JUNE 10th - JULY 10th
அண்ணா கொஞ்சம் வேகமா போங்க என அவசரப்படுத்திக் கொண்டே இருந்தாள் வீணா.
போய்ட்டு தானம்மா இருக்கேன் ஏறினதுல இருந்து இதையே சொல்லிகிட்டு வர்றீங்களே என் ஆட்டோ டிரைவர் கடுப்பானார்.
இதுக்கு மேல பேசினா இப்படியே இறக்கி விட்டுருவார் அமைதியா இரு வீணா இல்லனா எல்லாம் வீணாப்போய்டும் . இன்னிக்கு கண்டிப்பா மனோவ தனியே மீட் பண்ணியே ஆகணும் என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
பார்க் வந்ததும் கைல இருந்த பணத்தை கொடுத்துட்டு மிச்சம் கூட வாங்காம வேகமா உள்ள ஓடி வழக்கமா உக்கார்ர பென்ச்சுல உக்காந்தா . நல்லவேளை வந்துட்டோம் இனி அவன் தான் வரனும் என ஆசையோட காத்திருந்தாள்
இன்னும் எவ்வளவு நேரம் wait பண்ணுறது,இவன் எப்பவுமே இப்படித்தான்" என சலித்துக்கொண்டே வாட்சையும் வாசலையும் பார்த்துக் கொண்டு இருந்தாள் வீணா.அப்பொழுது வேகமாக வண்டியை முறுக்கியபடி வந்த மனோவை பார்த்ததும் முகம் மலர்ந்தாள்.
"ஸ்ஸ்ஸப்ப்பா, என்ன வெயில்" என அலுத்தபடியே வந்து அமர்ந்தான் மனோ.
"என்ன வீணா , ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருக்கியா?. சாரிடா, கரெக்டா கிளம்பும்போது வீட்டுலேர்ந்து போன். எப்ப வருவீங்க? லேட்டாக்காம வாங்கனு. எதையோ சொல்லி சமாளிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு." சாரி.
" பரவால்ல விடு..எனக்கு மட்டும் என்னவாம்.. கடைக்கு போறேன்னு சொன்னேன்..அவ்ளோதான் ஏன் தனியா போற? நானும் வரேன்னு அது கிளம்பிடுச்சு. ஒரு வழியா தப்பிச்சு வந்துட்டேன்..ஆனா இந்த பார்க்குல தெரிஞ்சவங்க யாரும் பாத்துரக்கூடாதேனு தான் பக்கு பக்குனு இருந்துச்சு.. பாத்தாங்கன்னா அவ்ளோதான்.. மானமே போயிடும் மனோ."
"ச்சைய் வீட்டுக்கு தெரியாம மீட் பண்றது எவ்ளோ கஷ்டமா இருக்கு.. ஏன் நம்ம நிலைமை இப்படி ஆயிடுச்சு? லவ்வர்ஸக்கு எவ்ளோ சங்கடம். சரி விடு செல்லம் இருக்கற கொஞ்ச நேரமும் புலம்ப வேணாம்.ஏதாவது ஜாலியா பேசேன்...என் செல்ல வீணா குட்டி.!
நான் ஒரு புடவை கேட்டேன் அதை வாங்கிக் கொடுக்காம பேச்சு என்ன வேண்டிக் கிடக்கு என செல்லமாய் கோவித்தாள் வீணா
நீ கேட்டது ஞாபகம் வச்சு இப்ப வாங்கிட்டு வந்துருக்கேன் பாரு என அவள் கன்னத்தை திருப்பினான் மனோ
என்ன மனோ இப்ப குடுத்தா நான் எப்படி வீட்டுக்கு கொண்டு போவேன் யாராவது கேட்டா என்ன சொல்றது நீங்களே வச்சுக்காேங்க என்றாள்
அய்யய்யோ என் வண்டில வச்சத யாரவது பாத்தாலும் பிரச்சனை தான் இப்ப என்ன பண்றது என மனோ கேட்க வீணா பதில் சொல்ல திணறினாள்
சரி ஒண்ணு பண்ணலாம் இதை பேக் பண்ணி உன் ப்ரண்ட் அனுப்பின மாதிரி கொரியர் பண்ணிடுறேன் பக்கத்து தெரு தான ஸோ இன்னிக்கே கிடைச்சுரும் நீ சமாளிச்சுரு என ஐடியா சொன்னான் மனோ
ஓ கே டா அப்படியே பண்றேன் என வீணா வாய் கொள்ளா சிரிப்புடன் கூறினாள்
மனோ வர்ற சண்டே எங்கயாச்சும் போலாமா?
போலாம்டா.ஆனா வீட்டுல என்ன சொல்றது. அவங்க இஷ்டத்துக்கு ஏதாவது ஒரு ப்ளான் போட்டு வச்சுட்டு கூட்டிட்டு போ னு ஒரே தொல்லை... அதான் என்ன பண்றதுனு யோசிக்கிறேன் வீணா.
பேசாம ஆபீஸ்ல பார்ட்டி கண்டிப்பா போகணும்னு கிளம்பி வந்துரு. நானும் அம்மா வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு வந்துறேன். ஏதாவது மூவி பாக்கலாம். என்ன ஓ.கே வா மனோ?
ஹே சூப்பர் ஐடியாடா .கண்டிப்பா நான் வந்துடுவேன் என்றான் மனோ.
அப்போது வீணாவின் போன் " உன் சிரிப்பினில்" என பாட ஆரம்பித்தது. அதை ஆன் செய்து யார் என்று பார்த்தாள்.அச்சச்சோ வீட்லேர்ந்து போன்டா என அலறிக்கொண்டே ஹலோ என்றாள். இதோ வீட்டுக்கு பக்கத்துலதான் இருக்கேன். சீக்கிரமா வந்துறேன் என கூறிக்கொண்டே போனை கட் செய்தாள். மனோ நான் போகணும்.இல்லனா வீட்ல சண்டை தான் என்று சொல்லிக்கொண்டே பர்ஸை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் வீணா. இரு வீணா உன்னை தெருமுனைல ட்ராப் பண்றேன், வெயில் அதிகமா இருக்குல என்றான் மனோ.
வேண்டாம், எதுக்கு வீண் பிரச்சனை. நான் போயிக்கறேன் என்றபடியே கிளம்பிச் சென்றாள் அவள்.பின் திரும்பிப் பார்த்து சண்டே மறந்துடாத டா ப்ளீஸ் என்றாள். அவனும் கட்டை விரலை உயர்த்தி ஓ.கே என சைகை காட்டினான்.
வீணா வீட்டுக்குள் நுழைந்ததும் அவளது மாமியார் "அப்பாடி வந்துட்டியா. இந்த வானரங்கள சமாளிக்கவே முடியல.கடைக்கு இதுங்களையும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல." என அலுத்துக்கொண்டார்.
நான் கடைக்கு போகல அத்தை, என் காதலர பாக்க போனேன் என மனதிற்குள் சிரித்துக் கொண்டாள் வீணா. வரப்போகும் சண்டே வை நினைத்து கற்பனையில் மிதந்தவளை நிகழ்காலத்துக்கு இழுத்தது அவள் மூத்த பெண் சார்மியின் குரல். அம்மா அம்மா இந்த சண்டே தீம் பார்க் போலாம்மா என்றாள் சார்மி. வீணா திடுக்கிட்டுக்கொண்டே இல்லடா தங்கம் பாட்டிக்கு உடம்பு சரி இல்லயாம் அதனால அம்மா போய் அவங்கள பாக்கனும். நம்ம நெக்ஸட் வீக் போலாம் ஓ.கே வா என்று சமாதானம் சொன்னாள்.
போம்மா நீ எப்பவும் இப்படித்தான். நான் அப்பாட்ட கேட்டுக்கறேன். உன் பேச்சு கா என்று ஓடினாள் மகள். சாரிடா குட்டி என முனகியவாறு கணவனுக்கு டிபன் செய்ய ஆரம்பித்தாள்.
சார் கொரியர் என வாசலில் சத்தம் கேட்க எல்லாருக்கும் முன் ஓடினாள் வீணா. என்ன பார்சல் என்ற மாமியாரிடம் அத்தை என் ப்ரண்ட் எனக்கு புடவை அனுப்பியிருக்கா என சொல்லிவிட்டு ரூமின் உள்ளே ஓடி புடவையை பிரித்தாள்.
என்னதான் ப்ரண்டுனாலும் இப்படியா அவசரமா புடவையை கட்டணும் என நொடித்துக் கொண்டாள் மாமியார். அது காதில் விழுந்தாலும் கண்டு கொள்ளாமல் புடவையை கட்டி அழகு பார்த்தாள் வீணா .
வாசலில் வண்டி வரும் சத்தம் கேட்டதும்"அய் அப்பா வந்தாச்சு என சார்மியும், ராஷ்மியும் ஓடினர் . வாசலுக்கு ஓடி அப்பாவின் தோளில் ஏறி உள்ளே வந்தனர். வரும்போதே சார்மி அப்பா ப்ளீஸ் பா, சண்டே தீம் பார்க் பா என கெஞ்சிக்கொண்டே வந்தாள். நோ நோ சண்டே நான் ரொம்ப பிஸி என்னால முடியாது என அவன் மறுக்கவும் சார்மி கோபத்துடன் சென்று பேசாமல் உட்கார்ந்தாள். வீணா அவளை பார்த்து கோப்படாத டா தங்கம் சனிக்கிழமை தீம் பார்க் போறோம். என்ஜாய் பண்றோம். சண்டே வேண்டாம் என்றதும் சார்மி சிரித்துக்கொண்டே குட் அம்மா என முத்தமிட்டாள்.
நிமமதி பெரூமூச்சு விட்டவாறே கிச்சனில் நுழைந்த வீணாவை பின்னாலிருந்து கட்டி அணைத்து முத்தத்தால் திணறடித்தான் அவள் கணவன்.ம்ம் விடுங்க அத்தை பாத்துறப்போறாங்க என தள்ளி நின்றாள். அவளை ஏற இறங்க பார்த்தவனின் கண்களில் இருந்த கேள்வியை உணர்ந்தவள் என் ப்ரண்ட் எனக்கு பிரசன்ட் பண்ணிருக்கா என்றாள் நமட்டுச் சிரிப்புடன் அவளது பதிலை நம்பாமல் விலகிச் சென்றான் . கோபமாக அவன் பின்னால் சென்று என்ன நக்கலா சிரிக்கிறீங்க என கேட்டாள் .
இல்ல இப்படி ஒரு க்ளோஸ் ப்ரண்டான்னு நினைச்சேன் என்றான். நல்லா கேளுடா என மாமியாரும் எடுத்துக் கொடுக்க ,இருவரையும் முறைத்துக் கொண்டே உள்ளே சென்றாள் வீணா
அவனும் சிரித்துக்கொண்டே பின் சென்றான் ஏன் கோவிச்சுக்குற சும்மாதான் விளையாடினேன் என சீண்டினான். ஹான் போதும் போதும் என சலித்துக் கொண்டாள்
சண்டே வெளில போலாம்னு சார்மி கேட்டதும் டென்ஷன் ஆயிடுச்சு என்னடா பண்றதுன்னு முழிச்சேன் நல்ல வேளை நீ சமாளிச்சுட்ட செல்லம் .அப்புறம் இந்த புடவை உனக்கு செம்மையா இருக்கு உன் ப்ரண்ட்டுக்கு தாங்க்ஸ் சொல்லிடு என கண்ணடித்துக் கொண்டே சிரித்தான்.
முறைத்துக் கொண்டே திரும்பிய வீணா அவனை பார்த்ததும் டக்கென சிரித்து தாங்க்ஸ் ப்ரண்ட் என முத்தமிட்டாள் .இருவரும் சேர்ந்து சிரித்தனர் .
.சிரித்துக் கொணடே நம்ம நிலைமையை பாத்தியா , லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆனா இரண்டு குழந்தை பிறந்ததுக்கப்புறம் நமக்கான நேரம் குறைஞ்சு போச்சு. இப்படி ஏதாவது ஐடியா பண்ணாதான் உண்டு.இல்லனா இவங்க இரண்டு பேரும் நம்மள தனியா பேச கூட விட மாட்டாங்க என சொன்னாள் வீணா. சரியா சொன்ன என மனோ சொல்லும்போதே "டேய் மனோ சண்டே கோவிலுக்குப் போலாம்டா "என அவன் அம்மாவின் குரல்கேட்டது.
அய்யோ அம்மா சண்டே ஆபிஸ்ல முக்கியமான பார்ட்டி , போகலனா எம்.டி கோபப்படுவாரு மா என வீணாவைப் பார்த்துக் கண்ணடித்துக்கொண்டே சொன்னான் அவளது காதலனும் கணவனும் ஆகிய மனோ
.
#768
30,100
100
: 30,000
2
5 (2 )
sathishhkrishna
மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... சிறந்த கதை... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... தங்களுக்கு 5 star and like கொடுத்துள்ளேன். எனது கதை " அடுத்த நொடி ஆச்சரியம் " முதல் 20 இடத்திற்குள் இருக்கிறது. தாங்கள் தயவு செய்து எனது கதையை படித்து... பெருந்தன்மையோடு... ஒரு சக எழுத்தாளராக... ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்... மிக்க நன்றி...
sramya2004
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50