சத்யா..
≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥
உண்மை கதை.
ஆனால் நிகழ்வுகள் உரையாடல்
கற்பனை.
≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥
சென்னை பரங்கிப்பேட்டையில் ரயில் நிலையத்தில் அன்று வியாழக்கிழமை.
வழக்கம் போல் பயணிகள் நின்று ரயிலுக்காக நின்றுக் கொண்டு இருந்தார்கள்.
ரயில் வரும் நேரம் நெருங்கி கொண்டு இருந்தது.
ரயிலில் போகும் கூட்டம் சுறு சுறுப்பானது.
சற்று நேரத்தில் நடக்கும் ஆபத்தை உணராமல் சத்யா வழக்கம் போல் கல்லூரிக்கு போக நாளும் வழக்கமாக ஏறும் அந்த
மின்சார ரெயிலுக்கா காத்துக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தாள்.
அன்று தமிழகத்தையே உலுக்க போகும் சம்பவம் நடக்கப் போவது தெரியாமல் எல்லோரும் நின்றுக் கொண்டு இருந்தார்கள்.
கல்லூரியில் பாடி பறந்து அந்த வெள்ளைப் புறா இன்னும் சற்று நேரத்தில் இந்த உலகை விட்டே பறந்து போவது யாருக்குமே தெரியாது.
துள்ளி திரியும் மானாக, பறக்கும் அழகு மலர் வண்ணத்துப் பூச்சியாக பறந்து திறிந்தாள் சத்யா.
பரங்கிமலை ரயில் நிலையத்தில்
வழகமாக வருவாள்.
சென்னை ஆலந்தூரை உள்ள தனியார் கல்லூரியில்
பி. காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தாள் சத்யா.
இருபது வயதில் பூத்து குலுங்கும்
ரோஜாவாக இருந்தாள்.
இவள் அழகில் மயங்கிய இளைஞன் சதிஷ் இருபத்தி மூன்று வயதில் கொலைவெறி பிடித்து அலைந்த ஒரு சைக்கோ.
அவன்
மே மாதம் 23 ஆம் தேதி, கல்லூரி வாயிலில்
கல்லூரியில் சத்யாவை தாக்கியுள்ளான்.
மாணவி சத்யாவை கல்லூரிக்கு வெளியில் வைத்து தாக்கியிருக்கிறான்.
சதீஷ் மீது வாய்தகராறு செய்ததாக சென்னை மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்.
4 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படிக்கும்போது, சத்யா மீது காதல் ஏற்பட்டள்ளது அவனுக்கு.
சத்யாவை பின்தொடர்ந்து போய் ஒருநாள் அவரிடம் செல்போன் எண்ணை கேட்டு இருக்கிறான்.
அவள் தரவில்லை. இதனால், அவரது தோழிகள் மூலம் சத்யாவின் செல்போன் எண்ணை வாங்கி அவரிடம் காதலை சொல்லி இருக்கிறான் இவன் ஆனால், சத்தியாவோ எதுவும் கூறாது இருந்திருக்கிறாள்.
சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் ராஜா தெரு, காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவரள் சத்யா. இவள் தி.நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்துவந்துள்ளாள்.
அதே ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஸ்
சத்யாவை ஒருதலையாக காதலித்து
வந்து இருக்கிறான்.
இந்த நிலையில் தொடர்ந்து சதீஷின் காதலை சத்யா ஏற்க மறுத்து வந்துள்ளாள்.
நேற்று முன்தினம் 1.30 மணியளவில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அவளை கொலை செய்ய திட்டம் தீட்டி தான் இந்த கொலை செய்து இருக்கிறான்.
இதுகுறித்து மாம்பலம் ரயில்வே போலீஸார் விசாரித்து வந்த நிலையில்,
வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
டிஎஸ்பிக்கள் செல்வகுமார்,
பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு சென்று, சம்பவ இடத்தை ஆய்வு செய்து, தடயங்களை சேகரித்தனர்.
கொலை நடந்தபோது, ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ஊழியர்கள், ரயில்வே காவலர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் குறித்து ரயில் நிலைய அதிகாரிகளிடம் விசாரித்தனர். அந்த ரயிலை இயக்கிய ஓட்டுநர், மாணவி தனது ரயில் முன்பு வந்து விழுந்தது தொடர்பாக அதிகாரிகளிடம் என்ன தகவலை அளித்துள்ளார் என்றும் விசாரித்தனர்.
பரங்கிமலை ரயில் நிலையம் மற்றும்அதை சுற்றியுள்ள 28 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை சிபிசிஐடி போலீஸாரின் ஒரு பிரிவினர் ஆய்வு செய்தனர். சத்யா, சதீஷ் எந்த வழியாக ரயில் நிலையத்துக்குள் வந்துள்ளனர், ரயில் நிலையத்தில் எங்கெல்லாம் நின்று, எவ்வளவு நேரம் பேசினர், எப்போது வாக்குவாதம் ஏற்பட்டது, ஏன் மோதலாக மாறியது என்று கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
தண்டவாளத்தில் இருந்து மாணவியின் உடலை தூக்கிய ஊழியர்களிடமும் விசாரித்தனர்.
ரயில் ஓட்டுநர், மாணவி சத்யாவின் தோழிகள், சம்பவத்தை நேரில் பார்த்ததாக தொலைக்காட்சிகளில் பேசியவர்கள்,
மாணவியின் தாய், உறவினர்கள்,
அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி சிபிசிஐடி போலீஸார் தகவல்களை சேகரிக்க உள்ளனர்.
இந்த சமுதாயத்தில் பெண்களை போகப் பொருளாக கருதும் ஆணாதிக்க கலாச்சாரத்தின் வெளிப்பாடாக இந்த படுகொலையை கருத வேண்டியுள்ளது.
சதீஷ் குறித்துசத்யா தரப்பில் கூறப்பட்ட புகார்களை காவல் துறை புறந்தள்ளியது நியாயமற்றது.
இந்த கொடூர கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு விரைவாக தண்டனை வழங்க வேண்டும்.
வருங்காலங்களில் எந்தவொரு சூழ்நிலையிலும், பிற உயிரை கொல்லும் துணிவுயாருக்கும் வராத வகையில் முன்மாதிரியான தண்டனை, குற்றவாளிக்கு வழங்கப்பட வேண்டும்.
சத்யாவை கொன்று அவரது தந்தையின் தற்கொலைக்கு காரணமாகியுள்ளார் சதீஷ். இதன் பாதிப்பு எப்படி இருக்கும் என உணர வைக்கும் வகையில் அவருக்கான தண்டனை அமைய வேண்டும்.
விருப்பம் இல்லாத பெண்ணை விடாமல் தொடர்ந்து காதல் செய்வதுதான் விடாமுயற்சி, வீரம் என நம்பி தொந்தரவு செய்பவர்களை மட்டுமல்ல, அவ்வாறு செய்ய தூண்டியவர்களையும் சேர்த்து தண்டிக்க வேண்டும்.
சதீஷ் சிறையில் அடைக்கப்பட்டான்.
சத்யாவை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருந்ததாக வாக்குமூலத்தில் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சிறையில் அவன் விடிய விடிய தூங்காமல், சத்யாவையே நினைத்து புலம்பியதாகவும் போலீஸார் கூறுகின்றனர்
கல்லூரி மாணவி கொலை வழக்கில் அக்டோபர் 14 ஆம் தேதி சதீஷ் கைது செய்யப்பட்டு . இதையடுத்து, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
அதையடுத்து, கொலையாளி சதீஷை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவன் மீது பழைய வழக்குகள் இருக்கிறது
சத்யாவின் கண்ணீர் கதை
சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் ராஜா தெரு, காவலர் குடியிருப்பைச் சேர்ந்த அழகு தேவதை தான் சத்யா.
தி.நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்துவந்துள்ளாள்
அதே ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஸ் சத்யாவை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில் தொடர்ந்து சதீஷின் காதலை சத்யா ஏற்க மறுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் 1.30 மணியளவில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது சதீஸ் அப்பெண்ணை ஆத்திரத்தில் ரயில்வே ட்ராக்கில் தள்ளிவிட்டுள்ளான
மகள் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சடைந்தார் சத்யாவின் அப்பா. அன்று இரவு விஷம் குடித்து இறந்து உள்ளார்.
இந்த இதுவரின் இறப்பும் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர் சதீஸ் தற்பொழுது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளனர்.
சதீஷ் அழுது கொண்டிருக்கிறான் புலம்பி கொண்டு இருக்கிறான் என்று கூறுகிறார்கள்.
சதீஷை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளார்கள்.
கல் நெஞ்சம் படைத்த காமுகன் அன்று
சத்யாவின் பின்னால் இருந்து எட்டி உதைத்து இருக்கிறான்.
நிலை தடுமாறியா சத்யா ரயில்வே டிராக்கில் விழுந்து இருக்கிறாள்.
அப்பொழுது மின்சார ரயில் சத்யாவின் மீது மோதி சம்பவ இடத்திலேயே இளம்பெண் தலை துண்டாகி உயிரிழந்தார்.
உடல் சிதறி இருக்கிறது.
lஒருகட்டத்தில் சதீஷை சத்யாவும்காதலித்த நிலையில், அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் போகவும், விலக ஆரம்பித்துள்ளார்.
இதனால், பின்னாடியே அவரை விரட்டிவிரட்டி சென்று காதல் டார்ச்சர் செய்து,கடைசியில் கொலை வரை சென்றுவிட்டது.
கஞ்சா மற்றும் போதைப்பழக்கத்துக்கு அடிமையான சதீஷின் அனைத்து நடவடிக்கைகளும் அவரது அப்பாவுக்கு தெரிந்தும்,
சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்த அவர், தன் மகனை ஒருநாளும் கண்டிக்கவேயில்லை என்கிறார்கள்.
போலீஸ்காரர் வீட்டு பிள்ளை என்பதால், அந்த ஏரியாவில் உள்ள மற்ற போலீசாரும் சதீஷின் சேட்டைகளை கண்டுகொள்ளாமல் இருந்து இருக்கிறார்கள்.
சில ..மாதங்களுக்கு முன்பு சத்யாவுக்கு லவ் டார்ச்சர் தரும்போதுகூட, காலேஜ் வாசலிலேயே சத்யாவின் தலைமுடியை இழுத்து அடித்து, ஒரு சைக்கோ போல நடந்து கொண்டு இருக்கிறான் அவன்.
அவன் சத்யாவை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியதால், இந்த டார்ச்சர் தொடர்பாக போலீசில் 3 முறை சத்யா குடும்பத்தில் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை போலீஸ்என்று சொல்கிறார்கள்.
2 தரப்பினரையும் அழைத்து பேசி போலீசாரே கட்டப்பஞ்சாயத்து செய்து, இவர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்தார்களாம்.. இது தற்போது சிக்கலாக உருவெடுத்துள்ளது.
இப்படிப்பட்ட சூழலில்தான் விசாரணை நடத்த உள்ளனர்.. மகள் ரயிலில் தள்ளிவிடப்பட்டு இறந்துவிட்டார் என்ற தகவல் கிடைத்ததுமே, ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடிய அவரது அப்பா மாணிக்கம் அன்றுஇரவே விஷத்தை குடித்து இறந்துவிட்டார்..
தலைமைக்காவலரான, சத்யாவின் அம்மா ராமலட்சுமி மார்பக புற்றுநோயால் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் படுத்த படுக்கையாக வெளியே வர முடியாத சூழலில் தவித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று அது தொடர்பான விசாரணை நடக்க உள்ளது.. இதையடுத்து, ரயில்வே போலீஸார் தங்களிடம் இருந்த வழக்கு ஆவணங்களை, சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்... சம்பவம் நடந்த அன்றே, பரங்கிமலை ரயில் நிலையத்தில்
இருந்த சிசிடிவியை ஆய்வு செய்தபோது, அதில் சதீஷ், மாணவி சத்யாவை ரயில் முன்பு தள்ளிவிடும் காட்சிகள் பதிவாகி இருந்ததாக சொல்கிறார்கள்.. இப்போது, முதல்கட்ட விசாரணைமுடிந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அடுத்தகட்டமாக மாணவியின் தோழிகள், குடும்பத்தினர் மற்றும் சம்பவத்தை நேரில்பார்த்து தனியார் டிவிகள், யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்தவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களிடம் விசாரணை நடத்தவும் சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அந்தவகையில், சத்யாவின் அம்மா, ராமலட்சுமி, மற்றும் உறவினர்கள், அருகில் வசிப்பவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து, மாணவி படித்த காலேஜிலும், அவரது தோழிகளிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
பின்னர், சதீஷின் குடும்பத்தினரிடமும் போலீஸார் விசாரிக்க உள்ளனர்.. இதைதவிர, இளைஞர் சதீஷ், மாணவி சத்யாவை, பின்னாடியே சென்றது முதல் அவரை ரயில் முன்பு தள்ளிவிட்டது வரையிலான அனைத்து தகவல்களையும், ஆதாரங்களையும் சிபிசிஐடி போலீஸார் திரட்டி வைத்துள்ளனர்.. வரும் வாரத்தில் சதீஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்த வழக்கு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடித்து, விரைவில் சதீஷுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவோம் என்று சிபிசிஐடி போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சத்யா மற்றும் அவரது தந்தை மாணிக்கம் உடல்களை பார்த்து கதறி அழுத உறவினர்கள்.
சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவி சத்யாவை இளைஞர் சதீஷ் நேற்று முன்தினம் ரயில் முன்பு தள்ளி கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, துரைப்பாக்கத்தில் நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த சதீஷை நேற்று காலை கைது செய்தனர். 15 நாள்நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்
: அவன் வீட்டின் அருகே உள்ள காவலர் குடியிருப்பில்தான் சத்யாவின் வீடும் உள்ளது.
இதனால் அவளை அடிக்கடி பார்த்திருக்கிறான்.
அவரது தாய் ராமலட்சுமி, ஆதம்பாக்கத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்ததால் அவரையும் அவனுக்கு நன்கு தெரியும்..
அவனும் போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் ராமலட்சுமியும் அவனிடம் அன்பாக பேசுவார்.
4 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படிக்கும்போது, சத்யா மீது காதல் அவனுக்கு ஏற்பட்டது.
அவளை பின்தொடர்ந்து போய் இருக்கிறான்.
ஒருநாள் அவளிடம் செல்போன் எண்ணை கேட்டு இருக்கிறான்
அவள் தரவில்லை.
இதனால், அவரது தோழிகள் மூலம் சத்யாவின் செல்போன் எண்ணை வாங்கி அவரிடம் காதலை சொல்லி இருக்கிறான்.
ஆனால், அவள் எதுவும் கூறவில்லை.
இந்த நிலையில், தியாகராய நகரில் உள்ள கல்லூரியில் சேர்ந்தாள் சத்யா. அதுமுதல், வீட்டில் இருந்து தனியாக பரங்கிமலை ரயில் நிலையம் வந்து அங்கிருந்து ரயிலில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளாள்.
இதனால், அவனும் பரங்கிமலை ரயில் நிலையம் வந்து அவளிடம் பேசுவான்
படிப்பு, குடும்பம் குறித்து அவன் அக்கறையோடு பேசியதால், சத்யாவுக்கு அவன் மீது நம்பிக்கை ஏற்பட்டது
நாளடைவில் அவன் காதலை சத்யா ஏற்றுக்கொண்டாள்
.இதன் பிறகு, அவர் கல்லூரிக்கு செல்லும் போதெல்லாம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் சந்தித்து பேசி வந்திருக்கிறான்.
சில நாட்கள், பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து அவன் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, கல்லூரியிலும் விட்டுள்ளான்.
கல்லூரி முடிந்த பிறகு, அவரது வீடு அருகிலும் விட்டுச் சென்று இருக்கிறான்.
அவர்கள் ஒன்றாக செல்வது குறித்து சத்யாவின் தாய்க்கு தெரிந்து,
சத்யாவை கண்டித்துள்ளார். அதன் பிறகும் அவர்கள்பழக்கம் தொடர்ந்ததால், ‘‘இனிமேல் நீ கல்லூரிக்கு செல்ல வேண்டாம்’’ என்றும் தெரிவித்துள்ளார்.
பலரிடம் விசாரித்ததில், அவன் மீது ராமலட்சுமிக்கு நல்லஎண்ணம் இல்லை. இதையும் மகளிடம்கூறிய அவர், ‘‘இனியும் நீங்கள் ஒன்றாகசுற்றினால், சாவதை தவிர வேறு வழி இல்லை’’ என்று மகளிடம் கூறியுள்ளார்.
இதை அவனிடம் கூறிய சத்யா, ‘‘எனக்கு என் அப்பா, அம்மா, குடும்பம்தான் முக்கியம். அதனால், என்னுடன் பேச வேண்டாம்’’ என்று சொல்லி இருக்கிறாள்.
சத்யா இப்படி கூறுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
அதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறான்
ஆனாலும், என் தரப்பு விளக்கத்தை கூறுவதற்காக செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்து இருக்கிறான்.
ஆனால்,செல்போன் அழைப்பை அவள் ஏற்கவில்லை. குறுந்தகவல் அனுப்பியும் பார்க்கவில்லை. வாட்ஸ்அப் மூலம்அனுப்பிய மெசேஜையும் பார்க்காமலே நீக்கி இருக்கிறாள்.
இது அவனுக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சத்யாவிடம் இருந்த செல்போனை அவரது பெற்றோர் வாங்கி வைத்துக்கொண்டனர் என்பது பின்னர் தெரியவந்தது.
சதீஷின் ஆலந்தூர் வீடு முன்பு அவரது இருசக்கர வாகனம்.நிறுத்தி விட்டு தான் அன்று வந்து இருக்கிறான்.
அவன் சத்யாவை சந்திக்க கூடாது என்பதற்காக, சத்யாவை அவரது பெற்றோரே தினமும் வீட்டில் இருந்து ரயில் நிலையத்தில் விடுவதும், கல்லூரி முடிந்த பிறகு ரயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்வதுமாக இருந்தனர்.
இதனால், சத்யாவிடம் பேசக்கூட அவனால் முடியவில்லை
. கடந்த 6 மாதத்துக்கு முன்பு, நேரடியாக சத்யாவின் கல்லூரிக்கு போய், ‘‘நான் உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய். நீ இல்லாவிட்டால், நான் இல்லை’’ என்று கூறி அழுது இருக்கிறான்.
அப்போதும் அவள் பேசாததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
அவன் கல்லூரிக்கே வந்து சென்றது குறித்து, நிர்வாகத்துக்கு தெரியவர, சத்யாவின் பெற்றோரிடம் இதை தெரிவித்துவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, சத்யாவை பின்தொடர்ந்து வந்து நான் தொந்தரவு செய்வதாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இப்படி 2 முறை புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில், போலீஸார் அவனையும், அவன் தந்தையையும் நேரில் அழைத்து விசாரித்துள்ளனர்.
இனிமேல் சத்யாவை தொந்தரவு செய்ய
கூடாதுஎன்று அவனிடம்எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்பிறகும்கூட, சத்யாவை அவனால்
மறக்கமுடியவில்லை.
தோழிகள் மூலம் சத்யாவை தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறான்.
இதில் கோபமடைந்த அவள் ‘‘அவனது உறவு முறிந்துவிட்டது. இனிமேல், என்னை சந்திக்கவோ, பேசவோ முயற்சி செய்ய வேண்டாம்’’ என்று இறுதியாக சொல்லிவிட்டதாக அவரது தோழிகள் தெரிவித்து உள்ளனர்.
அவனை விட்டு முழுமையாக விலக அவர் முடிவு செய்ததை அறிந்து மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கிறான்.
இந்த நிலையில்தான், சத்யாவுக்கு அவரது பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வந்தது தெரியவந்தது. இன்ஜினீயர் மாப்பிள்ளைக்கு சத்யாவை திருமணம் செய்து வைக்க பேசி முடித்துள்ளதாகவும், விரைவில் நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கேள்விப் பட்டுள்ளான்.
கடைசியாக ஒருமுறை சத்யாவை நேரில் பார்த்து, காதலை ஏற்கும்படி சமாதானம் பேசலாம் என கருதி போயிருக்கிறான்.
பரங்கிமலை ரயில் நிலையம் போய் பார்த்திருக்கிறான்.
நடைமேடையில் தனது தோழியுடன் நின்றிருந்த சத்யாவின் அருகே சென்று பேசி இருக்கிறான்.
‘‘வேலைக்கு சென்று உன்னை நன்றாக பார்த்துக் கொள்வேன். என்னை நம்பு’’ என்று கெஞ்சி இருக்கிறான்.
சத்யா அதை காதில் வாங்கவில்லை. என்னை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருக்கிறாள்.
இது அவனுக்குமிகுந்தஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டுக்கணக்கில் பழகியும், காதலை ஏற்க மறுக்கிறாரே என்ற கோபம் அவனுக்கு வந்துள்ளது.
‘எனக்கு கிடைக்காத சத்யா வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழக்கூடாது’ என்ற எண்ணம் அவனுக்குஎழுந்தது உள்ளது.
அப்போது, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கிச் செல்லும் மின்சார ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. கடும் ஆத்திரத்தில் இருந்த நான், சத்யாவை காலால் எட்டி உதைத்து ரயில் முன்பு தள்ளி இருக்கிறான்.
ரயிலுக்கு அடியில் சிக்கி சத்யா. தலை துண்டாகி உடல் சிதறி துடி துடிக்க இருந்திருக்கிறாள்.
அங்கு இருந்தவர்கள் அய்யோ.. அம்மா.. என கூச்சலிட்டனர். கூட்டம்கூடியது. அவனை பிடித்து அடித்து உதைத்து விடுவார்களோ என்ற பயத்தில்அங்கிருந்து தப்பி ஓடிருக்கிறான்.
எங்கு செல்வது என தெரியாமல் துரைப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீஸார் பிடித்துவிட்டனர்.
ராமலட்சுமி தனது மற்ற 2 மகள்களுடன் சேர்ந்து, மாணிக்கம்–சத்யாஉடல்களுக்கு இறுதிச் சடங்கு செய்தார்.பின்னர், உடல்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆலந்தூரில் உள்ளதகன மேடையில் தகனம் செய்யப்பட்டன. தந்தை, மகள் உடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக தகனம் செய்யப்பட்டது, உறவினர்கள், நண்பர்கள் மத்தியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இவனுக்கு கொடுக்கப்படும் தண்டனை பார்த்து அவர்களும் திருந்துவார்களா?????
#503
100
100
: 0
2
5 (2 )
nazar
Check out my story "How are you?"
S. Naffia Gowser
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50