JUNE 10th - JULY 10th
அவர்கள் இருவரும் படுக்கையில் உடைகளற்று, ஒரே போர்வையினுள் புதைந்து கிடந்தனர். சொல்லி வைத்தபடி இருவரும் மின்விசிறியை பார்த்தபடியே வேகமாக மூச்சு இறைத்தனர். அவளுக்கு வலது புறம் படுத்திருந்தவன், கையை அவள் மார்பகத்தில் தட்டினான். அவனுடைய கைகளை இடக்கழுத்தில் வைத்துக்கொண்டு, அவன் உடலுடன் அணைத்தவாறு உறங்க முற்பட்டால். பத்து வினாடிக்கு மட்டும் தான் அவளுக்கு இசைந்து கொடுக்க முயன்றது. பிறகு, கைகளை திரும்பப்பெற்று அவளுக்கு எதிர் திசையில் திரும்பி படுத்தான்.
அவன் ஆணுறுப்பை என்னுள் புகுத்தி விந்தணுக்களை வெளியேற்றும் வரை மட்டுமே நான் அவனுக்கு தேவை படுகிறேன். முடிந்த பிறகு நானும் அந்த ஆணுறையை போலவே தூக்கி எறியப்படுகிறேன். இவனை நம்பி நான் இவ்வளவு தூரம் வந்தது தவறோ?
இவ்வாறு கமலா யோசிப்பது முதல் முறையல்ல. கமலா மட்டும் இப்படி யோசிப்பது இல்லை என்று கமலாவுக்கு தெரியவில்லை. கண்களின் ஓரத்தில் சிறிது நீர் வழிந்தது. அதை தொடைத்துக் கொள்ளாமல், எதிர் திசையில் அவள் திரும்பி, “இப்படியே எவ்ளோ நாள் தான் இருக்கிறது?” என்று கேட்டாள்.
தூங்குவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த செல்வம், “ஹூம், கொஞ்ச நாள் தான்,” என்றான்.
“கொஞ்ச நாள் கொஞ்ச நாள்னுதான் மூணு நாள் ஆச்சு. இன்னும் எவ்ளோ நாள் இந்த இத்துப்போன ரூம்ல இருக்கிறது?”
முழித்துக்கொண்டவன், படுக்கையில் எழுந்து உட்கார்ந்து, “இந்த இத்துப்போன ரூம்ல தான் என்னால உன்னை வெச்சு காப்பாத்த முடியும்னு தெரிஞ்சுதான வந்த, இப்போ மட்டும் என்ன சலிச்சுக்குற?”
“இந்த மாதிரி ஒரு ரூம்ல இருக்கிறது என் பிரச்சனை இல்லை. வசதியே இல்லாத ரூம்ல கூட இருந்துடலாம். ஆனா…”
“ஆனா என்ன? அதான் வாய் வரைக்கும் வந்துடுச்சே. சொல்லிடு.”
அவளின் மௌனம் அவனை கோவப்படுத்தியது, “இந்த மாறி ரூம்ல கூட இருந்துடலாம், ஆனா என்ன மாறி ஒரு ஆள் கூட இருக்க முடியாது. அப்படி தான?”
“டேய், நீ மாட்டுக்கு இஷ்டத்துக்கு பேசாத டா. உன்னை நம்பி தான இவ்ளோ தூரம் வந்துருக்கேன்….”
“மூணு நாள் அமைதியா இருந்த, இப்போ உனக்கு அவசரம். நானே என்ன பண்றதுனு தெரியாம முழிச்சுட்டு இருக்கேன். நீ வேற ஏன் இப்படி என்ன படுத்துற?”
“நான் என்னடா உன்ன படுத்தினேன்” என்று அவளுக்கு அவனை பார்த்து கேட்க வேண்டும் என்று தோன்றிற்று. அவனுடைய சலிப்பு புரிந்ததால் திரும்பி பேசாமல் இருந்தாள்.
கமலா ஆழமாக பெருமூச்சு விட்டு, “இங்க பாரு. நீ என்ன பண்ண போறான்னு உன் மனசுக்குலயே நினைச்சுட்டு இருந்தா, அது எப்படி எனக்கு தெரியும்? மூணு நாளா நீ தான் வெளில போய்ட்டு வர, நான் இந்த நாலு செவுத்துகுள்ள தன் அடைஞ்சுருக்கேன். என்ன நடக்குதுன்னு நீ எனக்கு சொல்லாம எனக்கு எப்படி டா புரியும்?” என்று சொல்லியவுடன் அவன் வலது கரத்தை பற்றிக்கொண்டாள்.
செல்வத்துக்கு தன் சகோதரியை ஞாபகப்படுத்தியது இந்த பேச்சு. அது அவனுக்கு புடிக்கவில்லை. காதல் ஆரம்பிக்கும் பொழுது அவனுக்கு மிகவும் பிடித்த அவள் வாயிலிருந்து வரும் ‘டா’, தன்னை விட பெரியவள் என்ற கர்வத்தினால் அவள் கூறுவது போல இப்பொழுது தோன்றியது.
“ஒத்தா என்னடி உனக்கு…” என்று சொல்லி முடிப்பதற்குள், தான் மீறிய எல்லையை புரிந்துகொண்டான் அவன்.
பல்லை கடித்துக்கொண்டு கட்டிலுக்கு அடியில் இருந்த தன் உள்ளாடையை எடுத்து உடுத்திக்கொண்டு, அதன் மேல் ஒரு லுங்கியை சுற்றவிட்டு, அவளிடம், சொல்லாமல், கணபதி மேன்ஷனின் இரண்டாவது மாடியில் உள்ள அறையிலிருந்து வெளியேறினான், செல்வம்.
ஒற்றை வார்த்தை தான். இரண்டு ஒற்றை வார்த்தைகள். இதுவரை அவளை வாடி போடி என்று கூட சொல்லாத, ஒன்றரை வருடம் முன்னால் காதல்வயப்பட்ட பொழுதில் மரியாதையாக மட்டுமே பேச தொடங்கிய செல்வம், இன்று இப்படி. கண்களை கட்டிய காதல், இப்பொழுது அவன் வாயை கட்டவில்லை.
அவன் சென்ற பிறகு சில நிமிடங்களுக்கு தலையணையை கட்டிக்கொண்டு அழுதாள் கமலா. முன்பெல்லாம் அவள் எதற்காகவும் அழவே மாட்டாள். முன்பெல்லாம் அவள் பெரிதாக கோபப்படமாட்டாள். இப்போது கோபமும் அழுகையும் அவள் வாழ்வில் ஒரு பெரிய அங்கமாக அமைந்துவிட்டன. அவள் குடிக்கும் தண்ணீர் எல்லாம் கண்ணீராகவும், அந்த அறையின் புழுக்கத்தினால் வியர்வையாகவும் வெளிவந்து அவள் முதுகிலும், கழுத்திலும், மார்பகத்திற்கும் அக்குளுக்கும் நடுவிலும் கோடுகோடாக இருந்தது.
திடீரென்று எழுந்து தன் கூந்தலுக்கு கொண்டை போட்டுக்கொண்டாள். உடம்பில் அங்கு அங்கு பூத்திருக்கும் சிராய்ப்பின் காரணமாக உடைகள் அணியாமல் தன் உடைகளையும், செல்வத்தின் உடைகளையும் மடித்து அலமாரியில் வைத்தாள். படுக்கையை சரி செய்தாள். தன் பிறப்புறுப்பு திரவத்தினாலும் அவன் விந்தணுக்களின் வெளியேற்றத்தினாலும் அவள் உடல் பிசுபிசுத்தது. அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு செயலில் ஈடுபட்டாள்.
ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளித்துவிடுவாள். குளிப்பது தியானம் போல உணர்ந்தாள். ஒவ்வொரு முறை குளிக்கும் போதும், சோப்பின் நுரை அவள் உடம்பில் ஊடுருவாத பாகமே இல்லை என்பது போல் இருக்கும். ‘உன்னுடைய உடம்பில் உள்ள எல்லா பாகத்தையும் நான் ருசிக்க வேண்டும்’ என்று செல்வம் அடிக்கடி கூறுவது அவளுக்கு ஞாபகம் வந்தது. சிரித்தாள்.
தடதடவென்று கதவை அடித்து உடைப்பது போல சத்தம். செல்வத்தை தவிர வேறு யாரும் வர மாட்டார்கள் என்று நம்பி கொண்டிருந்தாள். மூன்று நாட்களாக அவனை தவிர வேறு யாரும் கதவை தட்டியதில்லை. இன்று..
ஒரு நொடியில் கமலாவின் இதயத்துடிப்பு பெருகியது. குளியறையிலிருந்து அவசரமாக துண்டை கட்டிக்கொண்டு வெளியே வந்தாள். கை கால்கள் நடுங்க அடிபிரதக்ஷணம் செய்தவாறு கதவருகே சென்றாள். ஐந்து வினாடிக்கு அமைதியாக இருந்த அறை மறுபடியும் இடிஇடிப்பது போல ஆகிற்று. உதடுகள் நடுங்க, தன் தொலைபேசியை எடுத்து செல்வத்தை அழைத்தாள். சிக்னல் சரியாக கிடைக்காததால் அவள் பதற்றம் மேலும் பெருகியது. ஆத்திரத்தில் தொலைபேசியை தூக்கி எறிந்துவிட்டு அறையில் அங்கும் இங்கும் ஏதாவது கிடைக்காதா என்று தேடினால். அவளின் பையில் உள்ள கத்தி ஞாபகத்திற்கு வந்தது.
அவசரத்தில் அதை எடுக்கச் சென்றால் பொது, கட்டி இருக்கும் துண்டின் நூல் கட்டிலின் நுனியில் இருக்கும் ஆணியில் மாட்டி அவிழ்ந்தது.
இவ்வளவு நேரம் அம்மணமாக இருந்த கமலா, தன் நிர்வாணத்தை உணர்ந்தாள்.
__________________________________________________________
அன்று பெய்த மழையால் வேலைக்கு செல்லாமல் தன் குழந்தைகளுடன் இருந்தாள்செல்லம்மா. இடியும் மின்னலும் வரும் சமயம் எல்லாம் தன் இளையவலின் பயத்துக்காக, வேலைக்கு போகமாட்டாள். முன்பெல்லாம் அவள் கணவன் ஒத்தாசையாக இருந்தான். எப்பொழுது செல்லம்மாவின் கடந்த காலம் அவனுக்கு தெரிந்ததோ, அன்றிலிருந்து அவன் பேச்சிலும், நடவடிக்கையிலும் வன்மம் வெளிப்பட்டது, குழந்தைகளுடன் இருக்க மறுத்துவிட்டான்.
தள்ளாடிக்கொண்டே, மழையில் நனைந்த வண்ணம் வீட்டுக்குள் வந்தான். அவள் அறையை விட்டு வெளியே வந்து அவனிடம் கோபமாக, "இருக்குற காசெல்லாம் இப்படி குடிச்சே அழிச்சுட்டா குழந்தைகளுக்கு என செய்றது" என்று அவள் கேட்பதற்குள், “வந்துட்டா தேவிடியா முண்டை…”
அவன் வாயை பொத்தி, “பசங்க இன்னும் தூங்கல. படுத்துட்டு தான் இருக்காங்க” என்று கூறினாள்.
“த்தா…தெரியட்டும் டி..அவங்களுக்கும் தெரியட்டும்..நீ யாரு..என்ன புடிங்கிட்டு இருந்தனு…எல்லாம் தெரியட்டும்…”
“யோவ்…வேணாம்யா..இந்த பிஞ்சுங்க மனசுல நஞ்ச வெதைக்காதையா..”
“உன் வயித்துலேந்து வந்ததுங்க எப்படிடி இருக்கும்? அதுவும் அந்த கமலா..வயசுக்கு வந்து கொஞ்ச நாள் தான் ஆகுது.. ஊருலேந்து வந்த மாமா பையனோட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கா..ஆத்தா ஒழுங்கா இருந்தா தான..”
அவன் பேச்சை நிறுத்துவதற்காக தன் சேலையை கழட்டி, “இந்தாயா..இதுக்கு தான குடிச்சுட்டு வர..இது தான உனக்கு வேணும்..இன்னிக்கு நீ கேக்காமலே நானே தரேன்..இந்த எடுத்துக்கோ..”
“உன் புத்தி உன்னைவிட்டு போகுமா..என்னையும் கஷ்டமர்னு நினைச்சுட்டியாடி, முண்ட. நான் உன் புருஷன்டி.”
“ஆமாயா. நான் கல்யாணத்துக்கு முன்னாடி ப்ராத்தல் தான் பண்ணிட்டு இருந்தேன். அதுக்கு என்னங்கிற?”
“கடைசில உன் வாயிலேந்து வந்துடுச்சு பாத்தியா. அன்னிக்கு என்னவோ உத்தமி மாறி பேசின. இப்போ நீயே ஒத்துக்குற. இதுக்கு அப்பறம் என் புள்ளைங்கள நீ பாத்துக்க வேணாம். நான் போதும் அவங்களுக்கு. நீ அவங்கள வளத்தானா என் பொண்ணும் உன்ன மாறி ஆகிடுவா, என் பையன் மாமா ஆகிடுவான். நீ இந்த குடும்பத்துக்கு தேவையே இல்லை. மரியாதையா நீயே போயிடு, உன்னை எல்லார் முன்னாடியும் அடிச்சு தொரத்துவேன்.”
“நான் ஏண்டா என் பசங்கள விட்டுட்டு போனும். நீ அப்படியே அவங்கள பாத்து கிழிச்சுப்ப. வயசுக்கு வந்த ஒரு பொண்ணுகிட்ட, அதுவும் பெத்த பொண்ணுகிட்ட, தூ ..ச்சீ..வெக்கமா இல்லை.. நீ எல்லாம் ஒரு அப்பனா?”
கமலாவிடம் தப்பாக நடந்துகொண்டதை செல்லம்மாவிடம் அவள் சொல்ல மாட்டாள் என்று நினைத்துக்கொண்டு இருந்தான். இப்போது அவளிடம் சொல்லிவிட்டால் என்று தெரிந்தவுடன், “உன் பொண்ணு எப்படி இருப்பா. அன்னிக்கு நான் கூப்டதுக்கு கால விரிக்கல அவ, ஆனா வேற ஒருத்தனுக்கு விரிக்க மாட்டானு என்ன நிச்சயம்?”
……
…..
…..
ஜுரத்தில் தூங்கிக்கொண்டிருந்த அண்ணனுக்கு போர்வையை போர்த்தி விட்டு, சத்தம் கேட்டு ஜன்னலின் முன் நின்றாள் கமலா. சேலையை கழட்டி, ரவிக்கையுடனும், உள்பாவாடையுடனும் நின்று கொண்டிருந்த தன் தாயை பார்த்த அவள் அதிர்ச்சி அடையவில்லை. அப்படியே உறைந்துவிட்டால். எப்பொழுதெல்லாம் எதார்த்தத்துக்கு முரணாக ஒன்று நடக்கிறதோ, அப்போதெல்லாம் உறைந்துவிடுவாள். அன்று அவள் தந்தை அவளை நெருங்கிபோதும் இப்படித்தான்.
__________________________________________________________
எரிச்சலான மூஞ்சியுடன் ரூமைவிட்டு வெளியே வந்த செல்வம், திடீரென்று சிரிக்க தொடங்கினான், “கமலா நல்லா ஏமாந்துடா, அவ மேல கோபப்படுற மாறி பேசினதை அவ நம்பிருப்பா. ஆனாலும் கொஞ்சம் அதிகமாவே நடிச்சுட்டேன்னு தோணுது. பரவாயில்லை. நல்ல செய்தியோட, ஹல்வா, பூவோட போய் அவள சமாளிச்சுடலாம். இத்தனை வருஷமா என்னை யாரும் பெருசா மதிச்சது இல்லை. ஆனா இப்போ ஒரு பொண்ணு. அதுவும் என்னைவிட ஆறு வயசு மூத்த பெண். அதுவும் பருமனான தோள்கள், வாட்ட சாட்டமாக, நேர்த்தியான உடல்வாகு கொண்ட பெண். என் மீது அளவில்லாத அன்பு கொண்ட ஒரு பெண். இதை நான் நம்புறதுக்கே ஒன்றை வருஷம் ஆகிடுச்சு.”
எதிரில் வந்த மேன்ஷன் இன்ச்சார்ஜைப் பார்த்து சலாம் வைத்தான். மேன்ஷனிலிருந்து சுமார் இரண்டரை கிலோமீட்டர் இருக்கும் ராஜன் பாத்திரக்கடை வரை நடந்து சென்றான். செல்லும் வழியெல்லாம் தானும் கமலாவும் இவ்வீதிகளில் புருஷன் பொண்டாட்டியாக கைகோர்த்து போவது போல் கற்பனை செய்துக்கொண்டான்.
மனிதர்களுக்கு வாழ்வில் நடக்கும் நன்மை தீமைகளை விட கற்பனையில் நடக்கும் நன்மை தீமைகளே அதிகம் உற்சாகமும் சலிப்பும் அளிக்கின்றன.
ராஜன் கடை முகப்பின் வழியாக உரிமையாளர் இடத்திற்கு சென்றான், செல்வம். எல்லா கடைகளில் பார்ப்பது போல், எல்லா கதைகளில் படிப்பது போல், ராஜன் வெள்ளை வெட்டி சட்டை அணிந்தவராக இருந்தார். அவர் செல்வத்தின் வருகையை பார்த்துவிட்டும் கூட அவர் வேலையை செய்து கொண்டிருந்தார். ஐந்து நிமிடங்களுக்கு மௌனமாக இருந்த செல்வம், வாய் திறப்பதற்குள் ராஜன், “வா செல்வம். நேத்து தான் இந்த பக்கம் வந்த மாறி இருந்துச்சு. என்னப்பா சமாச்சாரம்?”
“என்னன்னே தெரியாத மாறி புதுசா கேக்குறீங்க. அண்ணன் கடைல வேலை தரேன்னு சொன்னீங்களே.”
“அட ஆமா. அதுவா. அதுதான் அப்போவே பேசியாச்சே. அடுத்த மாசம் ஒண்ணான் தேதி வந்து சேந்துரு இங்க,” என்று சொல்லிவிட்டு அவர் வேலையை பார்க்காத தொடர்ந்தார்.
“அது செரினே. இன்னிக்கு தான் ஆறாம் தேதி. ஒண்ணான் தேதிக்கு இன்னும் இருபத்தி ஐந்து நாள் இருக்கு. அது வரையும் என்ன பண்றதுனு தெரியலனே. கொஞ்சம் பாத்து பண்ணி குடுங்கன. என் நிலைமை உங்களுக்கே தெரியும். இப்போவே சேரணும்னாலும் சேந்துடுறனே. உங்க உதவி எங்க வாழ்க்கையையே காப்பதும்ணே.”
செல்வத்தின் பணிவான பேச்சு ராஜனுக்கு அவர்களின் பாலிய பருவத்தை ஞாபகப்படுத்தியது. ராஜன் மீனாவுடன் சென்னைக்கு ஓடி வரும் பொழுது தன்னலமற்று உதவிய செல்வத்துக்கு வேலைபோட்டு தர முடியாதா என்று கடுமையாக ராஜனிடம் கேட்டுவிட்டாள் மீனா. அதன் பொருட்டு, மறுநாளே வேளைக்கு வந்து சேர சொல்லிவிட்டார், ராஜன். இம்முடிவை அவர் நேற்றே எடுத்துவிட்டார். ஆனாலும் ஒரு கடை உரிமையாளர் என்ற கர்வம்.
__________________________________________________________
நினைத்ததை சாதித்து கொண்ட திருப்தியுடன், ரூமிற்கு திரும்பினான். கமலா ஆடைகளற்று படுத்திருப்பதை பார்த்து திகைப்புற்றான். அவள் அருகில் சென்று, தோள்களில் கை வைத்து, அவள் காதை தன் நாவால் வருடினான். லேசாக திரும்பியவளை குலுக்கி எழுப்பினான்.
“என்னமா இன்னும் தூங்கிட்டு இருக்க. டிரஸ் கூட போடாம. என்ன ஆச்சு?”
ஆழ்த்தூக்கத்திலிருந்து எழுந்த அவள், தன் கூந்தலை கொண்டையாக போட்டுக்கொண்டாள், “நீ போன விஷயம் என்ன ஆச்சு?”
“எல்லாம் நல்லா முடிஞ்சுது. நாளைலேந்து வேலைக்கு போ போறேன், கமலா.”
“ஓ! சேரி,” என்று சொன்னவாறு படுக்கையிலிருந்து எழுந்து போர்வையை மடிக்க தொடங்கினாள்.
“கமலா, எனக்கு வேலை கிடைச்சிருக்கு. எவ்ளோ சந்தோஷமான விஷயம் சொல்றேன். அவ்ளோ தான் உன் பதிலா?”
சிறிது யோசித்துவிட்டு, “கமலா. காலைல நான் சொன்னதுக்கா கொச்சிட்டு இருக்க. நான் உன்கூட விளையாடினேன்.”
அவள் முறைப்பதை பார்த்து, “சத்தியமா கமலா. நான் பொய் சொல்லல. எனக்கு வேலை கிடைச்சுருச்சு. இன்னிக்கே எனக்கு வேலை கிடைக்கும்னு எனக்கு தெரியும். அதான் வெறுப்பா போற மாறி போயி, நல்ல செய்தியோட வரலாம்னு. சத்தியமா கமலா. என்னை நம்பு. அந்த வார்த்தை பயன்படுத்தியது தப்பு தன். அவசரத்துல விட்ட வார்த்தை. சத்தியமா மட்டமான எண்ணத்துல சொல்லல.”
அவன் என்ன சொன்னாலும் அவள் வேலையை அவள் பார்த்தவாறே இருந்தாள். அவன் அமைதியாக கட்டிலில் மேல் உட்கார்ந்தான். தான் விளையாட்டாக செய்தது அதிகப்ரசங்கிதனமாக மாறியதை நினைத்து வருத்தமுற்றான்.
அவன் முதுகில் ஒரு கரம் பற்றியது. கமலா அவன் பக்கத்தில் அமர்ந்தவாறு அவனை அணைத்துக்கொண்டாள்.
“நல்ல விஷயம் சொல்லிட்டு ஏன் உன் கண்ணுல தண்ணி வருது. ஆனந்த கண்ணீரா? சேரி அந்த ஹல்வாவ குடு, பசிக்குது அதையாச்சும் சாப்பிடுறேன்,” என்றாள்.
அவள் ஹல்வாவை எடுத்து சாப்பிடும் போது, “நீ என்கூட அவசரப்பட்டு வந்துட்டதா யோசிக்கிறியா கமலா?”
அவள் இல்லை என்று குறுக்கிடுவதற்குள், “உனக்கு அப்படி தோணிச்சுன்னா தப்பு இல்லை. என்னைவிட நீ ஆறு வயசு பெரியவ. நம்ம ஊருல நான் ஒரு சாதாரண ஹோட்டல்ல பில் கவுண்டர்ல வேலை செய்யுற ஆள். நீ ஒரு ஜவுளிக்கடைல சூப்பர்வைசரா இருக்க. பெரிய செல்வாக்கு இல்லனாலும் கௌரவமா நீயும் உன் அண்ணனும் வாழ்ந்துட்டு இருந்தீங்க?”
“நாங்க கௌரவமா வாழ்ந்துட்டு இருந்தோம்னு நினைச்சுட்டு இருக்கியா செல்வம்?”
“உங்க அம்மா அப்பா பத்தி எனக்கு எல்லாம் தெரியும். உன் அம்மா கல்யாணத்துக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தாங்க. அது உங்க அப்பாக்கு தெரிஞ்ச அப்றம் என்ன ஆச்சு, அதுனால அந்த நாய் உன்கிட்ட எப்படி நடந்துக்கிட்டான், அவன் உங்க குடும்பத்தை கைவிட்டது, உன் அம்மாவோட உடல்நலக்குறைவு, இது நம்ம ஊறுகாரங்களுக்கு தெரிஞ்ச அப்றம் உங்கிட்ட நிறைய ஆம்பளைங்க தப்பா எதிர்பாக்கிறது. இதெல்லாம் எனக்கு தெரியும் கமலா. தெரிஞ்சும் தான் உன்ன காதலிச்சேன்.”
மூச்சு வாங்கிக்கொண்டு, “உன் அண்ணன் கிறித்துவனா மாறுவதற்கு முன்னாடி நாங்க சந்திச்சோம். அவரு மதம் மாறுவதும் உங்கள பாதிக்கும்னு அவரு நம்பினாரு. அதுனால தான் அவரு துபாய்க்கு வேலை கிடைச்சு போறதுக்கு ஒரு வாரம் முன்னாடி மதம் மாறினாரு. அதுனால தான் உங்க அண்ணன் ஊருக்கு போன கையோட நம்ம சென்னைக்கு ஓடிவந்துடலாம்னு நான் உன்ன வற்புறுத்தினேன்….இதெல்லாம் நாங்க முன்னாடியே சொல்லிருக்கணும் தான். ஆனா இப்போ உங்கிட்ட சொல்றது தான் சரியாப்படுது. உன் சம்மதம் இல்லாம இதெல்லாம் நாங்க முடிவுபன்னிருந்தா எங்களை மன்னிச்சுடு, கமலா,” என்றவாறு அவன் அழத்தொடங்கினான்.
அவனுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம், “நீங்க செஞ்சது என்னவோ சரின்னு தான் படுது. இதுனால என்னடா. உனக்கு இப்போ வேலை கிடைச்சிருக்கு. நம்ம ஒரு வீட்டுக்கு போய்டலாம். அண்ணனும் மாசம் காசு அனுப்புவான். நானும் ஒரு வேளைக்கு போறேன். நம்ம கல்யாணம் பன்னிட்டு சந்தோசமா இருக்க வேண்டியது தான?”
“நீ சந்தோசமா தான் இருக்கியா?”
“ஏன் இப்படி கேக்குற?”
“நீ என்கூட இருக்கும் போதுலாம் சந்தோசமா இருக்கேனு எனக்கு தெரியும். ஆனாலும் ஒரு சந்தேகம் மனசுல இருந்ததே இருக்கும்…உங்கிட்ட இதெல்லாம் சொல்லாததுக்கு ஒரு காரணம் இருக்கு. நீ நிறையா வாட்டி ஏதாச்சும் நடக்கும் போது அப்படியே ஒரஞ்சு போய்டுற. உனக்கு அது தெரியுதான்னு எனக்கு தெரியல. அதுக்கு அப்பறம் உனக்கு ஏதும் பெருசா ஞாபகம் இருக்க மாட்டுது. இதுக்கு முறையா சிகிச்சை கொடுக்கணும்னு நானும் ஜோசஃம் முடிவு பன்னிருக்கோம். இதுக்கு நீ ஒத்துழைக்கும்.”
அவனை இறுக்கி அனைத்து, இவள் உதட்டுடன் அவன் உதட்டை பூட்டியவாறு, “இவனை நம்பி நான் இவ்வளவு தூரம் வந்தது தவறே இல்லை,” என்று நினைத்துக்கொண்டாள்.
இருவரும் புது ஆடைகள் அணிந்து மார்க்கெட்டுக்கு செல்வதற்காக மேன்ஷன் ரூமை பூட்டிவிட்டு கீழே இறங்கினர். மேன்ஷன் இன்ச்சார்ஜை பார்த்து புன்னைகைத்தவாறு, சலாம் வைத்தான் செல்வம்.
அவர்கள் இருவரும் மேன்ஷனை விட்டு வெளிய செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த இன்ச்சார்ஜ், தன் பணியாளரிடம், “ஊரை விட்டு சென்னைக்கு ஓடிவந்த கிராக்கிங்க. வந்து மூணு நாள் ஆச்சு. வரும் போது மூஞ்சியெல்லாம் மூடிட்டு தான் அந்த பொண்ண கூட்டிட்டு வந்தான். நான் கூட அவளை வேசின்னு தான் நினைச்சேன். மூணு நாளா அவ வெளில வராத அப்போ எனக்கு சந்தேகம் வந்துடுச்சு. அதான் இன்னிக்கு காலைல பசங்ககிட்ட சொல்லி அந்த பொண்ணு தனியா இருக்கும் போது பேஜார் பண்ணிட்டோம்,” என்று அவன் சொல்லி முடித்தவுடன் இருவரும் வயிறு குலுங்க சிரித்தனர்.
அவன் மேலும், “இப்போ இவை மூஞ்சிய பாத்த அப்போ தான் எனக்கு தெரியுது, இவை வேசியும் இல்லை, இவங்களுக்கு கல்யாணமும் ஆகல, இது கள்ள காதல்னு…” மேன்ஷன் ஹாலில் இருவரின் சிரிப்பும் எதிரொலித்தது.
______________________முற்றும்___________________________
#389
20,800
800
: 20,000
16
5 (16 )
subscribesgn
kannanalla1966
உங்களது கதையை படித்தேன் மிகவும் அருமையான கதைக்களம் சிறந்த எழுத்தாளராக எனது வாழ்த்துக்கள்.. என்னுடைய கதையின் பெயர் "அவள் விரும்பிய வாழ்க்கை " என்னுடைய கதை உண்மையை தழுவிய கற்பனைக் கதை ,என்னுடைய தோழி ஷீலா வாழ விரும்பியதை கதையாக எழுதியிருக்கிறேன். இந்தக் கதையை அவளிடம் நான் கூறிய பொழுது அவள் கண்களில் கண்ணீர் வந்தது நான் இப்படித்தான் வாழ விரும்பினேன் கற்பனையில் ஆவதே என் கனவு நிறைவேறியது என்று.சிறிது நேரம் எடுத்து தயவுசெய்து என்னுடைய கதையை படியுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.இந்த சமுதாய
inbarajanva
good story......
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50