என்ன மாயம் செய்தாய்

காதல்
4.8 out of 5 (186 Ratings)
Share this story

அன்று என்றும்போல் அன்பு தன் கூட்டாளிகளை கூட்டிகொண்டு அவனது பல்சர் பைக்கில் சென்று கொண்டிருந்தான். பேருந்து நிலையத்தில் தங்களது முதல் பணியை ஆரம்பிக்க காத்து கொண்டிருந்தனர். அந்நேரம் சரியாக ஒரு பேருந்து வந்தது.. அவனின் நண்பர்களோடு சேர்ந்து அப்பேருந்தில் இருக்கும் பெண்களை சைட் அடிக்க ஆரம்பித்தார்கள். அன்பு அப்படி பார்த்து வருகையில் முன் சீட்டில் உட்காந்திருந்த பெண்ணை விழி எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான்..
அன்பு தாய்க்குச் செல்லப்பிள்ளை. கண்டிக்காமல் வளரும் பிள்ளைக்கான அத்தனை அம்சமும் அம்சமாய் பொருந்திருக்கும் கட்டிலங்காளை. வேலைவெட்டிக்கு செல்லாமல் தன் தாத்தா மற்றும் தந்தை சேர்த்து வைத்த சொத்தை ஆளவே பிறந்தவன் நான் என்று சுற்றி கொண்டு திரிகிறான். ஆனாலும் பெண்களிடம் சைட் அடிப்பத்தோட நிறுத்திக் கொள்ளும் கொஞ்சமே கொஞ்சம் நல்லவன். அவன் தந்தை எவ்வளவு சொல்லியும் உழைக்காமல் சுற்றி வருகிறான். அவர்களுக்கு சொந்தமாக வயல்களும் ரெண்டு அரிசி ஆலைகளும் உண்டு. அன்பு விளையாட்டு பிள்ளையானாலும் படிப்பில் சுட்டியாகத்தான் இருந்தான். பட்டபடிப்பில் நல்லா மதிப்பெண்களோடு வந்தவனை அரிசி ஆலையை கையில் எடுத்துக்கச் சொல்லி அவன் தந்தை கூற அவன் அதையெல்லாம் கேட்காமல் ஊர் சுற்றுகிறான். இப்பொழுது அவன் பார்த்து அசந்து கொண்டிருந்த பெண்ணை பார்க்கலாம்

பேரழகி என்றில்லாமல் பார்த்ததும் காந்தமாய் ஈர்க்கும் விழிகள் செதுக்கி செய்தனைவோ என்று நினைக்கவைக்கும் இதழ்கள் திராவிட நிறமானாலும் அழகுதான்."என்ன மச்சி அந்த பச்சை கிளியவே பார்த்துட்டு இருக்க பார்த்துடா திடீர்னு வெள்ளம் வந்துரப்போகுது " என்றான் அன்புவின் நண்பன் கதிர். அவன் சொல்லில் சுயம் வந்தவன் "என்னடா உளறிட்டு இருக்க " என்று கேட்டான். "கொஞ்சம் உன் உதடு பக்கம் பாரு ராசா வழியுது " என்றான் கதிர். " அவளோ ஓபனா சைட் அடிச்சிருக்கோம்" என்று வழிந்து கொண்டே பைக்கில் வீடு சென்றான்.
இன்று நேரமே வீடு வந்து சேர்ந்த மகனை கண்டு ஏதும் பிரச்சனையோ என்று எண்ணி அவனது தாய் வேணி " என்னய்யா ஆச்சு இவளோ சீக்கிரம் வீடு வந்துட்ட" என்றார்.. அவரிடம் பதில் ஏதும் சொல்லாமல் தன் அறைக்கு சென்றான். அவனது நடவடிக்கையை பார்த்து பயந்த வேணி தன் கணவருக்கு அழைத்து விஷயம் சொல்ல அவர் மதியம் வந்து பார்ப்பதாகவும் அதுவரை அவனை தொல்லை செய்ய வேண்டாம் என்றுவிட்டார்.. அவர் எங்கு இருந்தாலும் தன் மகனை கண்காணித்து கொண்டிருப்பார். இன்றும் அவருக்கு முழு செய்தி அடைந்ததால்தான் இந்த அமைதி.
அறைக்கு சென்ற அன்புவின் மனது முழுவதும் அவளே இருந்தாள்.அவளை பற்றி எதுவும் தெரியாவிடினும் தன்னவளாக எண்ணி பார்த்து சிரித்து கொண்டிருந்தான்.எவ்வளவு நேரம் அப்படி இருந்தானோ அப்படியே உறங்கியும் போனான்.. மதியம் அவன் அன்னை வந்து சாப்பிட எழுப்பி சென்றார். தன் தந்தை கேட்டதுக்கு கூட வெயில் அதிகம் இருந்ததால் சீக்கிரம் வந்து விட்டதாக மார்கழி மாசத்தில் சொல்லி சென்றான். அவன் உளறிவிட்டு போவதையே உதட்டுக்குள் மறைந்த சிரிப்போடு சாப்பிட்டுவிட்டு வயலுக்கு சென்றார். அவன் அன்னையும் புரிந்து கொண்டு சந்தோசம் கொண்டார். இருந்தும் தன் மகன் வெட்டியாய் சுற்றுவதையும் எண்ணி கவலையானர்.
இப்படியே ஒரு மாதம் சென்றது. இந்த ஒரு மாதத்தில் அவளை பற்றிய அனைத்து விவரங்களையும் சேர்த்திருந்தான்.. அவள் இளமதி. மிக பிரசத்தி பெற்ற தனியார் துணி ஆலையில் ஆடிட்டராக வேலை செய்கிறாள். பெற்றோர் இல்லாது ஆசிரமத்தில் வளர்ந்தவள். தன் சம்பளத்தில் பாதியை ஆசிரமத்திற்கு கொடுத்து வருகிறாள். அவளின் விவரங்களோடு இவனின் விவரங்களையும் ஒருவன் சேர்த்து கொண்டிருக்கிறான் . அவனால் அன்புவின் காதல் கைக்கூடுமா கைவிட்டுசெல்லுமா
அன்று அவளது ஹாஸ்டலுக்கு செல்லும் வழியில் அவளுக்காக காத்திருந்தான் அன்பு.. அவள் வரவும் அவளிடம் சென்று " மதி, உங்களுக்கு என்னை தெரியாது ஆனா உங்கள ஒரு மாசமா பார்த்துட்டு வரேன். என்னிக்கு உங்கள பார்த்தேனோ அப்ப இருந்து உங்கள கைக்குள்ள வச்சு பொத்தி பாதுகாத்துக்கணும் போல இருக்கு. உங்களோட ஆசை கனவுனு எல்லாமே நான் முன்னாடி நின்னு செய்யணும்னு ஆசைப்படுறேன்.. உங்கள விட்டு என்னால இருக்க முடியுமானு யோசிச்சு பார்த்தேன் எவ்ளோ யோசிச்சாலும் ஒரே முடிவு தான் வருது அது உங்கள விட்டுட்டு என்னால இருக்க முடியாது.. உங்கள நல்லா பாத்துக்குவேன்.நாம கல்யாணம் பண்ணிக்கலாமா ?" என்று கேட்டான்.
அவன் கூறுவதையே பொறுமையோடும் கண்ணுக்கு நேராகவும் பார்த்து அவனது சொற்களை வாங்கிகொண்டவள், " நீங்க என்ன வேலை பாக்குறீங்க " என்று கேட்டாள் . அவளது முதல் கேள்வியே அவனை தலை குனிய செய்ய ஏதும் பேசாது அமைதியாய் இருந்தான்.. அவனது அமைதிலையே புரிந்து கொண்டவள், " என் கேள்வி அவளோ கஷ்டம் இல்லை ஆனாலும் உங்கட்ட பதில் இல்லை. இப்ப அப்பா சாப்பாடு போடுறாங்க ஓகே.. கல்யாணத்துக்கு அப்றம் நான் சாப்பாடு போடுறேன். அப்ப எப்படி என்னோட கனவு ஆசையெல்லாம் நிறைவேத்துவீங்க? ஒரு மாசமா என்ன வாட்ச் பண்ற உங்களுக்கு என்ன பத்தி எல்லாம் தெரிஞ்சிற்கும். ஆசிரமத்தில வளர்ந்த எனக்கு நிறையாவே ஆசைகள் உண்டு. சின்ன ஆசையாவே இருந்தாலும் அதை எல்லாமே உங்களோட சம்பாத்தியத்துல பண்றதா இருந்தா மட்டும்தான் என்னல ஏத்துக்க முடியும். முதல நீங்க ஸ்டெடியா நில்லுங்க. அப்பவும் உங்களுக்கு என்மேல லவ் இருந்த கல்யாணம் பண்ணிக்காலம் " என்றாள்.
அன்பு, " அப்ப காசு இருந்தாதான் மதிப்பீங்க அப்டித்தானே " என்று கேட்டான். அதற்கு அவள்," இல்லை அன்பு நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க. எனக்கு தேவை உங்க காசு இல்லை அது என்னால சம்பாதிக்க முடியும் இருக்கிறது போதும்னு என்னால வாழவும் முடியும்.. எனக்கு தேவை என் புருஷனோட மரியாதை. உத்யோகம் புருஷ லட்சணம்னு சொல்லுவாங்க அத தான் நான் சொன்னேன்.. வேலைக்கு போங்க அப்பவும் என்ன பிடிச்சிருந்தா கட்டிக்கலாம் " என்றுவிட்டு சென்றாள்.
அவர்கள் பேசினதை ஒருவன் யாரும் அறியாது போனில் படம் பிடித்து ஒருவனுக்கு அனுப்பினான்.
அடுத்து வந்த நாட்களில் அன்பு மதியை பார்க்க செல்லவில்லை. அவன் வரவை எதிர்பார்த்து அவள் ஏமாந்துதான் போனாள். அன்பு அவளை பார்ப்பதற்கு முன்பே மதி அவனை பார்க்க ஆரம்பித்துவிட்டாள். கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவனை பார்க்கிறாள். அவனுக்கு முன்பாகவே அவள் அன்புவை விரும்பினாள். ஆனாலும் அவனின் ஊதாறித்தனத்தை அரவே வெறுத்தாள் எனலாம்.. அதற்காகவே இப்படி பேசியது ஆனால் இப்படி பார்க்கவே வராமல் போவான்னு அவள் கனவிலும் நினைக்கவில்லை.. இருந்தும் ரியாலிட்டியை ஏத்துக்கொள்ள பழகிக்கொண்டாள்.. அவனை நினைத்தே வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என எண்ணினாள்.. பாவம் பாவையவள் அறியவில்லை அவள் எண்ணியதை அடைய ஒருவன் விடப்போவது இல்லையென்று. இவ்வாறாக ஆறு மாதம் சென்றது..
அன்று அன்பு மதியை காண பேருந்து நிறுத்தத்திற்கு வந்திருந்தான்.. எப்போதும்போல் அதே பேருந்தில் முன்னிருக்கையில் மதி இருந்தாள்.. ஆனால் முற்றிலும் வேறு விதமாக.. அழுது அழுது கண்ணங்கள் சிவந்து தூங்கவே இல்லை என்பதற்கு கண்ணிற்கு கீழ் கருவளையங்கள் அழுகையை உதடு கடித்து கட்டுப்படுத்தி கீழே பார்த்துக்கொண்டிருந்தாள். ஏதோ தோன்ற நிமிர்ந்துந்தவளுக்கு கண்களில் கண்ணீர் மறைக்க அன்புவை பார்த்தவள் நொடியும் தாமதிக்காது அவனிடம் சரணடைந்தாள்.
அவள் அழுது முடிக்கும்வரை அமைதியாய் இருந்தவள் அவனிடம் இருந்து விலகி விசும்பி கொண்டிருந்தாள்.. வெளி இடத்தில் வைத்து பேசுவது சரி இருக்காது என்றெண்ணி அருகில் இருக்கும் ஒரு காபி ஷாப்பிற்குள் வந்தனர்.. இவருவருக்கும் இரண்டு காபியை ஆர்டர் செய்தான்.. அவள் நிமிர்ந்து பார்க்கவும், " கவலை படாத நான் சம்பாதிச்சதுல தான் வாங்குறேன் ", என்றான்.. அந்த அழுகையிலும் அவள் கிளுக்கி சிரித்தாள்.
காபி வரவும் அவள் குடித்து முடிக்கும்வரை அமைதியாய் இருந்தான். குடித்து முடிக்கவும் அவளே ஆரம்பித்தாள். மூன்று மாதங்களுக்கு முன் அவளுடைய ஆசிரமத்தின் நிர்வாகி சுமதி அவளுக்கு அழைத்து உடனே அங்கு வருமாறு பணித்தார்.. அவளும் தன் வேலையில் அரைநாள் விடுப்பு சொல்லிவிட்டு விரைந்தாள்.. சுமதி அங்குள்ள அனைவர்க்கும் தாய்ப்போன்றவர். தேவை இல்லாமல் அழைக்கமாட்டார். இப்பொழுது அவர் அழைக்கவே விடுப்பு எடுத்து சென்றாள். அங்கு சென்றவள் கண்டது தனது ஆலையின் உரிமையாளர் நாற்பத்தைந்து வயதுடைய திரு. ராஜமாணிக்கத்தை.. அவரை பற்றி அவள் அறிந்த விஷயம் ஏதும் சரியானதாக இருந்தது இல்லை.. பெண்களிடம் முறை தவறி நடக்காத நாட்களில்லை எனலாம்.. அப்படிபட்டவர் இங்க எப்படி என்று யோசித்துகொன்டே உள்ளே வந்தாள்.
அதிகம் யோசிக்காமல் ராஜாமணிக்கமே பேசினார்." இளமதி உனக்கு என்னை பத்தின விவரம் தெரிஞ்சிருகும்னு நினைக்கிறன். அது எதுமே பொய் இல்லை. ஆனா என்ன பண்றது எனக்குனு ஒரு வாரிசு இல்லையே . இவளோ நாள் கல்யாணம் பண்ணாம என் ஆசைப்படி வாழ்ந்தாலும் என்னை தொழில அடிச்சுக்க முடியாது.. இப்ப எனக்கு வாரிசு தேவைபடுது.. என் சொத்த அனுபவிக்க வாரிசு வேணும் இல்லையா அதான் உன்ன செலக்ட் பண்ணிருக்கேன். நீ ஏதாச்சும் முடியாது அது இதுனு சொன்ன இந்த ஆசிரமத்தை ஒன்னும் இல்லாம ஆக்கிருவேன்.. எல்லாமே உன் கையில.. யாரையாச்சும் லவ் பண்ணினா அவனுக்கும் இதே நிலமைதான்.. ரெண்டு நாள் டைம் தரேன் அதுக்குள்ள யோசி.. உன்னோட பதில் ஆமானு மட்டும் தான் இருக்கனும்.. அப்பறம் உனக்கு அன்புனு ஒரு காதலன் இருக்கான்ல. அவன் இப்ப ஏதோ ரைஸ்மில்ல மெஷின் பக்கத்துல நின்னுட்டு இருக்கான் அப்டியே அவனை முடிக்கிறதா என்னனு நீயே யோசிச்சு சொல்லு.. இப்ப சரி சொல்லிட்டு கல்யாணத்தப்போ விஷம் குடிக்கலாம்னு ட்ராமா ஏதாச்சும் பிளான் பண்ணின நம்ம கல்யாணத்துல இருந்துதான் இங்க சாப்பாடு வரும் அதுல நீ குடிச்சதையே கலந்திருவேன்.. " என்று அலுங்காமல் மிரட்டிவிட்டே சென்றான். ராஜாமணிக்கம் சிறுவயதிலே தாய் தந்தை இழந்து ஒரு ரவுடியின் வளர்ப்பில் வளர்ந்தவன்.. சொந்தம் என்று எதுவும் இல்லாமல் சுயம்பாய் வளர்ந்து நிற்பவன். அவனை எதிர்த்தால் உயிர் இருக்காது என்று அவள் அறிந்ததே.. அதையே அவன் வாய்மொழியால் கேட்கவும் சர்வமும் அடங்கிப்போய் நின்றாள். அன்று மாலை ராஜாமணிக்கம் அவளுக்கு அழைத்து தான் வேலை விஷயமாக வெளியூர் செல்வதாகவும் இரண்டு நாளில் முடிவை சொல்லுபடியும் கூறிவிட்டு வைத்தான். இரண்டு நாள் கழித்து அவள் சொல்லும் முன்னே அவளுக்கு அழைத்து தான் வர மூன்று மாதகாலம் ஆகுமென்றும் அதற்குள் ஏதாவது கொளறுபடி செய்ய நினைத்தால் அவளுக்கு வேண்டியவர்கள் யோசிக்காமல் தீர்த்துக்கட்ட கட்டளை விட்டுவிட்டதாகவும் சொல்லி வைத்தான்.. அன்றிலிருந்து அழுது கரைகிறாள். தன்னை காட்க எவரேனும் வரமாட்டாராகளா என்று எண்ணி கரைகிறாள்.. அன்பும் அவளை வந்து சந்திக்காததால் தனக்கான எல்லா வழிகளும் அடைத்ததுபோல் எண்ணினாள். சாகவும் வழியில்லாமல் சுற்றுக்கிறாள்.
அனைத்தையும் சொல்லிவிட்டு அன்பு முகத்தை அவள் பார்க்க, " அவன் வர இன்னும் எவளோ நாள் ஆகும்?", என்று கேட்டான். தன்னை கண்டிப்பாக அன்பு காப்பான் என்ற எண்ணத்தில், " இன்னும் ஒரு வாரத்தில் அவன் சொன்ன மூன்றுமாதம் முடிகிறது. இப்பொழுது கூட உங்ககூட பேசுறது இந்நேரம் அவனுக்கு தெரிந்திருக்கும் . என்னால் நீங்க பிரச்னைல சிக்கவேண்டாம்." என்றாள். அவனும் அவள் சொல்லுவதை ஆமோதிப்பதுபோல், " நீங்க சொல்றதும் சரிதான். நீங்க சொன்ன மாதிரி நான் வேலைக்கு போகவும் யோசிச்சு பார்த்தேன் அப்ப எனக்கான தேடல் வேற னு தோணுச்சு நானும் என் அத்தை பொண்ண கல்யாணம் பண்ணிக்கப்போறேன்.. அடுத்த வாரம் ரெஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம் அவளுக்கு பிரிண்ட்ஸ் யாருமில்ல. அவளுக்கு சப்போர்ட் பண்ணி நீங்க தான் சாட்சி கையெழுத்து போடணும். அதை சொல்லிட்டுப் போகதான் வந்தேன் " என்று அவள் தலையில் பெரிய இடியை இறக்கினான்.. இருந்த ஒரு வழியும் அடைத்த உணர்வில் கண்ணிலிருந்து தண்ணீர் வந்துகொன்டே இருந்தது.. அன்பு , " கவலைப்படாதீங்க உங்கள இதுல இருந்து வெளில கொண்டுவர என்னால முடிஞ்ச எல்லா உதவியும் நான் பண்றேன் " எனவும், "இல்லங்க வேண்டாம் என்னால உங்களுக்கு பிரச்சனை வேண்டாம்.. நீங்க உங்க மனைவியோட சந்தோசமா இருங்க " என்றுவிட்டு கிளம்ப ஆயத்தமனாள். " சாட்சி கையெழுத்து போட வந்துருவீங்களா " என்று சத்தமாக அங்கிருக்கும் அனைவர்க்கும் கேட்கும்படி கத்திக்கேட்டான். அவள் வருவதாக சொல்லிவிட்டு சென்றாள். நடைபிணமாக..
அன்று இரவு ராஜமாணிக்கம் அவளுக்கு அழைத்து, " உன்னுடைய காதலனுக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன்.. நான்கூட ஒரு கொலை பண்ணவேண்டியது வருமோனு நினச்சேன். நல்லவேளை பய தப்புச்சுட்டான்.. அப்ப இனி நமக்கு நடுலவர யாருமில்லை டார்லிங்.. இன்னும் ரெண்டு நாளுல நான் வந்துருவேன்.. வரவும் சேர்ந்தேபோய் கல்யாணத்த முடிச்சுட்டு வரலாம் ".
அவள் தன் நிலைமையை எண்ணி அழுது கரைந்துகொண்டு உயிரைமட்டும் தன் உடலில் விட்டுவைத்திருந்தாள். அன்பு சொன்ன அந்த நாளும் வந்தது.. காலையில் ராஜாமணிக்கம் வந்து அவளை அழைத்துகொண்டு ரெஜிஸ்டர் ஆபீஸ் சென்றான்.. அங்கு அன்புவின் நண்பர்களும் ஒரு பெண்ணும் இருந்தனர். அன்புவை கண்டு மனம் வலித்தாலும் அவன் வாழ்வின் சந்தோஷத்துக்காக என்று எண்ணிக்கொண்டு உள்ளே சென்றாள். அப்பெண்ணை பார்க்கயில் அன்புவோடு மிகவும் உரிமையோடு பேசிக்கொண்டிருந்தாள். இவர்கள் போகவும் அன்பு வந்து இவர்களை வரவேற்றான். ராஜாமணிக்கம் அன்புவை பார்த்து," இளா, நம்ம கல்யாணத்துக்கு அன்புவோட மில்லிலிருந்துதான் அரிசி ஆர்டர் பண்ணிர்கோம். போன மாதமே ஆர்டர் கொடுத்தாச்சு" எனவும் மதி அன்புவை அடிபட்ட பார்வை பார்த்தாள் . அப்பார்வை அவனை அசைத்தாலும் கண்டுக்காமல் உள்ளெ சென்றனர். அன்புவும்
அப்பெண்ணும் லையெழுத்திட்டனர். அடுத்ததாக அன்புவின் நண்பர்களும் ராஜாமணிக்கம் மதியும் கையெழுத்திட்டனர். ராஜாமணிக்கத்துக்கு ஒரு அழைப்பு வரவும் வெளியே சென்றார்.
மதி மரத்து மரித்து போன நிலையில் நின்றிருந்தாள். அவளிடம் நெருங்கிய அப்பெண் இன்னொரு கல்யாணத்துக்கு சாட்சி கையெழுத்து கேட்குறாங்க கொஞ்சம் போடவறீங்களா என கேட்கவும் ஏதும் யோசிக்காது சென்றவள் கையெழுத்திட்டு வந்தாள். இனி அவளுக்கென்று எந்த ஆசைகளும் கனவுகளும் இல்லை. அவனுக்கு பிள்ளையை பெற்றுக்கொடுத்துவிட்டு அப்படியே உயிரைவிட்டு விடவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். நாம் நினைப்பது எல்லாம் நடந்து விடுமா என்ன!!
ஒரு மாதத்திற்கு முன்பே தன் கல்யாண விஷயம் அறிந்தும் தன்னை காக்க வராத அன்புக்காக தன் மனம் ஏங்கி அழுவதை எண்ணி வெறுத்தாள் . இன்னும் ஒரு வாரத்தில் ராஜமாணிக்கத்தோடு திருமணம்.. அடுத்த நாள் ராஜாமணிக்கம் அவளோடு திருமண ஜவுளி எடுக்க அவர்கள் கடைக்கு சென்றனர். அங்கு ராஜாமணிக்கம் புடவையை பார்த்து கொண்டிருக்க அங்கு வேலை செய்யும் எல்லோரும் இவளை பரிதாப பார்வை பார்க்க நெருப்பிலிட்ட புழுவாய் துடித்தாள் .. அப்பொழுது ஒரு பெண்மணி அவளிடம், " தங்கம், என் மருமகள் பாக்க உன்ன மாதிரியே இருப்பா. அவளுக்கு வேலை இருந்தனால துணி எடுக்கவரல. இந்த இரவிக்கை உனக்கு பாத்துதானு பார்த்து சொன்னேனா நான் என் மருமகளுக்கு வாங்கிக்குவேன், " என்றார். அவரது கேள்வியில் ராஜாமணிக்கத்தை திரும்பி பார்த்தவள் அவன் தலை அசைக்கவும் சென்று உடைமாற்றி வந்தாள் . அளவு சரியாக இருக்கிறது என்று அந்த பெண்மணியிடம் குடுத்துவிட்டு ஒரு இடத்தில் பொய் அமர்ந்து கொண்டாள் .

மதி வெறுத்த நாளும் வந்து சேர்ந்தது. மனமேடையில் ராஜாமணிக்கத்துக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தாள் . ' அவ்வளவுதான் இன்னும் சிலமணி நேரத்தில் வாழ்க்கையின் இருளில் அடைய போகிறேன் ' என்று எண்ணி துடித்து கொண்டிருக்கையில் எங்கிருந்தோ அன்புவின் "நிறுத்துங்க ", இன்னும் சொல் மட்டும் அவள் காதில்விழ அதோடு மயங்கி சரிந்தாள் .
மதி கண் விழிக்கையில் அவள் பக்கத்தில் அன்பு அவள் தலையை கோதிக்கொண்டு இருந்தான்." இப்போ எப்படி இருக்கு கண்ணம்மா "என்ற சொல்லில் உடைந்து அழுதாள். அவளை கட்டிக்கொண்டு " கவலைபடாத மதி உன்ன அவன்கிட்ட இருந்து காப்பாத்திட்டேன். " என்று சொல்லவும் நிதர்சனம் புரிந்து விலகினாள் . அவள் அவனிடம் இருந்து விலகவும் சின்ன பிள்ளையிடம் இருந்து இனிப்பை பறித்தததுபோல் மூஞ்சியை வைத்துக்கொண்டு, "ஏன் டி?" என்றான். அவனது விளிப்பில் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவளின் நுதலில் சிறு முத்தம் வைத்தவன் அவள் கையில் ஒரு பேப்பரை வைத்தான். அதை பிரித்து கண்கள் தெறித்து விழும் அளவிற்கு பார்த்தாள் . அவர்களின் திருமண பதிவிற்கான சான்றிதழ் அவனிடம் இருந்தது. இது எப்படி என்று யோசிக்கையிலே அவளிடம் கூற தொடங்கினான், " அன்னிக்கு நீ பேசுனது எல்லாமே எனக்குனு தனி அடையாளத்தை உருவாக்குறதுகாகனு புருஞ்சுக்கிட்டேன். அதோட நான் என் பேர சொல்லாமலே நீ என்னை அன்புனு சொல்லி பேசும்போதே புருஞ்சுக்கிட்டேன் உனக்கும் என்மேல காதல் இருக்குனு. என்னால நேரடியா முதலாளியா போய் உட்காரமுடியும். ஆனா முதலாளியா இருக்கணும்னா முதல தொழிலாளர்களோட மனச புரிஞ்சுக்கணும்னு மூணு மாசம் எங்க வயல் மில்லுனு வேலைகாரனா வேலைபார்த்தேன்.. பாக்குற வேலைக்கு சம்பளம் வாங்குனேன்.. மூணு மாசம் கழிச்சு அப்பாவ விட்ல இருக்க சொல்லி மில்லு வயலுனு அவனிக்க ஆரம்பிச்சேன். நல்ல வளர்ச்சியும் கொண்டு வந்தேன். அப்ப ஒரு நாள் பஸ்ல உன்னை பாக்க வந்தபோது உன் கண்ணு அழுத மாதிரி இருந்துச்சு. ஒருவேளை என்னை மிஸ் பன்றியோனு நினச்சேன் ஆனா உன் பார்வை எதையோ வெறிச்சு பார்க்கும்.. அதுல பயம் மட்டும்தான் நான் பார்த்தேன். அது என்னனு உன்னிடம் கேட்கனும்னு நினைச்சாலும் நான் கேட்டு இன்னும் பிரச்னை ஆகுமோனு அப்ப இருந்து உன்ன கவனிக்க ஆரம்பிச்சேன்.
அன்னிக்கு நம்ம கல்யாணத்துக்கு ஒரு பொண்ணு வந்திருந்தாலே அவ உன் ஆபீஸ்ல தான் வேலை பாக்குற.. அவதான் உன் கல்யாண விஷயம் எல்லாமே எனக்கு சொன்னது.. அப்பவே புருஞ்சுக்கிட்டேன் இதிலிருந்து உன்ன பிரச்னை இல்லாம வெளில கொண்டுவரனும் அதோட தகுந்த ஆதரத்தோட அந்த ராஜமணிகத்த உள்ள தள்ளனும்னு நினச்சேன். அவன் பெரிய ஆள இருக்கலாம் ஆனா அவனோட பணத்துக்கான மரியாதை அவனுக்கு இல்லைனு விசாரிச்சதுல தெரிஞ்சுகிட்டேன்.
நானே வழிய போய் எனக்கு கல்யாணம்னு அவன்ட்ட சொல்லிட்டு வந்தேன். அப்பதான் உங்க கல்யாணத்துக்கு அரிசி ஆர்டர் குடுத்தான். அவன் சைன் பண்ற எல்லா பேபெர்ஸ்யும் அவன் பி ஏ தான் பாத்துகிறான்னு தெரிஞ்சுது. அவனை சரிகாட்ட பெருசா ஒன்னும் தெரில. நமக்கு கல்யாணமான பேப்பர எல்லா பேப்பர்சோட சொருகியாச்சு. அதுல அவனே சாட்சி கையெழுத்து போட்டமாதிரி பண்ணிட்டேன். ஆனா அத இம்ப்ளிமெண்ட் பண்றது உன்ன கல்யாணம் பண்ணனும் நினச்சா அன்னிக்குதான்னு முடிவுபண்ணேன். அவன் கைய வச்சே அவன் கண்ண குத்த வச்சேன் . சோ இன்னிக்கு காலைல மண்டபத்துக்கு வந்து அந்த பேப்பர்ஸகாட்டி கல்யாணத்த நிறுத்தியாச்சு அவனை உள்ள தள்ளியாச்சு", அவள் கேள்வியாக அவனை நோக்கவும் அவளின் கேள்வியை புரிந்தவன், " நமக்கு கல்யாணமான அன்னிக்கு இன்னொரு சைன் போட்டியே நியாபகம் இருக்கா?அவள் தலையாட்டவும் அது என் பிரண்ட்க்கும் அந்த பொண்ணுக்கும் கல்யாணம். அவன் பேரும் அன்புச்செழியன் போலீசா இருக்கான். அவனை வச்சு எல்லாம் முடிச்சாச்சு " என்று பெருமூச்சுவிட்டான். அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள், "என்னடா " என அவன் கேட்கவும் அவனை பக்கத்தில் அழைத்தாள். அவனும் ஆர்வமாக அவளிடம் வரவும் அவனின் கன்னத்தில் அவளின் கை பதம் பார்த்தது. "என்னை ரொம்ப அழுக வச்சுட்டேல " என சிறுபிள்ளைப்போல் உதடுபிதுக்கி அழும் தன் மதியவளை ஆசை தழும்ப பார்த்தான்.. அவளின் அழுகை கூடிக்கொன்டே போக அவளை இழுத்து அணைத்தான்.

அந்நேரம் கதவை தட்டிக்கொண்டு அவனின் பெற்றோரும் நண்பர்களும் வந்து சேர்ந்தனர். அவனின் தாய் வேணி, "என்ன மருமகளே எப்படி இருக்க" என்று கேட்டார். அவரை எங்கோ பார்த்ததுபோல் இருக்கவும அவரிடமே கேட்டாள்." என் மருமகளுக்கு இரவிக்கை சரியா இருக்கானு பார்த்து சொன்னியே. இன்னும் ரெண்டு நாள்ல உங்களுக்கு கல்யாணம்.. ரெடியா இருங்க.. ஆனா அத பிளவுஸ் உனக்கு இப்ப பெருசா இருக்கும்போலையே" என அவளின் மெல்லிவை கண்டு வேதனையுற்றார். அன்புவின் தந்தை, " நம்ம பிள்ளையை இனிமே நீ பார்த்து தேத்திவிடு வேணி இதுக்குப்போய் விசனப்படாத ", என்றார். இனி மதியின் கனவு ஆசை அத்தனைக்கும் சொந்தக்காரனாய் அன்பு வலம் வருவான். அன்புவின் காதலால் என்றும் உருகி கரைந்து இளமதி உலா வருவாள்.

சுபம்

Stories you will love

X
Please Wait ...