குழந்தை மனசு

பெண்மையக் கதைகள்
4 out of 5 (2 Ratings)
Share this story

சண்முகநாதன் பைக்கை வெளியில் எடுத்து ஸ்டார்ட் செய்தார்.
"பாப்பா ஒடியா போலாம்" என்று தனது மகளை அழைக்க அவள் சந்தோசம் திகழ ஓடிவந்து பைக்கின் பெட்ரோல் டேங்கிள் ஏறி அமர முயன்றாள், அவளுக்கு எட்டவில்லை, சண்முகநாதன் அவளை தூக்கி பைக் முன்னாள் அமரவைத்தார்.


"எப்போப்பா நானா ஏறி உட்கார முடியும்" செல்லமான சினுங்களுடன் கேட்க சண்முகநாதன் சிறிய சிரிப்புடன் அவளின் தலையை வருடியபடி " இன்னும் கொஞ்ச நாளுலம்மா" என்றார்.


பைக்கில் மகள் லட்சுமியை அழைத்துக்கொண்டு ரோட்டில் சென்றுகொண்டு இருந்தார். வேகமாக பைக் ஓட்டிக்கொண்டு இருந்தார். பைக் செல்லும் வேகத்தில் சண்முகநாதன் கண்ணில் இருந்து கண்ணீர் லட்சுமியின் முகத்தில் தெறித்தது, அவளுக்கு பைக்கில் வேகமாக செல்வதில் அவளின் காதையும் காற்று அடைத்தது.


"அப்பா மெதுவா போங்கப்பா எனக்கு பயமா இருக்கு"


"அது இன்னும் கொஞ்ச நேரத்துல ரயில்வே கேட் போட்டுருவாங்கடா அதுதான் வேகமா போறோம்"
சண்முகநாதன் சொல்லிமுடிக்கும் முன்பே
"ரயில நா இன்னும் நேர்ல பார்த்ததே இல்லப்பா என் ஸ்கூல் புக்ல தான் பாத்துருக்கேன்"
அவள் சொல்லியதும் அவரின் பைக் நடு ரோட்டை விட்டு சிறிது ஓரமாக சென்றது, பைக்கின் வேகம் குறைந்தது.


அவள் எப்பொழுதும் இது போல தான், பைக்கின் முன்பு உட்காந்து ரோட்டில் போகும் பொழுது உள்ள எல்லாத்தையும் அது என்ன இது என்ன என்று கேட்டுக்கொண்டே செல்வாள் அது அவளுக்கு பிடிக்கும் சண்முகநாதனுக்கும் பதில் சொல்லிக்கொண்டே வருவது பிடிக்கும்.


எந்த அப்பாவுக்குத்தான் மகளின் கேள்விக்கு பதில் சொல்லப் பிடிக்காது, அப்பாக்களின் கஷ்டங்களின் பொழுது அவர்கள் உட்கொள்ளும் மருந்தே மகள்களின் அன்பு தானே.


ஆனால் சண்முகநாதன் அடிக்கடி லட்சுமியை நினைத்து அழுவார், அவர் மட்டுமில்லை அவளின் அம்மாவும் தான்.
இருக்கும் வரை சந்தோசமாக பார்த்துக்கொள்ளவேண்டும் என்று இரண்டு பேரும் அவள் கேட்பதை செய்தனர்.


அவர்கள் சென்ற பைக் ரயில்வே கேட் போட்டவுடன் நடு ரோட்டில் நின்னது அவர்களை சுற்றி பல வாகனங்கள். லட்சுமி தங்களை சுற்றி உள்ள வாகனத்தை பைக்கின் முன்னாள் ஏறி அப்பாவை பிடித்துக்கொண்டு ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே இருந்தாள். கார், லாரி, பஸ், என்று நிறைய நின்னது அனைத்தையும் ஒரே இடத்தில் நின்னு பார்ப்பது அவளுக்கு புதியதாக இருந்தது.


சர்....... ரென்ற சப்தம் அவளின் காதை அடைய "அப்பா எப்போப்பா ரயில் வரும்" என்றால்.


"இதோ ஹாரன் போட்டுடாங்கல்ல இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துரும்"


"அப்பா நம்மலும் ஒரு நாள் ரயில்ல போலாம்ப்பா" என்றாள் அவரின் கன்னத்தை வருடிய வாரே.


"ம்.....போலாம், கண்டிப்பா நீ, நானு, அம்மா எல்லாரும் போலாம் ஒரு நாலு" அவர் சொல்லிமுடிக்கும் முன்பே அவருக்கு அந்த சம்பவம் நினைவில் வர வியர்க்க ஆரம்பித்தது.


லட்சுமிக்கு ஐந்து வயதாகிறது, அவள் அம்மாவின் வயிற்றில் இருக்கும் பொழுது நடந்த அந்த சம்பவம் அவருக்கு இப்பொழுது நினைவில் உதிக்க கொஞ்சம் மனது பத பதத்தது, பைக்கில் உட்காந்து காலை கீழே உண்டியிருந்தார் அவர் கால்கள் இரண்டும் நடுங்கியது, அது வண்டி எஞ்சின் வேகத்திற்கு நடுங்குவது போல சுற்றி உள்ளவர்கள் நினைத்திருக்கலாம்.லட்சுமி ரெயில் வரும் பாதையை பார்த்துக்கொண்டு இருந்தாள்.


அங்கே அவள் அருகில் வானத்து புளு கலரில் ஒரு குட்டி கார் நின்னுருந்தது அது அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது, அதன் பின்பக்க லைட் சிவப்பு கலரில் எரிந்து எரிந்து அமிந்தது அது அவளை அடிக்கடி பார்க்கவைத்தது, காருக்கு முன்னாள் இருந்து கைகளில் இரண்டு பிளாஸ்டிக் கவரில் கொய்யாப்பழம் கொண்டு வந்து காரின் கதவை தட்டி தட்டி விற்பனை செய்துகொண்டு இருந்தால் ஒரு நடுத்தர வயது பெண். அவளின் நெற்றியில் வியர்வை வழிந்துகொண்டு இருந்தது, ஒரு கையில் இருந்த கவரை மற்றொரு கைக்கு மாற்றி கொண்டு தனது சேலை முந்தானையை எடுத்து வியர்வையை துடைத்துவிட்டு உடனே காரின் கதவை தட்டினால் காரின் கதவு திறந்து ஒரு பை கொய்யாப்பழம் வாங்கிக்கொண்டு அவளிடம் காசு கொடுத்துவிட்டு கதவை மூடிக்கொண்டனர்.


"அப்பா அப்பா அந்த ஆண்ட்டி என்னப்பா பண்ணுறாங்க" கொய்யாப்பழம் விற்கும் பெண்ணை காட்டிக்கேட்டாள் லட்சுமி.


"அவங்க கொய்யாப்பழம் விக்கிறாங்கம்மா உனக்கு வேணுமா" அவள் வேணாம் என்பது போல தலையை ஆட்டினாள்.


"அவங்களுக்கு வெயில் அடிக்குமல்லப்பா பாவமில்ல" அவள் கேட்டுவிட்டு தனது உதட்டை பிதுக்கி ஒரு மாதிரி வைத்துக்கொள்ள தனது மகளின் மனசை பார்த்து பெருமைகொண்டார் சண்முகநாதன்.


"நா பெருசாகி வேலைக்கு போய் அப்புறம் இந்த ஆண்ட்டிக்கு ஒரு கொட வாங்கிகொடுக்கட்டாப்பா" என்றவளின் கன்னத்தை பிடித்துசெல்லமாக கிள்ளினாள் அருகே இருந்த பைக்கில் உட்காந்து இவள் பேச்சை கவனித்துக்கொண்டு இருந்த ஒருவள்.


சிறிது வயதான ஒரு ஆள், நீண்ட நாளாக முடி வெட்டாமல், கருப்பும் வெள்ளையும் கலந்த முடியுடன், சட்டை எங்கும் அழுக்கு படிந்து கண்கள் எல்லாம் உள்ளே போயிருந்தது அது அவர் சாப்பிட்டு பல நாட்கள் ஆனதை காட்டியது.
ஒவ்வொருவரிடமும் கையை நீட்டி காசு கேட்டுகொண்டு வந்தார்.சிலர் சில்லறை காசுகளை அவரிடம் கொடுத்தனர், சிலர் அவரை பார்த்ததும் அந்த பக்கம் திரும்பிகொண்டனர், சிலர் காதுகளில் ஹெட்போனை எடுத்து மாட்டி அவரை கண்டுகொள்ளாதவாரு மாறினர்.


அவர் தங்கள் பக்கம் வருவதை கவனித்த சண்முகநாதன் தனது பாக்கெட்டில் இருந்து பத்து ரூபாய் எடுத்து லட்சுமியிடம் கொடுத்தார், அதை அவர் தங்கள் பக்கம் வந்ததும் அவரிடம் கொடுத்துவிடுமாறு கூறினார்.அவளும் காசை கையில் கெட்டியாக பிடித்து கொண்டு அவர் வருவதை கவனித்துக்கொன்டு இருந்தாள்.


அவர் அவர்கள் பக்கம் வந்ததும் ரயில் வர லேட் ஆகும் என்பதனால் கேட் திறக்கப்பட்டது உடனே அங்கே இருந்த வண்டிகள் எல்லாம் வேகம் எடுக்க அவர்கள் முன்னே சென்ற பைக் அந்த மனிதனை இடித்து கீழே தள்ளியது, பின்னே சென்ற இன்னொரு வண்டி அவரின் மீது ஏறி இறங்கியது ஒரு சிலர் நின்னு பார்த்தார்கள் யாரும் தனது வண்டியை விட்டு இறங்கவில்லை.


"அப்பா அப்பா " என்று கத்தினாள் லட்சுமி பயத்தில் அவள் கைகள் காதுகளை மூடியிருந்தது.


சண்முகநாதன் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு லட்சுமியை பைக் பக்கமே நிற்க சொல்லிவிட்டு அவரை சென்று கை பிடித்துதூக்கி வந்து தனது பைக்கின் அருகில் உட்கார வைத்தார். ரோட்டு ஓரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்றுக்கொண்டு இருந்த ஒரு அக்கா தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்துகொடுத்தாள். சண்முகநாதன் அதை வாங்கி அவரிடம் கொடுத்துக்குடிக்க வைத்தார்., சிறிது நேரத்திற்கு பிறகு அவரிடம் பேசினார்.


"யாருங்க நீங்க, பெரிய வண்டி ஏதும் மேல ஏறிருந்த என்ன பண்ணுவீங்க"
அவர் ஏதும் பேசவில்லை.


"உடம்பு நல்லா இருக்கா ஆஸ்பிட்டல் போலாம்கலா"


"இல்ல....வேணாம்...பரவாயில்லை" வார்த்தைகள் மெதுவாக வந்தது.


"சரி உங்க வீடு எங்க இருக்குன்னு சொல்லுங்க கொண்டு போய் விட்டுருறேன்"


"எனக்கு யாருமில்லைங்க நான் ஒரு அனாதை"
சண்முகநாதனுக்கு குரல் வரவில்லை.


"சரி எங்க வீடு பக்கத்துல தான் இருக்கு, இணைக்கு ஒரு நாள் அங்க இருங்க நாளைக்கு எனக்கு தெருஞ்ச ஒரு ஹோம் இருக்கு அங்க உங்கள கொண்டு போய் விடுறேன்"


"இல்லங்க பரவாயில்லை உங்களுக்கு எதுக்கு சிரமம்" அவர் குரல் வராமல் மிகவும் கஷ்டப்பட்டு பேசினார்.


"பாப்பா இவர இணைக்கு மட்டும் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போலாமாடா" லட்சுமியிடம் கேட்க அவள் பிரமிப்பு பிடித்தவள் போல அவரவே பார்த்துகொண்டு "சரி" என்பதை போல தலையை ஆட்டினாள்.


சண்முகநாதன் பைக் அவரையும் ஏற்றிக்கொண்டு அவரின் வீட்டு முன்பு வந்துநின்னது, லட்சுமி வேக வேகமாக பைக்கை விட்டு இறங்கி வீட்டிற்குள் அவளின் அம்மாவை அழைக்க சென்றாள்.


சண்முகநாதன் அவரை கைத்தாங்களாக அழைத்துக்கொண்டு வீட்டிற்கு உள்ளே சென்றார். வீட்டின் ஹாலில் சணமுகநாதன் அவரின் மனைவி லட்சுமி ஆகிய மூன்று பேரும் இருக்கும் போட்டோ பெரிதாக அவரை வரவேற்றது. அந்த போட்டோவை கண்டதும் அவர் வீட்டிற்குள் வர தயங்கினார்,


ஆறு வருடத்திற்கு முன்பு நடந்த அந்த சம்பவம் அவரின் மனதில் காட்சியாக ஓடியது, அவரின் மனது பத பதைத்தது. அவரால் பேசமுடியவில்லை. பசி காதை அடைத்தது, வார்த்தைகளை தடுத்தது. கைகை அந்த போட்டோவில் நேர் நீட்டினார்.சண்முகநாதன் அதை புரிந்துகொண்டு அது எங்க பேமிலி போட்டோ அதுதா என் மனைவி என்று கூறினார்.


மீண்டும் ஒரு முறை அந்த சம்பவம் அவருக்கு மனதில் ஓடியது.


"பொன்னி... பொன்னி....." என்று சண்முகநாதன் தனது மனைவியை அழைத்தார்.


"இதுல உக்காருங்க" என்று சேரில் அவரை உட்கார வைத்தார் சண்முகநாதன்.


"இதோ வரங்க" என்ற சப்தத்துடன் வந்தவள் அந்த மனிதனை கண்டதும் எங்கோ பார்த்த நினைவு வர சற்று அங்கையே நின்னிவிட்டாள். மெதுவாக அவரின் முகத்தவே பார்த்துகொண்டு வந்தாள். அவர் அவரின் முகத்தை காட்டாமல் தரையவே பார்த்துகொன்டு இருந்தார்.


"பொன்னி....இவரு........"சண்முகநாதன் அவளிடம் சொல்ல வரும் பொழுது "பாப்பா எல்லாம் சொல்லிட்டாங்க, எவ்ளோ நாள் வேணாலும் தங்கட்டும்" என்றால். ஆனால் அவள் சண்முகநாதன் முகத்தை பார்க்கவே இல்லை, அந்த ஆளின் முகம் தான் அவளின் பார்வையில் இருந்தது.


அவர் முகத்தை தூக்கி பொன்னியை பார்த்தார். பொன்னிக்கு பிரஷர் ஏறுவதை போல இருந்தது, அவளின் கை, கால் நடுங்கியது. அதே கண்கள் முட்டை சைசில், மூக்கின் மீது வெட்டுப்பட்ட தழும்பு அவளுக்கு இன்னும் மறக்கவே இல்லை.


லட்சுமி பொன்னியின் வயிற்றில் இருக்கும் பொழுது சண்முகநாதனும் பொன்னியும் பைக்கில் சென்றுகொண்டு இருந்தனர், சிறிது தூரத்தில் தான் ரயில்வே கேட், ரயில் வருவதற்கான ஹாரன் அடிக்கும் சப்தம் கேட்டது, அதற்கு முன்பு கொஞ்ச தூரத்தில் யாரும் இருக்கமாட்டார்கள் அது விபத்து அடிக்கடி நடக்கும் இடம், அங்கே ஒரு ஒரு பெட்டிகடை தூரத்தில் இருந்து வருகிறவர்கள் நின்னு ஏதேனும் வாங்கிச்செல்வார்கள்.


சண்முகநாதன் பொன்னி சென்ற பைக்கிற்கு பின்னால் ஒரு லாரி வந்தது அதில் ஹாரன் அடிக்கவில்லை ரயில் ஹாரன் சப்தத்தில் லாரியின் சப்தம் கேட்காமல் செல்ல பின்னால் வந்த லாரி அவர்களின் பைக்கை இடித்துவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. சண்முகநாதன் ரோட்டிலேயே மயங்கிவிட்டார், பொன்னி ஓரமாக தூக்கி வீசாப்பட்டாள், ரோட்டில் யாரும் வரவில்லை.


பெட்டிக்கடையில் இருந்து ஓடி வந்தார் ஒருவர், அவரின் கையில் ஒரு வாட்டர்க்கேன் இருந்தது.சண்முகநாதனை பார்த்தவர் பொன்னியின் பக்கம் பார்வையை திருப்பினார், அவள் விழுந்து எழ முடியாமல் கத்திக்கொண்டு இருந்தாள், அவளின் கழுத்தில் கிடந்த மயில் போட்ட நெக்லஸ் அவளின் கழுத்தை குத்திக்கொண்டு இருந்தது, மற்றொரு நெக்லஸ் அறுந்து அவள் வயிற்றின் மீது கிடந்தது.


லட்சுமி பிறக்கும் முன்பே குழந்தையின் இதயம் சரியாக செயல்படவில்லை பிறந்ததும் அபிரேசன் செய்யவேண்டு இருக்கும் இல்லனா வளர வளர பாதிப்பு ஆகும் என்று டாக்டர் கூறி இருந்தார்கள். அவளின் மருத்துவ செலவுக்காக அந்த நெக்ளஸை பார்த்து பார்த்து வைத்துருந்தால்.


அந்த ஆள் கையில் இருந்த தண்ணீர் கேனை கீழே போட்டுவிட்டு அவளின் கழுத்தில் ஒரு காலை வைத்தார், அவள் மயங்கிவிட்டாள், அவளது நெக்லஸை எடுத்து வேட்டிக்குள் மறைந்து வைத்துக்கொண்டார். வேற ஏதோ வண்டி வரும் சப்தம் கேட்டு வாட்டர் கேனை கையில் எடுத்துக்கொண்டார். வேற வண்டி வந்ததும் அவர்கள் உதவியுடன் சண்முகநாதனையும் பொன்னியையும் ஆஸ்பிட்டலுக்கு அனுப்பிவைத்தார் அந்த ஆள்.


தனக்கு எதிரே உட்காந்திருக்கும் ஆளை பொன்னிக்கி நன்கு அடையாளம் தெரிந்தது.


எத்தனை வருடம் ஆனாலும் நம்மால் பாதிக்கப்பட்டவர்களின் முகமும், நம்மை பாதிப்புக்கு ஏற்படுத்தினவர்களின் முகமும் நமக்கு மறக்கவே மறக்காது.


அந்த ஆளின் முட்டை சைஸ் கண்களையும் , வெட்டு விழுந்த மூக்கின் தழும்பு அடையாளத்தையும் மற்றொரு முறை பார்த்தாள். அந்த ஆள் எழுந்திருக்க முடியாமல் எழுந்து செல்ல முயன்றார். அவளின் கண்கள் கோவத்தில் சிவப்பு பெயிண்ட் போல மாறியது. பற்கள் கடிக்கும் சப்தம் கேட்டு சண்முகநாதன் அவளின் முகத்தை பார்த்தார்.


"உட்காரு.........."


அவள் அவரை பார்த்து கத்தியதை கவனித்த சண்முகநாதன் "பொன்னி" என்றவரை அமைதி என்பதை போல கையை காட்டிவிட்டு அந்த ஆளின் அருகே சென்றாள்.


"இங்க யார கொண்டு போட்டுட்டு எத பறிக்க வந்த" பொன்னி ஆக்ரோஷத்தில் கத்தினாள்


"நீ என் கழுத்துல கால வச்சு மீதுச்ச அப்போ உன் கண்ணும் மூக்குல வெட்டுன தழும்பும் அப்படியே மனசுக்குள்ள பதுஞ்சுருச்சு" பொன்னி கைகளால் அவரை அடித்து கொண்டு விடுவது போன்ற சைகைகளுடன் கத்திக்கொண்டு இருந்தாள்.


"யாரு பொன்னி இவரு, உனக்கு தெரியுமா" சண்முகநாதன் கேட்டார்.


"பாப்பா வயித்துல இருக்க அப்போ ரயில்வே கேட்டுக்கு முன்னாடி நமக்கு ஆக்சிடெண்ட் ஆச்சுங்கள்ள அப்போ ஒருந்தன் என் கழுத்துல கெடந்த நகையை அருத்துட்டு போனானல்ல அது இவன்தான்"


சண்முகநாதன் முகம் கோவத்தில் கொதித்தது, "அடப்பாவி" இவ்ளோ கல்மனசுக்காரன் உன்னையவாடா வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்துருக்கேன், எப்படிடா வயித்துபுள்ளக்காரி உயிருக்கு போராடிட்டு இருக்கும் பொழுது அவ போட்டுருக்க நகையை அறுக்க மனசு வந்தது, பொறக்க போற எங்க புள்ள ஆஸ்பத்திரி செலவுக்கு வசிச்சுருங்ததுடா அது, அது இல்லாத நாள இப்போ எம்பொன்னு இன்னைக்கோ நாளைக்கொன்னு நாள எண்ணிட்டு இருக்குடா" என்ற சண்முகநாதன் முகத்தில் கோவமும் கண்களில் கண்ணீரும் வந்தது.


"அய்யா என்ன மனுச்சுருங்க" என்று அந்த ஆள் சண்முகநாதன், பொன்னியின் காலில் ஒரு சேர விழுந்தார்.


"உங்ககிட்ட இருந்து எடுத்து நகையை வித்து கொஞ்சம் செழிப்பா இருந்தோம் ஒரு நாலு வண்டில குடும்பத்தோட போகும் போது உங்களுக்கு நடந்த மாதிரியே ஒரு ஆக்சிடெண்ட் அதுல என் குடும்பமே போயிருச்சு, உங்க பாவம்தா என்ன மட்டும் இப்படி சோறு தண்ணி இல்லாம பிச்ச எடுக்க வச்சுற்கு"


அவரின் கண்ணீர் தரையை ஈரமாக்கியது, மெல்ல எழுந்து கீழேயே உட்காந்தார் அந்த ஆளு, உள்ளே இருந்து சாப்பாட்டு தட்டுடன் வந்தால் லட்சுமி.


"இந்தாங்க அங்கிள் சாப்புடுங்க" என்று தனது மழலை குரலில் சாப்பாட்டை அவரின் முன்பு நீட்டுனால், அவர் பொன்னியின் முகத்தை பார்த்தார். அவள் தனது மகளுக்கு தெரியக்கூடாது என்று தனது கண்களை துடைத்துக்கொண்டாள்.


"அப்பா அங்கிளை சாப்பிட சொல்லுங்க" என்றால் லட்சுமி, சண்முகநாதன் பொன்னியின் முகத்தை பார்த்தார்.


"கொழந்தை கையால கொடுக்குற சாப்பாடு நம்பி சாப்பிடு" என்பதை போல பொன்னி அந்த ஆளின் முகத்தை பார்க்க


அவர் சாப்பாட்டை பிசைந்தார்.

Stories you will love

X
Please Wait ...