கதவைத் தட்டும் கரங்கள் - திகில் கதை

த்ரில்லர்
4.8 out of 5 (4 )

கதவைத் தட்டும் கரங்கள் - திகில் கதை

மலையடிவார கிராம ம். எங்கு பார்த்தாலும் நெடிய மரங்களும் செடிகளும் அடர்ந்து வளர்ந்திருந்தன. இரவில் மரப்பூச்சிகளின் சத்தம் ஒரு அமானுஷ்யத்தினை உருவாக்கும்… அப்படிப்பட்ட இடத்தில் தனியிடத்தில் வசிக்கிறார் நேத்ரன்.

”படபடவென்று கதவைத் தட்டும் சத்தம் கேட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நேத்ரன் திடுக்கிட்டு விழித்துக் கொண்டார். நேத்ரன் திருமணமாகி மனைவியை இழந்தவர்…. பிள்ளைகளும் இல்லை. தனிஆள். தொழில் மர வியாபாரம்.

யார் இந்த நடுஜாமத்துல… உன்னிப்பாக கவனித்தவர்… வேற யார் வீட்டு கதவோ தட்டுற சத்தமா இருக்கும் என்று படுக்கையில் படுத்தவரின் காதில்….மீண்டும். கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.

”அட நம்ம வீட்டுக் கதவில்தான் கேட்குது… சந்தேகத்தோடு கதவின் அருகே போன போது… சத்தம் நின்று விட்டது.

கதவைத் திறந்து எட்டிப்பார்த்தால் யாருமில்லை.

”யாருப்பா? கதவைத் தட்டுனது” குரல் கொடுத்தார். பதில் இல்லை. கும்மிருட்டு மயான அமைதி.

”சே! கொஞ்ச நாளா இதே தொல்லையாப் போச்சு. கதவைத் தட்டுறதும். திறந்து பார்த்தால்… ஆளில்லாத தும்…அவரின் மனதில் சற்று திகிலூட்டும் விதமாகத்தான் இருந்த து.

அந்த திகிலில் புரண்டு புரண்டு படுத்து தூக்கம் வராத தால் உடல் சோர்வடைந்த து.

மறுநாள் காலை அக்கம்பக்கத்து வீடுகளில் ”டேய் மணி ஜாமத்துல கதவைத் தட்டினீயா? இப்படி எல்லோரிடமும் கேட்க…. எல்லோரும் ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.

”அண்ணே ! என்னாச்சு? நம்மூர்ல எட்டுமணிக்கே உறங்கிடுவோம் யாரும் வெளியே வாராதில்லே..அப்படியிருக்க யார் கதவைத் தட்டப் போறங்க” என்று சொன்னர்.

இல்லே தம்பி ஒரு பத்து நாளாத்தான் கதவைத் தட்டுற சத்தம் கேட்குது.. எட்டிப் பார்த்தால் யாருமில்லே.

”அதெல்லாம் பிரம்மையா இருக்கும்ண்ணே” பயப்படாம தூங்குங்க” என்றான் ஒருவன்.

அன்றிரவு…. . அந்த காலத்து கடிகாரத்தின் மணியோசை .டிங்…டிங்.டிங்” என்று பன்னிரெண்டு முறை அடித்து அர்த்தஜாம ம் என அறித்த து. பன்னிரெண்டாவது மணியடிக்கும் போது…. ”தட..தட..தட”வென கதவைத் தட்டும் சத்தம் கேட்டு…திடுக்கிட்டு எழுந்தான் நேத்ரன்.

கதவைத் திறந்து எட்டிப்பார்த்தால்…. யாருமில்லை… மறுபடி படுக்கையில் படுத்தார்.

மறுநாள் இரவு…கதவைத் தட்டும் சத்தம் கேட்கவில்லை.

”அப்பாடா! கதவு தட்டுற சத்தம் கேட்கலை” நிம்மதியோடு படுக்கையில் தூங்கு போது… கடிகாரத்தின் பன்னிரெண்டு மணி சத்தம் கேட்டது. கூடவே நாய் விசித்திரமாய் ஊளையிட்ட சத்தம் கேட்டது.

ஆனால் கதவு தட்டும் சத்தம் மட்டும் கேட்கவில்லை.

அதிகாலை எழுந்து டீக்கடையில் தினசரி நாளிதழ் ஒன்றினைப் பிரித்து படித்தார் நேத்ரன்.

”அதில் கொடைக்கானல் நெடுஞ்சாலையில் விபத்து…. ஒரு பெண்ணும்… ஆணும்…. அடையாளம் தெரியாத வாகனத்தால் மோதி…. மருத்துவமனையில்… அனுமதிக்கப்பட்டனர்… பெண்ணின் வயது சுமார் நாற்பத்தைந்து என்று ஆணின் வயது இருபது என்றும். அநேகமாக தாயும் மகனுமாய் இருக்கலாம் . என்றும் விபத்துக்குள்ளாக்கிய வாகனத்தையும். நபரையும் போலிசார் தேடி வருகின்றனர். தீவிர சிகிச்சை பலனளிக்காத தால் பெண் இறந்து விட்டார். மகனின் இரு கரங்களும் படுகாயமடைந்துள்ளன என்ற செய்தி அவரின் மனதில் குறுகுறுத்த து.அந்த செய்தித்தாளின் நாளைப் பார்த்தார்… பழைய தேதி குறிப்பிட்டிருந்த து. ஆதாவது அவரின் கார் பயணத்தின் மறுநாள் செய்தியாக இருந்த து.

”ஒரு வேளை நாமதான் மோதி இடிச்சுட்டோமா? ”

”சே!‘ சே! எவ்வளவு குடிச்சாலும் போதைக் கட்டுக்குள்ளாறதானே இருக்கும்” தேற்றிக் கொண்டார் நேத்ரன்.

அந்த உறுத்தல், பயம், கவலை எல்லாவற்றையும் மறக்க குடித்து விட்டு தூங்கினார்.

”டிங்..டிங்..டிங்” என்ற மணியோசை மணி பன்னிரெண்டு என அறிவித்த து.… கூடவே… நாய்கள் ஒன்று சேர்ந்து ஊளையிடும் சத்தம்…

கதவைத் தட்டும் சத்தம் பலமாய் கேட்டது. பயந்தவாறே போர்வையைப் போர்த்திக் கொண்டு கதவைத் திறந்து பார்த்தார்… ஆங்கே…. ”ரெண்டு கைகள் மட்டும் ”ஆளின் உருவம் மெல்லிய புகைப் போல காட்சியளித்த து.

”ஆ! ஐயோ பேய் பேய்”அலறிய அலறில் அந்த சுற்றுவட்டாரமே விழித்து கொண்டது.

அவருக்கு துணையாக இரண்டு பேர் அவருடைய வீட்டில் படுத்துக் கொண்டனர்.

மறுநாள் டீக்கடையில்…. ”ஏம்பா ! நேத்ரா நேத்து நல்லா பயந்துட்டே போல இருக்கே! ஏதோ காத்து சேஷ்டையா இருக்கும்” எதுக்கும் மந்திரவாதி இல்லே சாமியார் யாராச்சிலும் பார்த்துட்டு வந்துடேன்” என்றார் டீக்கடையில் உள்ளவர்.

”ஆமாங்க ! பரிகாரம் செய்யணும்தான். கொடைரோடுல ஒரு சாமியார் இருக்கார். அவரைப் பார்த்துட்டு வந்துடறேன்” என்று காரில் கிளம்பினார்.

கார் கொடைரோடில்…. சென்ற போது வழியில்… ”ஏம்பா இந்த ஊர்ல பத்து நாளைக்கு முன்னால யாராவது ஆக்ஸிடெண்ட்ல மாட்டிக்கிட்டாங்களா” என்று மெதுவாய் விசாரித்தார்.

”எதுக்கு கேட்கறீங்க? ஆக்ஸிடெண்ட் பண்ண ஆளை ஒனக்கு தெரியுமா” பிலுபிலுவென பிடித்துக் கொண்டனர். இல்லேப்பா பேப்பர்ல பார்த்தேன். ஆதான் வேற ஒண்ணுமில்லே என்று சமாளித்து…வேறு நபரிடம் விசாரிக்க… அப்படியா? அந்த பையன் அதோ தெரியுதே மலையடிவார ஓட்டு வீட்டுலதான் குடியிருக்கான் ஆஸ்பிட்டல் இருந்து.. ப வந்துட்டான்” என்றார்.

” மீண்டும் காரில் புறப்பட்டு மலையடிவாரத்தின் ஓட்டு வீட்டின் கதவைத் தட்ட…”யாருப்பா! அது.. கதவைத் தட்டறது” பெண்ணின் குரல்.

மீண்டும் பயம் உடம்பைக் கௌவியது.… ”ஏதோ ஒரு செய்தியைப் பார்த்துட்டு நாமதான் ஒண்ணுக்கு ஒண்ணு முடிச்சு போட்டு பயந்திட்டிருக்கோம்” என்று தேற்றி கொண்டார் நேத்ரன்.

கதவைத் திறந்தவள்… நேத்ரனைப் பார்த்தவுடன் ”ஏண்டா குடிகார நாயே! குடிச்சுட்டு எங்க இரண்டு பேர் மேல காரால மோதிட்டு நிக்காம ஓடிப் போயிட்டியா?”

நீ எங்கே ஓடினாலும் நான் தேடி வந்திடுவேன்டா!... நான்தான் ஒன் வீடு தேடி வந்து தினம் கதவைத் தட்டுறேன். ஆனால் நீ நிம்மதியா தூங்கற” எப்படிடா தூங்கறே” உலுக்கினாள்.

”என்னை மன்னிச்சுடும்மா குடிபோதையில இடிச்சுட்டிருக்கேன் போல இருக்கு” ஒன் கால்ல விழறேன்” என்று காலில் விழப் போனவரைத் தடுத்து என் காலில் விழ வேணாம் என் பையன் வருவான் அவன் கால்ல விழு” என்று சொல்லி விட்டு வீட்டின் பின்புற கதவின் அருகில் சென்றவள் மீண்டும் வரவில்லை.

சற்று நேரத்தில்… அந்த வீட்டின் கதவை வெளிப்புறத்தில் இருந்து திறக்கும் சத்தம் கேட்டது.

” என்ன இது? நாம வரும்போது கதவை இந்தம்மாதானே திறந்தா…இப்போ வெளியில இருந்து திறக்கிற சத்தம் கேட்குதே” எல்லாமே மர்ம மாய் இருக்கே” என்று திகிலில் ஆழ்ந்தார்.

”உள்ளே வந்த பையன் ”யாருப்பா ? நீ எப்படி பூட்டின வீட்டுக்குள்ளாற வந்தே! ” என்று அவன் பங்குக்கு பீதியைக் கிளப்பினான்.

. அப்போதுதான் பார்த்தார். அவன் இரு கைகளும் இல்லை.

நான் வரும்போது ஒரு அம்மா கதவைத் திறந்தாங்களே! அவங்க யாரு? என்று கேட்டான்.

”கதவு திறந்திருந்த தா? நான் நல்லாத்தானே பூட்டிகிட்டு போயிருந்தேன் என்றான்.

”இல்லேப்பா ஒரு பெண்தான் கதவைத் திறந்தாள். அது சரி ஒனக்கு தான் இரண்டு கைகளும் இல்லையே எப்படி பூட்டுவ எப்படி திறப்பே. இரண்டு கைகள் இல்லைன்னு ஆனதும்….. வாயாலயே எல்லாத்தையும் செய்ய பழகிகிட்டேன் என்றான்.

”ஒனக்கு சொந்தபந்தம் யாருமில்லையா? ஒன்னோட அம்மா அப்பா எங்கே! என்று விசாரித்தார்.

”அப்பா கிடையாது…அம்மா இருந்தாங்க ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்னால… சந்தைக்கு போயிட்டு இராத்திரில வர்ற போது…யாரோ ஒரு கார்காரன் எங்க ரெண்டு பேர் மேலேயும் இடிச்சுட்டு போயிட்டான். அதில எங்கம்மா இறந்துட்டாங்க. எனக்கு ரெண்டு கையும் போயிடுச்சு.

”தம்பி! பயப்படாதே! நீ என்னோடு வந்துடு… எனக்குன்னு எந்த சொந்த மும் இல்லே…. ஒன்னை என் பையனாகவே பார்த்துக்கறேன்” என்று தன்னோடு காரில் கூட்டிக் கொண்டு ஊருக்கு கிளம்பினார்.

”காரில் கிளம்பும்போது…. முன்புற கார் கண்ணாடியில்…. பையனைப் பார்த்து கையசைத்து வழியனுப்புவது போல ஒரு உருவம் தெரிந்தது. பையனோட அம்மாவின் ஆத்மாதான் என்று நேத்ரனுக்கு புரிந்த து.

மறுநாள் இரவு…..”அர்த்தஜாமத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்க வில்லை. டீக்கடையில். ”ஏம்பா நேத்ரா பரிகாரம் பண்ணிட்டீயா?” என்ற கேள்விக்கு….” அருகிலிருந்த பையனைச் சுட்டிக் காண்பித்தார் நேத்ரன்.

கே. அசோகன்

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...