நீலி

மர்மம்
5 out of 5 (302 )

வேகமாக ஒரு ஜீப் ஊருக்குள் நுழைவதை ஊர்க்காவலன் சங்கர் மொட்டை கிணற்று அருகில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான், ஜீப்பை நிறுத்தி அதில் இருந்து இறங்கியவர் நேராக மொட்டை கிணற்றருகே வந்து நின்றார்.

அவர் சட்டைப் பையில் இருந்த பெயர் பலகையில் ராஜேஷ் கண்ணன் என்று எழுதப்பட்டிருந்தது அதைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான் ஊர்காவலன் சங்கர்.

யார் சம்பவத்தை முதலில் பார்த்தது என்று கேட்டார், எஸ் ஐ ராஜேஷ் கண்ணன்

ஐயா, இங்க ஆடு மேய்க்கிற பையன் தான் முதலில் பார்த்தான் என கூறினான் ஊர் காவலன்

“எங்கே அந்த பையன்”

“ஏலே முத்துப்பாண்டி, இங்க வாலே”

“ஐயா….”

“சொல்லு தம்பி எப்போ பார்த்த”

“ஐயா, சாயங்காலம் ஐஞ்சு மணி இருக்கும், வழக்கம்போல ஆட்டை கொட்டகைக்கு ஓட்டி செல்லும்போது பார்த்தேன். எப்பவும் இந்த மொட்டை கிணத்துல கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு போவேன், அப்படி குடிக்கலாம்னு போகும் போது தான் பார்த்தேன் பால் விக்கிற அக்கா கிணத்துல பொணமா இருந்தாங்க.”

“இது யார் வீட்டு பொண்ணுங்க,”

“ஐயா இது என் மவ தான், இன்னைக்கு பொண்ணு பாக்க வரேன்னு சொல்லி இருந்தாங்க, அதுக்குள்ள இப்படி நடந்து போச்சே” அழுதபடியே வந்தாள் பால்காரியின் அம்மா.

“அம்மா பதட்டப்படாதிங்க, எப்போதிலிருந்து காணோம்”

“ஐயா வழக்கம்போல மூணு மணிக்கு பால் வித்துட்டு வரேன்னு சொல்லிட்டு கிளம்பினாள், இன்னைக்கு சாயங்காலம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணு பாக்க வராங்க சீக்கிரமா வந்துடுனு சொன்னேன்”

“பாத்தா விபத்து மாதிரி தெரியுது, அவங்க தலையில ஏதோ அடிபட்டு இருக்கு அந்த படிக்கட்டில் ரத்தமாக இருக்கு, ஒருவேளை அவங்க இங்க வரும்போது தலையில் அடிபட்டு கிணத்துல விழுந்துட்டாங்கலான்னு தெரியல, பிரேதபரிசோதனை முடிவு வந்தவுடன் தெரியும்” என்று சொல்லி கிளம்பினார் எஸ் ஐ ராஜேஷ் கண்ணன்.

“இந்த பொண்ணு வேற கன்னி கலையாமல் செத்து இருக்கா ஊருக்கு என்ன கேடு வரப் போகுதோ ஐயையோ….” என்று ஊர்மக்கள் பேசிக் கொண்டனர்.

அடுத்த பத்து நாட்களுக்குள்,

“ஐயா…. ஆத்தங்கரை ஓரத்திலே நேசன் செத்து கிடக்கிறார் ஓடி வாங்க…..ஓடி வாங்க……” என்றபடி கூறிக்கொண்டே ஓடினான் ஊர் காவலன்.

“என்னப்பா சொல்ற” ஊர் மக்களின் குரல்

“அய்யாமாரே நேசன் ஐயா ஆத்தங்கரை ஓரத்தில் செத்து கிடக்கிறார்”,

“ஐயையோ, வாங்க போய் ஊர் தலைவர் கிட்ட சொல்லலாம்”. ஊர் மக்களின் குரல்

:ஐயா, நம்ம மளிகை கடை நேசன் ஆத்தங்கர ஓரத்தில் செத்து கிடக்கிறாராம்”

ஊர் தலைவர் சிங்காரம்; “அப்படியா! காவல்துறைக்கு தகவல் சொல்லிட்டீங்களா,”

“ஐயா, இன்னும் சொல்லலைங்க,”

“டேய் கனகராஜ் நீ போயி காவல்துறைக்கு தகவல் சொல்லிட்டு கையோட கூட்டிட்டு வா.”

“சரிங்க எஜமான்”

காவல்துறை அதிகாரி எஸ்ஐ ராஜேஷ் கண்ணா; “யார் முதல்ல உடலை பார்த்தது,”

“ஐயா, நம்ம ஊர் காவலன் தான் பார்த்தான்”

“ஏம்பா, ஊர் காவலன் என்ன பார்த்த எப்ப பார்த்த கொஞ்சம் சொல்லு,”

“ஐயா, விடியற்காலையில் கழனிக்கா ஒதிங்கிட்டு ஆத்தங்கரையில கால் கழுவப் போனேன் அப்பதான் பாத்தேன்யா,”

“யோ கொஞ்சம் விவரமா சொல்லு….வேற என்ன பாத்த அங்க யாராச்சும் இருந்தாங்களா?”

“இல்லங்கையா, அவர் செத்துக் கிடப்பதை பார்த்த உடனே ஓடி வந்துட்டேன்,”

“அப்படியா, செத்தவரோட வீட்டுக்காரம்மா யாரு?”

“ஐயா, நான்தான் அவர் வீட்டுக்காரம்மா, ரொம்ப நல்லவரு எந்த படுபாவி கொன்றானோ அவன் நாசமா போயிடுவான் அவன புடிச்சு ஜெயில்ல போடுங்க,”

“சரிம்மா பதட்டப்படாமல் ஒரு சில விஷயம் சொல்லுங்க, அவர் எப்போதிலிருந்து காணோம்”

“ஐயா காலைல ஒரு நாலு மணி போல கழனி பக்கம் போய்ட்டு வரேன்னு கிளம்பி போனார் அய்யா,”

“அப்படின்னா சம்பவம் காலைல தான் நடந்து இருக்கணும், வேறு யாராவது பார்த்தீர்களா”

“இல்லைங்க ஐயா…” ஊர்மக்கள்,

“அம்மா அவருக்கு யாருன்னா விரோதிகள் இருக்காங்களா, உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்க?”

“அப்படி எல்லாம் இல்லைங்க ஐயா, காலைல ஆறு மணிக்கு கடையை திறந்தாருன்னா நைட் பத்தரை மணியாயிடும் கடையை அடைக்க. கடையை விட்டு எங்கேயும் போகமாட்டார், வாரத்துல ஒரு நாள் மட்டும் மீன்பிடிக்க போவாரு. ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட போனாரு எங்க போனாலும் அவர் நண்பர் கூட தான் போவாரு அதனால யாரும் விரோதிகள் இல்லை.”

“சரி, பிரேதப் பரிசோதனை முடிவு வரட்டும் அப்பதான் தெரியும் இது கொலையா? தற்கொலையா?”.....என்று சொல்லி விடைபெற்றார் காவல்துறை அதிகாரி.

ஊர்மக்கள்; “என்னப்பா நடக்குது நம்ம ஊர்ல நல்லா இருந்த மனுஷன் செத்துக் கிடக்கிறார், ஏதாவது திருட்டுப்பய நடமாட்டம் இருக்குதா ?”

“இல்ல பத்து நாளைக்கு முன்னாடி செத்த பால்காரி பொண்ணு நீலியா சுத்திட்டு இருக்கா” கேலி பேசி சென்றனர் ஊர்மக்கள்

“ஏன்பா ஊர் காவலா, நீ காவல் காக்கிறியா....இல்லையா ?” என்றார் ஊர் தலைவர்

“ஐயா, என்னய்யா இப்படி சொல்லுறீங்க,”

“பின்ன நீ காவல் காக்கும் போது ஊருக்குள்ள மர்மமா இரண்டு பேர் செத்து போயிட்டாங்க அப்ப நீ காவல் பாக்குறியா இல்லையான்னு கேட்க மாட்டாங்களா?”

“ஐயா, நான் தான் முதல்ல பார்த்தேன்,”

“அப்போ நீ தான் எதனா பண்ணிட்டியே,”

“எஜமான், அப்படியெல்லாம் சொல்லாதீங்க…. நான் புள்ள குட்டிக்காரன்”

“சரி வீடு போலீஸ் விசாரணை முடிஞ்சா தெரியப்போகுது,”

ஒரு மாதம் கடந்த நிலையில்,

ஆலமரத்துல நம்ம வண்டிக்காரர் முருகன் தூக்குபோட்டு செத்துட்டாரு, என்று ஊர் பரபரப்பானது,

“இன்னும் நம்ம நேசன் செத்தது எப்படின்னு கண்டுபிடிக்கலை அதுக்குள்ள இன்னொரு சாவா” என்றார் ஊர் தலைவர்

என்னப்பா நடக்குது அதுவும் கரெக்டா நம்ம நேசன் செத்து ஒரு மாசத்துல அவர் நண்பர் வண்டிக்காரர் செத்துட்டாரு, என்னமோ விஷயம் இருக்குப்பா இதுல. ஒருவேளை நீலி நடமாட்டமோ? என்று ஊர்மக்கள் பேசிக் கொண்டனர்.

காவல்துறையின் வழக்கமான சோதனைகளும் விசாரணைகளும் முடிந்தது,

ஊர்த்தலைவர்; “என்ன எஸ்.ஐ சார் ஏதாச்சும் கண்டுபிடித்தீர்களா?”

“இல்ல சார், ஒரு தடயமும் கிடைக்கவில்லை.”

“நேசனோட சாவுதான் ரொம்ப குழப்பமா இருக்கு… அவர் மேல ஒரு காயமும் இல்லை ஆனா மூச்சு திணறி இறந்து இருக்காரு அங்க வேற யாருன்னா வந்ததுக்கான தடயமும் இல்லை, முருகன் சாவு கூட தற்கொலை என்று கேஸ் மூடி விடலாம்.”

“ஆனா, நேசன் கேசு தான் எப்படி வழிநடத்துவதுன்னு தெரியல…..” சரி பார்ப்போம் என்று கூறினார் காவல்துறை அதிகாரி.

ஊர் தலைவர்: “இங்க பாருங்க எஸ் ஐ, அது இதுன்னு சொல்லி கேஸ் மூடாதீங்க,”

“அப்படில்லாம் இல்ல சார், அவரோட உடல்கூறு ஆய்விற்காக உடம்பில் இருந்து ஒரு பகுதி வெளி மாநிலத்துக்கு சோதனைக்காக அனுப்பி இருக்கேன் சார். சோதனை முடிவு வந்தால் தெரியும் என்று கூறி விடைபெற்றார் காவல்துறை அதிகாரி.”

“என்ன முனுசாமி, அடுத்தது நீதானோ” என்று கூறினர் ஊர் மக்களில் ஒருவர்,

முனுசாமி; “ஏன்யா உனக்கு இப்படி ஒரு ஆசை,”

“இல்ல நீங்க மூணு பேரும் தான் கூட்டாளிங்க, இப்போ அதுல ரெண்டு பேரு இல்லையே அப்போ அடுத்த நீதானே!”

தொடர்ச்சியான மரணங்கள் அவனுக்கு ஒருவித அச்சத்தை உருவாக்கியது அன்று முதல் இருளைக் கண்டு பயப்படும் குழந்தையாய் மாறினான் முனுசாமி, தன் நிழலைக் கண்டு அஞ்சுவான்.

ஒருவித மரண பயம் அவனுள் தென்பட்டது, இரவில் சிறிய சத்தம் கேட்டாலும் அலறி எழுந்து ஓடினான். அவனுக்கு ஏதோ பிரமையோ தெரியவில்லை இரவில் யாரோ அவன் மேல் அமர்ந்து அமுக்குவது போல் உணர்ந்தான். அன்று முதல் அவன் ஊர் மக்களிடம் இது நீலியின் வேலைதான் என்று கூறி திரிந்து கொண்டிருந்தான்.

இவனின் அச்சம் ஊர் மக்களுக்கும் அச்சத்தை உருவாக்கியது.

ஊர் மக்களும் அசைபோட ஆரம்பித்தார்கள் இது நீலியின் வேலையோ என்று

இவர்கள் 3 பேரும் நண்பர்கள் என்பது ஒருநாள் காவல்துறை அதிகாரிக்கு தெரியவர விசாரணைக்கு அழைத்தார்கள் முனுசாமியை.

காவல்துறை அதிகாரி சிங்காரம்; “என்னப்பா முனுசாமி எப்படி இருக்கீங்க.”

“ஐயா, நீலியின் வேலைதான்…”

“என்ன சொல்றீங்க முனுசாமி நீங்க எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன்”

“இல்லையா இது கண்டிப்பா நீலியின் வேலைதான்”

“முனுசாமி சுய நினைவோடு தான் இருக்கீங்களா”

“கண்டிப்பா நீலி யோட வேலைதான், என்னையும் கண்டிப்பா சாவடிச்சிடுவாள்”

“என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு நான் ஒன்னு கேட்டா அவரு வேற சொல்றாரு என்று குழம்பினார், சரி முனுசாமி நீலி தான் சாவடிக்கிரா அப்படின்னா நீலி யாரு?”

“ஐயா, அவள் பெயர் தேனமுது. அவள்தான் நீலியா சாவடிக்கிரா”

“அவன் ஏன் சாவடிக்கிரா?” விசாரணையை ஆரம்பித்தார் காவல் அதிகாரி

முனுசாமியின் பதில்; “அவள் இரண்டு மாதத்திற்கு முன்பு தான் இறந்தாள் அவள்தான் எங்களைப் பழி வாங்குகிறாள்”

“என்ன சொல்றீங்க முனுசாமி, அவள் ஏன் உங்களை பழி வாங்கணும்”

“அவ எங்க ஊர் பால்காரி பொண்ணு, பேர் தேனமுது, அவதான் எப்பவுமே பால் விற்க வருவாள்.”

“சரி மேல சொல்லுங்க”

“எங்களுக்கு அவ மேல ஒரு கண்ணு நல்லா அழகா இருப்பா, அவளை எப்படியாச்சும் அடையணும் எங்களுக்கு ஆசை. அதனால அவ வரும்போதெல்லாம் நாங்க அவளை கிண்டல் செய்வோம். அவள் நேசன் கடைக்கு பால் விற்க வரும்போதெல்லாம் நேசனுடன் சேர்ந்து நாங்களும் கிண்டல் செய்வோம். பாலு மாதிரி வெள்ளையாய் இருந்த சும்மா சூடு ஏத்தும் தேனு, தேன் குடிக்க எப்ப வரலாம் என்று பார்க்கும்போதெல்லாம் கேட்டோம்.”

“ஒருநாள் உச்சத்தில் கை பிடித்து விட்டார் நேசன் கன்னத்தில் அறைந்து விட்டாள் தேனு.”

“அப்போதிலிருந்து தேனு மேல எங்களுக்கு ரொம்ப கோபமா இருந்துச்சு,”

“அதனால அவளை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்துடுச்சு”.

“ஹ்ம்ம் அப்புறம் மேல சொல்லு,”

“ஐயா அவங்க வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க, வர மாப்பிள்ளை கிட்ட இவளை பத்தி தப்பா சொல்லணும்னு நெனச்சோம். அதே மாதிரியே செஞ்சோம்.”

காவல் அதிகாரி; “யோவ் ஏன்யா உங்களுக்கு இந்த மாதிரி ஒரு பொழப்பு, உங்கள எல்லாம் இந்த மாதிரி பத்து போக்ஸோ சட்டம் வந்தாலும் திருத்த முடியாது. ஹ்ம்ம் மேல சொல்லு”

“நாங்க எதிர்பார்த்த மாதிரியே வந்த மாப்பிள்ளை எல்லாம் எங்க பேச்சை கேட்டு பொண்ணு வேணான்னு ஓடிட்டாங்க, இதனால ஊருக்குள்ள அவளுக்கு ஒரு கெட்ட பேரு உருவாச்சு.”

“ஊர் மக்கள் எல்லாம் தப்பா பேச ஆரம்பிச்சாங்க மினுக்கிட்டு திரியுற இவள யாரும் கல்யாணம் பண்ண மாட்டான் என்று ஏதேதோ பேச ஆரம்பித்தார்கள்.”

“இது அவளுக்கு ஒரு விரக்தி உருவாக்கியது.”

போலீஸ் அதிகாரி; “ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்து இருக்கீங்க, உங்களை எல்லாம் நிற்க வைத்து கொல்லனும் மேல சொல்லு”

“ஒருநாள் அவளைப் பார்க்க வந்த மாப்பிள்ளை கிட்ட தப்பா சொல்லிட்டு இருக்கும்போது தேனு பாத்துட்டா, எங்களைப் பார்த்துவிட்டு அவள் வீட்டில் சொல்ல ஓடினா. நாங்களும் துரத்தினோம் என் கால் தடுக்கி மொட்டை கிணத்துல விழுந்துட்டா, உடனே அங்கிருந்த பெரிய கல்லை அவள் மண்டையில் போட்டு சாவடிச்சிட்டோம்”

போலீஸ் அதிகாரி; “அடப்பாவிங்களா கொலையை செஞ்சுட்டு அதை விபத்து மாதிரி மாத்தி இருக்கீங்க, இப்படி பண்ண உங்கள நீலியாய் வந்து சாவடிக்காம சும்மாவா விடுவா. முதல்ல உன்னை புடிச்சு போடணும் ஜெயில்ல. ஏட்டு ஆறுமுகம் இவர் சொன்னதெல்லாம் ஒரு ஸ்டேட்மென்ட் எழுதி வாங்கிக்கோங்க, அப்படியே இவரை ரிமாண்ட் செய்யுங்க.”

தொலைபேசி மணி அடித்தது….

“ஹலோ, எஸ் ஐ ராஜேஷ் கண்ணன் பேசுறேன் சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும்,”

மறுமுனையில்; “சார் நாங்க மும்பையில் இருந்து பேசுறோம் நீங்க குடுத்த சாம்பிள் டெஸ்ட் ரிப்போர்ட் வந்துடுச்சு.”

“வெரிகுட் சார், சொல்லுங்க எப்படி இறந்து இருக்காரு அவரு,”

“சார், அவர ஒரு விஷ பூச்சி கடித்து இருக்கு அதோட விஷத்தன்மை மூன்று நாட்களுக்கு அப்புறம் தான் தெரியும்.”

“என்ன விஷ பூச்சி கடித்து இருக்கா?”

“ஆமா சார், அது கடிச்ச நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா அவரோட உடலுறுப்பு செயலிழக்கும் மூன்றாவது நாள் உயிர் பிரியும்.”

“ஓகே ஓகே அப்படியா, ரொம்ப தேங்க்யூ சார் எப்படி கேஸ் முடியும் என்று குழம்பி இருந்தேன். சார் அப்புறம் இதோட ரிப்போர்ட் எப்ப கிடைக்கும்.”

“சார், ரிப்போர்ட் உங்களுக்கு இப்போ ஃபாக்ஸ் அனுப்புறேன் ஒரிஜினல் உங்க ஸ்டேஷனுக்கு வந்துரும் சார் கொரியரில்.”

“ஒன் செகண்ட் ரொம்ப தேங்க்ஸ் சார் சரியான நேரத்தில ரிப்போர்ட் வந்துச்சு.”

“ஏட்டையா….. “

“சொல்லுங்க சார்”

“அந்த நேசன் கேஸ் பைல் எடுத்துட்டு வாங்க அதுல இப்போ ஒரு ஃபாக்ஸ் ஒன்னு வரும் அதை வைத்து அந்த கேசை க்ளோஸ் பண்ணிடுங்க.”

சிறிது நேரம் கழித்து முருகனின் மனைவி ஓடிவந்தாள் காவல் நிலையத்துக்கு.

“ஐயா, அவரு ஒரு கடுதாசி எழுதி வைத்திருக்கிறார்,”

போலீஸ் அதிகாரி; “எங்க குடுங்க பாப்போம்”

அதில் இருந்தவை

“கந்துவட்டி கோவிந்தன் கிட்ட 20000 ரூபாய் கடன் வாங்கி இருந்தேன் என் வண்டியை சரிசெய்ய, அசலோட சேர்த்து இதுவரைக்கும் ஒன்றேகால் லட்ச ரூபா குடுத்து இருக்கேன் இன்னும் அசல் குடுக்கலன்னு சொல்லி என்னை தரக்குறைவா பேசுறாரு. அதனால மனமுடைந்து நான் சாகலாம் என்று முடிவு எடுத்துட்டேன் என் சாவுக்கு கந்து வட்டி கோவிந்தன் தான் காரணம்.”

இப்படிக்கு

வண்டிக்கார முருகன்

போலீஸ் அதிகாரி; “அப்படின்னா இவனும் தற்கொலைதான் செஞ்சிருக்கான்.”

“ஆமாய்யா கந்துவட்டி கோவிந்தனை ஜெயில்ல புடிச்சு போடுங்க”

“சரிம்மா நீ ஒரு கம்ப்ளைண்ட் எழுதி கொடுத்துட்டு போ, ஏட்டு அவங்க கிட்ட கம்ப்ளைன்ட் வாங்கிக்கோங்க நான் போயி ஊர் தலைவரை பார்த்திட்டு விஷயத்தை சொல்லிட்டு வரேன்.”

அவசரப்பட்டு எடுக்குற முடிவு கடைசியில் ஆபத்தில் தான் முடியும் எதையும் நல்லா யோசித்து வாழ்க்கையை வாழ்றவங்க தவறான முடிவுக்கும் போக மாட்டாங்க தவறான பேர்வழியோட சகவாசம் வைச்சிக்க மாட்டாங்க.

நீலி கொன்னதா சொல்ற உலகமே! நீலி என்னும் பேயும் கிடையாது, அவரவர் மனசாட்சியே நீலியாகி இந்த நிலையில்லாத உலகில் மனிதனை சட்டம் திருத்தாத போது மனசாட்சியே நீலியாகி திருத்தும்.

தன்னெஞ்சறிவது பொய்யற்க தன்னெஞ்சே‌ தன்னைச் சுடும் முன்னானே வள்ளுவன் கூறியது.

அந்த மனசாட்சி தான் குத்தவாளியை தண்டிச்சுதுன்னா இவனுங்க நீலின்னு போலிகதவுடறாணுங்க என்று பகுத்தறிவு பரமசிவம் பேசிகிட்டே போறாரு…..

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...