கண்ணப்பனின் கண்கள்

saravanansaravanan4927
உண்மைக் கதைகள்
4 out of 5 (2 )

கண்ணப்பன், கனகம் தம்பதிகள் மிகவும் வயது முதிர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் பூவனம் கிராமத்தில் வசித்தனர்.
புல்வெளிகள், எழில் சூழும் இயற்கை, சில்லென்ற குளிர்ந்த காற்று, மனதை வருடும் இயற்கை காட்சிகள் அமைந்த அழகிய கிராமத்தில் முதியவர்கள் தன் வாழ்நாளை இன்பமுற கழித்து வந்தனர்.

பெயருக்கு ஏற்றவாறு கண்ணப்பன் கருத்த தேகத்துடன் ஒட்டிய உடலுடன் காணப்பட்டார். கனகம் நெற்றி வகிடில் குங்குமப் பொட்டோடு. மெல்லிய சிரிப்போடு அழகுற காணப்பட்டாள்.

கனகம் மிகுந்த அன்பானவள். தன் கணவனின் மீது அளவற்ற அன்பு கொண்டவள். எனவே கணவனை ஒவ்வொரு கணமும் பார்த்து பார்த்து கவனிப்பாள் . கண்ணப்பன் குறைந்த அளவு உணவை எடுத்துக் கொள்வார் எனவே கணவனுக்கு தேவையான உணவுகளை பக்குவமாக சமைத்து அன்புடன் பரிமாறுவாள்.

கண்ணப்பனும் எவ்வளவு நேரம் ஆனாலும் மனைவியின் கரங்களாலே பரிமாறப்படும் உணவே உண்பார். வெளியூருக்கு சென்றாலும் கூட தேநீர் போன்ற பானங்களை அருந்துவாரே தவிர உணவகங்களுக்குச் சென்று உணவினை உணவு மாட்டார்.

அன்றாடம் சம்பாதிக்கும் பணத்தை மனைவியிடம் கொடுப்பார். கனகமும் தேவைக்கு செலவு செய்து பணத்தை பத்திரமாக எடுத்து வைப்பாள்.

கண்ணப்பன் மிகப்பெரிய நிலக்கிழார் ஆவார். அவருடைய தோட்டத்தில் மக்கள் பலர் பணியாற்றுவர்.
மிகுந்த செல்வச் செழிப்போடு கண்ணப்பன் வாழ்ந்து வந்தார். மக்களுக்கு ஒரு துயரமெனில் ஓடோடி சென்று முதல் உதவி செய்வார். ஏழை எளிய மக்களுக்கு அகமகிழும் வண்ணம் பல உதவிகளை செய்வார்.

கனகமும் இல்லை என வந்தவருக்கு இல்லை என்று சொல்லாது வாரி வழங்கும் தன்மை கொண்டவள். இதனால் அவ்வூர் மக்கள் கண்ணப்பன் மீதும் கனகத்தின் மீதும் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டு இருந்தனர்.

அனைத்து செல்வங்களையும் பெற்ற தம்பதிகளுக்கு குழந்தை செல்வம் ஒன்றே வாய்க்கவில்லை. இருப்பினும் அவர்கள் மனம் தளராமல் ஊர் மக்களையே தன் குழந்தையாக பாவித்தனர்.

இதனைக் கண்ட ஊர் தலைவர் மிகுந்த கோபம் கொண்டார் கண்ணப்பனுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து வெகுண்டு எழுந்தார். ஏதேனும் சதி செய்து கண்ணப்பனை வீழ்த்த வேண்டும். கண்ணப்பனுக்கு கிடைக்கும் மரியாதை தனக்கு கிடைக்க வேண்டும் என நினைத்துசதி வலையை தோண்டினார்.

ஒருநாள் இரவு வேலையில் கண்ணப்பனும் கனகமும் உணவு உண்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது கண்ணப்பன் கனகத்திடம் மனம் விட்டு பேசுகிறார். நமக்கும் வயதாகிவிட்டது ; நமக்கோ குழந்தைகள் யாரும் கிடையாது; இவ்வூர் மக்களையே நமது குழந்தைகளாக நினைக்கிறோம்.

எனவே நமக்கென்று சிறிது நிலங்களை வைத்துக் கொண்டு இவ்வூரில் உள்ள அனைத்து மக்களுக்கும் நம்மால் இயன்ற அளவு வீடுகளை கட்டித் தருவோம் என கனகத்திடம் தனது கருத்தினை கூறுகிறார்.

கனகமும் தனது கணவரின் கருத்திற்கு உடன்படுகிறாள். சற்றே புன்னகையுடன் தன் கையில் இருந்த நகையையும், பணத்தையும் கொடுத்து இதையும் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் சேவையில் நானும் பங்கு கொள்கிறேன் என அன்புக்கரம் நீட்டுகிறாள். இதனை கண்ட கண்ணப்பனுக்கு மிக்க மகிழ்ச்சி. தன் மனைவியை நினைத்து பெருமிதம் கொள்கின்றார்.

உடனே தன்னுடைய யோசனையை ஊர் மக்களிடத்தில் தம்பதிகள் இருவரும் சேர்ந்து தெரிவிக்கின்றனர். ஊர் மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். தங்களுக்கு என்று தனியாக வீடு கிடைக்கப் போகிறது என்று அக மகிழ்ந்தனர்.

இதனைக் கண்ட ஊர் பெரியவர் தன் சதி வலையை செயலாக்கினார். கண்ணப்பனிடம் சென்று தனக்குத் தெரிந்த கட்டிடப் பொறியாளர் இருக்கிறார்; அவர் பல நூறு வீடுகளை கட்டியவர் அவரிடம் இப்பொறுப்பை ஒப்படைத்தால் தெளிவாக நல்லபடியாக வீடு கட்டி கொடுப்பார் என கண்ணப்பனுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார். கண்ணப்பனும் யதார்த்த குணம் படைத்தவர் எனவே இதனை நம்புகிறார். இதற்கான செலவை விசாரித்து கூறுங்கள் என கூறுகிறார் .சரி நான் சென்று விசாரித்து வருகிறேன் என்று கூறிச் சென்று கண்ணப்பனை ஏமாற்றி அவனது சொத்துகளை தானே அபகரித்துக் கொள்ள வேண்டும் என திட்டம் தீட்டுகிறார் ஊர்ப் பெரியவர்.

கண்ணப்பனும் தன்னிடம் உள்ள அனைத்து சொத்துக்களை விற்று பணமாக்குகிறார். தனக்கென்று சிறிது நிலங்களையும் வீட்டையும் மட்டும் வைத்துக்கொண்டு மற்ற அனைத்து சொத்துக்களையும் விற்று விடுகிறார்.
இச்சூழலை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஊர் பெரியவர் பொய் வாக்குறுதி கூறி அப்பணத்தைப் பெற்றுக் கொள்கின்றார்.

கண்ணப்பனிடம் சென்று வீட்டு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பணம் போதவில்லை என்று கேட்டு, மீதமுள்ள பணத்தை ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கூறுகிறார் .

எனவே கண்ணப்பன் தன் கையில் இருந்த வீடு , நிலங்களையும் விற்று பணத்தை கொடுக்கின்றார். இச்சூழ்நிலையிலும் கனகம் கண்ணப்பனின் வழியே நடக்கின்றாள்.

கண்ணப்பன் ஊர் பெரியவரிடம் சென்று, வீட்டு வேலை எவ்வளவு தூரம் போய்க் கொண்டிருக்கிறது என்னை அழைத்துச் சொல்லுங்கள் நானும் நேரில் வந்து பார்க்கின்றேன் என்று கூற, அச்சமயத்தில் ஊர் பெரியவரோ நீங்கள் எங்கே பணத்தை தந்தீர்கள் என்கிறார்.

கண்ணப்பனுக்கு ஒன்றுமே புரியவில்லை ஐயய்யோ! நான் அவ்வளவு பணத்தையும் உங்களிடம் தானே தந்தேன் என்றார்.

உங்களிடம் நான் பணம் வாங்கவில்லை என்று ஊர் பெரியவர் கூறுகிறார். இதனைக் கேட்ட கனகம் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தாள். உடனே கண்ணப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கனகத்தை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கின்றனர். கனகத்தின் உயிர் கண்ணப்பனின் நினைவுடன் பிரிகிறது. கண்ணப்பன் மனவேதனையில் குமுறுகிறார் .

தனது மனைவியின் கழுத்தில் இருந்த தாலியை மட்டுமே பெற்றுக்கொண்டு மனைவியின் நினைவாக வாழ்கிறார்.
அனுதினமும் சட்டைப் பையில் வைத்துக் கொள்வார். வெளியே செல்லும் பொழுதும் அனைத்து நேரங்களிலும் அத்தாலியுடனே இருப்பார்.

அனைத்து சொத்துக்களையும் இழந்த போதிலும் கண்ணப்பனால் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையை மாற்றிக் கொள்ள முடியவில்லை. எனவே கையில் பணம் இல்லாததால் அவ்வூர் பெரியவர் இடமே வேலைக்குச் செல்ல ஆரம்பிக்கின்றார்.
தேயிலை பறிப்பதையே முக்கியத் தொழிலாகக் கொண்ட கண்ணப்பன் ஒருவேளை மட்டுமே உணவு அருந்துவார். தனக்கு கிடைத்துள்ள பணத்தை மீதம் செய்து மலையில் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு உதவுவார்.

அவ்வூர் பெரியவரால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இச்சூழலிலும் கண்ணப்பன் இவ்வாறு மற்றவனுக்கு உதவி செய்கின்றானே! இவ்வூரில் நானே பெரியவனாக இருக்க வேண்டும் என நினைத்து கண்ணப்பனுக்கு வேலை கொடுக்க மறுக்கிறார்.


தொடர்ந்து பல நாட்களாக வேலையில்லாததால் கண்ணப்பன் ஒருவேளை உணவிற்கே மிகுந்த சிரமப்பட்டார். உடல் மேலும் நலிவுற்றது; வெறும் தண்ணீரையே உணவாகப் பருகி வந்தார். இருப்பினும் அவர் கையில் இருந்த ஒரே பொருள் இறந்த அவரது மனைவியின் தாலி மட்டுமே. எவ்வளவு சிரமப்பட்டாலும் அதை மட்டும் செலவு செய்யாமல் பாதுகாப்பாக வைத்திருந்தார்.

இவ்வேளையில் கண்ணப்பனிடம் ஒரு பெண்மணி தன் மகளின் மருத்துவ செலவிற்காக அவசர உதவி செய்யுமாறு பணம் கேட்கிறாள். கண்ணப்பனிடம் கையில் ஏதும் பணம் இல்லை. தன் மனைவியின் தாலி மட்டுமே உள்ளது. ஆனாலும், அதனையும் கொடுக்க கண்ணப்பனுக்கு மனமில்லை.

இருப்பினும் கண்ணப்பன் இரவு முழுவதும் அதனையே யோசித்துக் கொண்டிருக்கிறார்.
பசி கொடுமை ஒருபுறம் இருக்க கண்ணப்பன் உடல் மேலும் நோய்வாய்ப்பட்டு காணப்படுகிறது.

பொழுது விடிந்ததும் கண்ணப்பன் அக்குழந்தையைக் காண மருத்துவமனைக்குச் செல்ல விரைகிறார்.
ஆனாலும் அவரால் மருத்துவமனைக்குச் செல்ல இயலவில்லை. கண்கள் அவருக்கு இருட்டிக் கொண்டு வந்தது. சூரியன் கதிர்களோ அவரை வெம்மையாகத் தாக்கியது. உடல் வியர்த்து விறுவிறுத்துது. தான் எங்கேயோ மிதப்பது போன்று அவருக்கு தோன்றியது. ஆயினும் அக்குழந்தையின் முகம் அவருக்கு நினைவில் வர எப்படியோ மருத்துவமனைக்கு சென்று விட்டார் . சென்று அக்குழந்தையை முதலில் பார்த்தார். பார்த்த அந்த நிமிடமே அவருக்கு மனதில் ஏதோ தோன்ற, அவரது கைப்பையில் என்றும் பத்திரமாக வைத்திருக்கும் தனது இறந்த மனைவியின் தாலியை குழந்தையின் தாயிடம் கொடுத்து குழந்தையை நல்லபடியாக காப்பாற்றிக் கொள் என்று கூறி, என் தாகத்திற்கு சற்று தண்ணீர் கொடு என கேட்கிறார். அப்பெண்மணியும் தண்ணீர் எடுத்து வர செல்லும் அவ்வேளையில் கண்ணப்பன் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுகிறார். உடனே அருகில் இருந்த மருத்துவர்கள் கண்ணப்பனை பரிசோதித்தனர். ஆயினும் அவ்வுயிர் குழந்தையை பார்த்த வண்ணமே பிரிகிறது.

கண்ணப்பன் இறந்ததை மருத்துவர்கள் ஊர்ஜிதமாக கூற
அவரின் உடல் பூவனத்திற்கு எடுத்து.

அவர் ஏற்கனவே கண் தானத்திற்கு ஒப்புக் கொண்டதால் மருத்துவ குழுவினர் விரைந்து வந்து அவர் கண்களை எடுத்து பத்திரப் படுத்துகின்றனர். அவர் கண்கள் அவ்வூர்ப் பெரியவரின் பார்வையற்ற மகளுக்கு பொருத்தப்படுகிறது.

பெரியவர் தான் செய்த தவறை நினைத்து வெட்கித் தலை குனிகிறார். தன் மகளைக் காணும் ஒவ்வொரு நொடியும் கண்ணப்பனையே காண்பதாக உணர்கிறார். எனவே கண்ணப்பனின் தியாக உணர்வைநினைத்து

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...