..குவளையினுள் நீர்..

ML
உண்மைக் கதைகள்
4.7 out of 5 (15 )

இருண்ட வீட்டில் சுடர்விட்டு எரியும்ஒரு விளக்கு எவ்வளவு ஒளியையும் அழகையும் தருகிறதோ அதே போல்தான் ஒரு பெண்குழந்தை இருக்கும் வீடும்.. மிகுந்த அழகையும் மகிழ்ச்சியையும் தரும்..

அதே பெண்குழந்தையின் வளர்ப்பும் வளர்ந்த விதமும் சரியில்லையென்றால் என்ன நிகழும் என்பதை உணர்த்தும் ஒரு கதைதான் குவளையினுள் நீர் ...

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு உறவினர்களால் விரும்பப்பட்டு நடத்தி வைக்கப்பட்ட கல்யாணம் என்ற பந்தத்தின் மூலம் உருவான ஒரு சொந்தமே கணவன் மனைவி சொந்தமாகும்..

இப்பந்தத்தின் மூலம் இணைந்த கருடன் கமலம் என்ற இருவரின் வாழ்க்கையும் தொடக்கத்தில் சிறப்பாக இருந்தாலும்.., நாள் பல போகப்போக குவளை உடையும் முன் சற்று ஏற்படும் சிறு விரிசல்களை போல அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன....

மாதம் சில போக கருடன் மற்றும் கமலத்திற்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது ..

அக்குழந்தைக்கு வேம்பு என பெயர் சூட்டினார்கள் .. குழந்தை பிறந்த பின்னும் கூட குழந்தையின் மீது கவனம் கொள்ளாமல் குழந்தையின் முன்பே சண்டையிட்டுக் கொண்டும், பல தவறான வார்த்தைகளை பேசிக்கொண்டும் இருந்தனர்....

இவர்கள் இருவருக்கும் இடையில் வரும் சண்டை பெரும்பாலும் அர்த்தமில்லாத ஒன்றாகவே இருக்கும் ...

இருவரில் யாருமே விட்டுக்கொடுக்காமல் இருப்பதன் மூலம் தான் இவர்களின் சண்டை ஓயாமல் நடந்து கொண்டே இருக்கும்....

இவ்வாறே சண்டையும் சச்சரவிற்கும் நடுவே வேம்பு வளர்ந்து பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தாள்...

பலரிடமும் நன்றாக பேசத்தெரியாதவளாகவும் .., தான் கொண்டு வந்த மதிய உணவு கெட்டு போனது கூட தெரியாமல் இதுதான் உணவின் சுவை என்று நினைத்து உண்ணும் குழந்தையாக இருந்தால் வேம்பு....!

வேம்புவிற்கு சில நல்லது கெட்டதுகளை சொல்லித்தராமல் , அவளது மனது எந்நிலையில் உள்ளது எனக்ககூட அறியாமல் இருந்தனர் கருடன் மற்றும் கமலம் இருவரும்....

சண்டை சச்சரவிற்கு நடுவில் வளர்ந்த வேம்பு பெற்றோர் பேசி சண்டையிடுவதைப் பார்த்து நாமும் மற்றவர்களிடம் இவர்களை போலத்தான் பேச வேண்டும் என்று நினைத்தால்.....

மறு நாள் பள்ளியில் படிக்கும் சக மாணவ மாணவிகளுடன் கோபப்படும் வகையில் கடிந்து கொண்டாள் ...

ஆசிரியரிடமும் ... பல திட்டும் சில அடியும் வாங்கும் அடாவடிக்குழந்தையாக மாற ஆரம்பித்தாள் வேம்பு ..

இவ்வாறே சில வருடம் போக....புதிய பூவாக பூத்த வேம்பு தனது எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பு சென்றால் ...

உடம்பில் ஹார்மோன்கள் குத்தாட்டம் போடும் வயதில் ஒரு ஆண் உன் சிரிப்பு அழகாக உள்ளது என்றாலே பாதி பெண்கள் வலையில் விழுந்து விடுவார்கள் என்ற நிலையில் ....

பல சண்டை மற்றும் ஆசிரியரின் திட்டிற்கு நடுவில் வளர்ந்த வேம்புவிடம் ...ஆசைக்காட்டும் வகையில் அவளது மாமா பையன் வேலன் அவளிடம் ஆறுதலாகவும் அன்பாகவும் பேசினான்...

சிறு வயதுப் பெண்ணான வேம்பு அவனது ஆசை வார்த்தையில் விலுந்தால் ..... இப்படியே இது ஒரு புறம் போக....பள்ளி படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்துவதை மறக்க ஆரம்பித்தாள் ......

வேலனுடன் அதிக நேரம் பேச காலம் ஒதுக்கினால்.... பள்ளிக்கூடம் போவதாக கூறி விட்டு வேலனுடன் வெளியிலும் சுற்ற ஆரம்பித்தாள்....

உறவினரதலால் அவர்களது வீட்டு விசேசத்தில் ஆசை வார்த்தைகளை மீறி அரவணைப்பு வரை சென்றது அக்காதல்.. அதனை பெற்றோர்கள் பார்த்து பேசி திட்டி, சத்தமிட்டு, இறுதியில் கல்யாணம் என்ற முடிவை எடுத்தனர் ..

பிஞ்சு வேம்பிற்கு அவ்வளவு மகிழ்ச்சி...! ஆசைப்பட்டவனுடன் கல்யாணம் நிகழ்வதை நினைத்து...!

வேம்புவின் கல்யாணம் முடிய அவளது பள்ளி வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது .....

சிறு வயது திருமணம் முதலில் இனிப்பு உண்பதைப் போல தித்திப்பாக இருந்தாலும் ..... இறுதியில் அதிக இனிப்பு உண்டபின் ஏற்படும் உணர்வினைபோல் ஆகிவிடும் ...

இவர்களது வாழ்க்கையும் இவ்வாறேதான் ஆயிற்று.......

இன்பமான வாழ்க்கையின் அடையாளமாய் வேம்பு அவளின் பதினாறாவது வயதில் ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தால் ...

பின்பு நடந்ததுதான் கொடுமை .......

" ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை வளர்க்க முடியாது "

என்பதற்கேற்ப வேம்புவின்

.......வாழ்க்கையில் ஒரு தடுமாற்றம் ....

....... மாமியாருடன் திண்டாட்டம் ..........

....... மச்சுனருடன் மனக்கஷ்டம் ...........

...... கணவருடன் கடும் போராட்டம் .......

குழந்தை மீதுள்ள ஆசை குழந்தை நடை பயிலும் வரை மட்டுமே இருக்க ..

கணவன் மீதுள்ள ஆசை அடுத்த குழந்தையை கருவில் சுமக்கும் வரை மட்டுமே இருக்க. ....

மாமியாரை வெறுக்க ....

மச்சுனரை ஒதுக்க ...

முதல் பிள்ளையை கவனிக்க முடியாமல் இருக்க....

பிள்ளை ரோட்டில் நல் துணியின்றி திரிய ......

வேம்பிற்கு மறுபடியும் படிக்கும் ஆசை தோன்ற ......

என வாழ்க்கை மாறியது..

சிறு வயது கருடன் கமலம் சண்டை ஒருபுறம் என்றால் ..மாமியாரிடம் சண்டையிட்டு வந்து தன் தாய் வீட்டில் இருக்கும் வேம்பு மற்றும் வேலனின் சண்டை ஒருபுறம்.....

வேம்பு இருந்த அதே இடத்திற்கு இப்பொழுது வேம்புவின் குழந்தையான விக்ரம் வந்து நிற்கின்றான் ...

இந்நிலையிலும் யாருடைய சண்டையும் குறையவில்லை....

வேம்புவிற்கு வேறொரு ஆணின் மீது காதல் ஏற்பட்டது..... காரணம் என்னவென்றால் ... வேலன் ஏற்கனவே மற்றொரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கிறான் .... கணவன் செய்யும் அதே தவறை திரும்ப அவனுக்கு செய்ய வேண்டும் என வேம்புவும் தனது வேலையை மறுபுறம் செய்து கொண்டிருக்கிறாள்

இறுதியில் விக்ரம் வீதியில் சுத்தி திரியும் நாயைப்போல ஆனான் ....

தனது தாயின் வாழ்க்கையை பின்பற்றும் வகையில் ஒரு குழந்தை தாயின் கருவில் ..,. மற்றொரு குழந்தை நடு வீதியிலும் இருக்கின்றன...............

" குவளையை விட்டு நீரானது வெளியேறினால் அது நீரின் தப்பு.....

குவளையே உடைந்து நீரானது சிந்தினால் அது குவளையின் தப்பு..... "

குறிப்புகள்....

குழந்தைகள் பெற்றோர்கள் பேசுவததையும் அவர்கள் சொல்லி தருவதையுமே கேட்டு வளர்கிறார்கள்.....

நீங்கள் செய்யும் செயல் ஒவ்வொன் றையும் வியப்பாக பார்த்தே வளகிரார்கள் ....

ஆகையால் குழந்தைகள் முன் சண்டை போடுவதையும் .. கெட்ட வார்த்தைகள் பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.....

நன்றி!

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...