காதல் என்பது . . .

காதல்
4.8 out of 5 (72 )

காதல் என்பது . . .

அவள் மெதுவாகக் கண் விழித்தாள். தூங்கி எழுபவர்கள் கண்களுக்கு இதமாக மெல்லிய வெளிச்சம் தரும் வகையில் அந்த அறையின் ஜன்னல்களின் திரைச்சீலைகள் அமைக்கப் பட்டிருந்தன.

இது எந்த இடம் ?

தன் நினைவுகளைத் தட்டிப் பார்த்தாள். அடையாளம் தெரிய வில்லை.

தலையை இடது புறம் திருப்பிப் பார்த்தாள். மாத்திரை, மருந்து, சலைன் பாட்டில் ஸ்டன்டு என்று ஆஸ்பத்திரி அறை போல இருந்தாலும் அறையின் அலங்காரமும் விஸ்தாரமும் கட்டிலின் அளவும் அமைப்பும் இல்லை என்றது.

எழுந்து உட்கார்ந்தாள். களைப்பாக இருந்தது. மறுபடியும் படுத்துக் கொண்டாள்.

இது எந்த இடம் ? எங்கே இருக்கிறேன் ? ஏன் யாருமே இல்லை ?

யாராவது இருக்கீங்களா ?

அவளுடைய சத்தம் அவளுக்கே கேட்ட மாதிரி தெரிய வில்லை.

ஆனாலும் ஒருத்தி பரபரப்பாக உள்ளே கிட்டத்தட்ட ஓடி வந்தாள். ஐம்பது வயது இருக்கலாம். வெள்ளையில் நீல பார்டர் போட்ட சேலை கட்டி தலையைக் கொண்டை போட்டிருந்தாள். ஒரு நர்ஸ் போல இருந்தாள். அப்பிடின்னா இது ஆஸ்பத்திரி தானா ?

உள்ளே வந்தவள் பெரிதாகப் புன்னகைத்தாள். மிகப் பெரிய மகிழ்ச்சி அவள் முகத்தில் தெரிந்தது.

எழுந்துட்டீங்களா மேடம். நீங்க எழுந்ததும் டாக்டர் கால் பண்ண சொன்னாங்க.

வெளியே சென்றவள் சிறிது நேரத்தில் பேசிக் கொண்டே வந்தாள். அவளிடம் நீட்டினாள்.

ஸ்பீக்கர்ல போட்டிருக்கிறேன். பேசுங்க.

விழிகள் விரிய பார்த்துக் கொண்டே வாங்கிக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

ஹலோ . . . .

வணக்கம் மிசஸ் ரவி . . . எப்படி இருக்கீங்க ?

மிசஸ் ரவி . . . . மிசஸ் ரவி . . . .

அவளுக்கு சட்டென்று ரவியின் நினைவு வந்தது. கை நடுங்கி போன் நழுவி மெத்தையில் விழுந்தது.

களைப்படைந்து மறுபடியும் கண்களை மூடிக் கொண்டாள்.

சிஸ்டர் . . . . சிஸ்டர் . . . . நர்ஸை அழைக்க நினைத்தாள்.சப்தமே எழ வில்லை.

குரல், ஹலோ . . . . மிசஸ் ரவி . . . . மிசஸ் ரவி . . . ..என்று ஓரிரு தடவை அழைத்து விட்டு சப்தத்தை நிறுத்திக் கொண்டது.

ரவி . . . உடனே அவனைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

ட்ட்ட்ரிரிரிரிங்ங்ங்ங்; . . . . . டெலிபோன் நீண்ட ஒலியெழுப்பும் சப்தம் கேட்டது.

ஹலோ மேடம் . . . .

முதலில் சப்தமாகப் பேசிய நர்ஸ் பிறகு ரகசியக் குரலில் பேசியது போல் இருந்தது.

அவள் வெகுவாகக் குழம்பிப் போனாள்.

அயற்சியுடன் கண்களை மூடியபோது உறக்கம் மெல்லத் தழுவியது.


--- --- --- --- ---


றுபடியும் கண் விழித்த போது கட்டிலுக்குப் பக்கத்தில் கால் பக்கமாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த நர்ஸ் புன்னகைத்தபடி எழுந்து கொண்டாள்.

ஏதாவது குடிக்கக் கொண்டு வரவா மேடம் ?

சரி என்பது போல லேசாகத் தலையசைத்தாள்.

நர்ஸ் திரும்பி வரும்போது கூடவே ஒரு பெண்ணும் வந்தார். கையில் ஸ்டெதஸ்கோப் அவர் ஒரு டாக்டர் என்று தெரிவிக்க இயல்பாகவே ஒரு மரியாதை வந்தது. வயது இருபதுகளின் ஆரம்பத்தில்தான் இருக்கும்.
இருவரும் மெலிதாகப் புன்னகைத்தார்கள்.

எப்பிடி இருக்கீங்க ? இதைக் குடிங்க. கொஞ்சம் தெம்பா இருக்கும். சிஸ்டர் . . . ஸுப்பை மேடம் கிட்டே கொடுங்க . . . .

நர்ஸ் கையில் இருந்த டிரேயை பக்கத்தில் இருந்த சிறிய மேiஜ மேல் வைத்தாள். அவளை முதுகில் கை கொடுத்து தூக்கி பின்னால் தலையணையைக் கொடுத்து சாய்ந்து உட்கார வைத்தாள்.


ஸ்பூனில் ஸுப்பை எடுத்து வாயில் கொடுத்தாள். ஸுப் தொண்டையில் இறங்க . .. இதமாக இருந்தது.

அவர்கள் இருவருடைய முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே எதுவும் பேசாமல் சாப்பிட்டாள்.

ஒரு நோயாளியிடம் பரிவு காட்டும் டாக்டர், நர்ஸ் என்பதைத் தாண்டிய ஏதோ ஒன்று அவர்களிடம் தெரிந்தது.

சாப்பிட்டு முடித்ததும் நர்ஸ் ஒரு நேப்கின் கொண்டு அவளது உதடுகளை மென்மையாக ஒற்றி எடுத்தாள்.

நான் ரவியைப் பார்க்க முடியுமா ? அவர் கிட்டே முக்கியமான ஒரு விஷயம் பேசணும்

டாக்டர் நர்ஸைத் திரும்பிப் பார்த்தாள்.

நர்ஸ் சரி மேடம் என்றவாறே டிரேயுடன்; வெளியே போனாள்.

மேடம் . . . . ரவி சார் கேம்ப் போயிருக்காங்க. . வர இரண்டு மூணு நாள் ஆகும். நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் அப்றமா வந்து உங்களப் பார்க்கிறேன்.

ஏனோ, சார், மேடம் என்ற இரு வார்த்தைகளுமே சற்று அன்னியமாக, ஒரு மாதிரி வரவழைக்கப் பட்ட மாதிரி தெரிந்தது.

பரவாயில்லை டாக்டர். நான் இப்ப பெட்டரா ்பீல் பண்றேன். உட்காருங்களேன். ரொம்ப தனிமையா இருக்கு. உங்க பேர் என்ன ?

டாக்டர் சிரித்துக் கொண்டே நாற்காலியை கட்டிலுக்குப் பக்கத்தில் இழுத்துப் போட்டு உட்கார்ந்தாள்.

நான் ரியா. ஜஸ்ட். இப்ப தான் எம்பிபிஸ் முடிச்சேன். இங்க டிரெயினி.

ரியா அவள் மேலும் பேசக் காத்திருந்தாள். தானாக எதுவும் பேசக் கூடாது என்று கவனமாக இருந்தாள். அவளுடைய சீ்ப் டாக்டரின் கண்டிப்பான கட்டளை.

உங்ககிட்ட சில கேள்விகள் கேட்கலாமா ?

கேளுங்க.

இது என்ன இடம் ? ஆஸ்பத்திரி மாதிரி இருக்கு. டாக்டர் எல்லாம் இருக்கீங்க. ஆனா இந்த அறையைப் பார்த்தா இவ்ளோ வசதியா இருக்கே ?

ரியா சிரித்தாள். இது உங்க வீடுதான் மேடம். ஆஸ்பத்திரி கீழதானே இருக்கு. உங்களுக்குதான் தெரியுமே.

அதோட இது எங்க சீ்ப் டாக்டரோட அறை. உங்களுக்கு வசதியா இருக்கணும்னு இங்க அரேன்ஜ; பண்ணியிருக்காங்க.

அவள் புரிந்தது போல் புன்னகைத்ததாள். ஆமா . . . ரவி டாக்டர்தானே . . . அவரோட அறையா இது ?

உங்க சீ்ப் டாக்டர் இப்ப எங்க ? நான் இப்பிடி படுத்திருக்கேன். டாக்டர் பாட்டுக்கு இப்பிடி போயிட்டா எப்பிடி ? மெல்லிய சிரிப்போடு கேட்டாள்.
ரியா மெலிதாக சிரித்தாள்.

ஒரு முக்கியமான வேலையா டெல்லி போயிருக்காங்க. உங்களை கவனமாப் பாத்துக்கச் சொல்லி எங்க கிட்டே சொலலிட்டுப் போயிருக்காங்க. நான்தான் உங்களுக்கு டாக்டர். அவங்க வர்ர வரைக்கும்.

அவள் சற்று அமைதியானாள்.

ரியாவிற்கு அவள் யோசிப்பது புரிந்தது. அடுத்த கேள்விக்காக சிறிய பதட்டத்துடன் காத்திருந்தாள்.

அவள் கேள்வி எதுவும் கேட்க வில்லை. பேச ஆரம்பித்தாள்.

அது ஒரு ஆக்ஸிடென்ட். அதுவும் எங்களோட ஐந்தாவது கல்யாண நாள் அன்னிக்கு நடந்துது. அதுக்கும் நான்தான் காரணம். டாக்டர் . . . . . கேட்குறீங்களா ?

ம்ம்ம் - ரியா.

அன்னிக்கு நான் ரொம்ப சாதாரணமான . . . . சராசரி மனைவி மாதிரி நடந்துகிட்டேன்.

ரியா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டக் கூடாது என்பது சீ்ப் டாக்டரின் அட்வைஸ். அவளுடைய உயிர் மிகவும் முக்கியமாயிற்றே.

அவள் தொடர்ந்தாள்.


கார்ல நானும் அவரும் எங்க மகனோட பழநிக்கு போயிக்கிட்டிருந்தோம். அவர்தான் காரை ஓட்டினார். அவர் ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தார். ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல ஆரம்பிச்சு அப்றம் நிறுத்திட்டார். அவர் ஒரு டாக்டர். புதுசா ஒரு ஆஸ்பத்திரி கட்ட ஆரம்பிச்சிருந்தோம். அது சம்பந்தமா பேங்க் லோன் அது இது ன்னு அலைந்துக்கிட்டு இருந்தார்.

ம்ம்ம் - ரியா

அதுல ஏதோ சிக்கலா இருக்குமோ ன்னு நினைச்சேன். பேங்க்ல ஏதாவது பணம் கட்டச் சொன்னா நம்ம நகையேல்லாம் கூட எடுத்துக்கலாம். கவலைப் படாதீங்க ன்னு சொன்னேன்.

அவர் இல்லை ன்னு தலையாட்டிக்கிட்டே சொன்னார்.

அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல பிரியா. இது வேற ஒரு விஷயம். உன்கிட்ட தனியா சொல்லணும். அதான் டிரைவரைக் கூட அவாய்ட் பண்ணிட்டு நான் வண்டி ஓட்டிட்டு வரேன்.

உங்க பேரு பிரியா. . . . முதல் தடவையா பேரைச் சொல்றீங்க.

நான் இங்கே பேஷன்ட். அதோட இந்த ஆஸ்பத்திரியோட பௌண்டர் டாக்டர் ரவியோட மனைவி. என் பெயர் உங்களுக்குத் தெரியாதா டாக்டர் ?

தெரியும் மேடம். ஆனா நீங்களா சொல்றீங்களே அதான். ஜஸ்ட் நோட்ஸ் எடுத்துட்டிருக்கிறேன். மயக்கத்தில இருந்து எழுந்துருக்கிறீங்க. அதான் நோட் பண்ணிக்கறேன். எங்க சீ்ப் கேட்பாங்களே.
ரியா சிரித்தாள்.

பிரியாவும் லேசாக சிரித்து விட்டு தொடர்ந்தாள்.

அவர் சொல்லப் போற விஷயம் என்னவா இருக்கும்னே என்னால ஊகிக்க முடிய வில்லை.

ஐந்து வருஷம் சந்தோஷமான வாழ்க்கை. சின்ன ஆஸ்பத்திரியா இருந்தாலும் நல்ல பிராக்டீஸ். நல்ல வருமானம். அதனால்தான் ஆஸ்பத்திரியை பெரிதாக்கலாம் ன்னு பாங்க் லோனெல்லம் டிரை பண்ணிட்டிருந்தார்.

அதைத் தவிற வேற என்ன சொல்ல முடியாத பிரச்சனை ? நான் குழப்பத்தில இருந்தேன்.

என்ன விஷயம். மத்ததெல்லாம் சொல்ற மாதிரி இதையும் பட்டுன்னு சொல்லிருங்களேன்.

ஆனா நான் எதிரே பார்க்காத ஒரு விஷயத்த நீளமான ஒரு மௌனத்துக்குப் பிறகு சொன்னார்.

ஐந்து வருஷமா உன்கிட்ட சொல்ல நினைச்சு நினைச்சு முடியாமப் போன ஒரு விஷயத்த இன்னைக்கு பட்டுன்னு சொல்லிடறேன்.

என் கூட படிச்ச அருணாவை நான் உயிரா காதலிச்சேன். அவளை . . .

நான் அதிர்ச்சியோட ரவியின் கையை அழுத்தமாகப் பிடித்தேன். இதை ஏதிர் பார்க்காத ரவி சட்டென்று பிரேக்கை அழுத்தினார் போல. ரவி சீட்டிலேயே இருக்க நான் முன் கண்ணாடிய உடைச்சுக்கிட்டு வெளியே போய் விழுந்துட்டேன்.

ரியா அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள். கண் கலங்கி கண்ணீர் வழியத் தொடங்கவும், அவசரமாகத் திரும்பி கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

பிரியா குழம்பாமல் கோர்வையாக எல்லாவற்றையும் நினைவில் கொண்டு வந்து பேசியது அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. அவளுக்கு முற்றிலுமாக நினைவு திரும்பி விட்டது.

அறையின் அழைப்பு மணி ஒலிக்கவும் ரியா கதவைத் திறந்தாள்.

ஒரு மத்திய வயதுப் பெண்ணும் ஒரு இளம் வாலிபனும் உள்ளே வந்தார்கள் - ரியா சந்தோஷமாகக் கூறினாள்.

பிரியா ஆன்டிக்கு நல்லா நினைவு வந்துடுச்சு. நடந்ததை அப்பிடியே நினைவுக்குக் கொண்டு வராங்க.

பிரியாவுக்குக் கோபம் வந்தது. இவளுக்கு நான் ஆன்டியா ? ஒரு வேளை வந்திருக்கும் பெண்ணைச் சொன்னாளோ ?

ரியா அவனைக் கையைப் பிடித்து இழுத்து வந்தாள்.

பிரியா ஆன்டிக்கு நினைவு வந்தாச்சு. என்கிட்டே நல்லா பேசிக்கிட்டு இருந்தாங்க. பாரு .. . . நீயும் பேசு. . .

ஆன்டியா ? - பிரியா

புதிதாக வந்த பெண் பேசினாள்.


நான் இங்க டாக்டர். ஆக்ஸிடன்ட் ஸ்பாட்ல இருந்து உங்களையும் ரவியையும் இங்க கொண்டு வந்தது நான்தான். பின்னால பேபி ஸீட்ட இருந்ததால குழந்தைக்கு எந்த அடியும் இல்ல. சொல்லி விட்டு அமைதியானாள்.

அவன் தொடர்ந்தான்.

ஆக்ஸிடன்ட் ஸ்பாட்ல இருந்து உங்களையும் அப்பாவையும் கொண்டு வந்து முழுக்க டிரீட்மென்ட் பாத்தது ஆன்டிதான்.

பிரியா அதிர்ச்சியாக அவனைப் பார்த்தான்.

அப்பா ??

அந்தப் பெண் சொன்னாள். இது உங்க மகன் பரத். . . . டாக்டர் பரத். எம்.டி. பண்ணிட்டு இருக்கான். அவள் அவனோட ்பியான்ஸி. எனக்கு அடுத்ததா உங்கள எல்லா விதத்துலயும் பாத்துக்கிட்ட டாக்டர் ரியா.

பரத் தொடர்ந்தான்.

உங்களுக்கு தலைல அடி. நினைவு திரும்பல. கோமால போயிட்டீங்க. அப்பாவுக்கு . . . . நிறுத்தினான்.

அவருக்கு சடன் பிரேக்கினால ஸ்டியரிங் மோதி மார்பெலும்பு நொறுங்கி நுரையீரல கிழிச்சுடுச்சு. வென்டிடேல்டர்ல எல்லாம் வச்சு ஆன்டி ஆறு நாள் சாப்பாடு உறக்கமே இல்லாம போராடுனாங்களாம். இப்ப கூட எல்லாரும் சொல்வாங்க.

பிரியாவிக்கு கண்ணீர் வழிந்தது.

குரல் நடுங்கக் கேட்டாள். ஆறு நாளுக்கு அப்புறம் ?

அந்தப் பெண் திரும்பிக் கண்ணைத் துடைத்தாள்.

பரத் தொடர்ந்து சொன்னான்.

ஆறு நாளைக்கு அப்புறம், ஆன்டி, சீ்ப் டாக்டரா பொறுப்பெடுத்துக்கிட்டாங்க. என்னைய கண்ணுக்குக் கண்ணா வளர்த்து படிக்க வச்சாங்க. ஆஸ்பிடல பெரிசா டெவலப் பண்ணினாங்க.

அது ஆச்சு. . . . இருபது வருஷம். . .

இப்ப ரவி மெமோரியல் ஆஸ்பத்திரி ஒரு மல்டி ஸ்பெஷலிடி ஆஸ்பத்திரி.

மெமோரியல் ???

பிரியா உடைந்தாள். அழுதாள். Nரஜ; தாவி அணைத்துக் கொண்டான்.

பிரியா சீ்ப் டாக்டரைப் பார்த்து கை கூப்பினாள். அவள் பிரியாவின் கைளைப் பரிவோடு பற்றிக் கொண்டாள்.

பரத் . . . அம்மாவப் பாத்துக்க. கூடவே இரு. ரியா . . . நீயும் இரு.

அவள் எழுந்து வாசலை நோக்கி நடந்தாள்.

டாக்டர். உங்க பேர் சொல்லவே இல்லயே . . . . என்ன பேர்.

அவள் திரும்பி ஸ்னேகமாகப் புன்னகைத்தாள்.

சொன்னாள்.

அருணா.

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...