JUNE 10th - JULY 10th
சூழல் சிதைக்கிறது
மழையிரம் அடங்கிய குளிர்காற்று மெதுவாக ஜன்னல் வழியாக நுழைந்து அவளது முதுகையும் அவள் மீது இருந்த ரங்கனின் தலையையும் உரசிசெல்கிறது.காற்றை ரசித்தவாரே அவன் அவனது கதகதப்பான மூச்சுக்காற்றை முதுகில் பரப்பி மேலே படர்ந்து கனிபோல் இருந்த காதுகளை கடித்துவிட்டு தனது ஆடைகளை மாட்டிக்கொண்டு சோம்பளுடனே வெளியேற மனமின்றி வெளியேறினான்.
இலாட்ஜ் ரிசப்ணிஷ்ட்னிடம் ஒரு சலாம் செய்துவிட்டு தன் கைப்பையிலிருந்த பிராந்திபாட்டிலை எடுத்து வாயில் ஊற்றிக்கொண்டான். இந்த இரண்டு சுகத்தையும் சவைத்து விட்டு தன் வீட்டிற்கு பஸ் ஏறினானர் ரங்கன்.
காலை 4.30 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்துவிட்டு சட்டம் மற்றும் சில புத்தகங்களை படித்து விட்டு வழக்கம்போல் டியூட்டி டைம்மிற்கு துல்லியமாக காவல் நிலையத்திற்குள் நுழைந்தான் பிரதாப்,காவல் ஆய்வாளர். இவர் யாரையும் காக்க வைக்கமாட்டார்.அதனாலேயே ஏனோ மக்களிடையே கணிசமான ஆதரவை பெற்றுள்ளார்.
இரங்கன் ஓர் நாடோடி. எதையும் உறுப்படியாக செய்யத் தெரியாதவன்.மது, மாது, சூசு இதுவே இவன் பொழுதுபோக்கு.திருட்டு, பித்தளாட்டம்,போக்கித்தனம் இவையே இவனின் முழுநேரப்பணி. 50முதல் 55 வயதும் இராட்சச உடல்உருவமும் கொண்ட ஒரு தனிமரம்,ஒண்டிக்கட்டை.
கோபி அருகேயுள்ள ஒடையக்கவுண்டன்பாளையத்தில் ரங்கன் வசித்து வருகிறான்.கோபிக்கு செல்ல பேருந்து ஏறப்போகும்போது வழியில் ஆள்நடமாட்டமற்ற ரோட்டில் யாரோ ஒருப்பெண் ஏதோ யோசனையில் நடந்து செல்வதை ரங்கன் தன் கழுகு கண்களால் கண்டுவிட்டான்.வெயிலுக்கு முகத்தை மறைப்பது போல் மறைத்து தன் எதிரே கடந்த பெண்ணின் பின்புறமாக சென்று அவள் கழுத்திலிருந்த தங்க சங்கிலியினை இழுக்க சங்கலியுடன் அவளும் வர ரங்கன் இழுத்துக்கொண்ட ஒட அவள் தடுமாறிக் கீழே விழும்போது அருகில் இருந்த கருங்கல்லில் அப்பெண்ணின் நடுமண்டை மோத எரிமலைக்குழம்பு வெடிப்பது போல் இரத்தம் பீய்ச்சிக் அடித்துக்கொண்டு கொட்டத் துவங்கியது. இரங்கன் கையில்சங்கிலியினை எடுத்துக்கொண்டு தப்பித்தான்.அந்தப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
பிரதாப், அப்பகுதியில் நடைபெறும்; திருட்டுகளில் பெருவாரியான திருட்டுகள் இரங்கனே செய்து இருப்பதால் சந்தேககத்தின் பேரில் ரங்கனை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து வர இரங்கனின் இடத்திற்கு சென்றார்.இரங்கன் மதுவை அருந்திவிட்டு ரோட்டில் படுத்துக் கொண்டிருந்தான்.
அப்பெண்ணிடமிருந்து பறித்த நகையை விற்று விட்டதாகவும் கையில் இருப்பது முப்பதாயிரம் என்று கூறி சரணடைந்தான். இருபது நாட்களுக்கு பிறகு பரோலில் வெளியே வந்தான் இரங்கன்.
இரங்கனுக்கு யாரிடமும் வேலை கேட்டு பழக்கமுமில்லை, வேலை கொடுக்கவும் யாரும் முன்வரவில்லை. ஆனால் அவன் கையில் பணம் சேரும்போதெல்லாம் 2/5 –பங்கினை எடுத்து தனியாக வைத்துக்கொள்வான் மீதியிருக்கும் பணத்தினை தண்ணீர் போல் செலவழிப்பான்.
பல வழக்குகளில் துரித முடிவுகளை எடுத்து சிறப்பாக செயலாற்றிவந்த பிரதாப்-பினை அனைவரும் விரும்பினர்.ஆனால் சில குற்றவாளிகளை அடிக்கக் கூடாது என்று தனக்கு கீழ் பணிபுரியும் காவலர்களிடம் கூறியுள்ளான்.பிரதாப்பிற்கு நடந்தது காதல் திருமணம் மனைவி பெயர்-அநன்யா இவர்களுக்கு ஒரே ஒரு மகள் -12ஆம்வகுப்பு முடித்துள்ளாள்.
வாரத்தில் ஏழு நாட்களில் ஆறு நாட்கள் வேலையின்றி பொழுதினை கழிக்கும் இரங்கனுக்கு சனிக்கிழமை மட்டும் வேலைப்பளு இருக்கும் நாள்.மெதுவாக சுமார் 12.30 மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்து 1.30 மணியளவில் அருட்சவை அசைவ உணவினை உண்டு விட்டு சிறிய தூக்கம் போட்டு விட்டு மாலை 5.00 மணியளவில் வாய்க்கால் ஓரமாக பறைக்கலைஞர்களை அழைத்துஆடிப்பாடி மகிழ்வான்.வாரத்தில் எது தவறினாலும் இது தவறாது.
அவ்வாறே ஒரு நாள் பறை இசையில் முழ்கியிருந்தான் ரங்கன்.அருகிலிருந்த வீட்டிலிருந்து பண்ணாரி என்பவர் இரங்கனிடம் '‘யோ அக்கம் பக்கத்தில் யாரும் இருக்க வேண்டாமா, கிளம்புயா இங்கிருந்து” அதற்கு இரங்கன் இசைக்கேற்ப தலையை அசைத்தவாறே,’ வேணும்னா காதே பொத்திக்கோ” என்று கூற அந்த இடத்தில் கைகலப்பு உருவாயிற்று.பண்ணாரி கோவமாக பேச இரங்கன் அதனை நக்கல் செய்ய பிரச்சனை பெரியதாக வெடிக்கத் துவங்கியது.பண்ணாரி ரங்கனை காலால் உதைத்ததால் இரண்டு அடிக்கு பின் விழுந்த ரங்கன் இடுப்பில் வைத்திருந்த கத்தியினை எடுத்து குத்தப்போக சுற்றியிருந்த கலைஞர்கள் தடுக்க செல்வதற்குள் இரங்கன் பண்ணாரியினை குத்தாமல் நிறுத்திவிட்டான். அருகிலிருந்த அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.பண்ணாரியை இரங்கன் பலார் என்று கண்ணத்தில் அறைந்துவிட்டு சென்றான்.
பிரதாப்பிடம் தன்னை கொலை செய்ய முயற்சித்தாக இரங்கன் மீது புகார் கொடுத்தான் பண்ணாரி. எல்லா வழக்கிலும் துரிதமாக செயல்படும் பிரதாப் இந்த வழக்கில் மட்டும் மெத்தனம் காண்பித்தான்.
அடுத்த நாள் பண்ணாரியின் கணக்குப்பிள்ளைக்கு ஒரு அழைப்பேசி வந்தது, பண்ணாரியின் கைப்பேசியிலிருந்து '‘யோ உன் முதலாளி என்னிடம் இருக்கான், 50 இலட்சம் பணத்தினை கொடுத்துட்டு கூட்டிட்டு போ, நம்பலைனா போட்டோ அனுப்பிருக்கேன் பாரு” என்று கூறிவிட்டு அழைப்பினை துண்டித்தான் ரங்கன். ‘'என்னையா கணக்குப்பிள்ளை பணத்தை கொண்டு வந்துடுவானா?” என்று பண்ணாரியிடம் ரங்கன் கேட்டான். ஆம் என்றவாறே தலையசைத்தான் பண்ணாரி.
இரங்கனுக்கு தொலைப்பேசி அழைப்புவர சற்று தொலைவில் சென்று ‘'ஹலோ சொல்லு சார்”;, என்று பேசத்தொடங்கினான்.மறுமுனையில் பிரதாப் ரங்கனிடம்,’'டேய் பணம் ஆச்சா” எனக் கேட்டதற்கு ரங்கன், ‘'என்ன சார் திருடர்கள்வெளியே வருவதற்கும் அவர்களை அடிக்காமல் இருப்பதற்கும் அவர்களிடம் பணத்தை வாங்கிட்டு வெளியே விடுகிறமாறி நினைச்சயா.என்கிட்ட வேற இருபதாயிரம் வாங்கிட்ட அந்த செயின் கேஸ்க்கு.இது கடத்தல் சார் கொஞ்சம் பொறுமையாக இரு” என்று கூறினான்.
பிரதாப், ‘'டேய் தேவையில்லாமல் பேசாத பணத்தை வாங்கிட்டு வந்து அவினாசி பிரிவில் கொடு,முக்கியமா பண்ணாரியை கொன்று விடு இல்லையென்றால் பிரச்சனை ஆயிடும்” என்று கூறினான். ரங்கன் சரி சார் என்று கூறிவிட்டு அழைப்பினை துண்டித்தான். பணத்தை பெற்றுக்கொண்டு தன்க்குரிய பங்கான ரூ.10 இலட்சத்தினை எடுத்துக்கொண்டும், மீதமுள்ள தொகையினை அவினாசி பிரிவில் வைத்து விட்டு செல்ல பிரதாப் அதனை எடுத்து தனது காரில் வைத்துக்கொண்டான்.
பண்ணாரி முன் கொடுத்த வழக்கினை சுட்டிக்காட்டி ரங்கன் பணத்துக்காக பண்ணாரியை கொன்று விட்டதாக வழக்கினை முடித்து விடலாம் என்றும், இரங்கனுக்கு மேலும் ரூ.5இலட்சம் கொடுத்தால் கோர்ட்டில் பண்ணாரியை நான் தான் கொன்றேன் என்று ஒப்புக் கொள்வான் என்று நினைத்துக் கொண்டிருந்தான்,பிரதாப். வருங்காலத்தில் தன்மீது எந்த அவதூறு பெயரும் வராமல் இருப்பதற்காக மேற்காண்ட படி வியூகம் செய்து வைத்திருந்தான்.
பிரதாப் எதிர்பார்த்தொன்று நடந்ததொன்று, மறுநாள் காலையிலேயே தான் கொடுத்த கொலை முயற்சி வழக்கினை திரும்ப பெற்றுக்கொண்டான்.பண்ணாரியை உயிருடன் பார்த்தது பிரதாப்பிற்கு அடிவயிற்றில் வெடி வைத்தது போல் ஆகிவிட்டது. ஏன் வழக்கை திரும்பப் பெறுகிறான் என்றும், தன்னைக் கடத்தியதற்கும் வழக்கு தொடரவில்லை என்றும் யோசித்தவாறே தனது நற்காலியில் உட்கார்ந்திருந்தான், பிரதாப்.
சில மாதங்கள் கற்பூரமாய் கரைந்தன.இரங்கனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார் காவலர் ஒருவர்.பிரதாப்பிற்கு ரங்கனை கண்டது பேரதிர்ச்சியாக இருந்தது.பிரதாப் முகம் முழுவதும் தாடியுடன்இருந்தான்.'’என்ன சார் சௌக்கியமா?" என்று கேட்டான் ரங்கன்.சற்று யாருமற்ற இடத்திற்கு ரங்கனை அழைத்துசென்று ‘'டேய் எங்கடா போன?" என்று கேட்டான் பிரதாப்.அதற்கு ‘'சார் கைல பத்து லட்சத்த வச்சுட்டு என்ன பண்றதுனே தெரில அது தான் ஊர் ஊரா சுத்துன போன்-ஐ தொலச்சுட்டேன் சார்” என்று ரங்கன் கூறினான்.
‘'ஏன்டா பண்ணாரியை கொல்லல", என்று கேட்டான் பிரதாப்.
"சார் பண்ணாரி தங்கம் வியாபாரத்துல கடத்தல் தங்கம் மூலமாக நிறைய பணம் பார்த்துட்டாறு, அவருக்கு ஐம்பது லட்சம் பெருசு இல்ல சொந்தம்னு யாருமில்ல, கடத்துதனக்கு போலீசுல கம்ளைண்ட கொடுத்தா கொன்றுவேன் மிரட்டுனேன் பயந்துட்டாறு” என்று கூறி பேச்சை மாற்ற நினைத்த ரங்கன் ‘'பொண்டாட்டி புள்ளைகள் எல்லாம் சௌக்கியமாக" என்று கேட்டான்.
கவலை தோய்ந்த முகத்துடன் ‘'டேய் எனக்கு ஒரே ஒரு பொண்ணு,ரொம்ப செல்லம் கொடுத்து வளத்துன, டாக்டருக்கு படிக்கனும் ஆச ஆனா என்கிட்ட பணமில்ல, அதற்காக தான் பண்ணாரிய கடத்த சொன்ன.கோயம்புத்தூர்ல இருக்கற காலேஜ்ல சீட் கெடச்சு நாங்க போய் பணம் கொடுத்துட வரப்ப லாரி வந்து கார்; மேல மோத காரில பின்னால உட்கார்ந்து வந்த எனது மனைவியும், மகளும் சம்பவ இடததுலயே செத்துடாங்க” என்று மனக்குமறலை கூறினான்.
ரங்கன் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டான்.பிரதாப் அழுகையை அடக்க முயன்றும் கண்ணீர்த்துளிகள் முகத்தில் வழிந்தோடியது ‘'சார் நடக்கறது எல்லாம் நல்லதுக்காகதான் இருக்கும்.மனுசன் உயிரோட பிறப்பும் இறப்பும் எல்லார்தோட வாழ்க்கைய நல்லப்படியாக மாற்றும்” என்று கூறினான் ரங்கன்.
சற்று நேரம் கழித்து பிரதாப் ‘'டேய் ஒரு பொண்ண கல்லுலே தள்ளிவிட்டல அந்தப்பொண்ணுபொழச்சுட்ட” என்றான்.ரங்கன் அதற்கு '‘சார் எங்க அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பையன்,நான் அப்போ 9ம் வகுப்பு படிச்சுட்டு இருந்தேன்.சொத்து பிரச்சனை காரணமா எனது பெரியப்பா எனது அப்பா அம்மா கொன்னுட்டாறு. அதற்கு அப்புறம் வேலைக்கு போக ஆரம்பிச்சேன்.சேர்க்கை சரியில்லாமல் கெட்டு போயிட்டேன்.திருட ஆரம்பிச்சேன். மனுசன் உசுரு விலைமதிப்பில்லாதது சார்.நான் அந்தப்பொண்ண தள்ளி விட்டுருந்தாலும் நான் தான் ஆம்புளன்சுக்கு போன் பண்ணி வர சொன்னேன். பண்ணாரிய குத்த போனஅப்ப கூட நான் நிறுத்திக்கிட்டேன்.நீ கொல்லுனு சொன்னப்ப கூட நான் கொல்லல. ஒரு உசுரு போச்சுனா அத நம்பியிருக்கிற உசுருக்கிங்க என்ன பண்ணும்.எல்லாமே நல்லவங்க தான் சார் சூழ்நிலை மாறாதவரைக்கும். போ சார் போ,நீ பண்ண பாவத்த தீக்க நல்லது பண்ண பாரு சார்.நான் இப்படி தான் சார் மாறுறது கஷ்டம்" என்று கூறினான் ரங்கன்.
மேலும் சார்,’'நான் பாவம் பண்ணி சேர்த்த 2/5பங்கு பணத்த என் வீட்டு அரிசி முட்டைக்குள்ள வச்சுருக்கேன்.நான் எப்ப சிறையிருந்து வெளிய வருவேனு தெரியாது.என்ன நம்பி சில அனதைக் குழந்தைங்க இருக்கு அவங்க படிப்பு செலவ நான் தான் பார்த்துட்டு இருக்கேன்.நீ போய் அந்தப் பணத்தை எடுத்து அவுங்களுக்கு உதவி பண்ணு சார் போ!”
உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களும் மனிதம் மிக்கவரே.சூழ்நிலைகள் மனிதர்களை மிருகமாக்கின்றன.
#718
50,150
150
: 50,000
3
5 (3 )
sathishhkrishna
மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... சிறந்த கதை... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... தங்களுக்கு 5 star and like கொடுத்துள்ளேன். எனது கதை " அடுத்த நொடி ஆச்சரியம் " முதல் 20 இடத்திற்குள் இருக்கிறது. தாங்கள் தயவு செய்து எனது கதையை படித்து... பெருந்தன்மையோடு... ஒரு சக எழுத்தாளராக... ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்... மிக்க நன்றி...
devikalanagarajan2259
anandkrishnaraja6635
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50