இணைய காதலும்! இணையாத காதலும்!

காதல்
4.5 out of 5 (19 Ratings)
Share this story

நாள் 5 -8-2010
இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமரி யின் பேரழகி அவள் .நம் கதையின் கதாநாயகி. குமரி என்றாலே அழகு தானே அந்த மாவட்டத்தின் பெண்கள் மட்டும் அழகில் என்ன குறை இருப்பர். அவளும் அப்படி ஓர் அழகி தான்.

ராஜா, சாந்தினி தம்பதிகளின் 3 வது செல்வ மகள் ஏஞ்சல் ராஜ் வயது 21 ஆசிரியர் பயிற்சி முதலாம் ஆண்டு மாணவி. சமீபத்தில் பேருந்தில் கல்லூரி க்கு செல்லும் போது கால் தடுமாறி கீழே விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டு கல்லூரி க்கு மருத்துவ விடுப்பு எடுத்து வீட்டில் ஓய்வில் இருக்கிறாள். தோழிகளுடன் பட்டாம்பூச்சி யாக சுற்றி நடந்த போது அவள் மறந்து இருந்த அவள் வாழ்வின் அந்த கொடுமையான பழையகால நாட்கள் கண்ணின் முன்புபேயாட்டம் போட மனஅமைதியின்றி தவித்தவளுக்கு ஆறுதலாக கிடைத்தவன் தான் ராம் அவளின் ராம்.

முகநூல் என்னும் இணைய உலகில் அவள் கண்டு எடுத்த முத்து அவன். ஆரம்பத்தில் வெறும் நட்பு மட்டும் தான் இருவருக்குள்ளும், முகம் கூட தெரியாத முகநூல் நட்பு. அவனின் சிறுபிள்ளை தனமான குறும்பு பேச்சும் கலகலப்பும் ஆள்களை அசர வைக்கும் நகைச்சுவை யும் அவளை அவனிடம் முழுதாக ஈர்த்து விட்டது. காதல் என்றாலே வலி என்பதை உணர்ந்தவள் அவன் மீது காதல் வயப்பட்டு விட்டாள் மதம், சாதி, ஊர் இப்படி அனைத்தும் கடந்து உண்மை தன்மை கூட உணராத கனவுலக காதலில் பாதம் பதித்து விட்டாள் பாவை அவள்!!
ராம் வயது 25 திருநெல்வேலி மாவட்டம் தென்காசி யில் சுந்தர் ராஜ், கலைச்செல்வி தம்பதிகளின் இரண்டாவது மகன் பொறியியல் பட்டதாரி, படிப்பு முடித்து அரசு வேலைக்காக போட்டித் தேர்வு எழுதி கொண்டிருக்கும் இளைஞன். ராம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் பொறுப்பு இல்லாத தந்தை வலியுடனும் வட்டி கடனுடனும் குடும்பம் நடத்தும் தாய். நம் குடும்ப அமைப்பே அப்படி தானே ஆணின் பொறுப்பின்மையை கூட பெண் தாங்கி கொண்டு தான் வாழ வேண்டும்.அதற்கு இவர்களும் விதிவிலக்கல்லவே .ராமை நம்பி தான் அவனது குடும்பம் உள்ளது. இப்படி நண்பர்களுடன் சுற்றி திரிய வேண்டிய வயதில் குடும்ப பொறுப்பை சுமக்க போராடி கொண்டிருக்கும் அவனுக்கு, எப்போதும் கலகலவென பேசி , அவனிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பை கொட்டும் அவளின் மேல் பைத்தியக்கார தனமான ஒரு காதல்!!
காதல் துவங்கிய காலகட்டத்தில் குடும்பம், கல்வி, வேலை எதுவும் கண்களுக்கு தெரியவில்லை இருவருக்கும் அவர்களுக்கு தெரிந்தது காதல் காதல் காதல் மட்டுமே. காதல் எனும் போதையில் கட்டுண்டு கிடந்த இருவருக்கும் ஓர் நாள் வாழ்வின் நிதர்சனம் எட்ட சட்டன விழித்து யோசிக்க ஆரம்பித்தனர். இந்த கனவுலக காதலின் அடுத்த கட்டம் தான் என்ன?

பணம், ஜாதி, மத போதையில் ஊறி போன ஏஞ்சலின் குடும்ப பின்னணி சற்று பிரபலமான வணிக குடும்பம். அவளின் முதல் அக்கா ஷீபா ராஜ் கல்லூரி பேராசிரியை, அவளின் கணவர் போலீஸ் உயர் அதிகாரி. இரண்டாவது அக்கா ஜெபா ராஜ் இரண்டு வருடங்களுக்கு முன்பு பொறியியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருக்கும் போது அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்த மாணவனுடன் காதல் வயப்பட்டு வீட்டில் அனைவருக்கும் தெரிய வந்து மிகப்பெரும் எதிர்ப்பு எதிர்ப்பின் முடிவில் தன் வாழ்வை துண்டு கயிறில் முடித்து விட்டாள். இந்த பெரும் இழப்பிற்கு பிறகு காதல் என்ற சொல்லே அவர்களின் குடும்பத்தில் பெரும் பிரச்சினை யை கிளப்புவதாகவே மாறி போனது. இந்த சூழ்நிலையில் தான் நம் கதையின் நாயகியும் காதல் எனும் ஆழி கடலில் வீழ்ந்து எழ வும் இயலாமல் தப்பி செல்லவும் இயலாமல் உழன்று கொண்டிருக்கிறாள். தன் அக்காவின் இழப்பில் தவித்து கொண்டிருக்கும் போது தான் ராம் மீது காதல் மலர்ந்தது.

நாட்கள் வேகமாக செல்ல வருடம் இரண்டு உருண்டு ஓடி விட்டது காதலின் ஆழம் அதிகரித்து கொண்டே செல்ல, இருவரும் சந்திக்கலாம் என்று முடிவெடுத்து விட்டனர். விதியின் விளையாட்டு அங்கு தான் ஆரம்பமானது. இதுவரை வெறும் புகைப்படம் மட்டுமே பார்த்து காதல் செய்தவர்கள் சந்திக்க முடிவெடுத்து நாள் நேரம் பகிர்ந்து சந்தோஷ வானில் பறந்து கொண்டிருந்த போது தான். இவள் கைப்பேசியை எதேச்சையாக பார்த்த அக்கா ஷீபா இவளுக்கும், ராமுக்குமான காதல் உரையாடல்களை பார்த்து உடைந்து விட்டாள்!!

இதே காதலால் இழந்து போன தங்கையின் நினைவு மீண்டும் கண்களில் நீரோட்டமிட .அமைதியான வழியில் இருவரையும் எப்படி பிரிக்கலாம் என்று ஆலோசனை செய்ய ஆரம்பித்து விட்டாள் அதற்கு அவள் கண்டுபிடித்த யுக்தி இருவரையும் சந்திக்க விடாமல் செய்வதும், பேச விடாமல் செய்வதும் தான். அதை செயல்படுத்தவும் ஆரம்பித்து விட்டாள். முதல் கட்டமாக தங்கையின் கைப்பேசி யை மீன் தொட்டியில் போட்டு, கை தவறி விழுந்ததாக நாடகமாடி அவர்களின் உரையாடலை ஓரிரு நாட்கள் விலக்கி வைத்தாள். அந்த இரண்டு தினங்களில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தன்னை கவனித்து கொள்ள தங்கையின் துணையை நாடி தன்னுடன் அவள் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டாள். கல்லூரி செல்ல தடை, தோழிகளை சந்திக்க தடை, கைப்பேசி பயன்படுத்த தடை!!

தன்னை சுற்றி ஏற்பட்ட திடீர் மாற்றம் ஏஞ்சலுக்கு அனைத்தையும் புரிய வைத்து விட்டது. அடுத்த கட்டம் அமைதியாக இருப்பது தான் என்பதை உணர்ந்து கொண்டாள். தன் குடும்ப சூழ்நிலை ஏற்கனவே ராமிற்கு தெரியும் என்ற காரணத்தால் அவள் மௌனமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள். காலம் கனிய காத்திருந்தாள் பாவை அவள்.

இந்த பக்கம் ராம் ஏஞ்சலின் பதில் தகவலுக்காக காத்திருந்தவன் உணர்ந்து கொண்டான் அவள் வீட்டில் காதல் தெரிந்து விட்டது என்று. அரசு வேலை இனி வாய்ப்பது கடினம் என்று உணர்ந்தவன் முகம் கூட பார்க்காத தன் காதல் தேவதைக்காக நீண்ட நாள் கனவை குழி தோண்டி புதைத்து விட்டு தனியார் கம்பெனி ஏறி இறங்க ஆரம்பித்து விட்டான், வேலை இருந்தால் காதல் கைகூடும் என்று நம்பி விட்டான் போலும் , பாவம் அவனுக்கு முழுவதும் இந்த ஜாதி, மத வெறியின் தாக்கம் புரிபடவில்லை போலும்.

அந்த கடலின் அலை சத்தத்தின் நடுவே உனக்காக காத்திருப்பேனாடா நான்!! இன்று தூங்காமல் உன் நினைவில் நான் கழிக்கும் இந்த பொழுதுகள் எல்லாம் இனிக்க இனிக்க உன்னுடன் பகிர்ந்து இரவு பகல் பாராமல் இன்புற்று இருப்பேனடா !! நிற்காமல் வழியும் என் விழி நீர் வற்றி போகும் முன் உன்னை வந்து சரணடைவேனடா!!

தன் தங்கையின் மௌனம் முதலில் பதட்டத்தை கொடுத்தாலும் போக போக தங்கையின் மீது இருந்த நம்பிக்கை அதிகமாக ஆரம்பித்து விட்டது அக்காவிற்கு . காதலில் பலர் தவறும் இடம் இது தான் வீட்டில் தெரிந்த உடன் வரும் பதட்டம் மேற்கொண்டு அவர்களை தவறான முடிவை நோக்கி நகர்த்தும். இதுவே பொறுமையாக அந்த இக்கட்டான காலத்தை கடந்து வந்தாலே காதல் மீது பெற்றோர்களுக்கு வரும் பயமும், பதட்டமும் குறையும். மீண்டும் கல்லூரி செல்ல அனுமதி கொடுத்து விட்டாள் அக்கா . 2 மாதங்களுக்கு பிறகு கல்லூரி யில் கால் ஊன்றிய அன்று ராம் மிற்கு அழைத்த ஏஞ்சல் வீட்டு நிலவரத்தை புரிய வைத்து விட்டாள்.

காத்திரு பொறுமையாக காலம் கனியும் கண்ணம்மா நாம் சேரும் காலம் கூடி வரும். அதுவரை நான் உனக்காக காத்திருப்பேன். நீ படித்து உன் சொந்த காலில் வா, நானும் நல்ல வேலை அமைத்து குடும்ப பொறுப்பை முடித்து விட்டு உன்னை தேடி வருவேன். நம்பிக்கையுடன் இரு இந்த நம்பிக்கை யை தவிர வேறு எதையும் தரும் சூழலில் நான் இல்லை. உனக்காக என் கைப்பேசி என்றும் காத்திருக்கும் என்று உறுதி கொடுத்து விட்டு அழைப்பை துண்டித்து விட்டான்.
சரியாக எட்டு வருடங்களுக்கு பிறகு அதாவது 10 - 10- 2018 அன்று காலை 10 மணி அந்த குமரி கடற்கரை மணலில் அலையின் அழகிய நடனத்தை ரசித்து கொண்டே, தன் வாழ்வில் நடந்து முடிந்த மாற்றங்களை அசைபோட்ட வண்ணம் . ராம் நாம முதன்முதலில் சந்திக்கும் போது என்னிடம் என்ன பேசுவ ? ராம் நான் எதுவும் பேச மாட்டேன் இறுக்கமா கட்டி அணைத்து நெற்றியில் என் முதல் முத்தத்தை பதிப்பேன். அன்று அவள் காதில் அவன் ரகசியமாக பகிர்ந்த காதல் மொழி ரிங்காரமிட மென்மையாக ஒரு சத்தம் ஏஞ்சல் சட்டென திரும்பி பார்த்து வியப்பில் கண்களை அகல விரித்து பார்க்க கற்று கூட புக இயலாத வண்ணம் இறுக்கமான ஒரு அணைப்பு அணைப்பின் இறுதியில் நெற்றியில் ஓர் அழுத்தமான முத்தம் பதித்து விட்டு அவள் கரம் கோர்த்தான் ராம் அவளின் ராம்.

இந்த 8 வருடத்தில் அவள் ஒரு கல்லூரி விரிவுரை யாளராகவும், அவன் இந்தியன் வங்கி மேலாளராகவும் பணி பெற்று விட்டான். நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு ஜாதி, மதம் அனைத்தையும் விட அவர்களின் பிடிவாதமும், பொறுமையும் வென்று விட்டது. காதலில் நம்பிக்கையும், காத்திருப்பும் இருந்தால் மட்டுமே இனிக்க இனிக்க வாழ்வை அமைக்க முடியும் .!!!

Stories you will love

X
Please Wait ...