JUNE 10th - JULY 10th
ஒரு துளி கண்ணீர்
திருநெல்வேலி மாவட்டம்,
வீட்டில்,
உளர்ந்த மரக்கட்டையில் மிதமான நெருப்பு பற்றி நெளிந்த பானையில் சோறு பொங்கிகொண்டிருக்கிறது.
விடுதியில்,
வீட்டின் கஷ்டங்களை மனதில் சுமந்து உண்ணுவதற்காக உணவை தன் முன்னாள் வைத்து வீட்டின் நெனப்பில்
"வீட்ல இந்நேரம் சாப்ட்ருப்பாங்களா?"
"இன்னக்கி அடுப்பு எறிஞ்சிருக்குமா?" என எண்ணிகொண்டிருந்தான் வருண்.
ஒரு வாரம் முன்,
அப்போது ஒரு ஆசிரியர் வருணின் அருகில் வந்து வீட்ல இருந்து பேசுறாங்க என்று கையில் தொலைபேசியை கொடுத்தார்.
வருண் காதில் வைக்கிறான். " தம்பி உங்க அப்பாக்கு உடம்பு சரியில்ல நீ உடனே ஊருக்கு கிளம்பி வா " என்று சோகக்குரலில் பேசினார். அவன் அப்பாவுடன் வேலைசெய்யும் நபர். இவனும் உடனே கிளம்பி வீட்டிற்கு வந்தடைந்தான்.
தன் அப்பாவிற்கு என்ன நடந்து என விசாரிக்கிறான். " உங்க அப்பா ரொம்ப நேரம் வெயில் ல நின்னு வேலைபாக்குறாரு பா. உடலை பரிசோதிச்ச மருத்துவர் இனிமே இவரு எவ்வளவுக்கு எவ்ளோ வெயில் ல நிண்டு வேலைப்பாக்குறத குறைக்கிறரோ அவ்ளோக்கு அவ்ளோ அவரு உடம்புக்கு நல்லது ன்ணு சொன்னாரு தம்பி. நாங்களும் எவ்வளவோ சொன்னோம் உங்க அப்பா கேட்குற மாறி இல்ல தம்பி என்றார் . பிறகு, மருத்துவர் எழுதி கொடுத்த மருந்துகளை வருணின் கையில் கொடுத்து அப்பாவ நல்ல பாத்துக்கோப்பா" என்று சொல்லி சென்றார் அந்த நபர்.
அப்பாவிற்கு மாத்திரை போடுவதற்காக தண்ணீர் எடுக்க அடுப்பாங்கரை சென்றான். அங்கு அடுப்பில் இருந்த அந்த அரிசி பொங்கி வழிந்து கொண்டிருந்தது. உடனே அடுப்பில் இருந்து கீழே இறக்கி வைத்து சற்று அறையை சுற்றி பார்வையிட்டான். மனம் உடைந்து போய் நின்றான். அந்த சமையல் அறை முழுதும் வெறுச்சோடி கிடந்தது. முக்கிய பொருட்கள் ஒன்றுமில்லாமல் கிடந்தது.
பிறகு அவனின் தாய் சோற்றை பார்க்க வந்தால் அப்போது சோறு பாத்திரம் கீழே இருப்பதை பார்த்துவிட்டு அதன் அருகில் தன் பிள்ளை எதையோ வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்ததை அறிந்தாள் . "என்னப்பா என்ன பாத்துட்டு இருக்க" என கேட்டால். வருணும் எதுவும் கேட்காமல் " ஒண்ணுமில்ல மா அப்பாக்கு மாத்திரை போட தண்ணி அள்ளிட்டு போக வந்தேன்" என்றான்.
வீட்டில் இருந்த அந்த ஒருவாரம் வேலைக்கு சென்று சம்பாரித்து வீட்டிற்கு வந்து கொடுத்தான். அப்பாவின் உடல்நிலை சரியாக, வருணை பக்கத்தில் அமரவைத்து "அப்பா கஷ்டப்பட்றதெல்லாம் உன் நல்லதுக்குதான் பா என கண்ணீர் சிந்துகிறார். நான் இருக்க வர நான் சம்பாரிச்சு குடுக்குறேன் டா தம்பி நான் இருக்க வர நான் குடும்பத்தை பாத்துக்குறேன் டா. நீ நல்ல படிச்சு நல்ல வேலைக்கு போய் எங்கள காப்பாத்துனா போதும் பா. நாளைக்கே கிளம்பி போய் பள்ளில படி, நான் பாத்துக்கிறேன். நீ படிக்கிற பையன். சும்மா இதுமாரி யாராவது போன் பண்ணி வீட்டுக்கு கிளம்பி வர சொன்னா வராத அப்பாக்கு அம்மா இருக்கா, அம்மா என்ன பாத்துப்பா. அம்மாக்கு நான் இருக்கேன் அம்மாவை நான் பாத்துக்குறேன்" என்று சிந்திய கண்ணீருடன் சோககுரலில் வருணிடம் சொன்னார்.
அன்றைய இரவு அப்பா சொன்ன அந்த வசனம் மாறி மாறி தன் எண்ணித்தில் ஓட அன்று இரவு தூங்காமல் அதையே நினைத்துக் கொண்டிருந்தான். பிறகு அடுத்த நாள் காலை பள்ளிக்குக் கிளம்பி சென்றான்.
ஒரு வாரம் கழித்து,
அன்று வகுப்பறையில் சென்ற வாரம் எழுதிய தேர்விற்கு மதிப்பெண் தாள் கொடுத்தார்கள். வருண் எழுதிய அனைத்துப் பாடத்திலும் தோல்வியைத் தழுவியிருந்தான்.
அன்றிரவு, வருணிற்கு வீட்டில் இருந்து அம்மா போன் செய்ய வருணும் பேசுகிறான். என்னப்பா நல்லாயிருக்கியா, சாப்டியா என வருணின் அம்மா கேட்க வருணும் பதில் அளித்தான். பிறகு அன்று மாலை தன் போனிற்கு ஒரு குறிஞ்செய்தி வந்ததாகவும் அதில் எதோ அதிகமாக F என்று இருந்ததாக வருணின் அம்மா கூறினாள் . வருணும் என்ன பதில் சொல்லுவதென்று தெரியாமல் யோசித்து கொண்டிருந்தான். அப்போது மணி ஒலித்தது. "என்னப்பா சாப்பிட கூப்பிடறாங்களா?" என அம்மா வினாவினால். வருணும் இதை சந்தர்ப்பமாக உபயோகித்து ஆமா மா சாப்பிடற நேரமாயிடுச்சு என்று கிளம்புறான்.
உணவை வாங்கிவிட்டு சாப்பிட மனமில்லால் வீட்டை பற்றியே சிந்தனை செய்துகொண்டிருந்தான் வருண். (கதையின் முதல் காட்சி )
வெகு நேரம் சிந்தனையில் ஆழ்ந்தந்துள்ள வருண் சாப்பிட மனமில்லாமல் உணவை எடுத்து குப்பையில் போட நகரயில் அவனின் மனதில் திடீகென்று ஒரு சிந்தனை முன்வருகிறது 'அம், அவன் வீட்டில் கண்ட காட்சி தான் '. நமக்கு இவ்ளோ நல்ல சாப்பாடு கிடைக்குது. நிறைய பேருக்கு இது கூட கிடைக்கிறது இல்ல ல என யோசித்து கொண்டிருந்த வருண் அந்த உணவை கொட்டாமல் எடுத்துக்கொண்டு மேஜையின் மேல் உட்கார்ந்து உண்ண தொடங்கினான்.
உணவருந்தி விட்டு வெளியே வந்தான். அங்கே அவனுக்கு முன்னாள் ஒரு காட்சி அரங்கேறியது. விடுதியில் வசித்த வந்த தாய் நாய் இரு குட்டிகளை ஈன்று களைப்பில் மரத்தின் அருகில் ஓய்வெடுத்து கொண்டிருந்தது. அதில் ஒரு குட்டி தாயின் பக்கத்திலே அமர்ந்து இந்த புதிய உலகை பார்வையிட்டு கொண்டிருந்தது. இன்னொரு குட்டி தாயை விட்டு சற்று தூரம் நடந்து சென்றது. அங்கே இன்னொரு நாய் அதனை கடிக்க ஓடிவருகையில் இந்த குட்டி தாயிற்கு இதன் குரலை தூது அனுப்பியது தான் அபாயத்தில் இருப்பதாக. இந்த தாய் நாயும் விரைந்து சென்று அபாயத்தை போக்கி தன் குட்டிக்கு அடைக்கலம் கொடுத்து கூட்டி வந்தது. இதனை கண்ட வருணிற்கு உள்ளம் உறுத்த தொடங்கியது. தன் தாய் கேட்ட அந்த குறுஞ் செய்தி காண பதிலை கூறவில்லையே என சிந்தித்து கொண்டிருந்தான். பிறகு, மீண்டும் போன் செய்து நடந்ததை கூறுகிறான். வந்த குறுஞ் செய்தி தன்னுடன் மதிப்பெண் பட்டியல் எனவும் தான் அனைத்திலும் தோல்வி தழுவிய உண்மையை வீட்டில் சொன்னான். அவனின் தாய் சற்றும் சிந்திக்காமல் "பரவாயில்லடா மா இந்த பரிட்சை முடிஞ்சிருச்சு அடுத்த பரீட்சைல இருந்து நல்லா படிச்சு நலலா எழுது" என அவள் தாய் கூறினாள். வருணும் சந்தோசத்துடன் படிக்க சென்றான்.
அன்றிலிருந்து, என்றுமே நண்பர்களுடன் சுற்றித்திரிந்த வருண் தனியான பாதையில் நடக்க தொடங்கினான்.
பொதுத்தேர்வை நோக்கி நாட்கள் நகர தொடங்கியது. அன்று இரவு அவன் நண்பன் அவனருகில் அமர்ந்து "என்ன மச்சான் இப்போலாம் முன்னமாறி பசங்களோட சுத்தமாட்டேங்கிற..?" என்றான் விஷால்.
"வாழ்க்கையில எவ்வளவோ நாள் வீணாடிச்சு தான், நேத்து வர சுத்திட்டு இருந்திருக்கோம். நேத்து நேத்தோட போகட்டும். இன்னைல இருந்து மாற ஆரமுடிப்போம். எல்லாருக்கும் வீட்ல நம்மள விட்டா வேற யாராவது இருப்பாங்க, அவங்க பாத்துப்பாங்க. ஆனா என் குடும்பத்த காப்பாத்த என்னை தவிர வேற யாரும் இல்ல மாப்ள. வாழ்க்கைய நெனச்ச ரொம்ப பயமா இருக்கு என் வீட்ல நான் இல்லைனா அடுத்த வேலை கஞ்சி கூட குடிப்பாங்கலான்னு சொல்லமுடியாது " என்று கண்ணில் கண்ணீரை நிறைத்துக் கொண்டிருந்தான் வருண். சற்று நேரம் அருகில் இருந்து சமாதானம் செய்தான் விஷால்.
அன்றைய இரவு முடிய, சூரிய வெளிச்சம் கட்டடங்களின் உள்ளே வரத் தொடங்கியது. அன்றைய நாள் தேர்வு நாள் அனைவரும் தேர்வரை சென்று எழுத தொடங்கினார்கள்.
இறுதி தேர்வு வரை கடின உழைப்புடன் படித்த இருவரும் பொதுதேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் மேல் படிப்புக்கு நகர தொடங்குகின்றனர்.
ஒரு நல்ல கல்லூரியை தேர்வு செய்து படிக்கத் தொடங்குகினான் வருண். பள்ளி படிப்பில் பெற்றோர்களுடன் இல்லாமல் படித்த வருண் தற்போது பெற்றோர்களுடன் பக்கத்தில் இருக்கும்போது அவனின் மனநிலை மிகமோசமாக ஆகியது. தூக்கத்தை குறைத்து கொண்டு அதிகம் உழைக்க செல்ல தொடங்குகினான்.
அன்று இரவு, விஷால் கடிதம் ஒன்று நண்பனுக்கு எழுதி அனுப்பினான்.பிறகு அவனின் நண்பன் விஷால் அவனுக்கு செல்போனில் அழைக்க வருணும் எடுத்து பேசத் தொடங்குகிறான். காதல் தோல்வியில் ஆழ்ந்தந்துள்ள நண்பன் விஷால் உயிரை விட போகும் செய்தியை நண்பனிடன் கூறவே அழைத்தான்.
அழைப்பில் "என்ன மாப்ள ஸ்கூல் முடிஞ்சதுக்கு அப்பறம் ஆளபாக்க முடியல " என்றான் வருண். இனிமே என்னால உன்னை மட்டுமில்ல இந்த உலகத்தையே பாக்கமுடியாது டா . "டேய் என்ன சொல்ற என்ன ஆச்சு?" என்றான் வருண். மாப்ள எனக்கு நீ எவ்வளவோ உதவி செஞ்சிருக்க, வாழ்க்கைனா என்ன ன்ணு புரிய வெச்சிருக்க. நானும் உனக்கு ஏதாவது உதவி பண்ணனும் ன்ணு எவ்வளவோ நெனச்சிருக்கேன் ஆனா இனிமே என்னால எதுவுமே பண்ணமுடியாது. கடைசியா ஒரு தடவ நீ எப்போவும் கேட்குற அந்த டயலாக் " மாப்ள நான் பாக்க நல்ல இருக்கேன் ன்ன கேள்விய கேட்டுக்கோ டா இனிமே நான் அதுக்கு பதில் சொல்லுவேனான் தெரியல " என்றும் நடுரோட்டில் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தான் விஷால் .
எதிரே ஒரு வாரி ஒலிபெருக்கியை ஒலித்து கொண்டு வந்தது. இறுதியான ஒரு துளி கண்ணீர் வழியாக அவன் வாழ்ந்த இத்தனை நாட்களின் கஷ்டம், வலி , கோவம், சோகம் எல்லாம் அவனின் இடது கண்ணில் இருந்து விடுவிக்க அந்த கண்ணீரும் கன்னத்தில் வழிந்து அந்த துளி கண்ணீர் தார் ரோட்டில் விழுந்தது. லாரி நெருங்கும் ஒலியை அவனால் உணர முடிந்தது.
உயிர் பிரியும் அந்த நொடி இருவிழிகளை திறந்து பார்த்தான் தான் முன்னாள் வருண் வந்து நின்றான். (பேசிகொண்டிருக்கும் போது எதிரே வந்த லாரியை ஒட்டி வந்தது வருண்). கன்னத்தில் ஓங்கி பளார் என அறைந்து கட்டிப்பிடித்து சமாதானம் செய்கிறான். கட்டிப்பிடிக்கும் போது வருணின் நல் எண்ணங்கள் விசாலின் மனதில் புகுந்தது.
இரண்டு வருடம் கழித்து,
வறண்டு கிடந்த அந்த நிலத்தில் ஊர் மக்களுக்கு கடவுளின் கருணை, மழையின் வடிவில் பூமியில் மேல் விழுந்து கொண்டிருந்தது. வருண் இருசக்கர வண்டியில் அந்த மழையில் நனைந்தவாறு வீட்டிற்காக அவசர அவசரமாக வண்டியில் பயணம் செய்துகொண்டிருந்தான்.இரவு நேரமென்பதால் அனைத்து ரோடுகளும் இருளில் சூழ்ந்திருந்தது. சற்றுத் தொலைவில் அவனை நோக்கி எதிரே லாரி ஓட்டுநர் மது அருந்துவிட்டு போதையில் வண்டி ஒட்டி வந்துகொண்டிருந்தான். போதையின் உச்சத்தை அடைந்த அந்த குடிகாரன் தன் எதிரே வந்த அந்த இருசக்கர வண்டியின் மேல் வண்டியை விட்டான்.
அடித்த வேகத்தில் நான்கடி தள்ளி துடித்துக் கொண்டிருந்த அந்த இதயத்தின் துடிப்பு நின்றே போக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், அவன் நண்பனை காப்பாற்றிய இடத்தில் விழுந்து கண்ணை மூடினான் . மாறி மாறி அவள் அன்னை, தந்தை ஊட்டி வளர்த்த அன்பு, ரெத்தம் அனைத்தும் அவன் உடலை விட்டு ரோட்டில் வெளியேறியது.
இருபது ஆண்டாக அவனின் பெற்றோர் பட்ட கஷ்டங்கள், வலிகள், அவமானங்கள், அசிங்கங்கள், அனைத்துமே வெகுநாளாக வீட்டின் ஓரத்திருக்கும் இருந்த தூசியை போலே அன்று அழிந்துப்போனது.
வருணின் வீட்டிற்கு அவனுடன் படித்த நண்பர்கள், அவனின் சொந்தங்கள் என அனைவரும் வருணின் வருகைக்கு காத்திருந்தார்கள். இரண்டாம் தெருவில் ஆம்புலன்ஸ் சத்தம் ஒலித்தது. பிறகு ஒலி பெருகி பெருகி அந்த ஒலி வீட்டின் அருகில் வந்து சேர்ந்தது. தன்னின் மகனின் உடலை கண்ணீருடன் பார்க்க வந்த தாய், " உன்னோட படிச்ச பசங்களெல்லாம் உன்னை பாக்க வந்திருக்காங்க வருணு எந்திருச்சு அவங்கள பாருயா" என கண்ணில் கண்ணீரை நிறைத்து கதறிகொண்டிருந்தால் வருணின் தாய்.
நண்பனின் இறப்பு செய்தியை கேட்டு துடிதுடித்து வீட்டிற்கு விரைகிறான் வருணின் ஆருயிர் நண்பன் . அங்கு வீட்டின் உள்ளே நுழையும் போது தான் நண்பனை பார்க்க முடியாமல் மனம் உடைத்த அவன் சற்று திரும்பி பார்க்கயில் அவன் இரண்டு ஆண்டிற்கு முன்னாள் எழுதிய கடிதம் ஒரு சாளரத்தில் இருந்தது.
அதனை பிரித்து பார்த்து வாசிக்க தொடங்குகினான்
" எண்ணியதில்லை - நீ
என் நண்பனாய் வருவாய் என
எழுதியே இருந்ததோ - நாம்
நண்பர்களாய் ஆவோம் என்று...
நெஞ்சில் கத்தியும் நிறைந்தோடும் ரத்தமும் வாங்கிக்கொண்டேன்
காதல் எனும் நோயில்
நிறுத்திவிட்டு மருந்திடவும் முடியவில்லை
விழித்துக் கொண்டு உயிர் வாழ முடியவில்லை...
இறுதி நிமிடமும் என் முன்னே
இறுகிக்கொள்கிறது
இன்னலுக்கு மருந்திட்ட நீ
இன்னும் வருவாயா என காத்திருக்கிறேன்...!
அன்புடன்
அன்பு நண்பன்...
கடிதத்தை வாசித்து கலங்கி நின்றான். இரண்டு வருடதிற்கு முன்னாள் தான் நண்பனுக்காக எழுதிய கடிதம் மற்றும் நினைவு இன்று கடிதம் அவன் கையில் மற்றும் எண்ணித்தில் உதித்தது ஆனால் நண்பன்...?
தவறு அனைத்தும் செய்த, எதிரே வந்த அந்த ஓட்டுநர் என்றும் நிறவராதி ஆகி நின்றான் இன்றும் சட்டம் முன்னாள். தவறே செய்யாமல் உயிர் போன இந்த நல் உள்ளத்தின் உடல் இன்று சுடுகாட்டில் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
#233
Current Rank
21,900
Points
Reader Points 1,900
Editor Points : 20,000
38 readers have supported this story
Ratings & Reviews 5 (38 Ratings)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
aslamcs2001
Good story
franklinbenzer2211
அருமையான கதை வாழ்த்துக்கள்
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points