துப்பாக்கி முனையில்

த்ரில்லர்
4.7 out of 5 (3 )

துப்பாக்கி முனையில்

பனி பொழிந்தவாறு விடியல் இருந்திட ஆதவ் தன் வீட்டின் வெளியே வந்தான். வெள்ளை நிற சட்டையின் மேற்பையில் வைத்திருந்த கைப்பேசியினை எடுத்து நண்பனை அழைத்தான். "ராம் நம்பிக்கையான ஆள்தான" என கேட்டான். அந்த பக்கத்தில் இருந்து வந்த குரலில் "ஆதவ் நம்பளாம் டா, நான் விசாரிச்சிட்டன்"னு கூற, ஆதவ் "நம்ப இடத்துக்கு தான வராங்க" ன்னு கேட்க, "ஆமா ஆதவ், கார் நம்பர் 6226 பாத்துக்கோ, சரி நா வைக்கட்டா"ன்னு நண்பன் கேட்க. ஆதவ் " வை டா" ன்னு சொல்லி கைப்பேசியை அணைத்தான். இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு ஒரு நிமிடம் அமைதியாய் இருந்தான். பின் சாவியினை பொருத்தி வாகனத்தில் புறப்பட்டான். அவனது வாகனம் சிறு தூரம் சென்ற பின் ஒரு டீக்கடை யின் முன் நின்றது. வண்டியிலிருந்து இறங்கிய ஆதவ் நாற்காலியில் அமர்ந்தான். அங்கே நின்றிருந்த ஒருவரிடம் "அண்ணா அந்தா சந்து பக்கம் ஏதாவது கார் இருக்கான்னு பாருங்க" ன்னு சொன்னான். அவர் பயந்து கொண்டே போய் பார்த்தார். "நிக்குது தம்பி" ன்னு சொல்ல, "கார் நம்பர் என்ன னா" ன்னு கேட்க அவர் கண்ணை துடைத்துக் கொண்டு "6226, என உரைத்தார்". அமர்ந்திருந்த ஆதவ் எழுந்து வாகனத்தில் புறப்பட்டான். காருக்கு முன் வண்டி நின்றது. வண்டியிலிருந்து ஆதவ் இறங்கினான். காரிலிருந்து துப்பாக்கியுடன் காவலர் கதிர் இறங்கினார். ஆதவ் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுப்பதற்குள் ஒரு முனையிலிருந்து வந்த தொட்டா அவன் கையினை பதம் பார்த்தது. அவன் முன் சட்டென நான்கு காவலர்கள் சூழ்ந்து கொண்டனர். அவன் நெற்றியில் துப்பாக்கியின் முனையை வைத்தான் கதிர். ஆதவ் வின் கையில் இரத்தம் வழிந்திட பேச முடியாமல் நின்றான்.

கதிரின் கைப்பேசியிற்க்கு அழைப்பொன்று வந்தது. அதில் கதிர் " சார், கன்பாயின்ட் ல தான் இருக்கான் சார். ன்னு கூற, பின் ஓகே சார் நா வெயிட் பண்ணறன்அன்னு" கூறி அழைப்பை துண்டித்தான். துப்பாக்கியினை நெற்றியிலிருந்து இறக்கினான் கதிர். ஆதேவ் சிறிது வலியில் ,"என்ன கதிர் வெயிட் பண்ண சொன்னாங்களா, என்னைய எதிர்கட்சி போட சொல்லியிருந்தா நீ சுடுவ, இதே ஆளுங்கட்சி போட சொல்லியிருந்த நாலு பேரு வருவாங்கா நீ போவ இதுல எதோ ஒன்னு நடந்திரும்ல"ன்னு சொல்லி வலியுடன் சிரித்தான். கதிர், " என்ன ஆதவ் அரசியல நல்ல தெரிஞ்சி வைச்சிருக்க போல" ன்னு கேட்டான். தன் உயிர் இன்று பிரிந்துவிடும் என்று தெரிந்த ஆதவ் கதிரிடம் " கதிர், நா கடைசிய ஒரு டீ சாப்பிடனும்னு ஆசைப்படுறன்அ கொஞ்சம் வாங்கித்தரியான்னு" கேட்டான். கதிர் தன் அருகே நின்றிருந்த ஒருவரிடம் கண்ணை காட்டினான். அவர் சென்றவுடன், ஆதவ்" கதிர் என் தேவிக்கிட்ட பேசனும்" ன்னு சொல்ல, கதிர் " முடியாது ஆதவ்" ன்னு கதிர் சொன்னான். ஆதவ் "கதிர் நா சொல்லறத எழுதி என் தேவிக்கிட்ட கொடுத்திடு"ன்னு சொன்னான். கதிர் " அவன் சொல்லறத எழுதுங்க அண்ணா" ன்னு ஒருவரிடம் சொல்ல அவர் பேப்பருடன் ஆதவ் சொல்வதை எழுதினார். ஆதவ் தன் மனைவியிடம் தனக்கு பிறக்க போகும் குழந்தை சரியான முறையில் வளர்க்க சொல்லியும் தன்னை விரும்பியவளுடன் முழுவதுமாய் வாழ முடியவில்லை என்றும் கூறினான்.

டீ டம்ளருடன் ஒருவர் வர, ஆதவ் கண்ணை துடைத்துக் கொண்டு இடப்புற கையால் டம்ளரை வாங்கி வாயின் அருகே கொண்டு சென்றான். எதிரிலிருந்த கதிரின் கைப்பேசியில் குறுஞ்செய்தி ஒன்று வந்த ஒளி கேட்டது. கதிர் அதை பார்த்தான். ஆதவ் தன் குடித்த டீ டம்ளரை கீழே இறக்கினான். கதிர் தன் கையிலிருந்த துப்பாக்கியை மேலே உயர்த்த, ஆதவ் டம்ளரை கீழே உடைத்து அதன் கண்ணாடி துண்டால் தன் கழுத்தை அறுத்து கொண்டான். கதிர் துப்பாக்கியை போட்டுவிட்டு ஆதவ்வை பார்த்தான். கைகளும் காலும் துடிக்க ஆதவ் சில நொடிகளில் இறந்தான். வெள்ளை சட்டை சிவப்பு நிறத்தில் நனைத்தைப் போல் மாறியது. அங்கு நின்றிருந்த காவலர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்த்து நடக்க. கதிர் ஆதவ் அருகே வந்து குணிந்து அவன் திறந்த கண்களை மூடினான்.

எழுத்தாளர்

சி. விக்கனராஜ்

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...