JUNE 10th - JULY 10th
மகாலட்சுமி வரப்போறா என்று கத்தியபடி ஓடிவந்தான் மகாபிரபு என்னடா சொல்ற என்று அலறியபடி ஓடி வந்தாள் அவனது அம்மா போதும்பொண்ணு, ஏன்டா ஏற்கனவே ஏழு ஆம்பள புள்ள பெத்துட்ட இன்னும் என்னடா உனக்கு போதாதா,
போதாதா னு மூளை சொல்லுது ஆனா ஒரு பொம்பள புள்ள இருந்தா வாழ்க்கை நல்லா இருக்கும் என்று மனசு சொல்லுது மா என்று போதும் பொண்ணிடம் மகாபிரபு சொல்லிக் கொண்டிருக்கும்போது ஏழாவது புள்ள பசிக்கு அழுது கொண்டிருக்க மூன்றாவது புள்ளி பால் புட்டி கொடுக்க ஆறாவது புள்ள வந்து புடுங்க ஒரே கூத்தாக இருந்தது வீடு,
வீடு சிறிய வீடுதான் அதில் பத்து பேரு தூங்குவது அதிசயம் தான்,
தான் பிறந்த கதையைச் சொல்லத் தொடங்கினாள் போதும் பொண்ணு எங்க அப்பா கர்ண பிரபு பையன் பொண்ணு வேணும்னு வரிசையா 12 புள்ள பொம்பள புள்ளைய பெத்து போட்டாரு 13ஆவது பிள்ளையும் பையன் வருவான் என்று பார்த்தார் ஆனால் நான் தான் வந்தேன் அதனால எனக்கு போதும் பொண்ணு னு பேர் வச்சாரு
பேர் வச்சாரு 14வது பையன் தான் அப்படின்னு முன்னாடியே ஒரு பேர் எடுத்து வச்சாரு அதுக்குள்ள எங்க ஆத்தா காட்டுக்கு விறகு எடுக்கப் போனவ பாம்பு கடித்து செத்துப் போயிட்டா அப்புறம் என் முதல் அக்காவும் இரண்டாவது அக்காவும் தான் என்ன வளத்தாங்க னனு சொல்ல,
சொல்ல சொல்ல கேட்காதவனாய் இருந்தான் மகாபிரபு ஏனென்றால் இந்த கதையை கேட்பது இவனுக்கு ஆறாவது முறை இருந்தாலும் அவன் கேட்பதாக இல்லை,
இல்லை என தெய்வம் நினைத்திருந்தால் எனக்கு இத்தனை குழந்தை பாக்கியம் கொடுத்திருப்பாரா இந்த காலத்தில் என சொல்லிக்கொண்டே வெளியே போனான்,
உங்க அப்பா இறந்ததுக்கு அப்புறம் நான் ஒருத்திதான் உன்ன கஷ்டப்பட்டு வளர்த்தேன் நானும் போயிட்டா நீ இந்த உலகத்துல என்ன செய்ய போற என்று வருந்திக் கொண்டு இருந்தாள்,
இருந்தாள் ஆம் இதையெல்லாம் கேட்டுக் கொண்டு தனலட்சுமி உள்ளேதான் இருந்தால் என்ன சொல்வது என்று தெரியாமல்,
தெரியாமல் தட்டிவிட்ட சர்க்கரை டப்பாவை எடுக்க இரண்டாவது மகன் நான்காவது மகனைக் கொட்டிக்கொண்டு இருந்தான் ஆனால் சர்க்கரை டப்பாவில் சர்க்கரை கீழே கொட்டவே இல்லை திடீரென வாசலில் பைனான்ஸ் காரர் வந்து நிற்க மூத்த மகன் டீக்கடையில் வேலை செய்துதான் அந்த தின பைனான்ஸ் கட்டுகிறான் அவன்,
அவன் பிறக்கும் போது இருந்த கடன் இப்போது மேலும் அதிகமாகத்தான் இருக்கிறது இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு தீபாவளி வர வருஷம் வருஷம் பிள்ளைகளுக்கு மட்டும்தான் துணி எடுப்பாங்க அதுவும் வீட்ல இருக்கிற அதாவது ஒரு தடவை போட்ட துணியை முதல் பையன் முதல் தடவை போட்ட துணியை இரண்டாவது பையன் அடுத்த வருஷம் போட்டுக்குவான் அது மாதிரி போட்டு பார்க்கும்போது யாருக்கு பத்தலையோ அவங்களுக்கு மட்டும் தான் அந்த வருஷம் துணி, இரண்டு பேருக்கு ஒரு துப்பாக்கி அவ்வளவுதான் தீபாவளி,
தீபாவளிக்கு வரும் பலகாரம் முறுக்கு அதிரசம் எல்லாம் ஒரு வாரம் தாக்குப்பிடிக்கும் அனைவருக்கும்,
அனைவருக்கும் தீபாவளிக்கு காசு தருவார் போதும்பொண்ணு வீட்டு வேலை செய்யும் இடத்தில் அவள் 40 வருடமாக ஒரே வீட்டில் தான் வேலை செய்து வருகிறாள் அந்த காசும் கடன் கட்டுவதற்கே சரியாகப் போய்விடும்,
சரியா போய்விடும் சரியா போய்விடும்னு கடன் கஷ்டம் எல்லாம் சரியா போயிடும் என்று எத்தனை வருஷம் தான் இப்படியே இருக்கப் போறீங்க என்று பக்கத்து வீட்டு அம்மா தனலட்சுமி கிட்ட வாராவாரம் வந்து சொல்லிடுவாங்க அவளும் வெளியே வர கூச்சப்பட்டு உள்ளேயே இருப்பாள் பசங்கதான் தண்ணீ தூக்கிட்டு வருவாங்க தினமும்
தினமும் 3 பைனான்ஸ் காரன் வந்துவிடுவான் புரோட்டா மாஸ்டருக்கு வர்ற சம்பளத்தை என்னதான் பண்றது என்று மளிகை கடைக்காரரிடம் புலம்பிக்கொண்டிருந்தான் மகா பிரபு,
மகாபிரபு கடையில் புரோட்டா போட்டுகிட்டு மனைவிக்கு பிரசவ வலி எப்போ வரும்னு யோசிச்சுட்டே இருந்தான் திடீர்னு ஒருநாள் மூத்த பையன் கடைக்கு வந்து அப்பா அம்மாக்கு வலி வந்துருச்சுன்னு சொல்ல வேக வேகமாக ஓடினான்,
ஓடினான் ஆட்டோவை அழைக்க இரண்டாவது மகன் ஒரு வழியாக பெரியாஸ்பத்திரி வந்து சேர்க்க அங்க நரஸ் பார்த்துட்டு இன்னும் நீங்க குடும்ப கட்டுபாடு பண்ணலயானு கேட்டுட்டு இருங்க இந்த தடவை பண்ணிவிட்டுறோம் னு கத்த ஆரம்பிச்சிருச்சு,
ஆரம்பிச்சிருச்சு இதுக்கு என்ன பிரச்சனை அப்படின்னு மனசுக்குள்ள சொல்லிட்டு வெளியே வந்து நிற்க 7 மணி சாப்பாடு வந்து சேர்ந்துச்சு ஆமாங்க பெரிய ஆஸ்பத்திரிக்கு காலையில டிபன் மதியம் சாப்பாடு மாலை டீ பிஸ்கட் இரவு டிபன் வகை வகையா டிரஸ்டில் இருந்து வந்து கொடுத்துடுவாங்க வேலைக்குப் போகாமல் இதை நம்பி தங்கியிருக்கிற பேர் நிறைய இருக்காங்க அங்க
அங்க வந்து சேட்டை செய்யக்கூடாது என்று சொல்லி மூன்றாவது பையன் மட்டும் கூட்டி வந்திருந்தான், இரவு 12 மணி ஆனது பையனுக்கு பசி எடுத்தது அங்கு ஒரு கடை கூட இல்லை வெளியே போய் பார்த்துட்டு வரேன்னு நடக்க ஆரம்பிச்சான் டிராபிக் போலீஸ் வண்டி புடிச்சுட்டு இருந்தாங்க இவன கூப்பிட்டு எங்கே போகிறாய் என்று கேட்க அவன் பிள்ளைக்கு சாப்பிட ஏதாச்சும் வாங்க போறேன் என்று சொன்னான் இந்த நேரத்துல உங்க அப்பனா கடை வைத்திருப்பான் என்று திட்ட கோவம் வந்து அடக்கினான் மகா பிரபு, போ போ னு துரத்திவிட்டார்கள் இவனும் நடக்க ஆரம்பித்தான் ஒரு கடை வாசலில் நாலைந்து பேர் உள்ளே போயிட்டு வரத பார்த்துட்டு உள்ள போய் பாத்தா அது பார் ஓட பின்பக்கம் அங்கு ஒருவன் அழகாய் தன்னை சுற்றி சரக்குகளை அடுக்கி வைத்து காய்கறிகளை போல் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தான் ஒரு கடையும் இருக்காதுனு சொன்னாரு இந்த கடை மட்டும் எப்படி இருக்குன்னு நெனச்சுட்டே வெளிய வந்துட்டான்,
வந்துட்டான் ஒருத்தன் அவனை புடிச்சி டிடிஎஸ் போற்றலாம் சார்னு ஒரு போலீஸ் சொல்ல அவனை கூப்பிட்டு ஊதா சொல்றாங்க இடுப்பை செக் பண்றாங்க ஒன்னும் இல்ல அதனால போன அனுப்பிவிட்டாங்க ஒண்ணுமே புரியாம ஆஸ்பத்திரி வந்தான் மகாபிரபு அங்க அவன் பையன் தூங்கி கொண்டு இருந்தான் கொஞ்ச நேரத்துல விடிஞ்சிருச்சு,
விடிஞ்சிருச்சு இன்னையோட நம்ம கஷ்டம் காலத்திற்கு ஒரு முடிவு வந்துருச்சுன்னு யோசிச்சுட்டே படுத்திருந்தவனை ஒருவர் வந்து உங்க மனைவிக்கு புள்ள பொறந்திருச்சு என்று அழைக்க வேக வேகமாக ஓடிச்சென்று பொடிசாக இருந்த குஞ்சு மணியை பார்த்தவன் தொட கூட வில்லை மனைவி நலத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்தான் இனிமேல் குழந்தை வேண்டாம் குடும்ப கட்டுப்பாடு பண்ணி விடுவோம் என்று முடிவு எடுத்தான் ஒரு வழியாக,
ஒருவழியாக பெண் குழந்தை பிறந்திருக்கும் என்று சாமிகிட்ட வேண்டி விட்டு பெரியாஸ்பத்திரி வந்தாள் போதும் பொண்ணு குழந்தையைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியுடன் திரும்பி வந்தாள்
வந்தாள் மகாலட்சுமி என்ற எண்ணிய அனைவருக்கும் ஒரு ஏமாற்றம்
ஏமாற்றம் மட்டுமே வாழ்க்கையாக இருந்தது தனலட்சுமிக்கு, ஆஸ்பத்திரியில் முதல் நாள் ஒரு படுக்கையில் தாயும் குழந்தையும் இருந்தார்கள் இரண்டாம்நாள் ஒரு படுக்கையில் இரண்டு தாய் இரண்டு குழந்தைகள் என மாறியது ஆம் ஒரு நாளைக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சதம், நான்காம் நாள் படுக்கை தரைக்கு மாறியது,
மாறியது வாழ்க்கை என நினைத்த எல்லோருக்கும் மாறியது கூடுதல் கடனாக ஏழ்மையாக சமாளிக்க முடியாத நிலைமையாக பத்துபேர் இருந்த வீடு 11பேர் ஆக மாறியது சத்தமும் கூடுதலானது வீட்டில்,
வீட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் இருந்தால் வீடு சந்தை காடாக இருக்கும் மாதங்கள் ஓடியது கடனும் கூடியது பால்வாடி பள்ளி என ஆளுக்கு ஒரு பக்கம் இருக்க இப்படியே ஓடியது வாழ்க்கை,
வாழ்க்கை முழுவதும் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த போதும் பெண்ணை அழைத்து ஒரு நாள் முதலாளி நீ உன் புள்ளைங்க எல்லாரும் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்திடுங்க விருந்துக்கு என்று அழைக்க சரிங்க என்றவள் ஞாயிற்றுக்கிழமை அன்று அனைவரையும் அழைத்து வந்தாள் அந்த அழகிய வீட்டிற்கு,
வீட்டிற்கு வந்த அனைவரும் அதிசயமாக பார்த்தார்கள் வீட்டிற்கு முன் சிறிய தோட்டம் தோட்டத்தில் முயல் கிளி குருவி பின்புறம் வாழை மரம் மாமரம் இரண்டு பெரிய தென்னைமரம் தக்காளி வெண்டைக்காய் கத்திரிக்காய் என எல்லாமே உள்ளேயே இருக்கிறது ஹால் ரூம் எல்லாம் கண் கவரும் வண்ணங்களில் ஆளுக்கு ஒரு திசையில் திரிய அனைவரையும் உட்கார வைத்து கறிவிருந்து வைத்தனர் அவர்கள் பார்த்திராத கறி அனைத்தும் ஒரே இலையில்,
இலையில் மிச்சமே இல்லாமல் முடித்து விட்டு எழுந்த போதும் பொண்ணை வெளியே அழைத்தார் முதலாளி, நான் என் பையன் வீட்டுக்கு போறேன் அவன் அமெரிக்காவிலேயே இருக்கலாம்னு சொல்றான் நானும் பேரப் பிள்ளைகளோட அங்கே இருக்கலாம்னு இருக்கேன் அடுத்த வாரம் கிளம்புறேன் இனிமே நீயே இந்த வீட்டுல உன் பிள்ளை பேர பிள்ளைகளோட இருந்துக்க என்று சொல்ல வயிறு நிறைந்த அவளின் மனது நிறைய போகையில் வீட்டை உன் பேருக்கு எழுதி வைத்துவிட்டு தான் போவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கையில் உள்ளே இருந்து ஒரு அலறல் சத்தம்...
மகாலெட்சுமி வரப்போறா!!!!
#510
32,117
450
: 31,667
9
5 (9 )
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
sundarcon742004
mordernmachi
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50