JUNE 10th - JULY 10th
டர்ர்....புர்ர்.....
வருவாய் துறை அதிகாரி சேதுராமன் தனது 3 வயது மகள் யாழினி பள்ளியிலிருந்து கொண்டு வந்து கொடுத்த அறிக்கையை பார்த்து அதிர்ந்து போனார்.
யாழினி, "அப்பா, அப்பா" என அழைப்பது அவருக்கு எங்கோ கேட்கிறது.
வருவாய் துறை வரி அறிக்கை அனுப்பி மக்கள் அனைவரிடமும் வரி வசூல் செய்வதில் மன்னன் என பெயர் பெற்றவர் சேதுராமன். தனது வேலையை கண்ணும் கருத்துமாக பார்ப்பவர். மனைவி ரேணுகா, அத்தை பெண் தான். சிறு வயது முதல் ரேணுகாவிற்கு சேது என சொல்லி சொல்லி அவர்களுக்குள் காதல் துளிர்த்தது. பெரியவர்கள் நாள் பார்த்து திருமணம் முடித்து வைத்தார்கள். சேதுராமனுக்கு டெல்லியில் பணி மாற்றம் வர இருவரும் டெல்லி சென்றுவிட்டனர்.
திருமணம் முடித்த பத்தாவது மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தாள். தமிழ் மேல் அதித காதல் ரேணுகாவிற்கு. அழகான பெயர் தன் மகளுக்கு சூட்ட வேண்டும் என தேடி தேடி “யாழினி” என பெயர் வைத்தாள்.
சென்னை வருவாய் துறைக்கு மாற்றலாகி 6 மாதங்கள் தான் ஆகிறது.
இப்போது வருமான வரித்துறையில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்.
வருவாய் துறை அதிகாரிக்கு அப்படி என்ன அறிக்கை பள்ளி அனுப்பியுள்ளது. பதட்டத்துடன் அந்த அறிக்கையை பிரித்தார் சேதுராமன். அதே பதடத்துடன் மனைவி ரேணுகாவும் அருகில்.
வணக்கம் திரு.சேதுராமன்,
GBOA பள்ளியிலிருந்து தெரியப்படுத்துவது என்னவென்றால், “தங்கள் மகள் யாழினி வகுப்பறையில் குசு விட்டு பள்ளி வகுப்பறை காற்றை மாசு படுத்தி விட்டாள்.” அதற்கான அரசு நிர்ணையத்த வரியை தாங்கள் செலுத்த வேண்டும். நாளை அலுவலகத்தில் பள்ளி மாசு கட்டுப்பாட்டு அதிகாரியை சந்தித்து வரி செலுத்தி விட்டு செல்லவும். நாளை வரி செலுத்த தவறினால் நாங்கள் இந்த அறிக்கையை அரசு அலுவலகத்தில் சமர்பித்துவிடுவோம்.
நன்றி
முனைவர்
படிக்க படிக்க மயக்கம் வந்தது சேதுராமனுக்கு.
இது ஒன்றும் புதிதல்ல.
என்று, குசு விட்டால் வரி என சட்டம் இயற்றப்பட்டதோ அன்று முதல் இதே தொல்லை தான்.
போன மாதமும் இப்படி தான், கிரவுண்டுக்கு அழைத்து சென்ற போது யாழினி விட்ட குசுவால் இரண்டு பெட் ஜிம்மி ரம்மி நம்ம பக்கத்து பிளாட் ரோஸி (நாய் என்று சொன்னால் அதற்கும் வரி விதிப்பு வந்து விடும். அதுமட்டுமின்றி ரோஸி பூளு கிராஸ் அசொசியேஷன் செக்கரட்டிரி) வளர்க்கும் செல்லமஸ் மயங்கி விழுந்து விட்டது.
இதை அறியாமல் சேது யாழினியை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டார்.
சிறிது நேரம் கழித்து “சேது சேது....” என அழைத்தபடி ரோஸி உள்ளே வர....
“வாங்க ரோஸி... உள்ளே வாங்க... ரேணுகா ரோஸி மேடம் வந்து இருக்காங்க பாரு”.
ரேணுகா அப்போது தான் யாழினிக்கு தலை வாரிக் கொண்டிருந்தாள்.
“வாங்க வாங்க ரோஸி மேடம் உள்ளே வாங்க... “
“நான் உள்ளே வர இங்கு வரவில்லை... “
என் ஜிம்மி ரம்மி உன் குழந்தை போட்ட குசுவால் மயங்கி விழுந்து விட்டது.
“சிரித்துவிட்டார்கள் இருவரும்”.
“என்ன ரோஸி மேடம், இதுக்கு போய் என்ன பன்ன முடியும் ரோஸி மேடம்.. “
நம்ம தலைவர் ரஜினியே விக்கல், தும்மல் போன்ற செயல்கள் இயல்பாக நடப்பது. இது யாரையும் கேட்டுக் கொண்டு வராது என்று..
“ஷட்அப்..... “
“இன்னிக்கு செய்தி கேட்கவில்லையா.... “
இன்று முதல் தும்மல், இருமல், புன்னகை, சத்தமாக பேசுவது, ஏப்பம் விடுவது, குசு விடுவது, இப்படி மொத்தம் 108 (108 ஆன்மீக கணக்கெடுப்பின்படி) செயல் பட்டியல் வெளியாகியுள்ளது.... இதை பொது இடங்களில் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் அதற்குரிய வரியை நாம் செலுத்த வேண்டுமாம். நான் என் பெட்ஸ்யை வீட்டுக்கு வந்த பின்பு தான் அவர்களை வால் ஆட்ட வேண்டும் என சொல்லி அழைத்து வந்தேன்..
“நீங்கள் ஒரு வருவாய் துறை அதிகாரி.... குழந்தைக்கு சொல்லி தர கூடாதா?”
“மேடம் என்ன ஓவரா பேசுறிங்க...இன்னிக்கு செய்தி பார்க்க முடியல..”
குழந்தை அடம் பிடித்தாள் என்பதற்காக கிரவுண்டுக்கு அழைத்து வந்து தங்களிடம் மாட்டிக் கொண்டேன். எல்லாம் என் தலையெழுத்து....
“போங்க உங்கள் வேலையை பாருங்கள்... “
“என்னது! என் வேலையை பார்ப்பதா...”
இதோ இப்போ பெட் கிளினிக் போகிறேன். வரும் வழியில் என் வக்கீலை பார்த்து தங்களுக்கு நோட்டிஸ் கொடுக்காமல் விட போவது இல்லை. என கத்தியபடி வெளியே சென்றாள் ரோஸி.
ரோஸி வெளியே போன பிறகு சேதுராமன் அவசரமாக செய்திகள் கேட்க ஆரம்பித்தார்.
புதிய வரி 108 வரிசையில் முக்கியமாக இடம்பெற்ற 10 செயல்கள்
1. ஏப்பம்
2. தும்மல்
3.இருமல்
4.விக்கல்
5.கொட்டாவி
6.குறட்டை
7.தலை சொறிவது
8. குசு விடுவது
9. வேர்வை வருது
10. பெரு மூச்சு வாங்குவது
.........
இது சிறார் முதல் முதியவர்கள் வரை பொருந்தும்.
சொன்ன மாதிரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விட்டாள் ரோஸி.
நாளை வழக்கு நீதிமன்றத்திற்கு வர போகிறது..
இதற்கிடையில் பள்ளியில் இருந்து இந்த அறிக்கை என்ன செய்வது என தெரியவில்லை.
உடனே தனது வக்கீல் விச்சுவை (விஸ்வநாதன் – உயிர் நண்பன்) அழைத்து நடந்தவை அனைத்தையும் தெரிவித்தார்.
“யூ டொன்ட் வொரி” சேது. நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான். நாளை குழந்தையை அழைத்துக் கொண்டு நீதிமன்றத்திற்கு வந்துவிடு.... என தைரியம் கொடுத்தான்.
சரி நாளை முதலில் நீதிமன்றம் சென்று ஆஜர் ஆகிவிடலாம் என முடிவு செய்து பள்ளி அறிக்கையை சாமி படத்திருக்கு அருகே வைத்துவிட்டு அலுவலகம் சென்றுவிட்டார். அன்று நாளை கழிப்பது மிகவும் கடினமாக இருந்தது.
மறுநாள் சரியாக 10 மணிக்கு குடும்பத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டார்கள்.
ஒருவர் ஒருவராக கோர்ட்டுக்கு வக்கீல், தட்டச்சாளர், குற்றவாளி, அவரின் குடும்பத்தினர், பிராது கொடுத்தவர், அவர்களின் குடும்பத்தினர் ஊடகங்கள் என வந்த வண்ணம் இருந்தனர்,
சரியாக 10 மணிக்கு உயர்தகு நீதிபதி வந்தார், உடனே ஒன்றன் பின் ஒன்றாக வழக்கு விவாதிக்கப்பட்டது.
ஆர்டர்... ஆர்டர்...
ஆர்டர்... ஆர்டர்...
Case No. 108/2022 வழக்கு : யாழினி குறிப்பிட்ட குசுவால் இரண்டு பெட் ஜிம்மி ரம்மி மயங்கி விழுந்த வழக்கு. - வரி
வணக்கம் கனம் நீதிபதி அவர்களே என வக்கில் வீச்சு “எனது கட்சியாளர் யாழினி மைனர் என்பதால் அவரின் அப்பா சேதுராமன் ஆஜராக உள்ளார் யூவர் ஆனர்.”
“சரி தொடருங்கள்”
“அனுமதி வழங்கப்பட்டது”
“சேதுராமன்
சேதுராமன்
சேதுராமன்”
சேதுராமன் முன் பகவத் கீதை “சொல்லுங்கள் நான் சொல்வது எல்லாம் உண்மை”. உண்மை தவிர வேறு ஒன்றும் இல்லை
“சேதுராமன் : நான் சொல்வது எல்லாம் உண்மை. “ “உண்மை தவிர வேறு எதுவும் இல்லை”
பிராசிகியூடர் தங்கள் வாதத்தை தொடங்கலாம்.
சேதுராமன் தங்கள் மகளின் பெயர் என்ன?
“யாழினி”
“வயது”
“3”
“எத்தனையாவது படிக்கிறாள்”
“ Pre-K G”
“தாங்கள் ஜுன் 21 அன்று தங்களின் மகளை கிரவுண்டக்கு அழைத்து சென்றீர்களா?”
“ஆமாம் சார்”.
“ஏன்?”
“ஏனெனில் அன்று உலக யோக தினம். எனது மகளுக்கு யோகா பயிற்சி கொடுக்க அழைத்து சென்றேன்”.
“வெரிகுட்”
“அங்கு என்ன நடந்தது?”
“யோகா நடந்தது”
“யோகா எப்படி அய்யா நடக்கும்”
“அய்யா யோகா நடக்கவில்லை. யோகா வகுப்பு நடந்தது”.
“காமெடி செய்தது நீதிபதியின் நேரத்தை வீனாக்க வேண்டாம்.”
“மன்னிக்கவும்”
“யோகா வகுப்பு நடந்தது.”
“எத்தனை குழந்தைகள் கலந்து கொண்டார்கள்?
“30 குழந்தைகள்”.
அவர்கள் யாரும் குசு விடாத போது தங்கள் மகள் மட்டுமே ஏன் கூசு விட்டாள்?
“ஐ அப்ஜக்ட் யூவர் ஆனார்”
என் கட்சிகாரரை அவமானப்படுத்த இந்த கேள்வி கேட்கிறார் எதிர்கட்சி வக்கீல்... என்ற வீச்சுவை பார்த்து, நீதிபதி இதில் என்ன அவமானம்?
தாங்கள் தொடரலாம்..
“அப்ஜக்ஷன் ஒவர்ருல்.. “
“சேதுராமன் அன்று என் மகள் மூக்கடலை சுண்டல் சாப்பிட்டு இருந்தாள்..."
“தட்ஸ்ஸால் யூவர் ஆனார்.”
இது திட்டமிட்டு செய்யப்பட்ட சதி. என் கட்சிகாரர் ரோஸியின் ஜிம்மி ரம்மி கிரவுண்டக்கு வருவதை அறிந்தே இந்த திட்டம்...
எனவே நமது அரசு நிர்ணையத்த குசு வரியை கண்டிப்பாக யாழினியின் தந்தை திரு. சேதுராமன் கட்ட வேண்டும் என தீர்ப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் யூவர் ஆனார்.
யாழினியின் வக்கீல், "யூவர் ஆனார் நமது கட்டபொம்மன் வழக்கை கருத்தில் கொண்டு வரி வழங்கும் சட்டத்தை ரத்து செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
நீதிபதி, "செல்லாது செல்லாது."
“கிரவுண்டில் யாழினி விட்ட குசு முக்கடலை (சைவ சாப்பாடு) சாப்பிட்டு விட்ட குசு என்பதால் 50,000 வரி...” என தீர்ப்பு அளித்தார். அதில் நஷ்டஈடாக 10,000/- ரோஸிக்கும் 40,000’- அரசுக்கான வரி.
அங்கு இருந்த அரசு இயந்தரத்தில் 40,000 ருபாய் வரி செலுத்திவிட்டு10,000/- ரோஸிக்கு கொடுத்து விட்டு மன வருதத்தோடு சேதுராமன் குடும்பத்தினர் வெளியே வந்தனர். ரோஸிக்கு மகிழ்ச்சி. இன்று ஜிம்மி ரம்மி இருவருக்கும் மாமிசம் தான்.
விச்சுவும் சேதுவுடன் வீட்டிற்கு வந்தார்.
அனைவரும் மிகவும் வருத்தத்துடன் வருவதை கிராமத்தில் இருந்து வந்து வாசலில் காத்துக் கிடந்த அருக்காணி பாட்டி பார்த்தார்.
"பாட்டி, வாங்க வாங்க" என அழைத்த பேரன் சேது குரல் கேட்டு பாட்டிக்கு பேரன் ஏதோ பிரச்சினையில் சீக்கி உள்ளான். சரி சற்று நேரம் கழித்து பேசிக் கொள்ளலாம் என அமைதியாக இருக்க, அனைவரும் உள்ளே சென்றனர்.
சற்று நேரத்தில் காலிங் பெல் அடித்தது. பள்ளியில் இருந்து தகவல் கொண்டு வந்த பள்ளி காவலாளி. ஐயா ஒரு நாள் மேல் அபராதம் கட்டவில்லை என்றால் இந்த வழக்கு அரசாங்கமிடம் சமர்பித்து விட வேண்டுமாம்.
அவசரகால திட்டத்தின் கீழ் இந்த வரி வசூல் இருக்கிறதாம்.
ஆதலால் நாளை தாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கை சந்திக்க வேண்டும் என முனைவர் நீதிமன்றத்தில் இருந்து பள்ளிக்கு வந்த சம்மனை தங்களிடம் கொடுத்து விட்டு வரச் சொன்னார் என கொடுத்து விட்டு நகலில் கையெழுத்து வாங்கி கொண்டு சென்றான்.
இடி விழுந்தது போல் அமர்ந்தார் சேதுராமன் மறுபடியும் நீதிமன்றமா!....
“வீச்சு என்னடா செய்வது.... “
தெரியவில்லையே டா..... என இருவரும் பேசுவதை கேட்டு பாட்டி இடைமறித்து என்ன நடந்தது என கேட்டு தெரிந்துக் கொண்டாள்.
"இது ஒரு பிரச்சினையாட..."
"நாளைக்கு நானும் நீதிமன்றத்திற்கு வருகிறேன். அங்கு வந்து பார்த்துக் கொள்கிறேன்..
"பாட்டி என்ன செய்ய போறிங்க..."
"வெயிட் அன்ட் சி......
அனைவரும் பாட்டியை நம்பி மறுநாள் நீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தனர். பாட்டி கையில் ஒரு தூக்கு தூக்கி இருந்தது.
சேதுராமன் ரேணுகாவிடம் “என்னடீ தூக்கு....”
“தெரியலீங்க பாட்டி விடியற்காலை எழுந்து சமையலறையில் ஏதோ தின்பண்டங்கள் செய்து கொண்டு இருந்தார்.. “
அட கடவுளே! இந்த கிழவியை நம்பி நிதிமன்றத்திற்கு வந்தது தவறாக போனதே.
இடைவெளி முடிந்தது. மறுபடியும் இப்போது வழக்கு வந்துவிடும். நேற்று தான் ஐம்பதாயிரம் வரி கட்டினேன். இன்று எவ்வளவோ... தெரியவில்லை. ரோஸியின் ஜிம்மி ரம்மி சுவாசித்த குசு முக்கடலை (சைவ சாப்பாடு) சாப்பிட்டு யாழினி விட்ட குசு என்பதால் வரி சலுகை இருந்தது. ஆனால் இன்று மீன் முட்டை(அசைவ சாப்பாடு) சாப்பிட்டு விட்டு பள்ளியில் யாழினி விட்ட குசுவிற்கு வரி அதிகமாக இருக்கும்.. என்ன செய்வது தெரியவில்லையே என மண்டையை பியத்துக் கொண்டு இருந்தான் சேதுராமன்...
அதே நீதிபதி அதே வக்கீல் அதே யாழினி குசுவிட்ட வழக்கு. நீதிமன்றம் இடைவெளி வரை யாழினி வழக்கு வரவில்லை..
ஒரு டீ பிரேக்...
பாட்டி வெளியே சென்றாள்
சிறிது நேரத்தில் நீதிபதி உள்ளே வந்தார்.
ஆர்டர்... ஆர்டர்...
ஆர்டர்... ஆர்டர்...
Case No. 156/2022 வழக்கு : யாழினி விட்ட குசுவால் பள்ளி வகுப்பறை காற்றை மாசு படுத்தி விட்டாள் - வரி
வணக்கம் கனம் நீதிபதி அவர்களே என வக்கில் வீச்சு “எனது கட்சியாளர் யாழினி மைனர் என்பதால் அவரின் அப்பா சேதுராமன் ஆஜராக உள்ளார் யூவர் ஆனர்.”
“சரி தொடருங்கள்”
“அனுமதி வழங்கப்பட்டது”
“சேதுராமன்
சேதுராமன்
சேதுராமன்”
சேதுராமன் முன் பகவத் கீதை “சொல்லுங்கள் நான் சொல்வது எல்லாம் உண்மை”. உண்மை தவிர வேறு ஒன்றும் இல்லை
சேதுராமன் : _நான் சொல்வது எல்லாம் உண்மை. “ “உண்மை தவிர வேறு எதுவும் இல்லை”
பிராசிகியூடர் தங்கள் வாதத்தை தொடங்கலாம்.
சேதுராமன் தங்கள் மகளின் பெயர் என்ன?
“யாழினி”
“வயது”
“3”
“எத்தனையாவது படிக்கிறாள்”
“ Pre-K G”
"எந்த பள்ளி?
"GBOA"
"தங்கள் மகள் பள்ளியில் குசு விட்டாரா?"
"அப்படி தான் சொல்றாங்க சார்"
"இன்று மாமிசம் சாப்பிட்டு இருந்தாரா?"
"ஆமாம் சார்"
சரி வாதியின் வக்கீல் இப்போது குறுக்கு விசாரணை நடத்தலாம்.
பள்ளி ஆசிரியர் குந்தவை பள்ளியின் சார்பில் வந்து இருந்தார்.
“ஆசிரியர் குந்தவை முன் பகவத் கீதை “சொல்லுங்கள் நான் சொல்வது எல்லாம் உண்மை. உண்மை தவிர வேறு ஒன்றும் இல்லை”
ஆசிரியர் குந்தவை : நான் சொல்வது எல்லாம் உண்மை. உண்மை தவிர வேறு ஒன்றும் இல்லை”
பிராசிகியூடர் தங்கள் வாதத்தை தொடங்கலாம்.
எந்த வகுப்பில் யாழினி குசு விட்டாள்
ஆங்கில வகுப்பில்
தாங்கள் சொல்வது எப்படி நிஜம் என நம்புவது?
சாட்சி யாராவது இருக்கிறார்களா.
வகுப்பில் இருந்த அனைத்து மாணவ மாணவிகளும் சாட்சி
அதே வகுப்பறையில் பயிலும் யாமினி, நந்தா இரு குழந்தைகளை அழைத்து வந்துள்ளேன்.
நியாயம் தானா?
குழந்தைகள் சாட்சி ஏற்றுக் கொள்ள படாது..
மன்னிக்கவும் நீதிபதி அவர்களே. எங்களிடம் வேறு சாட்சி எதுவும் இல்லை.
சரி சரி குழந்தைகளிடம் யாழினி குசு விட்டாளா என்று மட்டும் கேட்கவும்.
யாமினி
யாமினி
யாமினி
நந்தா
நந்தா
நந்தா
"பயப்படாமல் சொல்லுங்கள் யாழினி குசு விட்டாளா?"
"இல்லை அங்கிள்"
ஆசிரியர் அதிர்ச்சிக்கு உள்ளானார்.
"அப்போது என்ன தான் நடந்தது?"
டர்ர்ர்........ புர்ர்ர்.......
டர்ர்ர்....... புர்ர்ர்.......
மொத்த நீதிமன்ற உறுப்பினர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டார்கள்.
சைலன்ஸ்
சைலன்ஸ்.
சரி நீங்கள் போகலாம் என நீதிபதி சொல்வதற்குள் யாழினி, யாமினி, நந்தா மூவரும் ரிங்கா ரிங்கா ரோஸஸ் பாடல் பாடி ஆடிக் கொண்டு இருந்தார்கள்.
நீதிபதி ஒரு கணம் யோசித்து தீர்ப்பு வழங்க துவங்கினார்.
இடையில் அவள் சிறு குழந்தை. உடலில் இருந்து வெளியாகும் காற்றை எப்படி அடக்க முடியும் நீதிபதி அவர்களே என வீச்சு தன் வாதத்தை முன் வைக்க.....
நீதிபதி செல்லாது செல்லாது. பள்ளியில் யாழினி விட்ட குசு மாமிசம் சாப்பிட்டு விட்டதால் 70,000 வரி... என சொல்லிக் கொண்டே இருக்கும் போதே.
டர்ர்ர்....புர்ர்ர.... என விதவிதமான குசு நீதிமன்றம் முழுவதும்.....
நீதிபதியும் நெளிய ஆரம்பித்தார்...
குசு விடுவது ஒரு இயல்பான உடலின் மொழி. இதற்கு வரி விதிப்பது சட்டப்படி குற்றம்.. சட்டம் என்பது மக்களுக்காக தான். அதனால் அரசு இந்த வரியை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது இப்போது நீதிமன்றம் கலைகிறது என வேக வேகமாக கழிப்பறை நோக்கி ஓடினார்.
நீதிபதி மட்டும் அல்ல நீதிமன்றத்தில் இருந்த பலர் கழிப்பறை நோக்கி ஒடினார்கள்....
பாட்டி கொண்டு வந்து தூக்கு செட்டி காலியாக இருந்தது.
“சேது, ரேணுகா, விச்சு பாட்டி பாட்டி எப்படி பாட்டி ... “
“என்ன பலகாரம் கொண்டு வந்திங்க..."
"எப்போ எல்லாருக்கும் கொடுத்திங்க... “
பாட்டி.... போடா போடா.... என பொக்கை வாயில் வெற்றிலை கொதப்பிக் கொண்டு கொல்லு பேத்தி யாழினியிடம் நீ உன் உடம்பு சொல்வதை கேளுடி என் செல்லம் என பாட்டி சொல்வது புரியாமல் யாழினி பாட்டியின் தொங்கும் சதையை தொட்டு சிரித்துக் கொண்டிருந்தாள்...
திடுக்கிட்டு எழுந்தார் சேதுராமன்... என்ன கணவு டா.....இது. ரேணுகா சொல்வது சரி தான். அரசாங்கம் புதிய வரிகள் அறிவித்த நாள் முதல் பத்து நாட்களாக நின்றால், நடந்தால், AST வரி BST வரி என வசூலித்து வசூலித்து கடைசியில் டர்ர்ர்.... புர்ர்ர்..வரி வசூலிக்கும் நிலையை யோசிக்க வைத்து விட்டதே... அதுமட்டுமின்றி தன் வாழ்க்கையை ஒரு படமாக கனவு கண்டு இப்படி ட்ர்ர்ர்... புர்ர்ர்ர் என ஆகிவிட்டதே...என நினைக்கையில்
கைபேசி அடித்தது....
யாழினி அப்பா..... டர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர்ர்ர்...
சிரித்துக் கொண்டே சேதுராமன், "யாழி மா.... டர்ர்ர்ர்..... புர்ர்ர்ர்.....
அலுவலக வாசலில் சம்பாதிக்கும் பணத்தில் மொத்தம் எழுபது சதவிகிதம் வரிக்கே போய்விடுகிறதே என புலம்பிக் கொண்டு மக்கள் வரிசையில் வர துவங்கினர்.
நன்றி.
திருமதி. சாந்தி சரவணன்
சென்னை
9884467730
#352
30,970
970
: 30,000
20
4.9 (20 )
???? ?.????????
நகைச்சு வை என்று நகைச்சுவையை எழுத்தில் வடித்ததை சுவைத்தேன்! நகைத்தேன்!!
rjayailan01
நகைச்சுவை கலந்த நிகழ்கால உண்மையின் பிரதிபலிப்பு. அருமையான கதை வடிவம். வாழ்த்துகள் சாந்தி சரவணன்.
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50