JUNE 10th - JULY 10th
செல்வமும் செழிப்பும் நிறைந்த அந்த நாட்டில் பாரி வென்றான் என்ற அரசன் ஆண்டு கொண்டிருந்தான்.
அவன் நாட்டைக் காண மற்ற அரசர்கள் ஓடோடி வருவார்கள் ஏனெனில் அவன் நாட்டினை சுற்றி பசுமையும் நீரோட்டமும் எப்பொழுதும் சூழ்ந்த வண்ணமாகவே இருக்கும்.
ஏனெனில் அவன் நாட்டில் மரங்களும் செடிகளும் கொடிகளும் பறவையினங்களும் பூத்துக் குலுங்கும் தோட்டமாக எப்பொழுதும் மனம் வீசி கொண்டிருக்கும்
இப்பொழுது அவனால் அந்த நாடு மிகவும் செழிப்பான நாடாக மாறி,மற்ற நாடுகளை பொறாமைப்படும் அளவிற்கு செயல்பட்டுக் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது.
பாரி வென்றான் மற்றும் அவனது போர் வீரர்கள் எந்தப் போரிலும் வெற்றி என்ற மகுடத்தை மட்டுமே சூட்டிக்கண்டு அவர்கள் நாட்டுக்குத் திரும்பினார்கள்.
இதைப்பார்த்த மற்ற அரசர்கள் பொறாமையுடன் இருந்தனர்.
எப்படி அவனை வீழ்த்துவது என்று சூழ்ச்சியை நிலைநாட்டிக் கொண்டிருந்தார்கள்.
மற்ற அரசர்கள் ஒன்றாக இணைந்து பாரி வென்றான் அரசாணை எப்படி அவனை அழிப்பது என்று
கூட்டமாக செயல்பட்டு அவனை அழிக்க திட்டம் தீட்டினார்கள். காரணம்
பாரி வென்றான் மக்கள் மட்டும் எப்பொழுதும் அயராது உழைத்துக் கொண்டே இருந்தார்கள்.
வயதானவர்களும் உழைத்து கொண்டு இருந்தார்கள்.
பாரி வென்றான் நாட்டு மக்களுக்கு ஒரு நோயும் வந்தது கிடையாது ஏனெனில் இது என்ன என்று மற்ற அரசர்களுக்கு ஒரு கேள்விக்குறியாகவே இருந்தது.
இதை பார்த்த மற்ற நாட்டு மன்னர்கள் இவர்களுக்கு மட்டும் எப்படி இப்படி உழைப்பை கொடுக்க முடிகிறது.
நம் நாட்டு மக்களால் மட்டும் ஏன் செய்யமுடியவில்லை,என்று புலம்பிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திலேயே அவர்கள் சோர்ந்து அடைந்து விடுகிறார்கள் ஏன் என்ற காரணம் அவர்களுக்கு புரியவில்லை.
மற்ற அரசர்கள் ஒன்றுசேர்ந்து கூட்டமாக ஒரு முடிவெடுத்தார்கள். அதில் ஒரு தூதுவனை அவன் நாட்டிற்கு அனுப்பி அவன் நாட்டில் என்னென்ன செயல்படுகிறது எவ்வாறு செயல்படுகிறது என்ற எல்லா காரணங்களையும் விஷயங்களையும் பற்றி தெரிந்துகொள்ள அனுப்பி வைக்க எல்லோரும் ஒருமனதாக முடிவு எடுத்தார்கள்.
பாரி வென்றான் நாட்டிற்குள் சென்று மக்கள் எவ்வாறு இப்படி செயல்படுகிறார்கள் என்பதை அறிய ஒரு தூதுவனை அனுப்பியும் வைத்தார்கள்.
அந்த தூதுவன் தன்னை ஒரு பிச்சைக்காரனை போல் மாற்றிக்கொண்டு அந்த நாட்டிற்குள் நுழைந்து ஏதேனும் உணவு கிடைத்தால் போதும் என்று உள்ளே நுழைந்தான்.
அவன் மக்களுடன் மக்களாக கலந்து செயல்பட்டுக் கொண்டிருந்தான்.
அவனும் மக்களுடன் சேர்ந்து ஒரு சில வேலைகள் செய்ய மக்களுக்கு உதவி செய்தான் அதன் பெயரில் அவனுக்கு ஒரு சில வேலைகளும் அங்குள்ள மக்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள் அவனும் அதை ஏற்றுக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டு தான் எதற்காக வந்தோம் என்ற எண்ணத்தையும் நினைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தான்
நாட்கள் ஓடின அவனுக்கு எதுவுமே பிடிபடவில்லை ஏன் என்று குழம்பித் தவித்தான் சிறிது ஆழமாக யோசித்து கொண்டிருந்தான்
அதை கண்டறிய அவனுக்கு மாதங்கள் கடந்தது ஆனால் அவன் அயராது செயல்பட்டு ஒருவருட காலம் அதை கண்டறிய போராடினான்.
ஒரு வருடத்திற்கு பிறகு அவனுக்கு ஒரு முக்கியமான ஒரு பகுதியில் வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார அப்போதுதான் அவனுக்கு அந்த ரகசியம் புரிந்தது.
பிறகு ஒரு வருட காலத்திற்கு பிறகு கண்டறிந்து அவன் நாட்டுக்குச் சென்றான் அந்த தூதுவன்.
அந்த தூதுவன் வந்த தகவலை மற்ற நாட்டிற்கு செய்தி அனுப்பினார்கள்.
அரசவையில் கூட்டம் கூட்டப்பட்டது அரசர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள்.
தூதுவன் அரசவையின் கூட்டத்தில் அழைக்கப்பட்டான்.
பாரி வென்றான் நாட்டில் எவ்வாறு செயல்படுகிறது என்ற ரகசியத்தை அரசர்களிடம் கூறினான். தூதுவன் சொல்லத் தொடங்கிய உடன் அதைக் கேட்ட மற்ற அரசர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.
மற்ற அரசர்கள் அதை செயல்படுத்த கொஞ்சம் தயக்கம் காட்டினார்கள். அரச அவையில் சலசலப்பு ஏற்பட்டது எல்லோரும் ஒருவித குழப்பத்துடன் இருந்தார்கள். ஏனெனில் அரசர்கள் தங்களுக்கு என்று ஒரு கர்வம் இருந்துகொண்டிருக்கும் அதில் இருந்து அவர்கள் விடுபட கொஞ்சம் தயக்கம் உண்டானது.
காரணம்,தான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் எல்லா அரசர்களிடம் இருந்தது. தன் நாட்டு மக்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏறவில்லை ஒருவேளை நம் பக்கம் திரும்பி விடுவார்களோ என்ற பயம் இருந்தது.
மக்கள் நமக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்ற எண்ணம் எந்த அரசனுக்கும் துளி கூட ஏற்படவில்லை.
நம் நாடு செழிப்பாக மாறும் என்ற எண்ணமும் அவர்களுக்கு எழவில்லை
ஆனால் பாரி வென்றான் அரசனிடம் அப்படி இல்லை.
பாரி வென்றான் அரசனுக்கு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணமும் செயலும் அவனுக்கு இருந்தது.
மக்களை வழிநடத்திச் செல்வதில் அன்பாகவும் ஒரு அரசனின் அல்லாமல் தன் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் என்ன வேண்டும் ஏது வேண்டும் என கேட்டு அறிந்து செய்யக்கூடிய ஒரு சிறந்த பண்பாளராகவும் அரசனாகவும் இருந்தான். அவன் நாட்டில் வரும் எதிரியை கூட நல்ல எண்ணத்தை உருவாக்கி மாற்றி விடும் அளவுக்கு பாரி வென்றான் நாட்டை வழிநடத்திச் சென்றான்.
மறைக்கப்பட்ட
ரகசியம் என்னவென்றால்
...
அந்த காலகட்டத்தில் அரசர்களுக்கு என ஒரு விளைநிலம் உருவாக்கப்பட்டு அந்த நிலத்தில் அவர்களுக்கு என்று அரிசியை உற்பத்தி செய்து அரசர்கள் மட்டும் அதை உணவாக உட்கொள்ள பயன்படுத்தப்பட்டிருந்தது. அரசர்களை தவிர வேறு யாரும் அந்த உணவை உண்ணக் கூடாது என்ற கட்டுப்பாடு எல்லா நாடுகளிலும் இருந்து இருந்தது.
ஆனால் அந்த அரிசி கருப்பு கவுனி காட்டுயானம் மூங்கில் அரிசி என அரிசி சம்பா இப்படி பற்பல அரிசி வகைகள் அவர்களுக்கு என்று விதைக்கப்பட்டு அவர்கள் உடல் நலமும் மனவளமும் நோய் நொடியின்றி வாழ இதை உண்டு வாழ்ந்தார்கள்.
மேலும் யானை பலத்தை கொடுக்கும் அளவிற்கு அந்த அரசியில் சத்து நிறைந்து இருந்தது.
இதை உண்பவன் ஒரு தென்னை மரத்தை கூட வேரோடு பிடுங்கி எறியும் வீரம் அவனுக்குள் உருவாகும்.
இந்த அரிசியினை விவசாயிகளுக்கும் போர்வீரர்களுக்கும் கொடுத்து தனக்கு நிகராக செயல்படவேண்டும் என்ற பெரும் எண்ணத்தைக் கொண்டு எல்லோரும் நீடூடி வாழ அந்த அரசன் செயல்பட்டார்.
பாரி வென்றான் அரசனை மக்கள் போற்றும் அளவுக்கு இருந்தார்.
ஏனெனில் போரிலும் வீரர்கள் சிறந்து விளங்க இந்த அரிசியும் அவர்களுக்கு ஊக்கத்தையும் மனவலிமை கொடுக்கிறது என்று எல்லோருக்கும் அரசன் தெரியப்படுத்தி அவர்களை செயல்படுத்திக் கொண்டிருந்தான்.
மக்கள் மனதிலும் இதன் அரசியின் மகத்துவத்தையும், அது உடல் வலிமையையும்,நோய்நொடியில்லாமலும், வயதானாலும் உடல் கல் போல இருக்க இந்த அரிசி செயல்படுகிறது என்ற விளக்கத்தையும் அரசன் மக்களுக்கு விளக்கமாக கூறினார். இதைக் கேட்ட மக்கள் பாரிவேந்தன் பாராட்டும் விதமாக வாழ்க வாழ்க என கோஷமிட்டு கொண்டிருந்தார்கள் பாரிவேந்தன் ஐ பாராட்டும் விதமாக வாழ்க வாழ்க என கோஷமிட்டு கொண்டிருந்தார்கள்
அரசன் போல் செயல்படாமல் மக்களோடு மக்களாக கலந்து செயல்படக்கூடிய ஒரு சிறந்த மன்னன்
காரணம் பாரிவென்றான் ஒரு அரசன் மட்டுமல்லாமல் ஒரு மருத்துவனாக சிறந்து விளங்கினார். மருத்துவனாக சிறந்து விளங்குவதற்கு அவன் இயற்கை என்ற பசுமையை அவன் கற்றுக் கொண்டான்.
அதை மக்களுக்கு எப்படி கூறினால் அவர்கள் அதை செயல்படுத்துவார்கள் என்ற பெரும் சிந்தனையை வளர்த்துக் கொண்டு மக்களுக்கும் அதை பயன்படுத்தும் வகையில் கூறி நாட்டை செல்வச் செழிப்போடும் பசுமை நிறைந்த நந்தவனமாக வைத்துக்கொண்டிருக்கிறார்
அதைஇன்றைய காலகட்டத்தில் இது படிப்படியாக குறைந்து மறைந்து வருகிறது ஒரு சிலரால் மட்டும் இதன் மகத்துவம் தெரிந்திருக்கிறது.
பழமையானதை மறக்க வேண்டாம்.
ஆனால் அதை பயன்படுத்தி பயன்பெறலாம்.
உணவே மருந்து என்பதற்கு இது ஒரு உதாரணம் இது காலப்போக்கில் நம் வாழ்வில் மறைந்து கொண்டே வருகிறது.
எல்லோரும் ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் பர்கர் பீசா என்று உடலில் நோய் விளைவிக்கும் உணவினை உண்டு வாழ்கிறார்கள் தயவுசெய்து அதை மாற்றுங்கள்
மறைக்கப்பட்ட மறைந்த உணவினை எல்லோரும் உண்டு தன் வாழ்வில் நோய்நொடியின்றி வாழ வேண்டும். வருங்கால சந்ததிகளுக்கு இதை கொடுத்து அவர்களை நோய் நொடி இன்றி வாழ செய்யுங்கள்.
இன்றைய காலகட்டத்தில் இதுவும் ரகசியமாகவே இருந்து நம் தலைமுறையோடு அழிந்து விடும் போலிருக்கிறது பயன்பெறுங்கள் அனைவரும் வாழ வழி செய்யுங்கள்.
நன்றி
..........ஆர்.வி.ராஜா
.
#641
Current Rank
33,583
Points
Reader Points 250
Editor Points : 33,333
5 readers have supported this story
Ratings & Reviews 5 (5 Ratings)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
Rajan
பிடித்துஇருந்தது
mahimamahi2726
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points