வந்த கீதா அந்த கீதா இல்ல

கற்பனை
5 out of 5 (2 )

123456789

ஓவர் டைம் பார்த்ததில் நேரம் போனதே தெரியவில்லை ரமேஷுக்கு , கைக்கடிகாரத்தைப் பார்த்தான் மணி பத்து, வேகமாக வீட்டிற்கு கிளம்பினான், தனியார் வங்கியில் பொறுப்புள்ள அதிகாரி.

6வது மாடியின் லிப்ட் கதவு திறந்தது பேஸ்மென்ட் செல்லும் பொத்தானை அழுத்தினான் மின்னல் வேகத்தில் பேஸ்மென்ட் வந்தடைந்தான் விறுவிறு என்று தனது காரை நோக்கி நடந்தான்.

காரில் உட்கார்ந்து சாவியை போட்டான், " டாடி எனக்கு நீ ஆபிசிலிருந்து வரும்போது கேக் வாங்கிட்டு வா" என்று தனது மகன் நிதீஷ் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது, பேக்கிரியைத் தேடி காரை உருட்டினான், பத்து மணிக்கு மேல ஆனதால் பார்த்த கடைகள் அனைத்தும் மூடி இருந்தன, சிறிது தூரம் சென்றபோது கடையை மூடும் தருவாயில் " அப்பாடா கேக்க இங்கே வாங்கிவிட வேண்டியதுதான்" என்று மனசுக்குள் சொன்னபடியே, "சார் சார் மூடா திங்க ப்ளீஸ் ப்ளீஸ் ஒரு பிளேன் கேக்கு, ஒரு பிளம் கேக் குடுங்க சார்" கடைக்காரர் "முணுமுணுத்தபடியே வீட்டுக்கு சீக்கிரம் போலாம்னு பார்த்தா விட மாட்டீங்களே" என்றே பேக் செய்தார்.

பில் எவ்வளவு சார் என ரமேஷ் கேட்க ரூ850/- ன்னு கடைக்காரர் சொல்ல தனது பரிசலில் இருந்த கிரெடிட் கார்டை எடுத்து கொடுத்தான்.

கடைக்காரர்: "இதுதானே வேணாங்கறது, இன்னிக்கு சேல்ஸ் எல்லாம் முடிஞ்சு செட்டில்மென்ட் எடுத்தாச்சு, காசு இருந்தா குடுங்க இல்லன்னா ஆள விடுங்க, நான் இன்னைக்கு வீட்டுக்கு போன மாதிரி தான்", என முணுமுணுத்தான்.

ரமேஷ: இருப்பா இருப்பா கோபப்படாத, எனப் பரிசில் உள்ள மூலை முடுக்குனு எல்லாத்தையும் தேடினான், அவன் முணுமுணுத்தபடியே ஆபீஸ்ல ஏடிஎம் இருந்தும் கேஸ் எடுக்காம போயிட்டேனே , என்று சொல்லி இங்க ஏதாவது பக்கத்துல ஏடிஎம் இருக்காப்பான்னு கேட்டான்.

கடைக்காரர்: அதோ எதுத்தாப்புல பாருங்க, அப்படியா ரோட்டை கிராஸ் பண்ணி போங்க.

ஒருவழியாக பணத்தை கொடுத்து கேக்கை வாங்கினான்.

கார் சென்ற சிறிது நேரத்தில் பலத்த சத்தத்துடன் ஒரு சடன் பிரேக் போட்டான், வேகமாக கார் கதவை திறந்து முன்னால் சென்று என்ன ஆனது என்று பார்த்தான், முன் சக்கரத்தில் ஒரு சிறு வயது பெண் சைக்கிளுடன் இடித்து மயக்க நிலையில் இருந்தாள், படபடத்துப் போனான் எனினும் நிலைமையை சுதாரித்துக்கொண்டு 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்தான் அடுத்த பத்தாவது நிமிடத்தில் சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வந்தது பெண்ணை ஏற்றிக்கொண்டு மருத்துவமனையை நோக்கி மின்னல் வேகத்தில் பறந்தது.

ரமேஷும் காரில் பின்தொடர்ந்தான், கூடவே போலீஸ் எண் 100க்கு அழைத்து நடந்த சம்பவத்தை தெரிவித்தான் , அடிபட்ட பெண் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு போயிருக்கிறார்கள் எனவும், தன்னை அங்கு விசாரிக்கலாம் என்று தெரிவித்தான்.

'ரம்யா' , பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி அம்மா பெயர் 'கீதா' அப்பா இல்லை தனது தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்கிறாள்.

ரம்யாவின் தந்தை அவள் சிறு வயது இருக்கும்போதே ஒரு ஆக்சிடெண்டில் இறந்து போனார். , எல்ஐசி பாலிசியில் கிடைத்த பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வரும் வட்டியில் காலம் தள்ளிக் கொண்டு இருக்கிறாள் கீதா.

கீதாவின் அப்பா இந்திய ரயில்வேயில் இருந்து ஓய்வு பெற்றவர், ஒரே பெண், அவரது பென்ஷனும் குடும்பத்துக்கு உதவிகரமாக இருக்கிறது.

சம்பவம் நடந்த அன்று சாயங்காலம் .......

ரம்யா: "டுஷன்ல இருந்து நான் ஒன்பது மணிக்கு தான் வருவேன் 'கவிதாவுக்கு' பிறந்தநாள் வீட்டுக்கு கூப்பிடு இருக்காம்மா"

அம்மா: "ஜாக்ரதையா போயிட்டு வாடா".

ஒன்பதரை மணி வரை காத்திருந்தாள் ரம்யா வீட்டிற்கு வரவே இல்லை, அவளது தொலைபேசியை தொடர்பு கொண்டாள் சுவிட்ச் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது, மணி 10 ஆனது சுவை செய்வதறியாமல் பதைபதைத்துப் போனாள் கீதா சாமி ரூமில் தனது கணவன் இருக்கும் படத்தையே நோக்கி " நம்ம குழந்தைக்கு ஒன்னும் ஆகாமல் நீங்கதான் காப்பாத்தணும்னு" வேண்டினாள்.

ரமேஷ் தனது மனைவி ரஞ்சனியை செல்போனில் தொடர்புகொண்டு நடந்ததை கூறி உடனே ராயப்பேட்டை ஜி ஹெச் வரும்படி கூறினான் , ரஞ்சனியின் தாய் அவர்களுடன் தான் இருக்கிறாள் விவரத்தை சொல்லி உடனே கிளம்பினாள்.

ரம்யா மின்னல் வேகத்தில் ராயப்பேட்டை ஜிஎச் வந்தடைந்தாள். தகுந்த முன்னெச்சரிக்கை கொடுக்கவே மருத்துவர்கள் ரம்யாவிற்கு தேவையான சிகிச்சையை உடனே செய்தார்கள்.

ரமேஷ் மருத்துவமனையை அடைந்தான் சிறிது நேரத்தில் அவன் மனைவியும் வந்தடைந்தாள்

ரஞ்சனி: “ என்னங்க இப்படி பண்ணிட்டீங்கள”

ரமேஷ்: “இல்லம்மா நித்தீஷ் கேக் கேட்டான்”....

ரஞ்சனி: "கேட்டா இப்படிதான் நடுராத்திரியில் போய் கேக் வாங்குறதா" என திட்டினாள்....

பொண்ணுக்கு எத்தனை வயசு உயிருக்கு ஏதேனும்.....

ரமேஷ்: "உயிருக்கு ஒன்னும் பயம் இல்ல மயக்கத்தில் தான் இருந்துச்சு 108 ஆம்புலன்ஸ் காரங்க உடனேயே "ஃபர்ஸ்ட் எய்டு" ஸ்டார்ட் பண்ணிட்டாங்க அப்பதான் தெரிஞ்சது கால் எலும்பு முருஞ்சியிருக்குன்னு".

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது....

உரக்க குரலில் "யாருப்பா இங்க ரமேஷ்" .... என அதிகார தொனியில் போக்குவரத்து துறை இன்ஸ்பெக்டர் 'மணிவண்ணன'்.

ரமேஷ்: ‘நான்தான் ரமேஷ்’

இன்ஸ்பெக்டர்: இப்போ எஃப்.ஐ.ஆர். ஆக்சிடன்ட்ன்னுதான் போட்யிருக்கோம், பொண்ணு உயிருக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா கேச வேறமாதிரி மாத்துவோம்".

ரமேஷ்: "சட்டப்படி எதிர்கொள்ள நான் தயாரா இருக்கேன்".

ம்புலன்ஸ் ஊழியர்கள் ரம்யாவிடம் இருந்து ஆடை செல்போன் மற்றும் அவளது புத்தகப்பையை இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம் கொடுத்தார்கள் அவரும் தனது துறையை சேர்ந்தவர்கள்யிடம் கொடுத்து விசாரிக்குமாறு சொன்னார் சரியாக 11 மணிக்கு ரம்யாவை பற்றிய விவரங்கள் தெரியவே, இன்ஸ்பெக்டர் கீதாவிடம் நேரடியாக செல்போனில் தொடர்பு கொண்டார்.

இன்ஸ்பெக்டர்: ஹலோ கீதாங்களா?

கீதா: ஆமா கீதா தான் பேசுறேன்

இன்ஸ்பெக்டர்: வணக்கம்மா நா இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் பேசுறேன்...

என்று சொன்னவுடன் கீதாவிற்கு கையும் வாயும் நடுங்கியது..... கீதாவின் நிலையை நன்கு உணர்ந்தார் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன்.

"உங்க பொண்ணுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு ஒன்னும் பயப்படாதீங்க நீங்க ்நேரா ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு வாங்க மத்ததெல்லாம் இங்க பேசிக்கலாம்" என்று காலை கட் செய்தார்.

கீதாவும் அவளது அப்பாவும் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியை வந்தடைந்தார்கள் கேஸ்வாலிடி எங்கே என்று தெரிந்து கொண்டு அந்த இடத்திற்கு விரைந்தார்கள், இவர்கள் வருவதைப் பார்த்த இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், " நீங்கதான் கீதாங்களா?

ஆமாங்க சார்....

"வாங்கம்மா உங்க பொண்ணு இருக்கிற இடத்துக்கு போவோம்" என ரம்யா சிகிச்சை பெறும் அரைக்கு வந்தார்கள்.

இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் டாக்டர்களிடம் "பொண்ணோட அம்மா இவங்கதான்", என்னங்க ஆச்சு என்ன அழுது கொண்டே கேட்டாள், ஒன்னும் இல்லம்மா வலது கால் பிராக்சர் ஆயிருக்கு ஆப்பரேஷன் பண்ணனும், நாளைக்கு காலையில 9 மணிக்கு ஃபிக்ஸ் பண்ணி இருக்கோம்.

பிறகு இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், கீதாவிடம் "இவர்தான் ஆக்சிடெண்ட் பண்ணியிருக்காரு இவர் பெயர் ரமேஷ்" , கீதா ரமேஷிடம் , "நைட் நேரத்துல கொஞ்சம் கவனமாக வந்திருக்கலாம், எனக்கு புருச இல்ல, ஒரே பொண்ணா இருக்கறதுனால செல்லமா வளத்துட்டேன், அவர்தான் என் பொண்ண காப்பாத்தி இருக்காரு, சரியான நேரத்துல ஆஸ்பத்திரியில வந்து சேர்த்து இருக்கீங்களே அதுக்கு உங்களுக்கு பெரிய கும்பிடு போடணும்ங்க, என்று கூற அதற்கு ரமேஷ், "என் மேல தப்பு இல்ல அம்மா பாப்பா தான் ராங்கு சைடுல வந்துட்டா, பிரைவேட் ஆஸ்பத்திரியில் வெச்சு பாக்கருந்தாலும் பாக்கலாம் செலவெல்லாம் நானே எடுத்துக்கிறேன்மா" என்று சொல்லி முடித்தான்.

இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் அந்த இடத்தில் இருந்து விடைபெற்றார்.

ரமேஷ் தயங்கி கீதாவிடம், "மேடம் உங்கள நான் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு நீங்க வண்ணாரப்பேட்டையா"?

கீதா: ஆமா

ரமேஷ்: ஜெகன்நாதன் ஸ்கூலியா படிச்சீங்க?

கீதா: ஆமா

ரமேஷ்: கீதா என்ன தெரியலையா நான் தான் ரமேஷ்...... ரங்கநாயகி தெரு 3ம் நம்பர் வீடு....

கீதா: அடடா பார்த்து எவ்வளவு வருஷமாச்சு எப்படி இருக்கடா? என்று கேட்டாள்

அலாரம் சத்தம் கேட்டது காலை மணி 5, இவை அனைத்தும் தான் கண்டது கனவு என்று ரமேஷுக்கு புரிந்தது.


வழக்கம்போல் ஆபிசுக்கு போக தயாரானான், அவன் பையன் நிதிஷ் "சாயந்தரம் வரும்போது கேக்கு வாங்கிட்டு வா", என்று சொன்னவுடன் திடுக்கிட்டான்.

ரமேஷ் ஆபீஸ் சென்ற சிறிது நேரத்தில் இன்டர்காம் போன் ஒலித்தது....

ரிசப்ஷனிஸ்ட் பெண்மணி: "குட்மார்னிங் ரமேஷ் சார் உங்கள பாக்க கீதான்னு ஒரு என்ஆர்ஐ வந்திருக்காங்க என்று கூறினாள், ரமேஷ் "தனக்குள்ளேயே கனவு பளிச்சிடும் போல" எனக்கூறி "சென்டர் டு மை கேபின்" என்று போனை கட் செய்தான் .

கீதாவை வரவேற்றான், வந்த கீதா அந்த கீதா இல்லை.

முற்றும்

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...