிலும் அனேக சொத்து மற்றும் உயிர்ச்சேதங்கள் என்பன ஏற்பட்டுவிட்டது. அரசினால் அந்த பிரதேசம் முழுவதும் ஊரடங்கு சட்டம் பிரப்பிக்கப்படுகிறது. சில நாள் அமைதியான ஒரு சூழல் மக்கள் மத்தியில் நிலவுகிறது. சில நாள் கழித்து கலவரத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் குழுவாக இணைந்து நீதி கோரி நீதி மன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்கின்றனர். நாளளவில் எந்தவொரு சாதகமான தீர்வும் கிடைக்கவில்லை. காவல் துறையும் அலட்சியமாக செயற்படுவது அறியவந்தது. இது தொடர்பில் தம் சொந்தங்களை இழந்த மக்கள் நீதி கோரி மாபெரும் மக்கள் போராட்டத்தை நடத்துகின்றனர்.

ஆம், அந்த போராட்டம் தான் கதையின் ஆரம்பத்தில் கூறப்பட்டது.

இப்படியே நாட்கள் கழிய மக்களிடையே இச் சம்பவம் தொடர்பில் மத விவகாரத்தால் தான் ரியாவும் அவரது வீட்டாரும் கொலைச்செய்யப்பட்டார் என ஒரு பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்த ரியாவின் காதலனான அகிலனை விசாரிக்க தனது நெருங்கிய நண்பனான காவல் துறை உயர் அதிகாரியிடம் திருமூர்த்தி கூறுகிறார். கட்சித்தலைவரான திருமூர்த்தி கூறியதற்கினங்க காவல் துறை அகிலன் மற்றும் அவனது தந்தையையும் கைது செய்து விசாரிக்கின்றனர். அதாவது அக் கொலை சம்பவத்துடன் அகிலனனுக்கும் அவனது தந்தைக்கும் தொடர்புண்டு என சோடிப்பதே நோக்கமாக காணப்பட்டது. எனினும் வன்முறையால் ஏற்பட்ட அநீதி தொடர்பில் சர்வதேசம் வரை பிரச்சினை செல்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு சர்வதேசம் அரசுக்கு அழுத்தம் கொடுக்க அரசு அதனை குற்ற புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கிறது. குற்ற புலனாய்வு அதிகாரிகள் இக் கலவரம் ஏற்பட்டடதன் காரணம், அக் குடும்ப பிரச்சினையின் காரணம், ரியாவின் வீடு தீப்பற்ற காரணம் என பலகோணங்களிலும் விசாரனை செய்கிறது. 1 மாத காலமாக நடத்தப்பட்ட விசாரனையில் குற்ற புலனாய்வு பிரிவு அறிக்கை வெளியிடுகிறது. ரியாவும் குடும்பமும் இறந்ததற்கு காரணம் வீட்டில் ஏற்பட்ட மின் ஒழுக்கு என குற்ற புலனாய்வு பிரிவு சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதே சமத்தில் கலவரம் ஏற்பட காரணம் திருமூர்த்தி என்ற கட்சி தலைவர் என குற்ற புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடிக்கின்றனர்.

அதன்படி தனது இலாபத்திற்காக பொய்யான செய்தியை ஊடகம் பரப்பியதற்காக ஊடக நிறுவன தலைமை அதிகாரியையும் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யுமாறும் நிறுவனத்தை முற்றுகையிடுமாறும் திருமூர்த்தி என்ற கட்சி தலைவரையும் கலவரம் ஏற்பட காரணமாக இருந்ததை அடிப்படையாகக்கொண்டு அவரை கைது செய்யுமாறும் நீதி மன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட ரியாவின் காதலனான அகிலனையும் அவனது தந்தையையும் விடுவிக்குமாறும் தீர்ப்பளிக்கப்பட்டது. நீதி மன்ற தீர்ப்பிற்கினங்க பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நஷ்டஈட்டை வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. தனது இலாபத்திற்காக ஊடகம் செயற்பட்டதையும் அரசியலுக்காக மக்கள் பயன்படுத்தப்பட்டதையும் மக்கள் காலப்போக்கில் அறிந்து கொண்டனர். ஒற்றுமையாக வாழும் மக்களை தனது சுயநலத்திற்காக சில அந்நிய சக்திகள் பயன்படுத்தினாலும் சமூக அங்த்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் வேற்றுமையில் ஒற்றுமைக்கான வேண்டும் என்பதை பிற்காலத்தில் மக்கள் நன்கு உணர்ந்துக்கொண்டனர்.

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...