JUNE 10th - JULY 10th
யாருக்கும் தெரியாமல் ஷூட்டிங் பேருந்தில் ஏறி ஒளிந்துக்கொண்டான் ஹாசன். அது குப்பத்தைக்கடந்து அவனை கடந்தகாலத்திற்கு கூட்டிப் போய்க்கொண்டிருந்தது. தன் ரத்தத்திலேயே சினிமா இருப்பதை ஹாசன் அப்போது தெரிந்திருக்கவில்லை. நேற்றைய இரவின் நிகழ்வுகளை அவன் நினைவுகள் நகல் எடுத்து வைத்திருந்தன. பள்ளிக்கு செல்லாமல் குப்பத்து காட்சிகளை படம்பிடிக்கும் படப்பிடிப்பை வேடிக்கைப்பார்த்துவிட்டு வீடடைந்த அவனை மனோரமா ஆயா ஏசியது அவனது முன் நிழலாடியது. பேருந்தின் ஜன்னலின் வழி கட்டிடங்களின் மின்னொளி வந்து விழ நிகழ்காலத்திற்கு திரும்பினான். முதல்முறை நகரத்தை வேடிக்கையாய் பார்க்க தொடங்கினான். பாதைவாசியின் வானொலியில் புதிய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே...
ஹா'சன் எட்டிப்பார்க்க விடிந்திருந்தது. அவன் ஒளிந்திருந்த கேரவனில் தன்வயது ஒத்த சிறுவன் ஒருவன் கண்ணாடியின் முன்நின்று அழுதுக்கொண்டிருந்தான். கண்ணாடியும் கலங்கி தெளிய
ஒருவருக்கொருவர் இமைக்காமல் பார்த்தனர். ஹாசனை போலவே இருந்த
கமல் ஹு ஆர் யு! என்றான்.
ஹாசன் தான் குப்பத்திலிருந்து வந்த சிறுகதையை கூறி முடிக்கையில் டக் டக் என யாரோ கேரவனின் கதவை தட்டினர். கமல் உடனே ஹாசனை கூட்டிச்சென்று வாஷ் ரூமில் ஒளியசெய்தான்.கமல் வந்து கதவை திறக்க யாரோ ஒருவர் ஏதோ ஒரு பேப்பரை கையில் குடுத்து மனப்பாடம் செய்துடுங்க என கூறி சென்றார். பின் வாஷ் ரூமிலிருந்து வந்த ஹாசனுக்கு ஒரளவு புரிந்தது. கமல் சினிமாவில் நடிக்கும் நட்சத்திரம் என்பதை யூகித்துவிட்டான். கமலிடம், நீ சினிமாவில் நடிக்கிறாயா? நான் இதுநாள்வரை உன்னைபார்த்ததே இல்லையே என்றான். கமல் ம் இது என் முதல் படம் என்றான். நீ அழுதுகொண்டிருந்த காரணம் இப்போது புரிகிறது. உனக்கு நடிக்க விருப்பமில்லையோ என கேட்டான் ஹாசன். மீண்டும் கண்களின் கதவை கண்ணீர் தட்ட எனக்கு விருப்பமில்லை என்றான். எனக்கு படிக்கத்தான் விருப்பம், என்னை கட்டாயப்படுத்தி நடிக்க வைக்கிறார்கள் என்றான்.
(இப்போது நீங்கள் யூகித்ததும் சரி).
ஹாசன் கமலிடம் நான் உன்னைப் போலவே இருப்பதால் நான் இங்கு நடிக்கிறேன். நீ என் குப்பத்திற்கு சென்று படி என்றான். கமல் இது சரியா வருமா என யோசிக்கையில் யாரோ கதவை தட்ட. இந்த முறை கமலை வாஷ் ரூமில் ஒளியவைத்துவிட்டு ஹாசன் கதவை திறந்தான். நாசர் வெளியே நின்று ஹாசனை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு பர்ஃபெக்ட்! குப்பத்து சிறுவன் போலவே இருக்க, சீக்ரம் வா ஷாட் ரெடி என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இரயில்வே பிளாட்ஃபார்மில் படபிடிப்பு காட்சி என்பதால் யாருக்கும் தெரியாமல் குப்பத்திற்கு செல்லும் இரயிலில் கமலை ஏற்றிவிட்டு, நடிக்க தயாரானான் ஹாசன். குப்பத்திற்கு வந்து நின்றது இரயில். அந்த கறுப்பர் நகரம் கமல் இதுவரை பார்த்திராதது. மனோரமா ஆயாவின் வீட்டைத்தேட, அவன்முன் வந்து நின்றார் ஆயா."என்ச்சி பாக்க சொல்லொ வூட்ல உன்ன காணாம தேடினு ங்க வந்தன் இன்னாடா கோச்சிக்னியா!" என்றார். கமலுக்கு ஆயா பேசும் விதம் பிடிக்க ரசித்து புன்னகை செய்தான். ஆயாவும் பதிலுக்கு கட்டியனைத்து அவனை வீட்டுக்கு தூக்கிச்சென்றார்.
இரயில்வே பிளாட்ஃபார்மில் படபிடிப்பு தொடங்கியது. இரயில்வே நிலையத்தில் செய்தித்தாள் விற்கும் கதாப்பாத்திரம். அச்சு அசலாக செய்திதாள் விற்கும் சிறுவனாக நடித்துமுடித்தான் ஹாசன். சுற்றி இருந்தவர்கள் கைத்தட்ட, மிரட்சியிலிருந்த நாசர் அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும் என நினைத்துக்கொண்டார்.
ஹாசன் கையிலிருந்த செய்தி தாளில் ஆயுள் தண்டனை முடிந்தது வெளியாகிறார் ரகுவரன்.
ஷுட்டிங் முடிந்தது. ஹாசனுடன் நாசர் காரில் புறப்பட்டார். அது அவர்கள் வீட்டிற்கு போய்க்கொண்டிருந்தது. வெல்டன் மை பாய் வெல்டன்! அங்கிள் பேர இன்னும் உயர்த்திருவ நீ என்றார் நாசர். கமலுக்கு அவர் மாமா என்பதை ஹாசன் புரிந்துகொண்டான். கார் மாளிகை போல இருக்கும் வீட்டை அடைந்தது. ஹாசன் இறங்கியதும் கமலின் நாய்க்குட்டி ஓடிவந்து அவன் காலை சுற்றி வந்து வாலாட்டி நின்றது. ஹாசன் நாய்க்குட்டியை கையில் தூக்கிக்கொள்ள, ஹே! கடிச்சிரபோது கமல் என்று போலி அக்கறை காட்டினார் நாசர். மூவரும் வீட்டிற்குள் செல்ல ஹாலில் நடிகை ஸ்ரீதேவியின் படம் பெரியதாக மாட்டப்பட்டிருந்தது. நாசர் மனைவி ஸ்மிதா வந்து ஹாசனை அனைத்துக்கொள்ள அன்பை உணர்ந்தான் ஹாசன்.நாசர் ஹாலில் இருக்கும் அறைக்குள் சென்றார். உன் அறையை மேலே மாற்றிவிடும்படி மாமா கூறியதால் மாற்றிவிட்டோம் என்றார் ஸ்மிதா.ஹாசன் மேலிருக்கும் அறைக்குள் சென்றான். அவனுக்கு வீட்டின் ஞயாபகம் வரவே மொட்டமாடிக்கு சென்று தன் குப்பம் தெரிவதாக நினைத்து பார்த்துக்கொண்டிருந்தான்.
ரகுவரன் குப்பத்திற்குள் நடந்து சென்றார். பத்து ஆண்டுகளிலே தண்டனை முடிந்தாலும் இத்தனை ஆண்டுகள் சிறைவாசம் அவரை உருக்கித்தான் இருந்தது. கமல் குப்பத்திற்கு வந்த அதே இரயிலில்தான் அவரும் வந்தார். அவனை பார்த்து பின்தொடர்ந்தவர் தவறவிட்டு பின் குப்பத்து வீதிகளில்
அலைந்தார். தன் நண்பன் ரஜினியின் 2 முக ருத்திராட்சத்தை கமல் அணிந்திருந்ததே அவனை தேடுவதின் காரணமாயிருந்தது. ஆனால் களைத்து ஒரு தின்னையின் சுவற்றில் சாய்ந்து கண் அசர்ந்தார். ஹாசன் படுக்கையில் இருந்து எழுந்தான், கமலைப்பற்றி தெரிந்துகொள்ள நினைத்தவன். பரண் மேல் ஏறி பழைய புத்தகங்கள் இருக்கும்
மூட்டையை கீழ் இறக்கினான். பாதிபக்கங்கள் செல்லரித்த
டைரி ஒன்றும் இருந்தது.
அதன் கடைசி பக்கத்தின் கடைசி வரியை படித்தான்.
கடைசி முத்தங்களுடன் ஸ்ரீதேவி.
என எழுதியிருந்தது.
ரஜினியும் ரகுவரனும் குப்பத்தில் ஒன்றாக வளர்ந்த நண்பர்கள். படிக்க விருப்பம் இருந்தும் பணமில்லாமல் கிடைத்த வேலைகள் செய்து வளர்ந்தனர். ரகுவரன் கூடாச் சேர்க்கையிலும் வளர்ந்தார். சினிமாவின் மேல்கொண்ட காதலால் இயக்குனர் ஆகும் ஆசையில் நகரத்திற்கு வந்தார் ரஜினி. நடிகை ஸ்ரீதேவிக்கு தன் கதையை சொல்ல வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரீ தேவியை சார்ந்தோருக்கு ரஜினி சொன்ன கதை பிடித்திருக்க, ஸ்ரீதேவிக்கு ரஜினியையும் பிடித்திருந்தது. ஸ்ரீதேவி நடிகர் சிவாஜியின் மகள் என்பதால் அவரை நல்ல கதையில் அறிமுகம் செய்ய காத்திருந்த சிவாஜியின் தம்பி மணிவண்ணனுக்கும் அவரின் மகன் நாசருக்கும் மகிழ்ச்சி. முதலில் யாருக்கும் தெரியாமல் இருந்த காதலும் வளர்ந்து மணிக்கும் நாசருக்கும் தெரிய ஆரம்பித்தது. ரஜினி அவர்களால் மிரட்டபட ரஜினி படத்திலிருந்து விலக்கப்பட்டார். அந்த படமும் இயக்கம் நாசர் என வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. நாசர் சிறந்த இயக்குனர் விருதும் வென்றார். ரஜினி ரகுவரனுடன் நாசரிடம் நியாயம் கேட்க அவர் வீட்டிற்க்கு செல்ல. இருவரும் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். ரகுவரனுக்கு மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தனர். மணியும் நாசரும் ரகுவனிடம் மறைமுக ஒப்பந்தம் செய்தனர். ஸ்ரீதேவியை ரஜினிக்கு திருமணம் செய்து தருவதாகவும் ரஜினியின் கதைகளை தனக்கு தந்துவிடும்படியும் கூறினார்கள். ஆனால் ஸ்ரீதேவி கர்பமாய் இருப்பது அப்போது அவர்களுக்கு தெரியாது. ஸ்ரீதேவி ஒப்பந்தம் செய்த படங்களில் நடித்து முடித்தவுடன் அனுப்பிவைக்கிறோம் என்றனர். ரஜினி தன் கழுத்திலிருந்த ருத்ராட்சத்தை ஸ்ரீதேவியின் கழுத்தில் கட்டி கூடியவிரைவில் உன்னை இங்கிருந்து கூட்டிசெல்வேன் என சத்தியம் செய்துவிட்டு சென்றார். ஸ்ரீதேவி கர்பமாய் இருப்பது அவர்களுக்கு தெரியவர என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தனர். ரஜினியும் காத்திருக்க தன் கதைகள் ஒவ்வொன்றும் திரைபடமாக, கதை நாசர் என வருவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். கோவத்துடன் நாசர் வீட்டுக்கு சென்றார்.
அப்போது ஸ்ரீதேவி பிரசவ வலியால் அழுதுகொண்டிருக்க. அவரைக் தூக்கி கொண்டு அங்கிருந்து சென்றார் ரஜினி. இதை தெரிந்து கொண்ட நாசர் ரஜினியை கொன்றுவிட்டு, ஸ்ரீதேவியை கூட்டி வரும்படி அடியாட்களுக்கு உத்தரவிட்டார்.அடியாட்கள் இருவரையும் தேடி சென்றனர்.
அந்த இரவில் ரஜினி ஸ்ரீதேவியை கூட்டிச்சென்று ஒரு மூடிய திரையரங்கில் ஒளிந்துக்கொண்டார். அந்த திரையரங்கத்தின் தூய்மை பணியாளர் ஆயா ஸ்ரீதேவிக்கு பிரசவம் பார்த்தார். குழந்தை பிறந்து சில நிமிடங்களிலேயே அடியாட்கள் அங்கு வந்துவிட, ஸ்ரீதேவி குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து போய்விடும்படி ரஜினியிடம் கூறினார். பிரிய மனமில்லாமல் அங்கிருந்து புறப்பட்டார் ரஜினி.
ஆனால் தப்பித்து சென்ற கொஞ்சம் தூரத்திலேயே ரஜினி ரவுடிகளால் சுற்றி வளைக்கப்பட்டார். ஒரு கையில் குழந்தையுடன் ரவுடிகளுடன் சண்டை செய்து தப்பித்தார். கையிலும் கழுத்திலும் வெட்டு வாங்கிய ரத்தத்துடன் குப்பத்தை அடைந்தார்.
ரஜினி புறப்பட்டதும் ஸ்ரீ தேவிக்கு இன்னொரு குழந்தையும் பிறந்தது. அடியாட்கள் பிரசவம் பார்த்த ஆயாவை கொன்றுவிட்டு குழந்தையையும் ஸ்ரீதேவியையும் தூக்கி சென்றனர். ரஜினி நண்பன் ரகுவரனிடம் குழந்தையை கொடுத்துவிட்டு இறந்து போனார். ரகுவரன் குழந்தையை அவர் அம்மா மனோரமாவிடம் கொடுத்துவிட்டு. நாசர் வீட்டுக்கு கோவத்துடன் சென்றார். கோவத்தில் நாசரின் அப்பாவை சராமாரியாக வெட்டி கொலை செய்தார் . நாசரை தேடுவதற்குள் போலிஸ் வர தப்பிக்க முயன்ற ரகுவரனை போலிஸ் மடக்கி பிடித்தனர். ரகுவரன் கொள்ளையடிக்க வந்தவன் கொலைசெய்துவிட்டான் என சிறையில் அடைக்கப்பட்டார்.
சில நாட்கள் கழித்து நடிகை ஸ்ரீதேவி தன் கார் டிரைவரால் காதலிக்கப்பட்டு குழந்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றபட்டதால் தற்கொலை செய்து கொண்டார் என செய்தி வந்தது. ரகுவரனை யாரோ எழுப்ப விழித்து பார்த்தார். அவர் முன் மனோரமா இருந்தார்."யய்யா ரகுவரா எப்டியா இருக்க" என அழுதார். ரகுவரன் அவரை கட்டியணைத்து அழத்துவங்கினார். இந்த பாசக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த கமலுக்கும் அழுகை வந்தது. ரகுவரன் அவனிடம் இந்த ருத்திராட்சம் உன்னிடம் எப்படி வந்தது என கேட்டார். கமல் உண்மையை சொல்ல இருவரும் ஆச்சரியம் அடைந்தனர். ஹாசனும் தன் அம்மா எழுதிய டைரியின்மூலம் தன் கடந்தகாலத்தை தெரிந்துகொண்டான்.
நாசர் ஃபிலிம் ஃபேர் விருதுக்கு கிளம்பி சென்றார்.
தெருவில் இருந்து தூக்கிவந்து வளர்க்கப்பட்ட அனாதை நாய்க்குட்டி கடித்த பிரேக் பிடிக்காமல் கார் விபத்தில் இறந்தார் நாசர்.
முடிந்தது.
#589
41,173
340
: 40,833
7
4.9 (7 )
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
visalakshi.jayayaman
subhajanu5
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50