பலிகடா...

கற்பனை
5 out of 5 (2 )

தாமரை நிறத்தைக் கொண்டுசந்தனமும் இழைத்து பூசிய கலவைபோன்ற நிறம். ஆயிரம் பெண்கள் நிற்கும்இடத்திலும் தனித்து விளங்க கூடியசிறப்பு கொண்டவந்தனா நல்லஅழகி. வளமையான தேகம்.வாழ்க்கை போராட்டத்தில் சிக்கிசின்னா பின்னம் ஆகி கொண்டுஇருக்கிறாள் என்று யாரும் சொல்லமுடியாத புத்தம் புது மலரின் முகம்.ரோஜாபூவின் மென்மை. தன் துயரத்தைவெளியே காட்டாமல் சிரித்தபடி பேசிநடமாடும் மனித பொம்மை.பார்ப்பவர் மனதை கண்சிமிட்டும்நேரத்தில் கவர்ந்திட கூடிய கோடிமலர்களின் அழகை அவள் ஒருத்திக்கேஆண்டவன் படைத்து விட்டானோ என்றுவியக்க வைக்கும் கவின் மிகு தோற்றம்.ஆனால் குடும்பம் நடத்த அவளுடையசம்பாத்தியம் மட்டுமே போதுமானது.

வந்தனாவின் குடும்பத்திற்கு.அவளுடைய சுகம் துக்கம் என்ன என்றுகேட்டறிந்து கொள்ள நாதியில்ல்லை.அவர்களின் தேவைகளை மட்டுமே முன்வைக்க பழகிவிட்டனர்.யார் குற்றம்.ஐயோ தன் குடும்பம் நிர்கதி ஆக கூடாதுஎன்று ஓயாது உழைத்து போடஎண்ணம் கொண்டது.தந்தைக்கு பின்னர்இந்த குடும்பத்தின் தூணாக தன்னை நினைத்து கொண்டது குற்றமா.இன்று ஏனோ வழக்கத்திற்கு மாறாகவந்தனா களைப்புடன் சோஃபாவில் சாய்ந்தாள் ...‌என்னம்மா இன்று வேலை அதிகமா பரிவுடன் கேட்ட அம்மாவுக்கு லேசாக புன்னகை செய்தாள்....இதற்கு மேல் கேட்டு விடாதே என்று பொருள்...


பெற்றவள் வேதாக்கு தெரியாதா!!...சரிமா நான் மார்கட் போயிட்டு வந்து விடுகிறேன்.. கொஞ்சநேரம் உள்ளே போய் படுத்து ரெஸ்ட் எடு... ஒரு காபிகலந்து தரேன் அம்மா கையால்.களைப்புபறந்தோடி விடும் என்று ஆறுதல்மொழி சொல்ல தெரியாத தாய்.அவள்செய்ய வேண்டிய வேலை ,ஏதோ விசாரித்து ஆகிவிட்டது கடமை முடிந்தது.இதுவே பெரிய விஷயம் வேதாவிற்கு.வந்தனா கிளர்க்காக ஒரு கம்பெனியில் பணிபுரிகிறாள்.. நல்ல சம்பளம் தான்.ஆனாலும்பற்றாக்குறை.‌... இரண்டு தங்கைகள்.கடைகுட்டி தம்பி இவர்களின் வாழ்க்கையில் இவள்தான் முக்கிய அங்கம்...‌

மூத்தவள் லதா இளையவள் சிநேகா.. கல்லூரியில் படிக்கும் மாணவிகள்.. கடைக்குட்டி தம்பிக்கு ஐந்து வயது..வந்தனாவுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் தம்பி சரண் தான்..தவமிருந்து வேதா வயது கடந்துபெற்ற பிள்ளை. சரணுக்கு இரண்டு வயதாகும்போதே தந்தை வாசனை இழந்து விட்டது குடும்பம்... குடும்பபாரம் வந்தனா தலையில் விழுந்தது... வேதாவுக்கு நெய்யும் பருப்பும் இன்றிகுழந்தைகள் சாப்பிடாது என்பாள்.அளந்து போட்டு சமைக்கநினைத்ததுஇல்லை.யாருக்கும் கொடுத்து உதவியதும் இல்லை.ஆழும் பாழுமாக குப்பையில்கொட்ட மனம் கிலேசமடைந்ததும்இல்லை.


ஹோட்டல் சினிமா என்று போகவேண்டும் வாரம் தவறாமல்.அக்கம்பக்கத்து வீடுகளில் உனக்கென்னமாராணி மாதிரி வாழறே என்று மற்றவர்கள்புகழ வேண்டும்.சேமிப்பு ஏதும் இல்லாமல் குடும்பம் நடத்தி குழந்தைகள் பெற்ற வேதாவுக்கு குடும்ப பாரம்னா தெரியாது..மனைவி முகம் மாறாமல் கோணாமல் நடக்க வாசன் பழகிவிட்டார்.

அவர் போனபிறகு நிற்கதியாக நிற்கும்குடும்பம் இப்போது.இனியாவது குடும்பம்நடத்துவதுதெரியவேண்டும். அல்லதுபழகிக்கொள்ளவேண்டும். இல்லையா.ஆனால்வேதாவிற்கு இப்போதும் தெரியவில்லை.. திருமண வயதில்நிற்கும் பெண் இப்போது வந்தனா.ஆனால் வேலைக்கு போய் குடும்பத்தைகாப்பாற்ற முற்பட்டாள். இப்போதும்குடும்ப கஷ்டம் தெரியவில்லை என்பதுஅறியாமையா? ஆணவமா? அல்லதுசுயநலம் அறிவுக் கண்ணைபொத்திமூடிவைத்திருக்கிறதா‌ என்று நினைக்க தோன்றும் இல்லையா.வந்தனா வாங்கி கொண்டு வரும் மளிகை சாமான்களை ஒரே வாரத்தில் குழந்தைகள் கேட்டாங்க என்று சமைத்து போட்டு விட்டு சாமான் காலி என கூறும் வேதாவை கோபித்துக் கொள்ள முடியாது தவிப்பாள் வந்தனா..


கொஞ்சமாவது மனசாட்சி உறுத்திஇருக்க வேண்டாமா? கணவன் மனைவிசந்தோஷமாக இத்தனை பிள்ளைகள்பெற்றுப் போட்டுவிடதை வந்தனா தான்காப்பாற்ற வேண்டுமா.சரி அவள்பொறுப்பை ஏற்றுக் கொண்டாள்.ஒத்துழைப்பாவது தரவேண்டாமா.கணவன்இருக்கும் போது எப்படிபொறுப்பு இல்லாமல் குடும்பம்நடத்தி வந்தாலோ அந்த நிலையில்இருந்து மாறவேயில்லை வேதா.

இந்த வாரம் சினிமா வேண்டாம்.அடுத்த வாரம் பார்ப்போம் என்றுவந்தனா சொல்லி விட்டால் அவ்வளவுதான் மூலைக்கு ஒருவராக முடங்கி மயான அமைதியில் வீடு இருக்கும்.அந்த கொடுமையை விட பணக்கஷ்டம்பெரிய விஷயம் இல்லை என்பதாகசரி போய்ட்டு வாருங்கள் என்றுசொன்னால் போதும் வீடு பழையபடிகலகலப்பாக மாறிவிடும். குழந்தைகளுக்கு வேறு போக்கிடம்ஏது.சினிமா தான் ஒரே ஆறுதல்.அதுவும்வாரத்தில் ஒரே முறை தான்.அதுக்கும்தடைசொன்னால் எப்படி குழந்தைகள்பாவம் என்பாள் வேதா. அப்படியானால்நான் பாவம் இல்லையா?என்ற கேள்விமனதுக்குள் எழுந்து ஊமையாக அழுதுஅடங்கி விடும்.கண்ணீரை கூட வெளிப்படுத்தாது.


இதுநாள் வரையில் தான் உண்டுதன் வேலையும் குடும்பமும் உண்டு என்று இருந்துவந்தவந்தனாவிற்குஅலுவலகத்திற்கு புதிதாக பாலுவந்து சேர்ந்த பிறகு மனம் தடுமாற்றம் அடைகிறாள்.மனம்சஞ்சலம்அடைந்தாலும் தன்னை உறுதிபடுத்தி கொள்ள படாத பாடுபட்டாள் வந்தனா....லதா. பைனலியர் படித்துகொண்டு இருக்கிறாள்.முடிந்துஅவள் வேலைக்கு போனால் தன் குடும்பம் சற்று முன்னேறிவிடும் என்ற கனவு கண்டாள் வந்தனா.

பகல் கனவாக மாறியது..எக்ஸாம் முடிந்தது..பிரண்டுமேரேஜுக்குபோய்ட்டு வரேன்னு சீவி சிங்காரித்துகல்யாணப் பெண் போல தயாராகிவிட்டாள் லதா. வேதா ஆசையாக மகளைநெட்டி முறித்தாள். ஒருமுறை கூடதன்னை கொண்டாடியதாக ஞாபகம்வரவில்லை வந்தனாவிற்கு.விடியற்காலையில் கிளம்பி காலை ஏழு மணிக்கு மாலையும் கழுத்துமா வந்து நின்ற லதாவை கண்டு விக்கித்து நின்ற வந்தனாவிடம் அக்கா எங்களை ஆசிர்வாதம் பண்ணு..


அதிகார தொணியில் குற்ற உணர்வே இன்றி பேசும் லதாவிடம் என்னவென்று பேசுவது.‌முதலில் அம்மாவிடம் போய் ஆசிர்வாதம் வாங்கு என்றதும் இதற்காககாத்துக்கொண்டு இருந்தவளைப் போலபுன்சிரிப்புடன் மகிழ்ச்சி முகத்தில்தாண்டவமாடவேதா குடுகுடு என்று ஓடி போய் ஆர்த்தி கலந்து வந்து ஆரத்தி எடுத்து மகளையும் மாப்பிள்ளை வசந்தனையும் வாங்க வாங்க என்றுவரவேற்பு தந்தவள் வலதுகாலை எடுத்துவைத்து வாங்க.இருவரையும்பூஜை அறைக்கு அழைத்து போய் அப்பா படத்தை வணங்கி கொள் என்றாள்...

ஓ..... அம்மாவுக்கு இவ்வளவு புத்திசாலி தனம்கூடஉள்ளதா..‌அப்படியானால் இந்த திருமணம் அம்மாவுக்கு தெரிந்து தான் நடந்ததோ. மூத்த மகள் நினைப்புவரவில்லையா அம்மாவுக்கு. பாலுவின்முகம் ஒருமுறை நிழலாடியது.தான்மட்டும் குடும்பம் என்று உணர்வுகளைஅடக்கி வாழ வேண்டிய பலி கடாவா?கண்களில் கண்ணீர் துளிர்த்து விடுமோஎன்று பயம் ஏற்பட்டது வந்னாவிற்கு. சுயநலமான உலகத்தில் தான் மட்டும்ஏன் இப்படி இருக்க வேண்டும்.

மணமகக்கள் காபி மட்டும் குடித்து விட்டுஅக்கா நாங்கள் குடும்பம் பண்ண வாடகைவீடு பார்த்து வச்சிருக்கேன்.. போய் பாலை காய்ச்சனும்..பிறகு வந்து மேற்படி விஷயம் பேசிக்கொள்வோம்.‌ நீங்கள் வாங்கஎன்று அழைக்க கூட தோன்றவில்லைலதாவிற்கு.பொதுவாக விடைபெற்று வெளியே காத்திருக்கும் காரில் ஏறி டாட்டா காட்டிவிட்டு போய் விட்டாள் லதா..

இவ்வளவு சுயநலகாரியா இடிந்து போய் அமர்ந்து விட்டாள் வந்தனா.. அம்மாவிடம் மேற்கொண்டு விஷயம்னு சொன்னாளே என்னம்மா அது..வேறேன்ன வந்தனாஇது கூட தெரியாமல் கேள்வி கேட்கிறாயே. திருமணத்திற்கு நாம்நகை நட்டு பண்டபாத்திரம்னு சீர்வரிசை என்று செய்து தானே ஆகனும்.அது நம்முடைய கடமை தானே.யார்கடமையை பற்றி பேசுவது.அசால்ட்டாக சொல்லும் அம்மாவை சுட்டெரித்து விடுவது போல பார்த்த வந்தனாவை முறைச்சாலும் நம்ம கடமையை செய்யாமஇருக்க முடியுமா என்ன என்று வெடுக்கென கேட்கும் வேதவை என்னசொல்வது.

சீர் செய்வது நம்ம கடமைஇல்லை. உன் கடமை.இருந்தால் நீ செய்ய வேண்டியதுதானே என்று சொல்ல துடித்த மனதை அடக்கி கொண்டாள்..ஆக அம்மா வேதாவும் சுயநலமுள்ளவள் தான்.வீட்டு செலவுகளை பார்த்து கொண்டு சிறுசிறுக சேர்த்தசேமிப்பில் இருந்து கடன் வாங்கியதாக கூறி ஒரு தொகையில் நகை சீர் என ஓரளவுக்கு செய்து விட்டு நிமிர்வதற்கு முன் வளைகாப்பு சீமந்தசெலவு பிறகு டெலிவரி செலவு என எக்கச்சக்கமாக செலவு செய்யவைத்தாள் அம்மா வேதா மனசாட்சியே இல்லாமல்.

வேதாவுக்கு மூத்த மகளுக்கு திருமணம் செய்து பார்க்கவேண்டும் என்கிற எண்ணம் துளிகூட வேதாவின் மனதில்எட்டி பார்க்கவேயில்லை .தாயின் மனதில் ஈரம் கூட இல்லாமல் போய்விட்டது... சிநேகா பைனலியர் முடிக்கும் முன்பே இரண்டு ஜாதகத்தை கொண்டு வந்துநீட்டினாள் வேதா.. புரோக்கரிடம் சொல்லிவைத்து இருந்தேன். தனக்கு புரோக்கர்பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாரா என்ன? மனதில் குமைந்தாள்வந்தனா.


இருந்தாலும் பொறுமையாக இப்பஎன்னம்மா அவசரம்.சின்ன பெண்தானே என்றாள். லதா மாதிரி காதல்அது இது என்று அசிங்கமாகி விட்டால்என்ன ஆகும். அசிங்கம் என்றுஅவளைவீட்டை விட்டா துரத்தி விட்டாள்அம்மா இல்லையே. நல்ல வரவேற்புகொடுத்து சீர்வரிசை செய்ய வைத்தாள்.பூச்சூட்டு சீமந்தம் குழந்தை பேறுஎல்லாம் பார்த்து சீராடி கொஞ்சிகுலவி தானே அனுப்பி வைத்தாள்வேதா.இவளுக்காவது நாமே பார்த்து முடிவு செய்து விடலாம்..லதா மாதிரி யாரையாவது இழுத்துவந்து விட்டால் என்ன செய்வது.. அப்ப நான் யாரையும் இழுத்து வந்துஉன்னால் தாங்க முடியுமா என்றுகேட்க துடித்த நாக்கை அடக்கி கொண்டாள் வந்தனா.

சேமிப்புகரைந்து விட்டது. மீதி இருந்த தொகை பற்றாது கடன் வாங்கி சிநேகா திருமணத்தையும் முடிந்த அளவுக்கு சிறப்பாகசெய்துவிட்டாள்வந்தனா. இனியாவது திருமணம் செய்து கொள் வந்தனா என்ற தோழி ரமாவுக்கு தலைக்குமேல் கடன் இருக்கு..கடன் தீர்வதற்குள் சரண் படிப்புக்கு செலவு செய்ய கடன் வாங்க வேண்டுமே விரக்தியில் சிரித்தாள் வந்தனா.. கஷ்டத்தை எல்லாம் சகித்துக் கொண்டு உன்னால் மட்டும் எப்படி சிரிக்க முடியுது வந்தனா. பழகிவிட்டது ரமா.பாலு உங்களிடம் பேசனும் காண்டீன் பக்கம் வாருங்கள் என கூறிவிட்டு பாலுவின் வருகைக்கு காத்திருந்தாள் ரமா.

எங்கே ரமா‌ தன்னை விரும்புவதாக கூறிவிடுவாளோ என் பயந்து கொண்டே வந்தான் பாலு..இரண்டு காபிக்கு ஆர்டர் கொடுத்து விட்டு மிஸ்டர் பாலு நீங்கள் வந்தனாவை உண்மைஆகவிரும்பறீர்களாஆமாம். உங்க வீட்டில் சம்மதிப்பாங்களா பாலு..என்னை ஆதரிக்கவோ தடுத்து விடவோ ஆளில்லை....வந்தனா மட்டும் சம்மதித்து விட்டால் போதும்.. நான் விரும்புவதை எப்படிகண்டு பிடிச்சீங்க என்றான்.

நீங்கள்மற்ற ஆண்களை போல பார்வையைமேய விடுவதில்லை. கண்ணியமானபார்வை.தேங்ஸ்ங்க. வந்தனா வரும்நேரத்தில் ஏக்கத்துடன் அவளைபின் தொடரும் உங்கள் பார்வையைவைத்து தான் ரமா கலகலவென்று சிரித்தாள். நீங்க புரிந்து கொண்டுவிட்டீர்கள்.ஆனால் வந்தனா திரும்பிகூட பார்ப்பதில்லை. இல்லை மனதை அடக்கி கொண்டாள்.எனக்கு தெரியும். என்று கூறினாள் ரமா.அவதான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் நிறைய கடன் பொறுப்புகள் அதிகம் இருக்கு என்று இன்னும் அந்தசுயநல கூட்டத்தில் சிக்கி தவித்துக் கொண்டு இருக்கிறாள்.

நானும்காத்த்திருப்பேன்.அப்படி என்றால் பாலு நீங்கள் இரண்டு பேரும் அறுபதாம் திருமணம் தான் செய்து கொள்ள முடியும். ரமாவை திகைப்புடன்பார்த்தான் பாலு.இதை கிண்டலாக சொல்லவில்லை வேதனையுடன் சொல்கிறேன்.. அவசியம் இல்லை உங்கள் தோழி சம்மதித்தால் நாங்க இருவரும் மகிழ்ச்சியுடன் வாழலாம்.. உங்க தோழி என்னை திருமணம் செய்து அவங்க என் வீட்டுக்கு வரவேண்டாம்..

நான் வந்தனா வீட்டுக்கு போகிறேன்... ஒரு மகன் செய்யும் கடமைகள் யாவும் நான் செய்ய காத்திருக்கிறேன்... வந்தனாவின் தம்பியை எங்க மகனாக வளர்க்க ஆசை படுகிறேன்.. சம்மதித்தால் இப்போதிருந்தே வாழ்ந்து கடமைகள் செய்ய விரும்புகிறேன்..தனியாக நின்று வந்தனா சாதித்துவிட்டு வருவதாக இருந்தாலும் அப்போதும் தோள் கொடுக்க நானிருகாகிறேன்.அறுபதாம் கல்யாணத்திற்கும் நான் தயார் என்று சொல்லிவிடுங்கள்ரமா.தீர்மானமாகசொன்ன பாலுவை மிகவும் மரியாதைக்குரிய நபராக பார்த்துபுன்னகைத்தாள்.

வந்தனாவிடம் பாலு சொன்னதை கூறிய உடனே ரமாவின் கைகளை பற்றி கொண்டு அழுதாள்வந்தனா.என்னை சார்ந்த உறவுகள் சுயநலமா இருக்கும் போது எனக்கு வயதான பிறகும் தோள் கொடுக்க நினைக்கும் பாலுவை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறேன் ரமா.என்ற வந்தனாவை கேட்கவே சந்தோஷமாக இருக்கு வந்தனா.இந்த கதையை சோகமாக முடிக்க மனமில்லாமல் சுபமாக மாற்றியுள்ளேன்.‌‌ நிறைய பலிகடாவாகபெண்களை பயன் படுத்தி வரும் பெற்றோர் பெருகி‌வருகிறார்கள்.

நன்றி .

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...