JUNE 10th - JULY 10th
கனவுகள்...
பனியில் ரஜாய்க்குள் பதுங்கி கிடப்பது சுகமாய் இருக்கும் இஷானாவுக்கு. அத்தனை பனியிலும் ஏசியை மிதமாய் ஓடவிட்டு உறங்கினால்தான் அவளுக்கு உறக்கமே வரும்.
வருங்கால ஆர்மி வுமென் அவங்க.
அந்த வீட்டில் மூன்று அறைகளே உள்ளது என்பதாலும் ஒரு அறையில் அவள் தாய்தந்தைக்கும் இன்னொரு அறை அவளுடைய அண்ணன் அண்ணிக்கும் என எடுத்துக்கொண்டார்கள். ஒரு அறையை இஷானா ஆக்கிரமித்துக்கொள்ள அவளோடு மனுசன் படுப்பானா என்று பாட்டி சிம்ரன் அவளோடு தங்கிக்கொள்ள மறுத்துவிட்டார்.
பின்னே ஆளை கொல்லும் பனி உறையும் ஜம்முகாஷ்மீரில் ஏசியில் ஹீட்டர் போடாமல் கூலிங்கை வைத்தால்?...
ஒரு இரவு தன் மகள் அதாவது இஷானாவை பெற்ற புண்ணியவதி சொப்னா, மகளுக்கு துணையாய் இருந்து நல்ல புத்தியை சொல்லி தருமாறு கெஞ்சியதால். வேறு வழியில்லாமல் போனால் போகிறது என்று பெரிய மனது பண்ணி அவளோடு ஒரே அறையில் படுக்க சம்மதித்தார் சிம்ரன்.
ஆனால் நடு இரவில் மூச்சுக்காற்றுக்காய் தவித்தவரை மருத்துவமனை அழைத்துச்சென்று சரிப்படுத்திய பின்னர். இஷானாவோடு பெரும் வாக்குவாதம் செய்து தோற்றவர்களாய் சிம்ரனுக்கு தனியாய் ஒரு அறையே கட்டிக் கொடுத்துவிட்டார்கள்.
குறும்பாக சிரித்த இஷானாவை பார்த்த அவள் அண்ணி, "பாவம்டி, இனி ஜென்மத்துக்கும் உனக்கு துணைக்கு வரமாட்டார்" எனவும்.
"என்காதிலும் ரத்தம் வராது அண்ணி. நானும் எத்தனை காட்டன் பஞ்சுதான் வாங்குறது அவர் பேச்சில் இருந்து தப்பிக்க?" அவள் வாய்விட்டு சிரிக்கவே.
"அது சரிதான் இன்னைக்கு இம்பார்ட்டன்ட் நிகழ்ச்சி இருக்கு நம்ம வீட்டில தெரியுமா உனக்கு?" அண்ணி ரீஜா நமுட்டு சிரிப்போடு கேட்டாள்.
"தெரியுமே எனக்கு தெரியாம அந்நிய நாட்டு சதி நடக்குது இங்கே" இஷானா நகைக்க.
"அப்போ உன்னோட திட்டம் ஆரம்பமாகியிருக்குமே?" ரீஜா அவளை ஆராயும் பார்வை பார்க்கவே
"ஹை! ஹை! அண்ணி போட்டு வாங்க பார்க்கறீங்களா என்கிட்டே? நான் சொல்லவே மாட்டேனே" என்றவளாய் சிரிக்க.
"நான் உனக்கு பெஸ்ட் பிரண்டு தானே எனக்கு மட்டும் சஸ்பென்ஸா சொல்லேன்" அவள் அருகில் நெருங்கி ரகசியம் போலக் கேட்கவும்.
"நீங்க எனக்கு பெஸ்ட் பிரண்டுதான். ஆனால் அம்மாவுக்கு சிறந்த மருமகள் ஆச்சே. சோ முதல் கருப்பு ஆடு நீங்கதான் அண்ணி, அதுவுமில்லாம அப்பாவுக்கும் எனக்கும் ஏற்கனவே பனிப்போர் நடந்துகிட்டு இருக்கு. நீங்க குட்டையை ஈசியா குழப்பிடுவீங்க" என்றவளாய் அங்கே இருந்து நழுவினாள்.
"இஷானா சீக்கிரமா கிளம்புடா. இன்னையில் இருந்து சிவன் பார்வதி கல்யாணம் ஆரம்பமாகுது. நாம போகணும் பூஜைக்கு" அவளைப் பற்றி தெரிந்தும் அதிசயமாய் மகள் திருந்தியிருப்பாளோ என்ற நப்பாசையில் சொப்னா அழைக்க.
இயல்பிலேயே அவளுக்கு கடவுள் மேல் பெரிதாய் பக்தி இல்லை. ஆரம்பத்தில் அதிகாலையில் நேரத்தில் எழுந்திருக்கணும், ஐந்து மணிக்கே குளிக்கணும் போன்ற விஷயங்களில் சோம்பேறித்தனம் பார்த்து சாமி கும்பிடுவதை தவிர்த்தவள், பிறகு கிரிஸ்டோபருடன் அறிமுகமாகி முழுவதுமாய் விட்டுவிட்டாள்.
ஏனெனில் கிறிஸ்டோபர் ஒரு கட்டை பிரம்மாச்சாரி மட்டும் அல்லாது கடவுள் நம்பிக்கை அறவே இல்லாதவர்.
சொப்னாவிடம் திட்டுவாங்கியே ஜென்ம சாபல்யம் அடைவார் அவர். அவர் மட்டுமா சிம்ரனையும் திட்ட தவறுவதில்லை சொப்னா. அவர்தானே வாக்கிங் போவேன் என அடம்பிடித்த சிறுமி இஷானாவை கிரிஸ்டோபருடன் பாதுகாப்பாய் போகுமாறு அனுப்பி வைத்தது.
"நெவர் மாம். கோவில், சாமி, பூஜை, பக்தி! இதெல்லாம் என்கிட்டே பேசாதீங்க. உங்க மூட நம்பிக்கையை என்கிட்டே திணிக்க பார்க்காதீங்க ப்ளீஸ்" அதுவரை புன்னகை முகமாய் இருந்த பெண் கோபமாய் போகவும் அதிர்ந்து நின்றார் சொப்னா.
"சேர்க்கை சரியில்லைடி. எல்லாம் அவரால் வந்த வினை. என் பொண்ணுக்கு பேய் பிடிக்க வச்சுட்டார்
"என்னம்மா சொப்னா அவளுக்கு பிடிக்கலைன்னா விடேன்" சிம்ரன் பேத்தி கோபமாய் போவது கண்டு பொறுக்காமல் கூறவும்.
"அதுக்கில்லைம்மா. ஒரு பொண்ணாய் பிறந்துட்டு கடவுள் மேல பக்தி இல்லாம இருக்கலாமா? அதுவும் கடவுளின் நகரத்தில் பிறந்துட்டு?... நாளைக்கு வாழ்க்கைப்படற இடத்திலே என்னைத்தானே கரிச்சுக்கொட்டுவங்க?" சொப்னா கவலையாக கூறவே.
"எல்லா விரலும் ஒன்னு போலவே இருக்காது சொப்னா... வர்றவன் வேணும்ன்னா அவளுக்கு தக்க மாறிக்கட்டும்" சிம்ரன் கடுமையாய் சொல்லிவிட்டு நகர.
"உன்னை அவளோட ஒண்ணா ஒரே அறையில் விட்டிருக்கணும்ம்மா" சொப்னா சத்தமாய் சொன்னார்.
அவர்கள் பேச்சை கேட்டிருந்த இஷானாவின் அப்பா ராம் கோபமான முகத்தோடு நின்றிருந்தார். மகளின் முடிவு அவருக்கு பிடிக்கவேயில்லை. கலாச்சாரம் மிக்க குடும்பத்தில் பிறந்துட்டு அதை கடைபிடிக்காமல் ஆர்மி செல்வதன் அவசியம் என்ன? அப்படியே சென்றாலும் அதன் பின் மகள் எப்படி வருவாளோ. அடிக்கடி தாக்குதல் நிகழும் இடத்தில் வீரர்களின் மரணத்தையும் கேள்விப்பட நேருகிறதே!
ராமின் கண்களில் கண்ணீர் வழிய சிவனிடம் பாரத்தைக் கொட்ட சிவன் கோவிலுக்கு கிளம்பிவிட்டார். பாசத்தைக்கொட்டி வளர்த்த மகளை ஆர்மிக்கு தாரை வார்க்க அவருக்கு சிறிதும் விருப்பமில்லை. அவர் ஒன்றும் தியாகி அல்லவே.
காஷ்மீரின் குளிர்கால தலைநகரமாகும். ஜம்மு நகரில் ஏராளமான கோவில்களும் ஆன்மீக சுற்றுலாத் தளங்களும் இருப்பதால் அதனை கோவில்களின் நகரம் என்று மக்கள் அழைப்பர் இங்கு இருக்கும் கோவில்களின் கோபுரங்கள் வானளாவி இருக்கின்றன.
ஜம்முகாஷ்மீரை கோவில்களின் நகரம் என்றும் அழைப்பர். அப்படிப்பட்ட ஊரில் மகளாய் பிறந்துட்டு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாமா என்பதுதான் சொப்னாவின் கவலையாகும்.
******
குளிருக்கு இதமாக ஜீன்ஸ் டீசர்ட் ஒன்றை அணிந்தவள், அதற்குமேல் கனமான முழங்காலைத்தொடும் அளவு ஸ்வெட்டரை அணிந்தாள். அவளும் கொஞ்சம் குள்ளம்தான், ஐந்தே அடிகள்தான் இருப்பாள். நெற்றியில் குங்குமம், அட்டைப்பொட்டு வைப்பதை விரும்ப மாட்டாள். காதுகளில் கைகளில் ஆபரணங்கள் அணிவதையும் விரும்புவதில்லை, தேவையில்லாத சுமை என்ற நினைவு அவளுக்கு.
வீட்டினர் சொல்லி சொல்லி பார்த்துவிட்டு, அவளை மாற்ற முயற்சித்தால் தங்கள் உயிர்தான் போகும் என்ற சோர்வில் அப்படியே விட்டுவிட்டனர். தவிர அவள் படித்தது எல்லாமே ராணுவப்பள்ளியில்தான், விடுதியில் தங்கி இருந்து படித்ததாலும், அங்கே அதுதான் கட்டுப்பாடு என்பதாலும் பெரிதாய் நினைக்கவும் இல்லை. ஆனால் அதுவே தொடரவும் அவர்களுக்கு பேரதிர்ச்சிதான்.
ஷூவை அணிந்துகொண்டு வீட்டை விட்டு வெளியே நடக்கலானாள்.
நகரமே கோலாகலமாக இருந்தது. சிவன் பார்வதி கல்யாணம் என்பதால் ஆங்காங்கே பாரம்பரிய பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருக்க. அதை வாங்குவதற்காக மக்களும் குவிந்திருந்தனர்.
அப்படியே வேடிக்கை பார்த்தபடியே நடந்தவளை நெருங்கினார் கிறிஸ்டோபர்.
"ஹாய் அங்கிள் வாக்கிங்கா?" அவரை அவளுக்கு பிடிக்கும். அறிவுரை கூற மாட்டார், அதேசமயம் இருவரது கருத்துக்களும் ஒத்துப்போகும்.
"என்னாச்சு முகமெல்லாம் சிவந்திருக்கு? கோபமா? இல்லை இன்னைக்கு வர்ற மாப்பிள்ளையை நினைச்சு வெட்கமா?" அவர் நடந்தவாறே கேட்கவும்.
"தட் இஸ் நான்சென்ஸ் அங்கிள். ஒருத்தருக்கு ஒருத்தர் அடிமை ஆகுறதுக்கு பெயர் கல்யாணமா?" அவள் கடுப்பாய் கேட்கவும்.
வாய்விட்டு சத்தமாய் சிரிக்கலானார் கிறிஸ்டோபர்.
"அவ்ளோ சிரிப்பா வருது நான் சொன்னதை கேட்கையில்" அங்கிளை முறைத்தாள் இஷானா.
"பெண்களின் நிலையை நினைச்சேன்ம்மா. அதான் கவலையில் சிரிப்பு வந்திட்டு" என்றவர்.
"இன்னுமே தன் வாழ்க்கையை முடிவு செய்ய சுதந்திரம் இல்லாமதானே அவங்க இருக்காங்க?" அவர் கேட்கவும்.
"யா! அங்கிள். எனக்கு இந்த கல்யாண பந்தம் பிடிக்கலை அங்கிள்." இஷானாவின் மனதை நன்கறிந்தவர் ஆதலால் ஜம்பு லோச்சன் பற்றிய பேச்சை எடுத்தார்.
"உனக்கு ஜம்பு லோச்சன் தெரியுமா?"
"ஜம்முவில் பிறந்த பொண்ணுக்கு அவரை தெரியாமல் போகுமா அங்கிள்!" என்றவளாய் நடக்கலானாள்.
அவள் கூடவே இணைந்து நடந்தவாறே,
அவர் ஒரு முறை வேட்டையாடி சென்ற பொது, தாவி நதிக்கரையோரம் ஒரு ஆடும் ஒரு சிங்கமும் ஒரே இடத்தில் தண்ணீர் பருகுவதைக் கண்டார். தாகத்தை தீர்த்துக்கொண்ட பிறகு, இரு விலங்குகளும் தமது பாதையில் சென்றன. ராஜா வியப்படைந்தார், வேட்டையாடுவதை விட்டு விட்டு, அவரது நண்பர்களிடம் திரும்பிச் சென்றார். அவர் பார்த்ததை அப்படியே ஒப்புவித்தார், மேலும் அருகாமையில் இருந்துகொண்டே ஒரு ஆடும் சிங்கமும் தண்ணீர் பருக வேண்டும் என்றால், அந்த இடம் அமைதியின் உறைவிடமாகவே இருக்க வேண்டும் என்று கூறினார். இந்த இடத்தில் ஒரு அரண்மனையை அமைத்து அதனை சுற்றி ஒரு நகரத்தையும் எழுப்ப வேண்டும் என்று ராஜா கட்டளையிட்டார். அதனால்தான் ஜம்பு என்றழைக்கப்படுகிறது இந்நகரம்.
"அதுமட்டுமா இஷானா
நம் நகரம் புகழ்வாய்ந்த மகாபாரதத்தில் இடம்பிடித்து இருக்கு"
அவர் சொன்னதை ஆமோதித்தவள், "எது எப்படியோ அங்கிள். என்ன மாறினாலும், கல்யாணம், கடவுள் அப்டிங்கற கான்செப்ட் மட்டும் மாறலை இன்னும்" தோள்களை குலுக்கியவாறே நடந்தவளை நோக்கியவர்.
"நிச்சயம் உன்னோட எண்ணமும் ஒருநாள் மாறும் இஷானா. அப்போ உனக்கும் எல்லாமே புதிதாய் தெரிந்தாலும் தெரியலாம்" இம்முறை அவர் கேலியாய் பேச.
"அங்கிள் உங்களை" என்றவள் அவர் தோள்களில் ஒரு அடியை வைத்தாள்.
அவர்கள் அதற்கு மேல் எதுவும் பேசாது நடக்க, ஏனோ அந்த அமைதி பிடித்திருந்தது அவர்களுக்கு, அங்கே உள்ள ஒரு டீ கடையில் கிரிஸ்டோபர் அவளுக்காக டீ வாங்கி வரவும், நன்றி சொல்லி வாங்கிக்கொண்டாள்.
"ஹாய்!" ஒருவன் அவள் அருகே வந்து சொல்ல.
அவனையே யோசனையாய் பார்த்தவளுக்கு புரிந்து போனது அவன் அன்றுதான் ஜம்மு வந்திருக்க வேண்டுமென்று.
குளிரில் உடல் நடுங்கினாலும் அதை தன்னிடம் காட்டிக்கொள்ளாது இருக்க பெரும்பாடுபடுவதை நன்றாகவே அவளால் உணர முடிந்தது.
அவன் நெற்றியில் உள்ள குங்குமமும் திருநீறும் அப்பொழுதுதான் அவன் கோவிலுக்கு போய் வந்துள்ளான் என்பதை உணர்த்த, அத்தோடு அவன் மணிக்கட்டில், கழுத்தில் என்றிருக்கும் அடையாளங்கள் அவன் பக்தியை பறைசாட்டியது.
"யா சொல்லுங்க?" அவள் அவனை நோக்கவும்.
அவனோ குளிரில் விரைத்தவனாய் பேசமுடியாது தவித்தான்.
"இட்ஸ் ஒகே என் முன்னால் நடிக்க வேணாம். ஒபனா இருங்க. எதுக்கு குளிர் உரைக்காத மாதிரி நடிக்கணும்?" அவள் அவனையே பார்க்கவும்.
அவள் பேச்சு பிடிக்காதவனாய் அவளை பார்த்தவன், "நெற்றியில் குங்குமம் வைக்கலையா?" அவன் ஆரம்பிக்கவும்.
ஒரு நிமிடம் அவனை உற்று நோக்கியவள், தன் போனை எடுத்து அப்பா அனுப்பியிருக்கும் மாப்பிள்ளை போட்டோவை பார்த்தாள்.
'ஒ அதான் இந்த அதிகாரமா?' லேசாய் உதடுகள் வளைய அவனை பார்த்தவள்.
"எனக்கு அதில் ஆர்வம் இல்லை" அசட்டையாக சொன்னாள்
கிரிஸ்டோபர் வேடிக்கை பார்க்க வாகாக அமர்ந்து கொண்டார் ஒரு ஓரமாய்.
"வாட்? நாம ஹிந்து. நெற்றியில் குங்குமம் வைக்கணும் தெரிந்ததா?" அவன் அதிகாரமாக சொல்லவே.
அலட்சியமாக தோள்களை குலுக்கியவாறே, "எனக்கு என்னை அடையாளம் காட்ட பிடிக்கவில்லை. இந்த அலங்காரங்கள் பிடிப்பதில்லை"
"இட்ஸ் ஒகே. வா கோவிலுக்கு போகலாம். அங்கே நம் வீட்டில் எல்லோரும் இருக்காங்க" அவன் அவள் கையை பிடிக்க வர நாசுக்காய் விலகியவள்.
"எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. டைம் வேஸ்ட் நீங்க போறதானா போங்க" அவள் சொல்லவும்.
"உன்னை அழைச்சுட்டு வரதா சொல்லியிருக்கேன் இஷானா" அவன் அவள் கையை பிடித்து இழுக்க.
"ப்ளீஸ் லீவ் மீ..." தன் கையை விடுத்தவள்.
"உன்னை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொல்லிட்டேன் இஷானா நான்" அவன் சொல்லவும்.
அவனை ஒரு நிமிடம் ஆழமாய் பார்த்தவளுக்கு அவனோடு தர்க்கம் செய்வதை விட ஆழமாய் புரியவைப்பது நல்லது என்று தோன்றியது அவளுக்கு.
"எனக்கான பாதை வேற சகோ. என்னால உன்னையும் உன்னோட குடும்பத்தையும் நல்ல மனைவியா மருமகளாய் திருப்திபடுத்த முடியாது. சோ வேற நல்ல பொண்ணு உனக்கான மனைவியாய் கிடைப்பா வாழ்த்துக்கள்" என்றவளாய் அவனிடம் இருந்து விலகி நடந்தாள்.
"ஓட விட்டுட்டியா?" கிரிஸ்டோபர் அவள் அருகே வரவும்.
அவள் ஆமோதிப்பாய் சிரித்தாள், "அவரவர் பாதை அவரவர்க்கு அங்கிள், தேவையில்லாத பந்தத்துக்குள் கட்டுப்பட எனக்கு விருப்பம் இல்லை"
"அது சரிதான் மா. ஆனால் திருமணம் தேவையில்லாத பந்தம் இல்லை. அது புனிதமானது"
"ஹான் இருக்கட்டுமே அங்கிள்! எனக்கு அது தேவையில்லை அவ்ளோதான். எனக்கு பாசம் வைக்கவோ, நீ இல்லைன்னா நான் இல்லைங்கற வசனம் பேசவோ பிடிக்கலை அங்கிள்" அவள் சொல்லவும்.
"சரிதான் நீ ஆர்மியில் சேர்ந்ததை உன் வீட்டில் எப்படி எடுத்துகிட்டாங்க?" அவர் மிருதுவாய் வினவவும்.
"மத்தவங்களுக்கு என்ன மனநிலைன்னு தெரியலை அங்கிள். ஆனால் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பிடிக்கலை. அம்மா மனசு கேட்காம என்கிட்டே திட்டறது போலவாவது பேசுறார். ஆனால் அப்பா அறவே பேசுறது இல்லை" சிறு வலியோடு கூறியவள்.
"ஏன் அங்கிள் பெண்கள் அவங்களுக்குன்னு ஆசையை வகுத்துகிட்டு அதை செயல்படுத்த கூடாதா?. அதுக்கு உரிமை இல்லையா?... உங்களைப்போல ஆண்கள் மட்டும் எப்படி சுதந்திரமாய் செயல்படுறீங்க?... அதுவும் நீங்க மாஜி கர்னல் வேற" அவள் பேச்சில் அப்பா புரிந்து கொள்ளவில்லையே என்ற வலி தெறித்தது.
அப்பொழுது கடவுளின் ஊர்வலம் எதிரே வரவும், அமைதியாய் நின்றார்கள் ஓரமாய்.
நிமிர்ந்து கடவுளின் உருவத்தை பார்த்தவளின் மனதில் எந்த உணர்வும் வரவில்லை. அவளைப் பொறுத்தவரை அனைத்து சக்திகளும் ஒன்றேதான் என்ற உணர்வு எப்போதோ வந்து விட்டிருந்தது. பாசம் பந்தங்களுக்கு அப்பாற்பட்டு வெளியேறிவிட்டாள் என்பதை அவளது உள்மனது அவளுக்கு உணர்த்தவேதான் ஆர்மியில் சேர்ந்து விட்டாள்.
அவளுக்கு நம்பிக்கை இருக்கிறது அப்பா புரிந்துகொள்வார் என.
பெற்றோர் அல்லது அவள் என்ன கனவு காணினும், அவளுக்குக்காக என்ன காத்திருக்கோ முடிவு மனிதன் கையில் இல்லையே!...
#326
Current Rank
65,287
Points
Reader Points 1,120
Editor Points : 64,167
25 readers have supported this story
Ratings & Reviews 4.5 (25 Ratings)
jeevanyaraj
சிறப்பு
siva
m.jayamohansrirajan
உங்களின் கதை மிகவும் அருமையாக உள்ளது.நான் உங்களுக்கு 5 star கொடுத்துள்ளேன் .படித்து பார்க்கும் பொழுது நன்றாக இருந்தாலும் நிறைய பேர் ரேட்டிங்ஸ் தருவதில்லை. என்னுடைய கதையின் பெயர் லீகார் ஒரே ஒரு கார். இந்த கதைக்கு ஆதரவு தாருங்கள். ஒரு எழுத்தாளராக பெருந்தன்மையுடன் எனது கதைக்கு ரேட்டிங்ஸ் தாருங்கள் நன்றி MJMS !! கிளிக் செய்து ஆதரவு தாருங்கள் https://bit.ly/3caKy2F
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points