JUNE 10th - JULY 10th
முருகன் கோயில் திருவிழா வழக்கமான 6 ஊர் மக்களுடன் கோலாகலப்பாக நடை பெற்று கொண்டிருக்கிறது எங்கும் பல வண்ணங்கள் நிறைந்த கடைகள் சாலையின் இருபுறமும் ததும்பிய மக்கள் கூட்டதுடன் பக்கத்திலே பெரிய அளவிலான இனிப்பு கடைகளும் சிறுவர்கள் சூழ்ந்த படி தூரத்தில் கோஷம் போட்ட படி பக்தர்கள் (அரோகரா ..அரோகரா ) பக்தி மயமான காவடிகளுடன் வருகின்றன்றனர் . ஆடி மாதம் என்பதால் வெயில் கொளுத்துகிறது அதிலும் தீக்குழி இறங்கி காணிக்கை கொண்டிருக்க நான் என் அப்பா வை தேடிக்கொண்டிருந்தேன் .
ஆ அங்கே குலத்தருகே வேலையில் மும்முரமாக இருந்தார். திருவிழாவில் முடி காணிக்கை எடுக்கும் வேலை என் அப்பாவின் குடும்ப வேலையாகும்,
அப்போது அவர் மிகவும் டென்ஷனாக இருப்பார். இருந்தாலும் பரவாயில்லை . திருவிழாவில் ஒரு கடையில் ஒரு சூ பார்த்தேன் மிகவும் பிடித்து போனது வாங்கியே ஆக வேண்டும் அவ்வளவு அழகு . அடுத்த வாரம் டூர் போவதற்கு சரியான சூ இதுதான் அப்பாவிடம் கேட்க வேண்டும் .
இருக்கும் கூட்டத்தில் அப்பாவின் காதருகில் சென்றேன்
அப்பா… அப்பா…
என்னப்பா
டீச்சர் அடுத்த வாரோ டூர் போகனு சொன்னாங்கள்ல அதுக்கு ஒரு சூ பார்த்தம்பா நல்லாருக்கு உங்களுக்கும் புடிக்கும் வாங்கி தரிங்களா,
அப்டியா டூர் எல்லா வேணாம்பா ரொம்ப செலவு ஆகு,
அப்பா வேலைய முடிச்சிட்டு வாறே அல்வா வாங்கித்தரே செத்த பொறு சரியா , அப்பா டூர் , அதுக்கெல்லா காசு வேணும்பா நீ வீட்டுக்கு போ வந்து பேசறே வேல இருக்குப்பா ,
என சற்று கண்டிப்புடன் சொன்னயுடன் வெறும் கையுடன் கண்களை கண்ணீருடன் கடைக்கு சென்று அந்த சூ பார்த்த படி நின்றேன். .
யாரும் வாங்காமல் பார்த்து கொள்ள .
இருந்தும் பசி தங்களை வீட்டுக்கு போயிடு சாப்பிடு வந்திருவோ என பிடரி iதெறிக்க ஓடி வந்தேன் . வீட்ல அம்மா சுட சுட வச்ச 3 இட்லி அப்ரோ மிளகை சட்னி சூடான இட்லி ஆறுவதற்குள் செரிமாணத்திற்கு அனுப்பினேன் . மீண்டும் கடையை நோக்கி சென்றேன் அங்கே அந்த சூ காணவில்லை யாரோ வாங்கி சென்று விட்டார்கள் சுற்றும் முற்றும் ஓடி ஓடி பார்த்தேன் யாரையும் கானோ வாங்கியமாரி தெரியவில்லை சோகமாக அந்த கடை முன்னே நின்று அந்த இடத்தை பார்த்து கொண்டிருந்தேன்
நேரம் இரவானது .இரவு 9 மணிக்கு மேல் ஆனது எங்கள் ஊரில் திருவிழா முதல் நாழி ல் படம் ஓட்டுவது வழக்கம் . அங்கு போகலாம் என தோன்றியது ஏன் என்றால் படம் பார்க்க அவ்வலவு பிடிக்கும் ரஜினி நடித்த முத்து ஓடிக்கொண்டிருந்தது . படம் நல்ல காட்சி ஓடி கொண்டிருக்கும் பொது தூரத்தில் இருந்து ஒரு குரல்
தொர(துரை) டாய் தொர(துரை)..அது என் நண்பன் மணி யின் குரல் பக்கத்து வீடு பையன்
.. டாய் மணி என்று நானும் சென்றேன் .
டாய் தொர எங்கப்பா நா கேக்காமலே எனக்கு சூ வாங்கி குடுத்துருக்காருடா இங்க பார்த்தியா
என காண்பித்தான் .
என் மனம் சோகத்தின் உச்சத்திற்கே சென்றது . எப்படி இருக்கு என்றான் . குரல் வெளி வராதவனாய் நல்ல இருக்குடா என்றேன் .
எவ்வளவாண்டா என கேட்டேன் ‘150 துடா. அவ்வளவா நல்ல அதிர்ஷ்ட காரன்டா மணி என உள்ளுக்குள் நினைத்த பிடி அங்கிருந்து நகர்ந்தேன் .படம் பார்க்க அல்ல வீட்டிற்கு
. அம்மா படம் பார்க்கலயா சாமி என்றாள் இல்லம்மா எனக்கு தூக்கம் வருது என படுத்தேன் .
என்னை அறியாமை என தலையணை நினைந்து விட்டது அப்படியே உறங்கினேன் .
திருவிழாவின் இரண்டாம் நாள் மணி வீட்டிற்கு சென்றேன் வாசலில் சூ இருந்தது சற்று பார்த்ததை படியே சுற்றி யாரும் இருக்கிறார்களா என பார்த்த படி என் கால்களில் பொறுத்த கொஞ்சமாக நகர்த்தேன் அதற்குள் மணி வந்துவிட்டான் .
ஏன்னடா தொர காலைலே வந்திருக்க ஒன்னுல்லடா சும்மாத்தாண்டா இன்னிக்கு திருவிளக்கு என்ன டிரஸ் டா என தயக்கத்துடன் கேட்டேன் .
எனக்கு அப்பா ஜீன்ஸ் பெண்டு சட்ட இருக்குடா ரெண்டு பாக்கெட் அப்ரோ பெல்ட் குடுத்தாங்க பிரீயா தெரியுமா,
அப்டியாடா…
என ஒரு விடுத்த ஏக்கத்துடன் கேட்டேன் ..மணி ஓட அப்பா திருவிழாவுக்காக வெளிநாட்ல இருந்து வந்திருக்காரு அதுனால தடபுடல் செலவு செய்றரு . மணியிடம் கேட்டேன் ,
டாய் மணி உங்கிட்ட ஜீன்ஸ் பண்டு இருக்குல்ல எனக்கிட்ட கதர் பெண்டு தாண்டா இருக்கு அதுனால இணைக்கு மாட்டுக்கு உன் சூ தரியா திருவிளக்கு போடு வந்துட்றே என கேட்டேன் .
அவன் ஏதும் யோசிக்காமல் எடுத்துகோடா ஆனா ராத்திரி குள்ள குடுத்துறானு என கொக்கி பிடி போட்டான் ,
சரிடா கண்டிப்பா குடுத்துருவேன் என வாக்குமூலம் கொடுத்தது விட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.
அவ்வளவு சந்தோசமா நன் இருந்ததே இல்லை ..மனதிற்குள் ரஜினி படம் ஓடுவது போல ஒரு சந்தோசம் . ராட்டினத்தின் உச்சியி ல் இருப்பது போல ஒரு ஆனந்தம் .வரும் வழியில் இருந்தாலும் மனதிற்குள் ஒரு பயம் அப்பாவிற்கு இதெல்லாம் பிடிக்காதே அவர் ரொம்ப சுய கவுரவம் பார்ப்பார் .என்ன செய்வது என யோசித்தபடி வந்தேன் . வீடு வந்தேன் வீட்டிற்கு பின்னல் இருந்த புதரில் மறைத்தது வைத்தேன் அப்பா வெளியில் சென்ற பிறகு எடுத்து கொள்ளலாம் என .வீட்டில் அப்பா சாப்பிட்டுட்டு கொண்டிருந்தாள் .சற்று பயமாகவே இருந்தது .அப்பா எப்போது புறப்படுவார் என தயாராகி யிருந்தேன் .எதோ தைரியத்துடன் .அப்பா ஒருவழியாக வெளியில் புறப்பட்டார் அவசரம் ஓடி சென்று சூ எடுத்து கொண்டு வந்தேன் அம்மாவிற்கும் தெரியாமல் எனது கால்களில் மாட்டினேன் .பஞ்சு மெத்தயில் கால் வைப்பது போன்ற எண்ணம் .அப்படியே குதித்து விளையாடியேன் ஆகாயத்தில் பறப்பது போல இருந்தது . கோயில் திருவிழாவை நோக்கி ஓடினேன் . அங்கிருக்கும் சகா நண்பர்களிடத்தில் காட்டிக்கொண்டு பீத்தி கொண்டிருந்தேன் .காலை சாப்பாடு தொண்டை வரை சாப்பிட்டது போல ஒரு நிறைவு மனதில் . மதியம் நேரம் ஆனது சாப்பிட்டு திரும்ப வருவோம் என வீட்டிற்கு சென்றேன் அப்பா எதிரே அய்யனார் போல கண்ணில் கோபத்துடன் நின்றிருந்தார் .எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்ல அவரை பார்த்ததும் கண்களில் தானாக கண்ணீர் வந்துற்று . பயத்துடன் காலையில் இருந்த சூ வை கழட்டினேன் .
சூ ஏதுடா உனக்கு என்றார்,
அது…. அது….
வந்து மணி யோடாது பா என்றேன் அழுதபடி .
எந்த மணி அந்த சிதம்பரம் மொவ ன்கிட்டயா வாங்கிட்டு வந்த .
ஆ சீதா இங்க பாருடி உன் மொவன எவன் முன்னாடி நாம நல்ல இருக்கணும்னு சொல்லிட்டு இருக்கணுமா அவன்கிட்ட பொய் உன் மோவா என் மானத்த வித்துட்டு வந்துருக்கண்டி ரெண்டு செருப்புக்கு என்றார்.
ஆவேசமாக . உள்ளிருந்து பதறியபடி என் அம்மா ஒடி வந்தாள் .
என்னங்க ஆச்சு என .
என்கிட்ட வந்து நின்றார் அப்பா .
டாய் தொர நாம கிட்ட காசு இல்லாம இருக்கலாண்டா ஆனா காசு குடுத்து கூட வாங்க முடியாதது என்னனு தெரியுமா நம்மளோட சுய கவுரவம் தாண் டா . அத யாருக்காகவும் எதுக்காகவும் விற்க கூடாது வாழ்க்கைல அடுத்தவன் கைய நம்புறதுக்கு முன்னாடி நம்ம கைய நம்புடா அதுத நிரந்தரம் புரியுதா என்றார் .
கண்ணை தொடச்சிகிட்டேயே சரிப்பா என்றேன்.
கொண்டு பொய் இத அவனிடயே குடுத்துட்டு வந்துரு சரியா என்றார் .
அப்பா சூ….. .
..டேய் குடுத்து ட்டு வந்து சொல்லு என்னனு அதட்டி விட்டு வெளியில் சென்றார் .
உலகத்தில அதிகமான சோகத்தில் யாரது இருந்தால் அது நானாகத்தான் இருக்க முடியம் என தோன்றியது . என் நமக்கு இப்டிலா நடக்குது என மணி வீட்டை நோக்கி நடந்தேன் .அவனிடம் ஒப்படைத்து விடு அங்கிருந்து கோயில் நோக்கி சென்றேன் வெறும் கால்களுடன் .அவ்வளவு சோகம் முக்கத்தில் . கோயில் அருகில் இருக்கும் குளத்தின் படிகளில் சென்று உக்காந்திருந்தேன் வழக்கமா மனம் சரியில்லாத நேரத்தில் அங்குதான் செல்வேன் அங்கிருக்கும் மீன்களை காண . கொஞ்ச நேரம் அங்கு உக்கார்த்திருந்தேன் குளத்தை பார்த்த படி .
நேரம் இருட்ட தொடங்கியது வீட்டிற்கு புறப்பட்டேன் யாரும் கண்ணில் படாமல் . யாரும் சூ பற்றி கேட்டு விடுவார்கள் என .
வீட்டில் திண்ணையில் சோகத்தோடு உக்காந்திருந்தேன் உள்ளிருந்து அம்மா . கையில் ஒரு அட்ட பெட்டியுடன் . என் கண் முன்ன நீட்டினாள் என்னமா இது என கேட்டேன் பாருடா என்றாள்.
நிதானமாகவே திறந்தேன் . அந்த இரவில் என் கண்களில் மட்டும் சூரிய உதயம் போல ஒரு அதிசயம் அதில் இருந்தது அழகான ரெண்டு சூ க்கள்
. அம்மா…. எனக்காமா..
என திரும்பி திரும்பி கேட்டேன் அம்மா சற்று சிரிப்புடன்
உனக்குதான் சாமி உன் அப்பா வாங்கி போட்டு இருக்க சொன்னாரு வந்து கோயிலுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு .
எனக்கு என்ன சொல்வதே தெரியாத ஒரு நிலையில் இருந்தேன் ஒரு புறம் மனதில் ஆனந்தமாக கண்ணீர்வுடனும் இருந்தது .
சூ கால்களில் மாட்டி கொண்டு அப்பா எப்போது வருவார் என வாசலிலே உக்கார்ந்திருந்து வீதியை பார்த்து கொண்டிருந்தேன் .
மனதில் இருந்த ஒரே மந்திரம் அப்பா . அன்றும் இன்றும் என்றும்
#239
46,017
1,850
: 44,167
38
4.9 (38 )
msdmuthums
Nice
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
jeyseejeysee
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50