புருஷ்

காதல்
5 out of 5 (5 Ratings)
Share this story

கதிரேசன் பெட்டில் வலது புறம் திரும்பிபடுத்தான், இடது புறம் திரும்பி படுத்தான், குப்புறப்படுத்தான், போர்வையை தலை முழுதும் மூடி கண்களை இருக்கி மூடினான், திரும்பவும் குப்புற படுத்து தலையணைகளை தலையின் மீது மூடுவது போல அடுக்கிக்கொண்டான் முடியவில்லை எப்படி என்ன செய்தலும் ராகவிதான் நினைவில் வந்தாள்.

பாத்ரூம்க்குள் ஓடி சென்று பிரஸ் எடுத்து பல் துலக்கினான், பால்கனியில் நின்னுகொண்டு ஹெட்போனில் சப்தம் அதிகம் வைத்து பாட்டுக்கேட்டான், அரக்கப்பறக்க ஓடும் மனிதர்களை நோக்கி பார்வையை வீசினான் எல்லோரும் ராகவி போலவே தெரிந்தனர்.

திரும்பவும் ஓடி வந்து பெட்டின் தலை பக்கம் கிடந்த மொபைலை எடுத்தான்.

"ஹே சாரிடி நா பன்னது தப்புதான் மனுச்சுக்க வீட்டுக்கு வா"

மெசேஜ் டைப் செய்து அவளின் என்னை பதிவிட்டான் ஆனால் அனுப்பாமல் அழித்துவிட்டான்.

"பொண்டாட்டியிடம் மன்னிப்பு கேட்பதில் அப்படி என்ன சுயமரியாதை இருக்கு பேசுடா" என்று அவனின் ஆன்மா அவனை போல அவன் முன் தோன்றி மறைந்தது.

"ஹேய் சாரிடி நேத்து நா பன்னது தப்புதான் மனுச்சுக்க, ஏதோ வேற கோவத்துல அப்படி பண்ணிட்டேன் இனி அப்படி நடக்காது"

மெசேஜ் டைப் செய்து இந்த முறை சென்ட் பட்டனை அழுத்தினான் அது நாட் சென்ட் என்று வந்தது, கோவத்தில் மொபைலை தூக்கி பெட்டில் எறிந்துவிட்டான்.

பசி வயிற்றை கிள்ளியது நேரம் பதினொன்று என்று கடிகாரம் சப்தமிட்டது, இன்று ஆபிஸ் போயிருந்தால் ராகவி இருந்தால் ஏதேனும் செய்துகொடுத்திருப்பாள், லீவு நாட்களில் வீட்டில் இருக்கும் பொழுது அது இது என்று ஏதாவது செய்துகொடுத்துக்கொண்டே இருப்பாள்.

"ஹேய் எதுக்குடி இது, கையும் காலும் கொஞ்சம் சும்மாவே இருக்காதா ஏதாவது ஒண்ணு துரு துருன்னு செஞ்சுட்டே இருப்பையா" என்று கதிரேசன் கேட்கும் பொழுதெல்லாம்

"ம்...பொண்டாட்டி செஞ்சு கொடுக்குறத புருஷன் சாப்பிட்டே இருக்கணும்குறது தான் எல்லா பொண்ணுங்களுக்குமே ஆசை" என்று அவள் உதட்டை ஒரு மாதிரி சுளித்து செய்யும் அழகு அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.

அவனை விட்டு அவளும் ஒரு நொடி கூட இருக்கமாட்டாள், அம்மா வீட்டிற்கு சென்றாலும் அன்னைக்கே வந்துவிடுவாள் இரண்டு நாட்கள் அங்கே இருக்கிறாள் என்றால் அவனும் அங்கே இருக்கவேண்டும்.

ஒரு முறை கதிரேசன் ஆபிஸ் டென்ஷனில் வீட்டிற்கு வந்தான், அவன் முகம் காய்ந்து போன மலர் போல வாடி இருந்தது.

"என்னாச்சுங்க இவ்ளோ டையாடா இருக்கீங்க, மொகமே சரியில்ல" அவள் கேட்க கேட்க அவன் ஒண்ணுமே சொல்லாமல் உள்ளே சென்றான். கையை தலையில் வைத்து அழுத்திபிடித்தவாறு பெட்டில் உக்காந்திருந்தான். அவள் அருகில் வந்து உக்காந்தாள்.என்னாச்சு, ஓடம்புக்கு முடியலையா, என்று பேசிக்கொண்டே இருந்தாள் அவன் ஏற்கனவே டென்ஷனில் இருக்க

"ஒன்னுல்ல, பேசாம போ"

"என்னன்னு சொல்லுங்க"

"பேசாம போன்னு சொன்னேன்" அவனுக்கு கோவம் அதிகமாகியது.

"என்னன்னு சொன்னாத்தான தெரியும்" அவளின் குரல் கொஞ்சம் உயந்தது, அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டான்.

அவள் கண்கள் கலங்கியது, திருமணம் ஆகிய ஆறு வருடத்தில் முதன் முதலாக அவளை அடிக்கிறான், அடித்தவுடன் அவன் கைகள் நடுங்கியது.

அவள் வேக வேகமாக பெட்ரூமை விட்டு வெளியே சென்றுவிட்டாள், அய்யோ என்று தலையை பிடித்துகொண்டவனுக்கு திடீரென்று யோசனை வர மனது பட படத்தது, பயமாகியது. கோவித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு போயிருவாளா, ஏதும் பண்ணிக்கிவாலோ என்று அவன் மனது எதேதோ நினைத்து பயந்து பதற்றத்தில் அவன் நகரவே இல்லை, அதை அவன் யோசிக்கவும் இல்லை,

சிறிது நேரம் கழித்து வந்தாள், அவள் முகம் கழிவிஇருந்தாள், கையில் தட்டில் சாப்பாடும், கண்ணாடி கிளாசில் தண்ணீரும் இருந்தது. அவன் அமைதியாக அவளவே பார்த்தான். அருகில் இருந்த டேபிளில் கிளாஸை வைத்தாள்.

"காலைலேயும் நீங்க சாப்பிடாம போய்ட்டேங்க, மதியத்துக்கும் ஏதும் கொண்டு போகல, ஆபிசிலேயும் ஏதும் சாப்பிட்டிருக்க மாட்டேங்கன்னு எனக்கு தெரியும், பாரு மொகமெல்லாம் எப்டி வாடிருக்குன்னு மொதல்ல சாப்புடுங்க அப்புறம் என்ன எவ்ளோ வேணாலும் அடிங்க" என்று அவள் கழுவிய முகத்திலும் வடிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக்கொண்டு முதல் கை சாப்பாட்டை எடுத்து அவனுக்கு ஊட்டினாள். அவனின் கண்கள் அவனின் அனுமதியின்றி கண்ணீரை வெளியேற்றியது.

"சாரி ராகவ்..... ஆபிஸ் டென்சன் அதுதான் என்ன எதுன்னு யோசிக்காம....." அவனுக்கு மேற்கொண்டு பேச நேரம் எடுத்தது.

"பரவாயில்லங்க எனக்கு தெரியும், இவ்ளோ வருஷத்துல புதுசா நீங்க என்ன அடுச்சதும் எனக்கு அழுகைக்கு முன்னாடி ஆச்சரியமாத்தான் ஆனது"

அவனுக்கு இன்னொரு வாய் சோறை ஊட்டிவிட்டு தண்ணீர் கிளாஸை எடுத்து கையில் கொடுத்தாள், அவன் அதை வாங்கி குடிக்காமல் கையிலேயே வைத்துக்கொண்டான்.

அந்த ஞாபகம் இப்பொழுது வந்து ராகவி மேல அன்பை அதிகமாக்கியது, இதோ இந்த இடத்தில் தான் அது நடந்து என்பதை போல அந்த ரூம் அவனுக்கு சொல்வதை போல தோன்றியது. ரூம் எங்கும் அவள் உருவமே தெரிந்தது, அவள் அருகில் அமர்த்து இருப்பதை போல இருந்தது.

கொஞ்சம் வெளியில் போலாம்னு கிளம்பி மாடியில் இருந்து கீழே வந்து பைக்கை எடுத்தவனுக்கு கிளம்ப புடிக்கவில்லை, மீண்டும் மேலே சென்று சோபாவில் அமர்ந்து கண்களை மூடி பின்னோக்கி சாய்ந்தான்.

மொபைலில் அவன் ராகவிக்கு அனுப்பிய மெசேஜ் போயிருந்தது, அதற்கு அவள் பதில் அனுப்பியிருந்தாள்.

"நா இனிமேல் அங்க வரதா இல்லை, இனிமேல் எனக்கு கூப்ட்டு தொல்ல பண்ணாதீங்க, ஆல்ரெடி பயங்கர டென்சன்ல இருக்கேன்"

அவள் எப்பொழுதும் அவனை செல்லமாக புருஷ் என்று தான் அழைப்பாள், புதிதாக போங்க வாங்க என்றது அவனுக்கு கோவத்தை தூண்டியது.

"ஹே என்னடி போங்க வாங்கன்னு புதுசா"

"என்கிட்ட பேசாதீங்கன்னு சொன்னேன்"

அவள் மீண்டும் அப்படி சொன்னது அவனை கோவத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

நமக்கு பிடித்தவர்கள், நம்மீது உயிராக இருப்பவர்கள் ஒரு விதமாக நம்மை அழைத்துவிட்டு புதிதாக ஒரு விதமாக அழைப்பது நமக்கு பயங்கர கோவத்தை உண்டாக்கும், வேற யாரோ மாதிரி நினைத்துவிட்டார்களோ என்று ஏதேதோ நினைக்கும் மனசு.

அவளிடம் ஒரு வாரத்தை பேசினால் ஆறுதலாக இருக்கும் என்று நினைத்தவனுக்கு அவளின் இந்த வார்த்தை ஏமாற்றத்தை தந்தது, உயிருடன் இதயத்தை வெளியில் எடுப்பது போன்று இருந்தது. போனை ஆப் செய்துவிட்டு பெட்டில் குப்புற படுத்துக்கொண்டான்.

மாலை நேரம் போனை ஆன் செய்தான், ராகவியின் அப்பா அழைத்தார். அவனுக்கு மனதிற்க்குள் ஒரு வித பதற்றம் என்ன சொன்னாலோ என்று. போனை ஆன் செய்தவனுக்கு பதற்றத்தில் குரல் தழு தழுத்தது.

"மா........மாமா சொல்லுங்க மாமா"

"என்னங்க மாப்ள எப்பவும் இல்லாத புது பழக்கம்"

அவனுக்கு பதில் கூற வார்த்தை வரவில்லை.

"வீட்டுக்கு வந்து மூணு நாளாச்சு என்ன ஏதுன்னு சொல்லாம கஞ்சி தண்ணி குடிக்காமா அழுதுட்டே இருந்தா என்னன்னு இணைக்குதா சொன்ன "

அவன் எச்சிலை விழுங்கினான்,

"இல்ல மாமா.......ஆபிஸ் மேனேஜருக்கு பர்த் டே அதுல பசங்க தெரியாம கலந்துகொடுத்துட்டானுங்க மாமா "

சிறிது நேரம் அமைதியாக இருந்து மீண்டும் அவனே பேசுனான்.

"இனிமேல் இப்டி நடக்காது மாமா நம்புங்க, அவள வீட்டுக்கு அனுப்பிவிடுங்க"

"பார்த்து மாப்ள நானும் இப்டித்தான், மொத மொத பசங்க கலந்துகொடுத்துட்டானுங்கதா குடிச்சு பழகிட்டேன், அப்புறம் வாழ்க்கையே குடி குடின்னு போய் ராகவி பொறந்ததுக்கு அப்புறம் தான் திருந்துனேன் இது அவளுக்கு கூட இன்னும் தெரியாது, எம்பொன்னு பாசக்காரி மாப்ள உங்க மேல உயிரவே வச்சுருக்கா எம்பொன்ன கைவிட்டுறாதேங்க"

"அய்யோ மாமா.....அப்டில்லாம் இல்ல, அவள விட நா அவ மேல உயிரவே வச்சுருக்கேன், அவ இல்லாத மூணு நாளும் நா எவ்வளவு கஷ்டப்படுறேன்னு எனக்குத்தான் தெரியும், பேசி அனுப்பிவையுங்க இனி இப்படி நடக்காது"

"நானும் உங்கத்தையும் எவ்வளவோ பேசிட்டோம் மாப்ள அவ கேட்கவே மாட்டேங்கிற, நீங்களாச்சு உங்க பொண்டாட்டியாச்சு வந்து பேசி கூட்டிட்டு போங்க இல்லனா ஏதாவது பண்ணி வரவையுங்க"

அவர் போனை வைத்துவிட்டார், அவன் என்ன செய்வது என்று யோசித்தான். அவளுக்கு போனில் அழைத்தான், அவள் போனை எடுக்கவில்லை, மீண்டும் அழைத்தான் மீண்டும் எடுக்கவில்லை, மீண்டும் மீண்டும் அழைத்தான் எடுக்கவே இல்லை.

இரவு முழுதும் மெசேஜில் அவளுக்கு சாரி சாரி என்று அனுப்பிக்கொண்டே இருந்தான் அவள் பதில் ஏதும் அனுப்பவே இல்லை, நாளைக்கு காலைல பத்து மணிக்குள்ள நீ வீட்டுக்கு வரணும் இல்ல, என்ன ஏதுன்னு மெசேஜ் இல்ல கால் வரணும் என்று அனுப்பிவிட்டு படுத்து விட்டான்.

அடுத்த நாள் காலை அவள் வருவாள் வருவாள் என்று வாசலையே பார்த்துக்கொண்டு இருந்தான் அவள் வரவே இல்லை அவளிடம் இருந்து போன் கூட வரவில்லை.

அதற்கு அடுத்த ஆனால் அவளின் வீட்டிற்கு கூரியரில் ஒரு லெட்டர் வந்தது, அதனை வாங்கி படித்தவள் கதறி கதறி அழுதாள் அவளின் அப்பா கதிரேசனுக்கு போன் செய்தார்.அவரின் குரலில் பதற்றம்..

"மாப்ளை என்ன மாப்ள இது டைவஸ் பன்னபோறேன்னு நோட்டீஸ் அனுப்பிருக்கீங்க அவ அழறா " அவரின் குரல் தழு தழுத்தது.

"மாமா பதற்றப்படாதீங்க, அவ பக்கத்துல இருந்தா கொஞ்சம் தனியா வாங்க"

"வந்துட்டேன் சொல்லுங்க மாப்ள"

அவன் அவரிடம் ஏதோ சொன்னான். அவர் சிறிது நேரத்திற்கு பின் சரி மாப்ள என்று போனை வைத்துவிட்டார்.

"அவரு எவ்வளவோ கெஞ்சுனாராம இனிமேல் இப்டி நடக்காதுன்னு நீ மதிக்கவே இல்லைன்னு செட் ஆகாதுன்னு டைவஸ் பண்ணியே ஆகனும் னு தான் நோட்டீஸ் அனுப்பிருகாரும்மா, நம்ம என்ன பண்ணமுடியும், கோர்ட் கேசு அழைய வேண்டியது தான்"

அதை கேட்ட ராகவி சப்தம் போட்டு அழுதாள், வேக வேகமாக ஓடி சென்று தனது ரூமில் இருந்த போனை தேடி கதிரேசனுக்கு அழைத்தாள் அவன் போனை எடுக்கவில்லை, மீண்டும் மீன்டும் அழைத்தாள் அவன் எடுக்கவே இல்லை.

"அப்பா வாங்கப்பா வீட்டுக்கு போலாம்" என்று அழைத்தாள்.

"இல்லம்மா நோட்டிஸ் அனுப்பினதும் நம்ம வீட்டுக்கு போய் உள்ள கூட விடாம போய்ட்டா அசிங்கம்" அவர் கூறிவிட்டு தனது ரூம்க்கு போனார் அவரின் பின்னாலேயே சென்றால் ராகவி.

"இல்லப்பா அவரு அப்படி எல்லாம் பண்ணமட்டாருப்பா அவரு அப்படிய பட்டவரு இல்ல"

"நேத்து தான் நான் பேசுனேன் அப்டி இருந்தும் இணைக்கு நோட்டீஸ் அனுப்பிருக்காருன்னா என்னமா"

அவள் ஏதும் சொல்லாமல் ரூம்குள் சென்று பெட்டில் அழுதுகொண்டே படுத்துவிட்டாள்.

வக்கில் ஆபிசுக்கு முன்னாடியே கதிரேசன் வந்து காத்துக்கொண்டு இருந்தான், வாசலில் ராகவி அவளின் அம்மா அப்பா மூவரும் வந்ததை பார்த்தவன் உள்ளே சென்றான்.

ராகவியின் அம்மாவும் அப்பாவும் வெளியில் அமர்ந்து கொண்டனர், ராகவியும் கதிரேசனும் வக்கில் ரூம்குள் சென்றனர்.

வக்கில் குமரன் தனது முன்னாள் இருந்த இரண்டு சேரில் கதிரேசனையும் ராகவியையும் அமர கூறினான்

"எல்லாம் ரெடி பண்ணிட்டேங்களா சார்" வக்கிலை பார்த்து கேட்டான் கதிரேசன். ராகவி கலங்கிய கண்களுடன் கதிரேசனை பார்த்தாள் அவன் அவளை பார்க்கவில்லை.

"இதுல சைன் பண்ணுங்க மேடம்" என்று ஒரு பேப்பரை ராகவி முன்னாள் நீட்டினார் வக்கில் குமரன்.

"இது என்ன"

"உங்களோட வாழ பிடிக்கலைன்னு டைவர்ஸ் கேட்டுருகாரு உங்க ஹஸ்பெண்ட் "

ராகவி கர்சிப்பால் கண்களை துடைத்துக்கொண்டாள்.

"எம்முன்னாடி சொல்லச் சொல்லுங்க "

என்று ராகவி சொன்ன அடுத்த நிமிடமே

"செட் ஆகாது சார், தெரியாம பண்ண ஒரு தப்புக்கு புருஷன் அவ்ளோ கெஞ்சியும் மதிக்கலேன்னா ஆகாது...ஆகாது"

"ராகவி தன் முன்னாள் இருந்த அந்த பேப்பரை கிழித்து எறிந்தாள், அவள் கோவத்தில் ஆக்ரோஷம் பொருந்தியவள் போல மாறினாள்.

கதிரேசனின் சட்டையை பிடித்து இழுத்தாள்,

"என்னால டைவர்ஸ் கொடுக்கமுடியாது, நான் உன்கூடத்தான் இருப்பேன், நீ எனக்கு வேணும்" அவள் சட்டையை பிடித்து அவனை குளுக்கினாள். சத்தம் கேட்டு ராகவியின் அம்மாவும் அப்பாவும் உள்ளே வந்தனர்.

"டேய் கதிர் போதும்டா தங்கச்சி ரொம்ப அழுகுது உம்மேல உயிரவே வச்சுருக்கு போல, அழ வைக்காத இனியும்"

வக்கில் பேச கண்களில் கோவத்துடனும் புரியாத ஒருவிதமான பார்வையுடனும் வக்கிலை பார்த்தால் ராகவி.

"இவன் என்னோட ஸ்கூல் பிரண்ட்மா, நேத்து வெளில பார்த்தேன் எதோ டல்லா இருந்தான் கேட்க நீங்க கோவுச்சுட்டு போய்ட்டேங்க சமாதானம் பண்ணவே முடிலன்னு சொல்லி சங்கடப்பட்டான், அதுதா நா வக்கில் எனக்கு தெருஞ்ச மாதிரி இந்த சின்ன டைவர்ஸ் நாடகம்" என்றான் வக்கில் குமரன்.

ராகவி முகம் சந்தோசத்திலும், கோவத்திலும் கலந்தது, மீண்டும் அவனின் சட்டையை பிடித்தாள், ராகவி அம்மா, அப்பா, கதிரேசன் எல்லாரும் திரு திருவென முழித்தனர்.

அவள் அவனின் தோழில் சாய்ந்துகொண்டு அழுதாள் சிரித்த முகத்துடன். அவன் சட்டை ஈரமாகியது.

Stories you will love

X
Please Wait ...