JUNE 10th - JULY 10th
அவன் ஒரு எழுத்தாளன். ஆழ்ந்தகன்ற அறிவினைக் கொண்டவன். வெறும் கற்பனை சிறகில் பறப்பவன் இல்லை. அதற்கும் மேல் உண்மையை உணர்ந்து எழுதுபவன். ஆராய்ந்தறிந்து எழுதுவதில் வல்லவன். ஒரு உணவை பற்றி எழுத வேண்டுமாயின் சுவைத்து பார்த்தே எழுதுவான்.
அவன் தனியன், எளியன், இனியன். அவனுக்கும் ஒரு காதலி உண்டு. அவள் அவன் இதயக் கூட்டுக்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்து அவனையே கண்சிமிட்டாது பார்ப்பாள். அவள் கற்பனையின் வெளிப்பாடு. அந்த கற்பனை காதலியைத் துணை கொண்டு அவன் காவியங்கள் படைப்பான். மற்றபடி பெண்வாடையே அறியாதவன்.
அவனுக்கு ஒரு சோதனை. ஒரு சினிமா வாய்ப்பு. அதுவும் விலைமகளை நாயகியாகக் கொண்ட ஒரு சினிமா. இது தான் தலைப்பு. என்ன செய்வான். அவன் எதையும் உணராமல் எழுத மாட்டான். பெண் வாடையும்அறியாதவன். எனவே மிகுந்த யோசனைக்குப் பிறகு தன் கற்பனைக் காதலியிடம் அனுமதி கேட்டான். அவளோ முறுக்கிக் கொண்டு போனாள்.
அவளிடம் ஒருவழியாக அனுமதி வாங்கி ஒரு விலை மகளை சந்திக்க சென்றான்.
அவன் நண்பன் மூலம் ஒரு வீட்டை சென்று அடைந்தான். அழகான முற்றம் வைத்த அளவான ஓட்டு வீடு. வீட்டிற்குள் நிழைந்தவுடன் பல நிறங்களில் வண்ண வண்ண மலர்களும் காய்கறி கீரையும் என சிறிய அளவிலான தோட்டம் வரவேற்றது. சுற்றிலும் மதில் சுவர் எழுப்பப்பட்ட அந்த தோட்டத்தினுள் ஒரு கிணறு வாலியுடன் பொருந்தி நீர் இறைக்க தயாராக இருந்தது.
வாசலில் அழைப்பு மணியை அடித்து காத்திருந்தான். உள்ளுக்குள் படபடப்பு. ஒரு பள்ளி மாணவனைப் போல் உணர்ந்தான். தேர்வுக்கு சென்றவன் ஹால் டிக்கெட் ஐ மறந்தவன் போல் விழித்தான். சிறிது நேரம் கழித்து ஒரு குயில் கூவியது.
யாரது? என்றது அந்த குரல்.
"அடி பூங்குயிலே! பூங்குயிலே!" என்றான்.
பிறகுதான் கதவு திறக்கப்பட்டது.
புரியவில்லையா. அது இன்றைய ஓடிபி(otp - one time paasward)
குளித்து முடித்த ஈரக் கூந்தலோடு தேவதையென அவள் வந்தாள். அவன் பிளந்த வாய் மூட மறந்தான். அவள் அழகில் மயங்கி அல்ல. அவன் உள்ளத்திற்குள் இருக்கும் கற்பனை காதலி உயிர் பெற்று எழுந்து வந்து போல் முன் வந்து நின்றாள்.
ஒரே புன்னகை தான் அவன் அதில் சொக்கியே போனான். அவளுக்கு அவன் அன்றைய வாடிக்கையாளன்.
அவள் இயல்பாக அவனிடம் பேசினாள். பாவம் அவனுக்குதான் வார்த்தை தொண்டைக் குழியில் மீன் முள் போல சிக்கித் தவித்தது. விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் வார்த்தைகளில் சிக்கி சிக்கித் தவித்தான்.
அவள் ஒரே வார்த்தை கேட்டாள்.
முதல் முறையா? என்று.
இவனோ குழந்தைத் தனமாய் தலையாடினான்.
அவள் பிறகு பேச வில்லை. அவனுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து அருகில் அமர்ந்தாள். அவன் விரல்களை தன் கைக்குள் அமர்த்தி பேசத் தொடங்கினாள்.
அவனுக்கு அது ஒரு புது அனுபவமாக இருந்தது. அவனும் அவளிடம் பேசினான்.
பேச பேச பொழுது போனதே தெரியவில்லை. இறுதியாக அவள் ஆடைகள் களைய போனாள். அவன் தடுத்தான் வேண்டாம் என்பதாய்.
அவள் புரியாது பார்த்தாள். "இதற்குத் தானே ஆசை பட்டாய்?" என்பதாய்.
அவன் அவளை அமர வைத்து மடியில் தலை சாய்த்து கதை பேசினான். அவளும் அவன் சிகைக் கோதி உற்சாகப் படுத்தினாள். அவன் தன் சினிமா கதைகளை கூற அவள் அதற்கு சில உத்திகளைக் கூற, அங்கே புது உறவு ஒன்று உருவானது. அவளுக்கும் இது புது அனுபவம். இது வரை அவளிடம் யாரும் வாயால் கதைகள் பேசியதில்லை. என்பதால் இதுவே இருவருக்கும் முதல் முறை இப்படி மனம் விட்டு பேசுவது.
ஒரே சந்திப்பில் இரு உள்ளங்களும் (மட்டும்) கலந்தன.
அடி பூங்குயிலே!
என்னவென்று .
சொல்லுவேன்
சொந்தமென்றா
பந்தமென்றா
யாரென்றே..
தெரியாமலே
புது சொந்தம்
உருவானதே
இதன் பேர்
என்ன?
இந்த இரவு
மட்டும் இன்று
ஏனோ சட்டென
கழியுதே...
இரவு நீள
நீயோ ...
வழியொன்று
வாசியேன்!!!
இரவு சட்டென முடிந்து பறவைகளின் ஒலி காதில் வந்து பாய்ந்ததும் தான் இருவரும் சுய நினைவுக்கு வந்தனர்.
அவன் அவளுக்கு பணம் கொடுக்க போக அவள் வாங்க மறுத்தாள்.
புன்னகித்தபடியே ,"உழைக்காத காசு ஒட்டாது" என்றாள்.
அவன் நான் இன்னும் சில இரவுகள் உன்னுடன் வாய்வார்த்தைகள் பேச வேண்டும் என்றான்.
உடனே அவள்" நான் வார்த்தைகளை விற்பதில்லை. இலவசம் தான்" என்றாள்.
அவனும் சிரித்து கொண்டே அவள் வாடிகையாளரிடம் பணம் பெறும் உண்டியலில் காசை போட்டுவிட்டு நகர்ந்தான்.
அவள் யாரிடமும் கை நீட்டி காசு வாங்குவது இல்லை. வீட்டில் வரவேற்பறையில் ஒரு உண்டியல் இருக்கும். இங்கு வருபவர்கள் அதில் தமக்கு விருப்பமான ரூபாயை போட்டு விட்டு செல்வர். இவள் கணக்கு பார்க்க மாட்டாள். மேலும் இவளுக்கென சிறு கார்மெண்ட்ஸ் ஒன்று உண்டு. அதில் வரும் பணத்திலேயே தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வாள். பிறகு ஏன் இந்த தொழில்? பொறுத்திருந்து பார்க்கலாம்.
அவன் அடிக்கடி அவளை சந்திக்கத் தொடங்கினான். அவளும் அவன் வரவை எதிர்பார்க்கத் தொடங்கினாள். ஒரு கட்டத்தில் அவளால் இன்னோரு ஆணை அவள் அருகே அமரவைத்து பேசக் கூட விரும்பாத நிலமைக்கு ஆளானாள். அந்த அளவு அவன் அவளுக்குள் வேரூன்றிப் போனான்.
அவளுக்கே தெரியும். இது தவறு என. என்ன செய்வாள் பாழும் மனது கேட்கமாட்டேன் என அடம் பிடித்தது. அவன் இல்லாத பொழுதுகள் மீளா பொழுதுகளாயின.
ஒருநாள் அவன் வந்தான். பசிக்குது என்றான். அவள் அதற்காகவே காத்திருந்தது போல் அடுபங்கரை ஓடி சமைக்கத் தொடங்கினாள். அவன் உரிமையுள்ள கணவன் போல் அடுபடிக்குள் நுழைந்து காய்கள் வெட்டினான். அது அவளுக்கு ரொம்பவே பிடித்தது. கிட்டதட்ட உருகி போய் நின்றாள். அவன் அழைத்தால் அவனுடன் செல்ல அவளின் வெட்கம் கெட்ட மனது அலைந்தது. அவளுக்கும் தெரியும் தன் நிலை எதுவென.
திடீரென கேட்டான். நீ என்னை கல்யாணம் பண்ணிகிறியா? என்று.
அவள் நிதானித்தாள். சிறிது நேரம் யோசித்தாள். பின்பு மறுத்துவிட்டாள். அவன் ஏன் என கேட்டதற்கு அவள் அவனை ஓரிடம் அழைத்துச் சென்றாள்.
அதுவே முதல் முறை. அவனும் அவளும் வெளியில் செல்வது. அவள் தன் காரை மறுத்துவிட்டு அவனுடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தாள். அவனடைந்த உவகைக்கு அளவே இல்லை. வாழ்வில் ஏதோ சாதித்துவிட்ட உணர்வுடன் அவளுடன் புறப்பட்டான். அவளின் புடவை வாசம் அவனுக்குள் புகுந்து என்னவோ செய்ததது. அவனின் வாகனம் ஓட்டும் கம்பீரம் கண்டு அவள் சற்றே மயங்கி தன்னை மறந்தாள். இருவரும் ஒருவருக்குஒருவர் பிறந்ததாக தன்னுள் உருகிப் போயினர்.
அவனை நினைத்து
உயிர் பிணைத்து
தேநீர் சர்கரையாய்
உருகி உருகி
கரைந்து ...
காணாமல் போனாள்
மாது !!!
வாகனம் ஒரு பெரிய கட்டிடம் முன் சென்று நின்றது.
அது ஒரு அநாதை பிள்ளைகள் படிக்கும் ஒரு ஆசிரமம். அவள் அங்கு நுழைந்தவுடன் அந்த பிள்ளைகள் இவளை கண்டதும் அம்மா என்று ஓடி வந்து கட்டிகொண்டு சிரித்தனர்.
அவளும் சிரித்தாள். அவன் வியந்தான்.
இதோ இங்கு எனக்கு ஐம்பத்து ஒன்பது பிள்ளைகள் இருக்கின்றன. அதனால் தான் நான் அந்த தொழில் செய்து இவர்களை காத்து வருகிறேன். என் செலவுக்காக நான் கார்மெண்ட்ஸ் நடத்துகிறேன். இத்தனை பிள்ளைகளின் தாயான நான் திருமணம் செய்யக்கூடாது. அதிலும் உன் போன்ற குழந்தைத் தனமானவனுக்கு எச்சில் இலையான நான் வேண்டாம். உனக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள். என்றாள்.
அவனோ,
அடியேய் !
சிறுக்கி மகளே!
இன்னொரு பெண்ணை
இதயம் தாங்குமா?
நீ எச்சில் இலையல்ல
புனிதம் காக்கும்
வில்வ இலை!!!
உன்னை அடைந்து
அப்புனிதம் கலைக்க
என்னால் ஆகாதடி !
கிளியே...
ஐம்பத்தொன்பதோடு
அறுபதாய் எனை ஏற்பாய்
என்று அவளினும்
உசந்து நின்றான்
அசந்து நின்றாள்
அவள்,!!!
பிறகென்ன,, இருவரும் உடல்கள் தாண்டி உயிர்கள் ஆனார்கள். அவன் அவளிடம் கைகள் பற்றியே கதைகள் பேசுவான். அவளின் புன்னகைக்கு ஏங்கி நின்றான்.
காலையில் கண்விழித்ததும் அவளின் காலை வணக்கத்திற்காக காத்திருந்தான். விரல் திண்டாமலேயே அவளின் உள்ளம் தீண்டினான்.
அங்கே அழகிய உள்ளங்களின் சங்கமம் உருவாகியது.
ஆமாம் அவள் அவனின் பெயர்கள் என்ன? யாருக்கேனும் தெரியுமா? தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள்.
#693
35,150
150
: 35,000
3
5 (3 )
www.paramakalabanu
இங்கு புனிதமே புனிதமாக உணர்ந்திருக்கும் இரு மனங்களின் இரு உள்ளங்களின் இரு உயிர்களின் சங்கமத்தில். ஐம்பத்தொன்பதோடு அறுபதாய் தனை நினைக்கச் சொல்லும் மீசை வைத்தக் குழந்தையாய் அவன் உசந்து நிற்க அவள் மட்டுமல்ல நானும் அசந்துதான் போனேன் அவனின் ஆண்மையின் மென்மை கண்டு. விரல் கொண்டு தேகம் தீண்டாமல் காதல் கொண்டு மனதை தீண்டும் அவனின் மெய் காதலில் அவள் வீழ்ந்தது வியக்கத்தக்கது இல்லை. வார்த்தைகள் விற்பனைக்கு அல்ல, இந்த ஒற்றை வரி போதும் தங்களின் ரசிப்புத்தன்மையையும் திறமையையும் நிருபிக்க. அன்பால் உள்ளங்கள்
nagarajeevm
No words to explain
Gayathri Arun
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50