JUNE 10th - JULY 10th
இனியவளே.
சிறு கதை
அவளின் கண்ணீர் இந்த அருவி நீர் போலானது.
ராஜாவின் இதயம் ரொம்ப வலிக்க ஆரம்பித்து விட்டது.
இந்த ஆண்டவனுக்கு கண் இல்லை.
ராஜா ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.
பிரியாவை வாழ வைக்க....
ஆமாம்
பிரியாவின் குருஞ் செய்திகள் எல்லாம் அவனுக்கு ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்றியது போல் இருந்தது
அவனுக்கு.
அவளை நினைத்து அழுவதா சிரிப்பதா ஒன்னும் புரியவில்லை.
எந்த ஒரு நெருக்கடியிலும் ஒரு பெண் விரும்பாது எந்த ஒரு ஆணும் தவறு செய்ய முடியாது.
பிரியாவின் கடந்த கால வாழ்க்கை எண்ணி
அவன் மனசு சங்கடப்பட்டது.
பிரியாவை ஏமாற்றிய துரோகி நல்ல சாவு சாக மாட்டான்.
இன்று பிரியா இந்த நிலைக்கு வர காரணம் அந்த பொறுக்கி ராஸ்கல் தான்.
ஒரு பெண்ணை ஏமாற்றிய பொம்பள பொறுக்கியை காலம் கட்டாயம் தண்டிக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை.
நிச்சயம் அவன் உருப்படமாட்டான் பெண் பாவம் பொல்லாதது.
ராஜா காரை ஸ்டார்ட் செய்தான் அது அவன் அவசரம் தெரிந்துக்கொண்டது போல் உடனே ஸ்டார்ட் ஆகி விட்டது.
பிரியாவின் முகம் கூட அவனுக்கு தெரியாது.
அவளை நேரில் பார்த்ததும் கிடையாது.
இந்த சொச்ச காலத்தில் தான் அவளைப் பற்றி தெரியும். அதும் அதிகம் தெரியாது.
இது தான் உண்மை காதலா அதும் கூட தெரியாது அவனுக்கு.
அதும் இந்த இணையத்தின் மூலம் தான்.
பிரியா கடலின் ஆழத்தில் கிடந்த விலை மதிப்பற்ற முத்து போல் தான் அவனுக்கு தெரிந்தாள் அவனுக்கு.
அவள் அவனிடம் ஒன்று கூட மறைக்காமல் ஒன்று விடாமல் சொல்ல ஆரம்பித்தாள்.
அவள் ஒரு மலர்,
அழகான மலர்
கல்லூரியில் படிக்கும் அழகு மலர்.
மலர் மலர்வதால் தேனீக்கள் மலரை மொய்க்காத்தான் செய்யும். இது இயற்கை தானே!
மகரந்த மணம் வீசும்
அது ஒரு பொறியியல் கல்லூரி திருச்சியில் வண்ண வண்ண பட்டாம்பூச்சிகலாக மாணவிகள் பறக்கிறனர்.
இந்த பட்டாம்பூச்சிகள் காலையிலும் மாலையிலும் பறப்பதால் அந்த கல்லூரி அழகு மலர் பூத்து குலுங்கும் நந்தவனமாக காட்சியலிக்கிறது என்பது உண்மை.
அந்த பொறியியல் கல்லூரியில் தான் பட்டுவின் வகுப்பில் படிக்கும் மாணவன் பிரியாவிற்கு அறிமுகம் ஆனான்.
அவன் ஒரு பொம்பள பொறுக்கி என்பது பிரியாவிற்கு அப்போது தெரியவில்லை.
இளமை,
வாலிப்பம்,
இன்மை கனவுகள்
கற்பனைகள் நிறைந்த வயசு.....
காலம் சிரிக்க
இளமை சிரித்தது
ஆரம்பத்தில் நட்பில் தொடங்கி
அன்பில் மலர்ந்து
உறவில் கலந்து
காதலில் முடிந்தது.
பிரியாவும் அவளுடன் படிக்கும் அந்த பொறியியல் கல்லூரி மாணவனும் உயிருக்கு உயிராக காதலிக்க அப்போதைய காதல் பயணம் மகிழ்ச்சியாக போனது.
அது நீடிக்கவில்லை.
இரண்டு ஆண்டுகள் தான் பின்பு அவனிடம் மாற்றம் ஏற்பட்டது.
பிரியாவின் தோழிகள் அவன் மிகவும் மோசமானவன். நிறைய பெண்களோடு தொடர்பு வைத்து இருக்கிறான் என்று பட்டுக்கு சொன்னார்கள்.
ஆரம்பத்தில் அவள் நம்பவில்லை.
அவன் மீது அவ்வளவு நம்பிக்கை அவளு க்கு இருந்தது.
அவள் அந்த அளவுக்கு அவனை காதலித்தால் அவனை.
கொஞ்ச நாள் தான் அவன் அவளை விட்டு மெல்ல மெல்ல விலகி போக ஆரம்பித்தான்.
பிரியாவிடம் பொய் சொல்ல ஆரம்பித்தான்.
வீட்டில் வேலை அதிகம் வெளியே வர கூட முடியாது என்று சொல்லுவான்.
அவன் அவளிடம் சண்டை போட
ஆரம்பித்து விட்டான்.
பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் என்பது பழமொழி.
அது போல் ஒரு நாள் கல்லூரி விட்டு வெளியே வரும்போது அவளுக்கு முன்னால் அவன் வேறு
ஒரு பெண்ணின் கை பிடித்தப் படி போய்க் கொண்டு இருந்தான்.
பிரியா வேகமாக போய் அவன் எதிரில் நின்றாள்.
கொஞ்சமும் அவன் எதிர் பார்க்கவில்லை. அதிர்ந்துப் போனான்.
உடனே சுதரித்துக்கொண்டான்.
ஒன்றும் நடக்காதவன் போல்
பிரியா விடம் அவளை அறிமுகம் செய்தான்
அவள் மெடிக்கல் காலேஜ்ஜில் படிக்கும் பெண்ணாம்.
இரண்டாம் ஆண்டு படிக்கிறாளாம்.
அவன் காதலியாம். அவளைத் தான் கலியாணம் செய்ய போறானாம். வீட்டுக்கு தெரியுமாம்.
அவர்களும் சம்மதித்து விட்டார்கலாம்.
அதிர்ந்து போனாள் பிரியா.
சண்டை போட்டாள்.
காரித் துப்பினாள்.
அயோக்கியனுக்கு அதெல்லாம் சகஜம் தானே!
அன்றிலிருந்துபிரியா அழுதாள்.
தன்னைத் தானே தனிமை படித்துக் கொண்டாள்.
அப்போது தான் ராஜாவின் கவிதைகளை படிக்க ஆரம்பித்தாள்.
ராஜாவின் கவிதைகள் அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.
குறிஞ்செய்தி அனுப்புவாள்.
ராஜாவிடம் அவள் வாழ்க்கைப் பற்றி எல்லாம் சொல்லி இருந்தாள்.
அதான்
கொஞ்ச நாளாக பிரியாவிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை.
அதான்
ராஜா எப்படியோ பிரியவை தேடி தன் உள்ளத்தில் இருப்பது கூறி அவளை தன் வாழ்க்கை துணைவியாக ஏற்றுக்கொள்ளும் முடிவாக தான் வந்து இருந்தான்.
அவன் வரவும் பிரியா அவன் காதலன் பைக்கிள் வரவும்
சரியாக இருந்தது.
அவன் கெட்ட நேரம் அவள் பின்னாடி வண்டியை நிறுத்தி விட்டு அந்த வாழை பழ மண்டியில் ஒரு தார் வாழைப் பழம் என்ன விலை என்று கேட்க.
பிரியா.
பக்கத்தில் வாழை தார் வெட்டும் கத்தி கடையில் இருந்து எடுத்து. அவன் சட்டை இழுத்து கழுத்தை துண்டாக்கி விட்டாள்.
அவன் கழுத்து துண்டாக்கி தூரம் போய் விழுந்தது
முண்டம் துடித்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் இது நடந்து முடிந்து விட்டது.
ராஜா..
தேடி வந்த பிரியா அவள் தான் என்பது தெரிந்துக் கொண்டான்
நாட்கள் நகர்ந்து விட்டது.
நான்கு வருடங்கள் ஓடி விட்டது.
அவள் மன நலம் பாதித்து விட்டாள். பைத்தியம் ஆகி விட்டாள்....
இன்று பிரியாவிற்கு விடுதலை.
அவள் மனநலம் பாதிக்கப் பட்டவள் என்று கோர்ட் தீர்மானித்து விடுதலை செய்து விட்டது.
ராஜா வழக்கறிஞர் மூலம் முயற்சி செய்து
பிரியாவை தன் வீட்டில மனநல மருத்துவரின் ஆலோசனை படி பிரியாவின் அப்பா அம்மா அனுமதியுடன்
சிகிச்சை செய்ய கூடவே அழைத்து போக வந்துள்ளான்.
பிரியாவின் அம்மா அப்பா இன்னும் சிலர் பிரியாவை பார்க்க வந்துள்ளனர்.
எல்லோருக்கும் பிரியாவின் வருகை சதோஷம் தர வில்லை.
---------------------------------
நான்கு.வருடத்திற்கு முன்னால்
சரியாக யாரிடமும் பேசவில்லை.
விட்டிக்குள்ளே அடைந்து கிடந்தாள்.
பிரியாவின் அப்பா அம்மா அவளுக்கு ஆறுதல் சொன்னாலும் அவள் அவமானத்தால் கூனி குறுகித் தான் போனார்கள் என்பது உண்மை.
நாள் ஆக ஆக பிரியா மெலிய ஆரம்பித்து விட்டாள்.
காலம் செய்த கோலம் இது.
அவள் நான்கு ஆண்டுகள் முடிக்கும் முன்பே பைத்தியம் போல் ஆகி விட்டாள்.
சரியாக சாப்பிட மாட்டாள்.
யாருடனும் பேச மாட்டாள்.
சரியாக துணிகூட போட மாட்டாள்.
அவள் அம்மா அப்பா பிரியவை காலேஜ் போக விட வில்லை.
இல்லை
பிரியாவே போக வில்லை.
பிரியவே தனுக்கு தானே பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டாள்.
அந்த பாரதி நகர் மக்கள் எல்லாம் பிரியாவிற்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
கசங்கி போன கிழிந்து போன சுடிதார்.
விரித்த தலை
கண்களில் தாரை தாரையாக ஓடும் கண்ணீர்..
கையை உயர்த்தி டேய் பொறுக்கி உன்னை கொல்லாமல் விட மாட்டேன்டா
என்று சத்தம் போட்டு கத்துவாள்.
ஓடுவாள்.
ஒரு நாள் மாலையில் பாரதி நகரில் மெய் யப்பன் வீதியில் கடைசியில் ஒரே கூட்டம்.
ஆ....
ஹா ஹா..
என்று ஒரு இளம் பெண் சிரித்துக்கொண்டு கையில் ஒரு தலை வெட்டி ரத்தம் சொட்ட சொட்ட எடுத்துக் கொண்டு வேகமகா வந்துக் கொண்டு இருந்தாள்.
போலீஸ்......
போலீஸ்....
டேய் ஓடுடா பைத்தியம் அவ நம்பள கூட போட்டு தள்ளுவா சாமி என்று தலை தெறிக்க ஓடினர்கள்.
உன்
பெயர் என்னமா?
பிரியா
இது யாரம்மா
அது என் புருஷன்
எதுக்கு கொலை செய்தாய்?
என் வாழ்க்கையை நாசம் செய்து விட்டான்.
என்னை அவன் ஆசைக்கு இணங்க வைத்து என் பெண்மையை சூரையாடி விட்டான்.
என் வயிற்றில் உருவான சிசுவை கொன்று வயிற்றை சுத்தம் செய்ய சொல்லி டாக்டர் கிட்டே அழைத்தப் போய் எல்லாம் செய்ய வைத்தான்.
அடிக்கடி தொந்தரவு செய்து அவன் ஆசையை தீர்த்துக் கொண்டான்.
அப்போ தான் உன்னை கலியாணம் செய்து கொள்வேன் என்று சாத்தியம் செய்து என்னை அனுபவிச்சான்.
இப்போ என்னை விட வசதி வாய்ப்பில் அதிகமான பெண்ணை ப் பார்த்து எனக்கு துரோகம் செய்து விட்டு.....
அழாதே சொல்லு மா.......
அம்மா நான் செத்து போய் விடலாம் என்று பல முறை முயற்சி செய்தேன்.
அப்பா,அம்மா இருவரும் காப்பாற்றி விட்டார்கள்.
நான் நன்றாக சாப்பிடுவதில்லை.
நன்றாக தூங்கவில்லை.
கள்ளத்தன மாக இப்படி தப்பு பண்ணி வயிற்றை சுத்தம் செய்ததால் இப்போ கூட எனக்கு வயிற்றில் வலி வருகிறது.
எங்க அம்மா, அப்பா விற்கு இந்த விஷயம் தெரிந்து சாப்பிடும் சாப்பாட்டில் விஷம் கலந்து சாப்பிட்டு விட்டார்கள்.
பக்கத்துல இருக்கும் அம்மாச்சி தான் ஆட்டோவில் ஹாஸ்பிடல் கொண்டு போய் அவர்களை காப்பாற்றி விட்டார்கள்.
ம்ம்ம்.
அவள் கண்களில் கண்ணீர் பொங்கி வழிய தேம்பி தேம்பி கோர்ட் என்று கூட பார்க்காமல் அழ...
எல்லோருக்கும் அழுகை தான் வந்தது.ரொம்ப ரொம்ப அமைதியாக அவளின் வாக்கு மூலத்தை கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.
அவளின் வாக்கு மூலத்தை ட்ய்பிங் செய்யும் தட்டச்சு ராதா விறிக்கு கூட கண்களில் கண்ணீர் வழிந்தது.
அவங்களுக்கு தண்ணீர் கொடுங்க...
தண்ணீர் வாங்கி குடித்தாள் பிரியா.
அவளின் நெஞ்சம் மேலே எழுந்து எழுந்து தனிந்தது.
அவளின் கண்ணீரை பிரியா கையாலே துடித்துக் கொண்டாள்.
ம்ம்ம்
மேலே சொல்லுமா..
அது மட்டும் இல்லை ஒரு தடவை கூல் ட்ரிங்க்ஸில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து குடிக்க சொன்னான். நானும் குடித்தேன்.
அவ்வளவு தான் என்னை...... என்னை.....
மீண்டும் தேம்பினாள்...
இப்போ யாரும் அவளை அழ வேண்டாம் என்று சொல்ல வில்லை.
அவளே ஒரு ஐந்து நிமிடம் அழுது அவளாகவே ஓய்ந்து சமாதானம் அடைந்தாள்.
இப்போ சொல்லுமா..
அவன் என்ன செய்தான்?
என்ன ஒட்டு துணியில்லாமல் அவன் செல் போனில் போட்டோ எடுத்து இருக்கிறான்.
நான் மயக்கத்தில் இருந்ததால் எனக்கு ஒன்றும் தெரிய வில்லை.
அவனே ஒரு நாள் என்னிடம் காட்டினான். நான் அதிர்ச்சி அடைந்து. அதை டெலிட் செய்து விடு என்று காலை பிடிச்சி கெஞ்சினேன். அவன் கடைசி வரை அதை டெலீட் செய்யவே இல்லை.
இப்போ
அவன் என்னை
விட்டு விட்டு வேற பெண்ணை கலியாணம் செஞ்சிகிட்டான்.
அது தான் எனக்கு அவனை பழி வாங்க வேண்டும் என்ற வேறி என் மனதில் ஏற்பட்டு விட்டது.
அதற்கு தான் நேரம் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
அதற்கு சரியான நேரம் வந்ததும் இப்படி செய்து விட்டேன்.
வாழ்கை விசாரணை செய்த நீதிபதி செல்வி புவனேஸ்வரி அவர்கள் பிரியாவை நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு சொல்லி விட்டார்.
ம்ம்ம்
இதற்கு ஒரு முக்கிய காரணம் ஒன்று உண்டு அவரும் பிரியா போல் ஒருவனால் ஏமாற்றப்பட்டு விரக்தியில் படித்து இன்று
நீதிபதியாக வந்து இருப்பது அவர்க்கு மட்டுமே தெரியும்.
அந்த இனியவளின் வருகைக்காக ராஜா திருச்சி சிறைச்சாலை முன்பு காத்து கிடக்கிறான்.
அவள் வருகை வாழ்க்கை அவன் காத்து க் கிடக்கிறான்
அவன் கண் முன்னாடி அவன் பழைய நினைவுகள் நிழற்ப் படம் போல் ஓடுகிறது. அவன் கண்களில் அவனையறியாமல்
ஆற்று வெள்ளம் போல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆக்கம் :இதயா
இதில் வரும் பெயர்கள் சம்பவங்கள் எல்லாம் கற்பனையே.
***** ****** ****** ******* ******
மீண்டும் சந்திப்போம். அன்புடன்
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈இதயா ≈≈≈≈≈≈≈≈≈≈
#815
10,080
80
: 10,000
2
4 (2 )
S. Naffia Gowser
Pavalamani Pragasam
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50