பட்டாம் பூச்சி

கற்பனை
5 out of 5 (1 Ratings)
Share this story

கதிர் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். கதிரின் ஆசை ஒரு பெரிய மருத்துவராக வேண்டுமென்று .ஆனால் கதிரின் தந்தை ஒரு கூலித் தொழிலாளி . கதிரின் தாய் வீட்டு வேலை செய்பவள். கதிர் அரசு பள்ளியில் படித்து வந்தான்.

கதிர் வசிக்கும் ஊரில் பள்ளிகள் ஏதுமில்லை .ஆதலால் ,கதிர் தினமும் எட்டு கிலோமீட்டர் நடந்து சென்று பள்ளிக்குச் செல்வான்.

ஒரு நாள் கதிரின் தந்தைக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மரித்துப்போனார். கதிரின் குடும்பம் சோகத்தில் இருந்தது. இனி என்ன செய்வது என்று கதிர் குடும்பத்திற்கு தெரியவில்லை .இத்தனை நாள் கதிரின் தந்தை வேலைக்கு சென்று அதில் வரும் பணத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்தினார்கள் .ஆனால், இனி என்ன செய்வது என்று தெரியவில்லை.

நான் இனி வேலைக்கு செல்கிறேன், நான் இனி பள்ளிக்குப் போகாமல் தினமும் அப்பா செய்த வேலைக்கு நான் செல்கிறேன் என்று சொன்னான் கதிர்.

கதிரின் தாயார் இல்லை வேண்டாம் கதிர், நீ போய் நல்லா படி என்றாள். உன் அப்பாக்கு உன்னை நல்லா படிக்க வைக்கணும் தான் ஆசை,ஆனால் காசு இல்லாதனால உன்னை அரசு பள்ளியில் சேர்த்தாங்க நீ இத நினைச்சு கவலைப்படாம போய் நல்லா படிக்கணும்.

கதிரின் தாய் வீட்டிலிருந்தே தையல் மிஷினில் துணிகளை தைத்தாள். வருடங்கள் சென்று கதிர் பத்தாம் வகுப்புக்கு சென்றான் பொதுத்தேர்வு நாளை நடக்க இருந்த நிலையில் கதிரின் தாய்க்கு காய்ச்சல் வந்தது.

கதிர் தன் தாய்க்கு கஞ்சி சமைத்துக் கொடுத்து மாத்திரை கொடுத்து உறங்க வைத்து பொதுத்தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றான் நல்லபடியாக எல்லா தேர்வையும் எழுதினான்.

தனக்குத் தேர்வு இருக்கும் நிலையிலும் தனது தாய்க்கு உதவி செய்த பின்னரே தேர்வு எழுத சென்றான் .பொது தேர்வு முடிவு வெளியிடப்பட்டது அதில் நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு எடுத்தான் ஒரு படத்தில் 99 மதிப்பெண் எடுத்தான் கதிரின் பள்ளி அவனை பாராட்டி உதவித்தொகை அளித்தது.

தன் கனவு மருத்துவராக வேண்டும் என்பதை மனதில் கொண்டு பிளஸ் 1-ல் உயிரியல் கணிதம் எடுத்துப் படித்தான் அதிலும் சிறந்து விளங்கினான்.

கதிரின் தாய் தையல் மிஷினில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தால் கதிர் சென்று என்னம்மா என்ன ஆச்சு ,உடம்புக்கு சரியில்லையா வாங்கம்மா ஆஸ்பத்திரி போலாம் என்று கூறினான்.

கதிரும் அவன் தாயும் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். மருத்துவர் கதிரின் தாய்க்கு பரிசோதனை செய்து கதிரை தனியாக அழைத்து உங்க அம்மாவுக்கு காச நோய் இருப்பதாக தெரியவந்துள்ளது .இந்த நோய் பொல்லாத நோய். உங்க வீட்ல வேற யாரும் பெரியவங்க இல்லையா என்று கேட்டார் டாக்டர் .அதற்கு கதிர் இல்ல டாக்டர் நானும் அம்மா மட்டும்தான் இருக்கும் அப்பா மரித்து விட்டாங்க. சரி, நான் கொடுக்கிற மாத்திரை மருந்து நேரம் தவறாமல் உங்க அம்மாவுக்கு கொடு என்றார் டாக்டர்.

கதிர் பள்ளிக்குச் செல்லாமல் தன் தாயுடனே இருந்தான் வீட்டு வேலைகள் செய்து அதில் வரும் பணத்தை வைத்துக் கொண்டு அவங்க அம்மாவுக்கு மருந்து மாத்திரை செலவு ஆஸ்பத்திரி செலவு செய்தான்.

கதிரின் ஆசிரியர் கதிர் வீட்டுக்கு வந்தார்கள் கதிர் நீ ஏன் பள்ளிக்கு வருவதில்லை என்று கேட்டார்கள். அதற்கு கதிர் என்னுடைய அம்மாக்கு உடல்நிலை சரியில்லை என்னால் அம்மாவை தனியாக விட்டுவிட்டு பள்ளிக்கு வர முடியாது என்னை மன்னித்து விடுங்கள் என்றான். அதற்கு கதிரின் ஆசிரியர் இல்லை கதிர் நீ சொல்வது சரிதான் ஆனால் நீ படித்தால் தான் உன்னுடைய கனவை நினைவாக்க முடியும் .நீ வேண்டுமானால் உங்க அம்மாவை அழைத்துக் கொண்டு என்னுடைய வீட்டில் இருங்கள் எங்க வீட்டில் இருக்கிறவங்க உங்க அம்மாவை பத்திரமா பாத்துப்பாங்க நீ என் கூட பள்ளிக்கு வா என்று கூறினாள்.

பின்பு கதிரும் அவன் தாயும் கதிரின் ஆசிரியர் வீட்டுக்கு சென்றனர். கதிர் வழக்கம் போல பள்ளிக்குச் சென்றான். பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தான் பிளஸ் 2 சேர்ந்தான். கதிரின் தாய் காச நோயினால் மரித்துப் போனாள்.

கதிர் கவலையில் ஆழ்ந்தான். பலரும் வந்தவனுக்கு ஆறுதல் கூறினார்கள். தாய் தகப்பன் இருவரும் இல்லாத நிலையில் கதிர் தனிமையாக நின்று கொண்டிருந்தான். கதிரின் நிலமை அறிந்த அவனுடைய ஆசிரியர் உன் பெற்றோர்களின் ஆசை, நீ நல்ல படிக்க வேண்டும் என்பதுதான். எனவே நீ உன் கனவை நினைவாக்க நன்றாக படிக்க வேண்டும் என்றாள். உன் பெற்றோர்கள் எங்கும் செல்லவில்லை உன்னுள்ளே தான் இருக்கிறார்கள் என்று தைரியப்படுத்தினார்.

ப்ளஸ் டூ பொதுத் தேர்வு நடந்தது அதிலும் கதிர் மாநில அளவில் முதலிடம் பிடித்தான். கதிர் நினைத்தபடி அவனுக்கு புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் இலவசமாக மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது.

கதிர் பிறந்த ஊரில் கதிர் தான் அந்த ஊரில் முதல் மருத்துவர் படிக்க சென்றான். கதிரை அனைவரும் வாழ்த்தி பாராட்டினார்கள். ஆனாலும் கதிருக்கு ஒரு சிறிய வருத்தம் தன் பெற்றோர்கள் தன்னுடன் இல்லாததுதான் தன்னுடைய கனவை நினைவாக்க தன்னுடைய முதல் வெற்றி படியை காண அவர்கள் இல்லை என்று சற்று வருந்தினான்.

கதிர் புதுடெல்லிக்கு தொடர் வண்டியில் பயணித்தான. எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து கல்வி கற்றான். கல்லூரியிலும் கதிர் சிறந்து விளங்கினான்.

கதிர் எம்பிபிஎஸ் முடித்து எம் எஸ் முடித்து மீண்டும் தன் சொந்த ஊருக்கு திரும்பினான் தான் பிறந்த ஊரில் மருத்துவம் செய்வதே அவனுடைய ஆசை .

அவனுடைய கனவை அவன் நினைவாக்கி கொண்டான் .அவன் காச நோய் உள்ளவர்களிடம் அன்புடன் சிகிச்சை செய்து அவர்களுக்கு முடிந்த அளவு குணமாக்க உதவி செய்தான்.

கதிர் முதன் முதலில் காச நோய்க்கு எதிர்ப்பு மருந்து கண்டுபிடித்தார். அதனால் அவனுக்கு நோபல் பரிசு கிடைத்தது உலகமே கதிரை திரும்பிப் பார்த்தது.

கதிர் நோபல் பரிசை கையில் பெற்றுக்கொண்டு மேடையில் பேசத் தொடங்கினான் பேசும்போதே தன் கண்களில் கண்ணீர் விழத் தொடங்கின நான் இந்த நிலையில் நிற்பதற்கு காரணம் என்னுடைய பெற்றோர்களே மற்றும் என்னுடைய ஆசிரியர்.

என்னுடைய இந்த நிலையை காண என்னுடைய பெற்றோர்கள் இன்று இல்லை. பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் என்னை ஒரு தாயைப் போல் அரவணைத்த என்னுடைய ஆசிரியருக்கு இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.

நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தேன். என்னுடைய பள்ளிப்படிப்பதற்காக 8 கிலோமீட்டர் தினமும் சென்று வந்தேன். பிளஸ் 2வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தேன். எய்ம்ஸ் புதுடெல்லியில் மருத்துவம் படித்தேன் .எம் எஸ் இல் கோல்ட் மெடல் பெற்றேன். இலவசமாக மருத்துவம் பார்த்தேன். இப்போது நான் இந்த நோய்க்கு எதிர்ப்பு சக்தி மருந்தையும் கண்டுபிடித்தேன். நான் இப்போது இந்த வானில் பறப்பதற்கு உதவியாக இருந்த என்னுடைய பெற்றோர்களுக்கும் எனக்கு ஆதரவு அருளின ஆசிரியர்களுக்கும் என்னுடைய உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

கதிரின் செயல்களை எண்ணி அரசானது கதிருக்கு ஜனாதிபதி பதவி அளித்தது. ஜனாதிபதி கதிர் அவர்கள் தங்களுடைய பதவி ஏற்பில் கூறிய வார்த்தைகளாவன:

என்னுடைய வாழ்க்கை ஆனது ஒரு சிறு கூட்டில் ஒரு புழு உள்ளே இருந்து அந்தக் கூடானது உடைந்து உடைந்து அதிலிருந்து வெளியே வர பட்டாம்பூச்சி கஷ்டப்படுவது போல நானும் எனது வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வந்தேன். பின் பட்டாம்பூச்சி பறப்பது போல நானும் இப்போது வானம் என்னும் வாழ்வில் பறந்து கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த பட்டாம்பூச்சியின் கூட்டை உருவாக்கின பெற்றோர் இல்லை என்பது என் மனதை வருந்த செய்கிறது என்னைப் போன்று இன்னும் பல பட்டாம்பூச்சிகள் சிறகடிக்க உள்ளனர் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். என் நாட்டு மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி அடைய நான் உதவி செய்வேன் என்றார் கதிர்.

Stories you will love

X
Please Wait ...