JUNE 10th - JULY 10th
பரபரப்பாக எல்லோரும் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது டீக்கடை வாசலில் ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. அந்த வண்டியில் வந்தது டீக்கடை முதலாளியோ அல்லது விஐபியோ அல்ல; ஒரு சாதாரண விவசாயியும் அவரது மகன் காமராஜும்.
அவர் ஒரு சிறந்த விவசாயி மட்டுமல்ல; தேசப்பற்று கொண்டவர். அதன் காரணமாகவே தன் மகனுக்கு காமராஜ் என பெயர் சூட்டினார். அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறான்.
காமராஜ் என்ற பெயர் என்றாலே நம் எல்லோருக்கும் நினைவில் வருவது உலகமே வியந்த மாமனிதர், மக்களுக்காக வாழ்ந்த மனித தெய்வம் பெருந்தலைவர் கர்ம வீரர் காமராஜர் தான். உலகில் பணத்தின் மீது ஆசைப்படாமல் அன்று வாழ்ந்தது பெருந்தலைவர் காமராஜர். இன்று தன் மகனும் அவரை போல் சிறந்த மனிதனாக வர வேண்டும் என்பது தான் அந்த விவசாயின் ஆசை.
டீக்கடையில் இருவரும் தேனீர் அருந்தும் போது, அங்கு வந்த ஒருவரிடம் அந்த விவசாயி பணம் கொடுத்தார். காமராஜ் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது அவனை பார்த்த அவன் தந்தை, "என்ன காமராஜ் அப்படி பார்க்கிறாய்?"
"அவருக்கு எதற்கு பணம் கொடுத்தீர்கள்?"
"உன் தாத்தா அவரிடம் கடனாக பணம் வாங்கி இருந்தார். அதை அவரால் தர முடியவில்லை. அதனால் நான் தந்தேன். பிறரை ஏமாற்றுவது தவறு தானே" என்று மகனின் தோளில் கை வைத்தபடியே கேட்டார்.
தன் அப்பாவின் பதிலை கேட்ட காமராஜ், புருவத்தை சுருக்கி, "தாத்தா வாங்கிய கடன் தொகையை நீங்கள் ஏன் தருகிறீர்கள்?'' என்று கேட்டான்.
"காமராஜ்.. அப்பாவின் சொத்து மட்டும் அல்ல; கடனும் மகனை சேர்ந்தது தான். என்னை வளர்ப்பதற்காகவும், தன் மகன் யாரிடமும் கையேந்தக் கூடாது என்பதற்காகவும் நிலம் வாங்க கடன் வாங்கினார். அவருக்கு பின் அந்த நிலத்தை நான் தானே அனுபவிக்கிறேன். அதனால் நான் தானே கடனை தர வேண்டும்? அது மட்டும் இல்லை. அவரு இல்லைனா நானே இல்லை தானே! மகனுக்காக வாழும் தந்தைக்கு இது கூட செய்யவில்லை என்றால் நான் அவரின் மகனே இல்லை, நான் பிறந்ததற்கு அர்த்தமே இல்லை".
இதை கேட்ட காமராஜ் ஒன்றும் புரியாதவனாக, "அப்பா கடன் எதனால் எப்படி உருவாகுது?" என்று கேட்டான்.
"காமராஜ் ஒவ்வொருத்தருக்கும் அவர்கள் வாழ்வில் சில கடமைகள் இருக்கு. சில கடமை வீட்டுக்காக, சில கடமை நாட்டுக்காக இருக்கு. இந்தக் கடமை தான் நம் பிறப்பின் ரகசியம். சிறு வயது முதலே இந்தக் கடமைகளை தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் எல்லோரும் வாழ்ந்தால் நம் நாட்டில் வறுமையே இருக்காது. கடனும் இருக்காது."
"அதைப்பற்றி சற்று விரிவாக சொல்லுங்கள் அப்பா" என்றான் காமராஜ்.
"சொல்கிறேன் காமராஜ் நீ அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் உன்னை போன்ற இனி வரும் இளைய சமுதாயமாவது மாற்றத்தை கொண்டு வரனும். அதற்கு முன் விரலுக்கேத்த வீக்கம் எனும் பழமொழியைப் பற்றி முதலில் நீ தெரிஞ்சிக்கனும்."
"அப்படினா என்ன பா.. சொல்லுங்க தெரிந்துகொள்கிறேன்" என்று ஆர்வமாய் கேட்டான்.
"அதாவது காமராஜ்... நம் நிலைமையை உணர்ந்து நாம் வாழ வேண்டும். " கந்தை ஆனாலும் கசக்கி கட்டு" என்ற சொல்லுக்கு ஏற்றவாறு வாழ வேண்டும். அப்படி வாழாமல் ஆடம்பரமாக வாழ நினைத்தால் கடன் வரும். அதுமட்டும் இல்லை. பிறருக்காகவும் வாழ கூடாது, அப்படி வாழ்ந்தாலும் கடன் தான் உருவாகும் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது, காமராஜ் குறுக்கிட்டு அப்பா "மகாத்மா காந்தி" பிறருக்காக வாழவில்லை என்றால் எப்படி சுதந்திரம் கிடைத்திருக்கும்? "காமராஜர்" பிறருக்காக வாழவில்லை என்றால் ஏழைக்கு கல்வி என்பது கைக்கு எட்டாத தூரத்தில் இருக்கும் நிலவு போல் இருந்திருக்கும். நம் நாட்டில் இராணுவம் மற்றும் போலீஸ் உருவாக காரணம் நம்ம "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தானே, அவர் பிறருக்காக வாழாமல் இருந்திருந்தால் நம்நாடு பாதுகாப்பு இல்லாமல் என்றோ அழிந்திருக்குமே? இவர்களைப் போல் இன்னும் எண்ணற்ற தலைவர்கள் தனக்கென வாழாமல் பிறருக்காக அதாவது மக்களுக்காக வாழ்ந்தவர்கள், அது மட்டுமா நம்ம "பசும்பொன் தேவர்"அவர்க்காக வாழாமல் மக்களுக்காக தானே வாழ்ந்தார்.
இப்படி எல்லோரும் பிறர்க்காக (மக்களுக்காக) வாழ்ந்தார்களே தவிர தனக்கென வாழ வில்லையே? பிறருக்காக வாழ்ந்ததால் தான் இறந்த பின்னும் நம் எல்லோர் மனதிலும் மனித தெய்வமாக வாழ்கிறார்கள். அப்படி இருக்கையில் நீங்கள் இப்படி பிறர்க்காக வாழ கூடாது என சொல்வது தவறல்லவா?" என்றான்.
காமராஜ் பேச்சை கேட்ட அவன் தந்தை, கர்வத்தோடு (பெருமிதத்தோடு) தன் மகனின் சிந்தனை, அறிவையையும் பார்த்து சற்று வியந்தே போனார்!. காமராஜ் கேட்ட கேள்விக்கு பதில் கூற ஆரம்பித்தார் அவன் தந்தை. காமராஜ் "ஒரு சொல் இரு பொருள்" என்பது பற்றி தெரியுமா? என கேட்டார்.
"புரியவில்லை. அப்பா கொஞ்சம் தெளிவாக சொல்லுங்களேன்" என்றான் காமராஜ்.
அதாவது காமராஜ் "ஒரு சொல் இரு பொருள்" என்றால், உதாரணமாக பால் என்பது ஒரு சொல் தான். ஆனால் அந்த சொல் பசும்பாலையும் மற்றும் இனம்(பாலினம்)என இரண்டு அர்த்தங்கள் தருகின்றன. ஆடு - மிருகம், நடனம், படி - படிப்பது, மாடிப்படி, அன்னம் - உணவு, பறவை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதுபோல் இரண்டு அர்த்தமுள்ள சொற்கள் நிறைய உள்ளன. அதனால் பேசும்போது கவனமாக பேசனும் இல்லை என்றால் தவறாக புரிந்து கொள்ள நேரிடும்.பேசும் போது மட்டுமல்ல பிறர் பேசுவதை நாம் கேட்கும் போது அந்த சொல்லில் எத்தனை அர்த்தங்கள் உள்ளன என்பதை ஆராய்ந்து பதில் பேச வேண்டும். அவசரப்பட்டு ஆராயாமல் பேசினால் குழப்பமும்,பிரச்சணையும் தான் வரும். அப்படி பேசுவது முட்டாள்தனம். இப்பொது நீயும் அப்படி தான் செய்தாய் நான் சொல்லி முடிப்பதற்குள் அவசரப்பட்டாய் காமராஜ்" என்றார்.
இதை கேட்ட காமராஜ், "உடனே என்னை மன்னித்து விடுங்கள் அப்பா. நீங்களே தெளிவாக அனைத்தையும் சொல்லுங்கள்" என்றான்.
"பிறருக்காக வாழக் கூடாது என நான் கூறியதற்கு அர்த்தமே வேறு. உதாரணமாக உன் நண்பன் வசதியானவன் என்று வைத்துக்கொள். அவன் விதவிதமாக ஆடை அணிகிறான் என்று வைத்துக்கொள். அவனை பார்க்கும் போது உனக்கு அவனை போல் உடை அணிய ஆசை வருகிறது. ஆனால் நீயோ ஏழை விவசாயி மகன். உன் தந்தையால் வாங்கித் தர முடியாது, அதை நீ புரிந்து கொள்ளாமல் அடுத்தவரை (பிறரை) போல் நீ ஆசைப் படும்போது, உன் தந்தையிடம் சண்டையிட்டு வாங்குவாய். அது மட்டும் தான் உனக்குத் தெரியும், அதை உனக்கு வாங்கி தருவதற்காக வட்டிக்கு கடன் வாங்கி அந்த கடனை அவர் ஆயுள் முழுவதும் கஷ்டப்படுவார். என்றைக்கும் தன்னிடம் என்ன உள்ளதோ அதை வைத்து வாழ வேண்டும். பிறர் அது வைத்துள்ளார்.
அப்படி இருக்கார். இப்படி இருக்கார். அவரை போல் வாழனும் என ஆசை பட்டு கடன் வாங்கி வாழக் கூடாது. நாம்மிடம் அது இருக்கனும், அப்படி, இப்படி பெருசா வாழ்ந்தால் தான் பிறர் நம்மை மதிப்பார்கள் என ஆசைப்பட்டு பிறருக்காக வாழ நினைத்தால் உன் வாழ்க்கையை நீ தொலைத்து, நிம்மதி இழந்து, சமுதாயத்திற்கு பயந்து வாழனும். இப்போது புரிகிறதா எப்படி வாழனும்னு? பிறருக்காக வாழக் கூடாது என்பதற்கான அர்த்தமும் புரிகிறதா" என்றார்.
"நன்றாகவே புரிந்து கொண்டேன் அப்பா. "சிறுதுளி பெருவெள்ளம்" என்பது போல் சிறிது ஆடம்பரமாக வாழ நினைத்தால் கூட அது பெருவெள்ளமாக மாறி ஆபத்தில் முடியும் என்பதை புரிந்து கொண்டேன். தன் வருமானத்தை மீறி ஆடம்பரமாக வாழ்வது தன் தலையில் தாமே மண் அள்ளிப் போடுவதற்குச் சமம் என்பதையும் நீங்கள் சொன்னதிலிருந்து அறிந்து கொண்டேன் அப்பா" என்றான் காமராஜ்.
"நல்லது காமராஜ் . பிறருக்காக வாழ்வதை மறந்து, நம் நாட்டுக்காக சாதித்து வாழனும், அந்த சாதனையால் தான் உன் பெற்றோரும், நம் நாடும் "கர்வத்தோடு"(பெருமிதத்தோடு) தலை நிமிர்ந்து நிற்க முடியும். இதுவே தந்தைக்கு மகன் ஆற்றும் கடமை" என்றார்.
"கண்டிப்பாக நான் சாதித்து உங்களையும், நாட்டையும் "கர்வத்தோடு" தலை நிமிர்ந்து நிற்க வைப்பேன்.என் கடமையை சரியாக செய்வேன் அப்பா" என்றான் காமராஜ்.
இதை கேட்ட விவசாயி "கர்வத்தோடு"(பெருமிததத்தோடு) தன் மகனோடு புறப்பட்டார்.
குறிப்பு :- சிறு கல்லை தான் செதுக்க முடியும். பாறையை செதுக்க முடியாது. அதேபோல் தான் ஒவ்வொரு பெற்றோரும் தன் மகனுக்கு சிறு வயதிலே வரவு, செலவு மற்றும் வீட்டு நிர்வாகத்தை பற்றி அவனுக்கு சொல்லி செதுக்க வேண்டும். அப்போது தான் அவன் தன் நிலை அறிந்து கடன் இல்லாத சிறப்பான வாழ்க்கை வாழ முடியும். கடன் இல்லாமல் எல்லோரும் வாழ்ந்தால் வறுமை ஒழிந்து நாடே புதிதாய் பூத்த மலர்களை போல் மலரும். "கர்வத்தோடு" தலை நிமிர்ந்து நிற்கும். நாம்"கர்வத்தோடு" வாழ்ந்தால் தான் நம் நாடு "கர்வத்தோடு"தலை நிமிர முடியும். நம் நாட்டை "கர்வத்தோடு" தலை நிமிர செய்வோமாக!
#856
38,383
50
: 38,333
1
5 (1 )
sathishhkrishna
மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... சிறந்த கதை... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... தங்களுக்கு 5 star and like கொடுத்துள்ளேன். எனது கதை " அடுத்த நொடி ஆச்சரியம் " முதல் 20 இடத்திற்குள் இருக்கிறது. தாங்கள் தயவு செய்து எனது கதையை படித்து... பெருந்தன்மையோடு... ஒரு சக எழுத்தாளராக... ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்... மிக்க நன்றி...
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50