ஹோஷலிணி

Crime Thriller
5 out of 5 (2 Ratings)
Share this story

ஹோஷாலிணி

திகில்

சிறுகதை.

ஹோசாலிணி சொன்னது கேட்டு உள்ளம் உருகி போனார் நம்போதிரி அந்த பிரோத ஆத்மா சொல்வதில் நியாயம் இருக்கு?

இவர்கள் நம்மை நம்பி வந்து இருக்கிறார்களே என்ன செய்வது என்று யோசிக்கலானார்.?

ஒன்று மட்டும் உறுதியானது. உப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்.

வினை விதைத்தவன் வினை அறுத்தே ஆக வேண்டும்..

ஹோஷாலிணிக்கு தெய்வத்தின் அணுகிரகம் கிடைத்து இருக்கு. அவள் வேண்டிய தெய்வம் அவளுக்கு சக்தி கொடுத்து துணையாக இருக்கு.

அப்படி இருக்கும் போது நாம் ஒதுங்கி கொள்வது தான் நல்லது என்று நினைத்தார் நம்போதிரி.

ஹோஷாலிணி இடம்.....

இதோ பாரு... நான் நினைத்தால் உன்னை இந்த குடுவைக்குள் அடைத்து கடல் ஜலத்தில் ஜல சமாதி ஆக்கி விடுவேன். நீ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஆத்மா சாந்தி அடையாமல் அந்த குடுவைக்குள்ளே இருக்க வேண்டியது தான்.

உனக்கு அந்த காட்டு அம்மன் துணையாக இருக்கு.

அதற்கெல்லாம் நான் ஒன்றும் பயப்படவில்லை.

உன் விதி அவ்வளவு தான். அது நீ கேட்டு வந்த வரம்.

நீயாக இறைவனிடம் கேட்ட வரம். இதற்கு இவர்களை எதற்கு பழி வாங்குகிறாய்.?

அவரவர் விதிப் படி நடக்கட்டும் நீ விட்டு விலகி போய் விடு.

இந்த பெண் உனக்கு என்ன செய்தாள்?

இல்லை அவள் குடும்பம் உனக்கு என்ன செய்தது?

டாக்டர் செய்த தப்புக்கு இவர்களுக்கு எதற்கு நீ தண்டனை தர வேண்டும்?

நீ மிகவும் நல்லா ஆத்மா?

உன்னை அந்த காட்டு அம்மன் பிள்ளையாக ஏற்றுக்கொண்டு உள்ளாள் அதனால் அவள் காலடியில் நீ பூஜை மலராக தொண்டு செய்து. முக்தி பெற்று ஆத்மா சாந்தி பெற்று சொர்க்கதிற்கு போவாய்.என்ற நம்போதிரியின் பேச்சை கேட்டு ஊரே பயப்படும் அளவுக்கு உரக்க சிரித்தது அந்த ஆவி....

நம்போதிரியின் உதவியாள் ஒண்ணுக்கே போய் விட்டான்.

எதிரில் உட்கார்ந்து இருந்த டாக்டர் நெஞ்சை பிடித்துக் கொண்டார்...

அவரின் சப்த நாடிகள் ஒவ்வொன்றாக அடங்கி வந்துகொண்டு இருந்ததுபோல் இருந்தது.

கீழே சக்கரத்தில் உட்கார்ந்து இருந்த ஏஞ்சல் மேரி ஆவேசமாக எழுந்தாள்..

கை நீண்டது.....

கண் இமைக்கும் நேரத்தில் டாக்டர் கழுதை அது பிடித்து மேலே தூக்க

ஐயோ காப்பாற்று... காப்பாற்று... என்று சப்தம் போட்டு கத்தினார் டாக்டர்.

உடனே நம்போதிரி அவனை விட்டு விடு

விட்டு விடு... என்று கமண்டலத்தில் இருந்த மந்திர ஜலத்தை எடுத்து அதன் மேலே தெளிக்க

உடனே அப்படியே விட்டு விட்டது.

கீழே அந்த நம்போதிரி மந்திர வலையத்திற்குள் விழுந்தார் டாக்டர்...

உயிர் இருந்தது.

உடனே தன் பையில் இருந்த விபூதியை அந்த டாக்டர் மீது தெளிக்க அவர் சுய நினைவுக்கு வந்தார்.

உடனே அந்த பிரேத ஆத்மா மீண்டும் உரக்க சிரித்தது.

இப்போ இவனை நீங்கள் காப்பாற்றி இருக்கலாம்.

இவன் முடிவு என் கையில் தான்.

நான் போகிறேன் என்ன விட்டு விடு...

சரி நான் உன்னை போக விடுகிறேன்.

நான் இருக்கும் வரை இவங்களுக்கு நீ ஒன்னும் செய்ய கூடாது.

அதும் பாவம் இந்த பொண்ணு அவ உடம்பை விட்டு உடனே நீ போய் விட வேண்டும்.

உனக்கு யார் தொந்தரவு கொடுத்தார்களோ அவர்களின் விதி படி நடக்கட்டும்.

ஆனால் எதிலும் சம்மந்த படாதவர்களை நீ பழி வாங்க நினைப்பது தவறு அதோடு அவங்களுக்கு நீ எதற்கு துன்புறுத்துகிறாய்.

என் வேலை முந்தபின் அவர்களை விட்டு விடுகிறேன்.

இல்லை இப்போதே இந்த பெண்ணின் உடம்பை விட்டு போய் விடு.

என்று சொல்லிக்கொண்டே அவர் கையில் இருந்த உத்திராட்சை மாலையை அதன் மேலே வீசினார் அவர்.

அடுத்த நொடி ஏஞ்சில் மேரிக்கு சுய நினைவு திரும்பியது.

உள்ளே அமைதியானது..

நம்போதிரி உட்கார்ந்து இருந்தவர் எழுந்தார்...

ஒரே வார்த்தை மட்டும் அவர் சொன்னார். உப்பை தின்னவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும். விதி வலியது..

என்றார் அவர்...

சாமி.... சாமி...... சாமி.....

நான் இனி இங்கே இருக்க மாட்டேன். உன் பிள்ளை, குடும்பத்திற்கு அந்த ஆத்மா. ஒன்னும் செய்யாது.

அது ஒன்னும் துர் ஆத்மா கிடையாது.

அதுக்கு தீங்கு செய்தவர்களை அது சும்மா விடாது.

அதற்கு முழு துணையாக அதன் குல தெய்வம் காட்டு அம்மன் துணையாக இருக்கு..

தெய்வ சக்திக்கு முன் இந்த சிறுவனின் மந்திரம் ஒன்னும் பலிக்காது.

நான் இங்கிருந்து போகிறேன். உங்க உயிரை நீங்கள் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு ஒரு சின்ன உபயம் சொல்கிறேன். பாதிக்கப்பட்ட வர்களை காப்பாற்ற அந்த பரம லோகத்தில்இருக்கும் பரம பிதாவால் மட்டுமே முடியும்.

நீங்கள் பரம பிதா இருக்கும் பரம இடம் போய் பிதாவின் காலடியில் சரணம் அடையுங்கள் தேவாலயம் போங்க . ஒரு வேளை உங்களுக்கு வழி பிறக்கலாம்.

என்று சொல்லிக்கொண்டே அறையின் வெளியே வந்து மாடி படிகளில் வேகமாக இறங்கினார்.. அவரைப் பின் தொடர்ந்தான் அவரின் உதவியாளார். யாரும் அவரை தடுக்க முடிய வில்லை.

அந்த இரவின் பாதையில் பயணித்துக் கொண்டு இருந்தது நிலவு...

உள்ள ஜன்னல் கதவை திறந்து நினைவின் தென்றல் வீச படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்தாள் லிஷார்தா.... இரவு வெகு நேரம் ஆகியும் அவளுக்கு தூக்கம் வரவே இல்லை..

கனவுகளின் தொல்லையில் அவள் மாண்டுக் கொண்டு இருந்தாள்.

இந்த உலகம் முழுவதும் அவளுக்கு இன்பம் நிறைந்ததாகவே தோன்றியது.

அவளின் கற்பனை சிறகை விரித்து வானில் மேலே மேலே பறந்து போய்க் கொண்டே இருந்தாள் அவள்....

அவளின் ஆசை கனவுகளுக்கு மத்தியில் அவன் முகம் மட்டுமே தெரிந்தது.

விழிகளின் பார்வையிலே விழுந்து கிடந்த அவன் அவளின் இதயத்துக்குள் புகுந்து இன்ப ராகத்தை இசைக்கிறான்.

புதிய வானம்பாடி பறவையாக அவள் பறக்கிறாள்.

தூது சொன்ன தென்றல் காற்றும், நினைவு சாரலை அள்ளி தெளிக்கும் ஆசைகளும் அவளுக்கு தோழிகள் ஆகிறது.

பூத்து குலுங்கும் புது மலர் வாசம் அவளுக்கு ஏக்கத்தின் கதவுகளை தட்டி திறக்கிறது..

வாசரற்படியில் வந்து யாரோ லிசு என்று அவளை கூப்பிடுவதுப் போல் கேட்க மெல்ல எழுந்தாள்..

பொழுது எப்படி விடிந்தது?

வசந்தங்களின் வார்பில் எழுதப்பட்ட கவிதைகள்.

உறவின் சிந்தனையில் மலர்ந்த மலர்கள்..

இதய சுரங்கத்தில் புதைந்து போன வைரப் படிவங்கள்.

கண்ணின் கடலின் ஆழத்தில் திரண்ட முத்துக்கள்.

என்ன லிசு இவ்வளவு நேரம் ஆகியும் தூங்கிட்டு இருக்கிறாய். என்று நந்தினி காபி கொண்டு வந்து எதிரில் நின்றாள்.

அம்மாவே தெய்வம்

அம்மாவே கோயில்

அம்மாவே எல்லாம் என்று சும்மா யாரும் சொல்ல வில்லை.

புன்னகை தவழும் அன்னையின் முகத்தை பார்த்துக் கொண்டே எழுந்தாள் லிசு...

இந்த உலகம் முழுவதும் அன்னையின் பாசத்தில் ஒளிரும் போது ஒளி மயமாகி போய் விடுகிறது.

என்னங்க இங்கேயே தங்கி விடலாம் என்று நினைத்து விடீர்களா அங்கே வீடு என்ன நிலையில் இருக்கோ.?

என்று பரவேஷசை பார்த்து சொன்னவள் கண்கள் கலங்கி போய் இருந்தது.

அதை பார்த்து

என்ன ஆச்சு நந்து..?

நீ சொன்னது எல்லாம் எனக்கும் தெரிகிறது.

நான் எல்லாம் யோசனை செய்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

நந்து நமக்கு உறவு என்று சொல்ல ராஜா வைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்.?அவனுக்கும் நம்மை விட்டா வேறு யாரும் இல்லை.

அதான் நீங்கள் முன்னாடியே சொல்லி இருக்கீங்க

இலங்கை யாழ்ப்பாணம் குருநகரில் இருக்கும் வீடு சொத்து விற்று விட்டு இங்கே வந்து வீடு வாங்கி கொண்டு இருந்து விடலாம்.

நம்ம பொண்ணு லிசா விற்கு ராஜா வுக்கு கலியாணம் செய்து இங்கேயே சொந்த மண்ணில் கடைசி காலத்தில் இருந்து விடலாம் என்று.

ஆமாம் அது தான்.

சரிங்க..நீங்கள் நினைப்பது சொல்வது எல்லாம் சரி தான். ராஜா மனசில் என்ன இருக்கிறது.?

லிசா என்ன நினைக்கிறாள் என்று நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

ஆமாம் நந்து நீ சொன்னது சரி தான். நம்ம பொண்ணு நம் பேச்சை மீற மாட்டாள் கண்டிப்பா.

ஆனால் ராஜா மனசில் என்ன இருக்கிறது என்பதை நம்ம தெரிந்துக் கொண்டு எதாவது ஒரு முடிவுக்கு வரலாம் சரியா.

இதோ ராஜாவே வருகிறான் அவனிடம் இன்று ஏன் இப்போவே கேட்டு விடுவது தான் சரி.

என்னவோ செய்யுங்கள்.

நாம் நினைக்கிற மாதிரி நடந்தால் சரி.

என்ன மாமா அத்தையும் நீங்களும் ரகசியம் பேசுகிறீர்கள். இப்போ நான் வந்து இருக்க கூடாது சரியா...?

ஐயோ மாப்பிள்ளை அப்படி ஒன்னும் பெரிய ரகசியம் இல்லை

என் பொண்ணு லிசா வைப் பற்றி தான் பேசிக்கொண்டு இருந்தோம்.

ஓ.. அப்படியா...

அதுக்கு என்ன மாமா அது தான் நீங்கள் டாக்டருக்கு படிக்க வைத்து விட்டீர்களே பின்ன என்ன?

அதெல்லாம் ஒன்னும் இல்லை மாப்பிளை அதுக்கு வயசாகிட்டு போகிறது.

இனி மேல் காலம் தாழ்த்தி கலியாணம் செய்வது சரி இல்லை.

அதனால் சீக்கிரம் கலியாணம் செய்து கொடுத்து விட்டால் எங்கள் பாரமும் இறங்கி விடும். நாங்கள் எங்கள் கடமை முடித்து விட்ட சந்தோஷத்தில் நிமைதியாக கண்ணை மூடுவோம்.

மாமா அதுக்கு எதற்கு பெரிய பெரிய வார்த்தைகள். உங்க நல்ல மனதுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் பாருங்கள்.

உங்க பொண்ணுக்கு ஏத்த நல்ல மாப்பிள்ளை கண்டிப்பா கிடைப்பார்.

அது எல்லாம் சரி மாப்பிள்ளை நாங்கள் ஒரு மாப்பிளை பார்த்து இருக்கிறோம். அது அவளுக்கு பிடிக்கும் கண்டிப்பா. அப்படி பிடித்து போய் விட்டால். அந்த மாப்பிள்ளை யை எப்படியாவது கஷ்ட்டப்பட்டு. அந்த மாப்பிளை யின் காலில் விழுந்தாவது அதற்கு கலியாணம் செய்து விடுவோம்.

அப்படியா மாமா அந்த மாப்பிளை யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?

அது கண்டிப்பா உங்களுக்கு தெரியாமலா நாங்கள் முடிவு எடுப்போம்.

பருப்பு இல்லாமல் சாம்பாரா...

ஓ...

அப்படியா அத்தை நீங்களாவது சொல்லுங்க அந்த மாப்பிள்ளை யார் என்று. நான் தெரிந்துக் கொள்கிறேன். ஆஹா...

நான் சொல்வதை விட உங்க மாமா கிட்டே......

கேளுங்கள் அவரே சொல்லுவார்......??????

≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤

Stories you will love

X
Please Wait ...